இப்பேரிடரை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள, தமிழக முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சினை இருக்குமெனில், “வீடியோ கான்பரன்ஸ்” மூலம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யலாம்”.
இன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முதல்வரையும் டாக் செய்திருந்தார்
இந்நிலையில் முக ஸ்டாலினுக்கு பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதில் அளித்துள்ளார்
“எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது.
நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை”.
31/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
எதுக்குன்னே தெரியாம டிரெண்டாகும் #Pray_For_samuthirakani: யாரு பாத்த வேல? டுவிட்டரில், இன்று ஏதேனும் முக்கியமான நிகழ்வு நடந்தலோ, படம் ரிலீஸ் ஆனாலோ அது டிரெண்டாகும். ஆனால், இங்கு #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
என்ன காரணம் என்றே தெரியாம, #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தரமான இயக்குநர்களில் சமுத்திரக்கனியும் ஒருவர். வெங்கட் பிரபு, எஸ்பிபி சரண், மீரா வாசுதேவன் ஆகியோரது நடிப்பில் 2003 ஆம் ஆண்டு திரைக்கு வந்த சூப்பர் ஹிட் படம் உன்னை சரணடைந்தேன்.
இப்படத்தின் மூலமே சமுத்திரக்கனி தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்தார்.
இவ்வளவு ஏன், விஜயகாந்த் நடிப்பில் வந்த நெறஞ்ச மனசு என்ற படத்தை இவர் தான் இயக்கியுள்ளார்.
சசிகுமாருக்கு படத்திற்கு பேர் கொடுத்த நாடோடிகள் படத்தையும் இவரே இயக்கியுள்ளார்.
மேலும், நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, கிட்னா என்று வரிசையாக பல படங்களில் இயக்கியுள்ளார்.
ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் திகழ்ந்துள்ளார்.
எப்போதும் சமூகத்தின் மீதும், பெண்கள் மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள சமுத்திரக்கனி சமூக அக்கறையை மையப்படுத்திய படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இது போன்ற படங்களையே இயக்கியுள்ளார்.
அண்ணி, அரசி என்று டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். பின்னணி பாடகராகவும், டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டரில் இவரது பெயர் தான் அடிபட்டு வருகிறது. ஆம், இவரை வைத்துதான் ஏகப்பட்ட மீம்ஸ்கள்.
டுவிட்டரில் #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
சமுத்திர கோணி, சமுத்திரராஜா, சமுத்திர ஆணி, சமுத்திர வாணி சமுத்திர ராணி, சமுத்திர_கன்னி, சமுத்திர ட்ரம்ப், சமுத்திரகனி, சமுத்திரகாய், சமுத்திரபிஞ்சு என்றெல்லாம் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், இதையெல்லாம் அவர் பார்த்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவார்.
காரணமே இல்லாமல், ஏன் இப்படியெல்லாம் மீம்ஸ் உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர் என்று இன்னும் நிறைய பேருக்கு தெரியாது. ஏன் அவருக்கே கூட தெரியாது. உதாரணத்திற்கு ஒரு படத்தில் வடிவேலுவை அடிக்கும் போது காரணத்தைச் சொல்லிட்டு அடிங்கடா என்று கூறுவாறல்லவா. அது போன்று தற்போது சமுத்திரக்கனிக்கு நேர்ந்துள்ளது.
என்ன காரணம், ஏன் ட்ரோல் செய்யப்படுகிறார் என்பதற்கான காரணத்தை மட்டும் சொல்லிவிட்டு இது போன்று செய்யுங்கள் என்று கெஞ்சும் நிலை கூட வரும்.
அண்மையில், வெளியான எட்டுத்திக்கும் பற படத்தில், சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவாக அவர் பேசி அவர் நடித்திருப்பார். இதனை பிடிக்காத சிலர்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்றும், குவாரண்டைன் டைம் பாஸ் என்றும் சமுத்திரக்கனியை கலாய்ப்பதாக கூறப்படுகிறது.
மேலும், சிலர் பணம் கொடுத்து அவரை இதுபோன்ற இழிவுபடுத்த கூறியதாகவும் கூறப்படுகிறது.
Dia Movie Review; Dia is full of surprises and miracles, Dia Film Review, Dia 2020 Movie Kannada, Dia Love Film Review.
Film revolves around a girl named dia who is an introvert and she fall for guy named Rohit at her first sight. As a shy girl she doesn’t have courage to express her love to Rohit.
She try several ways when she is ready to convey her love unfortunately rohit discontinue the college. When things are get going… again both of them met and she got to know rohit also loved her since College they convey their love and on..
This lead to take a turn in dia life. The phase of happiness comes to end some unfortunate things.
Dia believes she lost Rohit. This could lead her utmost sorrow of her life and she wants to end her life but distracted by adi. Adi is man who’s being friend with mother lakki who’s always being more casual and joyful.
When Adi and Dia meets accidentally happiness blossoms in her life once again which help her loving herself and her life. After certain period Adi & Dia falls for each other. This seems typical love story but here the director put the twist.
Unfortunately dia meet her first love Rohit who is alive. this let’s her choose one among them.
The first love of life which let’s her feel the taste of love will be dia’s First priority?
Or
The second love who made her understand the value of life and the reality and make her love herself.
How the things will happen after this is the rest of the story. This keeps audience engaging till the end of the film.
Unlike a typical a love story there is no songs in it but the director let us hit the love hard with background scores. It gave more grip with flow the scenes makes the scenes fullest.
When it comes performance there is no flaw from top 3 lead characters. We need to talk about the screenplay and dialogues. the way screenplay goes is absolutely good..
Life is full of pain and problems. We need to learn to face them and overcome from it.
Pawan Kalyan; ஆந்திரா மீனவர்களை மீட்டெடுக்க தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மீனவர்களை மீட்டெடுக்க வேண்டும் என்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வெளிநாடுகள் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வருவதற்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியேறும் போது பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து முதல், எந்த சேவையும் இல்லை. கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா திரையரங்குகள் என்று அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதில், ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபெர்ரா மண்டலத்தின் கோலகண்டி என்ற கிராமத்திலிருந்து மீன்பிடிக்க தமிழக கடற்கரை எல்லைக்கு சென்ற 99 மீனவர்கள் சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
போதிய தங்கும் வசதி மற்றும் உணவு இன்றி அவர்கள் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களது குடும்பத்தார் இது குறித்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள் என ஜனசேனா தொண்டர்கள் மூலம் இந்த குறித்து அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த குறித்து அறிந்து உடனே பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு போதிய உணவு மற்றும் உறைவிடம் வழங்கி அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வரும் நிலையில் தற்போது அந்தத் தொற்றில் இருந்து பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணம் அடைந்துள்ளார்
சீனாவில் உருவான கொரோனா.வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பரவி இத்தாலி, அமெரிக்கா ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிபயங்கரமாக மக்கள் மீது பரவி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்திருக்கிறது.
இதைக் கட்டுப்படுத்த பல நாடு அரசுகள் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில வாரங்களுக்கு முன் கனடா பிரதமரின் மனைவிக்கும் உறுதி செய்யப்பட்டது.
தற்போது கனடா பிரதமரின் மனைவி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இன்று அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளார். இது அந்த அரச குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதே தொற்றால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
Ghilli: சன் டிவிக்கு நன்றி சொன்ன விஜய் ரசிகர்கள்: அப்படியே அடுத்தவாரம் திருப்பாச்சி? சன் தொலைக்காட்சியில் நேற்று மாலை 6.30 மணிக்கு கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தவாரம் திருப்பாச்சி, அடுத்து மாஸ்டர் என்று தங்களது கோரிக்கையை இப்போதே முன் வைத்துள்ளனர்.
சன் தொலைக்காட்சியில் நேற்று மாலை 6.30 மணிக்கு கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சிக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், பிரகாஷ் ராஜ், த்ரிஷா நடிப்பில் கபடி மற்றும் காதல் கதையை மையப்படுத்தி கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் கில்லி.
மதுரை கோட்டைக்கே ராஜாவாக இருக்கும் முத்துப்பாண்டி என்ற பிரகாஷ் ராஜ் த்ரிஷா மீது ஆசை கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.
இதில் விருப்பமில்லாத த்ரிஷா வீட்டைவிட்டு ஓடி வருகிறார். அவரை விஜய் காப்பாற்றி தனது வீட்டிலேயே தங்க வைக்கிறார். அவர் மீது ஆசை கொள்கிறார்.
இறுதியில் அவருடன் சேர்ந்தாரா? தனது கபடி கனவில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் கதை.
200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் கொடுத்த படம். விஜய்யின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படமாகவும் கில்லி அமைந்தது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவருமே சமூக வலைதளம், தொலைக்காட்சி, சமையல், உடற்பயிற்சி, யோகா, ஓவியம் என்று பிஸியாக இருக்கின்றனர்.
அவர்களுக்காகவே சன் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று மாலை 6.30 மணிக்கு கில்லி படத்தை ஒளிபரப்பு செய்துள்ளது.
இதன் காரணமாக # GhilliSunTV என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டானது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து, சன் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்த விஜய் ரசிகர்கள் அடுத்தடுத்து திருப்பாச்சி, மாஸ்டர் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மாஸ்டர் படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இப்போதே அதனை சன் டிவியில் ஒளிபரப்புங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர். அந்தளவிற்கு மாஸ்டர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கில்லி படத்தைப் போன்று விஜய் சூப்பர் சேனலில் துப்பாக்கி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் மக்கள் படும் அவதியை கண்டு மனம் உடைந்து போகிறோம் என விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகத்தையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பல லட்சம் மக்களை பாதிப்படையச் செய்கிறது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.
பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை.
மோடி நேற்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உங்களால் முடிந்த நிதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு இருந்தார்.
அதற்கு டாடா குழுமம் 1500 கோடி ,நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், பிசிசிஐ 51 லட்சம், ரகானே 10 லட்சம், ரெய்னா 52 லட்சம்
என பலரும் தங்களது நிதியை நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவின் விளையாட்டு வீரர்களில் வருடத்திற்கு அதிகம் சம்பாதிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி தங்களது ட்விட்டர் பக்கத்தில்
“நானும் அனுஷ்காவும் பிரதமர் மற்றும் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளிக்கிறோம். கொரோனா வைரஸால் மக்கள் படும் அவதிகளை காணும்போது எங்கள் இதயம் உடைந்து போகிறது.
அவர்களுக்கு எங்களால் முயன்ற உதவிகளை செய்கிறோம். இந்த உதவி ஏதேனும் ஒரு வகையில் மக்களின் துயரத்தைத் தீர்க்க பயன்படும் என நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்
விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் 3 கோடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Ajith; கேடிவியில் மங்காத்தா: கொண்டாட்டும் தல ரசிகர்கள்! கேடிவியில் அஜித் நடிப்பில் வந்த மங்காத்தா படம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கேடிவியில் மங்காத்தா படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அஜித் நடிப்பில் வந்த மங்காத்தா படம் கேடிவியில் ஒளிபரப்பு செய்யப்படுவதை #Mankatha ஹேஷ்டேக் உருவாக்கி தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி அமரன், வைபவ், ஆண்ட்ரியா, அஞ்சலி, மகத் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் மங்காத்தா.
விநாயக் மகாதேவ் என்ற கதாபாத்திரத்தில் மும்பையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அசிஸ்டன்ட் கமிஷனர்.
என்னதான் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருந்தாலும், கோடிக்கணக்கான பணத்தை வில்லன் கும்பலிடமிருந்து கொள்ளையடிப்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது.
அதற்கு சரியாக ஸ்கெட்ச் போட்டு, பிளான் பண்ணி பணத்தை ஆட்டையபோட்டா, அவரை ஏமாற்றி பிரேம்ஜி பணத்தை கொண்டு செல்வார்.
இறுதியில் பணம், அஜிதுக்கு சென்றதால், இல்லை போலிசுக்கா, இல்லை வில்லன்களிடமே சென்றதா என்பதுதான் படத்தின் கதை.
அஜித்தை வித்தியாசமான கதாபாத்திரத்தில் காட்டிய இந்தப் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
ரூ.20 முதல் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.130 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்கிறது விக்கிப்பீடியா தகவல்.
இந்த நிலையில், தற்போது டுவிட்டரில் #Mankatha ஹேஷ்டேக் உருவாக்கி தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏன் என்று பார்த்தால், கேடிவியில் பிற்பகல் 1 மணிக்கு மங்காத்தா படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
எத்தனையோ முறை யூடியூப்பிலும், டவுன்லோடு செய்து படத்தை பார்த்திருந்தாலும், தற்போது கொரோனாவால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலையில், இது கொண்டாட்டமான விஷயம்தானே. அதான் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நேற்று சன் தொலைக்காட்சியில் விஜய் நடிப்பில் வந்த கில்லி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
90களில் மறக்க முடியாத வெற்றி இயக்குனராக வலம் வந்தவர் தான் நம் விக்ரமன்.
இளைஞர்கள் பாசமாக பேசினால் பின்னணியில் லாலா என்ற விக்ரமனின் பிரதான இசை கேட்கும் அளவிற்கு இவரது படங்கள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
பாரதிராஜா, மணிரத்னம், கேஎஸ் ரவிக்குமார், பி வாசு போன்ற டைரக்டர்கள் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த நேரம் அது.
புதுவசநதம்
பார்த்திபன் இயக்கத்தில் புதிய பாதை எனும் படத்தில் துணை இயக்குனராக இருந்த விக்ரமன், 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
நான்கு இளைஞர்கள் ஒரு வீட்டில் வேலை எதுவும் இல்லாமல் பாடுவதில் இசையிலும் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆதரவற்ற ஒரு பெண்ணிற்கு ஆதரவு தந்து,அந்த பெண்ணை வில்லனிடமிருந்து காப்பாற்றி, அந்தப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு எடுப்பார்கள்.
அப்பொழுது பல அவமானங்களை சந்திப்பார்கள். இறுதியில் படத்தின் கிளைமாக்ஸ் அந்தப் பெண்ணும் 4 ஆண்களும் நண்பர்களாகவே வாழ தொடங்குவார்கள்.
தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய கதையாகவும் கிளைமாக்ஸாகவும் இருந்தது.
மக்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை ஈட்டியது. அந்த ஆண்டில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்றது.
பெரும் புள்ளி
இவருக்கு முதல் படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி. இவரது இரண்டாம் படமான பெரும் புள்ளி படத்தையும் தயாரித்தார். படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நான் பேச நினைப்பதெல்லாம்
விக்ரமனின் மூன்றாவது படம் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’. ஆனந்த்பாபு மற்றும் மோகினி நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
புதிய திரைக்கதை களத்துடன் களமிறங்கிய இந்தப்படம், அன்றைய இளைஞர்களின் மத்தியில் பெரிதாக கொண்டாடப்பட்டது .
தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்த மாமா பெண் தன்னை ஏமாற்றி விரக்தி அடைந்த நடிகர், மீண்டும் ஆதரவற்ற ஒரு பெண்ணை கலெக்டர் ஆகி பார்ப்பது படத்தில் பேஸ்.
அருமையான திரைக்கதையுடன் அருமையான பாடலுடன் விவேக்கின் காமெடியுடன் கூடிய படம்தான் இந்த நான் பேச நினைப்பதெல்லாம்.
விக்ரமனின் ஒரு அழகான படைப்பு என்று கூட சொல்லலாம். கொஞ்சம் சலுப்பு இல்லாத திரைகதையாக அமைந்த படம்.
இந்த படத்தில்தான் விக்ரமின் படங்களில் வரும் லாலா என்ற பின்னணி இசை ஆரம்பமானது. படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது.
ஏலேலங்கிளியே மற்றும் பூங்குயில் ராகமே இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கோகுலம்
விக்ரமனின் முதல் இரண்டு படங்களை தயாரித்த ஆர்பி சௌத்ரி. மீண்டும் விக்ரமனிடம் இணைந்து கோகுலம் என்ற படத்தையும் தயாரித்தார்.
படமும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தில் ஜெயராமன் பானுப்ரியா அர்ஜுன் நடித்திருந்தார்கள்.
ஏ.ஆர் ரகுமானுடன் புதிய மன்னர்கள்
ஏ ஆர் ரகுமான் உடன் கூட்டணி சேர்ந்த விக்ரமன் ‘புதிய மன்னர்கள்’ எனும் படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் விக்ரம், மோகினி, பாபு கணேஷ், நளினிகாந்த் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரிதாக பேசப்பட்டது. படம் நல்ல கதையுடன் அமைந்தாலும் பெரிதாக வெற்றிபெறவில்லை.
பூவே உனக்காக
இளைய தளபதி விஜய் நாளைய தீர்ப்பின் படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் டநடித்த முதல் எட்டு படங்களும் ஓரளவு பேசப்பட்டதே தவிர வேறு பெரிதாக வெற்றிபெறவில்லை.
ஒரு இசை நிகழ்ச்சியில் விஜய்யை விக்ரமன் பார்க்க சந்திரசேகர் அவர்களிடம் உங்கள் பையனை வைத்து ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார்.
அப்போது அமைந்த அந்தக் கூட்டணி தான் இந்த பூவேஉனக்காக என்ற திரைப்படம்.
ஆல் டைம் ஃபேவரைட் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. பெண் ரசிகைகள் விஜய்க்கு அதிகமானவர்கள்.
படம் பட்டிதொட்டி எல்லாம் வெற்றி பெற்றது. விஜய்யை தமிழ்நாட்டில் ஒரு நல்ல நடிகர் என்று காட்டியது இந்த பூவே உனக்காக.
எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி.
இன்று வரை இந்த பாடலை கேட்டால் நம் உதடுகள் இந்தப் பாடல் முணுமுணுக்கும் அளவிற்கு இந்த படத்தின் பாடல்கள் ஹிட்.
1996 ஆம் ஆண்டு வெளியான போது இந்த படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.
இந்தப்படத்திலும் விக்ரமனின் பிரதான லாலா என்ற பின்னணி இசை இடம் பெற்றிருக்கும்.
சூரியவம்சம்
சரத்குமாருக்கு படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. பணமும் நட்டத்தில் சென்றது என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த காலகட்டம்.
விக்ரமிடம் ஐந்தாவது படம் ஆர்பி சவுத்ரி இணைய திட்டமிட்டார். ஜனகராஜ் மற்றும் விஜய்க்காக எழுதப்பட்ட கதைதான் இந்த சூரிய வம்சம்.
பின்பு சரத்குமாரை வைத்து இயக்க முடிவெடுத்தார்கள். இந்த படத்தை பற்றி நான் சொல்லவா வேண்டும்.
இன்றும் சன் டிவி மற்றும் கே டிவியில் ஒளிபரப்பினால் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆல்டைம் ஃபேவரைட் சென்று சொல்லிவிடலாம்.
இன்றளவும் நட்சத்திர ஜன்னலில் பாடல் ஒரு இன்ஸ்பிரேஷன் பாடல் என்று கூட சொல்லலாம்.
இந்த ஒரு பாடல் போல நம் வாழ்க்கையில் வராதா என்று இளைஞர்கள் எண்ணியதும் உண்டு.
சரத்குமாருக்கு சினிமா வாழ்க்கையில் இந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் வேற லெவல் வெற்றி.
அப்போதுதான் ராதிகாவும் சரத்குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
படத்தில் வரும் ரோஜா பூ சின்ன ரோஜா பூ பாடல் இசை எஸ் ஏ ராஜ்குமார் அவர்களை அனைவராலும் பாராட்டப்பட்டது.
அடுத்தடுத்த வருடங்களில் இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போஜ்புரி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த படத்துக்காக விக்ரமன் சிறந்த இயக்குனருக்கான தமிழ் மாநில விருதை பெற்றார்.
இந்த படத்திலும் இவரது லாலா என்ற பிரதான பின்னணி இசை இடம் பெற்றிருக்கும்.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
விக்ரமனின் அடுத்த படம் தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கார்த்தி ரோஜா அஜித் நடித்த படம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வழக்கம் போல ஒரு கஷ்டப்படும் பெண்ணை ஆட்டோ டிரைவராக இருக்கும் கார்த்தி ரோஜாவை சிறந்த பாடகியாக ஆக்குவதே கனவாக வைத்திருப்பார்.
அதனால் அவர் சந்திக்கும் அவமானங்கள் சந்தோசங்கள் கஷ்டங்களை இந்த படத்தில் கதை.
இந்த படத்தில் சில காட்சிகள் மட்டுமே அஜித் நடித்திருந்தாலும் சிறப்பாக நடித்திருப்பார்.
விக்ரமன் படம் என்றாலே நல்ல கிளைமாக்சை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த படத்திலும் அது நிறைவேறியிருக்கும். இந்த படம் 5 தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்றது.
சிறந்த டைரக்டர், சிறந்த கதாசிரியரான விருதை டைரக்டர் விக்ரமன் பெற்றார்.
வானத்தைப் போல
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் விக்ரமின் அடுத்த படம் தான் வானத்தைப்போல.
விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.
தம்பிகளுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒரு அண்ணனின் கதை. இணைபிரியாத தம்பிகளின் கதையை அழகாக வடிவமைத்து இருப்பார் இயக்குனர் விக்ரமன்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அனைவராலும் ரசிக்கப்பட்டது.
விஜயகாந்துக்கு இந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூட சொல்லலாம் அந்த காலகட்டத்தில்.
சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. இரண்டு தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றது.
இந்த படம் பல தியேட்டர்களில் உரிமையாளர்களை வாழ வைத்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பங்களை தியேட்டருக்கு அழைத்து வந்தது இந்த படம்.
விக்ரமனை உச்சிக்கு அழைத்துச் சென்றது இந்த படம்.
உன்னை நினைத்து
சூர்யா நீண்ட நாட்களாக வெற்றிக்கே போராடிக் கொண்டிருந்தார் பெரிதாக வெற்றி எதுவும் அமையவில்லை.
அப்போது விக்ரமிடம் கூட்டணி அமைத்து உன்னை நினைத்து என்ற படத்தை வெளியிட்டார்கள்.
இதுவும் விக்ரமனின் அக்மார்க் கதையான கஷ்டப்படும் ஒரு பெண்ணை நாயகன் படிக்க வைப்பது, படித்து முடித்தவுடன் அந்த பெண் நாயகனின் ஏமாற்றி செல்வது படம்.
மிகப்பெரிய வெற்றி பெற்றது. விக்ரமன் எல்லா படத்தின் பாடலை போலவும் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றது. சூர்யாவிற்கு நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்தது இந்த படம்.
இந்த படத்திலும் விக்ரம் இன் லா லா என்ற பின்னணி இசை ஒலிக்கும்.
‘பொம்பளைங்க காதலதான் நம்பிவிடாதே’ என்ற பாடல் எல்லோராலும் ரசிக்கப்பட்டது.
பிரியமான தோழி
அடுத்ததாக மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்த படம்தான் பிரியமான தோழி.
இந்த படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது. இந்த படம் விக்ரமனின் வழக்கம்போல் கதையாக இல்லாமல் மாறுபட்ட கதையாக இருந்தது.
மீண்டும் விக்ரமன் படத்தில் எஸ் ஏ ராஜ்குமார் இசை பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
‘புள்ளி மான் குட்டியே’ மற்றும் ‘பெண்ணே நீயும் பெண்ணா’ பாடல்கள் அனைவராலும் பேசப்பட்டது.
இந்த படத்தை ஏவிஎம் ப்ரொடக்சன் தயாரித்து வெளியிட்டது.
விக்ரமனின் 90% படங்கள் சன் டிவி தொலைக்காட்சி உரிமையை பெற்றது.
விக்ரமன் மறுபடியும் தெலுங்குக்கு சென்று இரண்டு படங்கள் எடுத்த படங்கள் பெரிதாக வெற்றி பெற வேண்டும் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
சென்னையில் காதல், மரியாதை, நினைத்தது யாரோ போன்ற படங்களை இயக்கினார் படங்கள் பெரிதாக போகவில்லை.
2005 ஆம் ஆண்டு வரை விக்ரமன் படங்கள் தமிழ் சினிமாவில் ஒரு சாம்ராஜ்யமாக இருந்தார்.
இவரது படங்கள் அனைத்தும் இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தரும் அளவிற்கு இருக்கும்.
இவரது படத்தின் பாடல்கள் இன்றும் மக்களிடையே கேட்கும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்.
தற்போது விக்ரம் தமிழ்நாடு இயக்குனர் அசோசியேசனின் தலைவராக உள்ளார்.