Home Blog Page 185

மறுபடியும் முதல இருந்தா? வேறு வழியில்ல: பழைய சீரியல்களை தட்டி தூக்கும் சேனல்கள்!

0
Tamil TV Channel Serials

TV Serial; மறுபடியும் முதல இருந்தா? வேறு வழியில்ல: பழைய சீரியல்களை தட்டி தூக்கும் சேனல்கள்! சின்னத்திரை படப்படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து எபிசோடுகளுக்கு என்ன செய்வதன்று தெரியாமல், பழைய சீரியல்களை மறுபடியும் ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன.

சின்னத்திரையில் மீண்டும் பழைய சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சத்தில் இருக்கிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய கொரோனா இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக தொழில்துறைகள் பாதிக்கப்பட்டதோடு சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு 10 நாட்களை கடந்து விட்டது.

இதுவரை எப்படியோ புதிய சீரியல்களை ஒளிபரப்பிவிட்டனர். இனிமேல் அதற்கு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம், தொடர்ந்து சீரியல்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால், அடுத்த எபிசோடுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் டிவி சேனல்கள் குழப்பத்தில் இருக்கிறது.

இதுவரை இல்லாத நிலை, வரலாறு காணாத நிலை. டிவி சேனல்களின் சீரியல்களில் ஷூட்டிங் தடைபட்டுள்ள நிலையில், பழைய டிவி சீரியல்களை மறுபடியும் ஒளிபரப்பு செய்ய டிவி சேனல்கள் தொடங்கியுள்ளன.

புதிதாக வந்த டிவி சேனல்கள் தங்களது சீரியல்களின் முதல் எபிசோடுகளை மறுபடியும் ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளன. சிலர், தங்களுக்கு விருப்பமான டிவி சீரியல்களை தேர்வு செய்து அதனை மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் சீரியல் மறுபடியும் அதே சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதே போன்று ராமாயணம் நாடகமும் காலை 9 – 10 மற்றும் இரவு 9 -10 என்று இரு நேரங்களில் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விக்ரம், விஜய், சூர்யா வச்சு வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன்!

0

HBD Vikraman; விஜய்யின் வெற்றிக்கு வித்திட்ட இயக்குநர் விக்ரமன் பர்த்டே டுடே! புது வசந்தம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்ரமன் இன்று தனது 56ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

விக்ரமன் பிறந்தநாள்

விக்ரமன் இன்று தனது 56 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் (Happy Birthday Vikraman Sir…).

பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் இயக்குநர் விக்ரமன். பார்த்திபன் இயக்கி நடித்த படம் புதிய பாதை. இப்படத்தின் மூலம் பார்த்திபன் இயக்குநராக அறிமுகமானார்.

கடந்த 1989 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் தான் விக்ரமன் பார்த்திபனிடம் உதவியாளராக பணியாற்றினார்.

வெறும் 38 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.2 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்கிறது விக்கிப்பீடியா தகவல்.

விக்ரமன் படங்கள்

இப்படத்திற்குப் பிறகு 1990 ஆம் ஆண்டு புது வசந்தம் என்ற படத்தை விக்ரமன் கொடுத்தார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

முரளி, ஆனந்த் பாபு, ராஜா, சார்லி, சித்தாரா, சுரேஷ் என்று பல நட்சத்திரங்களை கொண்டு திரைக்கு வந்த இந்தப் படம், சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருது என்று குவித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து பெரும்புள்ளி, நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், புதிய மன்னர்கள் என்று பல படங்களை கொடுத்தார்.

பூவே உனக்காக

எனினும், விஜய்யை வைத்து பூவே உனக்காக படத்தை கொடுத்தார். பூவே உனக்காக விஜய்க்கு வெற்றி படமாக அமைந்தது. அதோடு, அவருக்கு திருப்பு முனையாகவும் இருந்தது.

பூவே உனக்காக தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்ய வம்சம்

இதே போன்று சரத்குமாரின் சூர்ய வம்சம் படத்தை இயக்கினார். இந்தப் படமும் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

அதோடு, சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, சிறந்த இயக்குனர்க்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது ஆகிய விருதுகளை விக்ரமனுக்கு பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தைப் போல, உன்னை நினைத்து, பிரியமான தோழி, சென்னை காதல், மரியாதை, நினைத்தது யாரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்கள் எல்லாமே ஹிட் படங்களாகவே அமைந்துள்ளது. விஜய், ஜெயராம், முரளி, சரத்குமார், விக்ரம், கார்த்திக், விஜயகாந்த், சூர்யா, மாதவன் ஆகிய நட்சத்திரங்களுக்கு சிறந்த படங்களையே கொடுத்து தன்னை வெற்றி இயக்குநராக நிலை நிறுத்திக் கொண்டார்.

2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு விக்ரமன் எந்தப் படங்களையும் இயக்கவில்லை. இவரது படங்களுக்காக ஏங்காத ரசிகர்கள் இல்லை.

தொடர்ந்து இன்னும் ஏராளமான வெற்றிப் படங்களை அவர் இயக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவரது படங்கள், இனிமையான பாடல்களுக்கும், குடும்பப் பாங்கான கதைகளுக்கும், காட்சி அமைப்புகளுக்கும் கச்சிதமாகவே பொருந்தியிருந்தது. தற்போது தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவராக விக்ரமன் இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று தனது 56 ஆவது பிறந்தநாளை விக்ரமன் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் சார்பாக நாமும் விக்ரமனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே விக்ரமன் சார்… Happy Birthday Vikraman Sir…

3

பின்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்ய முயற்சி எடுக்கும் ராஷி கண்ணா!

0
Raashi Khanna Singing

Raashi Khanna Singing Song; பின்னணி பாடகிகளை ஓவர்டேக் செய்ய முயற்சி எடுக்கும் ராஷி கண்ணா! ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருக்கும் நடிகை ராஷி கண்ணா பாடகியாக அவதாரம் எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ராஷி கண்ணா பாடகியாக அவதாரம் எடுக்க அவர் பாடல் பாடி வருகிறார்.

மெட்ராஸ் கஃபே என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு சினிமாவில் Oohalu Gusagusalade என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். இப்படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA Award for Best Debut Actress – Telugu விருது பெற்றார்.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்ந்தார். இந்த நிலையில், தமிழ் சினிமாவில் நயன்தாரா, அதர்வா ஆகியோரது நடிப்பில் வந்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலின் அயோக்யா, விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்று தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது சைத்தான் கா பச்சா மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகள் உள்பட அனைத்துமே ரத்து செய்யப்பட்டு, முடக்கப்பட்டு அனைவருமே வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது பிரபலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொருவரும் அவர்களது வீட்டிலேயே வித்தியாசமான டாஸ்க்குகள் செய்து வருகின்றனர்.

உடற்பயிற்சி, யோகா, ஓவியம், சமையல் என்று பிஸியாக இருக்கின்றனர். அந்த வகையில், நடிகை ராஷி கண்ணா தான் ஒரு நடிகை என்பதையும் தாண்டி புதிய முயற்சியாக பாடகி அவதாரம் எடுத்துள்ளார்.

வீட்டில் இருந்தபடி பாடல் திறமையை வளர்த்து வருகிறார். இது குறித்து பாடல் பாடும் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

5 Rs Doctor: 5 ரூபா டாக்டர எங்கப்பா? விமர்சனத்திற்கு உள்ளாகும் தளபதி விஜய்!

0
Vijay 5 Rupees Doctor

Five Rupees Doctor Vijay: 5 ரூபா டாக்டர எங்கப்பா? விமர்சனத்திற்கு உள்ளாகும் தளபதி விஜய்! கொரோனா வைரஸ் காரணமாக சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வரும் நிலையில், 5 ரூபா டாக்டர எங்கப்பா? என்று நடிகர் விஜய்யை சிலர் விமர்சித்து வருகின்றனர்.

மெர்சல் படத்தில் 5 ரூபாய்க்கு வைத்தியம் ( மருத்துவம் – Doctor) பார்த்த விஜய்யை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று பலரும் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

உலகத்தையே ஆட்டி வைத்தது கொரோனா வைரஸ். சீனாவில் தொடங்கி, தென் கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் 27 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைவருமே சமம் என்ற நோக்கில் உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரை அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர், களத்தில் இறங்கி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ, டுவிட்டர் பதிவோ எதுவும் வெளியிடாத தளபதி விஜய்யை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Thalapathy Vijay 5 Rupees Doctor

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவரைப் போன்று பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடியும், ராம் சரண் ரூ.70 லட்சம், வருண் தவான் ரூ.30 லட்சம் வழங்கியுள்ளனர்.

மேலும், மகேஷ் பாபு ரூ.1 கோடி, கபில் சர்மா ரூ.50 லட்சம், அல்லு அர்ஜூன் ரூ.1.25 கோடி, பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.

ஆனால், இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தொழிலதிபர் டாடா குழுமத்தைச் சேர்ந்த ரத்தன் நவால் டாடா ரூ.500 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஏன், திரையரங்குகள் மூடல் மற்றும் சினிமா படப்பிடிப்பு ரத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா ஊழியர்களுக்கு (FEFSI) உதவும் வகையில், ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், சிவகுமார் குடும்பத்தினர், விஜய் சேதுபதி, ஜெகன், ரோஷன், பார்த்திபன், மனோ பாலா, பிரகாஷ் ராஜ் ஹரிஷ் கல்யாண் என்று பலரும் உதவி செய்துள்ளனர்.

இவ்வளவு, விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பெப்சி தொழிலாளர்களுக்கு 10 மூட்டை அரிசி வழங்கப்பட்டது.

ஆனால், விஜய், அஜித் போன்று மாஸ் நடிகர்கள் இதுவரை நிதியுதவி என்ற பெயரில் பெப்சி தொழிலாளர்களுக்கோ அல்லது பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதிக்கோ ஜல்லிக்காசு கூட கொடுக்கவில்லை.

அப்படியிருக்கும் போது படத்தில் மட்டும் 5 ரூபாய்க்கு இவர் மருத்துவர் பார்த்தார் என்று விமர்சனம் எழுகிறது.

ஆம், தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வரும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டுல 5 ரூவாய்க்கு மருத்துவம் பார்க்க சொன்ன நடிகர யாராவது பார்த்திங்களா? என்று விஜய்யை விமர்சித்து புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் இதுவரை கொரோனா வீடியோவோ அல்லது முதல்வர் மற்றும் பிரதமர் நிவாண நிதிக்கு நிதியுதவியோ அளிக்காததற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, மெர்சல் படத்தில் மத்திய அரசையும், சர்கார் படத்தில் மாநில அரசையும் விமர்சித்த காட்சிகளில் விஜய் நடித்து வசனம் பேசியிருப்பார். இதற்கு எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியது.

இது ஒரு புறம் இருக்க, கொரோனா வீடியோ வெளியிட்டால், அதனை மாநில அரசு தனது சுயநலத்திற்கு பயன்படுத்தி மக்களிடையே நல்ல பேர் பெற்றுக்கொள்ளும் என்பதால், அவர் விழிப்புணர்வு வீடியோ வெளியிடவில்லை.

இதே போன்று உதவி செய்வது என்றால், தனது ரசிகர்களுக்கு, மக்களுக்கு தானாகவே சென்று உதவி செய்யலாம்.

யாரது உதவியும் தேவையில்லை என்பதால், முதல்வர் மற்றும் பிரதமர் உதவியை விஜய் நாடவில்லை என்று கூறப்படுகிற்து.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தனது வீட்டில் வருமான வரி சோதனையை நடத்திய மாநில, மத்திய அரசுக்கு ஏன், நிவாரண நிதிக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூட அவர் நினைத்திருக்கலாம்.

விஜய்யைப் பற்றி அவரது ரசிகர்களுக்கு தெரியும். உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்துட்டா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்…இதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

3

Losliya video Leaks: அந்தரங்க வீடியோவில் இருப்பது லோஸ்லியாவா? – Fact Check

0

Losliya Video Leaked: அந்தரங்க வீடியோவில் இருப்பது லோஸ்லியாவா? சமூக வலைதளங்களில் லோஸ்லியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று லீக் ஆனதாக ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாகவே சினிமா உலகில் ஒரு நடிகை பிரபலமாகிவிட்டால், அவரப் பற்றிய வதந்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் வருவது வழக்கம்.

இதற்கும் மேலாக, அவரது முகத்தை வேறொருவர் உடலுடன் மார்பிங் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கு என்று ஒரு கூட்டமே இருக்கிறது.

எப்பொழுதும் ஆபாச இணையதளங்களில் இருக்கும் ஒரு கூட்டம் ஏதேனும் பிரபலங்களில் முகச்சாயலில் வீடியோ இருந்தால், அது அந்த நடிகை தான் என வீடியோவை வைரல் செய்துவிடுவார்கள்.

இந்த வீடியோக்களில் சிக்காதவர்கள் ஒரு சிலரே. அப்படியிருக்கும் போது லோஸ்லியாவை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் லோஸ்லியா.

Actress Losliya Army

மாடல், நியூஸ் ரீடராக தனது வாழ்க்கையை தொடங்கிய லோஸ்லியாவிற்கு பிக் பாஸ் 3 ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இதன் மூலம் தற்போது தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம், ஹர்பஜன் ஹீரோவாக நடிக்கும் ப்ரண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக லோஸ்லியா நடிக்கிறார்.

அண்மையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு, படக்குழுவுனர் கேக் வெட்டி கொண்டாடினர். Losliya video leak.

இந்த நிலையில், லோஸ்லியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

Losliya video leak

அதில், முகம் எல்லாமே மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில், அது லோஸ்லியாவா? இல்லை வேறு யாரோவா? என்ற கேள்வியும் எழுகிறது.

அது எந்த அளவிற்கு உண்மை என ஆராய்ந்ததில், யாரோ ஒருவரது அந்தரங்க வீடியோவை Losliya look-alike என்ற டைட்டிலில் வைத்து சில விஷமிகள் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

3

BSNL LATEST PLAN: 600 GB யா? அடடே அற்புதம்.. ஆனா டேஸ் கம்மி!

0
BSNL PLAN

BSNL LATEST PLAN :- இந்திய நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSBL) மீண்டும் தனது நீண்டகால திட்டத்தை மாற்றி உள்ளது.

நிறுவனம் தனது வருடாந்திர ப்ரீபெய்டு திட்டத்தின் 1699 ரூ யின் உடைய வேலிடிட்டி 365 நாட்களில் இருந்து 300 நாட்கள் ஆக்கியுள்ளது.

இதுக்கு முன்னால் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் திட்டங்களை மாற்றி விட்டன.

இந்த இடத்தில் பிஎஸ்என்எல்(BSNL) மற்றும் அதன் துணை நிறுவனமான எம்டிஎன்எல் (MTNL) ஆகிய அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே மாற்றாமல் இருந்தன, இப்போது பிஎஸ்என்எல் ரூபாய் 1699 திட்டத்தில் சில மாற்றங்களை செய்தது .

பிஎஸ்என்எல் அவர்களுடைய 1699 ரூபாய்  ANNUALPLAN ல் சிறிது மாற்றம் செய்து அதை 300 நாட்களாக மாற்றியுள்ளது. இதற்கு முன்னால் பிரைவேட் டெலிகாம் கம்பெனிகள் டிசம்பர் 2019 இல் அவர்களுடைய TARRIF 40% அதிகரித்தது.

ஆனால் பிஎஸ்என்எல் அந்த சமயத்தில் எதுவும் அதிகரிக்கவில்லை ஏனென்றால் அந்த சமயத்தில் பிஎஸ்என்எல் 3ஜி சர்வீஸ் மட்டுமே வழங்கியது. இப்போது கம்பனின் லாபத்திற்காக சிறிதாக அவர்களுடைய ப்ளானை மாற்றம் செய்தது.

BSNL LATEST PLAN (புதிய பிளான்)

BSNL 1699 ரூபாய் பிளானில் வேலிடிட்டி நாட்களை மட்டுமே சிறிது கம்மியாக வைத்து உள்ளது மற்றபடி இதில் பழையபடி இருக்கும் அனைத்து சலுகைகளும் இருக்கும்.

தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ்கால் தினமும் 100 SMS தினமும் 2 ஜிபி டேட்டா என பழையபடி போலவே இருக்கும் ஆக மொத்தத்தில் இந்த பிளானில் உங்களுக்கு மொத்தம் 600  ஜிபி டேட்டா கிடைக்கின்றது.

அதைப்போல் தினமும் 250 நிமிடங்கள் நீங்கள் வாய்ஸ்கால் பேசி தீர்த்து விட்டால் அதன் பிறகு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதைப்போன்ற இன்டர்நெட் டேட்டாவும் தினமும் 2ஜிபி முடிந்துவிட்டால் உங்களுடைய இன்டர்நெட் வேகம் 80 kbps ஆக குறைந்து விடும்.

இதைத் தவிர்த்து உங்களுக்கு இந்த பிளானில் 60 தினத்திற்கு LOKDHUN கன்டென்ட் மற்றும் பிஎஸ்என்எல் TUNES SUBSCRIPTION இலவசமாக கிடைக்கின்றது..

அதன்பிறகு நீங்கள் 300 நாட்கள் அன்லிமிடெட் பாடல்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள :- BSNL முழு பிளான்

 

3

கொரோனா உடன் பேசும் நடிகர் சிவா: வைரலாகும் வீடியோ!

0
Shiva Speak With Corona Virus

Shiva Corona Video; கொரோனா உடன் பேசும் நடிகர் சிவா: வைரலாகும் வீடியோ! நடிகர் சிவா கொரோனா உடன் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவா வீட்டில் இருந்தபடி கனவில், கொரோனா உடன் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலகத்தையே ஆட்டி வைத்தது கொரோனா வைரஸ்.

சீனாவில் தொடங்கி, தென் கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளைக் கடந்து இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் மட்டும் 27 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைவருமே சமம் என்ற நோக்கில் உயர்ந்தவர் முதல் தாழ்ந்தவர் வரை அனைவருமே வீட்டில் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், மருத்துவர்கள் என்று பலரும் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும் சிலர், களத்தில் இறங்கி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவா தனக்கே உரிய பாணியில் நக்கல், நய்யாண்டி பாணியில் கொரோனா உடன் பேசும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ பேசிக்கொண்டிருந்த படி தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

அதாவது, வீட்டில் சும்மாவே இருப்பதால், கனவில் கூட கொரோனா வைரஸ் தான் வருகிறது என்பது போன்று அந்த வீடியோ காட்டப்பட்டுள்ளது.

கொரோனா உடன் சிவா பேசுகையில், வைரஸுக்கு கை கொடுத்துவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டு வணக்கம் என்கிறார்.

ஏன், எதற்காக நாங்கள் அப்படி என்ன தவறு செய்தோம்? புரியுது உன்னுடைய மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

யாரோ எங்கியோ தவறு செய்ததற்காக இப்படி எல்லோருமேவா? உலகம் முழுவதுமேவா? போதும் உன்னைப் பார்த்தால் ஒழுக்கமாக தெரிகிறது. ஒரு கியூட்னெஸ் இருக்கு அப்படி சொல்லும் போது கொரோனா சிரிக்கிறது.

சரி, இனிமேல் நாங்கள் எல்லோருமே வீட்டில் இருப்போம். தேவையில்லாமல் ஸ்டைலா ஊர் சுற்ற மாட்டோம். முக்கியமாக சுத்தமாக இருப்போம்.

இறுதியாக இந்த உலகத்தில் உண்மையான அன்பு மட்டும் தான் எப்போதும் காப்பாற்றுவோம். நாங்கள் அனைவரும் அன்பாக, ஒற்றுமையாக இருப்போம்.

தயவு செய்து வந்த வேகத்திலேயே போய்விடு, போய்விடு என்று தூக்கத்தில் உளறுகிறார்.

மேலும், எவ்வளவு மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என்று அனைவரும் இரவு பகலாக பணியாற்றுகிறார்கள்.

ப்ளீஸ் கோ கொரோனா… கோ கொரோனா…அப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது அவரது அம்மா என்று நினைக்கிறோம். டே சிவா எழுந்தாச்சா…

யார் கூட பேசிக்கிட்டு இருக்க…குப்ப போடணும், வீட பெருக்கணும், பாத்திரம் கழுவனும் எல்லாமே அப்படியே இருக்கு பாரு…சீக்கிரம் சீக்கிரம் என்று பேசுகிறார்.

இதற்கு எந்த பதிலும் பேசாமல் அப்படியே பெட்சீட்டை மூடி படுத்து தூங்குகிறார். இதோடு, அந்த வீடியோவும் முடிகிறது.

இதுவரை எத்தனையோ பிரபலங்கள் பதிவிட்ட வீடியோக்களில் இந்த வீடியோ கொஞ்சம் நக்கலாகவும், நய்யாண்டியாகவும், காமெடியாகவும் இருக்கிறது.

பொதுவாகவே நடிகர் சிவா படங்கள், காமெடி, நக்கல், நய்யாண்டி என்று எல்லாமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நாம் இருவர் நமக்கு இருவர் – மாயனா? டாக்டரா?

0

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.

ஆர்ஜே செந்தில், டாக்டர் மற்றும் மாயனாக இரு வேடத்திலும் ரக்ஷா ஹோலா,  ரேஷ்மி ஜெயராஜ் நடித்திருக்கும் இந்த சீரியலில் பெரிய கதைகள் எதுவும் கிடையாது.

இந்த தொடருக்கு பக்கபலமாய் திரைக்கதை மட்டுமே மாயனும் அவரது நண்பர் ரைட்டுடன் செய்யும் காமெடிகள் இந்த தொடரில் அதகளமே.

  மாயனும் அவரது மனைவி தேவிக்கும் வரும் காதல் காட்சிகள் சண்டைக் காட்சிகள் இத்தொடர்க்கு கூடுதல் பலம்.

இவர்கள் இன்றைய எபிசோடில் இருக்கிறார்கள் என்றால் அன்று போரடிக்காமல் பார்க்கலாம். அந்தளவுக்கு இவர்களது திரைக்கதை சுறுசுறுப்பாக இருக்கும்.

மாயன் பேச்சிலும், நடிப்பிலும், காமெடியிலும் அசத்தி வருகிறார். இவருக்கு எதிர்மறையாக நல்ல கேரக்டராக இருந்தாலும் கூட டாக்டர் கதைகள் கொஞ்சம் போராகவே செல்கிறது.

டாக்டரின் மனைவியாக தாமரையின் கதாபாத்திரம் இருந்து வருகிறது. இவர்களின் காதல் காட்சிகளை விட மாயன் காதல் காட்சிகள் மக்களுக்கு பிடித்த தாகவே இருக்கிறது.

இந்த சீரியலின் ப்ரோமோ யூடியூபில் போட்டவுடனே பத்திலிருந்து பதினைந்து லட்சம் பார்வையாளர்களை கடக்கிறது. சில சமயங்களில் 20லட்சமும் செல்கிறது

இந்த தொடரில் பெரிதாக வில்லன்கள் என்று யாரும் கிடையாது. ஒரே வில்லன் சித்தப்பு என்கிற லிங்கம்.

இந்த தொடரின் வில்லன் என்றாலும் மாயன் உடன் செய்யும் காமெடிகள், பல இடங்களில் அசிங்கப்படும் பொழுது மக்களை பெரிதாகவே சிரிக்கவும் வைக்கிறார்.

தொடர் ஆரம்பம் மனதிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே வில்லனாகவும் இருந்து வருகிறார் இந்த தொடருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

இந்த தொடர் சில வாரங்கள் சுறுசுறுப்பில்லாமல் சென்றாலும். மாயன் என்னும் ஒரு கதாபாத்திரம் நம்மை இந்த தொடரைப் பார்க்க ஆர்வம் கொள்ள வைக்கிறது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பமான இந்த தொடர் 579 எபிசோடுகளை கடந்து இருக்கிறது.

இந்த தொடர் ரசிகர்களை ஈர்க்க முக்கிய காரணமே மாயன் மற்றும் தேவியின் கதாபாத்திரங்களே.

இதனாலோ என்னவோ இவர்களின் காதல் காட்சிகள் தொடரில் அதிகமாகவே இருக்கும்.

மாயன் முதலில் தனது சகோதரருக்கு செய்யும் துரோகங்கள். பின்பு மனம் மாறுவது என முதலில் நாடகம் மெல்லவே கடந்தது.

பின்பு ரசிகர்கள் பல்சை பிடித்து காதல், காமெடி என விறுவிறுப்பாக செல்கிறது.

தொடரில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் மாயன் அங்கு நல்லவனாக வந்து நிற்பது ரசிகர்களின் ஆதரவை தெரிகிறது.

டாக்டர் கதாபாத்திரம் அம்மாவுக்காக விட்டுக் கொடுப்பதும், அம்மாவுக்காக மனைவியை வெளியில் அனுப்புவதும் என அம்மாவின் பிள்ளையாக வந்தார்.

பின்பு டாக்டரின் அம்மாவே அவரை புரிந்து கொண்டு டாக்டரை அவரின் மனைவியோடு சேர்த்து வைக்க முயற்சி செய்வதெல்லாம் அருமையாகவே இருந்தது.

இந்த தொடரில் இரு நாயகிகளுக்கும் ஒரு தந்தை தான். அவருக்கு இரு மனைவிகளின் பிள்ளைகளாக நாயகிகள் வருகிறார்கள்

சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் அழகு சீரியல் இருக்கு சமமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் இந்த நாம்-இருவர்-நமக்கு-இருவர் தொடர்.

ஆனால் இது இன்றைய இளைஞர்களையும் கவர்ந்து ஹாட்ஸ்டாரில் அதிக பார்வையாளர்களை தொடுகிறது.

இதற்காகவே இதை இயக்கும் இயக்குனர்கள் செல்வனுக்கு நாம் ஒரு பாராட்டை தெரிவிக்கலாம்.

3

நடிகர் ஜீவா தனது பெயரை மாற்றினார்

0

கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ட்விட்டரில் நடிகர் ஜீவா தனது பெயரை மாற்றி உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது  100 நாடுகளுக்கு மேல் பரவி பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது..

இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் வைரஸ் கட்டுப்படுவதாகவே தெரியவில்லை இந்த நான்கு வாரத்தில் அதிகரிப்பதாகவே உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்திய  பிரதமர் மோடி பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவு இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெரிதாக பல்லாயிரம் மக்களை கொன்று வருகிறது

தற்போது தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஜீவா ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை உள்ளே போ என்று மாற்றியுள்ளார் தற்போது ட்விட்டரில் வைரலாக இருந்து வருகிறது

ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின் டிவிட்டரில் தன் பெயரை மாற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் “லெட்ஸ் ஸ்டே இன்டோர்” என்ற பெயரை மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

30/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

30/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று சில நஷ்டங்களை சந்திப்பீர்கள்.

மிதுன ராசிபலன்

இன்று குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.

கடக ராசிபலன்

இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று பணவரவு அதிகமாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று கோபத்தை குறைக்க வேண்டியது அவசியம்.

துலாம் ராசிபலன்

இன்று உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும்.

விருச்சிக ராசிபலன்

இன்று அனைத்து காரியங்களிலும் சிறப்பாக நடக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று இன்பமான நாளாக அமையும்.

மகரம் ராசிபலன் 

இன்று நன்மைகள் வழங்கும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று அன்பானவர்களை சந்திப்பீர்கள்.

மீனம் ராசிபலன் 

இன்று ஜெயத்தை தேடி தரும் நாளாக இருக்கும்.

30/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3