Vijay Corona Virus: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு சென்று கிடுக்குபிடி விசாரணை செய்துள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு சென்று அங்கு கிருமி நாசினி தெளித்துவிட்ட வந்ததாக தகவல் வந்துள்ளது. ஆனால் விஜய்யை காணவில்லை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் தனியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே வெளிநாட்டிற்கு சென்று வந்தவர்கள் பட்டியலில் சினிமா பிரபலங்களான பிரபு தேவா, விஜய், ரம்பா, கௌதமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர் கடந்த 6 மாதங்களாக வெளிநாடு எங்கும் செல்லவில்லை என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், மாஸ்டர் படப்பிடிப்பை முடித்த கையோடு, விஜய் மாஸ்க் உடன் சென்னை விமான நிலையத்தில் நடந்து செல்லும் புகைப்படம் வந்தது.
அதன் பிறகு மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக அவர் சென்னை திரும்பியதாகவும் தகவல் வந்தது.
ஆனால் விஜய் வீட்டில் இருந்தவர்கள் விஜய் வெளிநாடு செல்லவில்லை எனக்கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் வெளிமாநிலத்திற்கே விமானத்தில் சென்றுவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, விஜய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் என்ற கொரோனா எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படவில்லை. மாறாக, அங்கு கிருமி நாசினி மட்டும் தெளித்துள்ளனர்.
ஏற்கனவே விஜய் கொரோனா விழிப்புணர்வு வீடியோவோ, கொரோனா குறித்து பதிவோ எதுவும் வெளியிடவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி கேட்டை திறந்து செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பல லட்சம் மக்களை பாதித்து முப்பதாயிரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்து வருகிறது.
இதில் ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
சீனாவை விட அமெரிக்கா பாதிப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது, சீனாவைவிட இத்தாலி இறப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது.
இதைக் கட்டுக்குள் கொண்டுவர பல அரசாங்கம் திணறி வரும் இவ்வேளையில் மிகப்பெரும் தலைவர்களையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
இதில் அதிகமாக அறிவிப்பு நாடுகள் பலர் பாதித்து வருகின்றன குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கிக் கொண்டது.
கனடா பிரதமரின் மனைவி, ஈரானின் துணை அதிபர், பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர் போன்றவர்களை இந்த தொற்று விட்டு வைக்கவில்லை
நேற்று மார்ச் 28ஆம் தேதி கொரோனா தொற்றால் ஸ்பானிஷ் இளவரசி மரிய தெரசா காலமானார் இது அந்த நாட்டு மக்களுடைய சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
தற்போது கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலில் ஜெர்மனி மிகவும் பாதிப்படைந்தது. அந்த சிக்கலால் ஜெர்மன் நிதி அமைச்சர் தாமஸ் ஸ்கேஃபர் தற்கொலை செய்து கொண்டார்.
இது ஜெர்மன் நாட்டு மக்களிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Vimal Corona Awareness; சொந்த கிராமத்தில் தெரு தெருவாக சுற்றும் நடிகர் விமல்! நடிகர் விமல் தனது சொந்த கிராமத்தில் ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்து கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
நடிகர் விமல் தனது சொந்த கிராமத்திற்கு சென்று அங்குள்ள தெருக்களில் கிருமி நாசினி மருந்து அடித்து மக்களை பாதுகாத்து வருகிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறார். இதுவரை இந்தியாவில் மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாக்கும் பொருட்டு கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு சினிமா பிரபலங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
சிலர் களப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர். அந்த வகையில், நடிகர் விமல், நேற்று தனது சொந்த ஊரில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்து பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களில் இளைஞர்களுடன் இணைந்து ஈடுபட்டுள்ளார்.
அப்போது தனது கிராமத்தில், உள்ள ஒவ்வொரு தெருவிற்கும் சென்று கொரோனாவுக்கு எதிராக கிருமி நாசினி மருந்து தெளித்து வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சன் டிவி யில் ஒளிபரப்பாகும் நாயகி மற்றும் ரோஜா சீரியல்களுக்கு இடையே யூடியூப் பக்கத்தில் பார்வையாளர்கள் போட்டி நிலவி வருகிறது.
டிஜிட்டல் வேல்டு
கடந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
பல தொலைதொடர்பு நிறுவனங்கள் இலவச டேட்டாக்களை அள்ளித் தந்தது இதனால் யூடியூப், ஹாட் ஸ்டார், நெட்ப்ளிக்ஸ் போன்ற வீடியோ தளங்கள் பிரபலமானது.
மக்கள் அனைவரும் டிவியில் சீரியல் பார்ப்பதை விட யூட்யூபில் அதிகமாக சீரியலை பார்க்கத்தான் செய்கிறார்கள்.
இப்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த உலகில் குறித்த நேரத்தில் வீட்டில் அமர்ந்து டிவியில் ஒரு சீரியல் பார்ப்பது என்பது மிகவும் கடினம்.
இதனால் யூட்யூப் தளத்தில் சீரியலை ஒளிபரப்பு செய்தார்கள்.
காத்திருந்த காலம்
சன் டிவியில் இரவு 8 மணிக்கு மெட்டிஒலி, 9 மணிக்கு கோலங்கள், மீண்டும் 8 மணிக்கு திருமதி செல்வம் போன்ற நாடகங்களுக்கு காத்திருந்த நேரம் எல்லாம் மறந்து,
எப்ப வேணாலும் இந்த சீரியலை பார்க்கலாம் என்ற நிலைமைக்கு யூடியூப் கொண்டு வந்துள்ளது.
ஒரு சீரியல் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம் அதன் டிஜிட்டல் உரிமத்தை அந்த தயாரிப்பு நிறுவனமே கைப்பற்றிக் கொள்கிறது.
சன் டிவியில் சீரியல் ஒரு எபிசோட் ஒளிபரப்பு ஆகிவிட்டால் அடுத்த இரண்டு வினாடிகளில் யூடியூப் பக்கத்திற்கு வந்துவிடும்.
ஹாட்ஸ்டார், சன் என்எக்ஸ்டி
இது சன் டிவி நிலைமை, ஆனால் விஜய் டிவி தனக்கென்று ஹாட்ஸ்டார் எனும் செயலியை வைத்துள்ளது.
சன்டிவி சீரியல்கள் யூட்யூபில் இருந்தாலும், சன் NXTஎன்ற செயலி மூலம் ஒளிபரப்பவும் செய்கிறது.
ஆனந்த விகடன் வார இதழ்கள் மட்டும் இல்லாமல், டிஜிட்டல் உலகிற்கு ஏற்றது போல் தங்களை மாற்றிக் கொண்டது.
நாயகி, ரன்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி மற்றும் ரன் சீரியல்களை சன் டிவியில் ஒளிபரப்பான உடனே யூடியூபில் விகடன் டிவி எனும் பக்கத்தில் வெளியிடுகிறது.
கடந்த காலங்களில் நாயகி சீரியல் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை அனைத்து எபிசோடுகளும் கடந்து கொண்டிருந்தது.
ரோஜா சீரியல்
தற்போது அதை முறியடிக்கும் விதமாக சரிகம டிவி ஷோஸ் ஒளிபரப்பும் ரோஜா சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.
ரோஜா தொடரை தினமும் சராசரி 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நாயகி சீரியல் 10 லட்சத்திலிருந்து 15 லட்சம் பார்வையாளர்களை தொடுகிறது.
ரோஜா சீரியலில் முக்கியமான எபிசோடுகள் 20 லட்சத்தை தாண்டுகிறது, நாயகி சீரியலின் முக்கியமான எபிசோடுகள் 15 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை செல்கிறது.
கல்யான வீடு
திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் கல்யாண வீடு சீரியல் திரு டிவி எனும் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகும் பொழுது 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து கொண்டிருந்தது.
சில காரணங்களால் சன்டிவி அந்த டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி தன் சொந்த பக்கமான சன் டிவி பக்கத்தில் வெளியிடுகிறது.
தற்போது அதன் யூடியூப் பார்வையாளர்கள் 2 லிருந்து 3 லட்சம் பார்வையாளர்கள் மட்டுமே.
ரன் சீரியல் ஒளிபரப்பாகி சில மாதங்களே ஆன நிலையில், சன்டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த தொடரில் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் யூடியூபிலும் சராசரி ஐந்து லட்சம் பார்வையாளர்களை தாண்டுகிறது.
விகடன் 58, சன் டிவி 72
விகடன் டிவி பக்கத்தில் மொத்தம் 58 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். சன் டிவியில் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரிபர்கள் உள்ளனர்.
சன் டிவியில் காலையில் ஒளிபரப்பாகும் கல்யாணப்பரிசு தொடர் 3-5 லட்சம் வரைக்கும் பார்வையாளர்களை தொடுகிறது.
சித்தி 2
புதிதாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சித்தி 2 சீரியல் 5 லட்சம் பார்வையாளர்களைக் தினம் கடக்கிறது. இந்த சீரியலை சன்டிவி பக்கத்தில் வெளியிடுகிறது.
அழகு
நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அழகு சீரியல் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை தினமும் பார்வையாளர்களை தொடுகிறது.
இந்த சீரியலை விஷன் டைம் அதன் யூடியூப் பக்கத்தில் வெளியிடுகிறது.
தமிழ்செல்வி
தமிழ்ச்செல்வி தொடர் 1.5 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பார்வையாளர்களை வரை பார்க்கிறார்கள் இதையும் சன்டிவி தன் சொந்த யூடியூப் பக்கத்தில் வெளியிடுகிறது.
கண்மணி
சன் டிவி யூடியுப் பக்கத்தில் சஞ்சீவ் நடித்த கண்மணி சீரியல் 3.5 லட்சத்திலிருந்து ஆறு லட்சம் வரை பல பார்வையாளர்களை கடக்கிறது.
சந்திரலேகா
ரோஜா சீரியலை வெளியிடும் சரிகம டிவி ஷோஸ் யூடியூப் பக்கம் சந்திரலேகா எனும் நாடகத்தையும் ஒளிபரப்புகிறது.
இதன் பார்வையாளர்கள் தினமும் 4.5 லட்சத்திலிருந்து ஆறு லட்சம் வரை செல்கிறது.
சரிகம டிவி ஷோ, விஷன் டைம் மற்றும் விகடன் டிவி போன்ற யூட்யூப் பக்கத்தில் தலா இரண்டு சீரியல்களை தினமும் வெளியிட படுகிறது.
சராசரி பார்வையாளர்கள்
இதிலும் சரிகம டிவி ஷோஸ் நிறுவனம் யூட்யூப் தளத்தில் ரோஜா மற்றும் சந்திரலேகா சீரியல்களை வெளியிட்டு சராசரியாக தினமும் 20 லட்சம் பார்வையாளர்களை தொடுகிறது.
விகடன் டிவி ரன் மற்றும் நாயகி சீரியலை வெளியிட்டு சராசரியாக தினமும் 18 லட்சம் பார்வையாளர்களை எட்டுகிறது.
விஷன் டைம் யூடியூப் பக்கத்தில் அழகு மற்றும் கல்யாண பரிசு சீரியல்களை வெளியிட்டு தினமும் சராசரி 13 லட்சம் பார்வையாளர்களை எட்டுகிறது.
சன் டிவி யூட்யூப் பக்கத்தில் 77 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரிபர் கள் இருந்தாலும்கூட ஒளிபரப்பும் சீரியல்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவே.
தற்போது ரோஜா மற்றும் நாயகி சீரியல் இடையே யூடியூப் பக்கத்தில் போட்டி நிலவி வருகிறது
சில மாதங்கள் நாயகி சீரியல் 15 லட்சம் பார்வையாளர்களை தொடும் சில மாதங்களிலேயே ரோஜா சீரியல் 15 லட்சம் பார்வையாளர்களை தொடும்
தற்போது உள்ள நிலவரப்படி ரோஜா சீரியல் நாயகி சீரியல் முந்தி யூடியூப் பக்கத்தில் சன் டிவி ஒளிபரப்பு தமிழ் சீரியல்களில் முதலிடத்தில் உள்ளது.
Vijay Corona Awareness Video; விஜய் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிடாததற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
உலக மக்களை எல்லாம் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்கும் நிலைக்கு கொரோனா தள்ளிவிட்டது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. உயிர்சேதமும் கூடிக்கொண்டே இருக்கிறது.
உலக நாடுகளையும் கடந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 25 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக யாருமே வீட்டை விட்டு வெளியில் வராதபடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் என்று பலரும் வீடியோ வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சில பிரபலங்கள் எங்களுக்கு என்ன வந்தது என்ற நிலையில், இருக்கின்றனர். நாம் அவர்களைப் பற்றிதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் கூட கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆனால், நம்ம தளபதி விஜய் இதுவரையில் எந்த வீடியோயும், டுவிட்டர் பதிவும் வெளியிடவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக இருப்பது அரசு மீது அவருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி. விஜய் வீடியோ வெளியிட்டால், அதனை அரசு, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதன் மூலம் அரசுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளும் என்பதால், தான் இதுவரை வீடியோ வெளியிடவில்லையாம்.
குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது விளம்பரத்திற்காக விஜய்யின் வீடியோவை பயன்படுத்திக் கொள்வார் என்பதால் தான் விஜய் வீடியோ வெளியிடவில்லையாம்.
இதுவரை சினிமா பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஆனால், அவர்களது வீடியோவை அரசு தங்களது சுயநலத்திற்கு எடுத்துக் கொள்ளாத போது, ஏன் விஜய் வீடியோவை மட்டும் எடுத்துக் கொள்ளும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரது ரசிகர்கள் பட்டாளங்களை மாஸ்டர் படப்பிடிப்பின் போதே நாம் அனைவரும் பார்த்திருப்போம். இது ஒன்று போதாதா?
ஏற்கனவே விஜய் படங்களில் அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இதனால், விஜய் படங்களுக்கு மட்டும் அரசிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும்.
தற்போது உள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் விஜய்யை வைத்து தான் சிலர் அரசியல் செய்கிறார்கள் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அப்படியிருக்கும் போது விஜய் வீடியோ வெளியிட்டால், அரசு அதனை தங்களது விளம்பரத்திற்கு எடுத்துக் கொள்ளும் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம்.
ஆதலால் தான் விஜய் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிடவில்லையாம்.
டிஜிட்டல் சந்தையில் ஜியோவை விரிவாக்கம் செய்ய 10 சதவீத பங்கினை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விற்பனை செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
உலக பில்லியனர்களில் ஒருவரான இந்தியாவின் முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ.
இந்தியாவில் இலவச அழைப்புகள், இலவச மெசேஜ்கள், ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டா போன்ற சேவைகளை முதன்முதலில் கொண்டுவந்தது ஜியோ நிறுவனம்.
இந்தியாவின் டேட்டா சேவையை ஜியோக்கு முன், ஜியோக்கு பின் என்றுகூட பிரிக்கலாம் அந்த அளவுக்கு மக்களுக்கு பல சலுகைகளை கொடுத்தது ஜியோ தான்.
தற்போது இந்திய டிஜிட்டல் சந்தைகளில் ஜியோவை இன்னும் விரிவாக்கம் செய்ய அதன் 10 சதவீத பங்கினை அம்பானி விற்பனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் பத்து சதவீத பங்கினை வாங்கப் போவது வேறு யாருமில்லை சமூகவலைதளத்தில் ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தான்.
இது ஏற்கனவே இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற நிறுவனத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது ஜியோ நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றும் பட்சத்தில் இந்தியாவில் தங்களது சந்தையை இன்னும் அதிகமாக்கி கொள்கிறது பேஸ்புக் நிறுவனம்.
இந்த செய்தி பினான்சியல் டைம்ஸ் எனும் பத்திரிக்கையில் ஒரு தகவலாக வெளியாகியுள்ளது.
நடிகை மகிமா நம்பியார் தனது வீட்டு சுவற்றில் ஓவியம் வரைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகிமா நம்பியார் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே இருப்பதுதான் கொரோனாவுக்கு எதிரான ஒரே முடிவு என்று அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.
கொரொனா வைரஸ் காரணமாக பாதுகாப்புக்காக அலுவலங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக கடிகாரத்தைப் போன்று நிற்காமல் சுழன்று கொண்டிருந்த சினிமா பிர்பலங்கள் தற்போது வீட்டிற்குள்ளேயே அடைபட்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், ஹீரோக்கள் தங்களது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி, அதில், உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், ஹீரோயின்கள் வீட்டு வேலை செய்வது, சமையல் செய்வது மற்றும் பெயிண்டிங் என்று இப்போதும் பிஸியாக இருக்கின்றனர்.
ஒரு சில ஹீரோயின்கள் கிச்சன் பக்கம் செல்லாமல், தங்களது உடலை பிட்டாக வைத்திருக்க உடற்பயிற்சி, யோகா ஆசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை மகிமா நம்பியார் தனது வீட்டு சுவற்றில் ஓவியம் வரைந்து தனக்குள் இப்படியொரு திறமை இருக்கிறது என்று பார்வையாளர்களான ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
அதில் ஒரு பெண்ணின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மகிமா நம்பியார் ஓவியம் வரைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியான அசுரகுரு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் அவர் பை ஓட்டுவது, புகை பிடிப்பது, கொள்ளையடிக்கும் கும்பலை கண்டுபிடிப்பது என்று ஒரு போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது கிட்னா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.
ஸ்டார் விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பத்து வருடத்திற்கு முன்பு சீரியல்களைப் பற்றி கேட்டால் சன்டிவி மட்டும் தான் சொல்வார்கள்.
ஆனால் தற்போதுள்ள காலகட்டத்தில் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களும் அதிக சீரியலை ஒளிபரப்ப தொடங்கியுள்ளன.
தற்போது வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மட்டுமில்லாமல் வேலைக்குப் போகும் இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பார்க்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்.
அப்படி அந்த சீரியல்ல என்னதான் இருக்கு?
வீடு, வீடு விட்டா கடை.
கடை, கடை விட்டா வீடு,
இப்படி இந்த இரண்டு இடத்தை தவிர என்றாவது ஒருநாள் தான் வேறு இடங்களில் இந்த சீரியலில் நடக்கும் காட்சிகளை பார்க்கலாம்.
இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், சித்ரா, சாந்தி வில்லியம்ஸ், சரவன விக்ரம், கவிதா கவுடா நடித்து வருகிறார்கள்.
இவர்களது பெயரை இப்படி சொன்னால் மக்களுக்கு உடனே ஞாபகம் வராது.
மூர்த்தி, தனம், ஜீவா, கதிர், கண்ணன், முல்லை, மீனா இந்த பெயர்களைச் சொன்னால் உடனே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஞாபகத்துக்கு வரும்.
அண்ணன் தம்பி நான்கு பேர். இதில் முதல் மூன்று நபர்கள் தாங்கள் சொந்தமாக வைத்துள்ள பாண்டியன் ஸ்டோர் எனும் கடையை பார்த்துக் கொள்கிறார்கள்.
கடைக்குட்டி கண்ணன் காலேஜுக்கு செல்கிறார்.
மூர்த்தி மனைவியாக தனம் மற்றும் மூர்த்தியின் மூன்று தம்பிகளுக்கும் அண்ணியாக இல்லாமல் அம்மாவாக வருகிறார்.
அவர்களுக்காக இவர்கள் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே வாழ்கிறார்கள்.
பிறகு ஜீவா, மீனாவை திருமணம் செய்து கொள்ள, கதிர் முள்ளையை திருமணம் செய்து கொள்கிறார்.
ஒரே வீட்டில் 3 மருமகளுடன் நடக்கும் சந்தோஷங்கள், கஷ்டங்கள், சண்டைகள் போன்றவற்றை முழுமையாக காட்டுகிறது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடரில் வரும் சண்டைகள் முக்கால்வாசி கடைக்குட்டி தம்பியாக வரும் கண்ணா என்பவரால் தான்.
ஜீவாவின் மனைவி மீனா இந்த குடும்பத்தை விட்டு தன் கணவனை தனிக்குடித்தனம் அழைத்துச் செல்ல நினைப்பதால் வரும் சிக்கல்கள் இந்த தொடர் ஆரம்பம் ஆனதிலிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தத் தொடரில் மக்கள் மிகவும் எதிர்பார்ப்பது கதிர் முல்லையின் காதல் காட்சிகளையும், செல்லமாக போடும் சண்டைக் காட்சிகளில் தான்.
இவர்கள் தான் இந்த தொடர் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக முக்கிய காரணமாகிறார்கள்.
ஜீவா, மீனா பாதி நாட்களில் சண்டைகள் ஆகவும், கதிர் முல்லை பாதி நாட்கள் காதல் காட்சிகளிலும் இந்தத் தொடர் நகர்கிறது.
முல்லைக்கு அம்மாவாக வரும் சாந்தி வில்லியம்ஸ், அவரது அக்கா மகள் இருவரும் சேர்ந்து இந்த குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பது எண்ணம்.
மீனாவின் தந்தைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அந்த குடும்பத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்பது எண்ணம்.
இந்த தடைகளை தாண்டி பல சோதனைகளைத் தாண்டி அண்ணன் தம்பிகள் நால்வரும் எந்த பிரச்சனையிலும் பிரியாமல் ஒற்றுமையாக வாழ்வதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது இந்த தொடர்.
இதில் மூத்த அண்ணனாக வரும் மூர்த்தி என்கிற ஸ்டாலின் அதில் நடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக மூத்த அண்ணன் தன் குடும்பத்தை எப்படி சுமக்கிறான் என்பதை இந்த தொடரில் அழகாக காட்டுகிறார் டைரக்டர் சிவசங்கர்.
ஒரே வீட்டில் தினமும் கதைகள் நகர்கிறது அந்த கதையை அழகாக நகர்த்த கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் பிரியா தம்பி என்பவர்.
இந்த தொடரில் எத்தனை சண்டைகள் வந்தாலும் பிறகு ஒன்றுகூடி அமர்ந்து சாப்பிடுவது பார்க்கும் பொழுது நம்முடைய பழைய வாழ்க்கைகள் நினைவுக்கு வந்து போகிறது.
அண்ணனை விட்டுக் கொடுக்காத தம்பிகள், தம்பிகளை பிரிய மனம் வராத அண்ணன், நான்கு பேரையும் ஒன்றாக காத்துவரும் அண்ணி என பல நேரங்களில் இந்த தொடர் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
சன் டிவி நாயகி, ரோஜா, கல்யாண வீடு, அழகு போன்ற சீரியல்கள் யூட்யூபில் சராசரி 10 -15 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தினமும் பார்க்கிறார்கள்.
ஆனால் விஜய் டிவி யூடியூப் பக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ வை மட்டுமே 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ விற்கு இவ்வளவு மவுஸ் என்றாள் இந்த தொடருக்கு எவ்வளவு இன்று நாம் சொல்லியாக வேண்டும்.
வீட்டில் உள்ளவர்கள் இரவு 8 மணி வரை காத்திருந்து பார்ப்பார்கள். ஆனால் இளைஞர்கள் அப்படியா ஹாட்ஸ்டார் டவுன்லோட் செய்து மாத சந்தா கட்டி காலை 8 மணிக்கே பார்த்து விடுகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர் வீட்டை தாங்கிப் பிடிப்பது அண்ணி தனம் மட்டுமில்லை, அந்த வீட்டில் உள்ள அனைவரின் குணம் என்று கூட சொல்லலாம்.
அண்ணன் தம்பிகள் ஒற்றுமையுடன் வாழ இது ஒரு எடுத்துக்காட்டான தொடர் என்று கூட சொல்லலாம்.
Sudha Kongara: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சுதா கொங்கரா பிறந்தநாள் இன்று (Happy Birthday Sudha Kongara).
தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருக்கும் நிலையில், அவர்களில் பெண் இயக்குநர்கள் என்றால் விரல் விட்டு எண்ணும் அளவுதான்.
அவர்களில் தன்னையும் ஒருவராக இணைத்து கொண்டுள்ளார் பெண் இயக்குநர் சுதா கொங்கரா.
கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்தார் சுதா கொங்கரா (31).
மெட்ராஸ் மகளிர் கிறிஸ்துவ கல்லூரியில் வரலாறு மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.
படித்து முடித்த சுதா கொங்கரா இயக்குநர் மணிரத்னத்திடம் கிட்டத்தட்ட 7 வருடம் உதவி இயக்குநராகவே இருந்துள்ளார்.
முதன் முதலில் தமிழில் துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த், பூர்ணா, பூனம் பாஜ்வா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
நண்பர்களுக்கு இடையில் மோதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இப்படத்தின் புரோடக்ஷன் பணியின் போது, பாக்ஸிங் தொடர்பான கதையை எழுதியுள்ளார். அப்போதே படத்திற்கு இறுதிச் சுற்று என்று டைட்டில் வைத்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இறுதிச் சுற்று படத்தில் நடிப்பதற்கு மாதவனை அணுகியுள்ளார்.
மாதவன் மற்றும் சுதா கொங்கரா இருவருக்கும் நல்ல புரிதல் இருந்துள்ளது. இருவருமே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
எப்படியென்றால், மணிரத்னம் படத்தில் உதவி இயக்குநராக சுதா கொங்கரா இருந்த போது மாதவன் நடித்துள்ளார்.
துரோகி படத்தைத் தொடர்ந்து இறுதிச் சுற்று படத்தை இயக்கினார். இப்படம் ஹிந்தியில் Saala Khadoos என்ற டைட்டிலில் வெளியானது.
இறுதிச் சுற்று படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
இறுதிச் சுற்று படத்தை தெலுங்கில் குரு என்ற டைட்டிலில் ரீமேக் செய்துள்ளார்.
துரோகி மற்றும் இறுதிச் சுற்று படத்தைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கியுள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சுதா கொங்கராவின் அவரது அர்ப்பணிப்பு படக்குழுவினரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நடிகையாகவும் திகழ்ந்துள்ளார். ஆம், பிரசன்னா நடிப்பில் வந்த கண்ட நாள் முதல் படத்தில் கல்லூரி பேராசிரியை என்ற ரோலில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சுதா கொங்கராவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே சுதா கொங்கரா மேம்…
2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எட்வர்ட் என்பவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கிறார்.
அவர் தான் 5000 வருடத்திற்கு சென்று லாஸ் என்கிற புகைப்படம் எடுத்து வந்துள்ளேன் என்று பீதியைக் கிளப்புகிறார்கள்.
லாஸ் ஏஞ்சலெஸ் நகரை சேர்ந்த எட்வர்ட் என்பவர் அந்த நகரில் நடக்கும் மிகப்பெரிய ரகசிய ஆய்வில் பங்கு கொள்கிறார்.
இவர் 2004 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆய்வகத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த ரகசிய ஆய்வில் இவர் 5000 ஆண்டுகள் பயணித்து செல்கிறார்.
அங்கிருந்து தன் கையிலிருந்த புகைப்படக் கருவியால் லாஸ் ஏஞ்சலெஸ் நகரை புகைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார்.
அவர் அந்த தொலைக்காட்சியில் கூறியது “பருவநிலை மாற்றம் காரணமாக லாஸ் ஏஞ்சல் நகர் வெள்ளத்தில் மூழ்கி நீர் சூழ்ந்து உள்ளதாக கூறி ஒரு புகைப்படத்தையும் காட்டுகிறார்.
அந்தப் புகைப்படத்தில் லாஸ் ஏஞ்சல் நகர் முற்றிலும் நீரால் சூழப்பட்டது போல் உள்ளது. ஆனால் அவர் டைம் டிராவல் செய்தேன் என்று உறுதியாகவும் கூறுகிறார்.
அந்தத் தொலைக் காட்சியில் இவரது முகத்தை காட்ட வில்லை. இது போன்ற பல நிகழ்வுகள் அடிக்கடி உலகத்தில் நடப்பதும் உண்டு.