Home Blog Page 187

ஆகா ! வந்துவிட்டது jio புதிய ப்ளான் : தினமும் 2 ஜிபி இலவசம்

0
jio free data ஜியோ டேட்டா

ரிலையன்ஸ் ஜியோ வின் சர்ப்ரைஸ் ஜியோ டேட்டா பேக் ( JIO DATA PACK ) தினமும் 2ஜிபி டேட்டா ஃப்ரீ

JIO latest plan ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ டேட்டா பேக் நான்கு நாட்களுக்கு அறிவித்திருக்கிறது இது மார்ச் 28 முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை இயங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ வின் இந்த புதிய ப்ளான் லாக்டோன் காரணமாக வீட்டில் இருப்பவர்களுக்கு வீட்டிலிருந்து பணிபுரியும் பயனர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் .

நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஆச்சரியமான data பேக்குகளை வழங்கி வந்து கொண்டு இருக்கிறது .

இந்த டேட்டா பேக் இன் கீழ் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா இலவசமாக தருகிறது. ரிலையன்ஸ் ஜியோ இந்த டேட்டா பேக் க்கு ”jio data pack” என்று பெயரிட்டுள்ளது.

முன்னதாக நிறுவனம் தனது அனைத்து கூடுதல் டேட்டா பேக் ரீசார்ஜ் மூலம் பல நன்மைகளை இரட்டிப்பாக்கியது. இப்போது நிறுவனம் ஜியோ டேட்டா பேக் இன் கீழ் தினமும் 2 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது .

ரிலையன்ஸ் ஜியோ வின் இந்த டேட்டா பேக் தற்போது அனைத்து வாடிக்கையாளர்களையும் இருந்தும் பெறப்பட்டதா அல்லது இந்த சலுகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நிறுவனம் வழங்குகிறதா என்று தற்போது தெரியவில்லை விரைவில் தெரியும் .

இந்த பேக்கை நீங்கள் பெற்றுள்ளீர்களா? இல்லையா? என்பதை அறிய உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் my jio app கிளிக் செய்க .

இந்த ஆச்சரியமான டேட்டா ப்ளான் இதுவரை பெறாத வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் வழங்கக்கூடும் அதற்கு சாத்தியம் மிகவும் அதிகமாக இருக்கிறது .

நீங்கள் ஏற்கனவே ஜியோ தினசரி 2ஜிபி திட்டம் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அதற்குமேல் மேலும் 2ஜிபி டேட்டாவை நீங்கள் பெறுவீர்கள்.

இந்த டேட்டா பேக் ஆனது மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை இயங்கும். ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த திட்டம் டேட்டா பேக்கிற்கு பயனர்கள் எந்த ரீசார்ஜ் செய்ய தேவை இல்லை. ரிலையன்ஸ் ஜியோ அவ்வபோது பயனர்களுக்கு இதுபோன்ற டேட்டாக்களை வழங்கிக் கொண்டு வருகிறது .

ஜியோ வீட்டிலிருந்து வேலை திட்டம்  (Jio Work from  home Plan)

ரிலையன்ஸ் ஜியோ இந்தப் புதிய பிரிபெய்டு டேட்டா பிளான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு குற்றம் ஹோம் பேக் என ரூபாய் 251 பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ வின் இந்த திட்டம் கிரிக்கெட் pack என்று பட்டியலிடப்பட்திருந்தது. பிறகு இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை பயனர்களுக்கு 51 நாட்கள் வழங்கியது. இப்போது இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 11 voucher 400 எம்பி வழங்கி கொண்டு வந்தது. இது சிறிதாக மேம்படுத்தப்பட்ட பிறகு 800 mb டேட்டா உடன் சேர்ந்து 75 நிமிட ஃப்ரீ கால்களும் தந்தது .

பிறகு அதே நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 51 டேட்டா voucherல் 3 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. இப்போது இது 16 ஜிபி டேட்டா மற்றும் ஜியோ அழைப்பிற்கு 500 ஜிபி வழங்கி வருகிறது.

அதே நேரத்தில் நிறுவனம் 101 ரூபாய் டேட்டா திட்டத்தில் 6gb டேட்டாவை வழங்கி வந்தது. ஆனால் இப்போது அதே ரூபாய்க்கு 12 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இதனுடன் சேர்த்து இந்த நிறுவனம் ஜியோவில் இருந்து 1000 நிமிடங்களை மற்றவர்களிடம் பேசிக் கொள்ளலாம் என்று கொடுக்கிறது.

3

Super deluxe : ராசுகுட்டி எனும் மழலை!

0
ராசுகுட்டி

Super deluxe: சூப்பர் டீலக்ஸ் ராசுகுட்டி எனும் மழலையின் அபூர்வம் !

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, மிர்நாளினு பெரிய நடிகர் பட்டாளமே இருந்தாலும் ‘ராசுகுட்டி’ எனும் அஷ்வந்த் நம்ம அனைவரையும் அவ்வளவு அழகா மிக மிக எளிதாக கவர்ந்தார் என்பது மிகப்பெரும் உண்மை.

நடிப்பின் மூலம் சொன்னான், இராசுகுட்டி

வெறுமனே குழந்தைகளை எப்படி பார்த்தாலும் பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் சூப்பர் டீலக்ஸில் இராசுகுட்டியின் நடிப்பென்பது அசுரத்தனம் கலந்த சுட்டித்தனம்.

பலவருடமாக காணாத அப்பாவை காண ஏங்கியிருக்கும் சிறுவனாக தொடங்கும் இராசுகுட்டி கதாபாத்திரம். “ஏய் ! அப்பா வந்துட்டாங்க அப்பா வந்துட்டாங்க , ஜாலி!” னு சொல்லிக்கொண்டே இராசுகுட்டி ஓடி வந்து “டிகு டிகு குடு குடு டிஷ்” னு சொல்லி கதவ திறப்பாரு,

ஆனா வெளிய பார்த்தா அப்பா இருக்கமாட்டாரு அந்த இடத்துல அப்படியே body language மாறும் குறிப்பா கண்பார்வை அப்படியே சுருங்கி வேறுபடும். அப்பவே நம் அனைவரையும் கவணிக்க வச்சிட்டாரு இராசுகுட்டி எனும் அஷ்வந்த் .

இராசுகுட்டி கதவினருகில் உள்ள சுவரில் welcome என்ற பலகையை

பொருத்தும் போதும், ஒவ்வொரு முறையும் அப்பா வந்துட்டாரு ஜாலி என்று சொல்லும் போதும் அவ்வளவு சுருசுருப்புடன் முகபாவணைகளை அழகாக கையாண்டிருப்பார் அஷ்வந்த்.

மேலும் ஒவ்வொரு முறையும் கதவை திறந்து அப்பா இல்லை என்று இராசுகுட்டி ஏமாற்றத்துடன் திரும்பி போகும்போது நாம் மழையை

எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது  வெறும கருமேகத்தை பார்த்து பார்த்து ஏமாற்றம் அடைவோமே அந்த உணர்ச்சியை நமக்குள் உணர்வோம்.

அந்த உணர்வை நமக்குள் விதைக்க ஒரு நடிகனின் நடிப்பு முக்கியமானது அதை சிறப்பாகவே செய்திருப்பார் அஷ்வந்த். அதே சமயம் நிறைய

சிறு சிறு வசனங்களாலும் உடலசைவுகளாலும சிரிப்புடன் நம்மிடம் கேள்விகளை விதைப்பார்.

நிகழ்வின் வழியே இராசுகுட்டி

தன் அப்பா வந்ததும் அனைவரும் அவர் பெண்ணாக மாறியதை கண்டு வியந்து கொண்டிருக்க இராசுகுட்டி தன் அம்மாவிடம் வந்து ‘அப்பா schoolக்கு வர பூபோட்ட புடவை எடுத்து தர சொல்லுது’ னு சொல்லிட்டு போவான் அதுதான் இராசுகுட்டி எனும் மழலை. திரைப்படத்தில் இராசுகுட்டியின் schoolக்கு செல்கிற வழியில்

இராசுகுட்டிக்கும் அவன் அப்பாவுக்கும் இடையில் ஒரு உரையாடல் நடைபெறும். இராசுகுட்டி கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அதற்கேற்ற அவன் குரல் வேறுபாடும் நம்மை கவர்வதோடு நிறுத்தாமல்  அதிலுள்ள நியாயத்தை நமக்கு புரியவைக்கும், நம்மையும் கேள்விகேட்கும்.

இராசுகுட்டி தன் நண்பர்களிடம் தன் அப்பாவை காட்டும்போது “என்னடா உங்க அப்பா புடவை கட்டிருக்காரு” னு நண்பர்கள் கேட்க அதற்கு இராசுகுட்டி “அதுதான்டா அவர் ஸ்டைல்”னு சொல்லுவான்.

இராசுகுட்டிக்கு மற்ற அப்பாக்களை போல் நம் அப்பாவும் இருக்க வேண்டும்என்ற எந்த கட்டாயமும் இல்லை.

அவனை பொறுத்தவரையில் எப்படியாகினும் அவர் அப்பா அதை அவன் அன்புடன் ஏற்றும்கொள்கிறான் கட்டாயத்தின் பெயரிலெல்லாம் அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. நாமும் அதை ஏற்றுகொள்ளுமளவிற்கு இராசுகுட்டி கதாபாத்திரம் இருக்கும்.

யோசிக்கவைத்தான் இராசுகுட்டி!

இராசுகுட்டியை விட்டு பழையபடி ஊருக்கு போகலாம் என்றிருப்பார் அவனின் அப்பா, அப்போது இராசுகுட்டி அவன் அப்பாவிடம் “உன்ன எல்லாரும் கிண்டல் பண்றாங்க ஆனா அம்மாவும் நானும் எதாவது சொன்னோமா”

என்ற கேள்வியும், “நீ ஆம்பளையா இரு, பொம்பளையா இரு ஆனா கூடவே இருந்து தொலையேன்” னு இராசுகுட்டி சொல்ற வசனமும்  அவன் அப்பாவை மட்டுமல்ல நம்மையும் உலுக்கும், கேள்விகேட்கும், யோசிக்கவைக்கும் .

ரன்வீர் சிங் இராசுகுட்டியை பற்றி;

சென்ற வருடம் நடைபெற்ற பிரபல interview ஒன்றில்  பாலிவுட் ஸ்டார் ரன்வீர் சிங் அவர்கள் இராசுக்குட்டியை பற்றி

 “எனக்கு நண்பர் ஒருவர் call செய்து சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்க்க சொன்னார், அதுவும் அப்படத்தில் பத்து வயதான குழந்தை  ஒருவன் நடித்துள்ளதாகவும், அவன் உங்களின் வாழ்வை யோசிக்க செய்வான் என்றெல்லாம் சொன்னார்” என்றும், “பின்பு நான் படம்பார்த்தேன்.. raskutty, he is phenomenal, he is absolute phenomenal, he is pure magic ” என்றெல்லாம் கூறினார். மேலும் அங்கிருந்தவர்களிடமும்
 “guys ..Who ever hasn’t seened it, must watched it for chemistry between  vijaysethupathy and that child ..It was so special” என்றும் கூறினார்.

அந்தளவுக்கு இராசுகுட்டியாக அஷ்வந்தை மாற்றி நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா. அதற்கு அஷ்வந்தும் முழுமையாக தன்னை ஒப்படைத்திருக்கிறார்.

இப்படம் ரீலிஸ் ஆன வாரங்களில் சமுகவலைதளங்களில் ஒரு கருத்து தீவிரமாக பரவியது  ‘இராசுகுட்டி மாதிரி இருங்கள், அவன் உங்கள் பாலினத்தை பற்றி எதுவுமே கண்டுகொள்வதில்லை‘ என்பதுதான் அது.

“அவர்கள் பாலை அவர்கள் சொல்லட்டும் அதில் நாம் சர்க்கரை மட்டும் கலப்போம்” என்ற பாடலாசிரியர் விவேக் கவிதையின் சாயலில்

இராசுகுட்டி தெரிவான். BE LIKE RASUKUTTY !
3

பாகிஸ்தானை வச்சி செஞ்ச சேவாக் 309

0

2004 ஆம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகள் தனது முதலாவது மிச்சத்தை எடுத்து வரலாறு படைத்த வீரேந்திர சேவாக்.

2004 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

முதலில் நடந்த ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.

அடுத்து மார்ச் 28ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் ஆரம்பமானது. டாஸ் வென்ற இந்தியா கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக் மற்றும் சோப்ரா களமிறங்கினார்கள். இருவரும் இணைந்து 160 ரன்கள் சேர்த்தனர் இவர்களை பிடிக்க பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் எடுத்துக்கொண்டது ஆகாஷ் சோப்ரா.

அடுத்து வந்த கேப்டன் டிராவிட் 6 ரன்களில் வெளியேற நான்காவது வீரராக களமிறங்கினார் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் சேவாக் இருவரும் இணைந்து பாகிஸ்தான் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்கள். இருவரையும் பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி திணறியது.

முதல்நாள் ஆகாஷ் சோப்ரா மற்றும் ராகுல் டிராவிட் விக்கெட்டை மட்டுமே பாகிஸ்தானால் எடுக்க முடிந்தது.

முதல் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்திருந்தது. சேவாக் முதல் நாளிலேயே இரட்டை சதமடித்து 228 ரன்களுடனும், சச்சின் 60 ரன்களில் களத்தில் நின்றனர்

மார்ச் 29ஆம் தேதி இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய தொடங்கியது உணவு இடைவேளைக்கு முன்பே சேவாக் தன்னுடைய முதலாவது முச்சதத்தை எடுத்து வரலாறு படைத்தார்.

இந்தியாவின் முதல் முச்சதம் எடுத்த வீரரானார். ஒருநாள் போட்டியில் அதிரடிக்கு பெயர் போன சேவாக் டெஸ்ட் போட்டியின் விட்டுவைக்கவில்லை.

ஒருநாள் போட்டியை டி20 போலவும், டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போலவும் ஆடும் அதிரடி வீரர் சேவாக், பாகிஸ்தானின் முச்சதம் அடித்த இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

டெஸ்ட் வரலாற்றில் இவர் அடித்த முச்சதம் பதினெட்டாவது முச்சதம் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த 17ஆவது வீரராவார்.

இரண்டு முறை முச்சதம் அடித்த மூன்றாவது வீரர் வீரேந்திர சேவாக் (பிராட்மேன், பிரைன் லாரா).
இறுதியில் சேவாக் 375 பந்துகளில் 309 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 675 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இருந்தது. சச்சின் 194 ரன்களுடன் களத்தில் நின்றார். இன்னும் ஆறு ரன்கள் எடுத்தால் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தது.

ராகுல் திராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இது மிகப் பெரிய சர்ச்சையானது. சச்சினுக்கு இது சிறிதும் விருப்பம் இல்லாமல் இருந்தது.

இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 407 மட்டுமே எடுத்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு பாலோ ஆன் வழங்கியது.

268 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்திய அணி 52 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை வீரேந்திர சேவாக் என்றார்

3

கொரோனா வைரஸ் க்கு புதிய ஆப் : மத்திய அரசு வெளியிட்டுள்ளது

0
CORONA KAVACH

கொரோனா கவச் (corona kavach) என்ற ஆப் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

covid 19 ட்ராக் செய்வதற்காக இந்திய அரசாங்கம் கொரோனா கவச் என்ற புதிய ஆப்பை வெளியிட்டுள்ளது.

இந்த Ministry of Electronics and Information Technology (MeitY) மற்றும் Ministry of Health and Family Welfare (MHFW) இரண்டும் சேர்ந்து உருவாக்கின.

கொரோனா வைரஸை கண்காணிப்பதற்காக இந்திய அரசாங்கம் இப்படி ஒரு ஆப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது பீட்டா நிலையில் உள்ளது.

இந்த ஆப் பணிகள் மேலும் அப்கிரேடு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதன் நோக்கம் என்னவென்றால் கொரோனா வைரஸ் குறித்து மக்களை எச்சரிப்பது இதன் ஒரே நோக்கம் ஆகும். இந்த ஆப் பயனர்களின் தொலைபேசி எண் தரவு மற்றும் இருப்பிடத்தை பயன்படுத்தி நாவல் கொரோனா வைரஸால் தொற்றுநோய் பாதிக்கப்படுகிறதா என்பது அவர்களுக்கு தெரிவிக்கிறது.

கொரோனா கவச் என்றால் என்ன?

இந்த ஆப் விளக்கத்தில் உள்ள தகவலின் படி அதன் நோக்கம் என்னவென்றால் தகவல்களைக் கொடுத்து தகவல்களை எடுத்துக் கொள்வதாகவும். அறிக்கைகளின்படி இந்த பயன்பாடு தற்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே கிடைக்கிறது.

இந்த corona kavach ஆப்பை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆப் ஒவ்வொரு மணி நேரமும் பயனர்களின் இருப்பிடத்தை கண்காணித்து அவர் சந்தித்த நபர்களில் யாராவது வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பதை கூறுகிறது.

இது மிகவும் எளிதான வழியில் செயல்படும். இந்த ஆப் ஆறு கேள்விகள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருக்கிறதா? உங்கள் உடல் வெப்பநிலை என்ன? நீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி இருக்கிறீர்களா? உங்களுக்கு இதயம் நோய் இருக்கிறதா? உங்களுக்கு சளி மற்றும் தொண்டையில் வலி இருக்கிறதா? சமீபத்தில் வந்த ஒருவரை நீங்கள் சந்தித்தீர்கள்? என்று வெவ்வேறு வகையில் கேள்விகள் கேட்கும்.

எடுத்துக்காட்டாக வெளிநாட்டில் இருந்து திரும்பினார் என்று நீங்கள் கூறினால் இந்த தகவலின் அடிப்படையில் பயன்பாடு உங்களை வெவ்வேறு வகையில் வைக்கிறது.

இது பச்சை ஆரஞ்சு மஞ்சள் மற்றும் சிவப்பு என 4 பிரிவுகளில் வருகிறது.

கவச் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கண்காணிப்பை செயல்படுத்தலாம்.

இந்த ஆப் எப்படி பயன்படுத்துவது?

இந்த ஆப்பை நீங்கள் திறக்கும்போது MeitY and MHFW ஆல் உருவாக்கப்பட்டது என்று திரையில் காண்பிக்கிறது.

அதன்பிறகு உங்கள் இருப்பிடம், கண்காணிப்பு அனுமதி போன்ற சில அனுமதிகளை கேட்கிறது. இதற்குப் பிறகு இறுதியாக OTP உங்கள் பதிவு எண்ணுக்கு அனுப்பப்படும். பதிவு செய்த பிறகு பயன்பாட்டில் முகப்பு பக்கத்தை பெறுவீர்கள்.

நாட்டில் இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் எண்ணிக்கை, இழப்புகள், குணமடைந்த நபர்கள் போன்ற சில தகவல்கள் நீங்கள் பெறுவீர்கள்.

வைரஸால் பாதிக்கப்பட்ட ஏதேனும் நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டால் அதன் அறிவிப்பை பயன்பாட்டின் மூலம் பெறுவீர்கள்.

இதுவும் இது ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் LOCATION டிராக் செய்து கொண்டே இருக்கும்.

குறிப்பு :- இந்த app தொடர்ந்து அப்கிரேட் செய்து வருவதால் சில சமயங்களில் play storeல் காண்பிக்கப்படாது. ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் வாரியாக location பார்த்து வருகிறது. நம்முடைய location பொருது இந்த app play store ல் வரும். தமிழ்நாட்டில் சில நாட்களில் வரும். எனவே சில பயனர்களுக்கு காண்பிக்கலாம் சில பயனர்களுக்கு காண்பிக்காமலும் இருக்கலாம். காத்திருங்கள்.

வேறு இது சம்பந்தமாக கேள்வி பதில் தளம் தமிழில் சில வலைத்தளங்கள் இருக்கிறது. வினாவிடை மற்றும் கோரா போன்ற தலத்தில் உங்கள் கேள்விகளை கேட்டு பதில்களை பெறலாம்.

மேலும் தகவலுக்கு who வலைத்தளம் பார்வையிடவும்

3

மிஸ் கர்நாடகா விருது வென்ற ஷில்பா மஞ்சுநாத் பர்த்டே டுடே!

0
Shilpa Manjunath

Shilpa Manjunath; மிஸ் கர்நாடகா விருது வென்ற ஷில்பா மஞ்சுநாத் பர்த்டே டுடே! காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷில்பா மஞ்சுநாத் பிறந்தநாள் இன்று (Happy Birthday Shilpa Manjunath).

நடிகை ஷில்பா மஞ்சுநாத் இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷில்பா மஞ்சுநாத் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பிறந்தார்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பிஇ (B.E degree in Electronics and Communication) பட்டம் பெற்றுள்ளார்.

பிஇ படித்து முடித்த கையோடு மாடலிங்காக தனது பணியை தொடங்கினார். மாடலிங் மூலமாக 2013 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடகா டைட்டிலும் வென்றுள்ளார்.

மிஸ் கர்நாடகா டைட்டில் வென்ற கையோடு கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Life Super Guru என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

ரோசாப்பூ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத், தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வந்த காளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற காதலை மையப்படுத்திய படத்தில் ஹீரோயினாக வலம் வந்தார்.

இப்படத்திற்கு இளம் காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம், படத்தில் இடம்பெற்ற ரொமான்ஸ், காதல் காட்சிகள், என்று சொல்லலாம்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷில்பா மஞ்சுநாத்தின் 28 ஆவது பிறந்தநாளுக்கு மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷில்பா மஞ்சுநாத்…

3

மன்னரின் மகளுக்கா இப்படி, கொரோனாவால் காலமானார்

0
லாக்டவுன்

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா நேற்று காலமானார் இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சீனாவில் உருவானதாக சொல்லப்படும் இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உலுக்கி வருகிறது.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் இந்த வைரஸால்.

நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, மக்களிடம் சுய ஊரடங்கு மற்றும் சமூக விலகலை பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார். 21 நாட்கள் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

பொருளாதாரத்தை விட எனக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் முக்கியம் என்று மக்கள் அனைவரும் சுய ஊரங்கிற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இந்தியாவில் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சீனாவில் மிஞ்சியது இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை சீனாவில் மிஞ்சியது.

ஸ்பெயின் நாட்டிலும் 5690 பேர் இறந்துள்ளனர் நேற்று ஒரு நாள் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டின் அரச குடும்பத்தின் இளவரசியான 86 வயது மரியா தெரஸா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

தற்போது நேற்று கொரோனா வைரஸ் அதிகரித்து நேற்று அவர் காலமானார்.

முதல்முறையாக ஸ்பெயின் நாட்டில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது

3

பரவை முனியம்மா இறப்பு: இரக்கமற்ற விவேக்!

0
Paravai Muniyamma Death

பரவை முனியம்மா இறப்பு: இரக்கமற்ற விவேக்! சினிமா பிரபலங்களில் சிலர் பாரபட்சம் பார்க்கவும் செய்கிறார்கள் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு இருக்கும் ஈவு, இரக்கம் கூட சில சினிமா பிரபலங்களுக்கு இல்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

அதில், முக்கியமானவர்களாக விக்ரம், விவேக் ஆகியோர் கருதப்படுகின்றனர். ஆம், பரவை முனியம்மாவின் மறைவிற்கு யாருக்கோ, தெரியாத நபருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதோடு, பரவை முனியம்மா அவர்களுடன் நான் நடித்த காட்சிகள் இன்றும் ரசிக்கப் படுகின்றன. நல்ல கிராமியக் குரல் வளம். மண் மணம் வீசிய நல் மனம். வருந்துகிறேன், என்று பதிவிட்டிருந்தார்.

இதன் மூலம் தன்னைத் தானே உயர்த்திக் கொண்டாரே தவிர அவரது டுவிட்டரில் உண்மையாகவே வருந்தும் அளவிற்கு பதிவு இல்லை. சும்மா, ஏனோ, தானோ என்று தான் இருக்கிறது.

இது எது, பரவை முனியம்மா என்பதலா? இதுவே விசுவிற்கோ, அல்லது சேதுராமனுக்கோ இது போன்று பதிவிட்டிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை…

நடிகர் விசு மறைந்த போது விவேக் தனது டுவிட்டரில், மிக நேர்மையாக, உண்மையாக, கண்ணியமாக அதே நேரம் கண்டிப்பாக வாழ்ந்து, நம்மை பிரிந்து இருக்கும் விசு அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இதய அஞ்சலி.

நேரில் வந்து இறுதி மரியாதை செய்ய முடியாததற்ற்கு வருந்துகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதே போன்று நடிகரும், மருத்துவருமான சேதுராமன், மறைவிற்கு விவேக் டுவிட்டரில், என்ன ஒரு அசைக்க முடியாத அன்பான கண்ணியமான அக்கறையுள்ள இனிமையான நபர்!

அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு எனது இதயம் ஆழ்ந்த இரங்கலை உணர்ந்தது. திடீர் மறைவு ஒரு விதி என்றால், நான் அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை, ஆனால் வெறுக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

நடிகர் விவேக்கின் இரக்கமற்ற செயலுக்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். பரவை முனியம்மா உடன் இணைந்து விவேக், காதல் சடுகுடு, சண்டை, தூள், மகனே என் மருமகனே, பசுபதி ராசக்காபாளையம், தக திமி தா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், அவர் உயிரோடு இருக்கும் போது விவேக் நேரில் சென்று கூட பார்க்கவில்லை.

சிவகார்த்திகேயன் மட்டுமே தன்னை மருத்துவமனையில் வந்து சந்தித்ததாக பரவை முனியம்மாவே வருத்தத்துடன் கூறியிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பரவை முனியம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது கூட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் உதவியிருந்தார். சினிமா பிரபலங்கள் விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்பட ஒரு சிலர் மட்டுமே உதவியுள்ளனர்.

ஆனால், விவேக், விக்ரம் அப்படி சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை. விவேக் கூட டுவிட்டரில் ஏதோ பதிவிட்டுள்ளார்.

ஆனால், விக்ரம் அப்படி ஏதும் இல்லை. இதனால், அவரது ரசிகர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு வருகிறது.

எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும், பரவை முனியம்மாவின் பாடல்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3

எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும், பரவை முனியம்மாவின் இந்த பாடல்களுக்கு இணையாகாது!

0
Paravai Muniyamma Passed Away

Paravai Muniyamma; எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும், பரவை முனியம்மாவின் பாடல்களுக்கு இணையாகாது! நாட்டுப்புற கலைஞரும், பாடகரும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று உடல் நலக்குறைவால் காலமானார்

பரவை முனியம்மா உடல் நலக் குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் பரவை எனும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், பரவை முனியம்மா என்று அழைக்கப்பட்டார்.

1943 ஆம் ஆண்டு பிறந்த பரவை முனியம்மா, சியான் விக்ரம் நடிப்பில் வந்த தூள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்திலேயே மதுரை வீரன் என்ற பாடலை விக்ரமுக்காக பாடி அசத்தியுள்ளார்.

தூள் படத்தைத் தொடர்ந்து, காதல் சடுகுடு, தேவதையைக் கண்டேன், ஏய், ஜெய சூர்யா, வேங்கை, மான் கராத்தே, வீரம், பூ, கண்ணாடிப் பூக்கள் என்று கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பதோடு இல்லாமல், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்துச் சமையல் நிகழ்ச்சியை தனக்கே உரிய ஸ்டைலில் தொகுத்து வழங்கினார்.

இவரது மேடை நிகழ்ச்சிகள் உள்ளூரில் மட்டுமல்லாமல், லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை, திரைப்பட பாடல்களைத் தவிர பரவை முனியம்மா பக்தி பாடல்களை பாடுவதில் கில்லாடிக்கு கில்லாடி. அதுவும், கருப்பசாமி பாடலா சொல்லவே வேணாம்.

அந்தளவிற்கு குரல் வலம் கொண்ட பரவை முனியப்பா, 18ம் படி கருப்பா, குறவன் குறத்தி ஆட்டம், ஜடா முனீஷ்வரர், கிராமத்து வாசனை, 108 திருப்பதிகள், மாரியப்பன் கும்மிப்பாட்டு, முனீஸ்வரன் பாடல் என்று ஏராளமான பக்திப் பாடல்களை பாடியுள்ளார்.

Paravai Muniyamma Songs List

இந்தப் பாடல்களை எல்லாம் இப்போதும் கேட்கும் போது எத்தனை ஆஸ்கார் வாங்கினாலும், மரவை முனியம்மாவின் இது போன்ற பாடல்களுக்கு ஈடு இணை ஆகாது.

நம்மை அறியாமலும், ஆட தோன்றும் அளவிற்கு பாடல்களும், இசையும் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வறுமையில் வாடிய பரவை முனியம்மாவின் கருத்தில் கொண்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவிற்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரமும், மாதாந்திர மருத்துவச் செலவினை டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையில் இருந்து வழங்கினார்.

இந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பரவை முனியம்மா இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வு நடந்து கொண்டே வருகிறது. கடந்த 20 ஆம் தேதி நடிகர் விசு காலமானார். 26 ஆம் தேதி நடிகரும், மருத்துவருமான சேதுராமன் காலமானார்.

3

பிறந்து 9 நாட்களுக்குள் குழந்தையின் புகைப்படத்த பதிவிட்ட ஆல்யா சஞ்சீவ் ஜோடி!

0

ஆல்யா சஞ்சீவ் ஜோடி – குட்டி ஆல்யா புகைப்படம்: பிறந்து 9 நாட்களுக்குள் குழந்தையின் புகைப்படத்த பதிவிட்ட ஆல்யா – சஞ்சீவ் ஜோடி!

ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக் தம்பதியினர் தங்களது பெண் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

பிறந்து 9 நாட்கள் ஆன நிலையில், தங்களது குழந்தையின் புகைப்படத்தை ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா (Alya Manasa) மற்றும் சஞ்சீவ் கார்த்திக்(Sanjeev Karthick).

இந்த சீரியலில் சின்னையா என்ற ரோலில் சஞ்சீவும், செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தங்களது கதாபாத்திரங்கள் மூலம் கவர்ந்துள்ளனர்.

வெள்ளித்திரையை விட மக்களோடு மக்களாக ஒன்றிய சின்னத்திரைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. அதுவும் குடும்ப பெண்களுக்கு சொல்லவே வேணாம்.

இதில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு வரவேற்பு தாறுமாறாக இருக்கும்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஜொலித்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். சீரியல்களில் ஒன்றாக நடித்து இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு திருமணம்  செய்து கொண்டனர்.

சீரியல் ஆனாலும் சரி, டான்ஸ் புரோகிராமாக இருந்தாலும் சரி இருவருக்கும் அப்படியொரு கெமிஸ்டரி.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அழகான குட்டி தேவதை பிறந்துள்ளதாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 20 ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

Alya Manasa Baby Childஆம், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆல்யா மானசா குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே குழந்தைக்கு தேவையான ஆடைகள், பெட்சீட் என்று எல்லாவற்றையும் வாங்கி குவித்துள்ளார்.

அதற்கான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், பிறந்து 9 நாட்களே ஆன நிலையில், தங்களது குழந்தையின் மகளின் புகைப்படத்தை முதன் முதலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, உலகிற்கு காண்பித்துள்ளார்.

3

சுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று

0

கொரோனா வைரஸ் பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமரை எடுத்து பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் மேட் ஹேன்காக் தொற்று உறுதியாக உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பல லட்சம் மக்களை பாதித்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்து வருகிறது.

இதில் ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

சீனாவை விட அமெரிக்கா பாதிப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது, சீனாவைவிட இத்தாலி இறப்பு எண்ணிக்கையில் மிஞ்சியது.

இதைக் கட்டுக்குள் கொண்டுவர பல அரசாங்கம் திணறி வரும் இவ்வேளையில் மிகப்பெரும் தலைவர்களையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.

கனடா பிரதமரின் மனைவி, ஈரானின் துணை அதிபர், பிரிட்டன் இளவரசர், பிரிட்டன் பிரதமர் போன்றவர்களை இந்த தொட்டு விட்டு வைக்கவில்லை.

தற்போது பிரிட்டனில் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த நாட்டில் இளவரசர், பிரதமர் சுகாதாரத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து இந்த தொட்டு பரவி உள்ளது.

இது அந்த நாட்டு மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டன் அரசு ஆறுமாதம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது

3