Home சினிமா கோலிவுட் மிஸ் கர்நாடகா விருது வென்ற ஷில்பா மஞ்சுநாத் பர்த்டே டுடே!

மிஸ் கர்நாடகா விருது வென்ற ஷில்பா மஞ்சுநாத் பர்த்டே டுடே!

646
0
Shilpa Manjunath

Shilpa Manjunath; மிஸ் கர்நாடகா விருது வென்ற ஷில்பா மஞ்சுநாத் பர்த்டே டுடே! காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷில்பா மஞ்சுநாத் பிறந்தநாள் இன்று (Happy Birthday Shilpa Manjunath).

நடிகை ஷில்பா மஞ்சுநாத் இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷில்பா மஞ்சுநாத் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கடந்த 1992 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி பிறந்தார்.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பிஇ (B.E degree in Electronics and Communication) பட்டம் பெற்றுள்ளார்.

பிஇ படித்து முடித்த கையோடு மாடலிங்காக தனது பணியை தொடங்கினார். மாடலிங் மூலமாக 2013 ஆம் ஆண்டு மிஸ் கர்நாடகா டைட்டிலும் வென்றுள்ளார்.

மிஸ் கர்நாடகா டைட்டில் வென்ற கையோடு கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Life Super Guru என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

ரோசாப்பூ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத், தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடிப்பில் வந்த காளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற காதலை மையப்படுத்திய படத்தில் ஹீரோயினாக வலம் வந்தார்.

இப்படத்திற்கு இளம் காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம், படத்தில் இடம்பெற்ற ரொமான்ஸ், காதல் காட்சிகள், என்று சொல்லலாம்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது, பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், இன்று தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரலங்கள், நண்பர்கள், ரசிகர்கள் என்று பலரும் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷில்பா மஞ்சுநாத்தின் 28 ஆவது பிறந்தநாளுக்கு மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் நாமும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷில்பா மஞ்சுநாத்…

SOURCER SIVAKUMAR
Previous articleமன்னரின் மகளுக்கா இப்படி, கொரோனாவால் காலமானார்
Next articleகொரோனா வைரஸ் க்கு புதிய ஆப் : மத்திய அரசு வெளியிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here