Home Blog Page 188

மூளைக்காய்ச்சல்; சென்ற வருடம் 164 குழந்தைகள் பழிக்கு பிறகு, நேற்று புதிதாக இரண்டு கேஸ்

0
மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல்; சென்ற வருடம் 164 குழந்தைகள் பழிக்கு பிறகு, நேற்று புதிதாக இரண்டு கேஸ், Acute Encephalitis Syndrome Bihar 164 Child died.

கொரோனா வைரஸ் பிரச்சனையில் மருத்துவர்கள் மூழ்கியிருக்கும் நிலையில் பீகாரில் மீண்டும் Acute Encephalitis Syndrome வந்திருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திடீரென வந்த Acute Encephalitis Syndrome என்னும் மூளைகாய்ச்சலால் பீகாரில் 164 குழந்தைகள் பழியாகியுள்ளனர்.

திடீரென நேற்று இரண்டு குழந்தைகளுக்கு இந்த AES அறிகுறி தென்பட்டுள்ளது. முஸாபிவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் மற்றொரு குழந்தை கிழக்கு சம்பரம் மாவட்டத்தில் சர்தார் மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் தொற்று இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் கோபால் சங்கர் தெரிவித்துள்ளார்.

கோரோனோ ஒரு பக்கம் மக்கள் மன நிம்மதியை போக்க மறுபக்கம் AES பீகார் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள்ளது.

3

பரவை முனியம்மா காலமானார்: கொரோனாவால் அனாதை சடலமாகும் பிரபலங்கள்

1

பரவை முனியம்மா காலமானார்: தமிழ் சினிமாவில் சிங்கம் போல பாடல் மூலம் பிரபலமாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியவர் பரவை முனியம்மா.

பார்க்கத்தான் பாட்டி இவர் அடிக்கும் லூட்டிக்கு சிரிக்காத ரசிகர்களே இல்லை. தன்னுடைய எதார்த்த நடிப்பில் நம்மை மகிழ்வித்தவர்.

இவர் விவேக் பில்டப் செய்யும் உடற்பயிற்சி பழுது தூக்கும் கம்பியை அலேக்காக தூக்கி வீசும் காட்சி தான் இன்று வரை மீம் கிரியேட்டர்கள் பயன்படுத்தி வரும் முக்கிய டேம்லேட்களில் ஒன்று.

நாட்டுப்புற பாடகி என்று மட்டும் இல்லாமல் காமெடியால் வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் பரவை முனியம்மா.

நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டில் காலமானார். அவரின் வயது 76.

அவரது மதுரையில் வீட்டில் அவரின் உயிர் பிரிந்தது. கொரோனா பாதிப்பால் உடரங்கு அமலில் உள்ளது. இதனால் பிரபலங்கள் யாரும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியாது.

நடிகர் விவேக் நேரில் செல்வது சந்தேகம் தான். சென்னை என்றால் கூட சென்றுவிடலாம். மதுரை வரை செல்வது கடினம். டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கும் அளவிற்கு கொரோனா அச்சத்தை உண்டாகி வருகிறது.

நடிகர் விசு, நடிகர் சேதுராமன் தற்பொழுது பரவை முனியம்மா. தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் இறந்து வருவது மேலும் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

3

Corona Relief Funds: அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி, பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி!

0
Corona Relief Funds

Corona Relief Funds: அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி, பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி! கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ரூ. 25 கோடி, பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.

அக்‌ஷய் குமார் ரூ.25 கோடியை கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டும், டுவிட்டர் வாயிலாகவும் விழிப்புணர்வு குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அண்மையில், கொரோனா வைரஸ் குறித்து பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது அக்‌ஷய் குமார், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கு ரூ. 25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இவரைப் போன்று பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடியும், ராம் சரண் ரூ.70 லட்சம், வருண் தவான் ரூ.30 லட்சம் வழங்கியுள்ளனர்.

மேலும், மகேஷ் பாபு ரூ.1 கோடி, கபில் சர்மா ரூ.50 லட்சம், அல்லு அர்ஜூன் ரூ.1.25 கோடி, பவன் கல்யாண் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர்.

ஆனால், இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு தொழிலதிபர் டாடா குழுமத்தைச் சேர்ந்த ரத்தன் நவால் டாடா ரூ.500 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தொடர்ந்து மற்ற பிரபலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்றது

0

முதல்முறையாக கோப்பையை வெல்லலாம் என நினைத்திருந்த நியூசிலாந்து கனவை தகர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்ற நாள் இன்று.

2015 உலககோப்பை

2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை நடத்தியது.

14 அணிகள் இந்த உலகக்கோப்பையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடியது.

பிரிவு ‘ஏ’ வில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பிரிவு ‘பி’ இல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறறது.

காலிறுதி ஆட்டங்கள்

லீக் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எந்த ஒரு போட்டியில் தோல்வி அடையாமல் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

அடுத்து நடந்த காலிறுதி போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

அரையிறுதிப் போட்டிகள்

முதல் அரையிறுதியில் இந்திய அணியை ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடர்ந்து ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

நியூசிலாந்து அணி இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டி

மார்ச் 29ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 93 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இறுதிப்போட்டி தொடங்கியது.

நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து சொதப்பல்

ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே பிரண்டன் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி நியூசிலாந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

39 ரன்கள் எடுப்பதற்குள் நீலாங்கரை 3 விக்கெட்டை இழந்தது. அடுத்து ராஸ் டைலர் மற்றும் எலியட் இணைந்து அணியை மீட்டனர்.

நியூசிலாந்து அணி 150 ரன்கள் இருக்கும்பொழுது ராஸ் டைலர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

33 ரன்கள் 7 விக்கெட்

நியூசிலாந்து அணி 250 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட போது 45 ஓவர்களில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அந்த அணி கடைசியாக 33 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது

அந்த அணியும் எலியட் 83, ராஸ் டைலர் 40 டன்கள் என அதிகபட்சமாக எடுத்தனர். நியூசிலாந்து அணியில் 6 வீரர்கள் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை இழந்தனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் மிட்செல் ஜான்சன் தலா 3 விக்கெட்டும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா வெற்றி

184 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 33.1 அவர்களின் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து உலகக் கோப்பை கனவை தகர்த்தது.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 74 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 56 ரன்கள், டேவிட் வார்னர் 45 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

ஐந்தாவது முறையாக

ஆஸ்திரேலியா அணி 1987, 1999, 2003, 2007 என ஏற்கனவே நான்கு முறை உலகக்கோப்பையை வென்று இருந்தது.

ஐந்தாவது முறையாக தன் சொந்த மண்ணில் மைக்கேல் கிளார்க் கோப்பையை கையில் ஏந்தி மற்ற வீரர்களுடன் மைதானத்தில் வலம் வந்தார்

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதன் மூலம் 5 முறை உலக கோப்பை வென்று அதிக முறை உலகக்கோப்பையை வென்ற அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து அணி அதற்கு ஏற்றார்போல் பேட்டிங்கில் விளையாடாதது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும்.

ஆஸ்திரேலியா அணியின் ஜேம்ஸ் பால்க்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய மிச்செல் ஸ்டார்க் தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

3

கொரோனா வைரஸ்: பிரபல நடிகர் சிகிச்சை பலனின்றி மரணம்

0
கொரோனா வைரஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் (mark blum)

கொரோனா வைரஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் (mark blum) சிகிச்சை பலனின்றி மரணமடைந்த செய்தி ஹாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் சாதாரண மக்களை மட்டுமல்ல எளிதாக நாட்டின் பிரதமர் வரை பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து இளவரசர் சமீபத்தில் பாதிக்கப்பட்டார்.

1980-களில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று வரை நடித்து வந்த மார்க் பிளம் (mark blum) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மார்க் பிளம்  மற்றும் மடோனா இருவரும் டெஸ்பிரேட்லி சீக்கிங் சூசன் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படமே மடோனாவிற்கு முதல் படமாகும்.

மார்க் பிளம்  மற்றும் மடோனா

3

சுனந்தன் கமரக்கர்; கொரோனா யுத்தம் தினமும் 58KM சைக்கிள் ஓட்டும் வீரர்

0
சுனந்தன் கமரக்கர்

சுனந்தன் கமரக்கர்; கொரோனா யுத்தம் தினமும் 58KM சைக்கிள் ஓட்டும் வீரர்

கொரோனா நாட்டில் தீவிரம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் ஒட்டு மொத்த நாடே ஊரடங்கில் உள்ளது. இதனால் பொது போக்குவரத்துகள் எதுவும் இல்லை.

மூத்த தீ அணைப்பு வீரரான கமரக்கர் தினமும் 58km சைக்கிளில் பயணம் செய்து வேலைக்கு செல்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்து 29km தொலைவில் ஆபீஸ் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சண்டிப்பூர் தீ அணைப்பு நிலையத்தில் என்ஜின் டிரைவர் ஆகா பணி புரியும் இவருக்கு சைக்கிளில் பயணம் செய்வது புதிய காரியமில்லை.

இந்த சைக்கிள் பயணம் குறித்து கமரக்கர் கூறியதாவது, நான் நாட்டின் அவசர இக்கட்டான நிலையில் பணி புரிகிறேன். பேருந்து ரயில் இல்லாதது பெரிய விஷயம் இல்லை.

நான் சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். சில நேரம் எனக்கு அசதியாக இருக்கும்பொழுது இரண்டு நாட்கள் ஆஃபீசில் தங்கி விடுவேன் என கூறியுள்ளார்.

சண்டிப்பூர் தீ அணைப்பு அலுவலகத்தில் 19 பேர் பணியில் உள்ளனர். நாடே ஊரடங்கில் இருக்கும் நேரத்தில் அவர்கள் அனைவரும் சுழற்சியில் பணி புரிந்து வருகின்றனர்.

3

பரவை முனியம்மா காலமானார்

1

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற கலைஞரும் நடிகையுமான பரவை முனியம்மா இன்று உடல் நலக்குறைவால் காலமானார்

2003 ஆம் ஆண்டு விக்ரம் நடித்து வெளியான தூள் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் பரவை முனியம்மா.

இந்த படத்தில் சிங்கம் போல என்ற பாடலை பாடி தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

பிறகு தமிழ் சினிமாவில் ஏய், காதல் சடுகுடு, ஜெயசூர்யா, கோவில், தேவதையை கண்டேன், பசுபதி, அரண், ராஜாதிராஜா, பலே பாண்டியா, தமிழ் படம், வீரம், மான் கராத்தே, சவாலே சமாளி போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் ஒரு நாட்டுப்புற கலைஞரும் ஆவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இவர் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது இவருக்கு எம்ஜிஆர் நல திட்ட அடிப்படையில் இவருக்கு வங்கியில் 6 லட்சம் வைப்புத்தொகை வைக்கப்பட்டது.

2012ம் ஆண்டு கலைமாமணி விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.

நீண்ட நாளாக உடல்நிலை முடியாமல் மருத்துவமனையில் உதவி கேட்டு இவர் இன்று மார்ச் 29 ஆம் தேதி காலமானார்.

இவரது மறைவை கேட்டு தற்போது திரை உலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

1943 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் தன்னுடைய 76 ஆவது வயதில் இன்று காலமானார்.

3

29/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

29/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று உங்களுக்கு புகழை பெற்று தரும் நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று உங்கள் அன்பானவர்களை சந்திப்பீர்கள்.

மிதுன ராசிபலன்

இன்று பல தடங்கல்கள் வந்து சேரும். கவனமாக இருக்கவும்.

கடக ராசிபலன்

இன்று நல்ல தேக ஆரோக்கியத்தில் இருப்பீர்கள்.

சிம்மம் ராசிபலன்

இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று பெருமைப்பட வைக்கும் காரியங்களை செய்வீர்கள்.

துலாம் ராசிபலன்

இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று சிறந்த அனுகூலத்தை தேடித்தரும் நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமையும்.

கும்ப ராசிபலன்

இன்றைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.

மீனம் ராசிபலன் 

இன்று சுப காரியங்கள் தொடங்க ஏதுவான நாளாகும்.

29/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

ஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? கொக்கி குமாரு இஸ் பேக்: புதுப்பேட்டை 2 மோஷன் போஸ்டர்!

0
Pudhupettai 2 Motion Poster

Pudhupettai 2 Motion Poster; ஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? கொக்கி குமாரு இஸ் பேக்: புதுப்பேட்டை 2 மோஷன் போஸ்டர்! தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதுப்பேட்டை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் புதுப்பேட்டை.

பொதுவாக செல்வராகவன் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாது. அதேவேளை காலம் காலமாகப் பேசப்படும் படமாக அமையும்.

புதுப்பேட்டை படமும் அப்படித்தான் செல்வராகவன் மதிப்பை அவரது ரசிகர்கள் மத்தியில் உயர்த்திய படம்.

இப்படத்தில் தனுஷ் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

புதுப்பேட்டையில் சாதாரண ஒரு வாலிபராக தனது வாழ்க்கையை தொடங்கிய கொக்கி குமார் அதன் பிறகு கேங்ஸ்டராக மாறுவது தான் இப்படம்.

இந்தப் படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரையும் தனுஷ் திருமணம் செய்து கொள்வார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் 2 ஆம் பாகமும் உருவாகும் செல்வராகவன் அறிவித்தார். தனுஷ் – செல்வராகவன் இணையும் 5 ஆவது படம் புதுப்பேட்டை 2.

இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை 2 படத்திற்கு சியன் ரோல்டன் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை 2 படத்தின் மூலம் கொக்கிகுமாராக தனுஷ் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருக்கிறார்.

இந்த நிலையில், புதுப்பேட்டை 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

போஸ்டரில், ஆசை ஓயுமா? அழிவு கேட்குமா? என்ற டயலாக் வருகிறது. நடுவில், தனுஷிற்காகவே நாற்காலி ஒன்று காத்துக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தப் போஸ்டரை தனுஷ் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். இதனை ஏ2 ஸ்டூடியோ சேனலின் 2 வருட கொண்டாட்டத்தின் பயனாக புதுப்பேட்டை 2 பேன்மேடு போஸ்டரை  வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் மீண்டும் சினேகா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தனுஷ் Dhanush நடிப்பில் கர்ணன், ஜகமே தந்திரம் மற்றும் D43 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

3

காதல் கொண்டேனில் முத்திரை பதித்த சோனியா அகர்வால் பிறந்தநாள் டுடே!

0
Sonia Agarwal

காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சோனியா அகர்வால் இன்று தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை சோனியாக அகர்வால் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 1982 ஆம் ஆண்டு 28 ஆம் தேதி பிறந்தார்.

பள்ளிப்படிப்பின் போது ஜீ தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன் பிறகு கடந்த 2002 ஆம் ஆண்டு Nee Premakai என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கன்னடத்தில் சுதீப் நடிப்பில் வந்த Chandu என்ற படத்தில் நடித்தார்.

வரிசையாக தெலுங்கு, கன்னட ஆகிய மொழிகளில் அறிமுகமான பின்னர் தமிழிலும் காதல் கொண்டேன் படத்தின் மூலமாகவே அறிமுகமானார்.

இப்படத்தில், தனுஷைப் பார்த்து கல்லூரி நண்பர்கள் பயப்படும் போது, சோனியா அகர்வால் மட்டும் அவரிடம் நெருங்கிப் பழகி அவர் மீது அதிக பாசம் காட்டினார்.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. காதலும் மலர்ந்தது. ஆம், காதல் கொண்டேன் படத்தை இயக்கிய தனுஷின் சகோதரர் செல்வராகவன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

செல்வராகவனும், சோனியா அகர்வாலும் 4 ஆண்டுகளாக காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரும் சுமூகமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் இவர்களது குடும்ப வாழ்க்கையில் ஆண்ட்ரியா நுழைந்துள்ளார்.

ஆம், செல்வராகவனும், ஆண்ட்ரியாவும் நெருங்கி பழகியதால், இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பர விவாகரத்து பெற்று 2010 ஆம் ஆண்டு பிரிந்தும் விட்டனர்.

திருமணத்திற்கு முன்னதாக சக்சஸ், கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை,  ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே,  புதுப்பேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை சினிமாவில் நடிக்க வில்லை. விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஹீரோயின் ரோல் கிடைக்கவில்லை. எனினும், குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

வானம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த சோனியா அகர்வாலுக்கு சதுரங்கம், ஒரு நடிகையின் வாக்குமூலம், பாலக்காட்டு மாதவன், சாயா, எவனவன், தடம், தனிமை, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், எதுவுமே அவரது கதாபாத்திரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இல்லை.

தற்போது மலையாளத்திலும், தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது 38 வயதாகும் சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், இன்று தனது 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் சோனியா அகர்வாலுக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3