Home Blog Page 189

கொரோனா: இந்த ஜோதிடர் சொல்லுவது எல்லாம் அப்டியே நடக்குதே

0

மே, ஜுன் மாததிற்கு பிறகு கொரோனா வைரஸ் தமிழகத்தில் படிபடியாக குறையும் என்று உலககோப்பை பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  உலகமெங்கும் பரவி பல லட்சம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி பல்லாயிரம் மக்களை கொன்று வருகிறது.

இதனால் உலகமே பல முன் எச்சரிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற ஆடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது

அமெரிக்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இழப்புகளும், ஸ்பெயினில் 5000 மேற்பட்ட இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளபடி 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து, குணப்படுத்தும் மருந்து  கண்டுபிடிக்க முடியவில்லை. பல நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது உலக கோப்பையை சரியாக கணித்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கொரோனா பற்றி ஜோதிடம் கணித்துள்ளார்.

அதில் கூறியதாவது
“அவர் மார்ச் 29ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறையும். சீனா இதற்கு மருந்து கண்டுபிடிக்கும்.

    ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக குணமடைவார்கள். உலகத்தில் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் இதிலிருந்து குணமடைவார்கள்.

மே மாத இறுதியில், ஜூன் மாதங்களில் எந்தவித அறிகுறிகளும் இருக்காது. எல்லோரும் சரியாகி விடுவார்கள்.

  ஜூன் மாதங்களில் இதன் தாக்கம் சிறிதும் இருக்காது. இந்த வைரஸ் எங்கே துவங்கப்பட்டது அங்கேயே மருந்து கண்டுபிடிப்பார்கள். அதாவது சீனாவே கண்டுபிடிக்கும்.

ஜூலை மாதம் கண்டிப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும். தமிழ்நாட்டில் இதனால் பெரிதாக பாதிப்பு இருக்காது. உயிரிழப்புகளும் இருக்காது. மேலும் 50 பேர்களுக்கு மட்டுமே இந்த தொற்று பரவக்கூடும்.

இதனால் மக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம். வெளியில் சென்றால் கைகளை நன்கு கழுவ வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

3

கண்ணீர் விட்டு கதறி அழுத வடிவேலு: வைரலாகும் வீடியோ!

0
Vadivelu Corona Video

Vadivelu Corona Video; கண்ணீர் விட்டு கதறி அழுத வடிவேலு: வைரலாகும் வீடியோ! கொரோனா வைரஸ் ரொம்ப ஆபத்தா பயங்கரமா இருக்கு. யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று நடிகர் வடிவேலு கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து பேசிய வடிவேலு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

வடிவேலு கண்ணீர் விட்டு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், டோக்கியோ என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் என்று கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் கொரொனா வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்புக்கு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனினும், நோய் பரவாமல் தடுப்பதும், அதிலிருந்து விலகியிருப்பதும் நம் ஒவ்வொருவரது கடமை என்று அரசும், மருத்துவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலுவும் தனக்குரிய பாணியில் கொரோனா குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கூறுகையில், மன வேதனையுடன் ரொம்ப துக்கத்துடன் சொல்கிறேன்.

தயவு செய்து அனைவரும் அரசு சொல்லும் அறிவுரைப்படி இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டிலேயே இருங்கள்.

மருத்துவ உலகமே மிரண்டு தங்களது உயிரை பணையம் வைத்து எல்லோரது உயிரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் முழுவதும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதே போன்று காவல் துறை அதிகாரிகளும் நமக்காக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நம் சந்ததிகளுக்காக, நம் வம்சாவளிக்காக, நம் புள்ளகுட்டி உயிரை காப்பாத்துறதுக்காக நாம் எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அழுதுகொண்டே பேசியுள்ளார்.

வடிவேலு கண்ணீர்விட்டு கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளதை அனைவருமே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மக்களை பாதுகாக்கும் காவல் துறையினருக்கு உதவி செய்த மெட்ரோ சிரிஷ்!

0
Shirish Sharavanan

Metro Shirish Sharavanan; காவல் துறையினருக்கு உதவிய செய்த மெட்ரோ சிரிஷ்! சென்னை காவல்துறையினருக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு மாஸ்க்க மெட்ரோ பட நடிகர் சிரிஷ் வழங்கியுள்ளார்.

சென்னை போலீஸ் அதிகாரிகளுக்கு மெட்ரோ நடிகர் சிரிஷ் குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு மாஸ்க் ஆகியவற்றை வழங்கி தன்னால் முடிந்த உதவியை நம்மை பாதுகாக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு உதவியுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், டோக்கியோ என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் என்று கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் கொரொனா வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்புக்கு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனினும், நோய் பரவாமல் தடுப்பதும், அதிலிருந்து விலகியிருப்பதும் நம் ஒவ்வொருவரது கடமை என்று அரசும், மருத்துவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மெட்ரோ பட நடிகர் சிரிஷ் ஒருபடி மேல் சென்று நம்மை பாதுகாக்கும் பொருட்டு தங்களது குடும்பத்தையும் விட்டுவிட்டு நமக்காக போராடும் காவல் அதிகாரிகளை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு மாஸ்க் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

3

நிலாவுல கால் வச்ச நம்மல வெளியில கூட கால் வைக்க விடாம பண்ணிடுச்சு கொரோனா!

0
Vijay Antony Corona Advice Video

நிலாவுல கால் வச்ச நம்மல வெளியில கூட கால் வைக்க விடாம பண்ணிடுச்சு கொரோனா! நடிகர் விஜய் ஆண்டனி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

நிலவுக்கு ராக்கெட் விட்டோம். நிலவில் வாழலாம் என்றெல்லாம் நினைத்தோம். ஆனால், கொரோனா வந்து நம் அனைவரையும் வீட்டிலேயே முடக்கி வைக்கும் என்று யாருமே நினைக்கவில்லை.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து நடிகர் விஜய் ஆண்டனி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

செவ்வாய் கிரகத்தை சீக்கிரமே பிடித்துவிடலாம் என்று நினைத்தோம். மனிதன் நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்.

மனிதனுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஒரு வைரஸ் வந்து உலகம் முழுவதும் பரவி நம் அனைவரையும் வீட்டில் முடக்கி வைக்கும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.

இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அமைதியாக அரசு சொல்வதைக் கேட்டுக்கொண்டு வெளியில் எங்கும் செல்லாமல் இருக்க வேண்டும்.

நம்மால் மற்றவர்களுக்கும், மற்றவர்களால் நமக்கும் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? அதன் தீவிரம் என்ன? நம் நாட்டுக்கும், வீட்டுக்கும் எவ்வளவு கஷ்டம்? என்பதையெல்லாம் முதலில் கூகுளில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற வைரஸால் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அழிவு இருக்கிறது என்பதை ஆங்கிலத்தில் Contagion என்ற படமும், மலையாளத்தில் Virus என்ற டைட்டிலில் வைரஸ் தொடர்பான படமும் எடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வெடுக்கும் போது, ஃப்ரீயாக இருக்கும் போது குடும்பத்தோடு சேர்ந்த இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்லும் போது காசு இல்லாமல், அதெல்லாம் வாங்க முடியாமல் எத்தனையோ பேர் பசியில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தேவையில்லாத ஏதாவது ஒரு பொருள் வீட்டில் இருந்தால் அதை எடுத்துச் சென்று சாலையின் ஏதாவது ஒரு ஓரத்தில் வைத்துவிடுங்கள். தேவைப்படும் ஏழைகள் அதை எடுத்துக் கொள்வார்கள்.

கடையில் பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும் போது ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்க முயற்சி செய்யுங்கள்.

தனது வீட்டையும் மறந்து மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள் நமக்காக சாலையில் இறங்கி சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது வலியை மதிப்பதாக இருந்தால் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Typhoid Mary; 30 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பற்றி தெரியுமா?

0
Typhoid Mary

Typhoid Mary; 30 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட பெண் பற்றி தெரியுமா? Mary Mallon 30 years quarantine, Typhoid Mary, டைபாயிடு பெண்மணி, மேரி மேலன்.

கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவது நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்ள சுகாதார மையங்கள் அறிவுரை கூறியுள்ளது.

ஓரிரு மாதங்கள் தனிமையில் இருக்க நமக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் மேரி மெலன் என்ற பெண்மணி 30 ஆண்டுகள் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

1869 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த இவர் 1884ஆம் ஆண்டு பிழைப்பிற்காக அமெரிக்கா குடும்பத்தோடு சென்றார். அங்கு சென்ற இடத்தில் வருமானம் இன்றி தவித்து வந்தனர்.

1906ம் ஆண்டு இவர் சார்லஸ் ஹென்ரி வாரன் என்ற ஒரு வங்கி அலுவலர் வீட்டில் சமையல் வேலை செய்யும் பெண்ணாக பணிக்கு சேர்ந்தார்.

அக்குடும்பத்தில் இருக்கும் 11 பேருக்கு சமையல் வேலை செய்து வந்தார். திடீரென அக்குடும்பத்தில் 6 பேருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது.

Mary Mallon
Mary Mallon

அக்காலத்தில் டைபாய்டு அரிதான நோய். உணவால் தன இது ஏற்பட்டிருக்கலாம் என மேரி மேலனை, சார்லஸ் பணி நீக்கம் செய்தார். நோய் எப்படி பரவியது என மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.

மேலும் அவர் அங்கிருந்து சென்று மூன்று வீடுகளில் ஒரே நேரத்தில் பணி செய்தார். இதனால் அந்த மூன்று வீட்டில் இருப்போருக்கும் டைபாய்டு காய்ச்சல் பரவியுள்ளது.

வெவ்வேறு இடங்களில் டைபாய்டு காய்ச்சல் அதிகமாக பரவுவதாக மருத்துவர்கள் உணர்ந்தனர். இது எவ்வாறு யாரிடம் இருந்து பரவுகிறது என சோதிக்க ஆரம்பித்தனர்.

பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா என கண்டறிய ஆரம்பித்தனர். இறுதியில் மேரி மெலன் தான் அனைவர் வீட்டிலும் பணி செய்தது தெரிய வந்தது.

டைபாயிடு பெண்மணி (Typhoid Mary)

அந்த அயர்லாந்து பெண்மணியை அழைத்து பரிசோதனை செய்தனர். அவருக்கு காய்ச்சலோ, அல்லது டைபாய்டிற்கான மற்ற அறிகுறிகளோ தென்படவில்லை.

இதனால் மருத்துவர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். ரத்த மாதிரியை சோதிக்க முடிவு செய்தனர். வந்த முடிவில் வாயடைத்துப் போனார்கள் மருத்துவர்கள்.

அத்தனை பேருக்கும் பரவி அதே பேட்டனில் இவரது ரத்தத்தில் டைபாய்டு நோய் இருந்துள்ளது. ஒருவரது ரத்தத்தில் இந்த நோய் இருக்கிறது ஆனால் அதற்கான அறிகுறி ஏதும் இல்லை.

டைபாயிடு பெண்மணி (Typhoid Mary)
டைபாயிடு பெண்மணி (Typhoid Mary)

இதனால் ரத்தத்தில் உள்ள நோயின் வயதை சோதித்த போது அது மேரியின் பிறவியிலேயே இருப்பது தெரிந்தது. பிறவியிலே இருந்து இவர் டைபாய்டு நோயாளி என உறுதிப்படுத்தினர்.

மேலும் அவரிடம் இருந்து அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அது பரவுகிறது என்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுரை கூறினர்.

அவரை தனிமையில் வைத்து 30 ஆண்டுகள் சிகிச்சை கொடுத்தனர்.ஆனால் குணப்படுத்த இயலவில்லை. இறுதியில் 1938ம் ஆண்டு இறந்துவிட்டார் மேரி.

இதனால் மேரி மேலன் டைபாய்டு பெண்மணியென அழைக்கப்படுகிறார்.

3

நாயகி சீரியல் நடிகை ஒரு டாக்டரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

0

Vidya Pradeep; நாயகி சீரியல் நடிகை ஒரு டாக்டரா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே! சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வித்யா பிரதீப் மருத்துவர் உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் 1992 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு மாடல், நடிகை என்றால் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அறிவியல் அறிஞர் என்றால் யாருமே நம்ப மாட்டார்கள். ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகி சீரியலில் ஆனந்தி திருமுருகன் கதாபாத்திரத்தில் வரும் வித்யா பிரதீப் மருத்துவர் உடையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாடலான வித்யா பிரதீப் பிரிண்ட் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் மியூசிக் வீடியோவிலும் கலந்து கொண்டுள்ளார்.

அதன் பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜய் உதவியுடன் அவரது இயக்கத்தில் வந்த சைவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப்.

இப்படத்தைத் தொடர்ந்து அதிபர், பசங்க 2, ஒண்ணுமே புரியல, தல கல புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தடம் படத்தில் போலீஸ் அதிகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தடம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது, ஒத்தைக்கு ஒத்த, அசுரகுலம், தலைவி ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார்.

கூடவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலிலும் ரொம்பவே பிஸி. இப்படி நடித்து தான் ஒரு நடிகை என்பதை உலகிற்கு வெளிக்காட்டினாலும், தற்போது வந்துள்ள புகைப்படம் அவரை ஒரு மருத்துவராக அறிமுகம் செய்துள்ளது.

பயோ டெக்னாலஜி பிரிவில் மாஸ்டர் டிகிரியை முடித்துள்ள வித்யா பிரதீப், சென்னையில் உள்ள பிரபல கண் மருத்துவ கல்லூரியில் பிஹெச்டி படிப்பை முடித்துள்ளார்.

தற்போது வித்யா பிரதீப் மருத்துவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் எல்லாமே சமூக வலைதளங்களில் வரிசைகட்டி வெளியாகி வருகிறது.

இந்தப் புகைப்படங்களை பார்க்கும் போது அவரது ரசிகர்களுக்கு உற்சாகமாகவும், வியப்பாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜார்கண்ட் தும்கா; உதவி கேட்டு நாடிய பெண்ணின் உருவத்தை சிதைத்த அரக்கர்கள்

0

ஜார்கண்ட் தும்கா; உதவி கேட்டு நாடிய பெண்ணின் உருவத்தை சிதைத்த அரக்கர்கள், 16 வயது பெண்ணிற்கு உதவுவது போல் பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர்.

கொரோனா வைரஸ் தீவிரத்தால் நாடே 21நாள் ஊரடங்கில் இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஜார்கண்ட் மாநில தும்கா மாவட்டத்தில் 16 வயது பெண் தன் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்துகள் இயங்காத இந்த சமயத்தில் தன்னை ட்ராப் செய்யுமாறு தன்னுடைய நண்பரிடம் உதவி கேட்டுள்ளார்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தன்னுடைய நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தற்போது அந்த மைனர் பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என ஜார்கண்ட் போலீஸ் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த 10 பேரின் மீது Section 323 and 376 D of the Indian Penal Code, and relevant sections of the POCSO என்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

3

சிவமோகா கிராமம்; இந்தக்கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்

0
சிவமோகா கிராமம்

சிவமோகா கிராமம்; இந்தக்கோட்ட தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன். கர்நாடகா மாநிலத்தில் சகாரா தாலுகாவில் இருக்கும் சிவமோகா கிராமத்தில் எல்லையை மூடிவிட்டனர்.

அதுவும் ஒவ்வொரு கிராமத்தின் எல்லையில் மரங்களை வெட்டி சாய்த்து போக்குவரத்தை தடை செய்துள்ளனர். வெளியூர் மக்கள் யாரும் கிராமத்தினுள் வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த முடிவை அவ்வூர் மக்கள் எடுத்துள்ளனர். இதுவரை கர்நாடக மாநிலத்தில் 64 நபர்கள் கோரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 நபர்கள் குணமாக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 850க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3

கமலுக்கு கொரோனா வைரஸ்? அதிர்ச்சி கொடுத்த மாநகராட்சி

0

கமலுக்கு கொரோனா வைரஸ்? கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று அறிகுறி காரணமாக சென்னை மாநகராட்சி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவி பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.

பல அரசாங்ககள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளை அதிக பாதிப்புக்கு உள்ளாகியது.

இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் 15-ம் தேதி வரை மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர், பிரிட்டன் பிரதமர், கன்னடா பிரதமரின் மனைவி, ஜேம்ஸ்பாண்ட் படம் நடிகர் போன்றவர்களை இந்த கொரோனா தொற்று தற்போது தாக்கியுள்ளது.

கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று

கமலாஹாசன் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டதாக சில தினங்களுக்கு முன் அறிவித்து இருந்தார். தற்பொழுது அவர் வெளிநாட்டு சென்றதாகவும் அதில் அவருக்கு கொரோனா பாதித்ததாகவும் சமூக ஊடங்களில் செய்திகள் பரவி வருகிறது.

கமலஹாசனுக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவரை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தனிமையில் இருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியது.

கமல் வீட்டில் கொரோனா தொற்று உள்ளது என்ற நோட்டிஸ் சுவரில் ஓட்டப்பட்டது. இது திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கமல் தன்னை தானே தனிமைப் படுத்தினார். சமூக வலைத்தளத்தில் கமலுக்கு கொரோனா செய்தி, மாநகராட்சி அறிவுறுத்தல்… இவை அனைத்தையும் பார்த்தால் உண்மையில் கமலுக்கு கொரோனா பாதிப்போ என திரை உலகினர் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.

3

விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம்

0
விவசாயிகள்
விவசாயிகள்

விவசாயிகள் வழக்கம் போல் வயலில் வேலை செய்யலாம், 21 நாள் ஊரடங்கில் விவசாயிகளின் பங்களிப்பு தேவை.

இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள் வழக்கம் போல வயல்களில் வேலை செய்யலாம். எந்த வித தடையும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

21 நாள் ஊரடங்கில் முடிந்த வரை பாதுகாப்புடன் இருந்து கொண்டு விவசாய வேலைகளை செய்ய அரசு வலியுறுத்தியுள்ளது. அறுவடை, பயிரிடுதல் ஆகியவை அத்தியாவசியமான ஒன்று.

மேலும் நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் வேலையில் அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அளிக்க விவசாயிகள் பங்களிப்பு இல்லாமல் அளிக்க இயலாது.

இதனால் அந்தந்த மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வேண்டிய உதவி செய்து அவர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென அறிவித்துள்ளது.

3