Home Blog Page 190

Ratham Ranam Rowthiram; சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம்; பக்கத்துல வந்தா மரணத்துக்கு வியர்க்கும்!

0
Ram Charan RRR Movie

RRR Movie Ram Charan; சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம்; பக்கத்துல வந்தா மரணத்துக்கு வியர்க்கும்! ஆர்ஆர்ஆர் படத்தில் ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் வீடியோ வெளியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை ஜூனியர் என்டிஆர் வெளியிட்டுள்ளார்.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

ராம் சரண் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ராம் சரணின் 35ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் ராம் சரணின் கதாபாத்திரம் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் போலீஸ் கதாபாத்திரத்திற்குரிய பாணியில், உடல் கட்டமைப்புடன் இருக்கும் ராம் சரண் தீவிர உடற்பயிற்சி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மேலும், அமைதியா நின்னா அவர் எரியுற தழை, சீறிப்பாஞ்சா வால் நட்சத்திரம், அவர் பக்கத்துல நெருங்கினால் மரணத்துக்கு வியர்த்து ஊத்தும், பாஞ்சு வர்ற தோட்டா எல்லாம், அவர் நின்னுன்னா நிக்கும், அவர் யார் தெரியுமா? ஏ அண்ணன், காட்டுக்கு மன்னன், அல்லூர் இஸ் சீதாராம ராஜூ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் டயலாக் வருவதும், அதற்கேற்ப ராம் சரண் உடற்பயிற்சி செய்வதும் என்று அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும் போது இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்திருக்கமாட்டார் என்று தோன்றுகிறது.

அதோடு, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்தசில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதில் ஒருபுறம் ஜூனியர் என்டிஆர் நீருக்கு அடியில் இருந்து ஓடி வருவது போன்றும், மறுபுறம் ராம் சரண் நெருப்பு பிழம்போடு ஓடி வருவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

நடுவில், இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது போன்று படத்தின் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.

டைட்டிலில் உள்ள ஒவ்வொரு RRR ஆரிலும், ராம் சரண் முகம் Left R, ஜூனியர் என்டிஆர் முகம் Right R மற்றும் இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது Middle R போன்று காட்டப்பட்டுள்ளது.

அதோடு, டைட்டில் போஸ்டரில் இரத்தம் (Left R), ரணம் (Middle R), ரௌத்திரம் (Right R) என்றும், இந்தியா 1920 (India 1920) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோஷன் போஸ்டரில் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

டைட்டில் லோகோவுடன் கூடிய ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

3

கிரெடிட் கார்டு, பர்சனல் லோன் கட்டவேண்டுமா?

0

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரிசர்வ் வங்கியின் சக்தி காந்த தாஸ் அறிவிப்பின் படி கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூன்று மாதங்களுக்கு கட்டவேண்டுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் காரணமாக பிரதமர் மோடி 21 நாள்களுக்கு மக்கள் பெரிய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வெளியில் வந்து பொருட்களை வாங்கலாம் .

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வரும் நிலையில் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதிலும் சுகாதாரத் துறை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகின்றனர்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் அன்றாட வேலைக்கு செல்பவர்கள் வங்கியில் கடன் பெற்று இருந்தால்,

அவர்களால் இஎம்ஐ கட்ட முடியாததால் ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனால் நேற்று ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் மூன்று மாதங்களுக்கு வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டிய தேவை இல்லை.

ஆனால் இந்த மூன்று மாதம்இஎம்ஐயை பிற்காலத்தில் கட்ட வேண்டுமே தவிர, இந்த மூன்று மாதத் தொகையை நீக்கப்படாது.

இதனால் மக்களின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது, எந்தவித அபராதமும் விதிக்கப்பட்டது என்றும் அறிவித்திருந்தார்.

இவர் அறிவித்தபடி இதில் பர்சனல் கடனும் அடங்கும் ஆனால் கிரெடிட் கார்டு என்பது மக்களின் தனிப்பட்ட முறையில் செலவழிப்பதால் இது வங்கி கடனில் வராது.

ஆகவே கிரெடிட் கார்டில் நமக்கு வந்த பில் தொகையை சரியாக வருகிற மாதம் கட்ட வேண்டும்

3

வீட்டில் இருந்தால் நீங்கள் தான் வின்னர்: வடிவேலு ஸ்டைலில் புத்திமதி சொன்ன ரம்யா பாண்டியன்!

0
Ramya Pandian Corona Video

Ramya Pandian; வடிவேலு ஸ்டைலில் புத்திமதி சொன்ன ரம்யா பாண்டியன்! நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சிங்கப்பூர், இத்தாலி, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், டோக்கியோ என்று 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் என்று கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் கொரொனா வைரஸ் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்புக்கு மருந்து இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

எனினும், நோய் பரவாமல் தடுப்பதும், அதிலிருந்து விலகியிருப்பதும் நம் ஒவ்வொருவரது கடமை என்று அரசும், மருத்துவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ரம்யா பாண்டியன் கூறுகையில், உலகத்தையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவிற்கும் வந்துள்ளது. அதற்கு எதிராக நாம் போராடிதான் ஆகவேண்டும்.

ஆனால், ஒருவரால் மட்டுமோ அல்லது அரசால் மட்டுமோ முடியாது. அரசு தரப்பில் இருந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக போராட முடியும். இனிமேல் கொரோனா பரவாமல் தடுப்பதும் நமது கையில்தான் இருக்கிறது.

அனைவருமே வீட்டில் இருங்கள். சுய ஒழுக்கம் மற்றும் சுய கட்டுப்பாடு இரண்டுமே இந்தமாதிரி நேரத்தில் ரொம்பவே முக்கியம்.

நாம்தான் தேவையில்லாமல் வெளியில் சென்று அந்த வைரஸை பரப்புகிறோம். அப்படியில்லாமல் இருந்தால் அதற்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்.

ஒருவரை தொடுவதன் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோத்தான் இந்த வைரஸ் பரவுகிறது. தயவு செய்து வீட்டில் இருங்கள்.

எவ்வளவு வேண்டுமானாலும் பிஸியாக இருந்திரலாம், ஆனால், வீட்டில் சும்மா இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்…இருக்கிறது. இதனை குடும்பத்திற்கான நேரமாக நாம் செலவிடலாம்.

நான் அம்மாவிற்கு சமையலுக்கு உதவி செய்கிறேன். பணிப்பெண் வரமாட்டாங்க. ஆகையால், வீட்டு வேலை எல்லாம் நானும், அம்மாவும் சேர்ந்து செய்வோம்.

வீட்டில் டிவி, செல்போன், இன்டர்நெட் என்று எல்லாமே இருக்கு. வீட்டிற்குள்ளேயே இருந்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நாம் செய்யலாம்.

இப்போது வரைக்கும் பொதுமக்கள் வெளியில் சென்று வருகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும் போது கஷ்டமாகவும், பயமாகவும் இருக்கிறது.

நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவிற்கு எதிராக போராடுவோம். நமது வருங்கால எதிர்காலத்திற்காகவும், நமது நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் கொரோனாவிற்கு எதிராக போராடுவோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா வைரஸ் நேற்று ஒரே நாளில் 1692 பேர் பலி

0

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாளில் மட்டும் ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் மொத்தம் 1692 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், 100 நாடுகளுக்கு மேல் பரவி 20000க்கும் மேற்பட்ட மக்களை பலியாக்கி, பல லட்சத்திற்கு மேல் மக்களை பாதிப்படையச் செய்துள்ளது.

இந்திய பிரதமர் மோடி, 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்தியாவசிய பொருளை வாங்க மட்டும் மக்கள் வெளியே வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்திய நிலையில், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

நாளொன்றுக்கு சராசரியாக 500 பேருக்கும் மேல் பலியாகிவருகிறார்கள்.

இதைக் கட்டுக்குள் கொண்டுவர அந்த நாட்டு அரசாங்கங்கள் பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

பாதிப்படைந்த மக்களில் சீனாவை விட அமெரிக்கா முன்னிலை பெற்றது.

நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் 919 பேரும், ஸ்பெயினில் 773 பேரும் பலியாகியுள்ளனர். மொத்தமாக ஆயிரத்து 792 நபர்கள் ஆவார்கள்.

இந்த வைரஸில் அதிக பலியாகிய நாட்டில் இத்தாலி இதுவரை 9134 மக்களை இழந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இதுவரை 5138 மக்கள் இறந்துள்ளனர்.

சீனாவை விட இந்த இரண்டு நாடுகளிலும் இழப்பு அதிகமாக உள்ளது பல நாட்டு அரசிடம் உதவி கோரியுள்ளது.

தற்போது இந்த வைரஸ் எதிர்கொள்ள இந்தியா ஒரு முன்னோடியாக இருந்து வருகிறது.

இத்தாலியில் தற்போது வயதானவர்களை கொரோனா வைரஸ் தாக்கியிருந்தால் அவர்களை அந்த நாட்டு மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்து வருகிறது என தகவலும் வெளியாகியுள்ளது.

3

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு

0
இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து பிரதமர்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு , பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று.

இங்கிலாந்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கிலாந்து மன்னரை தொடர்ந்து தற்போது பிரதமரையும் கொரோனா தாக்கியது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவரே தன்னை சுய தனிமை படுத்திக்கொண்டார்.

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடையும்வரை, காணொலி காட்சி மூலம் தமது அன்றாட பணிகளை கவனிக்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உண்மைதான் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர், பிரதமர் என அடுத்தடுத்து கொரோனாவால் மூத்த தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

3

வரலாறு டெஸ்ட் போட்டி 26க்கு ஆல் அவுட் நியூசிலாந்து

0

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து மோசமான வரலாறு படைத்த நாள் இன்று.

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

1955ஆம் ஆண்டு நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது இங்கிலாந்து அணி
முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 25ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி 89 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.

அந்த அணியில் அதிகபட்சமாக ரேய்டு 73, ஸ்கல்வி 49, ராபேனே 29 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஸட்தாம் 4 விக்கெட்டும், ஆப்பிள்யார்டு 3 விக்கெட்டும் எடுத்தனர்.

இங்கிலாந்து 246

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 120 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்தது.

இந்த அணியில் அதிகபட்சமாக ஹட்டன் 53, மே 48, ஸிம்ஸன் 23, டாவ்சன் 27, கவ்டுரே 22 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் மோய்ர் 5 விக்கெட்டும், ஹேய்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மார்ச் 28

46 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியூஸிலாந்து அணி நான்காவது நாள் அதாவது மார்ச் 28ஆம் தேதி மிகப்பெரிய மோசமான கிரிக்கெட் வரலாறு படைத்தது.

நியூசிலாந்து படைத்த சாதனை

ஆம் 26 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 20 ரன் மற்றும் இன்னிங்ஸ் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.

நியூசிலாந்து அணியின் ஸ்கல்வி அதிகபட்சமாக 11 எடுத்தார். அந்த அணியில் நான்கு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர், ஒருவர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் நின்றார்.

மொத்தத்தில் நியூசிலாந்து அணியில் பத்து வீரர்கள் ஒற்றை இலக்க அதாவது ஐந்து ரன்களை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் ஆப்பிள் யார்டு 4 விக்கெட்டுகளும் ஸட்தாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தனர்.

இன்றுவரை இந்த சாதனை

1955ஆம் ஆண்டு படைத்த இந்த சாதனை இன்று வரை யாராலும் முறியடிக்கப்படாத மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது.

மார்ச் 28ம் தேதி நியூசிலாந்து கிரிக்கெட்க்கு மிகப் பெரிய கருப்பு நாளாக அமைந்து விமர்சனத்துக்கும் உள்ளானது.

இந்த ஆட்டம் 3 நாளிலேயே முடிவுக்கு வந்தது. இந்த ஆட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி ஓய்வு நாளாக இருந்தது.

இந்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் நியூசிலாந்தை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவின் சாதனை

1896 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 30 ரன்கள் எடுத்து சாதனை படைத்து இருந்தது.

31 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது வரலாறு படைத்தது.

இந்த மோசமான வரலாற்றில் குறைந்த ரன் எடுத்த அணியின் பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்தும் அடுத்த நான்கு இடத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இருந்து வருகிறது.

3

எனக்கு பிடித்த பேட்ஸ்மேன்கள்- ஸ்ரேயாஸ் அய்யர்

0

ஸ்ரேயாஸ் அய்யர் தன் டிவிட்டர் பக்கத்தில் தனக்கு பிடித்த ஐந்து பேட்ஸ்மேன்களை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்விட் வைரலாகி வருகிறது

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மற்ற இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியும் இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்திய மக்கள் அனைவரும் பிரதமர் மோடி அறிவித்த படி இருபத்தி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு வீட்டினுள்ளேயே உள்ளனர். வீரர்களுக்கும் இதே நிலைமைதான்.

பல நாடுகள் ஜூன் மாதம் வரை கிரிக்கெட்டை ஒத்திவைத்துள்ளது. ஆக இந்த வருடம் ஐபிஎல் நடைபெறுமா என்பது சந்தேகம்தான்.

தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் வீட்டில் இருப்பதால் ட்விட்டரில் சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அதில் தனக்கு பிடித்த ஐந்து பேட்ஸ்மேன்களை யார் யார் என்று கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய வீரர்களையும், இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன், தென்னாப்பிரிக்காவில் ஏபி டிவிலியர்ஸ் என இந்த ஐந்து பேர்கள் தான் என் முன்மாதிரி மற்றும் இவர்களைப் போல் தான் நான் விளையாட கருதுகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் போட்ட இந்த பதிவு தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டி வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் 18 ஒருநாள் போட்டி மற்றும் 22 டி20 போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 1165 ரன் எடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ச்சியாக அரை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

3

28/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

28/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள்.

ரிஷப ராசிபலன்

இன்று வேலைச்சுமையால் சோர்வாக இருப்பீர்கள்.

மிதுன ராசிபலன்

இன்று விவேகத்துடன் செயலாற்றுவீர்கள்.

கடக ராசிபலன்

இன்று பணவரவு சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று கோபத்தை குறைத்தால் மட்டுமே நன்மை கிடைக்கும்.

துலா ராசிபலன்

இன்று லாபகரமான நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று அனைத்து செயல்களுமே தாமதமாக முடியும்.

தனுசு ராசிபலன்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்று போட்டிகளை எதிர் கொள்ள வேண்டிய நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று அதிகமாக மறதி இருக்கும். கவனமாக இருக்கவும்.

மீன ராசிபலன் 

இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் தீரும். மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள்.

28/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

“மேலும் அனைவரும் அரசாங்க ஊரடங்கு உத்தரவை மீறாமல் வீட்டிலேயே இருந்து நமது நலனை பாதுகாத்து கொள்ளுமாறு மிஸ்டர் புயல் இணையம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்”

3

ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் தளபதி விஜய்: புதிய டுவிஸ்ட்?

0

Vijay RRR Movie; ஆர்.ஆர்.ஆர் படத்தில் தளபதி விஜய்: புதிய டுவிஸ்ட்? ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் டிசைன் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

பிகில் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் மாஸ்டர்.

உலகமே அச்சுறுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்பது தெளிவாக தெரிந்துள்ளது.

ஆதலால், மாஸ்டர் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி65 படத்திற்காக விஜய் எந்த இயக்குநருடன் இணைவார் என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பூகம்பமே வந்தது போன்று ஒவ்வொரு இயக்குநர் பெயர் அடிபடுகிறது.

இது ஒரு புறம் இருக்க விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவலும் வந்துள்ளது. அது என்னவென்றால், ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதுவும், சிறப்புத் தோற்றத்தில் என்கிறது தகவல்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில், பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வந்த ரௌடி ரத்தோர் என்ற படத்தில் விஜய் நடித்துள்ளார்.

அதுவும், சிந்தா தா தா சிந்தா சிந்தா (Chinta Ta Ta Chita Chita) என்ற பாடலுக்கு பிரபு தேவா, அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார்.

தற்போது அதே போன்று சிறப்புத் தோற்றத்தில் RRR ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

ராம் சரண் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ராம் சரணின் 35ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் ராம் சரணின் கதாபாத்திரம் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் போலீஸ் கதாபாத்திரத்திற்குரிய பாணியில், உடல் கட்டமைப்புடன் இருக்கும் ராம் சரண் தீவிர உடற்பயிற்சி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதனை பார்க்கும் போது இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்திருக்கமாட்டார் என்று தோன்றிகிறது.

அதோடு, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன் தினம் இப்படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய RRR மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதில் ஒருபுறம் ஜூனியர் என்டிஆர் நீருக்கு அடியில் இருந்து ஓடி வருவது போன்றும், மறுபுறம் ராம் சரண் நெருப்பு பிழம்போடு ஓடி வருவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

நடுவில், இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது போன்று படத்தின் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.

டைட்டிலில் உள்ள ஒவ்வொரு RRR ஆரிலும், ராம் சரண் முகம் Left R, ஜூனியர் என்டிஆர் முகம் Right R மற்றும் இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது Middle R போன்று காட்டப்பட்டுள்ளது.

அதோடு, டைட்டில் போஸ்டரில் இரத்தம் (Left R), ரணம் (Middle R), ரௌத்திரம் (Right R) என்றும், இந்தியா 1920 (India 1920) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோஷன் போஸ்டரில் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

டைட்டில் லோகோவுடன் கூடிய ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

3

இளவரசன் பிறந்த சந்தோஷத்தில் ஜோக்கர் இயக்குநர்!

0
Raju Murugan and VJ Hema Sinha

Raju Murugan Blessed With Boy Baby; இளவரசன் பிறந்த சந்தோஷத்தில் ஜோக்கர் இயக்குநர்! ஜோக்கர் இயக்குநர் ராஜூ முருகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஒரு பத்திரிக்கையாளராக இருந்து இயக்குநராக பிரபலமானவர் ராஜூ முருகன். திருவாரூரில் பிறந்துள்ளார். அட்டகத்தி தினேஷ் மற்றும் மாளவிகா நாயர் நடிப்பில் வந்த குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

குக்கூ படத்தைத் தொடர்ந்து ஜோக்கர் படத்தை இயக்கினார். இப்படத்திற்கு தேசிய விருதும், சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது.

இப்படங்களைத் தொடர்ந்து ஜிப்ஸி என்ற படத்தை இயக்கினார். அரசியல், ஜாதி மதம், காதல் ஆகியவைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 3 ஆம் தேதி திரைக்கு வந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது.

எனினும், ஜிப்ஸி படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஜிப்ஸி படம் மறுவெளியீடு செய்யப்படும் என்று படக்குழு அறிவித்தது. தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக படக்குழு ஏற்கனவே அறிவித்தபடி ஜிப்ஸி மறுவெளியீடு செய்யப்படுமா என்பது கேள்விக்குறி. ஏற்கனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளியாக வேண்டிய படங்கள் வேறு இருக்கிறது.

ஆதலால், ஜிப்ஸி படம் மீண்டும் திரைக்கு வருவது என்பது சந்தேகம் தான். இதே போன்று ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த தாராள பிரபு படமும் மறுபடியும் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

படங்கள் இயக்குவதோடு இல்லாமல், தோழா மற்றும் மெகந்தி சர்க்கஸ் ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராஜூ முருகன் – ஹேமா சின்ஹா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜூ முருகன் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஹேமா சின்ஹா இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது ராஜூ முருகன் – ஹேமா சின்ஹா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் ராஜூ முருகன் – ஹேமா சின்ஹா தம்பதியினருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஒரே வருடத்தில் ராஜூ முருகனுக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஒன்று ஜிப்ஸி வெற்றி. மற்றொன்று ஆண் குழந்தை. ஹேமா சின்ஹா நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3