எங்கிருந்து எவனோ வர்றானாம்: செந்தில் கணேஷ் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்! சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இணைந்து கொரோனாவிற்கு எதிராக விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ். சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற செந்தில் கணேஷிற்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து சார்லி சாப்லின் 2 படத்தில் வரும் சின்ன மச்சான் என்னா புள்ள பாடலை பாடியுள்ளனர்.
இதே போன்று, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் வரும் ஒன்னுக்கு ரெண்டா என்ற பாடலையும், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் வரும் இருச்சி பாடலையும், சூரரைப் போற்று படத்தில் வரும் மண்ணுருண்ட பாடலையும் செந்தில் கணேஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா பாடல்கள் மட்டுமல்லாமல், விழிப்புணர்வு பாடல்களையும், பக்தி பாடல்களையும் மற்றும் பல இசை நிகழ்ச்சிகளிலும் பல பாடல்களையும் பாடியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் என்று பலரும் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் தங்களது ஸ்டைலில் கொரோனாவுக்கு எதிராக எங்கிருந்து எவனோ வர்றானாம் எல்லாரவையும் வந்து கொல்றானாம்….என்ற விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் பாடலில் கத்தியை தீட்டபுள்ள என்று செந்தில் கணேஷ் பாடல், அதற்கு புத்தியை மட்டும் தீட்டினால் தடுத்துவிடலாம் என்று ராஜலட்சுமி பாடுகிறார்.
வைரஸ் கிருமி கொரோனா….கை கூப்பி வணக்கம் சொல்லி வந்தோம்… ஆனால், கை குலுக்கி கொறஞ்சு போனோம்.. பாரம்பரிய வாழ்க்கையை கடைபிடித்தால் கொரோனாவை விரட்டி அடித்துவிடலாம்..
மேலும், முன்னோர்கள் வகுத்து வைத்த பழக்க வழக்கங்களை பின்பற்றினால், கொரோனாவை தடுத்துவிடலாம் என்றும், மஞ்சள், வேப்பில்லை பயன்படுத்துதல் போன்றவை சிறந்தது என்றும் அவர்களது பாடல் மூலம் உணர்த்தியுள்ளனர்.
Pawan Kalyan; கொரோனா: பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதியுதவி! கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் பவன் கல்யாண் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. எனினும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தடுப்பு நடவடிக்கைக்காக, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கும், பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிதியுதவியை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
ஆக மொத்தம் ரூ.2 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Kavin Corona Virus; பயம் நல்லதுதான் ஆனால் பீதி அடைய வேண்டாம்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற கவின் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக வந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் அன்பைப் பெற்றார்.
தற்போது கொரோனா வைரஸ் குறித்து தனது டுவிட்ட பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்தும், 21 நாட்கள் ஊரங்கு உத்தரவு குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிக் பாஸ் பிரபலம் கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த கடினமான நேரத்தில் நம் அனைவருக்கும் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்ற பயம் இருக்கிறது.
ஆனால், இந்த பயம் நல்லது. அது தொடர்ந்து நம்முடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நாமும் பீதியடைய வேண்டாம். இது போன்ற கடினமான காலங்களில் நாம் அனைவரும் ஒன்றாக நின்றிருக்கிறோம்.
அதேபோல் வீட்டிலேயே தங்கியிருப்பதில் நம்முடைய ஒற்றுமை இதைப் பார்க்கவும் உதவும் என்று நான் நம்புகிறேன்.
நமது பாதுகாப்பிற்காக அயராது உழைக்கும் அனைத்து மக்களையும் நேசிப்போம், கவனிப்போம், அந்த போர்வீரர்கள் அனைவரையும் பிரார்த்தனைகளில் நினைவுகூருவோம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கவின் பிகில் நடிகை அம்ரிதா ஐயர் உடன் இணைந்து லிப்ட் படத்தில் நடிக்கிறார். அண்மையில், இப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டியில் ஒரே அணிக்காக விளையாடிய வீரர்கள் மற்றும் அதிக அணிக்காக விளையாடிய வீரர்களில் விராட் கோலி மற்றும் ஆரோன் பின்ச் உள்ளனர்.
ஐபிஎல் போட்டி
2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் 13ஆவது சீசனை எட்டியுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடி வருகிறது.
சென்னை, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், பெங்களூரு தற்பொழுது உள்ள எட்டு அணிகள் ஆகும்.
கொச்சி மற்றும் புனே
2011ஆம் ஆண்டு மட்டும் 10 அணிகள் விளையாடியது அதில் கொச்சி மற்றும் புனே அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது..
பின்பு மீண்டும் 8 அணிகளாக குறைக்கப்பட்டு விளையாடப்பட்டு வருகிறது.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் தடைசெய்யப்பட்டு விளையாடாமல் இருந்தது.
குஜராத் மற்றும் புனே
இதனால் குஜராத் மற்றும் புனே அணி சேர்க்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி ஐபிஎல் போட்டிக்கு திரும்ப குஜராத் மற்றும் புனே அணியை நீக்கியது ஐபிஎல் நிர்வாகம்.
இதுவரை 13 சீசன்களில் விளையாடியுள்ள 8 அணிகளிலும் ஒரு சில வீரரை தவிர மற்ற எல்லாரும் அணி மாறி விளையாடி உள்ளார்கள்.
நம்முடைய சென்னையின் தல தோனி மற்றும் ரெய்னா கூட வேறுவேறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்கள்.
சச்சின் விளையாடிய நான்கு சீசன் களிலும் மும்பை அணிக்காக மட்டும் விளையாடினார்.
ஆனால் 13 சீசன்கள் விளையாடிய வீரர்கள் என்றால் இருவர் மட்டுமே
1. வீராத் கோலி
2008ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நாம் இந்திய கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
அனில் கும்பளே,ராகுல் டிராவிட், டேனியல் வெட்டோரி போன்றவர்கள் தலைமையின் கீழ் விளையாடிய வீராட்கோலி. தற்போது பெங்களூர் அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார்.
இந்தியாவில் பல வெற்றிகளை குவித்து வரும் விராட் கோலி பெங்களூர் அணிக்காக கோப்பையை வாங்கி தர முடியவில்லை என்பதே சோகம்.
2. லசித் மலிங்கா
2008 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை வீரருமான வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விளையாடி வருகிறார்.
இவர் இலங்கை அணி t20 கேப்டனாகவும் இருந்துவருகிறார். கடந்த முறை மும்பை அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
மும்பை அணி பலமுறை வெற்றி பெற இவரது பந்துவீச்சு உதவியிருக்கிறது. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் சிங் மற்றும் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடி உள்ளார்.
இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு சில போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார்
மார்ஷ், தோனி, ரோகித், ஹர்பஜன்
ஆஸ்திரேலியா வீரர் ஷான் மார்ஷ் தான் விளையாடிய ஐபிஎல் போட்டியில் 2008-2017 ஆண்டு வரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார்.
சென்னை அணி 2016-2017 ஆண்டுகளில் தடை செய்யப்படுவதால் தோனி மற்றும் வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் மூன்று சீசன்களில் டெக்கன் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் 2008 2018 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல்லில் அதிக அணிகளில் விளையாடிய வீரர்கள்
1. ஆரோன் பின்ச்
ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் ஐபிஎல் போட்டியில் அதிக அணிகள் விளையாடி உள்ளார். இவர் மொத்தம் 7 அணிகளில் விளையாடி இருக்கிறார்.
இவர் விளையாடிய அணிகள் புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2. தினேஷ் கார்த்திக்
இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 6 அணிகளில் விளையாடி உள்ளார்.
இவர் விளையாடிய அணிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஆகும்.
3. திசாரா பெரேரா
இலங்கையின் ஆல் ரவுண்டர் ஆன அதிரடி பேட்ஸ்மேன் திசாரா பெரேரா இதுவரை 6 அணிகள் விளையாடி உள்ளார்.
அவர் விளையாடிய அணிகள் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், புனே ரைசிங் ஜெயின்ஸ், கொச்சி டஸ்கேர்ஸ் கேரளா, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆகும்.
4. பார்த்திவ் படேல்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பர்த்திவ் படேல் இதுவரை ஐபிஎல் போட்டியில் 6 அணிகளில் விளையாடி உள்ளார்.
இவர் விளையாடிய அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொச்சி டஸ்கேர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜஸ் போன்ற அடிகள் விளையாடி உள்ளார்.
5. யுவராஜ் சிங்
இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ஐபிஎல் 6 அணிகளில் விளையாடி உள்ளார்.
இதுவரை அவர் விளையாடிய அணிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் ஆகும்
கொசு மூலம் கொரோனா வைரஸ் பரவுமா : WHO விளக்கம் அளித்துள்ளது
கோடை காலம் என்பதால் கொசுக்கள் வெப்பநிலையுடன் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில், ஒரு கொசு ஒரு கொரோனா வைரஸ் நோயாளியைக் கடித்த பிறகு மற்றொரு நபரைக் கடித்தால், அந்த நபருக்கும் கொரோனா வைரஸ் பரவுமா? என்ற கேள்வி எழலாம்.
சில வடஇந்திய யூடியூப் சேனல்கள் கொசுக்கள் மூலமும் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன், பயனர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று பார்ப்போம்.
Can Mosquitoes act as host of coronavirus if it bites an corona infected person ?@WHO@MoHFW_INDIA
கொரோனா வைரஸை கொசுக்கள் பரப்பக்கூடும் என்பதற்கு தற்போது எந்த தகவலும் ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் உடலின் சுவாச அமைப்பைத் தாக்குகிறது.
இந்த வைரஸ் இருமல் அல்லது தும்மினால் அவதிப்படும் ஒருவர், அதிலிருந்து உருவாகும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நீர்த்துளிகள் மூலம் அந்த வைரஸ் தற்போதுள்ள மக்களின் உடலில் நுழைகிறது.
இது தவிர, வைரஸ் உமிழ்நீர் மூலமாகவும் பரவுகிறது. எனவே கொரோனா வைரஸைத் தவிர்க்க, இருமல் அல்லது தும்மக்கூடிய நபரிடமிருந்து விலகி இருங்கள்.
WHO தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொரோனா வைரஸ் வதந்திகள் பற்றிய உண்மையையும் கூறியுள்ளது. WHO வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான ஒவ்வொரு தகவலையும் நீங்கள் பெறலாம்.
நிர்மலா சீதாராமன் கொரோனா வைரஸ் நிவாரணம்: நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கான பொருளாதார நிவாரணத்தொகையை அறிவித்துள்ளார்.
மார்ச் 19-ஆம் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதைச் சரிசெய்ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்பு, வங்கி ஏடிஎம் மையத்திலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம். வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா நிவாரண உதவித்தொகையை தெரிவித்தார்.
லாக்டவுன் அறிவித்து 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஏழைகளுக்கான நிதி அளிக்க முடிவு செய்துள்ளோம். மொத்தம் ரூ.1.7 லட்சம் கோடி இதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின்கீழ், மாதத்துக்கு 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு அரிசி அல்லது கோதுமை என அவர்கள் எதை வாங்கினாலும், கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை (வாங்குவோரின் விருப்பம்) இலவசமாக வழங்கப்படும்.
ஒவ்வொரு பிராந்தியமும் ஒவ்வொரு வகை பருப்புகளை விரும்புவார்கள். அவர்கள் விரும்பும் பருப்புகளை ஒரு குடும்பத்திற்கு தலா ஒரு கிலோ 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் தொடரும்.
மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என கொரோனா வைரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கு 50 லட்சம் இன்சூரன்ஸ் அவர்கள் பெயரில் எடுக்கப்படும்.
விவசாயிகளுக்கு முன்கூட்டியே முதற்கட்ட நிவாரண உதவித்தொகையாக 2000 அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் பல திட்டங்கள் குறித்து உரையாற்றி வருகிறார்.
Celebrities Avoiding Awareness; கொரோனா விழிப்புணர்வு வீடியோ இல்லையா? சுயநலம் கொண்ட சினிமா பிரபலங்கள்! கொரோனா வைரஸ் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் என்று பலரும் டுவிட்டர், வீடியோ மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிலர் எனக்கென்ன வந்தது என்று இருக்கின்றனர்.
உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்தும், 21 நாட்கள் ஊரங்கு உத்தரவு குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சாந்தணு, பார்த்திபன், ஆக்ஷன் கிங் அர்ஜூன், தனுஷ், வரலட்சுமி சரத்குமார், அக்ஷய் குமார், த்ரிஷா, சிம்ரன், என்று பலரும் வீடியோ வெளியிட்டு கோரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து குஷ்பு, மஞ்சிமா மோகன், ஸ்ரேயா கோஷல், ஆர்.கே.சுரேஷ், மாளவிகா மோகனன், ஸ்ருதி ஹாசன், கஸ்தூரி என்று பல நடிகர், நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, அரசு, அரசு அதிகாரிகள் சொல்லும் கேட்காத மக்கள், தாங்கள் உயிருக்கு மேலாக கருதும் நடிகர்கள் சொன்னால், கேட்பார்கள்.
அப்படியிருக்கும் பட்டியலில் சிம்பு, அஜித், விஜய், சத்யராஜ், சிபிராஜ் என்று பலரும் இருக்கின்றனர்.
அவர்கள் தங்களுக்கு என்ன வந்தது என்று சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஒதுங்கியிருக்கின்றனர்.
அஜித் சினிமாவில் நடிப்பதோடு சரி, வெளியில் எங்கும் செல்வதில்லை. சமூக வலைதள பக்கமும் கிடையாது.
அவர் உண்டு, அவரது நடிப்புண்டு என்று இருக்கிறார். ஆனால், அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், விஜய் அப்படியில்லை. சினிமாவில் நடித்துவிட்டு, பட நிகழ்ச்சிகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
தேவைப்படும் பொழுது ரசிகர்களாக பேசுவார். ஆனால், தற்போது வரை கொரோனா வைரஸ் குறித்து விஜய் இதுவரை வீடியோ எதுவும் வெளியிடவில்லை.
இது அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. ரசிகர்கள் மீது அக்கறை கொண்டு அஜித், விஜய் போன்ற நடிகர்கள் கொரோனா குறித்தும், ரசிகர்களின் குடும்பத்தின் மீது பாசம் வைத்து வீடியோ வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டைவிட்டு காரணம் இல்லாமல் வெளியே வந்தால் உங்கள் மீது சட்டம் பாயும் சிறை தண்டனையும் கிடைக்கும் .
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு 23 ஆக உயர்வு. புதிதாக காஞ்சிபுரத்தில் ஐந்து பேருக்கு வைரஸ் பரவி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருவதால் இத்தாலியில் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது .
குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்வதற்கு அனுமதி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மெடிக்கல் உட்பட அனைத்திற்கும் அடையாள அட்டை கொண்டு செல்வது அவசியம் .
ஒரு மாதத்திற்கு அனைத்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன : கரோனா வைரஸ் எதிரொலி .
இந்த ஒரு மாதத்திற்கு அனைத்து atm கம்மியாக இயங்கும். டிஜிட்டல் பேமெண்ட் பயன்படுத்துமாறு அரசு வலியுறுத்தல் .
வெளியே வந்த நபரை தட்டிக்கேட்ட போலீஸ் மீது தாக்குதல் : பெங்களூரில் பரபரப்பு .
ராயல் என்ஃபீல்டின் அனைத்து பிரான்ச்களிலும் கொரோனா வைரஸ் காரணமாக அடைக்கப்பட்டுள்ளது.
சீனாவைக் காட்டிக்கொடுத்த கொரோனா; சேட்டிலைட் புகைப்படத்தால் அதிர்ச்சி. சீனாவில் அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வெளியிடப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் என்பதை கூட வீட்டின் உள்ளே இருந்து கொண்டு சமாளித்து விடலாம். ஆனால்? ஆக்ஸிசன் இல்லாமல் உங்களால் உயிர் வாழ முடியுமா?
இத்தனை ஆண்டு காலம் சீனா உலக நாடுகளை ஏமாற்றி வந்துள்ளது. மற்ற ஐநா உறுப்பினர் நாடுகளைக் காட்டிலும், சீனா அதிகமான கார்பன்டை ஆக்சைடை வெளியிட்டு வந்துள்ளது.
பலமுறை அமெரிக்கா எச்சரிக்கை செய்தும் சீனா அதை மறுத்து வந்தது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தியதால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டது.
இதனால் காற்றின் மாசுபாடு குறைந்து உள்ளது. எந்த எந்த நாடுகளில் அதிக அளவு மாசு குறைந்து உள்ளது என்பதை சேட்டிலைட் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் சீனாவில் பல மடங்கு கார்பன்டை ஆக்ஸைடு வெளியாவது குறைந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
உண்மையில் கொரோனா உலகை சுத்தப்படுத்தவே வந்துள்ளது. மனிதன் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுவதை நிறுத்தி விட்டு பழைய வாழ்க்கைக்கு மாறியுள்ளான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
Action King Arjun Corona Video; ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்: அர்ஜூன்! கொரோனா வைரஸ் குறித்து அனைவரும் அறிந்தும் வெளியில் சுற்றுவதை மக்கள் நிறுத்த வேண்டும் என்று ஆக்ஷன் கிங் அர்ஜூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அர்ஜூன் கொரோனா பாதிப்பு குறித்து வீடியோ வெளியிட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைக் கடந்து தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் மட்டும் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், 562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறுகையில், இந்த வீடியோவும் கொரோனா வைரச் பற்றியதுதான்.
எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள்.
இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் இந்த நாடு என்று எல்லோரையும் காப்பாற்றும் முயற்சி.
மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு உதவி வருகிறது. அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் வெளியில் வந்துவிட்டால் யாராலேயும் ஒன்றும் செய்ய முடியாது.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதுதான் நமக்கு தெரியும். காற்றில் மூலமாகவும் பரவுவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வருகிறது.
இது மாதிரி நேரத்தில் நாம் வீட்டை விட்டு வெளியிலேயே வரக்கூடாது. ஒருவேளை வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றால், முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.
எனது நண்பர், இத்தாலியில் நர்சாக பணியாற்றுகிறார். அவரிடம் இது குறித்து பேசும் போது, அங்கு ஒரு நாளைக்கு 5500 லிருந்து 6000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், சுமார் 550 லிருந்து 600 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார்.
இப்படியெல்லாம் கேட்கும் போது நாம் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை யோசித்து பாருங்கள்.
180 கோடி மக்கள் தொகை கொண்ட நமது இந்தியாவில் இத்தாலி போன்று ஒரு நிலைமை வந்தால், அய்யோ யோசித்துக் கூட பார்க்க முடியாது.
இந்திய அரசியலமைப்பு நம் அனைவருக்கும் ஒரு உரிமை கொடுத்திருக்கிறது. அது என்னவென்றால், பேச்சுரிமை, கருத்து சுதந்திரம், சமத்துவம் என்று பல உரிமைகளை கொடுத்திருக்கிறது.
ஆனால், கொலை செய்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ வெளியில் சென்றாலே இன்னொருவரை கொலை செய்வதற்கு சமம்.
ஏனென்றால், ஒருவரிடமிருந்து 100 பேர், 200, 1000 என்று பரவிக்கொண்டே இருக்கும். நம் நாட்டை காக்க வேண்டிய கடமை உங்களிடம் தான் இருக்கிறது.
நான் சினிமாவில் இருப்பதன் காரணமாக ஒரு சிறிய விஷயம் சொல்லிக்கொள்கிறேன். ரஜினி, கமல், அஜித், விஜய் என்று மாஸ் நடிகர்களுக்கு தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் பேர் இருப்பார்கள்.
இந்த ரசிகர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும். எப்படியென்றால், ஒவ்வொரு ரசிகர் மன்றத்தின் மூலமாக அவர்களது ரசிகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாட்ஸ் அப் மூலமாக வெளியே வராதீர்கள் என்று மெசேஜ் அனுப்பலாம்.
உங்களது நடிகர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதை, அன்பை காட்டுவதற்கு இது ஒரு சரியான நேரமாக இருக்கும் என்றார்.
மேலும், இந்த சூழ்நிலை எனது முன்பாக ஒரு தீவிரவாதி இருக்கிறார். அவரது கையில் துப்பாக்கி இருக்கிறது. எனது கையிலும் துப்பாக்கி இருக்கிறது.
நம்மை அவர்கள் சுடுவதற்கு முன்பாக நாம் அவர்களை சுட வேண்டும் இதுதான் சரி. ஆனால், இப்போது நிலைமை, துப்பாக்கியை எடுத்து தமது நெற்றியில் நாமே வைத்துக்கொண்டு நம்மை நாமே சுடும் நிலைமையில் இருக்கிறோம்.
இதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது. ஆமாம், நமக்கு எதிரில் கொரோனா வைரஸ் இருப்பது தெரிந்தும் கூட நாம் வெளியில் ஜாலியாக சுற்றி வருகிறோம்.
ஹேப்பியாக ஒரு ஹாலிடே கிடைத்திருக்கிறது என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னாடி கொரோனா வந்திந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால், இதுதான் முதல் முறை. அதனால், இதனுடைய பிரச்சனையும் உங்களுக்கு அவ்வளவாக புரியமாட்டிங்கு.
ஆகையால், எல்லோருமே வீட்டிலேயே இருங்கள், உங்களது குடும்பத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் நாட்டையும் காப்பாற்றுங்கள், ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார்.