100 ஏழை குடும்பங்களுக்கு உதவிய கேப்டன் தோனி, நாடே 21 நாள் ஊரடங்கில் உள்ள நிலையில் தினக்கூலியாக வறுமையில் இருப்போருக்கு அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவினார் தோனி.
புனே பகுதியில் தினக்கூலியாக இருக்கும் 100 ஏழைக்குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, எண்ணெய் மற்றும் பிற பொருட்கள் வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
இதை தோனி கேட்டோ என்னும் இணையத்தின் மூலம் புனேவில் இருக்கும் முகுல் மாதவ் அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இது மிகப்பெரிய தொகையாக இல்ல்லாவிட்டாலும் வறுமையில் உணவு அத்தியாவசிய பொருளின்றி தவிப்போருக்கு உதவியாக அமையும்.
டோனி மட்டுமின்றி பிற பிரபலங்களும் வறுமையில் வாடுவோருக்கு முடிந்த உதவி செய்து வருகின்றனர். இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் 4000 மாஸ்க் தானம் செய்துள்ளார்.
மேலும் இந்த 21 நாளில் அரசாங்கமும் வருமானம் இன்றி தவிப்போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துகொண்டு தான் இருக்கிறது.
கலைஞர் சதீஷ் குர்ஜால் தனது 94 வயதில் இயற்கை எய்தினார், ஓவிய சிற்ப சுவர் சித்திர கட்டிட கலைஞர் சதிஷ் குர்ஜால்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான பத்ம விபூஷண் விருது பெற்ற கலைஞர் குர்ஜால் 94 வயதில் நேற்று மாலை காலமானார்.
சதீஷ் குர்ஜால் பல்வேறு கலைகளில் வல்லுநராக இருந்தவர். அவை சுவர் சித்திரம், ஓவியம், கட்டிட கலைஞர், சிற்பி மற்றும் கவிதை காதலன்.
அவருக்கு கலைகளின் மீது ஈர்ப்பு வந்ததற்கு பாய்ஸ் அஹமது பாய்ஸ் மற்றும் கலிப் ஆகிய இருவரின் கவிதை படைப்புகளே காரணமாம்.
1925ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் பிறந்தார். அவர் பிறந்த காலங்களில் நம் சுதந்திர போராட்ட காலங்களில் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
பிறகு சிம்லாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் அவருக்கு ஓவியத்தின் மீது காதல் வந்தது. மனிதனுக்கு மனிதன் மீது இருக்கும் வெறுப்பை ஓவியமாக வரைந்தார்.
1950ஆம் ஆண்டுகளில் மெக்சிகன் சுவர் ஓவியரான டேவிட் சிகுரோஸ் மற்றும் டியாகோ ரிவேரா ஆகிய இருவரிடம் உதவியாக பணி புரிந்தது இவருக்கு கலை கற்க ஏதுவாக அமைந்தது.
கலைரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற சதீஷ் குர்ஜால் இயற்கை ஒரு சகாப்தத்தை விட்டு சென்றுள்ளார்.
ஸ்கின் டாக்டர் மற்றும் நடிகருமான சேதுராமன் நேற்று இரவு திடீரென இறந்து விட்டதாக தகவல் வெளியாகியவுடன் இது கொரோனா வைரஸ் காரணமோ என அதிர்ச்சியடைந்தனர்.
ஸ்கின் டாக்டர் சேதுராமன் திரையுலக பிரபலங்களுக்கு தோல் சிகிச்சை அளிப்பவர். இதன் மூலம் திரையுலகினர் இவருக்கு அறிமுகமானார்கள்.
சந்தனத்துடன் நெருக்கம் ஏற்பட்டது. இதன்மூலம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 ஆகிய படங்களில் நடித்தார்.
நேற்று இரவு சென்னையில் உள்ள வீட்டில் அவர் திடிரென நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நூரையீரல், இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது.
உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு ஸ்டோக் ஏற்பட்டது தெரியவந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணிக்கு அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 37 தான் ஆகிறது. 2016-ல் உமையாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஒரு மகள் இருக்கிறார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கொரோனா வைரஸ் குறித்து ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்து வந்தார். மிகவும் துடிப்புடன் காணப்பட்டார்.
வயது 37, உடல் வாகு மிகவும் ஒல்லி, இவருக்கு எப்படி ஹார்ட் அட்டாக் வந்தது என செய்தியைக் கேட்ட அனைவருமே அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் வந்தால் நான் ஒன்று இறந்துவிடமாட்டேன் என அவர் கொடுத்த பேட்டியில் கூறிவிட்டு இப்போது ஹார்ட் அட்டாக்கில் இறந்தது சற்று அதிர்ச்சியைத்தான் கொடுக்கிறது.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் இறந்துள்ளதால் அவருக்கு நேரில் சென்றுகூட அஞ்சலி செலுத்த முடியாமல் பிரபலங்கள் ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்று உணர்ச்சி வசபடுதலை தவிர்க்கவும். தொழில் முன்னேற்றம் இருக்காது. குடும்பத்தில் குழப்பமான சூழல் நிலவும். பண வரவு பெரிதாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
இன்று சூழ்நிலை சரியாக இருக்காது. மிதமான ஆதாயம் காணப்படும். குடும்பத்தில் அனுசரணை தேவையாகும். பணவரவு சுமாராக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வீட்டில் இன்பமான சூழல் நிலவும். லாபகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தர்கள் ஊக்கத்துடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே புரிதல் மேம்படும். தன லாபம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று சுமாரான நாளாக இருக்கும். வேலையில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். லாபகரமான நாளாக இருக்கும். மன அழுத்தம் வர வாய்ப்புண்டு.
இன்று அன்றாட பணிகளை செய்யவே சிரமமாக இருக்கும். பணியிடத்தில் பணிசுமை அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. வீட்டில் சூழ்நிலை மோசமாக இருக்கும். தன வரவு நன்றாக இருக்காது. தலை வலி பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.
இன்று சந்தோஷமாக இருப்பீர்கள். பணிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப சூழல் சிறப்பாக காணப்படும். கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று இலக்கை அடைவதில் கடினமான சூழல் நிலவும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். நிதிநிலை மோசமாக இருக்கும். சளி பிரச்சினை வர வாய்ப்புண்டு.
இன்றைய நாள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இல்லை. தியானம் செய்து அமைதி பெறவும். துணையிடம் பேச்சில் கவனமாக இருக்கவும். பொருளாதார பிரச்சனைகள் இருக்கும். தோல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இன்று அனைத்து முயற்சிகளும் வெற்றியாக முடியும். தொழிலில் லாபம் மேம்படும். வீட்டில் அன்பும் அரவணைப்பும் காணப்படும். சுப காரியங்கள் துவங்கலாம். ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இன்று நிறைய சவால்கள் காத்திருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். துணையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். வரவிற்கு வாய்ப்புகள் குறைவு. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.
Master Team Video Call; சமூக இடைவெளியில் வீடியோ கால்: விஜய், அனிருத், மாளவிகா மோகனன்! கொரோனா வைரஸ் தடுக்க 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படக்குழுவினர் சமூக இடைவெளியை கடைபிடித்து வருவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படக்குழு சமூக இடைவெளியை கடைபிடித்து வருகிறது என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மட்டும் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. எனினும், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், விஜய் உள்பட மாஸ்டர் படக்குழுவினர் சமூக இடை வெளியை கடைபிடித்து வருவதாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது டுவிட்டரில் மாஸ்டர் படத்தில் வரும் ப்ராப்லம்ஸ் வில் கம் அண்ட் ஹோ பாடலை பாதிவிட்டுள்ளார். இது குறித்து அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பிரச்சனை வரும் போகும்…கொஞ்சம் ரிலாக்ஷா இருங்க…எங்களால் வெளியில் போகமுடியவில்லையோ அப்போது நாங்கள் இப்படி சமூக இடைவெளியில் மாஸ்டர் குழு…நீங்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாஸ்டர் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையில் 439 , சேலத்தில் 199 , திருப்பூரில் 172 , மதுரையில் 160 பேரும் கண்காணிப்பில் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேர், ஈரோட்டில் 3, சேலத்தில் 5, திருப்பூர், மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26ஐ தாண்டியது. மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருப்போரை தனிமைப்படுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலோனோர் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து வந்தோர்.
Prakash Raj; பிறந்தநாள் அதுமா இப்படி செஞ்சிட்டாரே: பாராட்டப்படும் பிரகாஷ் ராஜ்! தனது பிறந்தநாளான இன்று நடிகர் பிரகாஷ் ராஜ் கொரோனா வைரஸ் காரணமாக பரிதவித்த 11 பேருக்கு தனது தோட்டத்தில் அவர்களுக்கு தங்கும் வசதியை அமைத்துக் கொடுத்துள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். கடந்த 1955 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாய்மொழி கன்னடம். ஆனால், பிரகாஷ் ராஜின் அப்பா துலுவா பேசக்கூடியவர். (துலு நாடு) பிரகாஷ் ராஜ் முதலில் லலிதா குமாரியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மேக்னா மற்றும் பூஜா என்று இரு மகள்களும், சிது என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் போனி வெர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
கில்லியில் முத்துப்பாண்டியாக மதுரை கோட்டையை பிடித்தார். அந்நியன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், போக்கிரி, வில்லு, வானவில், ஆசை, கல்கி என்று பல படங்களில் தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.
தான் ஒரு வில்லன் என்பதையும் தாண்டி, சிறந்த குணச்சித்திர நடிகர், ஹீரோ என்று தன்னை நிரூபித்துக் காண்டியுள்ளார். இவ்வளவு ஏன், 2000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, சமூக அக்கறை கொண்டவர் என்பதையும் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.
ஆம், கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், FEFSI சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், 25 கிலோ என்ற வகையில் 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், இன்று தனது 55 ஆவது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். அதோடு, தனது பிறந்தநாளை பயனுள்ளதாக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளார்.
அந்த வகையில், கொரோனா வைரஸ் காரணமாக தங்குவதற்கு வீடுகள் இன்றி தவித்த 11 பேருக்கு தங்கும் வசதி அமைத்துக் கொடுத்துள்ளார்.
பாண்டிச்சேரியில் உள்ள தனது தோட்டத்தில் 11 பேருக்கு தங்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
வீட்டை விட்டு யாரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தும் நிலையில், வீடுகள் இல்லாதவர்கள் எப்படி வீட்டுக்குள் இருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 11 பேருக்கு தங்குவதற்கு வசதியும் அமைத்துக் கொடுத்து அவர்களை வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்த செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதோடு, இது போன்ற கஷ்ட காலங்களில், அரசு எல்லா விஷயத்தையும் செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
மாறாக, உங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை பிறருக்கு செய்து உதவி செய்ய வேண்டும்.
இது அனைவரது கடமை என்றும், ஒவ்வொரு பிரபலங்களும், பணம் படைத்த நல்ல உள்ளங்களும் இது போன்று வீடு இல்லாதவர்களுக்கு உதவி செய்யலாமே என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Redmi K30Pro : அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சியோமி துணை பிராண்ட் ரெட்மியின் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் மிகவும் பிரீமியம் Specification உடன் வருகிறது.
இது Qualcomm ஸ்னாப்டிராகன் 865 உடன் வருகிறது, LPDDR 5 RAM மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் Support கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த நிறுவனம் ரெட்மி K30 ப்ரோ ஜூம் பதிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
டீசரை வெளியிடுவதன் மூலம் நிறுவனம் ஏற்கனவே கூறியது போல, இரண்டு தொலைபேசிகளும் QUAD REAR கேமரா அமைப்போடு வருகின்றன. இவை வட்ட கேமரா வகையில் இடம் பெற்றுள்ளன. இது தவிர, அவற்றில் பாப்-அப் செல்பி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. 64MP முதன்மை கேமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
ரெட்மி கே 30 ப்ரோ விலை
Redmi k30 pro வின் விலை CNY 2,999 (சுமார் ரூ .32,500) இல் தொடங்குகிறது. இந்த விலை 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வகைகளில் உள்ளது. தொலைபேசியின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் 3,399 சீன யுவானுக்கு (சுமார் ரூ. 36,000) விற்கப்படும். இந்த போன் பிரீமியம் 8 ஜிபி + 256 ஜிபி ல் விலை CNY 3,699 (சுமார் ரூ .40,000) ஆகும்.
ரெட்மி கே 30 ப்ரோ Specification
ஆண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 11 இல் டூயல் சிம் (நானோ) ரெட்மி கே 30 ப்ரோ மற்றும் ரெட்மி கே 30 ப்ரோ ஜூம் பதிப்பு இயங்குகின்றன. இவை 6.67 அங்குல முழு எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) எச்டிஆர் + அமோலேட் டிஸ்ப்ளே கொண்டவை. இரண்டு தொலைபேசிகளிலும் எல்பிடிடிஆர் 5 ரேம் 8 ஜிபி வரை ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி உள்ளது. இருப்பினும் ரெட்மி கே 30 ப்ரோவின் 6 ஜிபி + 128 ஜிபி வகைகளில் எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.0 சேமிப்பு உள்ளது.
Redmi k30 pro நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. முதன்மை கேமரா 64 மெகாபிக்சல்கள். சோனி IMX686 சென்சார் இங்கே பயன்படுத்தப்படுகிறது. இது 13 மெகாபிக்சல் அகல-கோண கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் கொண்டுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனை டாக்டருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது. அவரிடம் 800 பேர் வைத்தியம் பார்த்துள்ளனர்.
ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்க வேண்டும் என ஆம் ஆத்மி அரசு வடகிழக்கு டெல்லியில் மஜ்பூர் பகுதியில் மொஹெல்லா கிளினிக் நிறுவப்பட்டது.
இங்கு கடந்த 12 தேதி சவூதி அரேபியாவில் இருந்து வந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது தெரியாமல் அங்கு இருந்த டாக்டர் வைத்தியம் பார்த்துள்ளார்.
இதன் காரணமாக டாக்டருக்கும் பரவி உள்ளது. இதை அறியாத டாக்டர் மார்ச் 12 முதல் 18 வரை கிட்டத்தட்ட 800 பேருக்கும் மேல் வைத்தியம் பார்த்து உள்ளார்.
அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் அவரிடம் பரிசோதனைக்கு வந்த 800 பேரையும் அரசு கண்டறிந்து அவரவர் வீட்டிலேயே தனிமை படுத்தி வைத்து உள்ளனர்.
1000 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முடிவு செய்த மாநிலம் எது தெரியுமா? கொரோனா சிறப்பு மருத்துவமனை.
கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து ஒட்டு மொத்த உலகமுமே பயந்து கொண்டு இருக்கிறது. சீனாவில் தொடங்கிய இது இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டை மோசமாக பாதித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு வழிமுறைகள் செய்தாலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. ஒடிசா மாநில அரசு 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்ட முடிவு செய்துள்ளது.
இதையே தான் கடந்த மாதம் சீனா 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வெறும் பத்தே நாளில் கட்டி முடித்தது.
ஒடிசா மாநிலம் எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க தக்கது. இந்தியாவில் இதுவரை 650க்கும் மேற்பட்டோர் பாதிக்க்கப்பட்டுள்ளனர் 13 உயிர்பலி ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.