Home Blog Page 194

வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய்: வைரலாகும் வீடியோ!

0
Arun Vijay Parkour Stunts

Arun Vijay; வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் அருண் விஜய்: வைரலாகும் வீடியோ! அருண் விஜய் வீட்டிலேயே ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் படங்களின் கதைகளுக்கு ஏற்ப உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களும் இருக்கிறார்கள். விக்ரம், அருண் விஜய், சரத்குமார், அஜித், பரத், ஆர்யா என்று நடிகர்களின் பட்டியலை சொல்லிக் கொண்டே போகலாம்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனால், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாதாரண பொதுமக்கள் என்று அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும், சிலர் கடினமான உடற்பயிற்சி என்று தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் அருண் விஜய் ஜிம்மிற்கு செல்ல முடியாமல் வீட்டையே ஜிம்மாக மாற்றி தினமும் ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

அதுமட்டுமன்றி ஸ்டண்ட் பயிற்சியையும் செய்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டிலேயே பார்க்கர் ஸ்டண்ட் செய்கிறேன். வீட்டிலேயே சில உடல் செயல்பாடுகளை செய்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 21 நாட்களுக்கு தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஃபியா சேப்டர் 1. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மாஃபியா 2 படமும் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அக்னி சிறகுகள், பாக்ஸர், இனம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

3

கால்பந்தாட்ட ராஜா பீலே புகழும் வீரர் யாரென்று தெரியுமா?

0
கால்பந்தாட்ட ராஜா பீலே
கால்பந்தாட்ட ராஜா பீலே

கால்பந்தாட்ட ராஜா பீலே புகழும் வீரர் யாரென்று தெரியுமா? உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர் யார்? யார் சிறந்த வீரர் மெஸ்சி அல்லது ரொனால்டோ?

கால்பந்தாட்டத்தின் ராஜா என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டை சேர்ந்த பீலே சமீபத்தில் போர்ச்சுகள் நாட்டைச் சேர்ந்த ரொனால்டோ தன உலகத்தின் சிறந்த வீரர் என குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் நாம் மெஸ்சியை மறந்து விடக்கூடாது. இந்த ஜெனெரேஷனில் ரொனால்டோ தன தலைசிறந்த வீரர் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

மேலும் கடந்த 10 வருடத்தில் தன்னுடைய கன்சிஸ்டென்சி மாறாமல் ரொனால்டோ விளையாடி வருகிறார். ரொனால்டோ தற்போது ஜுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் அதிகமாக சம்பாரிக்கும் விளையாட்டு வீரர்களில் இவர்தான் முதலிடம். மேலும் ரியல் மாட்ரிட் அணிக்காக நிறைய போட்டிகள் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

79 வயதான பிரேசிலின் பீலே உலக கால்பந்தாட்டத்தில் ஒரு சாகாப்தம் என கூறலாம். மூன்று உலக கோப்பை வென்ற முதல் வீரர் இவர்தான். மேலும் சர்வதேச கால்பந்தில் 1000 கோல் அடித்த ஒரே வீரர் இவர்தான்.

3

மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் ஆண்ட்ரியா?

0
Andrea Jeremiah

Andrea Jeremiah; மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் ஆண்ட்ரியா? வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

எனினும், சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக வலம் வந்தார்.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, வலியவன் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் அமீருக்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சமுத்திரக்கனியை திருமணம் செய்தார்.

இப்படத்திற்கு ஆண்ட்ரியாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், வெற்றி மாறன் – தனுஷ் காம்பினேஷனில் அண்மையில் திரைக்கு வந்த படம் அசுரன். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல மொழிகளில் அசுரன் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இவர், சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இயக்குநரைத் தொடர்ந்து படம் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் வெற்றி மாறன். இவரது தயாரிப்பில், உதயம் என்ஹெச்4 (Udhayam NH4), பொறியாளன் (Poriyalan), காக்கா முட்டை (Kaakka Muttai), கொடி (Kodi), அண்ணனுக்கு ஜே(Annanukku Jai) ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் மிக மிக அவசரம். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்திற்குப் பிறகு தற்போது கிராஸ் ரூட் புரோடக்‌ஷன் பேனரின் சார்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில், ஆண்ட்ரியா முன்னணி ரோலில் நடிக்கிறார். இவருடன் இணைந்து விஜி சந்திரசேகர் நடிக்கிறார்.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக இப்படத்தின் ரிலீஸில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

3

லாக்டவுன்21: போலீசை லபக் எனக் கடித்து துப்பிய பெண்! – ரத்தம் தெறித்தது

0

லாக்டவுன்21: lockdown காரணம் இல்லாமல் வெளியில் வந்த பெண்ணை கண்டித்த போலீசை காட்டுமிராண்டி தனமாக கடித்த பெண். ரத்தத்தை உறிஞ்சி துப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் lockdown 21 நாட்கள் வீட்டைவிட்டு வெளியில் வரத் தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநில எல்லைகள் மாவட்ட எல்லைகள் எல்லாம் அடைக்கப்பட்டு உள்ளன.

இதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப மக்கள் உணவு தட்டுபாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையிலும் ஒரு சில அரைவேக்காடுகள் ஊர் சுற்றுவதிலும், ஜோடியாக வலம் வருவதிலும் குறிக்கோளாக உள்ளனர்.

இதனை கண்டிக்கும் காவலர்களைத் தாக்கவும் செய்கின்றனர். கொல்கத்தாவில் காவலர் ஒருவரை தாக்கிய பெண்ணின் வீடியோ இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காவலரை கடித்த பெண்

பேலிகுஞ்ஜேவிலிருந்து நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆண் நண்பர் ஒருவருடன்  சால்ட் லேக் பகுதிக்கு பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அவரை தடுத்த காவலர்கள் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்து உள்ளது. அதற்கு அந்த பெண் மருந்து வாங்கச் செல்கிறேன் எனக் கூறியுள்ளார்.

உடனே காவலர் மருந்து சீட்டை காட்ட வலியுறுத்தி உள்ளார். ஆனால் அப்பெண் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

உடனே அப்பெண் காரைவிட்டு இறங்கி அந்த போலீசாரை லபக் என விழுந்து கடித்துள்ளார். மேலும் அப்பெண் அவரின் கையில் ஏற்கனவே இருந்த காயத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி போலீசார் சட்டையில் துப்பி உள்ளார்.

தன்னை அடித்து துன்புறுத்தியதாக வழக்கு தொடர்வேன் என போலீசாரையும் மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் சில அரைவேக்காடுகள் எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

கனிகா கபூர் போன்ற சில அரைவேக்காடுகள் தங்களுக்கு கொரோனா இல்லை என நினைத்துக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளாமல் இந்தியா முழுவதும் பரப்பிவிட்டு உள்ளனர்.

இவர்களை போன்றவர்களால் தான் இந்தியா இந்த அளவு மோசமான நிலைக்கு சென்று உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கூட சில நகரங்களில் மட்டுமே கொரோனா பரவியது. ஆனால் இங்கு இந்தியா முழுவதும் கொரோனா பரவி உள்ளது. இது எந்த அளவிற்கு இந்தியர்கள் சுயநலமாக இருக்கின்றனர் என்பதற்கான உதாரணம்.

3

டிரம்பை முறைத்து, ஐ.நா.வை அதிரவைத்த கிரேட்டா துன்பெர்க் கொரோனாவால் பாதிப்பு

0
கிரேட்டா துன்பெர்க்
கிரேட்டா துன்பெர்க்கு கொரோனா

கிரேட்டா துன்பெர்க் கொரோனாவால் பாதிப்பு. Environmental Activist Greta Thunberg Corona Symptoms. சமூக ஆர்வலர் கிரேட்டாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

யார் இந்த கிரேட்டா துன்பெர்க்?

ஐ.நா. மாநாட்டின் போது, இந்த உலகம் வெம்மாகிக்கொண்டு செல்கிறது. ஆனால் இங்கு இருப்பவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகின்றீர்கள்.

இந்த வார்த்தை சொன்ன பிறகு அவர் நேராக டிரம்பை நோக்கி கோரமாக பார்த்தார். ஐ.நா. சபையே சற்று அதிரத்தான் செய்தது.

கொரோனா பாதிப்பு

அண்மையில் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் உடலில் முன்னேற்றம் இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய காலநிலை பற்றிய பேச்சில் உலகம் முழுவதும் பிரபலமான 17 வயதான இவர் சமீபத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த பயணத்திற்கு பிறகு சொந்த நாடு திரும்பியதும் தன்னுடைய உடல் மிகவும் பலவீனமாக உணர்ந்துள்ளார். ஜலதோஷம், இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருப்பதாக உணர்ந்தார்.

இதனால் தன்னை தானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். மேலும் தான் கோவிட் 19 தொடர்பான எந்த வித டெஸ்ட் எடுக்கவில்லையாம். ஆனால் இது கொரோனா தொற்றாக இருக்க வாய்ப்பு அதிகம்.

கொரோனா பாதிப்படையாமல் இருக்க அனைவரையும் பாதுகாப்பாக இருக்க கூறி பதிவிட்டுள்ளார்.

 

3

26/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

26/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். பணியில் சிரமங்கள் வரலாம். வீட்டு நலனில் அக்கறை தேவை. பணவரவு குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் கட்டாயம் கவனம் தேவை.

ரிஷப ராசிபலன்

இன்று சிறந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் இன்பமான சூழல் நிலவும். லாபம் பெருகி காணப்படும். உடல் நலத்தில் எந்த குறையும் இருக்காது. மொத்ததில் பொன்னான நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்று உங்களுக்க வெற்றிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவியிடையே காதல் பெருகும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

கடக ராசிபலன்

இன்று மந்தமான நாளாக இருக்கும் . வேலை பலு அதிகமாக இருக்கும். வீட்டில் உணர்ச்சி வச படுதலை தவிர்க்கவும். நிதி நிலை மோசமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்ம ராசிபலன்

இன்று கூடுதல் பொறுப்பு காணப்படும். உங்களின் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்காது. குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்காது. சளி இருமல் தொல்லைகள் வரலாம்.

கன்னி ராசிபலன் 

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் நட்புறவு மேம்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். தன லாபம் அதிகரிக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்று உங்களின் நம்பிக்கை சிறந்த அனுகூலத்தை தரும். சிறப்பாக பணியாற்றுவீர்கள். தந்தை மகன் உறவு மேம்படும். நல்ல ஆதரவாக இருப்பீர்கள். பணம் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று பாதகமான செயல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வீட்டிலும் வெளியிலும் அமைதியாக இருக்கவும். பணவரவு போதுமான அளவு இருக்காது. தோள் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

தனுசு ராசிபலன்

இன்று பதட்டமான சூழல் நிலவும். பணியில் தேவையற்ற தவறுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே புரிதல் இருக்காது. அதிக செலவுகள் ஏற்படலாம். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

மகர ராசிபலன் 

இன்று அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நீங்கள் சாதகமான மாற்றி கொள்ள வேண்டும். பணியில் நன்மதிப்பு பெருகும். காதல் வசப்படும் நாளாக இருக்கும். பொருளாதார பிரச்சனை தீரும். நிதி வளர்ச்சி சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று அனுசரணை தேவையான நாளாக இருக்கும். பணி சுமையால் சோர்வுடன் இருப்பீர்கள். கணவன் மனைவியிடையே வாக்கு வாதம் ஏற்படலாம். வரவும் செலவும் சமமாக இருக்கும். பல் வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

மீன ராசிபலன்

இன்று புத்திசாலித்தனமான செயல்கள் செய்வீர்கள். பாராட்டுகள் தானாக வந்து சேரும். குடும்ப பிரச்சனைகள் தீரும். தன வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நலமுடன் இருக்கும்.

26/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெறவும். இவை அனைத்தும் இன்றைய கிரக நிலையின் பொதுபலன்கள் ஆகும்.

அனைவரும் அரசாங்க ஊரடங்கு உத்தரவை மீறாமல் வீட்டிலேயே இருந்து நமது நலனை பாதுகாத்து கொள்ளுமாறு மிஸ்டர் புயல் இணையம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

3

பேட்ட நடிகருக்கு கல்யாணமாம்: சிம்பிளாக நடக்குதாம்!

0
Petta Actor Manikandan Achari Wedding

Petta Actor Manikandan Achari Marriage: பேட்ட நடிகருக்கு கல்யாணமாம்: சிம்பிளாக நடக்குதாம்! ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நடித்த மணிகண்டன் ஆச்சாரிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் பாபி சிம்ஹாவின் கூட்டாளியாக நடித்திருப்பவர் நடிகர் மணிகண்டன் ஆச்சாரி. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

மணிகண்டன் ஆச்சாரிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கான அழைப்பிதழுடன் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். மேலும், அவரை திருமணத்திற்கு அழைத்துள்ளார்.

கொரோனா காரணமாக தனது திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுத்து வருகிறார்.

மணிகண்டன் ஆச்சாரி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனது திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டால் போதும் என்ற எனது முடிவுக்கு வருங்கால மனைவி அஞ்சலியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னதாகவே திருமணம் நிர்ணயிக்கப்பட்டதால், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் அழைக்கப்பட்டனர். ஆனால், இப்போது சூழ்நிலை மாறிவிட்டது.

இதன் காரணமாக, ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக பிரமாண்டமாக நடத்த இருந்த எனது திருமணத்தை அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மிகவும் எளிமையான முறையில் நடத்த நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள துறமுகம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடக்க இருக்கிறது.

மேலும், விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் உருவாகி வரும் மாமனிதன் படத்திலும் மணிகண்டன் ஆச்சாரி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

குந்தாணி சோறு நீயா போடுவ? மஞ்சிமா மோகனை திட்டித் தீர்த்த ரசிகர்!

0
Manjima Mohan Twitter

குந்தாணி சோறு நீயா போடுவ? மஞ்சிமா மோகனை திட்டித் தீர்த்த ரசிகர்! ஊரடங்கு உத்தரவு குறித்து தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்ட மஞ்சிமா மோகனை ரசிகர் ஒருவர் குந்தாணி சோறு நீயா போடுவ என்று திட்டித் தீர்த்து டுவிட் பதிவிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் ஊரடங்கு உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த நடிகை மஞ்சிமா மோகனை ரசிகர் ஒருவர் அவரது உடல் தோற்றத்தை வைத்து விமர்சித்த பதிவிட்டுள்ளார்.

அச்சம் என்பது மடைமையடா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வந்த தேவராட்டம் படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது, விஷ்ணு விஷாலின் FIR என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் மட்டும் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

மேலும், 562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில், மக்களுக்கு வீட்டில் இருப்பது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு ரசிகர் ஒருவர் குந்தாணி நீயா சோறு போடுவ என்று நக்கலாக கேட்டிருந்தார். அந்த ரசிகருக்கு தனது மற்றொரு டுவிட்டரில், இப்படிப்பட்டவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

வழக்கமாக இது போன்ற டுவீட்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆனால், மக்களை வீட்டில் இருக்க சொன்னதற்கு எனக்கு கிடைத்தது இதுதான்.

வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது யாருக்கும் எளிதானது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. எங்களுக்கு மட்டும் பணம் வானத்தில் இருந்து கொட்டுவதில்லை என்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில், கோடி, லட்சம் என்று பணம் வைத்திருப்பவர்கள் 21 நாட்கள் மட்டுமல்ல, 210, 2100, 21000 என்று எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டிற்குள் இருக்கலாம்.

ஆனால், அப்பாவி மக்கள், அன்றாடம் கஞ்சி குடிக்கும் ஏழை மக்களின் நிலை? தினந்தோறும் வேலைக்குச் சென்றால் தான் அவர்களின் ஒருநாள் குடும்பம் நடக்கும்.

இப்பொழுது வீட்டிற்குள்ளாக இருக்க வேண்டிய நிலை? யாருக்கு தெரியும் அவர்கள் மூன்று வேலையும் கஞ்சி குடிக்கிறார்கள் என்று?

3

என்ன அது கருமம்: கணவரின் போட்டோ போட்ட சமந்தாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

0
Samantha Share her Husband Picture

Samantha; என்ன அது கருமம்: கணவரின் போட்டோ போட்ட சமந்தாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்! கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட நடிகை சமந்தாவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைக் கடந்து தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ்க்கு இந்தியாவில் மட்டும் 12க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், 562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

Naga Chaitanya Pet Animals

அந்த வகையில், தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் நாகசைதன்யா செல்லப்பிராணியுடன் தூங்க்கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ஆனால், என்ன அவர் பின்புறம் இருப்பது போன்ற அந்த புகைப்படம் என்பதால் நெட்டிசன்கள் பலரும் சமந்தாவை விமர்சித்து வருகின்றனர்.

என்னய்ய அது கருமம். என்னம்மா இது… இரண்டு பேருமே ஒரே மாதிரியாக போஸ் கொடுத்துருக்காங்க…வெரேட்டி… என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

3

Corona: வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய ரோஜா!

0
MLA Roja Help Pregnant Woman

MLA Roja Help Pregnant Woman; வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு உதவிய ரோஜா!தனது காரை கொடுத்து கர்ப்பிணி பெண்ணின் பிரசவத்திற்கு நடிகை ரோஜா உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. மறைந்த தமிழக முதல்வரை தனது ரோல் மாடலாக கொண்டவர்.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவரது தொகுதியில் 4 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் உணவகத்தையும் திறந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து நகரி தொகுதியில் ரோகா ஆற்றி வரும் பங்களிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடி வந்து ரோஜா உதவியும் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியில் இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் 12க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தனது நகரி தொகுதியில் மருத்துவ முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு பிரசவத்திற்கு உரிய போதுமான வசதி இல்லை.

இதன் காரணமாக மேல் சிகிச்சைக்காக திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், ஆம்புலன்ஸ் வசதி இல்லை. வேறொரு ஆம்புலன்ஸ் வரும் வழியிலேயே கோளாறு காரணமாக நின்றுவிட்டது.

இதையெல்லாம் அறிந்த ரோஜா சற்றும் யோசிக்காமல், தனது சொந்த காரை கொடுத்து, கர்ப்பிணி பெண்ணை அதில் ஏற்றிக்கொண்டு திருப்பதி மகளிர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார்.

ரோஜாவின் இந்த செயலைக் கண்டு கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினர் இரு கரம் கூப்பி வணங்கியுள்ளனர்.

மேலும், மருத்துவ நிர்வாகமும் ரோஜாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3