Home Blog Page 196

ஐபிஎல் வருகிற ஏப்ரல் 15-ஆம் தேதி ஒத்திவைப்பு

0

கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல்தான் ஐபிஎல் போட்டி பற்றியே யோசிக்க முடியும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த உலகமே கொரோனா வைரஸ் காரணமாக பயந்து அஞ்சு வருகிறார்கள்.

பல நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள். இந்திய அரசு 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது. மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு சமூக விலகலை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகிற 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டியில் கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளது என தெரிவித்தார்கள்.

ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருவதால் தற்போது ஐபிஎல் போட்டியில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறுமா என்பது கேள்விக்கு உள்ளாகியுள்ளது.

மத்திய அரசு மற்றும் பிசிசிஐக்கு இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முன்னதாக “ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து நடத்த வாய்ப்புகள் இருப்பதாக” கூறியிருந்தார்.

மேலும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என தகவலும் வெளியாகின.

தற்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரன் ரஜு ஐபிஎல் குறித்து பேசுகையில் :

“தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல் நிலைமைக்கேற்ப புதிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டுவரும்.

பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை ஒலிம்பிக் போட்டிகளைப் போல் பார்க்கின்றன. ஆனால் தற்போது நாம் விளையாட்டை மட்டும் பார்க்கவில்லை ஒவ்வொரு குடிமகன்களின் பாதுகாப்பையும் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்

என்று கூறியுள்ளார்

கொரோனா வைரஸ் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க உள்ளது.

அதன் பிறகு கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு இந்தியா திரும்பினால் தான் ஐபிஎல் குறித்து யோசிக்க முடியும் என பல விமர்சகர்கள் கூறிவருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் முக்கியமே வெளிநாட்டு வீரர்கள் தான். ஆகையால் ஐபிஎல் நடக்கும் தேதி குறிப்பிடுவதில் வெளிநாட்டு வீரர்களும் வருகை தரவேண்டும்.

அவர்களின் பாதுகாப்பு மிகவும் அவசியம்.
உலகெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து, சகஜமான நிலைக்கு திரும்பிய பிறகுதான் ஐபிஎல் நடக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

3

நீர்க்குமிழி, தீ பிழம்புகளோடு வெளியான ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டர்!

1

RRR Telugu Motion Poster; நீர்க்குமிழி, தீ பிழம்புகளோடு வெளியான ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டர்! இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் டிசைன் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

RRR Motion Poster

உலக முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஆர்.ஆர்.ஆர். படத்தின் டிசைன் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் ஒருபுறம் ஜூனியர் என்டிஆர் நீருக்கு அடியில் இருந்து ஓடி வருவது போன்றும், மறுபுறம் ராம் சரண் நெருப்பு பிழம்போடு ஓடி வருவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

நடுவில், இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது போன்று படத்தின் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.

டைட்டிலில் உள்ள ஒவ்வொரு RRR ஆரிலும், ராம் சரண் முகம் Left R, ஜூனியர் என்டிஆர் முகம் Right R மற்றும் இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது Middle R போன்று காட்டப்பட்டுள்ளது.

அதோடு, டைட்டில் போஸ்டரில் இரத்தம் (Left R), ரணம் (Middle R), ரௌத்திரம் (Right R) என்றும், இந்தியா 1920 (India 1920) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோஷன் போஸ்டரில் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

டைட்டில் லோகோவுடன் கூடிய ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RRR Title Design Motion Poster

 

3

டிஜிட்டலில் நரகாசூரனா? கார்த்திக் நரேன் திடீர் முடிவு?

0
Naragasooran Digital Releaes

Naragasooran Digital Release; கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தனது நரகாசூரன் படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட இயக்குநர் கார்த்திக் நரேன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 2ஆவது படமான நரகாசூரன் படத்தை தொடங்குவதாக டுவிட்டரில் அறிவித்தார்.

இதையடுத்து, செப்டம்பர் 16 ஆம் தேதி புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டு 41 நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சுந்தீப் கிஷான், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நரகாசூரன் மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.

இப்படத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட கார்த்திக் நரேனின் மாஃபியா சேப்டர் 1 கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு.

மாஃபியா படத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, மாஃபியா படத்தின் 2 ஆம் பாகமும் உருவாக இருக்கிறது.

இந்த நிலையில், உலகமே அச்சத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், 30க்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு திரையரங்குகள் திறக்கப்படும்.

அப்போது எந்த படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் புதிய சிக்கல் ஏற்படும். ஏற்கனவே சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல காரணங்களால் தனது நரகாசூரன் படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆம், திரையரங்குகளில் வெளியிடுவதற்குப் பதிலாக, நேரடியாக OTT தளங்களில் வெளியிடலாமா? என்று கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.

கார்த்திக் நரேனின் கேள்விக்கு டிஜிட்டல் பிளாட்பார்ம் என்று 85 சதவிகிதம் பேர் Yes என்று பதிலளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கருத்தைக் கேட்டு கார்த்திக் நரேனு நரகாசூரன் படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

மக்கள் வங்கி கடன் EMI செலுத்த வேண்டுமா? ஆர்பிஐ ஆலோசனை

0

மக்கள் 21 நாள் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் வருகிற மாதம் வங்கியில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ செலுத்துவது பற்றி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது

கடந்த மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நூறு நாடுகளுக்கு மேல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலி லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.

இந்தியாவில் நேற்று மோடி 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதால் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். மக்களின் உயிரே நமக்கு முக்கியம் என 21 நாள் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்துள்ளார்.

இதனால் எந்த ஒரு அலுவலகமும் செயல்படவில்லை, குறுந்தொழில் மற்றும் பெரும் தொழில் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது

சம்பளம் பிடித்தம் இல்லாத விடுமுறையை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் சிறு வணிகம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

வங்கியில் வீட்டுக் கடன், கார் கடன், தொழில் கடன் போன்று வாங்கி உள்ளவர்கள் மாதாமாதம் இஎம்ஐ செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால் ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிலிருந்து ஆறு மாதங்கள் வரை இஎம்ஐ மக்களிடம் வசூலிக்க வேண்டாம் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இது ரிசர்வ் வங்கியின் கவனத்துக்குச் சென்றது. வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்கள் நேரலாம் இதை கருத்தில் கொண்டு சில சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் :

“வங்கியில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் ஆதலால் மக்களுக்கு இது சில சலுகைகள் தேவைப்படுகிறது.

ரிசர்வ் வங்கிகள் கருத்தில்கொண்டு சில முடிவுகள் எடுப்பது அவசியமாகிறது. இந்திய வங்கி கூட்டமைப்பும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளது.

ரிசர்வ் வங்கி இது குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பை வெளியிடும்” என கூறியுள்ளார்.

இதனால் வங்கியில் கடன் வாங்கியவர்கள் இஎம்ஐ கட்டுவதில் காலம் நீட்டிப்பு அல்லது வட்டி தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வருகிற மூன்று மாதங்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூல் செய்யப்படாது என்று கூறியிருந்தார்.

குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் வங்கியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என எஸ்பிஐ வங்கியும் விதிகளைத் தளர்த்தி உள்ளது.

குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள், சுயதொழில் செய்பவர்கள் கொரோனா வைரஸ் காரணமாக காரணமாக 21 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாதத்தவணை எப்படி கட்டுவது என அஞ்சு வருகிறார்கள். இவர்களின் கவலையைப் போக்க ரிசர்வ் வங்கி நல்ல சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு: சினிமா பிரபலங்கள் என்ன சொல்றாங்க?

0
Celebs Stay Home Video

Celebrities Stay Home Video; 21 நாட்களுக்கு ஊரங்கு உத்தரவு: சினிமா பிரபலங்கள் என்ன சொல்றாங்க? 21 நாட்களுக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கி 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா தாக்கதை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா தாக்கம் மேலும், ஏற்படாமல் தடுக்கும் வகையில், 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்தும், 21 நாட்கள் ஊரங்கு உத்தரவு குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கமல் ஹாசன், பார்த்திபன், சிவகார்த்திகேயன், வரலட்சுமி சரத்குமார், மாளவிகா மோகனன், சூர்யா என்று மாஸ் நடிகர், நடிகைகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

21 Days Of Lock Down

Corona Virus 21 Days Of Lock Down

Corona Virus

Malavika Mohanan Corona Virus

Harbhajan Singh Tweet

Kasthuri 21 Days Of lock Down

 

 

 

 

 

3

ரஷ்யாவில் நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு, சுனாமி வர வாய்ப்பு

0
ரஷ்யாவில் நிலநடுக்கம்
ரஷ்யாவில் நிலநடுக்கம்

ரஷ்யாவில் நிலநடுக்கம்; 7.8 ரிக்டர் பதிவு, சுனாமி வர வாய்ப்பு. 7.5 magnitude earthquake Russia‘s far eastern Kuril Islands and prompted tsunami warning. Croatia earthquake 

ரஷ்யாவில் கடலுக்கு அடியில் 35கி.மி ஆழத்தில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.8 பதிவாகியுள்ளதலால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வர வாய்ப்பு  இருப்பதாக தெரிகிறது. ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் சுனாமி வரும் என எச்சரித்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவின் ஹவாய் தீவுகளிலும் சுனாமி வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர். கொரோனா ஒரு பக்கம் உலகை அச்சுறுத்த மறுபக்கம் சுனாமி வந்து விடுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ், மறுபக்கம் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பீதி. 2020 அழிவை நோக்கி செல்கிறதா என மக்களிடம் அச்சம் ஏற்பட்டு வருகிறது.

3

அடுத்த 20 நாள்; ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவும் – பிரேமானந்த் எச்சரிக்கை

0

அடுத்த 20 நாள்; ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவும் – பிரேமானந்த் எச்சரிக்கை. கொரோனாவின் வளர்ச்சி விகிதம் இப்படியே என்றால் நிச்சயம் இந்தியா சுடுகாடாக மாறும்.

பிரபல தமிழ் எஜிகேசன் சேனல் எல்.எம்.இ.எஸ். கொரொனோ வளர்ச்சி பற்றிய கணித அடிப்படையில் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளது.

இதுவரை உலக நாடுகளில் கொரோனா எப்படி பரவியது. இந்தியாவில் எப்படி பரவி வருகிறது. அடுத்த 20 நாட்கள் கொரோனா எப்படி அசுர வளர்ச்சி அடையும்?

இப்படி பல குழப்பான கேள்விகளுக்கு LMES புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதனை நீங்களே பார்த்து தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

3

கொரோனா வைரஸ் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

0

கொரோனா வைரஸ் காரணமாக சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவை வெளிநாட்டிலிருந்து வந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

கடந்த மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 100 நாடுகளுக்கு மேல் பரவி பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் இறந்து வருகிறார்கள்.

பல நாட்டு அரசாங்கங்கள் இதை எப்படி கையாளுவது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகிறார்கள்.

இந்திய பிரதமர் மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு வீட்டில் உள்ளேயே 21 நாள் இருக்கும்படி சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இருந்தாலும் மக்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் சில இடங்களில் சுற்றி வருகிறார்கள்.

இதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை நன்றாகவே கையாண்டு வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மக்களுக்கு சேவை செய்வதிலும் மும்முரமாக இருந்து வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு வீட்டு கண்காணிப்பு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கட்டாயம் 14 நாட்கள் வீட்டினுள்ளேயே சுயகட்டுப்பாடு வேண்டும் என்று அறிவுறுத்த பட்டிருந்தார்கள்.

மீறுவோர் மீது கடும் நடவடிக்கை, பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்த 3 பேர் சென்னையில் வெளியில் சுற்றித் திரிந்து வந்துள்ளனர்.

இன்று கோயம்பேடு சேர்ந்த இருவரும், அண்ணாநகரை நகரை சேர்ந்த ஒருவரும் வெளியில் சுற்றி திரிந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்த உத்தரவை மீறியதால்
அவர்களை போலீசார் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளியில் சுற்றாமல் வீட்டிலேயே இருப்பார்கள்.

3

Corona Virus: விஜய் பட நடிகை மாளவிகா மோகனன் கொரோனா அறிவுரை!

0
Malavika Mohanan Stay Home

Malavika Mohanan; அப்பா, அம்மாவிற்காக நான் வீட்டில் இருக்கிறேன்: விஜய் பட நடிகை! தான் அம்மா, அப்பாவிற்காக மட்டும் வீட்டில் இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

உலகத்தையே ஆட்டி படைத்து வருவது கொரோனா வைரஸ். 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்களுக்கு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது அம்மா, அப்பாவிற்காக தான் வீட்டிலேயே இருக்கிறேன் என்று எழுதி புகைப்படம் ஒன்றை நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது பெற்றோர், சகோதரர், அன்புக்குரியவர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம்.

Malavika Mohanan Corona Virus

நாங்கள் பொறுப்பற்றவர்களாகவும், அலட்சியமாகவும் இருப்பது கொரோனா வைரஸ் தாக்கத்தை அதிகரிக்கும்.

வீட்டிற்குள் இருங்கள், குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள். உங்களது சிறிய செயலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி சுய விழிப்புணர்வுடன் இருங்கள் என்று குறிப்பிட்ட மாளவிகா மோகனன் நீங்கள் யாருக்காக வீட்டில் இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், மாஸ்டர் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் கடந்த 19 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் படத்திற்கு முன்னதாக மாளவிகா மோகனன் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனாவை வச்சு விஜய்யை குறி வைத்த மோடி? – காமெடிக்கு ஒரு அளவு இல்லையா?

0
Vijay Master Modi

Master Release; விஜய்யை குறி வைத்த மோடி? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா ரசிக குஞ்சுகளே? உங்க காமெடிக்கு ஒரு அளவு இல்லையா?

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. 100 நாடுகளுக்கும் மேலாக கொரோனா தாக்குதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி கொரோனாவுக்கு எதிராக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

அன்று ஒருநாள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து 23 ஆம் தேதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

எனினும், கொரோனா விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லாத நிலையில், அது குறித்து விபரீதத்தை யாரும் அறிந்திரா நிலையிலும், நாளுக்கு நாள் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என்றும் பலரும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து எச்சரித்து வந்தனர்.

144 தடை உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக மாநிலம் முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, சமூக விலகல்தான் ஒரே தீர்வு.

குழந்தைகள். வியாபாரிகள், பெரியவர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். மூடநம்பிக்கைகள், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனை மக்கள் தங்களது சுயகட்டுப்பாடுடன் எதிர்க்க வேண்டும்.

21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு

இல்லையென்றால் நாடு பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். இந்தியாவிலிருந்து கொரோனாவை விரட்டியடிக்கும் நோக்கில், இன்றிரவு (மார்ச் 24) 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும்.

நாட்டு மக்கள் தற்போது எங்கு இருக்கிறீர்களோ, அடுத்த 21 நாட்களுக்கு அங்கேயே இருங்கள் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு மனித உயிரும் முக்கியம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

கடைகள் செயல்படும்

ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், சிறு கடைகள், மளிகை கடைகள், ரேஷன் கடைகள், காய்கனி கடைகள் செயல்படும்.

வங்கிகள், ஏடிஎம், காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கும். தொலைத் தொடர்பு இணைய சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும்.

உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறலாம். பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு ஆகியவை இயங்கும்.

மேலும், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் நெடுஞ்சாலையோர கடைகள் செயல்படும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் போக்குவரத்து சேவையில் எந்த தடையும் இருக்காது.

போன்றவை குறித்து மத்திய அரசால் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊரங்கு உத்தரவு என்றால், எதுவுமே இயங்கக் கூடாது. இப்படி அறிவிப்பு வெளியிட்டால், பொது மக்கள் வெளியில் வரத்தான் செய்வார்கள்.

மோடியின் உரைக்கும், விஜய்யின் மாஸ்டர் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் இருக்கிறது என்றே சொல்லலாம்.

மாஸ்டர் ஏப்ரல் 9 ரிலீஸ்

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு வந்தது.

ஒருநாள் ஊரங்கு உத்தரவைத் தொடர்ந்து 21 நாட்கள் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒருநாள் ஊரடங்கின் போது எந்த கடையும் இயங்கவில்லை. மாறாக 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, கடைகள் உள்பட பல சேவைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விஜய் மாஸ்டர்

ஆனால், மோடி கொரோனாவுக்கு எதிராக இப்படி செய்யவில்லை என்றும் விஜய்யின் மாஸ்டர் படத்தை குறி வைத்தே இவ்வாறு செய்கிறார் என்றும் அவருடைய ரசிகர்கள் சிலர் அறியாத்தனமாக கூவி வருகின்றனர்.

விஜய்யை தாக்குவதற்கு கொரோனா வைரஸை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் கூறுகிறார்கள். விஜய்-யை தாக்க ஏன் கொரோனா வைரஸ் தேவைப்படுகிறது.

ரெய்டு நடத்தும்போதே புடிச்சு சிறையில் அடைத்து இருக்கலாமே? இதற்கு கொரோனா ஒரு சாக்கா? கூவுவதற்கு ஒரு எல்லை உண்டு.

உலக நாடுகள் அனைத்தும் கதிகலங்கி கொண்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் வரவில்லை என்பது சிலருக்கு கவலையாக உள்ளது.

நீங்கள் நேராக விஜய் வீட்டிற்கு சென்று மாஸ்டர் படத்தை போட்டுக் கட்டச்சொல்லுங்கள். அதை விட்டுபுட்டு சோசியல் மீடியாவில் காமெடி செய்துகொண்டு உள்ளீர்கள்.

3