Home Blog Page 197

உனக்கு என்ன வருமோ அதை செய் – பிராட் ஹாடின்

0

உனக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்தாலே ரிஷப் பந்த் உயர்ந்த இடத்தை நோக்கி நகரலாம் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் பந்த்க்கு அட்வைஸ் கூறியுள்ளார்

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோல்விக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி அணியில் இடம்பெறாமல் இருந்துவருகிறார்.

ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள இந்திய கிரிக்கெட்டுக்கு சில நாட்கள் விடுப்பு எடுத்து சென்றார், பிறகு பயிற்சி முடிந்த அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் அவர் அணிக்கு திரும்பவில்லை. பிசிசிஐ மகேந்திர சிங் தோனியை வருடாந்திர ஊதிய பட்டியலில் இருந்து திடீரென நீக்கியது.

இதனால் அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். ஐபிஎல் போட்டியில் தனது அதிரடியால் இந்திய ரசிகர்களை கவர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் சுக்கு நூறாகி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மகேந்திர சிங் தோனி போல துணிச்சலாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மறையாக விளையாடி வருகிறார்.

இதனால் இவர் தோனியின் இடத்திற்கு சரிப்பட்டு வரமாட்டார் என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் ரிஷப் பந்த் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

“தோனி போன்ற மிகப் பெரிய வீரரின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான ஒன்று ரிஷப் பந்த் இளம் வீரர் ஆவார். அவரை இளம் வயதிலேயே தோனியின் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டாம்.

அது அவருக்கு மிகுந்த நெருக்கடியை தள்ளிவிடும். அவர் அந்த மனநிலையில் விக்கெட் கீப்பிங் பணியையும் செய்யக்கூடாது.

தன்னுடைய திறன் எதுவோ அதை சார்ந்து அவர் செயல்பட்டால் வரும் காலங்களில் உயர்ந்த இடத்தை நோக்கி நகரலாம்

எனக் கூறிவிட்டு டோனியை போல் செயல்பட நினைக்காமல் தனக்கு என்ன வருமோ அதை செய்தாலே பண்ட் சாதிக்கலாம்” என கூறியுள்ளார்

3

மக்கள் வெளியில் வந்தால்; கண்டவுடன் சுட முதல்வர் உத்தரவு

0
முதல்வர் உத்தரவு லாக்டவுன் கொரோனா வைரஸ்

தெலுங்கான மாநிலத்தில் லாக்டவுன் உத்தரவை மதிக்காமல் வெளியில் வரும் பெதுமக்களை கண்டவுடன் சுட முதல்வர் உத்தரவு பிறபிக்கப்போவதாக எச்சரித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்ப பட்டு உள்ளது. இதே போல் தெலுங்கான மாநிலம் முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அரசு உத்தரவை மீறி பலர் வெளியில் நடமாடி வருகின்றனர். இதனால் முதல்வர் சந்திரசேகர் ராவ் எரிச்சல் அடைந்துள்ளார்.

வெளியில் வரும் பொதுமக்கள் கொரோனாவின் தீவிரம் தெரியாமல் நடமாடி வருகின்றனர். நிலை இப்படியே சென்றால் மாநில கட்டுபாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ராணுவம் உள்ளே வந்தால் கண்டவுடன் சுட உத்தரவு கொடுக்கப்படும் எனவும் தெலுங்கானா மக்களை எச்சரித்துள்ளார்.

தெலுங்கான மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே கொரோன தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குள்ள கவுன்சிலர்கள் பலர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். பணிக்கு ஒழுங்காக வருவதில்லை. இதுகுறித்து முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார்? என ஊடங்கங்கள் கேள்வி எழுப்பி வருகிறது.

3

கண்ணால் நடித்து அசத்திய கோலிவுட் கிங் சூர்யா – வீடியோ

0

Soorarai Pottru Making; கண்ணாலேயே நடித்தார்: சூர்யாவின் சூரரைப் போற்று மேக்கிங்! சூரரைப் போற்று மேக்கிங் குறித்து நடிகை விஷாலினி கருத்து தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் படம் சூரரைப் போற்று. இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

காப்பான் படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடித்துள்ள புதிய படம் சூரரைப் போற்று.

சூரரைப் போற்று

சூரரைப் போற்று படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில், சூர்யா, நெடுமாறன் ராஜாங்கம் என்ற மாறனாக நடித்துள்ளார்.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு, விஷாலினி, சம்பத் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

சூரரைப் போற்று டீசர்

சூரரைப் போற்று மேக்கிங்

இந்த நிலையில், சூரரைப் போற்று படம் குறித்து நடிகை விஷாலினி கருத்து தெரிவித்துள்ளார். இப்படம் எப்படி எடுக்கப்பட்டது, சூர்யா எப்படியெல்லாம் நடித்திருந்தார் என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

விஷாலினி சூர்யாவுக்கு மாமியாராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று மேக்கிங் குறித்து விஷாலினி கூறுகையில்: சூர்யா உடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்று எனது ஆசை. நீண்ட நாட்களாக காத்திருந்தேன்.

இயக்குநர் சுதா கொங்கரா படத்தின் கதாபாத்திரத்திற்கு சரியான ஒருவரை தேர்வு செய்து கொண்டிருந்த நிலையில், நான் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.

நான் ஆடிசன் சென்று நடித்து காண்பித்த பிறகு அவர்களுக்கு பிடித்துப் போக ஓகே சொன்னார்.

சூர்யாவுக்கு மாமியாராக நடித்திருந்தாலும், ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகத்தான் ஒவ்வொரு காட்சியும் அமைந்திருக்கும்.

மாமியார், மருமகள், மருமகன்

மாமியார், மருமகள், மருமகன் ஆகியோருக்கு இடையில் இருக்கும் சண்டை சச்சரவுகள் படத்திலும் இருக்குமா? என்று கேள்வி எழுப்ப, அதையெல்லாம் இப்போது சொல்ல விரும்பவில்லை. படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்.

மேலும், அபர்ணா பாமுரளிக்கு இது இரண்டாவது படம். படத்தின் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படத்திற்காக தனக்குத் தானே அர்ப்பணித்துக்கொண்டார். அவரது ரோலை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.

படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் இருக்கும் நிலையில், எல்லோருக்குமே திரையில் போதுமான இடம் கிடைக்கும். அதுதான் சுதா கொங்கராவின் சிறப்பான பணி. ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில்தான் இருக்கும்.

சூர்யா என்றாலே கடின உழைப்பு, உண்மையாக இருப்பார், அர்ப்பணிப்பு எல்லாமே இருக்கும். ஒர்க் அவுட் முடித்துவிட்டு படப்பிடிப்பிற்கு வந்தாலும், அப்படியே இருப்பார்.

எந்த அசதியும் அவரது முகத்திலும் தெரியாது. காலையில் எப்படி வருகிறாரோ அப்படியேத்தான் படப்பிடிப்பு முழுவதும் இருப்பார். முடிந்த பிறகும் இருப்பார்.

படத்தை அவர் தயாரித்திருந்தாலும், ஒரு தயாரிப்பாளராக அவர் நடந்து கொண்டது இல்லை. காலையில் 6 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை எடுக்கப்பட்ட ஒரு தொடர் வரிசை காட்சியின் போது சுட்டெரிக்கும் வெயிலிலும் அசராமல் நடித்தார். என்னால் நடிக்க முடியவில்லை.

கண்ணாலேயே நடிப்பார்

கண்ணாலேயே நடிக்கக் கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. அவரது கண்ணிற்கு அப்படியொரு மகிமை இருக்கிறது. போதிதர்மனாக பார்க்கும் பொழுதே தெரிந்திருக்கும். அவரது கண்ணில் தான் நிறைய விஷயங்கள் இருக்கிறது.

நம்ம உக்காந்து உக்காந்து சோத்த சாப்பிட்டுக்கிட்டே இருப்போம். ஆனால், அவர் சோறு சாப்பிடுவாரா என்பதே தெரியாது. எனினும் பயங்கர பிட்னெசாக இருப்பார்.

அவர் ஒர்க் அவுட் மட்டுமல்ல, யோகா,டயட் கண்ட்ரோல் இப்படியெல்லாமே சேர்ந்துதான் அவர் பிட்னெசாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

54 இடங்களில், 66 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பிற்கு முன்பாகவே எல்லாவற்றையும் கச்சிதமாக திட்டமிட்டுக்கொள்வோம்.

மேலும், டயலாக், நடிப்பு எல்லாவற்றையும் படப்பிடிப்புக்கு முன்பே ஒரு முறை ரிகர்ஷல் (Pre Workshop) மாதிரி செய்து கொள்வோம். இதன் மூலம் நேரம் மிச்சப்படும். எனர்ஜி மிச்சம்.

இயக்குநருக்கு என்ன வேணுமோ அது கிடைக்கும் வரை விடமாட்டார்கள். மதுரை பற்றி தெரியாத ஒருவர் நான் டப்பிங் பேசும் போது இந்த டயலாக்கை இப்படி பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தார்.

அதுதான் சுதா கொங்கரா. ஒரு அயர்ன் லேடியாக இருந்தாலும் கூட அவர் கோபப்பட்டதே இல்லை.

படத்திற்கு பாடல்களும் நன்றாக வந்துள்ளது. ஜிவி பிரகாஷ் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தளவிற்கு அவரது பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக கருத்து: சோஷியல் மெசேஜ்

பொதுவாக சூர்யா படம் என்றாலே இளைஞர்களுக்கு சமூக கருத்துக்களை கூறும் வகையில்தான் படம் இருக்கும்.

சூரரைப் போற்று ஒரு வாழ்க்கை வரலாற்று படமாக இருந்தாலும், படிக்கும் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும் ஒரு Motivation ஆக இருக்கும். இந்தப் படத்தின் மெசேஜ் கண்டிப்பாக இருக்கும்.

சூரரைப் போற்று, மாஸ்டர் ரெண்டுமே எனக்கு ரெண்டு கண். ரெண்டு படமும் நன்றாக வர வேண்டும் என்பது எனது ஆசை.

எந்தப் படத்திற்கு முதலில் டிக்கெட் கிடைக்கிறதோ சென்றுவிடுவேன் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மகேந்திர சிங் தோனி இனி இல்லை பிசிசிஐ இன்ஸ்டாகிராம்

0

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் பின்தொடர்பவர்கள் கொண்டாடும் விதமாக பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தில் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை.

2019ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்கு பிறகு மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை.

வருடாந்திர ஊதிய பட்டியலிலும் தோனியை விலகியது பிசிசிஐ.

ஐபிஎல் போட்டியில் தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என தோனிக்கு கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டியை ஒத்தி வைத்தது பிசிசிஐ.

ஒன்பது மாதங்களாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார் மகேந்திர சிங் தோனி.

தற்போது பிசிசிஐ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் 13 மில்லியனை கடந்தது.

இதை கொண்டாடும் விதமாக பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் நடுவில் 13M என்றும், அதைச் சுற்றி இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது.

வீரர்களில் விராட் கோலி, தவான், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், பும்ரா, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்

மகளிர் அணி சார்பாக ஹர்மன்ப்ரீத் காவுர், பூனம் யாதவ், ஸ்மிருதி மந்தனா போன்ற வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

2008 ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு 2013 ஆண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த தல தோனிக்கு இடமில்லை என்பது வருத்தமளிக்கிறது.

பிசிசிஐ தோனியை ஓரம்கட்டி வருகிறதா என்பது சந்தேகம் எழுந்துள்ளது.

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக் கோப்பையில் தோனி அணியில் இடம் பிடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

3

பாகிஸ்தான் சாம்பியன் : 1992 உலக கோப்பை

0

இங்கிலாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று.

ரவுண்ட் ராபின்

1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்திய உலக கோப்பையில் புதிய ரவுண்ட் ராபின் என்ற லீக் போட்டியை அறிமுகப்படுத்தினார்கள்.

அதாவது விளையாட உள்ள ஒன்பது அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.

ஒரு அணிக்கு மொத்தம் 8 லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே என 9 அணிகள் பங்கு பெற்றன.

இந்த உலக கோப்பை தான் முன்னணி ஜாம்பவானான கபில் தேவுக்கு கடைசி உலகக் கோப்பையாக அமைந்தது

இந்திய அணி

இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன், ரவிசாஸ்திரி, கபில்தேவ், வினோத் காம்ப்ளி, சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத்,  கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியாவில் ஆலன் பார்டர், டாம் மூடி, அயன் ஹீலி, மார்க் டெய்லர், மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா தான் சொந்த மண்ணில் விளையாடுவதால் பலம் வாய்ந்ததாக இருந்தது.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தானில் இம்ரான் கான், ஜாவித் மியாண்டட், வாசிம் அக்ரம், அமீர் சோகைல், மொயின் கான், இன்சமாம் உல் ஹாக் போன்ற வீரர்கள் களம் இறங்கினார்கள்.

இந்திய அணி  பாகிஸ்தானை 43 ரன்கள் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வே வை 55 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

புள்ளிபட்டியல்

இந்திய அணி 8ல் இப்போட்டிகளில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்தது.

ஆஸ்திரேலியா அணி போட்டியை நடத்தினாலும் நான்கு போட்டிகளில் மட்டும் என்று ஐந்தாம் இடத்தை பிடித்தது.

நியூசிலாந்து அணி 7 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இரண்டாவது இடத்தை 5 வெற்றிகளுடன் இங்கிலாந்து பெற்றது.

5 வெற்றிகளுடன் தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. நான்கு போட்டிகளை வென்று ஒரு போட்டி சமம் ஆனதால் 9 புள்ளிகளுடன் பாகிஸ்தான் நான்காவது இடத்தைப் பிடித்தது.

இலங்கை எட்டாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி 9வது இடத்தையும் பிடித்தது.

நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் என்று நான்கு நாடுகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

முதல் அரையிறுதி

மார்ச் 21ம் தேதி நடந்த முதல் அரையிறுதி போட்டியிலும் நியூசிலாந்து – பாகிஸ்தான் மோதின.

ரவுண்ட் ராபின் சுற்றில் ஒரு தோல்வியை மட்டும் பெற்று 7 போட்டிகளில் வெற்றி கண்ட நியூஸிலாந்து அணி,

அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் சொந்த நாட்டில் சொந்த ரசிகர்கள் மத்தியில் தோல்வியடைந்தது.

ரவுண்ட் ராபின் சுற்றில் அரையிறுதிக்கு கடைசி அணியாக தகுதி பெற்ற பாகிஸ்தான் அரையிறுதியில்  முதல் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இரண்டாவது அரையிறுதி

மார்ச் 22 ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் 19 வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இறுதி போட்டி

மார்ச் 25ஆம் தேதி மிகப்பெரிய மெல்போர்ன் மைதானத்தில் இறுதிப்போட்டி 87000 ரசிகர்கள் கூடியிருந்தார்கள் .

ஆஸ்திரேலியாவின் பரம எதிரியான இங்கிலாந்து அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இறுதிப் போட்டி தொடங்கியது.

அங்கு குழுமியிருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் பாகிஸ்தான் அணிக்கு துணை நின்றார்கள்.

பாகிஸ்தான் 249

டாஸ் வென்ற பாகிஸ்தானின் இம்ரான்கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் கேப்டன் இம்ரான் கான் 72 ரன்கள், ஜாவித் மியான்தத் 58 ரன்கள், இன்சமாம் உள் ஹாக் 33 ரன்கள், வாசிம் அக்ரம் 42 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பிரிங்கிலே 3 விக்கெட்டும், போத்தம் மற்றும் இல்லிங்வெர்த் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

250 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணி உலககோப்பையை பெறலாம் என்று கனவோடு களமிறங்கினார்.

அருமையான பந்துவீச்சு

பாகிஸ்தான் பவுலர்கள் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திய வண்ணம் இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று விடும் என்று அங்கு கூடியிருந்த ரசிகர்கள் எண்ணியிருந்தார்கள்.

ஆனால் அதை வாசிம் அக்ரம் மற்றும் முஸ்தாக் அகமது உடைத்து காட்டினார்கள்.

இங்கிலாந்து தோல்வி

இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் உலக கோப்பையை விட்டுக் கொடுத்தது.

இங்கிலாந்து அணிகள் அதிகபட்சமாக ஃபேர்பிரதர் 62, கூச் 29, லாம்ப் 31 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் வாசிம் அக்ரம் மற்றும் முஸ்தாக் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஜாவத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய வாசிம் அக்ரம் வென்றார். இந்த உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதும் இவரே.

தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணி மார்ட்டின் குருவே வென்றார். இந்த உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரரும் ஆவார்.

சாம்பியன்

ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானின் கேப்டன் இம்ரான் கான் கோப்பையை தூக்கி நாங்கள் சாம்பியன் என்று நிரூபித்த நாள் இன்று.

இம்ரான் கான் தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும் ஆவார்.

3

கொரோனா 144 தடை உத்தரவு நாம் என்ன செய்யலாம்?

0

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 21 நாள் இந்தியா சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக வீட்டினுள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 144 தடை உத்தரவு விடுமுறையை என்ன செய்யலாம் என்பதை துரை மோகன் ராஜு என்பவர் பேஸ்புக்கில் எழுதியது.

செய்வோமா…….

ஜவுளிக் கடைகளுக்கு யாரும் தினமும் போவதில்லை.

தியேட்டர்களுக்கு யாரும் தினமும் போவதில்லை.

மால்களுக்கு யாரும் தினமும் போவதில்லை.

— எனில் 144 தடை உத்திரவுவைப் பார்த்து பதட்டம் ஏன்?

காய்கறி கடைகள் திறந்து இருக்கும்.

பால், இறைச்சி கடைகள் திறந்து இருக்கும்.

மருந்து கடைகள் கண்டிப்பாக இருக்கும்.

இது போக அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் கண்டிப்பாகத் திறந்து இருக்கும்.

ஓட்டல்கள் திறந்து இருக்கும்.என்ன அங்கே சென்று அமர்ந்து சாப்பிடக் கூடாது.பார்சல் மட்டும் வாங்கி வரலாம்.

அப்புறம் என்ன 144 தடை?

4 பேர்களுக்கு மேல் ஓரிடத்தில் கூடவே கூடாது.

இது கொரோனா காலம்.எனவே இரண்டு பேர்கள் கூட ஒரு இடத்தில் கூடி நிற்கக் கூடாது.

கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக பேருந்துகள் ஓடாது.டிரெயின்கள் ஓடாது….

இவ்வளவு தான் 144 என்பது…

வீட்டிலேயே இருங்கள்.அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே அதுவும் தேவைப்பட்டால் மட்டும் வெளியே வாருங்கள்.மற்றபடி குடும்பத்தோடு ஜாலியாக வீட்டில் இருங்கள்.

வேண்டியதை சமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உண்ணுங்கள்.புது புது அயிட்டங்களை சமைத்துப் பாருங்கள்.வாங்கி வைத்து இதுவரை படிக்காமல் விட்ட புத்தகங்களைப் படியுங்கள்.

அதைப் பற்றி பேஸ்புக்கில் எழுதுங்கள்.பென்டிரைவில் இருக்கும் படங்களைப் பாருங்கள்.அந்தப் படங்களைப் பற்றி விமர்சனம் எழுதுங்கள்.

பிளாக் ஆரம்பித்து சமூகத்தின் குறுக்கு வெட்டு தோற்றம் என எதையாவது எழுதுங்கள்.ஹைட்ராக்சிகுளோரோகுயினைன் எப்படி வேலை செய்கிறது என்று தேடிப் படியுங்கள்.

நீல் ஆம்ஸ்டிராங் நிஜமாகவே நிலவுக்கு சென்றாரா என ஆரா யுங்கள்.மர்லின் மன்றோ இறந்தது எப்படி என தேடுங்கள்.தஞ்சை பெரிய கோவிலை எப்படி கட்டியிருப்பார்கள் என சிந்தியுங்கள்.

வீட்டில் கண்ணாடி இருந்தால் அதன் முன் நின்று விதம் விதமாக நடித்துப் பாருங்கள்.அதை டிக்டாக்கில் போடுங்கள்.குழந்தைகளுக்கு படம் வரைய கற்றுக் கொடுங்கள்.

அவர்களுக்குப் புரியாத பாடங்களை பொறுமையாக சொல்லித் தாருங்கள் அல்லது குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

வீட்டுக்குள் இட வசதி இருந்தால் சைக்கிள் ஓட்ட சொல்லிக் கொடுங்கள்.தியானம் செய்யுங்கள்.உறவினர்களிடம் வீடியோ கால் செய்து பேசுங்கள்…

ஆக மொத்தம் 15 நாட்கள் சந்தோசமாக குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்…நம்மை யாரும்,எதற்காகவும் தேட மாட்டார்கள்…

— என ஏகப்பட்ட விசயங்களை செய்யச் சொல்கிறது அரசு….

இந்த சோதனையான காலகட்டத்தில் பொருளாதார இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.மறுப்பதற்கு இல்லை.

ஆனால் இந்த காலகட்டத்தை மட்டும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வெற்றிகரமாக நாம் கடந்து விட்டால்,கொரோனாவை நாம் எப்படி பெற்றோம் என்ற வீரக் கதைகள் பேச நாமும் உயிரோடு இருப்போம்.நம் சந்ததிகளும் இருக்கும்.

செய்வோமா…….

3

Bigil:இது யாரு நம்ம தளபதியா? வைரலாகும் விஜய்யின் பைக் ஸ்டண்ட் வீடியோ!

0

Bigil Bike Ride Video; இது யாரு நம்ம தளபதியா? வைரலாகும் விஜய்யின் பைக் ஸ்டண்ட் வீடியோ! பிகில் படத்தில் விஜய் செய்த பைக் ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.

பெண்களின் கால்பந்தை மையப்படுத்திய இப்படத்தில் மைக்கேல் மற்றும் ராயப்பன் என்று விஜய் அப்பா – மகன் என்ரு இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

மைக்கேல் (பிகில்) கால்பந்து கோச்சர், ராயப்பன் ரௌடி போன்று ஒரு கதாபாத்திரம். பெண்கள் கால்பந்து இறுதிபோட்டின் போது விஜய்யை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருப்பார்கள்.

சிறிது நேரம் கழித்து விஜய் அங்கிருந்து புறப்பட்டு கால்பந்து மைதானத்திற்கு வருவார். காவல் நிலையத்தில் இருந்து வரும் விஜய் பைக்கில் புறப்பட்டு வேகமாக வருவார்.

இந்த காட்சி எடுக்கப்பட்ட போது படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தற்போது விஜய் பிகில் படத்திற்காக செய்த அசல் ஸ்டண்ட் காட்சி என்று இரண்டு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு பிஸியான சாலையில், விஜய் வேகமாக பைக்கில் செல்வது போன்றும், டேர்னிங்கின் போது ஸ்கிட் அடிப்பது போன்றும் பதிவாகியுள்ள அந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிகில் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக கூறப்பட்டது. அப்போது, பிகில் படத்தில் வரி ஏய்ப்பு நடந்ததாக கூறி விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் வீடு என்று பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

எனினும் விஜய் வீட்டில் எந்த ஆவணமும், பணமும் கைப்பற்றவில்லை. வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருமான வரித்துறையினர் வந்த வேகத்தில் திரும்பி வந்தனர்.

பிகில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக மாஸ்டர் படம் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மாஸ்டர் டிரைலர் கடந்த 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்று ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3

25/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

25/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். பணியில் நிதானம் தேவை. குடும்பத்தில் அனுசரணை அவசியம். நிதிநிலை வளர்ச்சி இருக்காது. மன அமைதி அவசியம் தேவை.

புத பகவானை வழிபட நன்மைகள் உண்டு.

ரிஷப ராசிபலன்

இன்று உங்களின் சாதகமான நாளாக இருக்கும். பணியில் வெற்றி நிச்சயம். வீட்டில் இன்பமான நிலை இருக்கும். பணவரவு இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை..

பெருமாளை வழிபட கூடுதல் பலன்களை பெறலாம்.

மிதுன ராசிபலன்

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். பணியில் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தன லாபம் உண்டு. உடல் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

மகாலட்சுமியை வழிபட நற்பலன்கள் பெறலாம்.

கடக ராசிபலன்

இன்று மந்தமான நாளாக இருக்கும். பணி சூழல் சிறப்பாக இருப்பாக இருக்காது. குடும்பத்தில் நட்புறவு தேவையாகும். பணவரவு தேவையான அளவு இருக்காது. கால்வலி ஏற்பட வாய்ப்புண்டு.

தன்வந்திரி பகவானை வழிபட நற்பலன்கள் பெறலாம்.

சிம்ம ராசிபலன்

இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். முயற்சிகள் தோல்வியில் முடியும். வீட்டில் நல்லுறவு இருக்காது. பொருளாதார நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. சளி, இருமலுக்கு வாய்ப்புண்டு. கவனமாக இருக்கவும்.

கருடனை வழிபட நற்பலன்கள் பெறலாம்.

கன்னி ராசிபலன் 

இன்று மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும். காதல் பெருகும் நாளாக இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

சிவபெருமானை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

துலா ராசிபலன்

இன்று உங்களின் நம்பிக்கையான நாளாக இருக்கும். மன உளைச்சல் குறையும். வீட்டில் அதிக நேரம் செலவிடுவீர்கள். தனவரவு உண்டு. உடல்நிலை சிறப்பாக இருக்கும்.

பெருமாளை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு

விருச்சிக ராசிபலன்

இன்று பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. நிதானமாக இருக்கவும். குடும்பத்தில் குழப்பமான சூழல் இருக்கும். வீட்டு செலவுகள் அதிகரிக்கும். தோல் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

புத பகவானை நினைத்து பிராத்தனை செய்யவும்.

தனுசு ராசிபலன்

இன்று பதட்டமான நாளாக இருக்கும். பணியில் தவறுகள் இருக்கலாம். வீட்டில் நல்லிணக்கம் இருக்காது. பண தேவை அதிகரிக்கும். தாயின் நலத்தில் கவனமாக இருக்கவும்.

சந்திரனை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டு.

மகர ராசிபலன் 

இன்று கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். பணிகளை சீக்கரமாக முடிக்க இயலும். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று திடமாக இருப்பீர்கள்.

பெருமாளை வழிபட சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று அனுசரணை அவசியம் தேவை. சக ஊழியர்களிடம் பேச்சில் கவனம் தேவை. துணையிடம் மோதல்கள் வரலாம். பொருளாதார நிலை மந்தமாக இருக்கும்.

சிவபெருமானை வழிபட துன்பங்கள் குறையும்.

மீன ராசிபலன் 

இன்று இன்பமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலை பலு குறையும். கணவன் மனைவி அன்பு பெருகும். தன லாபம் அதிகமாக இருக்கும்.

அம்பிகையை வழிபட கூடுதல் பலன்கள் பெறலாம்.

25/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் – சசிகுமார்?

0
Sarathkumar and Sasikumar Ayyappanum Koshiyum Tamil Remake

Ayyappanum Koshiyum Tamil Remake;அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஜி இயக்கத்தில் பிஜூ மேனன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரது நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் அய்யப்பனும் கோஷியும்.

இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும், பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

இவர்களுடன் இணைந்து ரஞ்சித், கௌரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு ஆகியோர் நடித்திருந்தனர்.

அதிகாரத்தில் இருப்பவருக்கும், ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் ஈகோ மோதல்தான் அய்யப்பனும் கோஷியும் படத்தின் கதை.

அய்யப்பன் நாயர் என்ற கதாபாத்திரத்தில் பிஜூ மேனனும், கோஷி குரியன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜனும் நடித்திருந்தனர். ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அட்டப்பாடி என்ற வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்க தடை இருக்கும் நிலையில், அதையும் மீறி, மதுபாட்டில்கள் எடுத்து செல்லும் பிருத்விராஜ் ஊட்டி செல்லும் வழியில் இருந்த போலீஸ் பரிசோதனையில் பிஜூ மேனனிடம் சிக்கிக் கொள்கிறார். அப்போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இதை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் இப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார்.

பைவ் ஸ்டார் கதிரேசன், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வந்த பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காகத்தான் சரத்குமார் மீசை, தாடியுடன் தோற்றமளிக்கிறார் என்கிறது தகவல்.

இது குறித்து தயாரிப்பாளர் கதிரேசன் கூறுகையில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு இன்னும் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக இருக்கிறார். இதே போன்று சசிகுமாரும் எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

3

vasantha navaratri: இராமர் விரதமிருந்த வசந்த நவராத்ரி

0
vasantha navaratri இராமர் விரதமிருந்த வசந்த நவராத்ரி

வசந்த நவராத்ரி என்றால் என்ன? மற்ற நவராத்ரிகளுக்கும் வசந்த நவராத்ரிக்கும் என்ன வேறுபாடு?

vasantha navaratri: இராமரின் வெற்றிக்கு வசந்த நவராத்ரி காரணமா? லலிதாம்பிகை தியான மந்திரம் மற்றும் மூல மந்திரம் என்ன? what is vasantha navaratri? why celebrate?

அகில உலகையும் ஆளுகின்ற அன்னை பராசக்திக்கு பல்வேறு விழாக்கள் எடுத்து கொண்டாடுகிறோம்.

உள்ளூர் கிராமங்களில் கூட கிராம தேவதைகளாக அம்பிகை அருளாட்சி புரிந்து வருகிறாள்.

அனைத்து நாட்களுமே அன்னைக்கு திருநாளாயினும். சில நாட்கள் மிக முக்கியமான கருதப்படுகிறது

இந்த வசந்த காலத்தில் அன்னைக்கு கொண்டாடப்படும் திருநாளே வசந்த நவராத்ரி ஆகும்.

நான்கு வகையான நவராத்ரிகள்

ஒரு வருடத்திற்கு நான்கு நவராத்ரிகள் உண்டு.

  • ஆஷாட மாதத்தில் (ஆடி) வாராகி தேவிக்கு ஆஷாட நவராத்ரி.
  • சரத் ருதுவில் ( புரட்டாசி-ஐப்பசி) துர்கா லட்சுமி சரஸ்வதிக்கான சாரதா நவராத்ரி.
  • மகர மாதத்தில் (தை) வருவது மாதங்கிக்கு உரிய சியாமளா நவராத்ரி.
  • வசந்த ருதுவில் ( பங்குனி -சித்திரை) வருவது வசந்த நவராத்ரி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரிக்கு உரிய நவராத்ரி ஆகும்.

வசந்த நவராத்ரியின் சிறப்பு

வசந்த காலத்தில் அம்பிகைக்கு கொண்டாடப்படும் நவராத்ரி வசந்த நவராத்திரி ஆகும். பங்குனி முதல் சித்திரை வரை வசந்த ருது எனப்படுகிறது.

இதில் மஹா ஷோடசி எனப்படுகின்ற மஹா பட்டாரிகா ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரிக்கு ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

பங்குனி அமாவாசை முடிந்து வரும் பிரதமையில் இருந்து நவமி வரை ஒன்பது நாட்கள் அம்பிகையை விரதமிருந்து பூஜிக்க வேண்டும்.

லலிதா திரிபுரசுந்தரி மற்றும் 64 யோகினிகள்

அன்னை லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர மஹா மேரு பீடத்தின் மத்தியில் அமர்ந்து ஆட்சி புரிகிறாள்.

அன்னையின் சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் இருபுறமும் இருக்கின்றனர். பைரவரும், காளியும் காவல் புரிகின்றனர் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சதாசிவன் அவளின் சிம்மாசனத்தை தாங்கி நிற்கின்றனர்.

வாராகி படைத்தலைவியாகவும் மற்றும் மாதங்கி அமைச்சராக இருக்க அம்பிகையில் இருந்து வெளிவந்த சக்திகளான அறுபத்தி நான்கு யோகினிகளை கொண்டு ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆட்சி புரிகிறாள்.

இவளின் தோற்றத்தை லலிதா சகஸ்ரநாம தியானத்தில் கூறப்பட்டுள்ளது.

தியானம்

“அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் l
அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை-
ரஹமித்யேவ விபாவயே பவானீம் || 2 ||
த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித
வதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்
கரகலித-லஸத்ஹேம-பத்மாம் வராங்கீம் |

ஸர்வாலங்கார-யுக்தாம் ஸதத-மபயதாம் –
பக்த-நம்ராம் பவானீம், ஸ்ரீவித்யாம் சாந்த-மூர்த்திம்
ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்-ப்ரதாத்ரீம் || 3||

ஸகுங்கும-விலேபனா-மளிகசும்பி – கஸ்தூரிகாம்
ஸமந்த-ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம் |
அசேஷஜனமோஹிநீ–மருண-மால்ய-பூஷாம்பராம்
ஜபாகுஸுமபாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே-தம்பிகாம் ll

என்று அம்பிகையை தியானிக்கும் ஸ்லோகம் அமைந்துள்ளது.

மேரு சாம்ராஜ்யத்தில் அனைத்து தேவர்களுக்கும் இடம் உண்டு. எனவே ஸ்ரீ சக்ர மஹா மேருவை பூஜித்தால் அனைத்து தேவர்களையும் பூஜித்த பலன் கிடைக்கும்.

இந்த vasantha navaratri விழாவில் அம்பிக்கைக்கும் 64 யோகினிகளுக்கும் சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகின்றது.

இராமாயணத்தில் வசந்த நவராத்ரி

இராமாயண காலத்தில் ஸ்ரீ இராமர் இராவணனை வதம் செய்வதற்கு வேண்டி அன்னைக்கு ஒன்பது நாட்கள் vasantha navarathiri விரதமிருந்தார்.

விரத முடிவில் அன்னை தோன்றி இராவணனை வதம் செய்ய வரம் அளித்தால் என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்தே வசந்த நவராத்ரியின் தொன்மையை அறிய முடியும்.

மேலும் vasantha navaratri முடிவில் நவமியன்று இராமர் பிறந்த தின விழாவும் (இராம நவமி) கொண்டாடப்படுகிறது.

2020 வசந்த நவராத்ரி விழா

இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி துவங்கும் vasantha navarathri ஏப்ரல் 2 இல் முடிவடைகிறது.

இந்த நாட்களில் ஸ்ரீ சக்ர மஹா மேரு நவாவரண பூஜை, அறுபத்தி நான்கு யோகினிகள் பூஜை, சண்டி ஹோமம் போன்றவைகள் கோயில்களில் நடத்தப்படுகிறது.

வீட்டில் இருந்தவாரே தினமும் லலிதா சகஸ்ரநாமம், லலிதா நவரத்தின மாலை பாராயணம் செய்யலாம்.

லலிதாம்பிகை மூல மந்திரம்

“க ஏ ஈ ல ஹ்ரீம்
ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்
ஸ க ல ஹ்ரீம்”

என்ற மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யலாம்.

அனைவரும் தவறாமல் vasanth navarathri விழாவில் அம்பிகையை வழிபட்டு இந்த பிரச்சனைகள் நிறைந்த காலகட்டத்தில் உலக நன்மையும், உடல் நலனையும் வேண்டி அம்பிகையை பூஜிப்போம்.

3