Home Blog Page 198

காஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்: விஜய்யுடன் 4ஆவது படமா?

0
Kajal Aggarwal Thuppakki 2

Kajal Aggarwal; காஜல் அகர்வாலுக்கு அடித்த ஜாக்பாட்: விஜய்யுடன் 4ஆவது படமா?மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal). சூர்யா, விஜய், கார்த்தி, தனுஷ், விஷால், ஜீவா, அஜித், ஜெயம் ரவி, கமல் ஹாசன் என்று வரிசையாக மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அதிக முறை விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார். துப்பாக்கி (Thuppakki), ஜில்லா மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 4ஆவது முறையாகவும் விஜய் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் தளபதி65 (Thalapathy65). இப்படத்திற்கு மகிழ் திருமேனி, சுதா கொங்கரா, லோகேஷ் கனகராஜ் என்று பல இயக்குநர்கள் பேச்சு அடிபட்டது. கடைசியாக ஏ.ஆர்.முருகதாஸ் பெயரும் அடிபட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மூன்று படங்களுக்குமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், தான் தளபதி65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருப்பதாகவும், அது துப்பாக்கி 2 (Thuppakki2) என்றும் தகவல் வந்தது. அதோடு, தளபதி65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என்று ஒட்டுமொத்த நாடே வீட்டிற்குள் அடைபட்டு இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் ஹே சினாமிகா என்ற தமிழ் படத்தில் பிஸியாக இருந்தார்.

கொரோனாவால் ஹே சினாமிகா படமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டில் முடங்கி இருக்கும் நடிகை காஜல் அகர்வால் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது, நடிகர் விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த காஜல், மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்கு காத்திருப்பதாக கூறினார். அவருடன் பணியாற்றுவது என்பது மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்து விஜய் நடிக்கும் படத்தில் அவர் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மூக்குத்தி அம்மன், அண்ணாத்த ஆகிய படங்களில் நயன்தாரா பிஸியாக இருப்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை. ஆதலால், இந்த முறை மார்க்கெட் காஜல் அகர்வால் பக்கம் திரும்பியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் – விஜய் கூட்டணியில் துப்பாக்கி 2 உறுதி செய்யப்பட்டால், காஜல் அகர்வால் 4ஆவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஒலிம்பிக்கை ஒத்திவைத்த கொரோனா – புதிய அறிவிப்பு

0

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஜப்பான் அரசு அறிவித்துள்ளது

2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் ஜப்பானில் உள்ள டோக்கியோ வில் நடைபெற இருந்தது.

தற்போது கொரோனா வைரசால் ஒலிம்பிக் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

ஜப்பான் அரசு இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காத்து வந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பல நாடுகளுக்குப் பரவி மக்களை கொன்று குவித்து அச்சுறுத்தி வருகிறது.

இதனால் மக்கள் வீட்டினுள்ளேயே தங்கும்படி பல நாடுகளில் அரசாங்கங்கள் உத்தரவிட்டுள்ளது.

பல நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி, 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் தற்போது “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேக், டோக்கியோவில் நடைபெற இருந்த 2020 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி,

அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப்படுவதற்கான ஒப்புதலை கொடுத்துள்ளார்” என ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்

பல நாட்டில் வீரர்களுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்க வேண்டும் என்பதே கனவு , ஆனால் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஒத்தி வைக்கப் படுவது ஒலிம்பிக் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் விளையாட்டை விட வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலம் முக்கியம் என கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை மாற்றினார்

0

கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ட்விட்டரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை மாற்றி உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100 நாடுகளுக்கு மேல் பரவி பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது..

இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் வைரஸ் கட்டுப்படுவதாகவே தெரியவில்லை இந்த நான்கு வாரத்தில் அதிகரிப்பதாகவே உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறார். மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

300க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 144 தடையும் பிறப்பித்துள்ளார்.

முக்கியமாக தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறது. நம் சுகாதாரத்துறை மிகவும் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

இந்த வைரஸின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது தமிழ்நாடு அரசு.

கொரோனா வைரஸிலிருந்து மக்கள் பாதுகாக்க கிரிக்கெட் வீரர்கள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது புதுவிதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டிவிட்டரில் தன் பெயரை மாற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் “லெட்ஸ் ஸ்டே இன்டோர்” என்ற பெயரை மாற்றியுள்ளார்.

அவர் ஏற்கனவே கொரோனா பற்றி தமிழக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் கூறியிருந்தார்.

தற்போது மக்களின் விழிப்புணர்வுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் “லெட்ஸ் ஸ்டே இன்டோர்” என்று மாற்றியுள்ளார்.

3

Corona Virus: முதல்வரை சந்தித்து பேசிய யோகி பாபு!

0
Yogi Babu Meet CM

Yogi Babu Marriage Reception; கொரோனா வைரஸ்: முதல்வரை சந்தித்து பேசிய யோகி பாபு! கொரோனா வைரஸ் தாக்குதல் பீதியில் உலகமே இருக்கும் நிலையில், யோகி பாபு அசால்ட்டாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காமெடி நடிகர் யோகி பாபு தைரியமாக சந்தித்து பேசியுள்ளார்.

யோகி பாபு திடீரென்று திருமணம் செய்து கொண்டார். கவுண்டமனி, செந்தில், சந்தானம், சூரி, ரோபோ சங்கர் ஆகியோரது வரிசையில் இடம்பெற்றவர் காமெடி நடிகர் யோகி பாபு.

தமிழ் சினிமாவில் இவர் இல்லை என்றால் படங்கள் இல்லை என்றும் கூறும் அளவிற்கு ஏராளமான படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார்.

தற்போது இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்று பொலம்பும் அளவிற்கு ரொம்பவே பிஸியாக இருக்கிறாராம்.

இந்த நிலையில், கடந்த மாதம் 5 ஆம் தேதி யோகி பாபு ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

சென்னையின் திருத்தணி அருகிலுள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

யாரையும் அழைக்காமல் திடீரென்று யோகி பாபு திருமணம் செய்து கொண்டதால் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

யோகி பாபுவின் திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து மார்ச் மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடப்பதாக தகவல் வந்தது.

ஆனால், தற்போது உலகத்தையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எனினும், அதையும் மீறி, யோகி பாபு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் தயார் செய்து ஒவ்வொருவரது வீட்டிற்கும் சென்று கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், எப்போதும் பிஸியாகவே இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.

மேலும், அவருக்கு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழை கொடுத்துள்ளார். வரும் 31 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், யோகி பாபு முதல்வரை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, கொரோனா குறித்து முதல்வரிடம் யோகி பாபு ரகசியமாக பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யோகி பாபுவுடன் பாடகர் வேல்முருகனும் இருந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதற்கு முன்னதாக துணை முதல்வருக்கு தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் அழைப்பிதழை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று, தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவரான விஜயகாந்தை சந்தித்துள்ளார்.

யோகி பாபு கட்சியில் இணைவதற்கு அங்கு சென்றாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்று கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இல்லை இல்லை அவர் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றுள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

யோகி பாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 5 ஆம் தேதி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக விஜயகாந்தை சந்தித்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றுள்ளார்.

அப்போது, விஜயகாந்தின் இளைய மகன் விஜய பிரபாகரன் மற்றும் இயக்குநர் முத்துக்குகுமார் ஆகியோர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Yogi Babu Wedding Reception

3

FEFSI Workers: கொரோனா வைரஸ்: ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி!

0
Rajinikanth Donate 50 Lakhs to FEFSI

Rajinikanth FEFSI Workers; கொரோனா வைரஸ்: ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி! சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட உலகநாடுகளை தாக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பால் நாள் தோறும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 19 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து சினிமா, (சின்னத்திரை, வெள்ளித்திரை) படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டன.

இதன் காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Harish Kalyan Donate 1 Lakh to FEFSI

அவர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், அனைத்து தொலைக்காட்சி மற்றும் அதன் உரிமையாளர்கள் என்று பலருக்கும் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ஒரு வேண்டுகோள் வைத்தார்.

சினிமா வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.

10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட ரூ.2 கோடி ஆகிறது.

கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.

ஆர்.கே. செல்வமணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதலாவதாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் உதவ முன்வந்துள்ளனர். ஆம், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், சிவகுமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சேலம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மூட்டை அரிசியை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் பார்த்திபன் 25 கிலோ கொண்ட 250 அரிசி மூட்டை வழங்கியுள்ளார். ஜெகன் ரூ.5000, ஜீனியஸ் பட நடிகர் ரோஷன் ரூ.17,000, இயக்குநரும், நடிகருமான மனோபாலா அரிசி மூட்டையும் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த அதிகபட்சமாக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். விஜய் சேதுபதி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவசாயத்தை கையிலெடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் 150 (25 கிலோ) அரிசி மூட்டை பெப்சி அலுவலகத்திற்கு மேனேஜர் கஃபர் மற்றும் ராஜூ உதயலி ஆகியோரது மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தை அட்வான்ஸ் தொகையாகவும் கொடுத்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து சினிமா துறையில் இருக்கும் மற்ற நடிகர், நடிகைகளும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth – 50Lakhs
Vijay Sethupathi – 10 Lakhs
Siva Karthikeyan – 10 Lakshs
Suriya & Family – 10 Lakhs
Harish Kalyan – 1 Lakhs

நடிகர்கள் நிதியுதவி அரிசி மூட்டை
கார்த்தி, சூர்யா, சிவகுமார் ரூ.10 லட்சம்
சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம்
பார்த்திபன் 250 மூட்டை
மனோபாலா அரிசி மூட்டை
ஜெகன் ரூ.5000
ஜீனியஸ் பட நடிகர் ரோஷன் ரூ.17,000
விஜய் சேதுபதி ரூ.10 லட்சம்
ரஜினிகாந்த் ரூ.50 லட்சம்
விஜய் மக்கள் இயக்கம் – சேலம் 10 மூட்டை
ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம்
பிரகாஷ் ராஜ் 150 மூட்டை

3

பட்டணந்தான் போகலாமடி பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் நினைவுதினம்!

0
Sirkazhi Govindarajan

Sirkazhi Govindarajan; பட்டணந்தான் போகலாமடி பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் நினைவுதினம்! புகழ்பெற்ற தமிழ் கர்நாடக இசைப்பாடகரும் பின்னணி பாடகருமான சீர்காழி கோவிந்தராஜன் நினைவுதினம் இன்று.

இன்று சீர்காழி கோந்தராஜனின் நினைவுதினம்.

கடந்த 1933 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி சீர்காழியில் பிறந்தார் கோவிந்தராஜன். இவரது பெற்றோர் சிவசிதம்பரம், அவையாம்பாள்.

தனது சிறு வயதிலே பக்திப் பாடல்களை பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். எனினும், சென்னை இசைக் கல்லூரியில் சேர்ந்து முறையாக இசை பயின்றார்.

திரைப்படத்திற்காக முதன் முதலில் கடந்த 1953 ஆம் ஆண்டு வந்த பொன்வயல் என்ற படத்திற்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.

ஆனால், அந்த பாடலுக்கு முன்பாகவே ஜெமினி நிறுவனம் தயாரிப்பில் வந்த ஔவையார் படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார்.

அந்தப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பெயர் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகளுக்கு மேல் திரைப்பட பாடல்களையும், பக்தி பாடல்களையும் பாடி ரசிகர்களை இதயங்களை கொள்ளை கொண்டுள்ளார்.

பட்டணந்தான் போகலாமடி, ஓடம் நதியினிலே, கொங்கு நாட்டுச் செங்கரும்பே, மாட்டுக்கார வேலா என்று பல பாடல்களை பாடியுள்ளார்.

ஏழிசை மன்னர் என்று புகழப்பட்ட சீர்காழி கோவிந்தராஜன் மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

விருது

சீர்காழி கோவிந்தராஜன் சங்கீத அகாடமி விருது, பத்மஸ்ரீ, இசைப் பேரறிஞர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர்கள்

எம்.எஸ். விஸ்வநாதன், டி எம் சௌந்தரராஜன், பி பி ஸ்ரீனிவாஸ், திருச்சி லோகநாதன், ஏ.எல்.ராகவன், கே ஜே ஏசுதாஸ் ஆகியோர் உடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ளார்.

எம்.வேணு, கே. வி. மகாதேவன், எம். எஸ். விஸ்வநாதன், ஜி.இராமநாதன் ஆகியோரது இசையில் ஏராளமான பாடல்கள் பாடி அசத்தியுள்ளார்.

டூயட் பாடல்கள்

அதோடு, பின்னணி பாடகிகளான எம்.எல்.வசந்தகுமாரி, பி.லீலா, கே ஜமுனா ராணி, ஜிக்கி, பி சுசீலா, கே ராணி, எல்.ஆர்.ஈஸ்வரி, சூலமங்களம் ராஜேஸ்வரி, சூலமங்களம் ஜெயலட்சுமி, பாலசரஸ்வதி தேவி, வானி ஜெயராம் ஆகியோருடன் இணைந்து டூயட் பாடல்களை பாடியுள்ளார்.

மேலும், என்.எஸ்.கிருஷ்ணன், டிஆர் மகாலிங்கம், பி பானுமதி, எஸ் வரலட்சுமி மற்றும் மனோரமாக ஆகிய நடிகர், நடிகைகளுடன் இணைந்தும் டூயட் பாடல்கள் பாடியுள்ளார்.

படங்கள்

கந்தன் கருணை, வா ராஜா வா, திருமலை தேன்குமாரி, அகத்தியர், தெய்வம், ராஜராஜ சோழன், திருவருள், தசாவதாரம், தாய் மூகாம்பிகை, மீனாட்சி திருவிளையாடல் ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், சீர்காழி கோவிந்தராஜன் 1988 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி தனது 55ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் காலமானார். இன்று அவரது, 32ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

3

Hantavirus Infection : இது என்ன புது வைரஸ் | எப்படி பரவும்

1
hantavirus ஹண்டா வைரஸ்

Hantavirus Infection: இது என்ன புது வைரஸ் | எப்படி பரவும்?

Hantavirus Symptoms and diagnosis tamil : ஹண்டா வைரஸ் என்பது நுரையீரல் நோய்க்குறி ஆகும். இதற்கு எச் பி எஸ் (HPS) என்று  சொல்லுவார்கள். Hantavirus Infection

இந்த வைரஸ் அரிதான வைரஸ் ஆகும். ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்று ஆகும் . இது பெரும்பாலும் எலிகளில் இருந்து பரவுகிறது.

எலிகளின் சிறுநீர், சாணம் மற்றும் உமிழ்நீரில் அந்த வைரஸ் தொற்று பரவும். இதனால் நோய்த்தொற்று ஏற்படுகிறது .

இந்த சிறிய நீர்த்துளிகள் காற்றில் கூட நுழையலாம். எனவே காற்று வழியாக நம்மை பாதிக்க கூடும்.

அந்த காற்றை நாம் சுவாசிக்கும் பொழுது அல்லது அதனின் சிறுநீர் மற்றும் சாணத்தை சுற்றி நாம் இருக்கும் பொழுதோ நம்மிடம் அந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது.

ஆனால் கவலை வேண்டாம் ஹண்டா வைரஸ் மக்களிடமிருந்து பரவாது . எனவே உங்கள் சுற்றியுள்ள பகுதியை சுத்தமாக வைத்திருங்கள். அதுவே போதும். Hantavirus Infection.

HHPS ன் ஆரம்ப அறிகுறிகள் :-

  • சோர்வு, காய்ச்சல், தசை வலிகள், குறிப்பாக தொடைகள் இடுப்பு மற்றும் முதுகு வலி, தலைவலி, குளிர், மயக்கம் உணர்தல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி அதன்பிறகு இருமல் மற்றும் மூச்சு திணறல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

  • உங்கள் வீட்டை சுற்றியுள்ள கொறித்துன்னிகள் கட்டுப்படுத்துவது இந்த தொற்று நோயை தடுக்க சிறந்த வழியாகும். கொறித்து உண்ணக்கூடியவை என்பது எலிகள், அணில் இவைதான் நாம் கொறித்து உண்ணிகள் என்று சொல்லுவோம்.

  • உங்கள் வீட்டிலோ அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் குறுகலான எலிகள் இருந்தால் அந்த சமயத்தில் உங்களுக்கு காய்ச்சல் வந்தால், ஆழ்ந்த தசை வலி மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

  • இதற்கு இன்னும் தடுப்பூசி சிகிச்சைகள் எதுவும் இல்லை.

  • ஆரம்பக்கட்டத்தில் இதை கண்டுபிடித்து விட்டால் பின்பு எளிதாக குணப்படுத்தி விடலாம்.

  • பெரும்பாலும் இந்த வகை தொற்று நோய்க்கு சுவாச இயந்திரம் மற்றும் ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படும்.

இந்த வைரஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் கிளிக்

3

கொரோனா வைரஸ் அறிகுறிகள், வந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்

1

கொரோனா வைரஸ் ஐ எப்படி கண்டுபிடிப்பது எப்படி சரிபார்ப்பது அதன் அறிகுறிகள் என்னென்னஎன்பதை பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

தற்போது புதிய நோயான கொரோனா வைரஸ் பற்றி தொடர்ச்சியான அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன (SARS-CoV-2) இதற்கு முன் இது 2019-nCoV என்று அழைக்கப்பட்டது .

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவுகிறது என்பது உண்மையாக இருந்தாலும், அதன் பிடியை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் நீங்கள் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் உங்கள் அறிகுறிகளை தொடர்ச்சியாக கவனிப்பது அவசியம். 

உங்களுக்கு coronavirus இருப்பது பற்றி நீங்கள் கவலைப் படுகிறீர்களா? அப்படி இருந்தால் வீட்டிலேயே இருங்கள் உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை அறிய உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

அறிகுறிகளை கண்காணித்தல் 

  1. இருமல் போன்ற சுவாச அறிகுறிகளை கவனியுங்கள் :-
  • corona வைரஸ் சுவாச நோய்த்தொற்று என்பதால் சளி இருமலுடனும் வெறும் இருமலுடன் அல்லது இல்லாமலும் இருப்பது பொதுவான அறிகுறிகள் ஆகும் .
  • இருப்பினும் இருமல் மற்றும் ஒருவித ஒவ்வாமை அல்லது வேறு சில சுவாச நோய்த்தொற்று அறிகுறியாக இருக்கலாம் எனவே கவலைப்பட வேண்டாம் .
  • உங்களுக்கு ஒருவேளை கொரோனா இருப்பதாக உணர்ந்தால் உங்கள் மருத்துவரை அழைக்கவும். ஒருவேளை நீங்கள் நோய்வாய்ப்பட்ட ஒருவரை சுற்றி இருந்திருந்தால் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவும்.

  • இதுபோன்ற அவர் நோய்வாய்ப் பட்டிருந்தால் உங்களுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நபர்கள் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களிடமிருந்து தூரத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள் .
  • உங்களுக்கு இருமல் இருந்தால், புதிய பிறந்த குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். இவர்களிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள்.

இவர்களிடம் மட்டும் இல்லை நோய் எதிர்ப்பு சக்திக்காக மருந்து உட்கொள்பவர்கள் இடமிருந்தும் நீங்கள் சற்று விலகியே இருங்கள்.

2. உங்களுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்க உங்களுடைய வெப்பநிலையை சரிபார்க்கவும்:-

  • காய்ச்சல் வைரஸின் பொதுவான அறிகுறியாக இருப்பதால் முதலில் உங்கள் வெப்பநிலை எப்போதும் சரிபார்க்கவும்.
  • 100°4F க்கு வெப்பநிலை காய்ச்சல் என்பது கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் உங்கள் அறிகுறிகளைப் பற்றி உங்கள் மருத்துவரை அழைத்து தெரிவிக்கவும்.
  • உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அது ஒரு தொற்று நோயாக இருக்கலாம் எனவே மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.

3. உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால் அல்லது உங்களுக்கு மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள் ஏனென்றால் கரோனா வைரஸ் இருந்தால் அது சுவாசத்தை கடினமாக்கும்.

  • உங்களுக்கு மூச்சு விடுவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக ஹாஸ்பிடல் சென்று மருத்துவரைப் பாருங்கள் அதற்கு உண்டான சிகிச்சையை எடுங்கள்.

குறிப்பு: 2019 ஆம் ஆண்டில் சீனாவில் தொடங்கிய COVID-19 பரவியதால் சில நோயாளிகளில் நிமோனியாவும் காணப்பட்டது, எனவே உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.

4. தொண்டையில் புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகிய இரண்டும் மற்றொரு நோய்களின் அறிகுறியாக இருக்கக்கூடும்:-

  • coronavirus  சுவாச நோய்த்தொற்று என்றாலும் அது மூக்கு ஒழுகல் ஏற்படுத்தாது. இருமல் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை மட்டும் மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
  • ஜலதோஷம் அல்லது காய்ச்சல் போன்ற பிற நோய்களும் மற்றும் ஒரு சுவாச நோய்த்தொற்று அறிகுறியாக இருக்கலாம். உடனடியாக உங்கள் மருத்துவரிடம் சென்று அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

எப்படி குணப்படுத்துவது:

  • வீட்டிலேயே இருங்கள் நீங்கள் வீட்டிலேயே இருப்பதால் உங்களுடைய நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும். எனவே உங்களுக்கு உடல்நிலை சரியில்லாத இருக்கும்போது வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.
  • நீங்கள் மருத்துவரை பார்க்க போகின்றீர்கள் என்றால் கட்டாயமாக வைரஸ் பரவாமல் தடுக்க ஃபேஸ் மாஸ்க் அணியுங்கள்.
  •  உங்களுடைய டாக்டரிடம் நீங்கள் பழைய நிலைமைக்கு எவ்வளவு நாள் கழித்து திரும்புவோம் என்று கேளுங்கள். என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்னென்ன வேலை செய்யக்கூடாது என்பதை கேட்டு அறியுங்கள்.

2. முடிந்த அளவு நீங்கள் ஓய்வு எடுங்கள் அப்படி ஓய்வு எடுக்கும் பொழுது உங்களுடைய உடலை பழைய நிலைமைக்கு மீட்க முடியும். அப்போது உங்கள் உடலானது நோய் தொற்றை எதிர்த்து போராடும். அதனால் நீங்கள் எவ்வளவு ஓய்வு எடுக்கிறீர்கள் அவ்வளவு உங்களுக்கு நல்லது.

  • உங்களுடன் எப்போதும் உங்கள் போர்வையை வைத்திருங்கள் இதனால் குளிர்ச்சியாக இருக்கும் போது அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  •  நீங்கள் படுக்கும் பொழுது உங்கள் தலையணையை சற்று மேலே உயர்த்தி உயரமாக வைத்து படுத்துக் கொள்ளவும். இப்படி எங்கள் படுத்துக் கொள்வதால் உங்களுக்கு இருமல் அதிகமாக வருவதைத் தடுக்க முடியும்.

 

3. கொரோனா வைரஸ் உங்களுக்கு வருகிறது என்றால் உங்களுக்கு கண்டிப்பாக காய்ச்சல் மற்றும் உடல் வலி இருக்கும். அப்போது நீங்கள் (advil, motrin) (Aleve) or (Tylenol) போன்ற மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது எடுத்துக்கொள்வதால் காய்ச்சல் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவரும்.

  • எக்காரணம் கொண்டும் குழந்தைகள் அல்லது 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு அஸ்பிரின்(aspirin) கொடுக்க வேண்டாம் ஏனெனில் இது ( Reye’s syndrome) நோய்க்குறி எனப்படும் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும்.
  •   நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருங்கள், ஏனெனில் நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள காற்று சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கு சுவாசிப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. 
  •   நிறையத் தண்ணீர் ஆகாரங்களை சாப்பிடுங்கள். இளநீர், பழ ஜூஸ், தண்ணி பழம் இந்த வகையான பழங்களை நீங்கள் சாப்பிடலாம். எவ்வளவு பழங்களை நீங்கள் சாப்பிடுகிறீர்கள் அவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு உண்டாகும்.
  • தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பின்பு குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் தண்ணீரில் இருக்கும் கிருமிகள் இறந்து விடும்.
  • மேலும் காய்கறி, சூப் மூலிகை சூப் போன்ற சூப்பு வகைகளை நீங்கள் குடிக்கலாம். இதனால் உங்கள் தொண்டைக்கு உதவிகரமாக இருக்கும்.

  • எலுமிச்சை மற்றும் ஒரு ஸ்பூன் தேனை சூடான நீரில் அல்லது தேனில் கலந்து குடிக்கலாம்.

  • கிரீன் டீ குடிக்கலாம்.

  • நீங்கள் உட்கொள்ளும் உணவில் அடிக்கடி மிளகு ரசம், வெங்காயம், காய்கறிகள்அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • பழைய சாதம், வெங்காயம், கூழ், களி ஆகியவற்றை நீங்கள் சாப்பிடலாம் இதனால் உங்களுக்கு உடல் பலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாகும்.

 

மேலும் தெரிந்து கொள்ள இதை படியுங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

3

Hantavirus Symptoms; ஹண்டா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவும் விதம்

1
Hantavirus Symptoms
Hantavirus Symptoms

Hantavirus Symptoms; ஹண்டா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவும் விதம், ஹண்டா வைரஸ் எவ்வாறு பரவும், ஹண்டா வைரஸ் வராமல் தடுப்பது எப்படி, ஹண்டா வைரஸ் மருந்து அல்லது தடுப்பூசி

ஹண்டா வைரஸ் ஒரு வகையான காய்ச்சல், சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது எலிகளின் மூலம் பரவக்கூடியது. எலிகளின் சிறுநீர், எச்சில் மற்றும் மலம் ஆகியவைகளால் பரவக்கூடியது.

ஹண்டா வைரஸ் அறிகுறிகள் 

Hantavirus Symptoms: இரண்டு ஸ்டேஜ்களாக பிரிக்கலாம். ஸ்டேஜ் ஒன்றில் காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.

இரண்டாவது ஸ்டேஜ்ஜில் பாதிக்கப்பட்டு 4 முதல் 10 நாட்களில் மூச்சு திணறல், வறட்டு இருமல், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இருதய குறைபாடு ஆகியவை ஏற்படும்.

ஹண்டா வைரஸ் எவ்வாறு பரவும் 

எலிகள் அதிகமாக அடைந்து இருக்கும் இடங்களில் ஒரு எலிக்கு ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டால் அது இருக்கும் இடங்களில் சுற்றுப்புற பகுதிகளிலும் பரவும்.

மேலும் அதன் சிறுநீர், மலம் ஆகியவை தவிர்த்து பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் காற்றின் மூலமும் ஹண்டா வைரஸ் கலந்து விடுமாம். அந்த இடங்களில் நாம் சுவாசிக்கும் பொழுது எளிதாக இது உடலினுள் சென்று விடும்.

அதை நாம் சுவாசித்து உள் இழுத்ததும் முதலில் நுரையீரலை தான் பாதிக்கும்.  ஹண்டா வைரஸ் பிற விலங்குகளுக்கு பரவாது.

மேலும் ஹண்டா வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதரிடம் பரவாது. இதனால் நாம் அதிகம் பயப்படத் தேவை இல்லை.

ஹண்டா வைரஸ் வராமல் தடுப்பது எப்படி 

எலிகள் நம் வீடுகளில் அண்ட விடாமல் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் மாஸ்க் அணிந்து அவை தங்கிய இடங்களை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும்.

எலிகள் வீட்டினுள் அதிகம் வந்து போவதற்கான வழிகள் எதுவும் இல்லாமல் அதை அடைக்க வேண்டும்.

ஹண்டா வைரஸ் மருந்து அல்லது தடுப்பூசி 

ஹண்டா வைரஸுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியோ அல்லது மருந்தோ கிடையாது. பாதிக்கப்பட்ட உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அவ்வாறு அணுகினால் ஆக்சிஜன் கொடுத்து ஓரளவு அவர்களை நோயில் இருந்து காப்பாற்றலாம். தீவிரமான சிகிச்சை மூலம் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது.

For further Details visit CDC

3

தனித்தனி குரலுக்கு சொந்தக்காரர் பத்மஸ்ரீ டி எம் சௌந்தரராஜன்!

0
T M Soundararajan Birthday

T. M. Soundararajan (TMS); தனித்தனி குரலில் பாடும் வல்லமை படைத்தவர் டி எம் சௌந்தரராஜன்! எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என்று எந்த நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றவாறு தனித்தனி குரலில் பாடும் வல்லமை படைத்தவர் பாடகர் டிஎம் சௌந்தரராஜன்.

செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலே டி எம் சௌந்தரராஜன் கடைசியாக பாடிய பாடல்.

தோகுலுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் என்ற டி எம் சௌந்தரராஜனின் 98 ஆவது பிறந்தநாள் இன்று.

டி எம் சௌந்தரராஜன் (T. M. Soundararajan)

கடந்த 1922 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் டிஎம் சௌந்தரராஜன். இவரது பெற்றோர் மீனாட்சி ஐயங்கார். இவருக்கு 2ஆவது மகனாகப் பிறந்தவர் தான் டி எம் சௌந்தரராஜன்.

டி எம் சௌந்தரராஜன் கடந்த 1946 ஆம் ஆண்டு சுமுத்திரா என்பவரைத் திருமணம் செய்தார்.

டி எம் சௌந்தரராஜன் இசைப்பயிற்சி

பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் மருமகனான காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார்.

பல ஆண்டுகளாக கச்சேரி செய்து வந்துள்ளார். அப்போது, சுந்தரராவ் நட்கர்னி தனது கிருஷ்ண விஜயம் படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனி குரலுக்கு சொந்தக்காரர்

டி எம் சௌந்தரராஜன், எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், நாகேஷ் உள்பட முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் குரலுக்கு ஏற்றவாறு தனித்தனி குரலில் பாடக்கூடிய வல்லமை பெற்றவர் இவரே என்று தமிழக மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் (TMS Songs)

வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களையும், 2500க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

இவ்வளவு ஏன், ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் ஆகியோர் நடிப்பில் வந்த படங்களுக்கும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டினத்தார்

கடந்த 1962 ஆம் ஆண்டு திரைக்கு வந்த பட்டினத்தார் படத்தில் பட்டினத்தாராக நடித்தார். இதே போன்று அருணகிரிநாதர் படத்திலும் நடித்துள்ளார். அந்தப் படத்தில், முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத் திருபத்தித் திருநகை”எனும் பாடல் இன்றும் பலரது மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

பத்மஸ்ரீ விருது

கடந்த 2003 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். டி எம் சௌந்தரராஜன் 40 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்திஅ வகுத்துக் கொண்டார். தனது பாடல்களையும் இன்றும் பேசும் வகையில் உருவாக்கி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

பத்மஸ்ரீ விருது மட்டுமல்ல கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

செம்மொழியான தமிழ்மொழியாம்

கடந்த 2010 ஆம் ஆண்டு கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட செம்மொழியான தமிழ்மொழியாம் என்ர பாடலே இவர் கடைசியாக பாடிய பாடல்.

டி எம் சௌந்தரராஜன் மறைவு

கடந்த 2013 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி இதயக் கோளாறு காரணமாக சென்னையில் பிற்பகல 3.50 மணிக்கு காலமானார். அப்போது, அவருக்கு வயது 91.

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள்:

வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )

ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )

மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )

யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )

முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )

பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )

சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )

முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )

வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )

ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )

பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )

எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )

காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )

தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )

ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )

ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )

யாருக்காக ( வசந்த மாளிகை )

நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )

ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )

உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )

அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )

அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )

ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )

இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம். அவர் பாடிய பாடல்கள் ஏராளம்.

இந்த நிலையில், இன்று அவரது 98 ஆவது பிறந்தநாள். இதன் காரணமாக இன்று அவரது நினைவாக அவரது ரசிகர்கள் அவர் பாடிய பாடல்களை கேட்டு ரசித்து வருகின்றனர்.

3