Home Blog Page 199

சினிமாவில் சாதிக்க துடிக்கும் குண்டாத்தி ரம்யா நம்பீசன்!

0
Ramya Nambeesan Birthday

Ramya Nambeesan; தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் குண்டாத்தி ரம்யா நம்பீசன்! நடிகை ரம்யா நம்பீசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரம்யா நம்பீசன் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

கடந்த 1986 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி கேரளா மாநிலம் சோட்டானிக்கரா (கொச்சி) பகுதியில் சுப்பிரமணியம் உன்னி மற்றும் ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் நடிகை ரம்யா நம்பீசன் (34). இவரது தந்தை ஒரு நாடகக் கலைஞர். ரம்யா நம்பீசனனின் சகோதரர் ராகுல் ஒரு இசையமைப்பாளர்.

மலையாள படமான Philips and the Monkey Pen என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். அதோடு, Thattathin Marayathu என்ற படத்தில் பின்னணி பாடலும் பாடியுள்ளார்.

ரம்யா நம்பீசன் Iniyum Thumbikal Parannu Varum என்ற மலையாள குறும்படத்தில் நடித்துள்ளார். Sayahnam (சயஹ்னம்) என்ற மலையாள படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து வரிசையாக மலையாள படங்களில் நடித்தார்.

இயக்குநர் பசில் இயக்கத்தில் வந்த ஒரு நாள் ஒரு கனவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதே போன்ரு குள்ளநரி கூட்டம் படத்திலும் நடித்தார். அதன் பிறகு சேதுபதி ஆகிய படங்கள் ரம்யா நம்பீசனக்கு தமிழ் சினிமாவில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

தற்போது, தமிழரசன், ரேஞ்சர், ஷிவா, கெட்ட பயன் சார் இவன், ஆலம்பனா, பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய தமிழ் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவை விட கேரளாவில் மலையாள படங்களில் அதிகளவில் நடித்துள்ளார். 70க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன், பின்னணி பாடகியாகவும் அவதாரம் எடுத்து வருகிறார். இதுவரை 25 பாடல்களை பாடியுள்ளார்.

தமிழில் இவர் பாடிய ஃபை ஃபை ஃபை கலச்சிஃபை என்ற பாடலுக்கு ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் மட்டும், 8 பாடல்களை பாடியுள்ளார். இவ்வளவு ஏன், பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் வரும் அல்லோல கல்லோலம் என்ற பாடலை பாடியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் முட்டத்து நின்னு சிரிக்கும் என்ற ஐயப்பன் பாடலை பாடியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் அன்ஹைட் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகை, பின்னணி பாடகி, இயக்குநர் என்று பல திறமைகளை கொண்ட ரம்யா நம்பீசன் இன்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் நாமும் வாழ்த்து தெரிவிப்போம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா நம்பீசன்.

3

ரம்யா நம்பீசன்: என்ன ஆச்சு இப்டி ஹாட் ஆயிட்டாங்களே!!

0
ரம்யா நம்பீசன்
Ramya Nambeesan hot photos from Telugabbayi Movie

ரம்யா நம்பீசன் ஒரு சாயலில் குத்து ரம்யா போன்று இருந்தாலும் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி கதாநாயகியாக மாறியவர்.

ஆரம்பத்தில் ஹோம்லி கதாபாத்திரங்களில் வலம் வந்து பலர் மனதை கிறங்கடித்தார். ஆனால் சினிமாக்காரர்கள் சும்மாவா இருப்பார்கள்.

ரம்யா நம்பீசனை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி உலகிற்கு தள்ளி வருகின்றனர். தெலுகப்பாய் படத்தில் அவருக்கே தெரியாமல் பல காட்சிகளை ஹாட்டாக வைத்து கவர்ச்சியாக மாற்றிவிட்டனர்.

தற்பொழுது அவர் நடித்து வெளிவர இருக்கும் படம் P3. ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தின் தலைப்பே சற்று வில்லங்கமாகத்தான் உள்ளது.

இந்த படமும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் பாணியில் வருமே என யோசிக்க வைத்துள்ளது படத்தின் ட்ரைலர் கட்சிகளும், வசனங்களும்.

ரம்யா நம்பீசன் பிறந்தநாள் இன்று

ரம்யாவை ஹோம்லி கதாப்பாத்திரத்திலேயே நடிக்க வேண்டும் என பலரும் எதிர் பார்க்கின்றனர். ஆனால் அவரை இந்த திரையுலகம் கவர்ச்சி நடிகையாக மாற்றியே தீருவேன் என அடம்பிடிக்கிறது.

ரம்யா நம்பீசன் எப்போதும் போல ஹோம்லி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறி கூடவே பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

3

Hantavirus; கொரோனாவை தொடர்ந்து சீனாவில் புதிய ஹண்டா வைரஸ்

0
Hantavirus ஹண்டா வைரஸ்
Hantavirus

Hantavirus; கொரோனாவை தொடர்ந்து சீனாவில் புதிய ஹண்டா வைரஸ். இது மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு பரவாது என்பது சற்று ஆறுதலான விஷயம்.

சீனா கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒருவர் ஹண்டா வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மொத்த உலகமுமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. உலகம் முழுவதும் 400000 வரை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது சீனாவில் மேலும் தலைவலியை உண்டாக்கியுள்ளது. அவர் பேருந்தில் வந்துகொண்டிருக்கும் பொழுது உயிரழந்ததால் வந்த பேருந்தில் இருந்த மற்றவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

எலிகளில் இருந்து மனிதனுக்கு பரவக்கூடியது இந்த வைரஸ். இந்த வைரஸ் தற்பொழுது பிரான்சிலும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

Hantavirus Symptoms; ஹண்டா வைரஸ் அறிகுறிகள் மற்றும் பரவும் விதம்

எலிகளை தாக்கும் இந்த வைரஸ் பிற விலங்குகளை தாக்காது. மனிதர்களை மட்டும் தாக்கும் தன்மை உடையது. இதன் அறிகுறி தலைவலி, காய்ச்சல், வயிற்று போக்கு மட்டும் வாந்தி ஆகியவை.

இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஹாண்டா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. இருந்தாலும் சீனாவுக்கு இது இன்னொரு தலைவலியாக உள்ளது.

கொரோனா வந்தவுடன் கண்டறிய புதிய எளிய வழிகள் – CoronaVirus

3

பங்களாதேஷின் புலிக்குட்டி ஷகிப் அல் ஹசன் பிறந்தநாள் இன்று

0

90களில் பிறந்தவர்களுக்கு வங்கதேச அணி கத்துக்குட்டி என்று நினைத்தார்கள்.

அதில் வங்கதேசத்தின் பல முக்கிய வீரராக திகழ்ந்தவர்கள் அஸ்ரபுல், முஷ்பிக்குர் ரஹிம், அபிபுள் பஷர், மோர்தசா போன்று அந்த காலகட்டத்தில், புலியாக வந்தவர் ஷகிப் அல் ஹசன்.

வங்கதேச நாட்டில் மகுரா மாவட்டத்தில் மார்ச் 24ஆம் தேதி 1987 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஷகிப் அல் ஹசன்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர், 9 மாதங்கள் கழித்து அடுத்த வருடம் 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

வங்கதேசத்தில் நல்ல பேட்ஸ்மேன், நல்ல பவுலர்கள் இருந்தாலும் ஒரு அணியாக சிறந்து விளங்கவில்லை.

ஷகிப் அல் ஹசன் அணிக்குள் வரும்போது ஆல்-ரவுண்டராக வலம்வந்தார். தற்போதுவரை ஆல்ரவுண்டர் இல் நம்பர்-1 இடத்தை விட்டுக் கொடுக்காமல் இன்றுவரை விளையாடிக் கொண்டிருக்கிறார்.

56 டெஸ்ட் போட்டி, 206 ஒருநாள் போட்டி, 76 டி20 போட்டிகளில் விளையாடியவர் 11752 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 217 ரன்கள், ஒருநாள் போட்டியில் 134 ரன்கள், டி20 போட்டியில் 84 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் சர்வதேச போட்டிகள் 14 சதங்களும் 71 அரை சதங்களும் எடுத்துள்ளார்.

பந்து வீச்சிலும் இவர் சளைத்தவர் இல்லை என்பதற்கு 562 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகள் 18 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், ஒருநாள் போட்டியில் இரண்டு தடவைக்கு மேல் 5 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

இவர் இல்லாமல் வங்கதேசம் அணி விளையாடும் போது சற்று திணறி விடுவார்கள் என்றே கூறலாம்.

இந்தியா ஆஸ்திரேலியா தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக பல போட்டிகளில் வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றுள்ளார்.

வங்கதேசத்தில் இவர் ஒரு மிகப் பெரிய ஜாம்பவனாக வலம் வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

இவருக்கு வங்கதேச மட்டுமில்லாமல் உலகங்களும் அதிக ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கேப்டனாகவும் பல போட்டிகளில் வங்கதேசத்திற்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.

இவர் அதிவேகமாக ஒரு ஆல்-ரவுண்டராக 10 ஆயிரம் ரன்களையும் 500 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிக்கு எதிராகவும் 5 விக்கெட்டை வீழ்த்திய நாலாவது பந்துவீச்சாளர் ஆவார். (டேல் ஸ்டெயின், முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத்)

ஒரு ஆல்-ரவுண்டராக அனைத்து வகை போட்டியிலும் முதல் இடத்தில் இருந்த ஒரே வீரர் இவர் மட்டுமே.

சர்வதேச போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் அவர்.

ஒரு கேப்டனாக டி20 போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே சர்வதேச வீரர் இவர் மட்டுமே.

இவர் தற்போது ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் இடத்திலும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இரண்டாவது இடத்திலும் இருந்து வருகிறார்.

ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளில் அதிக ரன் மற்றும் அதிக விக்கெட் எடுத்த பங்களாதேஷ் வீரர் ஆவார்.

ஒரு உலக கோப்பை தொடரில் 600 ரன்கள் மற்றும் 10 விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் ஆவார்.

29ஆம் தேதி அக்டோபர் மாதம் 2019 ஆம் ஆண்டு ஐசிசி இவரை 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஓராண்டு விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.

இவர் என்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்

3

கொரோனாவால் பைத்தியமான இளைஞர் – வீடியோவால் பரபரப்பு

0
பைத்தியமான இளைஞர்

கொரோனாவால் இளைஞர் ஒருவர் பைத்தியமானதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா? எனத் தெரியவில்லை.

கோ கொரோனா, கொரோனா… கொரோனா.. என இளைஞர் ஒருவர் சட்டை இல்லாமல் இரண்டு தட்டுகளை வைத்து அடித்துக்கொண்டே குதிக்கிறார்.

அதைப்பார்த்து பதறிப்போன அவருடைய வளர்ப்பு பிராணி நாய் ஒன்று குரைக்கத் துவங்கிறது. உடனே அதை அடிப்பதற்கு விரட்டிச் செல்கிறார்.

இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. இவர் பள்ளி விடுமுறை என்பதால் இப்படி ஆடிப்பாடி மகிழ்வதாக சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

3

Jio Work from Home; ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஒர்க் பிரேம் ஹோம் பிளான் பற்றி தெரியுமா?

0
Jio Work from Home
Jio Work from Home

Jio Work from Home;ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள ஒர்க் பிரேம் ஹோம் பிளான் பற்றி தெரியுமா?

ஜியோ ரூ.251க்கு ஒர்க் பிரேம் ஹோம் என்ற பிளானில் 51 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இதில் பிற கால்ஸ், எஸ்எம்எஸ் எதுவும் இதில் வராது.

கொரோனா தாக்கத்தால் பெரிய பெரிய ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இணையத்தின் தேவை அதிகமாகியுள்ளது. வேகமும் குறைய தொடங்கியுள்ளது. வேலை செய்வோர்க்கு என இந்த புதிய பிளான் அறிமுகப்படுத்தியது ஜியோ.

டேட்டா அதிகமாக தேவைப்படுவோர்கள் இந்த பிளானை பயன்படுத்திக்கொள்ளலாம்.  தினமும் 3ஜிபி டேட்டா பிளான் இருக்கிறது.

அது வழக்கம் போல கால்ஸ் மட்டும் எஸ்எம்எஸ் உடன் சேர்ந்து வருகிறது. தினமும் 3ஜிபி 28 நாட்களுக்கு ரூ.349 மட்டுமே ஆகும்.

3

Kuruthi Aattam: ஹீரோ ஒர்க் அவுட்டாகல: தாதாவாகும் வாரிசு நடிகர்!

0
Kuruthi Aattam Atharvaa

Atharvaa; ஹீரோ ஒர்க் அவுட்டாகல: தாதாவாகும் வாரிசு நடிகர்! குருதி ஆட்டம் படத்தில் நடிகர் அதர்வா தாதாவாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதர்வா வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, இமைக்கா நொடிகள், பூமராங், 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார். எனினும், மாஸ் ஹீரோவா என்றால் இல்லை.

தற்போது குருதி ஆட்டம் (Kuruthi Aattam), தள்ளி போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

எட்டு தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கும் படம் குருதி ஆட்டம் (Kuruthi Aattam). இதில், அதர்வா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில், குருதி ஆட்டம் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீகணேஷ் கூறியிருப்பதாவது:

அதிரடி சண்டைக் காட்சிகளை உள்ளடக்கிய 2 தாதாக்களைப் பற்றிய படம். இதில் அதிர்வா, ராதாரவி இருவருக்கும் இடையில் மோதல் நடக்கிறது. அதுதான் திரைக்கதை. மதுரையை பின்னணியாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதர்வா, ராதாரவி, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கிடையே நடக்கும் சம்பவங்கள்தான் படம் என்று கூறியுள்ளார்.

ஸ்ரீகணேஷ் இப்படி கூறியதுமே நமது ஞாபகத்திற்கு வருவது, கௌதம் கார்த்திக் நடிப்பில் வந்த தேவராட்டம் படம் தான். அதில், கௌதம் கார்த்திக் வழக்கறிஞராக இருந்து கொண்டு ரவுடியை போட்டுத்தள்ளுவது.

கௌதம் கார்த்திக் குடும்பத்திற்கும், ரவுடிக்கும் இடையில் நடக்கும் சம்பவம். மதுரையை பின்னணியில் வைத்து படம் உருவாக்கப்பட்டது. இதே பாணியில், குருதி ஆட்டம் படம் உருவாக்கப்பட்டுள்ளதால், படம் பற்றி இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

3

சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நிதியுதவி!

0
Sivakarthikeyan FEFSI

FEFSI Sivakarthikeyan; சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நிதியுதவி! பெப்சி தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 100க்கும் அதிகமாக உலக நாடுகளை கடந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19 ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டன.

இதன் காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், அனைத்து தொலைக்காட்சி மற்றும் அதன் உரிமையாளர்கள் என்று பலருக்கும் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ஒரு வேண்டுகோள் வைத்தார்.

சினிமா வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.

10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட ரூ.2 கோடி ஆகிறது.

கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே. செல்வமணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதலாவதாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ஓடோடி வந்துள்ளனர். ஆம், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், சிவகுமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சேலம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மூட்டை அரிசியை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் பார்த்திபன் 25 கிலோ கொண்ட 250 அரிசி மூட்டை வழங்கியுள்ளார். ஜெகன் ரூ.5000, ஜீனியஸ் பட நடிகர் ரோஷன் ரூ.17,000, இயக்குநரும், நடிகருமான மனோபாலா அரிசி மூட்டையும் வழங்கியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து சில நண்பர்கள் அரிசி மூட்டை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வெறும் நான்கு நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு; கொரோனா வேர்ல்ட் அப்டேட்

0
கொரோனா வேர்ல்ட் அப்டேட்
WHO chief Tedros Adhanom

வெறும் நான்கு நாளில் ஒரு லட்சம் பேர் பாதிப்பு; கொரோனா வேர்ல்ட் அப்டேட்

கொரோனா பாதிக்கப்பட்டோரில் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் வருவதற்கு வெறும் 4 நாட்களே ஆகியது என உலக சுகாதார மைய முதன்மை இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கேபிரியேசஸ் கூறியுள்ளார்.

இதுவரை உலகம் முழுவதும் 380000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சீனாவில் தொடங்கிய பொழுது முதல் ஒரு லட்சம் நபர்கள் பாதிக்க 67 நாட்கள் ஆனது. ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் ஆக வெறும் 11 நாட்களே ஆகியது.

இப்பொழுது இரண்டிலிருந்து மூன்று வர வெறும் 4 நாட்களில் ஆகியுள்ளது. கொரோனா பாதிக்கும் வேகத்தை பார்க்கையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வீதம் ஆகி விடுமோ என்ற கவலை ஆகிவிட்டது.

நாம் அனைவரும் விழிப்புணர்வாக செயல்பட்டால் மட்டுமே இதை கட்டுப்படுத்த இயலும்.

3

கொரோனா வந்தவுடன் கண்டறிய புதிய எளிய வழிகள் – CoronaVirus

0
coronavirus கொரோனா அறிகுறிகள்

கொரோனா வந்தவுடன் கண்டறிய எளிய வழிகள். New symptoms of coronavirus. கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் புதிய உண்மை புலப்பட்டு உள்ளது.

பிரிட்டி‌ஷ் ரைனலாஜிகல் சொசைட்டி தலைவர் கிளேர் ஹாப்கின்ஸ் மற்றும் இங்கிலாந்து மருத்துவர் குழு தலைவர் நிர்மல் குமார் இருவரும் சேர்ந்து ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா தொற்று (coronavirus) ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் தான் கொரோனா அறிகுறிகள் நமக்கு தெரியவரும். தொண்டை எரிச்சல், இருமல், காய்ச்சல் வந்த பிறகே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்கின்றனர்.

அதற்குள் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவி விடுகிறது. கொரோனா வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் தீவிர ஆய்வு மேற்கொண்டதில் ஒரு உண்மை புலப்பட்டு உள்ளது.

புதிய கொரோனா அறிகுறிகள்

அவர்களிலும் பெரும்பாலனவர்கள் கூறியது ஒரே போல் இருந்தது. அவர்களால் சுவைய உணர முடியவில்லை. மேலும், வாசனையையும் நுகர்வதில் சிக்கல் இருந்துள்ளது.

இவர்களுக்கு மற்ற அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை வலி, இருமல் வருவதற்கு முன்பே இதுபோன்ற பிரச்சனைகள் இருந்துள்ளது.

பூண்டின் வாசனையைக் கூட அவர்களால் நுகர முடியவில்லை. இதில் ஆதாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், இந்த நேரத்தில் இது நமக்கு உதவும்.

காய்ச்சல், இருமல் வந்தால் தான் கொரோனா வந்துள்ளது என எண்ணாமல் அதற்கு முன்பே உங்களுக்கு வாசனை நுகர்தல் பிரச்னை இருந்தாலோ, சுவை அறிதல் பிரச்னை இருந்தாலோ மருத்துவரை அணுகி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தாரிடம் இருந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

3