Home Blog Page 200

பாதித்தோர் 500, பலியானோர் 10; மதுரை மக்கள் பீதி

0
கொரோனா இந்தியா அப்டேட்
கொரோனா இந்தியா அப்டேட்

பாதித்தோர் 500, பலியானோர் 10; கொரோனா இந்தியா அப்டேட், தமிழ்நாட்டில் 144 தடை, மதுரை மக்கள் பீதி. corona india, tamilnadu news.

இந்தியாவில் கொரோனோவால் பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாகவே அதிகரித்து வருகிறது. நேற்றுடன் பாதித்தோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 380000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 30 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் லாக் செய்யப்பட்டது. ரயில் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று மாலையிலிருந்து 144 தடை உத்தரவு ஆரம்பிக்கிறது. சட்டத்தை மீறி வெளியில் சுற்றுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

மதுரை மக்கள் பீதி 

மதுரையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது. அதில் சிக்கல் என்னவென்றால் தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா தொற்றிய முதல் நபர் இவர்.

அவருக்கு எந்த வித வெளிநாட்டு தொடர்பும் இல்லை என அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். இதனால் மதுரை மக்கள் சற்று பீதி அடைந்துள்ளனர்.

3

24/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
24/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

24/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

நன்கு யோசித்து முடிவுகளை எடுங்கள். வீடு, மானை ஆகியவற்றால் உங்களுக்கு பணச் செலவு அதிகமாகலாம்.

ரிஷப ராசிபலன்

நீங்கள் நம்பிக்கையுடன் ஈடுபடும் காரியங்கள் வெற்றியைத் தேடித் தரும். பணியில் வளர்ச்சி ஏற்படும். மனைவியிடம் அன்பு பாராட்டுவீர்கள்.

மிதுன ராசிபலன்

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். புத்திசாலித்தனத்துடன் வேலையை செய்து முடிப்பீர்கள். பணி கூடுதலாக இருந்தாலும், பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.

கடக ராசிபலன்

பிரச்சனைகளை தவிற்பதற்கு பொறுமையை கடைபிடியுங்கள். பணியிடத்தில் கடுமையாக உழைப்பது நல்ல பலனை தரும். உங்கள் துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

சிம்ம ராசிபலன்

இன்று உங்களுக்கு மந்தமான நாள். அலுவலகத்தில் சக பணியாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவீர்கள்.

கன்னி ராசிபலன் 

நீங்கள் முன்னேற்ற பாதையில் செல்ல குறிக்கோளுடன் செயல்படுவீர்கள். பணி சவால்கள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் திறமை மூலம் சாதிப்பீர்கள்.

துலா ராசிபலன்

பணியிடத்தில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. சூழ்நிலையை புரிந்துகொண்ட பணிகளை சிறப்பாக கவனிப்பீர்கள். வரவு, செலவு என மாறி மாறி நிகழும்.

விருச்சிக ராசிபலன்

இன்று பொதுவான ஒரு இலக்கை நோக்கி செல்வீர்கள். அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் புத்திசாலிதனத்துடன் செயல்பட்டு பணிகளை எளிதில் முடிப்பீர்கள்.

தனுசு ராசிபலன்

சில தடைகளுக்குபின் உங்கள் பணியை விடா முயற்சியுடன் மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். காதல் மற்றும் சுப நிகழ்சிகளை சில நாட்களுக்கு தள்ளிவைப்பது நல்லது.

மகர ராசிபலன் 

திறமைக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையில் சமயோசித புத்தியுடன் செயல்பட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேவைக்கு ஏற்ற வருவாய் கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

எந்த முடிவு எடுத்தாலும் மனதை தெளிவு படுத்திக்கொண்டு எடுங்கள். பணிச்சுமை அதிகமாகும். இது உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும்.

மீன ராசிபலன் 

திட்டமிட்டு செயல்படுவதால் தொழில் வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகளின் பிரச்சனைகள் ஏற்படலாம். சூடான வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

24/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

ஸ்மித், வார்னர், பேன் கிராஃப்ட் ஐசிசி தடை இன்று

0

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஸ்மித் வார்னர் பேன் கிராஃப்ட் மூவரும் பால் டம்பெரிங் செய்த நாள் இன்று

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

டர்பன் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 117 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியா வீழ்த்தியது.

இரண்டாவது டெஸ்ட்

போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

கேப்டவுன் நகரில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது.

டீன் எல்கர் சதம்

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டுப்லஸ்ஸிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

டீன் எல்கர் 141 ரன்களும், டிவிலியர்ஸ் 64 ரண்களின் துணையுடன் தென்ஆப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 311 ரன்கள் எடுத்தது.

முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது.

ரபாடா மோர்க்ள் அசத்தல்

அந்த அணியில் அதிகபட்சமாக ஃபேன் கிராப்ட் 77 ரன்கள், நாதன் லயன் 47 ரன்கள் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா மற்றும் மோர்னி மோர்க்கல் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பிலாண்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சர்ச்சையில் சிக்கிய மூவர்

56 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி மார்ச் 24ஆம் நாள் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.

இந்த மைதானத்தில் பந்து திரும்பாத போது ஆஸ்திரேலியா ஸ்பின்னர்கள் அருமையாக பந்து வீசினார்கள்.

அப்போது பதிவு செய்த தொலைக்காட்சியில் வேலை பார்ப்பவர்கள் சந்தேகித்து சில வீடியோக்களை மீண்டும் பார்க்க தொடங்கினார்கள்.

அங்குதான் சில விஷயங்கள் அவர்களின் பார்வைக்கு தென்பட்டது. ஆம் ஸ்மித், வார்னர், பேன் கிராப்ட் மூவரும் சேர்ந்து பந்தை கிரிஸ்டலால் சேதப்படுத்தியது, அதாவது பால் டம்பெரிங் செய்தது தெரியவந்தது.

அடுத்த கணமே அதை டிவியில் மேலும் மேலும் ஒளிபரப்ப, மைதானத்துக்கு வெளியிலிருந்து ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் மற்றொரு வீரர் டீம் பைனேவிடம் வாக்கி டாக்கியில் அங்கு என்ன நடக்குது என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையெல்லாம் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று இந்த தவறு செய்தவர்கள் ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

மற்ற விரல்கள் கவனத்தை திசை திருப்பி பேன் கிராப்ட் வந்த இடத்தில் கிரிஸ்டலால் சேதப்படுத்தி மீண்டும் கிரிஸ்டலை தான் உள்ளாடைக்குள் மறைக்கும் போது வீடியோவில் மாட்டிக்கொண்டார்.

தவறை ஒப்புக் கொண்ட மூவர்

அன்றைய நாள் முடிந்தது பிரஸ் கான்ஃபரன்ஸ் நடந்தது. அதில் ஸ்மித், வார்னர், பேன் கிராஃப்ட் மூவரும் தங்கள் தவறை ஒப்புக் கொண்டனர்.

அடுத்த நாள் அந்த டெஸ்ட் தொடர்ந்தது ஆனால் இரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா அணி 373 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆஸ்திரேலியா அணிக்கு 430 ரன்கள் இலக்காக வைத்தனர்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி மனம் நொந்து விளையாடினார்கள்.

தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா

நான்காவது நாள் முடிவில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் தென் ஆப்பிரிக்க அணியிடம் 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்கள்.

இரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணியின் மோர்னி மோர்க்கல் 5 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார். இவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

பால் டம்பரின் சர்ச்சை

பின்பு இந்த பால் டம்பெரிங் சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. கைதிகளைப் போல வார்னர், ஸ்மித், பேன் கிராஃப்ட் மூவரையும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

தடைசெய்த ஐசிசி

விசாரணையில் அவர்கள் செய்த தவறு உறுதி செய்யப்பட்டது.இதற்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் முதலில் திட்டம் தீட்டியும் இதற்கு பேங்க் கிராப்ட் செய்ய வற்புறுத்தப்பட்டது.

தெரியவந்தது ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதித்தது ஐசிசி.

அவர்களுக்கு துணை போன பேன் கிராப்ட்க்கு ஒன்பது மாதங்கள் மட்டுமே தடைவிதித்தது.

ஸ்டீவ் ஸ்மித்திடம் கேப்டன் பறித்து பதவி டிம் பைனே கொடுத்தனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு இது மிகப் பெரிய கருப்பு நாளாக அமைந்தது.

அந்த நாட்டு பிரதமர் இது நம் நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு என்று குறிப்பிட்டிருந்தார்.

வார்னர், ஸ்மித்தும் தடை நீங்கி மீண்டும் அணியில் இடம்பிடித்து விஸ்வரூபம் எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனாவை கண்டு பிடித்த மருத்துவரிடம் மன்னிப்பு கேட்ட சீன அரசு

0

சீனாவின் முதல் முறையாக கொரோனா வைரசை கண்டுபிடித்து எச்சரித்த மருத்துவரிடம் மன்னிப்பு கேட்ட சீன அரசு.

கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி சீனாவிலுள்ள யுனான் மாகாணத்தில் முதல் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.

ஜனவரி 14ஆம் தேதி வரை கொரோனா வைரஸை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சீன அரசு.

இது ஆரம்ப காலத்திலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் ஓரளவு தடுத்து இருக்கலாம்.

வுகானில் உள்ள 34 வயது கண் மருத்துவரான டாக்டர் லி வென்லியாங் மத்திய மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

சார்ஸ் போன்ற நோய்கள் பரவுவதை பற்றி எச்சரிக்கை விடுக்க முயன்றார். ஆனால் வதந்திகளை பரப்புவதாக சீன அரசு அவரைத் தண்டித்தது.

கொரோனா வைரஸ் நிவாரண முயற்சிகளுக்கு உதவும்போது டாக்டர் லீ அதே நோயால் இறந்து போனார்.

சீன அரசு பின்னர் சுதாரித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்து வந்தது.

கொரோனா வைரஸ் சீனாவில் பரவிய காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 3500 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

தற்போது அந்த வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பல உயிர்களைக் கொன்று அச்சுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் சீன அரசு இந்த நோயை முதன்முதலில் கண்டுபிடித்து எச்சரித்த டாக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

முதன்முதலில் இந்த நோயை கண்டு பிடித்த மருத்துவரை அரசு பாராட்டாமல் தண்டித்தது. அந்த நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த டாக்டரை ஹீரோ போல் அந்த நாட்டு மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சீன அரசு தற்போது தங்களது தவறை உணர்ந்து அந்த டாக்டரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

வுகான் போலீசார் கொடுத்த அறிக்கையில் டாக்டர் லீ தான் எங்களுக்கு முதல் முறையாக கொரோனா வைரஸ் பற்றி சொன்னவர்.

ஆனால் நாங்கள் அவர் பேச்சைக் கேட்காமல் அவர் மீது வழக்கு பதிவு செய்தோம். நாங்கள் செய்தது தவறு. இதை இனி எங்களால் மாற்ற முடியாது.

அவர் சொன்ன போதே நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். அப்படி செயல்பட்டு இருக்கும் பட்சத்தில் நாங்கள் இந்த வைரஸை தடுத்திருக்க முடியும்.

இதனால் பலர் பலியாகி இருக்க மாட்டார்கள் ஆனால் எங்களால் முடியாமல் போனது.

மக்களுக்காக உயிர் நீத்த டாக்டர் லீ வென்யோங்கிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.

அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறோம் என்று சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

நாம் சில நல்லவர்களை உதாசீன படுத்தும்போது அதற்கு நாம் பல உயிர்களை கொடுக்க வேண்டியதாயிற்று. இனியாவது சீன அரசு திருந்த வேண்டும்

3

தொழிலாளர்களுக்காக ஓடோடி வந்த சூர்யா, கார்த்தி, சிவகுமார்!

0
Suriya Help To FEFSI Workers

FEFSI Workers; தொழிலாளர்களுக்காக ஓடோடி வந்த சூர்யா, கார்த்தி, சிவகுமார்! கொரோனா வைரஸ் காரணமாக முடங்கியிருக்கும் சினிமா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிவகுமார் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் நடு நடுங்கி வருகிறது. சீனாவில் தொடங்கி 100க்கும் அதிகமான உலக நாடுகளையும் கடந்து தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 19 ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டன.

இதன் காரணமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், அனைத்து தொலைக்காட்சி மற்றும் அதன் உரிமையாளர்கள் என்று பலருக்கும் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி ஒரு வேண்டுகோள் வைத்தார்.

FEFSI Workers RK Selvamani

வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும்.

10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட ரூ.2 கோடி ஆகிறது.

கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே. செல்வமணி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதலாவதாக சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் ஓடோடி வந்துள்ளனர்.

ஆம், தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், சிவகுமாரின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.

சேலம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மூட்டை அரிசியை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நடிகர் பார்த்திபன் 25 கிலோ கொண்ட 250 அரிசி மூட்டை வழங்கியுள்ளார். ஜெகன் ரூ.5000, ஜீனியஸ் பட நடிகர் ரோஷன் ரூ.17,000, இயக்குநரும், நடிகருமான மனோபாலா அரிசி மூட்டையும் வழங்கியுள்ளனர்.

Parthiepan FEFSI Workers

3

Corona: கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை – தொழிலாளர் வேதனை: ஆர்.கே.செல்வமணி!

0
RK Selvamani FEFSI

FEFSI R K Selvamani; கொரோனாவால் செத்தாலும் பரவாயில்லை – தொழிலாளர் வேதனை: ஆர்.கே.செல்வமணி! தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் ஆர்கே செல்வமணி நடிகர், நடிகைகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வைத்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (Film Employees Federation of South India) தலைவர் ஆர்கே செல்வமணி நடிகர், நடிகைகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: உலக முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தமிழ் திரைப்பட உலகம் முடக்கியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை, தயாரிப்பாளர்களை எதிர்த்து ஊதிய உயர்வு கேட்டும், அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு வேலைநிறுத்த போராட்டங்களை சந்தித்துள்ளனர்.

ஆனால், தற்போது நடக்கின்ற வேலை நிறுத்த போராட்டம் முற்றிலும் வேறுபட்டது. தேசம் மற்றும் சமூகத்தை காக்கவேண்டும் என்பதற்காக தங்களே தாங்களே முடக்கிக் கொண்டு நடைபெறுகின்ற இந்த வேலை முடக்கம் தமிழ் திரைப்படத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை மிகவும் பாதித்துள்ளது.

சம்மேளனத்தில் உறுப்பினராக இருக்கும் 25 ஆயிரம் பேரில், ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று தினசரி வருமானம் பெற்று அதன் மூலம் வாழ்க்கை நடத்தும் அப்பாவி தொழிலாளர்கள்.

இன்று காலை லைட்மேன் சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் எனக்கு போன் செய்து சார், வேலை நிறுத்தம் எப்போது முடியும் என்று கேட்டார். நான் 15 முதல் 20 நாட்கள் வரை ஆகும் என்றேன்.

இதற்கு, சார் வேலைக்கு சென்று செத்தாலும் கூட பரவாயில்லை. சாப்பாடு இல்லாமல் எனது குழந்தைகள் பசியால் சாவதை விட கொரோனா  வைரஸால் நான் செத்தாலும் பரவாயில்லை என்று வேதனையுடன் கூறிய போது ஏற்பட்ட மன வேதனைகளை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

திரைப்பட துறையில் நல்ல நிலையில், இருக்கின்ற நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும், திரைப்பட தொழிலின் மற்ற அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதநேய பண்பாளர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:

நமது சம்மேளத்தில் உறுப்பினராக இருக்கும் 25 ஆயிரம் பேரில் இவரைப் போன்று ஒரு வேலை சோற்றிற்கு கூட கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

அவர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி தந்தால், அவர்கள் கஞ்சி சோறாவது சாப்பிட்டு உயிர் வாழ இயலும். 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்பதாக இருந்தால், ஒரு மூட்டை சுமாரான அரிசி என்றாலும் 1250 ரூபாய் என கணக்கு வைத்தால் கூட  ரூ.2 கோடி ஆகிறது.

கருணை உள்ளம் படைத்த தாங்கள் தயவு கூர்ந்து உங்களோடு பணிபுரிந்து உங்களோடு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு உணவு அளிப்பீர், வாழ்வு அளிப்பீர், நிதி அளிப்பீர் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் கட்டமாக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Infinix Hot 9 specs tamil : 5000Mah Battery, 4GB Ram 128 Storage Under 10000, Unboxing | Infinix Hot 9 | 2020

0
infinix hot 9

Infinix Hot 9 tamil specification: 5000Mah Battery, 4GB Ram 128 Storage Under 10000, Unboxing | Infinix Hot 9 | 2020

Infinix hot 9 ஐ அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த smartphone படம் internet ல் கசிந்துள்ளது, இது தொலைபேசியின் பளபளப்பான பச்சை green outlook பின் பேனலைக் காட்டுகிறது. தொலைபேசியின் பின்புறத்தில் ஒரு பெரிய வட்ட கேமரா உள்ளது. இந்த infinix hot 9 ஒரு குவாட்-கேமரா மற்றும் குவாட்-எல்இடி ஃபிளாஷ் அமைப்பைக் கொண்டுள்ளது. நான்கு கேமரா சென்சார்களில் 48 மெகாபிக்சல் சென்சார் இருக்கும். பிற சென்சார்களில் அல்ட்ரா-வைட் சென்சார், மேக்ரோ சென்சார் ஆகியவை இருக்கலாம் என்று தெரிகிறது.

Fingerprint ஸ்கேனர் பின்புற பேனலில் காட்டப்படவில்லை. இன்பினிக்ஸ் ஹாட் 9 முன் அல்லது பக்கத்தில் கைரேகை ஸ்கேனரைக் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும், இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் க்கு சாத்தியமில்லை என்று தான் தெரிகிறது. ஏனெனில் இதன் விலை ரூ. 1000 க்குள் இருக்கும் என்பதால் இது சாத்தியமில்லை.

Infinix Hot 9 வெளியீட்டு தேதி

இந்த பிராண்ட் தனது பேஸ்புக் பக்கத்தில் வரவிருக்கும் ஸ்மார்ட்போனுக்கான புதிய டீஸரை வெளியிட்டது. ‘ஹாட் சம்திங் ஹாட்’ என்ற டீஸர் 18 நாட்களில் அறிமுகப்படுத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது. எனவே இன்ஃபினிக்ஸ் ஹாட் 9 ஐ ஏப்ரல் 7 அன்று வெளிவரலாம் . இந்த விவரங்களைத் தவிர, ஸ்மார்ட்போன் பற்றி இன்னும் அதிகமான தகவல்கள் இல்லை.

infinix hot 9

Infinix Hot 9

infinix Hot 8 என்பது இன்ஃபினிக்ஸ் ஹாட் series கடைசி தொலைபேசியாகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டியூ-டிராப் டிஸ்ப்ளே 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் டிரிபிள் ஏஐ கேமரா கொண்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 8 மீடியாடெக் ஹீலியோ ஏ 22 இல் 2 ஜிபி + 32 ஜிபி வகைகளில் இயங்குகிறது. ஹை எண்ட் 4 ஜிபி + 64 ஜிபி மாறுபாடு மீடியா டெக் ஹீலியோ பி 22 SoC ஆகும்.

மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோ பார்க்கவும் :-

 

3

Realme Narzo 10: மார்ச் 26-ல் இந்தியாவில் அறிமுகமாகும்

0

இப்போது realme narzo 10 இந்தியாவில் லான்ச் ஆகப்போகிறது. இது அதிகாரப்பூர்வமாக ரியல்மீ கம்பெனி வெளியிட்டுள்ளது .

இந்தப் புதிய மொபைல் போன் மக்களின் கவனத்தை கண்டிப்பாக ஈர்க்கும் என்று அந்த கம்பெனி தெரிவித்துள்ளது. இது பற்றி சில தகவல்களை அது வெளியிட்டுள்ளது அதை நாம் இப்போது பார்க்கலாம் .

Realme Narzo 10, Narzo 10A specifications

முதலில் இதனுடைய டிஸ்ப்ளே பற்றி பேச வேண்டும் என்றால் இது 6.5 இன்ச் அகலம் கொண்ட திரையாக வரவிருக்கிறது.

இது mediatech பிராசஸர் கொண்டது. இதனுடைய பிரண்ட் கேமரா 16MP மற்றும் ரியர் கேமரா 48 மெகாபிக்சல் 8 மெகாபிக்சல் இரண்டுமே பிக்சல் 2 மேகபிக்சல் கொண்டதாக வருமென்று சொல்லப்படுகிறது.

இதனுடைய ராம் 3gp ஸ்டோரேஜ் 64 ஜிபி மற்றும் பேட்டரி திறன் 5000mah, இது  ஆண்ட்ராய்டு OS 10.0 ல் வரும்.

மேலும் இந்த போனை பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.

3

இப்படியொரு டிக் யாருமே பண்ணமாட்டாங்க: நயன்தாரா விக்னேஷ் சிவன் நியூ வீடியோ!

0
Nayanthara Latest Video

Nayanthara; இப்படியொரு டிக் யாருமே பண்ணமாட்டாங்க: நயன்தாரா விக்னேஷ் சிவன் நியூ வீடியோ! நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ஆங்கில பாடல் ஒன்றிற்கு டிக் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ்க்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இன்னும் மருந்து கண்டுப்பிடிக்காத நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவுவதை தடுக்க நேற்று ஒருநாள் மட்டும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

இதையடுத்து, நம்மை பாதுகாத்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று மாலை அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பொதுமக்கள் என்று பலரும் கைதட்டி ஆரவாரம் செய்து மருத்துவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை 19 மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மால்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ஒரு ஆங்கில பாடலுக்கு டிக் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவை பதிவிட்டதோடு, சுய தனிமை மற்றும் தரமான நேரம் QuarantineLife என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கைதட்டியதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில் காதலி நயன் தாராவின் கையோடு தனது கையை சேர்த்து பதிவிட்ட புகைப்படம் செம்மயாக வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரது கையிலும் ஒரே மாதிரியான மோதிரம் இடம்பெற்றிருந்தது. நயன் தாராவிற்கு இடது கையிலும், விக்னேஷ் சிவனுக்கு வலது கையிலும் அந்த மோதிரம் இருந்தது.

ஆதலால், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்குமோ என்று ரசிகர்கள் கொஞ்சம் ஆவலோடு கேள்வி எழுப்புகின்றனர்.

Nayanthara And Vignesh Shivan hand

3

ஊரடங்கு உத்தரவு: மீறி வெளியில் சுத்துவோரை கைது செய்ய அரசு முடிவு

0

ஊரடங்கு உத்தரவு: மீறி வெளியில் சுத்துவோரை கைது செய்ய அரசு முடிவு, கோரோனோவை அலட்சிய படுத்தும் மக்கள் மோடி கவலை.

கோரோனோ வைரஸின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் இந்தியாவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இது வரை 415 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 85 நபர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா வைரஸை அலட்சியப்படுத்தும் மக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

மக்கள் கோரோனோவின் விபரீதம் தெரியாமல் அதை அலட்சியபடுத்துகின்றனர் என பிரதமர் மோடி வருத்தப்பட்டு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அப்பதியில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் வீட்டில் தனிமையாக இருங்கள் எனவும் கூறியுள்ளார்.

3