Home Blog Page 284

19-வது ஓவரில் சஹாரிடம் அப்படி தோனி என்னதான் கூறினார்: மால்தி சஹாரின் பதில்

0

19-வது ஓவரில் சஹாரிடம் அப்படி தோனி என்னதான் கூறினார்: மல்தி சஹாரின் பதில்

சென்னை அணி கடந்த சனிக்கிழமை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில், 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன் தேவைப் படுகின்ற நிலைமையில் சென்னை அணியின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பிராவோ இல்லாத நிலையில் தீபக் சஹார் பந்து வீச வந்தார்.

பெரும்பாலும், முதல் 10 ஓவர்களுக்குள்ளே தீபக் சஹாரை அவரது 4 ஓவர்களையும் வீச வைத்துவிடுவார் தோனி .

12 பந்துகளில் 39 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில், ஸ்லோ பால் போட முயன்று, முதல் இரண்டு பந்துகளிலும் பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸாக நோ பால் போட்டார்.

பந்து எதுவும் இல்லாமல் 8 ரன்களை கொடுத்து விட்டார். இதனால் பொறுமை இழந்த கேப்டன் கூல் தோனி சஹாரிடம் சிறிது நேரம் உரையாடினார்.

பிறகு பந்து வீசிய சஹார் வெறும் 6 ரன்களில் பந்து வீசி மில்லர் விக்கெட்டையும் எடுத்தார். அப்படி என்னதான் தோனி சஹாரிடம் கூறினார் என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தக் கேள்வியை ஒரு ரசிகர் தீபக் சாஹரின் சகோதரியான மால்தி சஹாரிடம் இன்ஸ்டாகிராமில் கேட்டுள்ளார்.

அதற்கு மால்தி, “அவர், அதை என்கிட்டையே சொல்ல மாட்டேங்குறாருபா, தெரிஞ்சிக்காம என் தலையும் வெடிச்சிரும்போலதான் இருக்கு” என ஜாலியாகப் பதில் அளித்திருக்கிறார்.

சென்னை சூப்பர்கிங்ஸ் ஆடும் ஆட்டங்களைப் பார்க்க வரும் இவர், ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பெங்களூர் அணி தொடர்ந்து 6வது தோல்வி: கன்னித்தீவு கதையைப் போல இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

0
கொரோனா COVID19
Royal Challengers Bangalore captain Virat Kohli fields during the VIVO IPL cricket T20 match against Delhi Daredevils' in New Delhi, India, Saturday, May 12, 2018. (AP Photo/Altaf Qadri)

பெங்களூர் அணி தொடர்ந்து 6வது தோல்வி: கன்னித்தீவு கதையைப் போல இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

ஐ.பி.எல் தொடரின் 20-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயார் முதலில், பீல்டிங் தேர்வு செய்தார்.

பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேல் – கேப்டன் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

பார்த்தீவ் (9), டி வில்லியர்ஸ் (17), மார்கஸ் ஸ்டோயினிஸ் (15) ஆகியோர் விரைவில் ஆட்டமிழக்க, மற்றொரு பக்கத்தில் கேப்டன் விராட் கோலி பொறுமையாக ஆடினார்.

அடுத்து வந்த மொயின் அலி அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோலி 33 பந்துகளில் 41 ரன்களில் எடுத்து அவுட்டானார்.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். பிரித்வி ஷா (28), கொலின் இங்ரம் (21) ஆகியோர் ஓரளவுக்கு சேர்த்து வெளியேறினர்.

பொறுமையாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 10 ஓவருக்கு மேல் அதிரடி காட்ட 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், வேகமாக விக்கெட்டுகள் சரிந்தாலும் டெல்லி அணி எளிதாக 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர் அணிக்கு இது தொடர்ந்து 6வது தோல்வியாகும். ஐ‌பி‌எல் வரலாற்றில் ஒரு சீஸனில் முதல் 6 போட்டிகளில் தோற்ற அணி என்ற சாதனையைப் படைத்தது.

 

3

Movie Review Natpe Thunai – நட்பே துணை திரைவிமர்சனம்

0

Movie Review Natpe Thunai – நட்பே துணை திரைவிமர்சனம்

ஹிப்ஆப் தமிழன் ஆதி இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மீசையை முறுக்கு படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தவர்.

இவரின் வெற்றிக்குப் பின்னரே ஒரு யுடியூப்பர் நினைத்தால் எந்த உயரத்திற்கும் செல்ல முடியும் என பல யுடியூப்பர் நடிகராக உருவாகியுள்ளனர்.

இந்த படத்திலும் நட்பே துணை என அனைத்து யூடியூப் பட்டாளங்களும் உள்ளனர். மீசையை முறுக்கு படத்தின் வெற்றியால் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங்.

ஆனால் படம் தான் படு குப்பையாக உள்ளது. காரணம் படத்தின் மெயின் சப்ஜெக்ட் சைடிஸ் போன்று யூஸ் பண்ணி உள்ளனர்.

மீசையை முறுக்க படம் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு மோட்டிவேசன் படமாக அமைந்தது. இன்றும் அந்தப் படத்தின் பாடல், தீம் மியூசிக் கேட்டால் நாடி நரம்புகள் முறுக்கேறும்.

அப்படி ஒரு படம் கொடுத்த டீம் இன்று திக்குதெரியாத காட்டில் விட மான் போல ஒரு படத்தை எடுத்துள்ளனர்.

ஹிப்ஆப் இசை என்றாலே தனிச்சிறப்பு பாடல் வரிகள். இந்த படத்தில் சிங்கிள் பசங்க பாடல் தவிர வேறு எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை.

சிங்கிள் பசங்க பாடல் கூட படத்திற்கு தேவையில்லாத ஒரு இணைப்பாகவே உள்ளது. படத்தில் ஆரம்பத்தில் வைக்க வேண்டிய பாடல் இன்டர்வலில் உள்ளது.

படம் ஹாக்கியை பற்றிய படம் எனக் கூறினார்கள். சரி ‘கனா’ படம் போன்று நிச்சயம் ஒரு மோட்டிவேசன் படமாக இருக்கும் என நம்பிச்சென்றால் ஏமாற்றமே.

முதல் பாதியில் கடைசி 15 நிமிடம். இரண்டாம் பாதியில் கடைசி 15 நிமிடம் மட்டுமே ஹாக்கி பற்றி உள்ளது.

மற்ற நேரம் முழுவதும் காதல் செய்கிறேன். காமெடி செய்கிறேன் என நம்மை வறுத்து எடுத்துவிட்டனர்.

முதல் 45 நிமிடம் வறுத்தெடுத்துவிட்டு மிகப்பெரிய ஒரு இன்டர்வெல் பிளாக் வைத்தனர். நெல்சன் திலீப்குமார் போன்று இந்திய அணிக்கு ஹாக்கி விளையாடிய பிரபா கதாப்பாத்திரம்.

இரண்டாம்பாதி வேற லெவல் என உற்சாகத்துடன் மீண்டும் உள்ளே நுழைந்தால் மீண்டும் அதே அறுவை கடைசியாக ஒரு ஹாக்கி போட்டியுடன் படத்தை முடித்துவிட்டு ஸ்போர்ட்ஸ் மூவி என சப்பைக்கட்டு கட்டிவிட்டனர்.

இவ்வளவு உயரத்திற்குச் சென்றும் அதைச் சரியாக தக்கவைக்காமல் இப்படி மோசமான படம் கொடுத்துள்ளனர் ஹிப்ஆப் தமிழன் மற்றும் நண்பர்கள்.

அடுத்து ஒருத்தர் புட்பால் பற்றி படம் எடுத்துக்கொண்டு உள்ளார். இந்தப் படத்தைப் பார்த்தபின்பு எங்கே பேய் படம் போன்று ஸ்போர்ட்ஸ் மூவி என கொல்லப்போகின்றனரோ என பயம் வந்துவிட்டது.

3

Movie Review Uriyadi 2: உறியடி 2 திரைவிமர்சனம்

0

Movie Review Uriyadi 2: உறியடி 2 திரைவிமர்சனம்

உறியடி முதல் பாகம் மூலம் இயக்குனர் நடிகராக அறிமுகமானவர் விஜய் குமார். முதல் பாகம் சரியாக ஓடவில்லை என்றாலும் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

இரண்டாவது படம் உறியடி 2. முதல் பாகத்திற்கும் இரண்டாவதும் பாகத்திற்கு உள்ள ஒரே ஒற்றுமை லெனின் விஜய் என்ற விஜய் குமாரின் கதாப்பாத்திரம் மட்டுமே.

மற்றபடி அதில் இருந்த எந்த ஒரு தொடர் பாத்திரம் இல்லை. படம் முழுவதும் ஸ்டெர்லைட் ஆலை போன்ற ஒரு ஆலை பற்றிய படம்.

நேரடியாகவே தூத்துக்குடி என எடுத்திருக்கலாம். சுற்றி வளைத்து வேறொரு தொழிற்சாலை போன்று சொன்னது ஒரு சிறிய உறுத்தல்.

ஸ்டெர்லைட் போன்ற ஆலைக்கு அருகில் இருந்த மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டனர் என்பதை நேரில் சென்று பார்த்த அனுபவத்தை இப்படம் கொடுத்துள்ளது.

உறியடி என இந்தப் படத்தின் தலைப்பு வைத்ததால் நிச்சயம் முதல் பாகத்தை ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

அந்தப் படத்தில் இருந்த எதார்த்த மற்றும் தத்ரூபமான திரைக்கதை அமைப்பு இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

கிளைமேக்ஸ் காட்சிகள் முற்றிலும் சினிமாடிக்காக அமைந்துவிட்டது. இதனால் அந்த முதல் பாகத்தைவிட இப்படம் கொஞ்சம் சுமாராகவே உள்ளது.

இருப்பினும் இந்தப்படம் நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய படமே.

3

#CSKvsKXIP சங்கூத நினைத்த சாஹர்; தோனிக்கு டிமிக்கி கொடுத்த பைல்ஸ்

0
#CSKvsKXIP

#CSKvsKXIP இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி மந்தமாக ஆடியது. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 150 ரன்களைக் கடக்குமா எனக் கேள்வி எழுந்தது.

கடைசி இரண்டு ஓவரில் பஞ்சாப் பவுலர்களை தோனி துவம்சம் செய்தார். அவர் இரண்டு ஓவரில் அடித்த ரன்களே சிஎஸ்கே அணியை வெற்றி பெறச்செய்தது.

20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னை அணியைப் போலவே மந்தமாக ரன்களை எடுத்து வந்தது.

கே.எல்.ராகுல் 41 ரன்கள் இருக்கும்போது தோனிக்கு அருகில் அடித்துவிட்டு ரன் ஓட முயன்றார். மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்தார் தோனி. ஆனால் பைல்ஸ் கீழே விழாமல் ராகுலைக் காப்பற்றிவிட்டது.

கடைசி இரண்டு ஓவரில் 40 ரன்கள் தேவை என்ற நிலை நிலவியது. 18 ஓவரை வீசிய சாஹர் இரண்டு புல் டாஸ் நோபல் வீச பந்தே போடமால் 9 ரன்கள் கொடுத்துவிட்டார்.

இதனால் எங்கே சாஹர் சங்கு ஊதி விடுவாரோ எனப் பயந்த தோனி பக்கத்தில் வந்து கடுப்பு கலந்த கூல் முகத்துடன் ஆறுதல் கூறினார்.

பின்பு 6 பந்துகளை அற்புதமாக போட்டு கடைசி பந்தில் விக்கெட்டையும் எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுவிட்டார்.

அடுத்து கடைசி ஓவரில் 4 பந்துக்கு 4 சிக்சர் அடிக்க வேண்டிய நிலை இருந்தது. ஸ்காட் குக்ளிஞ்சின் அற்புதமாக வீசி 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

3

தேர்தலுக்காக சிறுநீரகத்தை விற்கத் துணிந்த வேட்பாளர் சுகுர் அலி

0
சிறுநீரகத்தை

அரசியல் கட்சிகளை எதிர்த்து மக்கள் செல்வாக்குடன் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் சிறுநீரகத்தை விற்கத் துணிந்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள மோதாடி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுகுர் அலி. இவர் அங்குள்ள ஷிபலி ஆற்றின் அருகே பாலம் கட்டியுள்ளார்.

தன்னுடைய சொந்த நிலத்தை விற்று மூங்கில் கம்புகளைக் கொண்டு ஷிபலி ஆற்றின் நடுவே பாலம் கட்டியுள்ளார்.

இதனால் அப்பகுதியில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

அரசியல்வாதிகள் மக்களைக் கண்டுகொள்வதே இல்லை. எனவே அவர்களுக்குப் போட்டியாக  களத்தில் நின்று வெல்வதே என் நோக்கம் எனக்கூறியுள்ளார்.

இதற்காக என்னுடைய சிறுநீரகத்தை விற்றாவது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் எனக்கூறி அனைவரையும் அதிரவைத்துள்ளார்.

3

தில்லு இருந்தா வந்துபாரு; அன்புமணியை அதிரவைத்த உதயநிதி

0
உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யத்தயார் என அன்புமணியின் சவாலை ஏற்றுக்கொண்டார்.

தேர்தல் நாள் நெருங்கிவிட்டது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் விறுவிறு வேகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீண்ட நாட்களாக பிரதமர் நரேந்திர மோடியை ஒரே மேடையில் விவாதம் செய்ய அழைத்துகொண்டே உள்ளார்.

அதேபோல் மேற்குவங்க முதல்வர் மம்தாவும் மோடியை ஒரே மேடையில் விவாதம் செய்யத் தயாரா எனக் கேட்டுள்ளார்.

ஆனால் மோடி செவி கொடுப்பதாக இல்லை. அதேவளை எதிர்கட்சிகள் மீது பழிபோடுவதையும் நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார்.

இந்நிலையில் பாமக அன்புமணி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கை வைத்தார். நீங்கள் அல்லது உங்கள் மகன் யாரேனும் ஒருவர் ஒரே மேடையில் என்னுடன் விவாதம் செய்யத் தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் உதயநிதியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி நான் எப்போது வேண்டுமானாலும் மேடையில் விவாதம் செய்யத் தயார்.

சேலம் எட்டுவழிச்சாலையில் இருந்து விவாதத்தை துவங்க அன்புமணி தயாரா? எனக் கேள்வி சவாலை ஏற்று அதிரவைத்துள்ளார்.

இந்தப் பதிலை அன்புமணி சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார். தேவையில்லாமல் வாய்கொடுத்து மாடிக்கொண்டாரா? அல்லது தைரியமாக விவாதத்திற்கு தயார் எனக் கூறுவாரா எனப்பார்க்கலாம்.

3

வெறும் 12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்த லாசித் மலிங்கா

0

வெறும் 12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்கு விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்த லாசித் மலிங்கா

ஐ‌பி‌எல் என்றாலே ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் நேற்று விளையாடிய லாசித் மலிங்கா தனது பங்கிற்கு 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் மும்பை அணி சென்னையை எளிதாக வென்றது. போட்டி முடிந்த உடனே தனது சொந்த நாட்டில் நடக்கும் இன்டர்-புரோவிஸ்னல் ஒருநாள் தொடரில் காலே அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

உள்ளூர் ஒரு நாள் போட்டி தொடரில் அனைத்து இலங்கை வீரர்களும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததால் பெரும்பான்மையான இலங்கை வீரர்கள் ஐ‌பி‌எல் தொடரில் பங்கேற்கவில்லை.

ஐ‌பி‌எல் தொடரில் விளையாடினாலும் கட்டாயம் ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்க வேண்டும் என்றும் கூறியது. இதனால் முதல் 6 போட்டிகளில் மலிங்கா விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

இரண்டு போட்டிகளிலும் விளையாடலாம் என முடிவு செய்த மலிங்கா மும்பை சென்னை முடிந்த கையுடன் இலங்கை புறப்பட்டு அங்கு நடக்கும் ஒரு நாள் போட்டியில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அனுபவ வீரர் மலிங்கா ஐபிஎல் தொடரில் தான் விளையாடி வரும் அணியின் தேவையையும், தனது தாய் நாட்டின் தேவையையும் ஒரே சமயத்தில் பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் வருங்கால தலைமுறை வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

3

வாட்ஸ்ஆப் புதிய வசதி: ஒரு க்ரூப்பில் 1000 பேர்; வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க்

0
வாட்ஸ்ஆப் புதிய வசதி

வாட்ஸ்ஆப் புதிய வசதி: ஒரு க்ரூப்பில் 1000 பேர்; வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க்

நீண்ட நாட்களாக வாட்ஸ்ஆப் பயனர்கள் வைக்கும் ஒரு கோரிக்கை வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் இன்வைட் லிங்க் வசதி வேண்டும் என்பதே.

வாட்ஸ்ஆப்பை விட குறைந்த பயனாளர்களைக் கொண்ட டெலிகிராம் நிறுவனம் ஒரு குரூப்பில் 1 லட்சம் பேர் வரை இணைக்கும் வசதியை அறிமுகப்படுத்தி விட்டது.

ஆனால் வாட்ஸ்ஆப், பேஸ்புக் நிறுவனதிற்கு கைமாறிய பிறகு நவீன வசதிகளை செயல்படுத்துவதில் மிகவும் தாமதப்படுத்திக்கொண்டே இருந்தது.

புதிய வசதி பயனாளர்களுக்குப் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்திவிடக் கூடாது என்பது ஒரு காரணம்.

பேஸ்புக் பயனாளர்கள் குறைந்துவிடக்கூடாது என வாட்ஸ்ஆப் குழுவில் அதிக உறுப்பினர்களை இணைக்கும் வசதி வழங்கப்படவில்லை என்பதும் ஒரு காரணம்.

தற்பொழுது வாட்ஸ்ஆப் மகிழ்சிகரமான ஒரு முடிவை எடுத்துள்ளது. இன்னும் இதை வாட்ஸ்ஆப் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

WhatsApp API டெவலப்பர்கள் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த முடியும். அனைவரும் பயன்படுத்துவதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.

வாட்ஸ்ஆப்பின் புதிய வசதிகள்

  1. வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் (WhatsApp Broadcast Link) இன்வைட் லிங்க் வசதி.
  2. வாட்ஸ்ஆப் குழுவில் 1000 பேர் வரை இணைக்கலாம்.
  3. வாட்ஸ்ஆப் குழுவில் உங்களை யார் இணைக்க வேண்டும் என ப்ரைவசி சென்ட்டிங் வசதியும் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது யாரவது உங்களை ஒரு குழுவில் தேவை இல்லாமல் சேர்க்க முயற்சித்தால் நீங்கள் சேர விருப்பமா என உங்களிடம் கேட்டுக்கும். அதன் பிறகே உங்களை அந்தக்குழுவில் இணைக்க முடியும்..

வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் (WhatsApp Broadcast) என்றால் என்ன?

வாட்ஸ்ஆப் குழுவைப் போன்று தான் இதுவும். ஆனால் உங்களுடைய நம்பரை அட்மினைத் தவிர வேறு ஒருவர் பார்க்க முடியாது.

எங்களுடைய வாட்ஸ்ஆப் ப்ராட்காஸ்ட் மற்றும் டெலிகிராம் குழுவில் இணைய கிளிக் செய்யவும்.

நியூஸ்டாக் செயலியில் இதைப் படித்துக்கொண்டு இருந்தால் மூல வலைதளத்தை கிளிக் செய்து இணைந்துகொள்ளவும்.

whatsapp broadcast invite

3

கமல்.. கமல்… 35 முறை தொடர்ந்து முழங்கிய பாஜக தலைவர் – ட்ரெண்டிங் வீடியோ

0
பாஜக தலைவர்

கமல்.. கமல்… 35 முறை உத்திரப்பிரதேச பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் தொடர்ந்து முழங்கியது வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராஜேந்திர அகர்வாலை ஆதரித்து பாஜக மூத்த தலைவர் வினித் அகர்வால் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது மேடையில் தொடர்ந்து கமல்…கமல்.. என ராப் இசைக் பாடகர் பாடுவது போன்று முழங்கினார்.

ஏன் அவர் கமல் எனக் கூறினார்? தமிழில் கமலம் என்றால் தாமரை. அதே போன்று ஹிந்தியில் கமல் என்றால் தாமரை.

இனி எப்போதும் கமல்..கமல்.. கமல் சையே.. கமல்…கமல்… என தொடர்ந்து மேடையில் சத்தமாக பேசினார்.

இதை எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்துள்ளனர். பிரச்சாரம் செய்யச் சொன்னால் ராப் இசையில் பாடிக்கொண்டு உள்ளனர் என அவருடைய வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

3