சீமானின் தொண்டர்கள் அதற்கும் ஒருபடி மேலே சென்று சினிமாவை மிஞ்சும் அளவிற்கு வீடியோ தயாரித்து வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளனர்.
Hello Sir இந்த கோவம் பத்தாது😎 WATCH THIS👇
THE BEST PART IS AT 0:32👇 .அவர் தன் கழுத்தில் உள்ள துண்டினை சரி செய்ய …கடல் ஆழம் தாண்டி வந்தாயே நீ கரிகாலா…என்ற வார்த்தைகள் முழங்க … துண்டின் மீது சிரித்தபடி மேதகு வேல் பிரபாகரன் 💥💥💥💥🔥🔥🔥🔥💪💪💪pic.twitter.com/SgCt54Lcpp
#CSKvsRR நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல் அணி மந்தமாகவே விளையாடியது. இருப்பினும் கடைசி இரண்டு ஓவரில் ரன்களைக் குவித்து நல்ல நிலையை எட்டியது.
20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 28, ஜாஸ் பட்லர் 23, ஸ்ரேயாஸ் கோபால் 19 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.
அதிர்ச்சி அளித்த சிஎஸ்கே
பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்.
பந்து வீச்சு, பீல்டிங், ஸ்டெம்பிங், கேட்சிங் என நொடிப்பொழுதில் கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட்டு சிஎஸ்கேவின் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
பிட்னஸ் இல்லாத அணி சிஎஸ்கே என்பது இன்று மைதானத்தில் கண்கூடாகத் தெரிந்தது. இவ்வளவு திறமையான ராஜஸ்தான் அணி ஒரே ஒரு வெற்றி தான் பெற்றுள்ளதே என சிஎஸ்கே ரசிகர்களையே கண் கலங்க வைத்துவிட்டனர்.
கில்லியாக மாறிய ராயல்ஸ்
அசந்தா காலி என கில்லியாக செயல்பட்ட ரஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வில்லானாக வந்தார் தல தோனி.
4 விக்கெட் வெறும் 24 ரன்கள் எடுத்திருந்த சிஎஸ்கே இதோடு காலி என நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசினார் தோனி.
ராயுடுவை அரவணைத்துக்கொண்டு தானும் அவ்வபோது அடித்துக்கொண்டு ராஜஸ்தான் இளைஞர்களிடம் சிறு தவறுகூட செய்யாமல் அணியை சரிவில் இருந்து மீட்டார்.
முக்கியக் கட்டத்தில் ராயுடு விக்கெட் காலி. அதன் பிறகு வந்த ஜடேஜாவிற்கு தைரியத்தைக் கொடுத்து படுத்துக்கொண்டே ஒரு சிக்ஸர் பறக்க வைத்தார்.
19.3 ஓவர் சிஎஸ்கே 144 ரன்கள் எடுத்த நிலையில் தோனியின் விக்கெட் காலி. வெற்றிக்கு 8 ரன்கள் தேவை. பேட்டிங் சிஎஸ்கே பவுலர் சாட்னர்.
கண்ணு இல்லைனாலும் சிக்சர் பறக்கும்
சோடா புட்டி கண்களுடன் மைதானத்திற்குள் வந்தார். இவர் சிஎஸ்கே-வை காப்பாற்றுவாரா என அனைவர் கண்களும் விரிந்தது.
கடைசி பால் மிச்சம் இருக்க வரைக்கும் சிஎஸ்கே பவுலருக்கு கண்ணு கூட சரியா தெரியலைனாலும், அவனாலயும் சிக்ஸர் பறக்க விட முடியும் என கெத்துக்காட்டிவிட்டார் சாட்னர்.
கில்லியை பல்லியாக மாற்றிய ஸ்டோக்ஸ்
19-வது ஓவர் வரை எந்த ஒரு சின்ன தவறு கூடச் செய்யாமல் சிறப்பாக செயல்பட்ட ராயல்ஸ் அணியை தோல்விக்கு வித்திட்டவர் பென் ஸ்டோக்ஸ்.
ஒய்டு, நோபால் என எக்ட்ரா ரன்கள் கொடுத்தது ஒரு முக்கிய காரணம். இருப்பினும் கடைசி பாலில் கூட ஜெயித்திருக்கலாம். கோட்டை விட்டுவிட்டார்.
ராசியில்லா ராஜஸ்தான்-பெங்களூரு
என்னதான் 6 பாலுக்கு 6 விக்கெட் எடுத்தாலும் ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் வெற்றியை ருசிப்பது கடினமே. இந்த சீசன் அவர்களுக்கு மிக மோசமான சீசன்.
கண் கலங்க வைத்த தல
ஒரு கட்டத்தில் எம்.எஸ்.தோனியால் ஓடமுடியாமல் மைதானத்திலேயே படுத்துவிட்டார். நமேக்கே அவரின் தனி மனித போராட்டத்தைக் கண்டு கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.
கர்ஜித்த தல தோனி
அம்பயர் நோபால் கொடுத்துவிட்டு இன்னொருவர் இல்லை என்றதும் மீண்டும் மைதானத்திற்குள் கர்ஜனை செய்ததில் ஓட்டு மொத்த மைதானமே அதிர்ந்தது.
கடைசியாக தல தோனிக்கே மேன் ஆப் தி மேட்ச் கொடுத்து சிறப்புடன் கவுரவித்துவிட்டது ஐபிஎல் கமிட்டி.
லீக் போட்டியே வேர்ல்ட் கப் பைனல் மேட்ச் மாதிரி இருந்தால் அப்போ பைனல் மேட்ச் சொல்லவா வேண்டும்? அதற்குமுன் மும்பையை பழிவாங்கும் நாளுக்காக காத்திருப்போம்.
டிடிவி தினகரனுடன் கள்ளக்கூட்டணி அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் முயன்றார் என அமமுகவினர் பகீர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி தொகுதியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமாருக்கும், பாஜக கட்சி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இறுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி வாகைசூடி எம்.பி. ஆனார். இந்த முறையும் காங்கிரஸ்-பாஜக இடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என அங்கே பயங்கர அதிருப்தி நிலவி வருகிறது.
மீனவ சமுதாயத்தினர் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். இதனால் பாஜகவுக்கு அவர்கள் ஓட்டு நிச்சயம் கிடைக்காது.
அதேவேளை அந்த ஓட்டுக்கள் அனைத்தும் காங்கிரசுக்கு சென்றுவிட்டால் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி கேள்விக் குறியாகிவிடும்.
இதனால் அங்கு சிறுபான்மை இனத்தவரை நிற்க வைத்து, அவர்களின் ஓட்டுக்கள் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள அமமுகவிடம் கள்ளக் கூட்டணி வைக்க பொன்.ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார்.
இந்த விசயத்தை டிடிவி தினகரன் பட்டென்று உடைத்து விட்டார். பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தத்தின் மூலம் தூது அனுப்பினார் என குற்றம்சாட்டினார்.
அதேவேளை பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தமும் பதிலுக்கு டிடிவி தினகரன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவைக் கைப்பற்ற பாஜகவுடன் இணக்கமாக செல்ல டிடிவி தினகரன் பாஜக தலைவர்களைச் சந்திக்க முயன்றார்.
அவரின் ஆசை நிறைவேறவில்லை என இப்படி கபட நாடகம் ஆடுகின்றார் என டிடிவியின் கள்ளக்கூட்டணி தூதை அம்பலப்படுத்தி உள்ளார்.
தேர்தல் நெருங்க நெருங்க அனைத்துக் கட்சிகளும் சுயலாபத்திற்காக என்னென்ன தில்லுமுல்லு வேலைகளைச் செய்துள்ளனர் என ஒவ்வொன்றாக அவர்களின் வாயில் இருந்தே வெளிவருகிறது.
பிளாக் ஹோல் (Black Hole) புகைப்படம் வெளியானது பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிளாக் ஹோலை தமிழில் கருந்துளை எனக் கூறலாம். பால்வெளி அண்டங்களுக்கு நடுவில் பிளாக் ஹோல் இருக்கிறதாக விஞ்ஞானிகளின் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.
அதை அவர்கள் நிரூபித்தாலும் அதைப் புகைப்படம் எடுப்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது. கருந்துளை அதிகமான ஈர்ப்பு விசை கொண்டது. ஒளி கூட கருந்துளையிடம் இருந்து தப்ப இயலாது.
பிளாக் ஹோலைப் பற்றி அறிந்து கொள்ள கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தை பாருங்கள்.
நீண்ட நாட்கள் முயற்சியின் மூலம் தொழில்நுட்பத்தின் வசதியினால் அதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.
M87 என்ற கேலக்ஸியில் பூமியில் இருந்து சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது இந்தக் கருந்துளைகள். பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஹெயினோ ஃபால்ஸ்க் இதைப் பற்றி கூறியதாவது
நாம் பார்க்கும் இந்த கருந்துளை சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு நிறை உடையது. பூமியில் இருந்து 40 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
பூமியை விட மூன்று மில்லியன் மடங்கு பெரியதாகும். நமது சூரிய குடும்பத்தைவிட மிகப்பெரிய ஒன்றாகும். இறுதியில் பல நாட்களின் முயற்சியால் பார்க்காத ஒன்றை பார்த்து விட்டோம் எனக் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய படத்தின் கதாநாயகிகளைத் தேர்வு செய்வதில் பெரும்பாலும் அவரே தான் முடிவு செய்வார்.
சிவாஜி படத்தின் நயகியாக நடிகை ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்யச்சொல்லி ஷங்கரிடம் கூறினார்.
மணிரத்னம் இயக்கத்தில் இருவர், ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் என அடுத்தடுத்து நடித்து உலகஅழகி நான்தான் என ஐஸ்வர்யா ராய் தமிழ் மக்களிடம் பிரபலமானார்.
ஐஸ்வர்யா ராய் மறுப்பு
ரஜினியுடன் நடிக்க வேண்டும் என ஷங்கர் கூறியபோது வயதானவர்களுடன் நடிக்க மாட்டேன் என ஐஷ்வார்யா ராய் மறுத்ததாக அப்போது செய்திகள் வெளியாகியது.
அதன்பிறகு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். ரஜினி அமிதாப்பச்சன் இருவரும் நன்கு பழக்கம்.
ஐஸ்வர்யா ராயை மடக்கிய ரஜினி
எந்திரன் படம் துவங்கப்பட்டபோது மீண்டும் ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்க முயற்சி மேற்கொண்டார் ரஜினி. இந்த முறை மாமனார் சிபாரி வேறு இருந்ததால் ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ரஜினியுடன் மல்லுக்கட்டிய த்ரிஷா
அதேவேளை நீண்ட வருடமாக ரஜினியுடன் நடிக்க வேண்டும் என போராடிய சிம்ரன், த்ரிஷாவிற்கு ரஜினி தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரஜினியுடன் நடிக்க சம்பளமே வேண்டாம் என த்ரிஷா அறிவித்தார். ஆனாலும் ரஜினி நடிக்கவே கூடாது என முடிவுடன் இருந்தார்.
இதனால் த்ரிஷா ஓப்பனாக ரஜினியை விமர்சனம் செய்த சம்பவங்களும் அரங்கேறியது. மேலும் பாலிவுட் நடிகைகளை கமிட் செய்வதை ரஜினி வழக்கமாக்கிக் கொண்டார்.
த்ரிஷாவின் ஆசை எப்படி சாத்தியமானது?
ரஜினியை யார் எப்படி சமாதானம் செய்தனர் எனத் தெரியவில்லை பேட்ட படத்தில் சிம்ரன்-த்ரிஷா இருவருமே நடித்துவிட்டனர்.
எனவே ரஜினி தன்னுடைய படத்தின் ஹீரோயின் யார் எனத் தேர்வு செய்வதில் அவரின் முடிவே இறுதியானதாக இருக்கும்.
முருகதாஸ்-நயன்தாரா மனக்கசப்பு
முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். முதலில் கீர்த்தி சுரேசை நாயகியாக நடிக்க வைப்பது என முருகதாஸ் முடிவு செய்தார்.
ஆனால் ரஜினி, நயன்தாராவைக் கமிட் செய்துவிடும்படி கூறிவிட்டார். கஜினி படத்தில் நயன்தாராவிற்கு சரியான கதாப்பாத்திரம் இல்லை.
இதனால் நயன்தாரா-முருகதாஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன்பிறகு இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.
தற்பொழுது ரஜினியே கேட்டுவிட்டார் வேறுவழி? சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது என முருகதாஸ், நயன்தாராவைக் கமிட் செய்துவிட்டார்.
நயன்தாரா மீது என்ன மோகம்?
சந்திரமுகி, குசேலன் படத்தில் நயகியாக, சிவாஜி படத்தில் ஓப்பனிங் பாடல் என நயன்தாராவைக் கமிட் செய்யச் சொன்னதும் ரஜினியே,
தற்பொழுது தர்பார் படத்திலும் நயன்தாரா நடிக்க உள்ளார். 20K நடிகைகளில் அதிகமுறை ரஜினியுடன் நடித்தது நயன்தாரா தான்.
நயன்தாராவுடன் மீண்டும் மீண்டும் ரஜினி நடிக்க விருப்பப்படுவது என்ன காரணமாக இருக்கும் என நயன்தாரா பலரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.
90-களில் ரஜினியின் ஆஸ்தான நடிகையாக விளங்கியவர் மீனா. மீனாவுடன் தொடர்ந்து நடித்து பல ஹிட் படங்களைக் கொடுத்தார்.
தற்பொழுது நயன்தாராவை தன்னுடைய படங்களில் கமிட் செய்வதை வாடிக்கையாக்கி உள்ளார் ரஜினி.
அப்படி நயன்தாரா மீது ரஜினிக்கு என்ன மோகமோ? செண்டிமென்டோ? லேடி சூப்பர் ஸ்டாரோ? அவள் தான் உனக்கேத்த ஸ்டாரோ?
பாஜக-அதிமுக கூட்டணி வாஷ்அவுட்; ரஜினியின் நதிநீர் அறிகுறி
2004 நாடாளுமன்ற தேர்தலின்போது நடிகர் ரஜினிகாந்த் இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது வாஜ்பாய் தலைமையிலான அரசால் மட்டுமே முடியும் எனக் கூறினார்.
அந்த தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் ஒரு தொகுதி கூட வெற்றி பெறவில்லை.
காலங்கள் உருண்டோடிவிட்டது. வாஜ்பாய் மறைந்தார். ஜெயலலிதாவும் மறைந்தார். பாஜக தற்பொழுது ஆட்சியில் உள்ளது. இன்னும் நதிநீர் இணைக்கப்படவில்லை.
அன்று ஒருகோடி தருவதாகச் சொன்ன ரஜினி அதன்பிறகு இன்று மீண்டும் அதே நதிநீர் இணைப்பை பாஜகவால் தான் கொடுக்க முடியும் எனக்கூறி ஆதரவை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஐந்து வருடத்தில் மோடியிடம் ரஜினி ஒருமுறைகூட நேரில் சென்று நதிநீர் இணைப்பை பற்றி பேசவில்லை.
தமிழக விவசாயிகள் நதிநீரை இணைக்க வேண்டும் என டெல்லியில் போராடியபோதும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
அதிமுக-பாஜக ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஒன்று நடக்கவில்லை. ரஜினி சொன்னதால் அடுத்து ஆட்சியைப் பிடித்து முதல் வேலையாக நதிநீரை இணைத்து விடுவார்கள் என நம்புவோம்.
அதுசரி… ரஜினி நதிநீர் ஆதரவு என அறிவித்தாலே அந்தக்கூட்டணி வாஷ்அவுட் ஆகிவிடுமே? பிறகு எப்படி நதிநீர் இணைக்கப்படும்.
வேற லெவல் அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கின் டீசர்: கபீர் சிங்
விஜய் தேவரக்கொண்ட நடித்த அர்ஜூன் ரெட்டி படம் ‘கபீர் சிங்‘ என்னும் பெயரில் ஹிந்தியில் உருவாகிறது. இன்று வெளியான இதன் டீசரில் ஷாஹித் கபூர் மிரட்டியுள்ளார்.
சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்த இந்தப் படம் தமிழில் பாலா இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
தற்போது அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ்ரீமேக் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகி வருகிறது. துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பனிதா சந்து அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை அர்ஜூன்ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சய்யா இயக்குகிறார்.
ஷாஹித் கபூர் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்தப் படத்தை அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் ஜூன் 21-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.