தமிழகம்-புதுச்சேரி மொத்த தேர்ச்சி விழுக்காடு 91.3%
மாணவிகள் 93.64%; மாணவர்கள் 88.57% தேர்ச்சி.
95.37% திருப்பூரில் தேர்ச்சி
95.23% ஈரோட்டில் தேர்ச்சி
95.15%பெரம்பலூரில் தேர்ச்சி
95.01% கோவையில் தேர்ச்சி
94.97% நாமக்கல்லில் தேர்ச்சி
கணித்தத்தில் 96.25% பேர் தேர்ச்சி, கணினி அறிவியல் படத்தில் 95.27% பேர் தேர்ச்சி.
1281 பள்ளிகள் 100% தேர்ச்சி. அரசு பள்ளிகளில் 84.76% (238) பள்ளிகளில் 100% தேர்ச்சி.
பிரதமர் மோடி தான் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பெரிய பெரிய கருப்பு சூட்கேசில் பணம் கொண்டு செல்லப்படுவதாக சர்ச்சை வெடித்தது.
தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு ஒரு நபருக்கு ஆளும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் 2000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நரேந்திர மோடி ஒடிஷா மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தேர்தல் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரை சோதனை செய்தனர்.
உடனே அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேவேளை ஓடிசாவின் முதல்வர் பட்நாயக்கின் ஹெலிகாப்டரில் பணம் கொண்டு செல்லப்படுவதாக சோதனை செய்யப்பட்டது.
அவர்களை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்யவில்லை. மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்தவர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நகரங்களுக்கு நேரடியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வாறு பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும்போது கூடவே பெரிய பெரிய கருப்பு பெட்டிகளும் வந்து இறங்குகின்றது.
தமிழகத்தில் ராமநாதாபுரம், கோயம்புத்தூர் தொகுதிகளில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய உடன் சிறிது நேரத்தில் இரண்டு கருப்பு பெட்டியை இறக்கிச் சென்றுள்ளார்.
அந்தப் பெட்டியில் 200 கோடி வந்து இறங்கி உள்ளதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல பாஜக தொண்டர்கள் அப்போது கூறினார்கள்.
அதேபோல் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அங்கும் இதே போன்று ஒரு கருப்பு பெட்டி விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு உள்ளது. இதை ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சியினர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அந்த பணம் ஒரு காரில் ஏற்றப்பட்டு உள்ளது. அது பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு வந்த கார் இல்லை எனவும் உறுதியாக் கூறியுள்ளனர்.
ஓவ்வொரு ஊரிலும் சில மணிநேரங்களே தங்கிப் பிரச்சாரம் செய்யும் மோடி உடைகள் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை. அதுவும் ஒரு சூட்கேஸ் நிறைய கொண்டு செல்ல வாய்ப்பே இல்லை.
எனவே அதில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பிரதமர் தன்னுடைய வாகனத்திலேயே பணத்தை கடத்திக்கொண்டு சென்று விநியோகம் செய்கிறார் என காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடமும் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டு உள்ளது. ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக நடந்து கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
#KKRvsCSK இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரரான லின் சிஎஸ்கே பவுலர்களை வெளுத்து வாங்கினார்.
அவருடன் களமிறங்கிய சுனில் நரேன் 2 ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து வந்த ராணா சற்று கை கொடுத்தார். பத்து ஓவர் முடிவில் 79 ரன்கள் எடுத்து கொல்கத்தா சற்று மந்தமான ஸ்கோரையே எட்டியது.
பதினோராவது ஓவரை வீசிய தாஹிர் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றினார். திடீரென லின் விஸ்வரூபம் எடுக்க ஜடேஜாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் பறக்கவிட்டார்.
மீண்டும் பௌலிங் செய்த தாஹிர் லின் 82, உத்தப்பா 0, ரஸல் 10 என கொல்கத்தாவின் முக்கிய விக்கெட்டுகளை மளமளவென சரித்தார்.
இதனால் ரன் அடிக்க வேண்டிய முக்கிய நேரத்தில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.
தாகூரின் சூழலில் சிக்கி கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் சின்னாபின்னமாகினர். சீக்கிரமே அவுட் ஆகியதால் பேட்டை ஓங்கி அடித்து கொலைவெறியுடன் வெளியேறினார் ரஸல்.
நீண்ட நேரம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய தினேஷ் கார்த்திக் 18, கில் 15 ரன்களில் அவுட் ஆகினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கொலைவெறியுடன் பெவிலியன் திரும்பிய ரஸல் பவுலிங்கில் அசத்துவாரா என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ரஸலின் முதல் ஓவரை டுபிளசிஸ் காட்டு காட்டு எனக் காட்டினார். தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் விரட்டினர்.
அந்த ஓவரிலேயே கால் சுளுக்கியது. இதுதான் சாக்கு என ரஸல் அதோடு மைதானத்தைவிட்டு ஓடிவிட்டார்.
எல்லா அணியையும் பயமுறுத்திய ரஸலின் வாலை ஓட்ட நறுக்கி அனுப்பிவிட்டனர் சிஎஸ்கே அணியினர்.
இந்தப் போட்டியிலும் வாட்சன் ஓப்பனிங் பேட்ஸ்மேன். வழக்கம் போலவே அவுட். இருப்பினும் சுரேஷ் ரெய்னாவின் எழுச்சி சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்துவிட்டது.
வழக்கம் போல 10 ஓவர்களிலேயே ஆட்டத்தை தோனி கையில் கொடுத்து ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்டிவிட்டனர்.
சுனில் நரேன் ஓவரில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டபோது தோனி எதிர்பாராத விதமாக எல்பிடபுள்யூ ஆகிவிட்டார்.
அவ்வளவுதான் மேட்ச் அம்பேல் என நினைத்த ரசிகர்களுக்கு பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. ஜடேஜா ஏதோ ஒரு பக்கம் சுற்ற பந்து தானாக பேட்டில் பட்டு பவுண்டரியில் விழுந்த வண்ணம் இருந்தது.
கொல்கத்தா பவுலர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஷாருக்கான் மூஞ்சி தொங்கிப்போச்சு. ரெய்னா ஒரு பக்கம் அதிரடி காட்ட சத்தமே இல்லாமல் யுத்தமே இல்லாமல் சிஎஸ்கே வெற்றி பெற்றுவிட்டது.
19.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா 58, ஜடேஜா 31 ரன்கள் அதிகபட்சமாக அடித்தனர்.
#CSKvsKKR இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. துவக்க ஆட்டக்காரரான லின் சிஎஸ்கே பவுலர்களை வெளுத்து வாங்கினார்.
அவருடன் களமிறங்கிய சுனில் நரேன் 2 ரன்களில் அவுட் ஆனாலும் அடுத்து வந்த ராணா சற்று கை கொடுத்தார். பத்து ஓவர் முடிவில் 79 ரன்கள் எடுத்து கொல்கத்தா சற்று மந்தமான ஸ்கோரையே எட்டியது.
பதினோராவது ஓவரை வீசிய தாஹிர் ராணாவின் விக்கெட்டை கைப்பற்றினார். திடீரென லின் விஸ்வரூபம் எடுக்க ஜடேஜாவின் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் பறக்கவிட்டார்.
மீண்டும் பௌலிங் செய்த தாஹிர் லின் 82, உத்தப்பா 0, ரஸல் 10 என கொல்கத்தாவின் முக்கிய விக்கெட்டுகளை மளமளவென சரித்தார்.
இதனால் ரன் அடிக்க வேண்டிய முக்கிய நேரத்தில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சரிந்தது.
தாகூரின் சுழலில் சிக்கி கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் சின்னாபின்னமாகினர். சீக்கிரமே அவுட் ஆகியதால் பேட்டை ஓங்கி அடித்து கொலைவெறியுடன் வெளியேறினார் ரஸல்.
நீண்ட நேரம் அணியை சரிவில் இருந்து மீட்க போராடிய தினேஷ் கார்த்திக் 18, கில் 15 ரன்களில் அவுட் ஆகினார்.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
கொலைவெறியுடன் பெவிலியன் திரும்பிய ரஸல் பவுலிங்கில் அசத்துவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இரண்டாம் சீஸனின் இறுதியில் ஒயிட் வால்கரின் வருகையுடன் முடிந்தது. மூன்றாம் சீஸன் நைட்ஸ் வாட்ச்சின் பயணத்தில் ஆரம்பிக்கும்.
ஜான் ஸ்னோ-இக்ரீட் இடையேயான காதல்
நைட்ஸ் வாட்ச்சிடமிருந்து பிரிந்து, ஒயில்டுலிங்ஸின் இருப்பிடத்தைப் பார்க்கும் ஜான் ஸ்நோ, அவர்களது தலைவனான மான்ஸி ரைடரைப் பார்த்து நட்பாகிவிடுவார். மான்ஸி ரைடர் என்பவர், ஒயில்டுலிங்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்.
ஆனால், இவர் முன்பு நைட்ஸ் வாட்ச்சிற்காகப் பணியாற்றியிருப்பார். ஜான் ஸ்நோ தன்னுடன் பயணித்த இக்ரிட் என்பவர் மீது காதல் வயப்பட்டிருப்பார்.
ஜோஃப்ரீ-மார்கெரி டைரல் திருமணம்
மார்கேரி டைரல், கிங்ஸ் லேண்டிங்கில் இருக்கும் ஆதரவற்ற மக்களைச் சந்தித்து, தன்னுடைய நல்லெண்ணத்தை அவர்களிடையே பதியவைத்துக்கொண்டிருப்பார். இது ஜோஃப்ரி பராத்தியனுக்கும், செர்சி லானிஸ்டருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுக்கும்.
ஜோஃப்ரியும், மார்கேரி டைரல்லும் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களது திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள். ஜோஃப்ரிக்கும், மார்கேரியைப் பிடிக்கத் தொடங்கும்.
ப்ரான் ஸ்டார்க், ஹோடோர், ஓஷா ஆகியோரின் பயணம்
ஜோஜன் ரீடு தனது கனவில் ஜான் ஸ்நோவின் தற்போது இருக்கும் இடத்தைப் பார்த்திருப்பார். ‘நான் ஜான் ஸ்நோவைப் பார்த்தேன். ஆனால், அவர் சுவரின் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்’ என்று ப்ரான் ஸ்டார்க்கிடம் சொல்வார் ஜோஜன்.
ஜேமி லன்னிஸ்டர்-பிரைன் டார்த் கஷ்டமான பயணம்
போல்டன் குடும்பத்திடம் மாட்டியிருக்கும் ஜேமி லானிஸ்டரை ஒருவழியாக அவரது தந்தை டைவின் லானிஸ்டரிடம் அனுப்பி வைக்கும் முடிவுக்கு வந்திருப்பார் ரூஸ் போல்டன்.
ஆனால், ரூஸ் போல்டனின் தளபதி அவருடன் இருந்த பிரையின் டார்த்தைச் சித்ரவதை செய்து கொல்லத் திட்டமிட்டிருப்பார். இதைத் தெரிந்துகொண்ட ஜேமி லானிஸ்டர், பிரையின் டார்த்தைத் தன்னுடன் அழைத்துச் சென்றுவிடுவார்.
டைரின் லன்னிஸ்டர்-சான்சா ஸ்டார்க் திருமணம்
‘நான் இளவரசியான பின் என் சகோதரரான சர் லோரஸுக்கு உன்னைத் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று மார்கேரி டைரல், சான்ஸா ஸ்டார்க்கிடம் சொல்லியிருப்பார்.
இதை எப்படியோ தெரிந்துகொண்ட டைவின் லானிஸ்டர், டிரியன் லானிஸ்டரை சான்ஸாவுக்குத் திருமணம் செய்துவைக்கத் திட்டமிடுவார். அதுமட்டுமன்றி, சர் லோரஸை செர்சிக்குத் திருமணம் செய்துவைக்கவும் திட்டமிட்டிருப்பார்.
அன்சல்லீடு அடிமைகளை கைப்பற்ற நினைக்கும் டினேரியஸ்
அஸ்டோபரில் இருக்கும் அன்சல்லீடு மக்களை விடுவித்துத் தன்னோடு சேர்த்துக்கொண்ட பின், டினேரியஸின் குதிரை யூங்காய் எனும் இடத்தை நோக்கிப் பாய்கிறது.
டினேரியஸின் வருகையைத் தெரிந்துகொண்ட அந்த ஊரின் அரசர், அவர் சார்பாக ஒருவரை அனுப்பி தங்கங்களைக் கொடுத்து, ‘எங்களை எதுவும் செய்துவிடாதீர்கள்’ என்று தாழ்மையாகக் கேட்பார்.
‘என்னுடைய நோக்கம் தங்கம் கிடையாது. மக்களின் சுதந்திரம்தான்’ என்று சொல்வார் டினேரியஸ். அதற்கு மறுப்பு சொல்லும் விதமாக அந்த ஊரின் அரசர் மூன்று படைத் தளபதிகளை அனுப்பி மிரட்டல் விடுப்பார்.
அவர்களில் ஒருவரான டாரியோ நஹாரிஸ், டினேரியஸுக்கு ஆதரவாக நிற்க முடிவெடுப்பார். அதற்குச் சான்றாக மிரட்டிய மற்ற இரண்டு வீரர்களையும் கொன்று, டினேரியஸைத் தலை வணங்குவார்.
கொடூரமாக கொலை செய்யப்படும் ஸ்டார்க் குடும்பம்
ராப் ஸ்டார்க் டலிசாவை யாரிடமும் கூறாமல் திருமணம் செய்து விட்டார். இதனால் ஃப்ரே குடும்பத்திடம் கொடுத்த வாக்கை கைப்பற்ற முடியாமல் போய்விடும்.
ஃப்ரே குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கும் வாய்ப்பாக ஒரு சின்ன நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும். அந்த நிகழ்விலேயே எட்ம்யூர் டல்லியின் திருமணத்தை நடத்தவும் வால்டர் ஃப்ரே ஏற்பாடுகளைச் செய்திருப்பார்.
அந்தச் சமயத்தில்தான் ஆர்யா ஸ்டார்க்கை அவரின் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு தனக்கான சன்மானத்தைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருப்பார் சாண்டோர் கிளிகேன்.
சரியாக திருமணம் நடக்கும் சமயத்தில் கூட்டத்தில் இருக்கும் சிலர், ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரையும் குத்திக் கொல்லத் தொடங்குவார்கள்.
மொத்த இடமுமே குழப்பத்தில் காணப்படும் நேரத்தில் ராப் ஸ்டார்கின் மனைவி டலிசா ஸ்டார்க்கின் வயிற்றில் கத்தியை வைத்துக் குத்திக் கிழித்துவிடுவார்கள்.
வால்டர் ஃப்ரேவும் உடந்தை. வால்டர் ஃப்ரேவின் மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து, ராப் ஸ்டார்க்கை விடுவிக்கும்படி அழுவார், கேட்டலின் ஸ்டார்க்.
எதையும் கண்டுகொள்ளாத ரூஸ் போல்டன், ராப் ஸ்டார்க்கை இரக்கமின்றிக் கொன்றுவிடுவார். வாழ்க்கையே முடிந்துவிட்ட துயரம் கேட்டலினின் கண்ணில் தெரியும்.
தெம்பின்றி மயக்கமாகும் சமயத்தில் கேட்டலின் ஸ்டார்க்கின் கழுத்தையும் கிழித்துவிடுவார்கள் லானிஸ்டரின் வீரர்கள். இது வரை நாம் பார்த்ததில் இது தான் மிகவும் சோகமான ஒரு நிகழ்வாகும்.
ஒவ்வொரு கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்வையாளர்களும் ஸ்டார்க் குடும்பத்தின் பாயின்ட் ஆஃப் வியூவில்தான் அதைப் பார்த்திருப்போம். அவர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நமக்கானதாகத் தோன்றும்.
முதல் சீஸனில் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் டல்லி ராஜ்ஜியத்திடம் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்வார் டிரியன் லானிஸ்டர்.
தனது பேச்சுத் திறனாலும் புத்திசாலித்தனத்தாலும் அங்கிருந்து தப்பித்து, ப்ரான் என்பவரின் உதவியோடு கிங்க்ஸ் லேண்டிங் வந்தடைகிறார் டிரியன் லானிஸ்டர்.
இவர் செர்சி லானிஸ்டருக்கும் ஜேமி லானிஸ்டருக்கும் உடன் பிறந்த சகோதரர். கேம் ஆஃப் த்ரோன்ஸைப் பொறுத்தவரை யார் நல்லவர், யார் கெட்டவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், லானிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்த டிரியன் ரொம்பவே நல்லவர்தான்.
ஜோரா மொர்மோண்ட் ஆறுதல்
எஸ்ஸோஸில் கல் டிராகோ இறந்த பிறகு, ஒட்டுமொத்த டோத்ராக்கி மக்களும் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். வெவ்வேறு ஊர்களுக்குப் புறப்பட்டுவிட்டதால், படை பாதியாகிவிடும்.
டினேரியஸ் டார்கேரியன் சாவை வென்று, மூன்று டிராகன்களுக்கும் உயிர் கொடுத்ததையடுத்து, சிறிது டோத்ராக்கி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பார்.
தனது பயணத்தின்போது ஏற்படும் வறட்சியால் மக்கள் இறப்பார்கள், குதிரைகள் சிலவும் இறந்துபோகும். இந்தச் சூழலில், டினேரியஸ் டார்கேரியனுக்குத் தைரியம் சொல்லும் ஒரே ஆள், ஜோரா மோர்மன்ட்.
அரியணைக்கு ஆசைப்படும் ஸ்டான்னிஸ் பாராத்தியன்
இறந்த மன்னர் ராபர்ட் பராத்தியனின் உடன் பிறந்த சகோதரர். ராபர்ட் பராத்தியனுக்காகப் பல போரில் சண்டையிட்டுள்ளார். இருப்பினும், ஆட்சிமேல் இருக்கும் ஆசையில் இருவருக்கும் எப்போதுமே சண்டைதான்.
நிகழ்காலத்தில் ராபர்ட் பராத்தியனின் இறப்புச் செய்தி கேட்டு, `இதுதான் அரியணையில் அமர சரியான தருணம்’ எனத் தனது படைபலத்தைப் போருக்குத் தயார்படுத்தத் தொடங்குவார் ஸ்டானிஸ் பராத்தியன்.
மெலிஸாண்ட்ரேவின் ப்ளாக் மேஜிக்
மெலிஸாண்ட்ரேவின் ப்ளாக் மேஜிக்கைப் பயன்படுத்தச் சொல்லி ரென்லி பராத்தியனைக் கொன்றுவிடுகிறார் ஸ்டானிஸ் பராத்தியன். இதை அவரின் பாதுகாவலரான ப்ரையின் டார்த்தான் செய்தார் என்று அவரைக் கொல்ல வருவார்கள், ரென்லி பராத்தியனின் விசுவாசிகள்.
ஜான் ஸ்னோ-இக்ரீட் சந்திப்பு
நைட்ஸ் வாட்ச் ராணுவம் ஒயில்டுலிங்ஸ் இனத்தை அழிப்பதற்காக அவர்களது இருப்பிடம் நோக்கிப் பயணப்படும்போது, இக்ரிட் என்ற ஒயில்டுலிங் ஜான் ஸ்நோவிடம் மாட்டிக்கொள்வார்.
பெண் என்பதால் அவரை விடுவிக்கக் கோரும் முயற்சியில் நைட்ஸ் வாட்ச்சுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிடும். இதனால், அங்கிருந்து இக்ரிட்டை அழைத்துக்கொண்டு புறப்பட்டுவிடுவார் ஜான் ஸ்நோ.
பிரான் ஸ்டார்க் கனவு
ப்ரான் ஸ்டார்க் கனவில் சில விஷயங்களைப் பார்ப்பார். அவையெல்லாம் வருங்காலத்தில் நடக்கப்போகும் விஷயங்கள். இதுபோன்று எதிர்காலத்தைப் பார்ப்பவர்களை `Three Eyed Raven’ என்று அழைப்பார்கள். இது நடப்பது வின்டர்ஃபெல்லில்.
விண்டெர்பெல்லை கைப்பற்ற நினைக்கும் தியோன் க்ரேஜாய்
ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த கேட்லின் ஸ்டார்க், ராப் ஸ்டார்க் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். சான்ஸா ஸ்டார்க் கிங்க்ஸ் லாண்டிங்கிலேயே அடைபட்டுக்கிடப்பார்.
ஆர்யா ஸ்டார்க் கிங்க்ஸ் லேண்டிங்கிலிருந்து தப்பித்து நைட்ஸ் வாட்ச் பயணப்பட்டுக்கொண்டிருப்பார். ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச்சில் இருப்பார். இப்படி வின்டர்ஃபெல்லில் யாருமே இல்லாத நிலையில் ஸ்டார்க் குடும்பத்திலிருந்து ப்ரான் ஸ்டார்க் மட்டும் அங்கிருப்பார்.
தியோன் க்ரேஜாய் செய்த துரோகத்தால் தன் பாதுகாவலர் ஓஷோவின் உதவியோடு, ப்ரான் ஸ்டார்க் ஹோடோரோடு வின்டர்ஃபெல்லிலிருந்து தப்பிவிடுவார்.
டிரியன் லன்னிஸ்டரின் யுத்தி
ஏழு ராஜ்ஜியங்களையும் ஆட்சி செய்யும் கனவோடு மாபெரும் படையைத் திரட்டிக்கொண்டு கடல் வழியே கிங்ஸ் லேண்டிங்கை அடைகிறார் ஸ்டானிஸ் பராத்தியன்.
டிரியன், ஹேண்ட் ஆஃப் கிங்காகப் பதவியேற்ற பின் அரசவையைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருப்பார்.
அப்போது செர்சி லானிஸ்டர் ‘Napalm’ என்ற கெமிக்கலைப் பயன்படுத்தி வெடிகுண்டு மருந்துகளைத் தயாரித்துக்கொண்டிருப்பது தெரியவரும்.
இந்த வெடி மருந்து நிரப்பப்பட்ட கப்பலை எதிரிகளின் கப்பல்களுக்கு இடையே கொன்று சென்று வெடிக்க வைத்து விடுவார். இதில் பெரும்பான்மையான ஸ்டான்னிஸ் பாராத்தியனின் வீரர்கள் இரண்டு விடுவர்.
இதனால் கோபமடையும் ஸ்டானிஸ், மேலும் வீரர்களை கிங்ஸ் லேண்டிங் நுழைவு வாயிலுக்கு அருகே அனுப்பிவைப்பார்.
கொஞ்சக் கொஞ்சமாக ஸ்டானிஸ் பராத்தியனின் போர் வீரர்கள் கிங்ஸ் லேண்டிற்குள் நெருங்க, டிரியனின் படைபலம் மெல்ல அவர்களது நம்பிக்கையை இழந்து தோற்றுவிடும் பயத்தில் ஆழ்ந்திருக்கும்.
நம்முடைய டிரியன்தான் பேச்சில் கில்லியாச்சே?! வீரர்களின் நரம்புகளெல்லாம் மீண்டும் புடைக்கும் அளவுக்குத் தனது பேச்சால் நம்பிக்கையை விதைப்பார்.
இறுதியில் அந்த இடத்தில் கால் பாதிக்கும் டைவின் லன்னிஸ்டர் தான் படையுடன் சண்டை போட்டு ஸ்டான்னிஸ் பராத்தியனை தோற்கடித்து விடுவார்கள். ஆனால் இந்த வெற்றி எதுவும் செய்யாத ஜோஃப்ரீ பராத்தியனையே சேரும்.
அடைக்கலத்திற்காக டிராகனை அடமானம் வைக்கும் டினேரியஸ்
எஸ்ஸோஸில் கார்த் மக்களின் உதவி கேட்டுச் சென்றிருக்கும் டினிரேயஸ் டார்கேரியனின் டிராகன்களைக் கைபற்றி, அவரிடம் தன்னைத் திருமணம் செய்துகொண்டால்தான் டிராகன்களைத் தருவோம் என்ற மிரட்டலை முன் வைப்பார், அந்த ஊரின் அரசர்.
ஸ்ஸோஸில் தனது டிராகன்களைச் சிறைபிடித்த இடத்தைக் கண்டுபிடிக்கும் டினேரியஸ் டார்கேரியன், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்திற்குச் சென்று டிராகன்களைச் சிறைபிடித்த வார்லாக்கைக் கொன்று, டிராகன்களையும் மீட்டுவிடுவார்.
கூடவே, கார்த் அரசனைச் சிறையிலடைத்து, அந்த ஊர் மக்களையும் தன்வசப்படுத்துவார்.இரண்டாவது சீஸன் இறுதியில் ஒரு படையே தளபதி ஒயிட்வாக்கரோடு வந்துகொண்டிருக்கும். இதனுடன் சீஸன் 2 முடிவடையும்.
1996ல் 66 வயதான ஜார்ஜ் ஆர்ஆர் மார்டின்(George RR Martin) எழுதிய சாங்க்ஸ் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (Songs of Ice and Fire) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட ஒரு தொடர் ஆகும்.
3000 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் மிகப்பழமையான இரண்டு கண்டங்கள் மட்டுமே தொடரில் வரும். ஒன்று வெஸ்டோரோஸ் (Westeros) மற்றும் எஸ்சோஸ் (Essos) ஆகும்.
2011, ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த சீரிஸ் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இதுவரை ஏழு சீஸன் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சீஸனிலும் 10 எபிசோடுகள்.
ஏழாவது சீஸனில் மட்டும் 7 எபிசோடுகள். மொத்தம் 67 எபிசோடுகளைக் (இதுவரை) கொண்டது, இந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’
கேம் ஆஃப் த்ரோன்ஸ் எனபது உண்மைக்கதை கிடையாது. இதுவும் பாகுபலியைப் போல கற்பனைக் கதை தான். இதே பாணியில் தான் பாகுபலி எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம்.
மனதில் இருக்கும் கற்பனையை அப்படியே தத்ரூவமாக நிஜத்திற்கு கொண்டு வந்தால் எப்படி இருக்கும் அதைப் போலத்தான் இதன் தயாரிப்பு இருக்கும்.
இந்தத் தொடரின் பெரும்பான்மையான கதைகள் அயர்லாந்து, கனடா, குரோஷியா, மால்டா, மொராக்கோ, ஸ்காட்லாந்து, ஸ்பெயின் எனப் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது.
கதைக்குள் வருவோம் வெஸ்ட்ரோஸ் மற்றும் எஸ்ஸோஸ் என இரு இடங்கள். வெஸ்ட்ரோஸை ஆட்சி செய்வது ஒரே அரியணை. கதை முழுவதுமே வெஸ்டரோஸை நோக்கியே செல்லும்.
ஏழு ராஜ்ஜியங்களைக் கொண்ட கண்டத்தை, ஆட்சி செய்வது ஒரே மன்னன். அந்த அரசன் இறந்த பிறகு, அரியணையை அபகரிக்கப் பல்வேறு ராஜ குடும்பங்கள் போரிடுவதுதான், இதன் கதை.
பொதுவாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கும் குழப்பம் இந்த குடும்பங்களின் எண்ணிக்கை தான்.
மொத்தம் 27 குடும்பங்கள் வரை தொடரில் இருக்கின்றன. ஆனால் 9 குடும்பங்கள் மட்டுமே அதிக ஆதிக்கத்தை செலுத்தும் குடும்பமாக தொடரில் காட்டப்படும்.
தொடரில் அதிகமாக காட்டப்படும் நைட்ஸ் வாட்ச்(Nights Watch) என்ற ராணுவமும் வைல்ட்லிங்க்ஸ்(Wildlings) என்ற பழங்குடியினரும் மற்றும் 1000 வருடங்களுக்கு முன்னாள் இறந்த ஒயிட் வால்கெர்ஸ் (White Walkers) என்ற படையும் வருகின்றனர்.
ஜான் ஆர்ரின் மறைவு
வெஸ்டிரோஸில் இருக்கும் ஏழு ராஜ்ஜியங்களை ஆட்சி செய்யும் அரசன், ராபர்ட் பராத்தியன். அனைத்து நகரங்களின் தலைநகரமான கிங்ஸ் லேண்டிங்க் எனும் இடத்தில் இவரின் அரண்மனை இருக்கிறது.
அரசனின் தலைமை ஆலோசகராகப் பணிபுரிபவரை `Hand of the king’ என்று அழைப்பார்கள். ராபர்ட் பாராத்தியனின் தலைமை ஆலோசகரான ஜான் ஆர்ரின் இறந்தவுடன் ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த நெட் ஸ்டார்க் பதவியேற்க வேண்டும் என ராபர்ட் பாராத்தியன் மன்னன் ஆணையிடுகிறார்.
சூழ்ச்சி கொண்ட, தன்னுடைய நற்பெயரைப் பாதுகாத்துக்கொள்ளவும் நூதனமான சில குழப்பங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர், பீட்டர் பெய்லிஷ் இவர் ராபர்ட் பாராத்தியனின் தம்பி ஆவார்.
ஸ்டார்க் குடும்பத்தின் தலைவர், நெட் ஸ்டார்க். ஸ்டார்க் குடும்பத்தின் தலைவர், நெட் ஸ்டார்க். இவருக்கு ஆறு குழந்தைகளுடன் ஜான் ஸ்னோ என்பவர் நெட் ஸ்டார்கிற்கும், வேறொரு பெண்ணிற்கும் பிறந்தவர்போல் காட்டியிருப்பார்கள்.
கதையில் வரும் நைட்ஸ் வாட்ச் என்னும் ராணுவம் 8000 வருடங்களுக்கு முன்பு தோன்றியதாக கதையில் சொல்லப்படும். 700 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சுவரில் இவர்கள் இருப்பார்கள்.
முதல் சீஸன், முதல் எபிசோடு இந்தச் சுவரிலிருந்துதான் தொடங்கும். மூன்று பாதுகாவலர்கள் அந்த அரணைச் சுற்றி ரோந்து வரும்போது, சில நபர்கள் செத்துக்கிடப்பதைப் பார்க்கிறார்கள்.
ஒயில்டுலங்ஸ் எனும் பழங்குடியினர் செய்த வேலையாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அரணை நோக்கிக் குதிரையில் பாய்வார்கள்.
திடீரென ஒரு ஒயிட் வாக்கர் அவர்கள் முன் வந்து நிற்கிறது. இதில் இருவரை கொன்று விடுகிறது. ஒருவர் மட்டும் தப்பித்து ஓடி விண்டெர்ஃபெல்லுக்கு சென்று விடுகிறார்.
இன்செஸ்ட் உறவு
ராஜ்ஜியங்களின் அரசனான ராபர்ட் பராத்தியன், லானிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்த செர்சி லானிஸ்டர் என்பவரைத்தான் திருமணம் செய்திருப்பார்.
ராபர்ட் பராத்தியனின் மகன் பெயர், ஜோஃப்ரி பாராத்தியன். ஆனால், செர்சி லானிஸ்டரின் தம்பியான ஜேமி லானிஸ்டருக்கும், அவருக்கும் பிறந்தவர்தான் ஜோஃப்ரி லானிஸ்டர் என்று ஊர் முழுக்கப் புறணி பேசிக்கொண்டிருப்பார்கள்.
காரணம், ஜேமிக்கும், செர்சிக்கும் இடையே `இன்செஸ்ட்’ உறவு இருக்கும். இன்செஸ்ட் என்றால் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே உறவு வைத்துக்கொள்வது.
ஜான் ஆர்ரின் மரணத்திற்கு இவர்களின் உறவும் ஒரு காரணம் என்று கதையில் காட்டப்படும். ஜான் ஆர்ரின்தான், ராபர்ட் பராத்தியனின் முந்தைய ‘Hand of the king’.
தார்கேரியன் குடும்பத்துடன் திருமண முடிக்கும் டொத்ராக்கி குடும்பம்
டார்கேரியன் குடும்பம் எஸ்ஸோஸ் பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பம். கதைப்படி, இவர்கள்தான் பல வருடங்களுக்கு முன்பு ஏழு ராஜ்ஜியங்களையும் ஆண்டுகொண்டிருந்தார்கள்.
அந்தச் சமயத்தில் நடந்த ஓர் அரசியல் திருமணத்தால், மொத்த ராஜ்ஜியமும் பராத்தியன் குடும்பத்திடம் சென்றுவிடும். இந்தக் குடும்பத்தில் டினேரியஸ் டார்கேரியன், விசிரஸ் டார்கேரியன் என இருவர் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.
ஆட்சியை மீண்டும் கைப் பிடிக்க ஆசைப்படும் விசிரஸ் டார்கேரியன் அவரது தங்கை டினேரியஸ் டார்கேரியனை, டோத்ராக்கி இனத்தைச் சேர்ந்த கல் டிராகோ என்பவருக்குத் திருமணம் செய்யத் திட்டமிடுவார்.
ஏனென்றால், கல் டிராகோ ஒரு மாபெரும் போர் வீரன். அதனால், இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க இந்த அரசியல் திருமணத்தை நடத்த திட்டமிடுவார், விசிரஸ் டார்கேரியன்.
மேற்கூறிய குடும்பங்கள்தாம் ராஜ குடும்பங்கள். நெட் ஸ்டார்க், ராபர்ட் பராத்தியனுக்காகப் பல போரில் சண்டையிட்டு ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொடுத்தவர்.
செர்சி லானிஸ்டர் – ஜேமி லானிஸ்டருக்கும் இடையே இருக்கும் இன்செஸ்ட் உறவு, ஸ்டார்க் குடும்பத்தின் பாஸ்டர்ட் என்றழைக்கப்படும் ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச்சின் பாதுகாவலனாகச் செல்வது,
நெட் ஸ்டார்க்கின் மகள் சான்ஸா ஸ்டார்க் – ராபர்ட் பராத்தியனின் மகன் ஜோஃப்ரி ஸ்டார்க் திருமண நிச்சயம், கல் டிராகோ – டினேரியஸ் டார்கேரியனின் திருமண வாழ்க்கை,
டிராகன் இருப்பதாக நினைத்து சில முட்டைகளைப் பாதுகாத்து வரும் டினேரியஸ் – டோத்ராக்கி குடும்பம், கிங்க்ஸ் லேண்டிங்கில் நெட் ஸ்டார்க்குடைய ஹேண்ட் ஆஃப் கிங்க்கின் அரசவைப் பணி, டோத்ராக்கி வெஸ்டிரோஸை நோக்கிப் போருக்குப் பயணப்படுவது இவைதான் முதல் சீஸனில் நடப்பவை ஆகும்.
தொடர்ந்து டினேரியஸ் டார்கேரியனை அவரது அண்ணன் விசிரஸ் டார்கேரியன் கொடுமைப்படுத்திக்கொண்டே இருப்பார். அதில் கடும்கோபமடையும் கல் டிராகோ, விசிரஸ் டார்கேரியனை கொடூரமாகக் கொன்றுவிடுவார்.
ராபர்ட் பாராத்தியன் மரணம்
ராபர்ட் பராத்தியன் வேட்டைக்குச் செல்லும்போது நடந்த விபத்தினால், மரணப் படுக்கையில் இருக்க, `இனி நீதான் ஆட்சி செய்யவேண்டும்’ என நெட் ஸ்டார்க்கிற்கை நோக்கி உத்தரவிட்டு இறந்துவிடுகிறார்.
ஜேமி லன்னிஸ்டர் மகனான ஜோஃப்ரி பராத்தியனை அந்தச் சிறு வயதிலேயே அரியணையில் அமரச் செய்யவும் திட்டமிடுவார்.
ராபர்ட் பராத்தியன் இறந்ததையடுத்து, புதிய மன்னன் ஜோஃப்ரி பராத்தியனின் தலையில் மணி மகுடம் ஏறுகிறது. அந்த மயக்கத்திலேயே கைது செய்த நெட் ஸ்டார்க்கின் தலையைத் துண்டிக்கச் சொல்லி உத்தரவிடுகிறான்.
துன்பத்தின் போது பிறந்த குட்டி ட்ராகன்கள்
ஸ்ஸோஸில் படை பலத்தைத் திரட்டும் முயற்சியின்போது ஏற்பட்ட ஒரு சண்டையில், கல் டிராகோவுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது டினேரியஸ் டார்கேரியனுக்குத் தெரியவருகிறது. எஸ்ஸோஸில் இருக்கும் கல் டிரோகோ, மரணப்படுக்கைக்குச் செல்கிறார்.
எவ்வளவு முயற்சி செய்தும் கணவன் கால் துரோகோ இறந்துவிடுகிறார். ‘கணவர் இறந்த பிறகு மனைவி தீயில் தன்னை எரித்துக்கொள்ள வேண்டும்’ என்பது டோத்ராக்கி மக்கள் பின்பற்றி வரும் வழிமுறை.
தனது திருமண சீதனமாக வந்த பாதுகாக்கப்பட்ட, அதேசமயம் கற்களாகிவிட்ட டிராகன் முட்டைகளோடு மூட்டிய தீக்குள் மெதுவாக நடந்து செல்கிறார்.
விடிந்ததும், டினேரியஸ் டார்கேரியனின் உடலைப் பார்க்க மக்கள் அனைவரும் எழுகின்றனர். சிறிதளவு காயம்கூட இல்லாமல், ஆடை மற்றும் எரிந்த நிலையில் முடங்கி உட்கார்ந்திருக்கிறார், டினேரியஸ்.
அவரது கழுத்துக்கு அருகே ஒரு குட்டி டிராகன் தன் சிறகை விரித்தபடி அமர்ந்திருக்கும்! கூடவே இன்னும் இரண்டு குட்டி டிராகன்களும் அவருடன் எழுந்து மக்களைப் பார்க்கின்றன.
வியப்பில் ஆழ்ந்த மக்கள் அனைவரும் மண்ணில் மண்டியிட்டு டினேரியஸ் டார்கேரியனை வணங்குகிறார்கள்.
ஒரு பக்கம் நெட் ஸ்டார்க் இறப்பு மறு பக்கம் ட்ராகன் பிறப்பு என முதல் சீஸன் முடிவடைகிறது.
16 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே பறிகொடுத்தது. வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.
17-வது ஓவரில் போட்டி முடிந்தாலும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு தான் ராயல்ஸ் அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
174 ரன்களில் 4 விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. குருனால் பாண்டியாவும் பும்ராவும் மரண சொருகு சொருக ராஜஸ்தான் வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்டினார்.
கோபால் அடிக்க முயன்ற போரை அற்புதமாக அல்ஜார்ரி தடுத்தார். வேகமாக சென்று விழுந்ததில் அவரது தோள்பட்டை உள்காயத்துடன் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது.
மொத்த விக்கெட்டுகளும் காலியாகி இருக்க வேண்டிய நிலை. பும்ரா ஓவரில் கடைசி பந்தில் கீப்பர் ஒரு கேட்ச் மிஸ் செய்துவிட்டார்.
ஹார்த்திக் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் கோபால் தூக்கிஅடிக்க அந்த கேட்ச்சும் மிஸ் ஆகிவிட்டது.
மும்பை வீரர்கள் தவறால் அதிஸ்ட காற்று மீண்டும் ராஜஸ்தான் பக்கம் அடிக்க அதே சூட்டோடு 19.3 வது ஓவரில் கோபால் ஒரு போர் அடித்து தோல்வியால் துவண்டுகொண்டு இருந்த ராயல்ஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
எளிமையாக வெற்றி பெறவேண்டிய போட்டியை கடைசி இரண்டு ஓவரில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் RCB vs KXIP மோதுகின்றது. வெற்றி கணக்கையே துவங்காத ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி வெற்றி பெறுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
தொடர்ந்து மும்பை பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் பவுலர்களை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.
டிகாக் 50 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். சூரிய குமார் யாதவ் 9 பந்துகளில் 16 ரன்கள் அடித்துள்ளார். மும்பை இதே வேகத்தில் ஆடினால் 200 ரன்களைக் கடக்க வாய்ப்பு உள்ளது.