Home Blog Page 287

குழப்பமான கேம் ஆஃப் த்ரோன்ஸின் (Game of Thrones) குடும்பங்களைப் பற்றிய ஒரு பார்வை

0
Game of Thrones

குழப்பமான கேம் ஆஃப் த்ரோன்ஸின் (Game of Thrones) குடும்பங்களைப் பற்றிய ஒரு பார்வை

1996ல் 66 வயதான ஜார்ஜ் ஆர்‌ஆர் மார்டின்(George RR Martin) எழுதிய சாங்க்ஸ் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர் (Songs of Ice and Fire) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட ஒரு தொடர் ஆகும்.

3000 வருடங்களுக்கு முன்னாள் இருக்கும் மிகப்பழமையான இரண்டு கண்டங்கள் மட்டுமே தொடரில் வரும். ஒன்று வெஸ்டோரோஸ் (Westeros) மற்றும் எஸ்சோஸ் (Essos) ஆகும்.

பொதுவாக கேம் ஆஃப் த்ரோன்ஸ் பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் இருக்கும் குழப்பம் இந்த குடும்பங்களின் எண்ணிக்கை தான். மொத்தம் 27 குடும்பங்கள் வரை தொடரில் இருக்கின்றன.

தொடரில் அதிகமாக காட்டப்படும் நைட்ஸ் வாட்ச்(Nights Watch) என்ற ராணுவமும் வைல்ட்லிங்க்ஸ்(Wildlings) என்ற பழங்குடியினரும் மற்றும் 1000 வருடங்களுக்கு முன்னாள் இறந்த ஒயிட் வால்கெர்ஸ் (White Walkers) என்ற படையும் வருகின்றனர்.

ஆனால் 9 குடும்பங்கள் மட்டுமே அதிக ஆதிக்கத்தை செலுத்தும் குடும்பமாக தொடரில் காட்டப்படும். தொடரின் கதை முழுவதுமே வெஸ்டோரோஸை நோக்கியே நகரும். அரியனைக்காக நடக்கும் ஒரு போட்டியே கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆகும்.

1. ஸ்டார்க் குடும்பம் House Stark

வெஸ்டோரோஸின் வடக்கத்திய பகுதிகளை ஆளுபவர்கள் ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்தக் குடும்பத்தில் நெட் ஸ்டார்க், ராப் ஸ்டார்க், ஆர்யா ஸ்டார்க், சன்சா ஸ்டார்க் ஆகியோருடன் ஜான் ஸ்னோவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

2. லேனிஷ்டர் குடும்பம் House Lannister

வெஸ்டோரோஸின் மேற்க்குப் பகுதிகளை தங்கள் கையில் கொண்டுள்ளவர்கள் லன்னிஸ்டர் ஆவார்கள்.

டைரின் லன்னிஸ்டர், ஜேமீ லன்னிஸ்டர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

3. தார்கேரியன் குடும்பம் House Targaryen

300 வருடங்களாக 7 அரசவைகளையும் அயர்ன் த்ரோனையும் தங்களுடைய டிராகனை வைத்து ஆட்சி செய்த குடும்பத்தினர் தார்கேரியன் ஆவார்கள்.

மேட் கிங்கின் ஆட்சியின் போது நெட் ஸ்டார்க் மற்றும் ராபர்ட் பராத்தியன் முயற்சியால் ராபர்ட் ஆட்சியைப் பிடித்தார்.

டேனேரியஸ் தார்கேரியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். ஜான் ஸ்னோவின் பிறப்பு தார்கேரியன் வம்சாவழியையே சேரும்.

4. பராத்தியன் குடும்பம் House Baratheon

ராபர்ட் பராத்தியன் மேட் கிங்கை தோற்கடித்து அயர்ன் த்ரோனை கைப்பற்றிய பிறகே இவர்கள் குடும்பம் வெளிச்சத்திற்கு வந்தது.

ராபர்ட் பராத்தியன், ரென்லி, ஸ்டான்னிஷ் பாராத்தியன் ஆகியோர் முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

5. டைரேல் குடும்பம் House Tyrell

லார்ட்ஸ் ஹைகார்டனை உருவாக்கியோர் டைரல் குடும்பத்தினர் ஆவார்கள். ஓலைன்ன டைரேல், மார்கெரி டைரேல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

6. டல்லி குடும்பம் House Tully

ரிவர்லண்ட்ஸ் பகுதிகளை ஆட்சி செய்யும் குடும்பம் இதுவாகும். நெட் ஸ்டார்க் மனைவி கேதலின் ஸ்டார்க் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹாஸ்டர், எட்முரே ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

7. மார்டெல் குடும்பம் House Martell

டோர்ன் பகுதிகளை ஆட்சி செய்யும் இவர்களின் அரண்மனை சன்ஸ்பெயர் கேசில் ஆகும். இந்தக் குடும்பத்தில் டொரன், ஒப்ரியன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரமாகும்.

8. கிரேஜோய் குடும்பம் House Greyjoy

அயர்ன் ஐலண்ட் பகுதிகளை ஆட்சி செய்பவர்கள் கிரேஜோய் குடும்பத்தினர் ஆவார்கள். தியான், யாரோ, யூரோன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரமாக நடித்துள்ளனர்.

9. ஆர்ரின் குடும்பம் House Arryn

ஐரி மலைப் பகுதிகளை ஆட்சி செய்யும் வேல் எனும் ஆர்ரின் குடும்பத்தினரில் லார்ட் ஜான் ஆர்ரின், லைசா ஆர்ரின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

வெயிலைக் கண்டு பயமா? ஏசி குடைகள் வந்துவிட்டது!

0
ஏசி குடைகள், AC Umbrella

வெயிலைக் கண்டு பயமா? ஏசி குடைகள் வந்துவிட்டது!

நம்ம ஊரில் அடிகின்ற வெயிலுக்கு அம்பர்லா உடன் சென்றாலும் உச்சந்தலைக்குள் நச்சென்று இறங்குகிறது வெயிலின் உஷ்ணம்.

2 ரூபாய் கொடுத்து நல்ல கூலிங் வாட்டர் பாக்கெட்டை வாங்கி தலையை நனைத்துக்கொண்டு வெயிலை சமாளிப்பவர்கள் அதிகம்.

கண்கள் கூடத் தெரியாத அளவுக்கு இழுத்துப்போர்த்திக்கொண்டு பெண்கள் வெளியில் வந்தாலும் வெயிலின் உக்கிரத்தால் வியர்வையில் குளித்துவிடுவார்கள்.

தற்பொழுது கோடை வெயிலை சமாளிக்க ஏசி குடைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வருடக் கோடை வெயிலுக்கு இந்தியாவில் இந்தக்குடைகள் அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணக் குடை போன்றே இருக்கும். குடையின் உள்உச்சியில் விசிறி உள்ளது. பேட்டரி கொண்டு இயங்குகிறது. கைப்பிடிக்கும் இடத்தில் ஒரு வாட்டர் பாட்டிலை சொருகும் வசதியும் உள்ளது.

கூலிங் இல்லாத தண்ணீர் என்றால் ஏர்கூலர் அளவிற்கு கூலிங் கிடைக்கும். அதுவே கூலிங் தண்ணீர் என்றால் ஏசி அறைக்குள் இருக்கும் உணர்வு இருக்கும்.

இந்த நவீனக் குடையின் விலை 1000 முதல் 3000 வரை இந்தியாவின் ஆன்லைன் தளங்களில் விற்கப்பட்டு வருகிறது.

கீழே குடை பற்றிய வீடியோ உள்ளது பார்க்கவும்.

3

துவம்சம் செய்த ரஸல்: மன்கட் அஸ்வின் இப்போ மங்கூஸ் அஸ்வின்

0
துவம்சம் செய்த ரஸல்

துவம்சம் செய்த ரஸல்: மன்கட் அஸ்வின் இப்போ மங்கூஸ் அஸ்வின்

கடந்த போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றதற்கு அஸ்வினின் மன்கட் அவுட் என பலரால் விமர்சிக்கப்பட்டது.

அதே போன்று கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் அஸ்வினின் மங்கூஸ் தனமான பீல்டிங் நிறுத்தத்தால் தோல்வியைத் தழுவி உள்ளது.

முதலில் டாஸ் வென்ற அஸ்வின் இந்தமுறை பவுலிங் தேர்வு செய்தார். இது மிகப்பெரிய தவறு என போட்டி முடிவில் உணர்ந்திருப்பார்.

டாஸில் தோற்றாலும் எதிர்பார்த்தது போன்றே பேட்டிங் கிடைத்தால் கொல்கத்தா வீரர்கள் பஞ்சாப்பை துவம்சம் செய்துவிடவேண்டும் என்ற முடிவுடனே களத்தில் இறங்கினர்.

ராணா 63, ரஸல் 48, ராபின் உத்தப்பா 67 ராவில் துவங்கும் இந்த மும்மூர்த்திகள் காட்டிய வான வேடிக்கையில் மைதானமே அதிர்ந்தது.

20 ஓவர் முடிவில் 218 ரன்களைக் குவித்தது கொல்கத்தா. பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவக் காரணம்

முகமது ஷமி ஓவரில் 3 ரன்கள் இருந்தபோது ரஸல் கிளின் போல்ட் ஆனார். ஆனால் அது வித்தியாசமான நோபாலாக மாறியது.

சர்க்கிள் உள்ளே மூன்று பீல்டர்கள் மட்டுமே இருந்தார்கள். சர்க்கிள் உள்ளே குறைந்தது நான்கு பீல்டர்களை நிறுத்தி இருக்க வேண்டும்.

இதனால் 17 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றுவிட்டார் ரஸல். அம்பயர் நோபால் என அறிவித்ததும் அஸ்வின் அழாத குறையாக துவண்டுவிட்டார்.

தன்வினைத் தன்னைச்சுடும் என்பதுபோல் அஸ்வினின் பீல்டிங் மிஸ்டேக்கில் கொல்கத்தா ரன்களை அதிகமாகக் குவித்து வெற்றி பெற்றது.

3

ஐரா (Airaa) படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி‌வி: நயன்தாரா

0

ஐரா (Airaa) படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிய விஜய் டி‌வி: நயன்தாரா

முதன் முறையாக நடிகை நயன்தாரா, யமுனா, பவானி என இரு வேடங்களில் நடிக்கும் திரைப்படமாகும். குறும்பட இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஐரா’.

நாளை திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஹாரர் ஜானரில் வெளியாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை பிரபலமான  நிறுவனமான விஜய் டி‌வி பெற்றுள்ளது

மேலும் டிஜிட்டல் ஒளிபரப்பு(Online Streaming) உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ வாங்கியுள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

3

பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு; மன்கட் மாஸ்டர் Live IPL Match

0
Live IPL Match

பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு; மன்கட் மாஸ்டர் Live IPL Match

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடியபோது பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கினர்.

மகாபாரதத்தில் கிருஷ்ணர், கர்ணனை வஞ்சத்தில் வீழ்த்தியது போன்று இந்த நிகழ்வு அமைந்ததாக பலரால் விமர்சிக்கப்பட்டது.

மன்கட் அஸ்வின் என சமூக வலைதளங்களில் வைரலானார். இந்நிலையில் இன்று பஞ்சாப்-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியிலும் அஸ்வின் மன்கட் முறையில் யாரையேனும் அவுட் செய்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் போட்டியை காண உள்ளனர்.

Live IPL Match

3

தூத்துக்குடியில் தமிழிசையை விரட்டிய மக்கள்; வீடியோவால் பரபரப்பு

0
தூத்துக்குடியில்

தூத்துக்குடியில் தமிழிசையை விரட்டிய மக்கள்; வீடியோவால் பரபரப்பு

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.

இவர் வேட்புமனு செய்தபோது சரியான விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என வேட்புமனுவை ஏற்பதில் தாமதமானது.

பின்பு ஒரு வழியாக வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் இன்று அவர் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது, அவரைப் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது. தொகுதி பக்கம் வரக்கூடாது என பொதுமக்கள் சிலர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உட்பட எந்தவித பிரச்சனையின்போதும் தொகுதி பக்கமே எட்டிப்பார்க்காதபோது, தேர்தல் வருகிறது என்ற உடன் வாக்குக் கேட்டு வருவதா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தமிழிசை அந்தப் பகுதியில் பிரச்சாரத்தைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பிவிட்டார்.

தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதேபோன்று எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரியார் வாழ்க என்ற கோசம் அவருடைய பேச்சையும் மீறி சத்தமாக ஒலித்தது.

3

ஹெல்மெட் போடாமல் துளி கூட பயம் இல்லாமல் டெல்லியை கதறவிட்ட தோனி

0
ஹெல்மெட்

ஹெல்மெட் போடாமல் துளி கூட பயம் இல்லாமல் டெல்லியை கதறவிட்ட தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியில் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 36 ரன்கள் சேர்த்தது. ப்ரித்வி ஷா, 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட நேரம் விளையாடி 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார்.

பின்னர் வந்த அதிரடி பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் 13 பந்துகளைச் சந்தித்த அவர் 25 ரன்கள் எடுத்து பிராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு டெல்லி அணியின் விக்கெட் சரிய சரிய ரன் ரேட் குறைந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி தரப்பில் சிகர் தவான் அரைசதம் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய சென்னை அணியில் ராயுடு சொற்ப ரன்னில் அவுட் ஆக வாட்சன் மற்றும் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அணி 73 ரன்கள் இருக்கும் பொழுது வாட்சன் அவுட் ஆக, 11 ஓவரில் அணியின் ஸ்கோர் 98 இருக்கும் பொழுது ரெய்னா பெவிலியன் சென்றார்.

அதன்பிறகு களத்திற்கு வந்த தோனி மற்றும் ஜாதவ் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி ஓவரில் இரண்டு பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் சென்னை அணி வெற்றிபெற்றது.

3

5 பெண்கள் விடிய விடிய பலாத்காரம் செய்து பண்ணை வீட்டில் புதைத்த பொள்ளாச்சி கும்பல்

0
5 பெண்கள்

5 பெண்கள் விடிய விடிய பலாத்காரம் செய்து பண்ணை வீட்டில் புதைத்த பொள்ளாச்சி கும்பல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. சி.பி.சி.ஐ.டி.யில் இருந்து சி.பி.ஐ. கைக்கு இந்த வழக்கு மாறியுள்ளது.

தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு விஷயமும் புதகராமாகக் கிளம்பிக் கொண்டே உள்ளது.

பொள்ளாச்சி கும்பல் துணை சபாநாயகர் மகன் உட்பட ஒரு பெரிய நெட்வொர்க்கே இயங்கிக் கொண்டு இருப்பதை மீண்டும் நக்கீரன் ஆதாரத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டது.

PAID என பைக்கில் ஸ்டிக்கர் ஓட்டிக்கொண்டு இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி, கோவைப் பகுதியில் வலம் வந்துள்ளனர்.

தற்பொழுது ஒரு பெண் இந்தக் கும்பலைப் பற்றி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இருப்பினும் இன்னும் அவரைப் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவில்லை.

அப்பெண் ஆடியோவில் கூறியதாவது, என்னைப் போன்று பல பெண்களை இந்தக் கும்பல் சீரழித்துள்ளது.

ஒரு நாள் இவர்கள் விரித்த வலையில் நான் உட்பட 4 பேர் பொள்ளாச்சி பண்ணை வீட்டில் சிக்கிக்கொண்டோம்.

அப்போது எட்டு பேர் கொண்ட கும்பல் எங்களைச் சீரழித்தனர். அப்போது மேலும் ஒரு சிறு வயதுப் பெண்ணைக் கூட்டி வந்தனர்.

அப்பெண்ணை விடிய விடிய கற்பழித்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் அந்தப் பெண் மரணம் அடைந்துவிட்டார்.

உடனே அந்தப் பெண்ணின் சடலத்தை பண்ணை வீட்டின் பின்புறம் புதைத்து விட்டனர். எங்களை வீடியோ எடுத்துக்கொண்டு வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டினர் எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்க நெருங்க மேலும் பல பெண்கள் புகார் கொடுக்க முன்வரலாம் என பேச்சு அடிபட்டு வருகிறது.

3

தோனியை வீழ்த்துவேன்: ரிஷப்பின் குறும்பு வீடியோ

0
தோனியை வீழ்த்துவேன்

தோனியை வீழ்த்துவேன்: ரிஷப்பின் குறும்பு புரமோ வீடியோ

12-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே தோனி-கோலி தலைமையிலான அணி மோதிக்கொண்டது.

மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என எதிர்பார்த்துச் சென்ற ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்ததால் RCB அணி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தது. இதனால் தோனியும் பேட்டிங் செய்ய முடியாமல் போனது.

இன்று இரவு 8:00 மணிக்கு CSK vs DC அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டது.

டெல்லி அணி இந்த முறை வலுவான அணியாக உருவாகியுள்ளது. முக்கியமாக ரிஷப் பண்ட் அதிரடி டெல்லியின் பேட்டிங்கிற்கு வலுசேர்க்கிறது.

இளம் வீரர்களை கொண்டுள்ள டெல்லி கேப்பிட்டல் அணி மூத்த வீரர்களைக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இளம் வீரர்களின் பலமா? மூத்தவர்களின் அனுபவமா? ஜெயிக்கப்போவது யார் என இப்போட்டியைக் காண இருதரப்பு ரசிகர்களிடமும் ஆவல் அதிகரித்துள்ளது.

3

296 சிக்ஸர் 4000 ரன்கள்; மரண காட்டு காட்டிய கெயில்

0
296 சிக்ஸர் 4000 ரன்கள்

296 சிக்ஸர் 4000 ரன்கள்; மரண காட்டு காட்டிய கெயில்

வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு விளையாடும்போது கூட மந்தமாகவே விளையாடுவார்கள்.

ஆனால் ஐ.பி.எல். போட்டி என்றால் மரணக்காட்டுக் காட்டுவார்கள். அனைத்து வீரர்களும் ஆல்ரவுண்டர்களாக வேறு இருப்பார்கள்.

சமீபத்தில் தான் சுரேஷ் ரெய்னா 5000 ரன்களைக் கடந்த முதல் ஐபிஎல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால் 173 போட்டிகளில் இந்தச் சாதனையைப் படைத்தார்.

நேற்று நடந்த பஞ்சாப் ராஜஸ்தான் இடையே நடந்த போட்டியில் கிறிஸ் கெயில் 46 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார்.

20 ஓவர்களுக்கு பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 184 ரன்கள் குவித்தது. அதன்பின்பு ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை  பறிகொடுத்து 170  ரன்களை மட்டுமே எடுத்தது.

ஹைலைட்ஸ் வீடியோ

கிறிஸ் கெயில் சாதனைத் துளிகள்

கெயில் 112 போட்டிகளில் விளையாடி 4000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 4000 ரன்களைக் கடந்த இரண்டாவது வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

கெயில் 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்ததே ஒரு பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராக இன்னும் உள்ளது.

112 போட்டிகளில் இதுவரை 296 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் 300 சிக்ஸர்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

கெயில் 2013-ல் ஒரு இன்னிங்சில் 17 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இன்றுவரை அதை யாராலும் முறியடிக்க முடியவில்லை.

2013-ல் 30 பந்துகளில் 100 ரன்கள் அடித்துள்ளார். குறைந்த பந்துகளில் 100 ரன்கள் அடித்த சாதனையும் இன்னும் முறியடிக்கப்படவில்லை.

இதுவரை 6 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 20 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றும் முதலிடத்தில் உள்ளார்.

இப்படி கெயிலின் முறியடிக்கப்படாத சாதனைகள் ஏராளம்.

3