Home Blog Page 288

என்.ஜி.கே ரிலீஸ்: ஆர்ப்பரிக்கும் சூர்யா-செல்வராகவன் ரசிகர்கள்

0
என்.ஜி.கே ரிலீஸ்

என்.ஜி.கே ரிலீஸ்: ஆர்ப்பரிக்கும் சூர்யா-செல்வராகவன் ரசிகர்கள்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு செல்வராகவன் இயக்கிய படம் என்.ஜி.கே. சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளார்.

நந்த கோபாலன் குமரன் என்ற பெயரின் சுருக்கமே என்.ஜி.கே. 2016-ஆம் ஆண்டே படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இதனால் சூர்யா-செல்வராகவன் ரசிகர்கள் என்.ஜி.கே. படத்தின் அப்டேட் பற்றி சொல்லுங்கள் என செல்வராகவனை ரசிகர்கள் நச்சரித்துக்கொண்டே இருந்தனர்.

அவர்களைக் குஷிப்படுத்தும் விதமாக சில வாரங்களுக்கு முன் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

ட்ரைலரில் அரசியல், விவசாயம், அடிதடி என விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லாத அளவிற்குக் காட்சிகள் இருந்தது.

இந்நிலையில் இப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. எனவே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தின் ரிலீஸ் தேதியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

என்.ஜி.கே., மே மாதம் 31-ம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.

3

ஆசிட் அட்டாக்கில் இருந்து மீண்ட லஷ்மி அகர்வால் பயோபிக்: தீபிகா படுகோன்

0
லஷ்மி அகர்வால் பயோபிக்

ஆசிட் அட்டாக்கில் இருந்து மீண்ட லஷ்மி அகர்வால் பயோபிக்: தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் நடித்து ஆசிட் வீச்சால் பதிக்கப்பட்ட 32 வயதான லஷ்மி அகர்வால் என்ற பெண்மணியின் ‘சபாக்‘ என்ற பயோபிக் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

2005-ம் ஆண்டு, தலைநகர் டெல்லியில் 15 வயது லஷ்மி அகர்வால் என்ற பெண் காதலை ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக ஆசிட் வீச்சால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

இதனால் சிதைந்த முகத்துடன் அவர் பெரும் இன்னல்களுக்கு உள்ளானார். எங்கு சென்றாலும் அவமதிப்பும் அவமானமும் வாய்ப்பு மறுப்புகளும் ஏற்பட்டது.

இருப்பினும் மனம் தளராமல், ‘நான் மட்டும் அல்ல’, என்னைப்போல ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் குரல்கொடுக்க வேண்டும்.

இனி, இந்தக் கொடுமைகள் யாருக்கும் நிகழாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆசிட் விற்பனை ஒழுங்குமுறைகளை கொண்டுவந்தார்.

தொடர்ந்து `சான்வ் ஃபவுண்டேஷன்’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கி ஆசிட் வீச்சுக்கு எதிராகவும் ஆசிட் வீச்சால் பாதிக்கட்டவர்களுக்குப் பெரிதளவில் உதவி செய்தும் வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.  இதில் தீபிகா படுகோன், லஷ்மி அகர்வாலாக நடித்துள்ளார்.

சமீபத்தில்  இந்தியில் ஹிட் அடித்த `ராஸி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சார்தான் லஷ்மியின் பயோபிக்கையும் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், லஷ்மியைப் போல், திபீகா ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.
3

பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் வேண்டுகோள்

0
பும்ராவிற்கு ஓய்வு

பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் வேண்டுகோள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரைக் கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு மாதத்தில் துவங்க உள்ள நிலையில் பும்ரா இப்படி விசப்பரீட்சை செய்வது நல்லதல்ல என்று தெரிவித்து வருகின்றனர்.

ரிஷப் பண்ட் அடித்த பந்தை பும்ரா தடுக்க முயன்ற பொழுது தோள்பட்டையில் காயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/dhonirohitfan1/status/1109858689324744704

போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

குறிப்பாக ரிஷப் பண்ட் வெறும் 27 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்து மாஸ் காட்டினார். இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 214 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணி 19.2 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா பேட் செய்ய வரவில்லை. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை தரப்பில் யுவராஜ் சிங் மட்டும் அரைச்சதம் அடித்தார். மற்ற யாரும் சிறப்பாக செயல்படாததால் மும்பை தோற்றது.

ரசிகர்களின் கருத்துகள்

3

18 பந்து 50 ரன்கள்: மும்பையைக் கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

0
ரிஷப் பண்ட்

18 பந்து 50 ரன்கள்: மும்பையைக் கிழித்து தொங்கவிட்ட ரிஷப் பண்ட்

மந்தமான அணி என ஐபிஎல் போட்டியில் பெயரெடுத்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி, டெல்லி கேபிட்டல் என்று பெயரை மாற்றிக் களம் இறங்கியது.

முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பில்டிங் தேர்வு செய்தார். பிரித்வி ஷா 7, ஷ்ரேயஸ் அய்யர் 16, ஐங்கிராம் 47,  ஷிகர் தவான் 43 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களம் இறங்கிய ரிஷப்பண்ட் மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை கிழித்து தொங்கவிட்டார்.

போர், சிக்சர் என விளாசி 18 பந்திலேயே அரைச் சதத்தை கடந்தார். ஐபிஎல் போட்டியில் விரைவாக 50 ரன்கள் அடித்த தோனியின் சாதனையை முறியடித்தார்.

ரிஷப் பண்ட் அடித்த இந்த அதிரடி ரன்களே மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது.

டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 213 ரன்களைக் குவித்தது. கடினமான வெற்றி இலக்குடன் களம் இறங்கியது மும்பை.

மும்பை இந்தியன்ஸ் அணி, 19.2 ஓவரில் 176 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மும்பை அணியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக 53 ரன்கள் எடுத்தார்.

பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு டெல்லி அணியின் ரன் ரேட்டை குறைத்திருந்தால் மும்பை அணி வெற்றிபெற்று இருக்க வாய்ப்புகள் உண்டு.

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் தோற்பது வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போனது.

82 off 30! DC Whack MI at the Death

 

முழுமையான ஐபிஎல் ஸ்கோர் விவரங்களை தெரிந்துகொள்ள கிளிக் செய்யுங்கள்

3

6 சிக்ஸர்: ரஸலின் மரண அடியால் KKR வெற்றி

0
KKR வெற்றி

6 சிக்ஸர்: ரஸலின் மரண அடியால் KKR வெற்றி

ஐபில் லீக் 2019 தொடரின் 2-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது.

அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி நிதானமாக ரன்களை எடுத்து வந்தது. கடைசி நான்கு ஓவருக்கு 59 ரன்கள் தேவை.

ரஸல் களத்தில் இருந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் போர், சிக்ஸர் என மரண அடி அடித்தது கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

விரிவான ஸ்கோர் பட்டியல் மற்றும் வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் 

3

மோடிக்கு எதிராக 111 பேர் போட்டி; வாரணாசியை அதிரவைக்கப்போகும் தமிழக விவசாயிகள்

0
மோடிக்கு எதிராக

மோடிக்கு எதிராக 111 பேர் போட்டி; வாரணாசியை அதிரவைக்கப்போகும் தமிழக விவசாயிகள்

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நலத்திட்டங்களும் இல்லை எனவும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் இந்தியா முழுவதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள் டெல்லியில் சிறுநீர் குடித்தும், அம்மணமாகவும் போராட்டம் நடத்தினர்.

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளையும் ஒன்று திரட்டி பேரணியாக போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி அன்று வாரணாசி சென்று வேட்புமனு தாக்கல் செய்ய, அங்கு உள்ளவர்களிடம் பிச்சை எடுப்போம் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

3

4000 கோள்கள் கண்டுபிடிப்பு; அத்தனையும் உண்மை!

0
4000 கோள்கள் கண்டுபிடிப்பு

4000 கோள்கள் கண்டுபிடிப்பு; அத்தனையும் உண்மை!

கலிலியோ தொலைநோக்கி கண்டுபிடித்த காலம் முதலே  விண்வெளி பற்றிய பல ஆராய்ச்சிகள் இன்று வரை நடந்து கொண்டே தான் உள்ளது.

இதுவரை நாம் வாழும் சூரிய மண்டலம் மற்றும் அதைத் தாண்டி 4000 கோள்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதில் எத்தனை கிரகம் பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத் தகுதியானது என்பதற்கு இன்னும் விடைகிடைக்கவில்லை.

நம் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலியே இன்னும் தண்ணீர் இருக்கிறதா என தொடர்ந்து பல ஆராய்ச்சிகள்  நடந்துகொண்டே உள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளின் ‘தி எக்ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா‘ தற்போதுவரை 4,000-க்கும் அதிகமான கோள்கள் சூரிய குடும்பத்தை தாண்டி உள்ளது என உறுதி செய்துள்ளது.

அதேவேளை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 3926 கோள்களை மட்டுமே உறுதி செய்துள்ளது.

நாசாவிற்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் 4000 கோள்கள் உள்ளதை கண்டறிந்து உள்ளது. இன்னும் 74 கோள்களை நாசா ஆவணப்படுத்தினால் மட்டுமே 4000 கோள்களை கண்டறிந்த பட்டியலில் இடம்பெற முடியும்.

3

உலகக் காச நோய் தினம் மார்ச் 24: உலக சுகாதார அமைப்பு

0

உலகக் காச நோய் தினம் மார்ச் 24: உலக சுகாதார அமைப்பு

உலகக் காச நோய் தினம், மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி ராபர்ட் கோச் காச நோய் ஏற்படுவதற்காண காரணத்தை கண்டறிந்தார். இதுவே காச நோய் பற்றிய அனைத்து தகவல்களை அறிவதற்கு காரணமாக அமைந்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது.

1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது. அந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 7இல் ஒருவர் உயிரழந்தனர்.

2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்.

உலகக் காசநோய் நாள் உலக சுகாதார அமைப்பினால்(WHO) அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் எட்டு உலகளாவிய பொதுநலனுக்கான நாட்களில் ஒன்றாகும்.

 

 

3

முதல் ஐ‌பி‌எல் போட்டியில் சி‌எஸ்‌கே அபார வெற்றி

0

முதல் ஐ‌பி‌எல் போட்டியில் சி‌எஸ்‌கே அபார வெற்றி

ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

கேப்டன் விராட் கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும், அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இருவரும் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்கினார்கள்.

பார்திவ் படேல் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டத்தை இழந்தனர். அதிகபட்சமாக பட்டேல் 29 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்களையும், பிரவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 71 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

வெற்றியை மட்டுமே மனதில் கொண்டு களம் இறங்கிய சென்னை அணி மெதுவாக ஆட்டத்தை ஆரம்பித்தது. ரன் எடுக்காமல் வாட்சன் ஆட்டம் இழக்க மறுமுனையில் ராயுடு, ரெய்னா பொறுமையாக ஆடி வந்தனர்.

சின்ன தல ரெய்னா 5000 ரன்களை கடந்த முதல் ஐ‌பி‌எல் வீரரானார். சி‌எஸ்‌கே அணியின் முதுகெலும்பாக அனைத்து சீஷனிலும்  சிறப்பாக செயல்பட்ட ஒரே வீரர் இவர்தான்.

இறுதியில் சென்னை அணி 17.4  ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனையடுத்து ஐபிஎல் புள்ளி பட்டியிலில் ஒரு வெற்றியுடன் சென்னை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

முக்கியமான மூன்று விக்கெடை எடுத்த ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் படத்தை தட்டி சென்றது மட்டும் இல்லாமல் தன்னுடைய புலவர் பாணியில் ஆர்‌சி‌பியை டிவிட்டரில் கலாய்த்த ஹர்பஜன்.

3

ஐபிஎல் போட்டி ஆரம்பமே அசத்தல்: கிளிக் செய்து நேரலையில் காணவும்

0
ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி: ஆரம்பமே அசத்தல், டாஸ் வென்றார் தோனி

ஐபிஎல் 2019 இன்று கோலாகல நிகழ்ச்சிகள் இல்லாமல் ஆர்ப்பரிக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் அசத்தலாக துவங்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்றார். முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளார்.

எதிர்த்து விளையாடும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை ஒரு முறை கூட சிஎஸ்கே-வை வென்றது இல்லை.

அதேபோல் மூன்று முறை இறுதிபோட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியுள்ளது. எனவே இந்த ஐபிஎல் சீசனில் வெற்றியுடன் யார் துவங்குவது என கடும் போட்டி நிலவும்.

மேலும் ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றும் முனைப்பில் கோலி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியை நேரலையில் காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

 

3