Home Blog Page 289

அபிடின் டினோ 106-வது பிறந்த தினம் – கூகுள் டூடுல்

0
அபிடின் டினோ

அபிடின் டினோ 106-வது பிறந்த தினம் – கூகுள் டூடுல்

இன்றைய கூகுள் டூடுலில் அபிடின் டினோ என்ற துருக்கி நாட்டவரின் பிறந்த தினத்தை கூகுள் நிறுவனம் டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.

அபிடின் டினோ வரலாறு (Abidin Dino)

அபிடின் மார்ச் 23, 1913-ம் வருடம் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் பிறந்தார். இவருடைய குடும்பமே கலையை ரசிக்கக்கூடிய குடும்பம்.

இதனால் சிறுவயதிலேயே அவரது குடும்பத்தினர் உதவியுடன் ஓவியம் வரையத் துவங்கினார். மேலும் அவர் ஜெனிவா, சுவிஸ்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பெற்றோருடன் சென்றார்.

வெளிப்பாடு, யதார்த்தம் மற்றும் சர்ரியலிசம் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய இவரின் ஓவியங்கள் ஸ்பெயினின் அருங்காட்சியகங்களின் சுவர்களை அலங்கரித்தது.

தன்னுடைய 20 வயதில் டினோ, ஐந்து புதுமை புகுத்தும் ஓவியர்களுடன் இணைந்து ‘டி குரூப்’ என்ற இயக்கத்தை உருவாக்கினார்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற துறைமுக கண்காட்சியில் பங்குகொண்டு அங்கு ஏற்கனவே பிரபலமாக இருந்த மீனவர்களைத் தத்ரூபமாக வரைந்து அசத்தினார்.

இரண்டாம் உலகப்போரின்போது இவர் வரைந்த அரசியல் ஓவியங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஆனால் அது இஸ்தான்புல் ராணுவத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தென்கிழக்கு அனடோலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

1979-ஆம் ஆண்டில் டினோ, விஷுவல் ஆர்ட்ஸ், யுஎன்ஏபி-யின் பிரெஞ்சு தேசிய ஒன்றியத்தின் கௌரவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டிசம்பர் 7 1993-ஆம் ஆண்டு மறைந்தார். அவரின் மறைவிற்கு பிறகு அவருடைய ஓவியத்தை “குசின்ஸ் அபிடின்ஸ்” என்ற புத்தகமாக அவரது மனைவி வெளியிட்டார்.

எனவே அவரின் பிறந்த தினத்தை கூகுள் டூடுல் சிறப்பித்துள்ளது.

3

உதவி இயக்குனரை ஆள் வைத்து தாக்கிய நயன்தாரா

0
நயன்தாரா

உதவி இயக்குனரை ஆள் வைத்து தாக்கிய நயன்தாரா

நயன்தாராவின் வாழ்கையை காதல் தோல்விக்கு முன், காதல் தோல்விக்குப்பின் என இரு வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

காதல் தோல்விக்கு முன் நயன்தாரா எல்லோருடனும் சகஜமாகவே பழகுவார். எல்லோர் மீதும் அன்பு செலுத்துவார்.

ஆனால் அவரின் காதல் தோல்விக்குப்பின் அநேக நபர்களை அவர் தவிர்த்துவிட்டார். அவர் செய்யும் நல்ல காரியரியங்கள் எப்பொழுதும் போலவே நடைபெற்று வருகிறது.

ஆனால், நயன்தாராவின் பழைய வாழ்க்கையில் காசப்பான சம்பவங்களை நிகழ்த்திய நடிகர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என எவருடனும் பேசுவதைக்கூடத் தவிர்த்து விடுவார்.

இப்படி ஒரு நிலையில் நயன்தாராவின் பழைய படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவை சந்திக்க நினைத்துள்ளார்.

நயன்தாராவை படப்பிடிப்பு தளம், கடைத் திறப்பு விழா இதுபோன்ற இடங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

அங்கும் எப்போதும் அவருக்கு பவுன்சர்கள் பாதுகாப்புடன் இருப்பார்கள். இதனால் அந்த உதவி இயக்குனர் பவுன்சர் போன்று கருப்பு உடை அணிந்து நயன்தாராவை சந்தித்துள்ளார்.

பவுன்சர்கள் போன்றே வேடமிட்டு நயனதாரவை பார்த்து ஹாய் சொல்லிவிட்டு உங்ககிட்ட ஒரு கதை சொல்லணும் எனக் கூறியுள்ளார்.

நயன்தாராவும்  அவரை ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் பார்த்துவிட்டு போனில் எதோ டைப் செய்துள்ளார். கதை கேட்கத்தான் தயாராகிவிட்டார் என கதை சொல்லத் துவங்கியுள்ளார்.

பின்னால் இருந்த ஒருவர் அந்த உதவி இயக்குனரின் காலரைப் பிடித்து இழுத்து தூக்கி வெளியில் வீசியுள்ளனர். பின்புதான் அவருக்குப் புரிந்தது போனில் பவுன்சருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார் என்று.

எத்தனையோ புதுமுக இயக்குனருக்கு வாய்பளித்த நயன்தாராவே தன்னுடன் ஏற்கனவே படபிடிப்பில் அறிமுகமான ஒரு உதவி இயக்குனரை பவுன்சர்களை கொண்டு விரட்டுகிறார் என்றால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும்.

அந்த உதவி இயக்குனரால் நயன்தாரா நிச்சயம் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என விஷயமறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

3

யோ யோ டெஸ்ட்: அலறும் சென்னை சூப்பர் கிங்ஸ்

0
யோ யோ டெஸ்ட்

யோ யோ டெஸ்ட்: அலறும் சென்னை சூப்பர் கிங்ஸ்

வீரர்களின் உடல் தகுதி சரியாக உள்ளதா என யோ யோ டெஸ்ட் (Yo-Yo Endurance Test) செய்வது சமீப காலமாக நடைமுறையில் உள்ளது.

இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும்போது யோயோ டெஸ்ட் மூலமே வீரர்கள் விளையாடுவது உறுதியாகிறது.

ஐபில் போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் அனைத்தும் யோயோ டெஸ்ட் செய்து முடித்துவிட்டனர்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மட்டும் இன்னும் யோயோ டெஸ்ட் செய்யவில்லை.

காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளவர்கள் அனைவரும் வயது அதிகமானவர்கள்.

எனவே, யோயோ டெஸ்ட் செய்தால் நிச்சயம் பிட்னஸ் குறைபாடு ஏற்படும். இதனால் யோயோ டெஸ்ட் செய்து எங்கள் அணி வீரர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை என ஸ்டீபன் பிளமிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது தாத்தா அணி, டாடி அணி, கிழட்டு அணி என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மற்ற அணி ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

ஆனால் இறுதியில் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி தான். எனவே யோயோ டெஸ்ட் எல்லாம் பெரிய விசயமே இல்லை என கருதியுள்ளனர்.

இன்னும் தோனி அதே வேகத்தில் தான் ஓடுகின்றார். பிட்னஸ் எல்லாம் மூட்டை கட்டிவிட்டு களத்தில் இறங்கி தெறிக்கவிட காத்துள்ளது சிஎஸ்கே.

3

Google Doodle Today: ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த தினம்

0
Google Doodle Today

Google Doodle Today: ஜோஹன் செபாஸ்டியன் பாக் பிறந்த தினம்

ஓவ்வொரு நாளின் சிறப்புகளை அடையாளம் காணும் விதமாக கூகுள் டூடுல் என்ற புதுவித முயற்சியை கூகுள் உருவாக்கி உள்ளது.

இதன் மூலம் அந்த நாளின் சிறப்புகளை லோகோவாக வடிவைமைத்து google.com இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறது.

இன்று (22/03/2019) கூகுள் டூடுலில் யோகான் செபாஸ்டியன் பாக் என்ற இசையமைப்பாளரை சிறப்பிக்கும் விதமாக கூகுள் டூடுல் வெளியிட்டு உள்ளது.

யோகான் செபாஸ்தியன் பாக் (ஜோஹன் செபாஸ்டியன் பாக் – Johann Sebastian Bach)

யோகான் செபாஸ்தியன் பாக் (Johann Sebastian Bach) மார்ச் 31, 1685 பிறந்தார் (O.S. 21 March).  28 ஜூலை 1750 இறந்தார்.

இவர் ஒரு ஜெர்மானிய இசையமைப்பாளர் ஆவார். ஆர்கன் இசைக் கருவியை இசைப்பதில் வல்லவர்.

இவருடைய இசை மதம் சார்ந்ததுமாகவும், மதச்சார்பற்றதுமாகவும் இருக்கும். பரோக்காலக் கலையின் அனைத்துவிதமான அம்சத்தையும் ஒன்றிணைத்து முதிர்நிலைக்கு கொண்டு வந்தவர்.

இவர் புதியதாக எந்த இசையையும் உருவாக்கவில்லை. ஏற்கனவே வீட்டப்பட்ட ஜெர்மானிய இசையை வலுவான இசை நுட்பங்கள் வாயிலாக வளம்படுதினார்.

19 ஆம் நூற்றாண்டின் மீண்டும் இவரது இசை குறித்து மக்களிடம் வரவேற்பை பெற்றது.  மேற்கத்திய சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக இவர் அங்கீகரிக்கப்பட்டார்.

AI-powered Doodle ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பவர்டு டூடுல்

இன்றைய கூகுள் டூடில் வழக்கமானது போன்று இல்லாமல் புதுமையாக உருவாக்கப்பட்டு உள்ளது.

ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகியுள்ளனர்.

யோகான் செபாஸ்தியன் பாக் இசையை நாமே இசையமைத்துக்கொள்ளுவது போன்று இந்த டூடுல் உருவாக்கப்பட்டு உள்ளது.

நேற்று ஹோலி பண்டிகை காரணமாக இந்த டூடுல் இந்தியாவில் பார்க்க முடியவில்லை. எனவே இன்று அதை கூகுள் வழங்கியுள்ளது.

3

தேர்தலுக்கு முன் வெளியாகும் ‘பிரதமர் நரேந்திர மோடி’ வாழ்க்கைப் படம் (BioPic): இது தான் தேர்தல் வியூகமா?

0
pm modi

தேர்தலுக்கு முன் வெளியாகும் ‘பிரதமர் நரேந்திர மோடி’ வாழ்க்கைப் படம் (BioPic): இது தான் தேர்தல் வியூகமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை தற்போது படமாகிறது. சந்தீப் எஸ் சிங் தயாரிப்பில் ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஒப்ராய் நடிப்பில் உருவாகியுள்ளது.

நரேந்திர மோடியாக விவேக் ஒப்ராய் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது.

நாட்டின் மிக முக்கிய தருணமான நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் இந்தியாவில் பல கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் நரேந்திர மோடி பயோபிக் படமான ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு திரைக்கு வர இருக்கிறது.

ஆனால் தேர்தல் 11-ஆம் தேதியே தொடங்குவதால், படத்தை ஒரு வாரம் முன்னதாக, அதாவது ஏப்ரல் 5-ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மோடியின் ஆட்சிக் காலமான 2014 முதல் தற்பொழுது வரை இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மோடியின் இளமை காலம், எப்படி அரசியலுக்குள் வந்தார்? என அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன் படத்தை வெளியிட்டால் படம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் தேர்தல் முடிவிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல தரப்பில் இருந்து படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

3

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் டிரைலர் வெளியானது: குயிண்டன் டாரண்டியோவின் 9வது படம்

0
once upon a time in hollywood

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் டிரைலர் வெளியானது: குயிண்டன் டாரண்டியோவின் 9வது படம்

குயிண்டன் டாரண்டியோவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட்(Once Upon a Time In Hollywood) படத்தின் டிரைலர் இன்று வெளியாகியது.

லியோனர்டோ டி காப்ரியோ மற்றும் பிராட் பிட்  இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை மர்கோத் ராபி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த வாரம் வெளியான போஸ்டரில் இருவரும் இளமையாக தெரிவதாக ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்தன. அதற்குள் டிரைலர் வெளியாகிவிட்டது.

டிரைலரில் சில பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளும் 1960-களில் இருக்கும் லாஸ் ஏஞ்செல்ஸ், டைரக்டர் குயிண்டனுக்கான தனி ஸ்டைலில் டயலாக் டெலிவெரியும் இருந்தது.

1969-ஆம் ஆண்டு மண்சோன் குடும்பத்தில் நடந்த கொலையை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயிண்டன் டாரண்டியோ இயக்கி ஹார்வி வெயின்ஸ்டன் தயாரிக்காத ஒரே திரைப்படம் இதுதான். சமீபத்தில் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டன் ஹாலிவுட் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.

இதுவே இந்தப் படத்தை அவர் தயாரிக்காததற்கு காரணமாக அமைந்தது. மேலும் 44 வயதான லியோ மற்றும் 55 வயதான பிராட் இரு கதாப்பாத்திரங்களும் கற்பனையாக அமைத்துள்ளனர்.

இந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

3

உலக காடுகள் தினம் 2019: மரங்களின் முக்கியத்துவம்

0

உலக காடுகள் தினம் 2019: மரங்களின் முக்கியத்துவம்

2012-ஆம் ஆண்டு யுனைடெட் ஜெனரல் நேஷனல் அசெம்ப்ளியின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21-ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாட்டம் என்பது பண்டிகையப்போல அல்ல. காடுகள், காடுகள் சார்ந்த இடங்கள் மற்றும் வனப்பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துணர்த்தும் ஒரு விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.

1971-ஆம் ஆண்டு முதல் முறை 23-ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளைப் பற்றிய முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் 21-ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்று நாம் வாழும் ஒவ்வொரு நகரங்களிலும் மரங்களுக்கு நாம் அதிக இடத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களையும் மனித வாழ்வதற்கு உகந்த தட்பவெப்ப நிலையை ஏற்படுத்த வேண்டும்.

மனித வாழ்க்கையில் மரங்களின் முக்கியத்துவம் 

  • மரங்கள் தட்பவெப்ப நிலையை தணிக்கும் தன்மை கொண்டது.
  • நகரங்களில் இருக்கும் மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்கும்.
  • மேலும் இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் மரங்கள் இரைச்சலை குறைக்கும் தன்மை கொண்டது.
  • அதிக மரங்களை நகரங்களில் நடுவதன் மூலம் பசுமை நகரங்களாக மாற்றலாம்.
  • அதிக தண்ணீர் புலக்கத்திற்கும் நிலத்தடி நீரை சுத்திகரிக்கவும் இயலும்.

இவ்வாறு மரங்களின் முக்கியத்துவத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதன் மூலமே பூமியை வாழும் இடமாக மாற்ற இயலும்.

3

ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் கூகிள் டூடுல்: ஹோலிப் பண்டிகை வரலாறு

0
ஹோலிப் பண்டிகை

ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் கூகிள் டூடுல்: ஹோலிப் பண்டிகை வரலாறு

வசந்த காலத்தில் வரும் முழுநிலவில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியா, நேபாளம் மற்றும் வங்கதேசம் போன்ற ஆசிய நாடுகளிலும் ஹிந்துகள் வாழும் ஒருசில மேற்கத்திய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹோலியின் முக்கிய நாளில் மக்கள், ஒருவர்மீது ஒருவர் வண்ணப்பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ பூசி அல்லது எரிந்து கொண்டாடுகின்றனர்.

அந்த நாளுக்கு முன்னதாக பெரிய நெருப்புகளை மூட்டுவார்கள். இது ஹோலிகா தகனம் (ஹோலிகாவை எரித்தல்) எனவும் அழைக்கப்படும்.

இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகல்லாதனை நெருப்பில் போட முயன்றபோது அதிலிருந்து வியக்கத்தக்க வகையில் அவர் தப்பித்தார்.

ஹோலிகா எரிந்தாள், ஆனால் கடவுள் விஷ்ணுவின் மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகல்லாதன், தனது தெய்வ பக்தியின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் பிழைத்தான். இதன்  நினைவாக நெருப்புகள் மூட்டப்படுகின்றன.

அண்டத்தில் ஒளியின் திருவிழாவாக ஹோலி எண்ணப்படுகிறது. இப்பண்டிகையின்போது, வேறுபட்ட அலைகளைக் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன.

இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி சூழ்நிலையில் உள்ள தனிமப் பொருட்களின் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.

3

உங்கள் நண்பர் மறைமுகமாக காதலிப்பதாக உணர்கிறீர்களா?

0
உங்கள் நண்பர் மறைமுகமாக காதலிப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் தோழி மனதில் காதல் உள்ளதா எனத் தெரிய வேண்டுமா? Love Tips Tamil இதைப் படியுங்கள்.

உங்கள் நண்பர் மறைமுகமாக காதலிப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் தோழி மனதில் காதல் உள்ளதா எனத் தெரிய வேண்டுமா? Love Tips Tamil இதைப் படியுங்கள்.

ஒரு சில தருணங்களில் உங்களது நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள் ஆனால் உங்களுக்கே தெரியாமல் உங்களை காதல் செய்வார்கள். யாரையும் நம்ப இயலாது.

காதல் என்பது இயற்கையானது. அது எந்த சூழ்நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை பலநாட்களாக நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

உங்கள் நண்பர்கள் காதலில் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிய சில வழிகள் இதோ உங்களுக்காக.

உங்களிடம் அதிக நேரம் செலவிடும் நபர் திடீரென அந்தப் பழக்கத்தை மாற்றி உங்களிடம் சரியாக நேரம் செலவிடாமல் போகலாம்.

நீங்க பேச நினைத்தாலும் உங்களிடம் வேலையாக இருப்பதாக உங்களிடம் பொய் சொல்லலாம்.

உங்கள் நண்பர் இதற்கு முன்னர் சமூகவலைதளங்களில் அதிக ஆக்டிவாக இருந்து சில நாட்களாக பதிவுகள் காணாமல் போயிருக்கும் ஏன் அவர்களின் சமூகவலைதள செயல்பாடுகளே குறைந்து போயிருக்கும்.

உங்களிடம் அவ்வப்போது நேரம் செலவிட்டாலும் சரியாக உங்களிடம் பேசாமல் சிந்தனை வேறு எங்காவது இருக்கலாம்.

முன்னெப்பொழுதும் இல்லாதது போன்று தோற்றத்தில் மாற்றங்களை திடீரென ஏற்படுத்துவார்கள். இதெல்லாம் அவர்களின் மனதில் உங்கள் மீது காதல் இருப்பதை உறுதி செய்யும் நிகழ்வுகளாகும்.

சிறந்த பதில் கமெண்ட் பண்ணுங்க

உங்கள் நண்பர் மறைமுகமாக காதலிப்பதாக உணர்கிறீர்களா? உங்கள் தோழி மனதில் காதல் உள்ளதா எனத் தெரிய வேண்டுமா? Love Tips Tamil

இந்த கேள்விகளுக்கு இதை விட சிறந்த பதில் உங்களிடம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க.

3

கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) பற்றிய சுவாரசியமான தகவல்கள்

0

கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) பற்றிய சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு எபிசோடின் செலவு மட்டும் சுமார் 60 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் உலகிலேயே மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ஒரு தொடராகும்.

2 கோடி பேரால் பார்க்கப்படும் சீரியல் ஒன்று இருக்கிறது தெரியுமா? HBO சேனலில் ஒளிப்பரப்பாகும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்'(Game of thrones) என்னும் சீரியல் தான் உலகிலே அதிகப்பேரால் பார்க்கப்பட்டது என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

முக்கிய கதாப் பாத்திரங்களான எமிலியா கிளார்க், லேனா ஹெயடி ஆகியோருக்கு எபிசோடுக்கு தலா 15கோடி முதல் 20கோடி வரை சம்பளம் வழங்கப் படுகிறதாம்.

இல்லீளாக அதிகம் டவுண்லோட் செய்யப்படும் ஒரே தொடராகவும் உள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ள டொத்ராக்கி என்னும் மொழிக்காக பிரத்யேகமாக 3000 வார்த்தைகளை புதிதாய் உருவாக்கி இருக்கிறார்கள்.

அயர்லாந்தின் சில பகுதிகளை கூகிள் மேப்பில் பார்க்கும் பொழுது MODE OF TRANSPORT ட்ரேகன் என வெளியிட்டு இருக்கிறார்கள்.

66 வயதான ஜார்ஜ் ஆர்‌ஆர் மார்டின் கதையின் இறுதியை 5 வது சீஸன் முடிந்த பிறகே தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.

ஏனென்றால் ஒவ்வொரு சீஷனும் அவர் நாவலை எழுதி முடிக்க முடிக்க எடுக்கப்பட்டு வந்தது. தன்னுடைய உடல் நலன் கருதி தனக்கு எதேனும் ஆகிவிடலாம் என எண்ணி கதையின் முடிவை மட்டும் கூறி விட்டாராம்.

 

 

3