Home Blog Page 286

MIvsKXIP: யுவராஜின் புல்லட் பவுண்டரி; கெயில்-ராகுல் அதிரடியில் பஞ்சாப் வெற்றி

0

MIvsKXIP: யுவராஜின் புல்லட் பவுண்டரி; அஷ்வினுக்கே மன்கட் காட்டிய பாண்டியா

மும்பை இந்தியன்ஸ்-கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் இரு அணிகளும் இன்றைய ஐபிஎல் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்தப் போட்டி விஜித்திரங்களுக்கும், விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல் நடைபெற்றது.

அஸ்வின் ஒரு ஓவருக்கு 7 பந்துகள் போட்டதாக சர்ச்சை எழுந்தது. நெட்டிசன்களிடம் டெய்லி ட்ரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறார்.

பேட்ஸ்மேன் தயாரவதற்குள் அஸ்வின் முதல் பால் போட்டுவிட்டார். எனவே அதை அம்பயர் வாக்கி டாக்கி மூலம் டாட் என அறிவித்து விட்டார் எனக் கூறப்படுகிறது. இதுதான் அஸ்வின் 7 பந்து போட்டதின் பின்னணி.

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் வெளுத்து வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. புல்லட் பவுண்டரி அடித்து 18 ரன்களிலேயே அவுட் ஆகிவிட்டார்.

ரோஹித் சர்மா 34, டிகாக் 60, ஹார்த்திக் பண்ட்யா 31 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் கெயில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். முதல் 5 ஓவரில் மும்பை அணியினர் ஆடிப்போய் விட்டனர்.

ஒரு வழியாக கெயில் 40 ரன்கள் இருந்தபோது கெயில் கொடுத்த கடினமான கேட்சை ஹார்த்திக் பாண்டியா லாவகமாகப் பிடித்து அவுட் செய்த பின்னரே சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மயங் கிரீசை விட்டு வெளியில் செல்ல குருனால் பண்ட்யா மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றார். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்டு மயங் கிரீசிற்குள் வந்துவிட்டார்.

இருப்பினும் அடுத்தடுத்து வந்த பஞ்சாப் வீரர்கள் அதிரடி காட்ட 18.4 ஓவரிலேயே 177 ரன்கள் எடுத்து மேட்சை முடித்துவிட்டனர்.

கே.எல்.ராகுல் 71, மயங்க் 43 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

3

சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்: 18 வயது வந்தவருக்கு மட்டும்

0
சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்: 18 வயது வந்தவருக்கு மட்டும்

கணவன் மனைவி

கணவன் இல்லாத நேரத்தில் சமந்தா, முன்னாள் காதலனுடன் உடலுறவு வைத்து அவன் இறந்ததால் போலீஸிடம் சிக்கி அவதிப்படுகிறார்.

இந்தக் குற்றத்தில் இருந்து மனைவி சமந்தாவைக் காப்பாற்ற முயற்சிக்கும் அவளுடைய கணவன் பகாத் பாஸில்.

பருவ இளைஞர்கள்

செக்ஸை தவிர வேற எதுவும் தெரியாத பள்ளிப்படிப்பை முடிக்கவிருக்கும் நான்கு பருவ இளைஞர்கள் செக்ஸ் படம் பார்ப்பதற்காக சி‌டியை வாங்கி 3டியில் பார்க்கும் பொழுது நடந்த விபரீதம்.

ஆபாசப் பட நடிகை

நடிப்பது என் குறிக்கோள் என்னுடைய விருப்பத்தின்படி தான் நான் செக்ஸ் படத்தில் நடித்தேன். அதை என் கணவன் பார்த்தாலும் அல்லது மகன் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை என்கிற ரம்யா கிருஷ்ணன்.

திருநங்கையாக மாறும் கணவன்

கல்யாணம் முடிந்து சில வருடங்களில் மனைவியை விட்டு ஓடி ஹார்மோன் காரணங்களால் திருநங்கையாக மாறிகிறார் விஜய்சேதுபதி.

10 வயது மகன் இருப்பது கூடத் தெரியாமல் சில ஆண்டுகள் கழித்து வீடு திரும்புவதால் விஜய்சேதுபதி படும் இன்னல்கள்.

காமப் போலீஸ்

காமத்தை தவிர வேறு எதுவும் இச்சை இல்லாத கொடூர குணத்தைக் கொண்ட போலீஸ் அதிகாரியாய் நடித்துள்ள பகவதி.

பக்தி முத்திய கணவன்

கடவுள் இருக்கிறாரா இல்லையா? எனத் தெரியாமல் கல்லை மட்டுமே பைத்தியமாய் வேண்டிக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணனின் கணவன் மிஷ்கின்.

மேற்கூறிய அனைத்துக் கதைகளையும் ஒன்றாக இணைத்து இறுதியில் ஒரு சமுதாய விழிப்புணர்வுடன் கதைக்களத்தை அமைத்து சிறந்த திரைக்கதையையும் வெளிப்படித்தியுள்ளார் இயக்குனர் தியாகராஜன்.

ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையப்படுத்தாமல் அனைத்துக் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தது கதையை மேலும் தாங்கிப்பிடிக்கிறது.

அவருடைய ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் போலவே வெவ்வேறு கதைகளை இறுதியில் ஒன்றிணைத்து எடுக்கப்பட ஒரு திரைப்படம் இதுவாகும்.

மிகவும் பிரபலமான ஹாலிவுட் இயக்குனர் குயிண்டன் டாரண்டியோவின் சூப்பர் ஹிட் திரைப்படமான பல்ப் பிக்சன் படக் கதை, திரைக்கதையைப் போலவே இதுவும் அமைக்கப்பட்டுள்ளது.

உடலுறவு என்ற ஒன்றையே ஏன் அனைவரும் விரும்புகின்றனர். பருவ வயது விடலை, சிறுவர்களில் இருந்து வயதானோர் வரை அனைவராலும் பேசப்படும் செக்ஸ் என்ற ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லை.

நம் சமுதாயத்தில் இருக்கும் நன்மை தீமை, இது தான் நடைமுறை என்ற பெயரில் நாம் பிறரை குறிப்பாக திருநங்கைகளுக்கு செய்யும் பாவம் ஆகியவற்றை சுற்றிக்காட்டியுள்ள இயக்குனர் தியாகராஜன்.

படத்தின் பலவீனம்

10000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் உடை அணிந்திருந்தானா என்பது யாருக்கும் தெரியாது. இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு அணிந்திருப்பானா என்பதும் யாருக்கும் தெரியாது என ரம்யா கிருஷ்ணன் கூறும் வசனம்.

செக்ஸ் படத்தைப் பார்க்கும் யாரையும் இந்த உலகம் அசிங்கப்படுத்துவதில்லை ஆனால் அதில் நடிக்கும் எங்களை மட்டும் ஏன் அசிங்கமாகப் பேசுகிறீர்கள்? என படம் முழுவதும் அதிகமாக உடலுறவைப் பற்றிய வசனங்களும் காட்சிகளும் ஒரு வகையில் படத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துக் கூறும் ஒரு அருமையான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ் ஆகும்.

குறிப்பாக செக்ஸ் என்ற ஒன்றைப் பற்றி படத்தில் அதிகம் பேசப்பட்டுள்ளதால் 18 வயதிருக்கும் மேற்ப்பட்டோர் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படமாக உள்ளது.

3

SRH vs RR: மரணமாய் அடித்த சாம்சன்; எமனாக மாறிய வார்னர்

0

SRH vs RR: IPL Match Highlights

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியின் பட்லர் 5 ரன்களில்  நடையைக் கட்டினார்.

அடுத்து ஜோடி சேர்ந்த ரஹானேவும், சஞ்சு சாம்சனும் சன்ரைசர்ஸ் பவுலர்களைத் தெறிக்கவிட்டனர். மரண அடி அடித்தனர்.

சாம்சன் 102 ரன்கள் அடித்தார். ரஹேனே 70 ரன்கள் குவித்தார். பென்ஸ்டோக் 16. 20 ஓவர் முடிவில் 198 ரன்கள் அடித்து வலுவான நிலையை எட்டியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

பின்னர் களம் இறங்கிய சன்ரைசர்ஸின் வார்னர், ராஜஸ்தான் அணியின் வெற்றிக் கனவுக்கு எமனாக மாறினார். ரன்ரேட் 10 கீழே செல்லாமல் அடித்தார்.

10 வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிக்க முடிந்தது. அதற்குள் வார்னர் வலுவான ரன்களை அடித்துவிட்டார். 69 ரன்களின் வார்னர் அவுட்.

ஜானி 45, விஜய் சங்கர் 35 என தன் பங்குக்கு வெளுக்க ராஜஸ்தான் நடுங்கிப்போனது. 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் அடித்தனர்.

அசத்தலாக இரண்டு சிக்சர் பறக்க விட்டு வெற்றி தேடித் தந்தார் ரஷித் கான். 198 ரன்கள் அடித்தும் வெற்றி வாய்ப்பை இழந்தது ராஜஸ்தான்.

 

3

மும்பை மாணவனுக்கு கூகிளிடம் கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு என்னவென்று தெரியுமா?

0

மும்பை மாணவனுக்கு கூகிளிடம் கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு என்னவென்று தெரியுமா?

அடிக்கடி ஆன்லைனில் புரோகிராமிங் பற்றி எதவாது தேடிக்கொண்டு இருக்கும் மும்பையை சேர்ந்த அப்துல்லா கான் என்ற மாணவன் கூகிள் நடத்திய கண்டெஸ்ட் ஒன்றில் பங்கேற்று அதில் தேர்வு ஆனார்.

பிறகு அவருக்கு அனுப்பட்ட மெயிலில் நேர்முகத் தேர்வுக்கு லண்டன் வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. லண்டன் சென்று அங்கும் தேர்வு பெற்ற அவருக்கு படிக்கும் பொழுதே கூகிளில் வேலை கிடைத்தது.

இவருக்கு கூகிள் கொடுக்கும் ஆண்டு வருமானம் கேட்டால் வாயடைத்து போவீர்கள், எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 20 லட்சம் அதாவது மாதம் 10 லட்சம் ஆகும்.

பொறியியல் படித்து முடித்துவிட்டு முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று இளைஞர் இளைஞிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், படிக்கும் பொழுதே வேலை கிடைத்த இவருக்குள் இருக்கும் திறமை போல் நாம் அனைவரிடமும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

படித்துக்கொண்டிருக்கும்போதே கூகுளில் வேலைக்குச் சேரும் இரண்டாவது மாணவர் இவர் 2018-ம் ஆண்டு ஐ.ஐ.டி-யில் படித்துக் கொண்டிருந்த சினேகா என்னும் மாணவி, 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் ஐ.ஐ.டி-யில் வேலைக்குச் சேர்ந்தார்.

மும்பையைச் சேர்ந்த அப்துலா கான், ஸ்ரீஎல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் பி.இ- கம்யூட்டர் சைன்ஸ் படித்து வருகிறார்.

முதலில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதி, தோல்வி அடைந்ததால் இந்தப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

3

RR vs SRH : LIVE STREAMING IPL HOTSTAR WATCH FREE

0
RR vs SRH : LIVE STREAMING

RR vs SRH : LIVE STREAMING HOT STAR FREE

இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து ஹாட் ஸ்டாரில் போட்டியைக் காணவும்.

 

3

பரிசுப் பெட்டிக்குள் பலமான பரிசு; டிடிவியை உளவு பார்க்கும் அதிமுக

0
பரிசுப் பெட்டிக்குள்

பரிசுப் பெட்டிக்குள் என்ன பொருள் வைத்து அமமுகவினர் மக்களைக் கவர உள்ளனர் எனத் தெரிந்து கொள்ள ஆளுங்கட்சி உளவுத் துறையை ஏவிவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக மூன்று கட்சியாக உடைந்தது. எடப்பாடி அணி, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி  என மூன்றாகப் பிரிந்து தற்போது இரண்டாக உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை  டிடிவி தினகரன் துவங்கினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதலில் தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்டார் டிடிவி தினகரன்.

அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  மீண்டும் தேர்தல் நடந்தபோது டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்திற்குப் பதில் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டது.

இந்த முறையும் டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி மக்களைச் சாதுரியமாக தன் பக்கம் இழுத்தார்.  20 ரூபாய் டோக்கன் சிஸ்டத்தை அறிமுகம் செய்தார்.

இதன் மூலம் ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் மீண்டும் தங்களுக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முறையாக பதிவு செய்யப்படவில்லை எனவும் இதனால் குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் அமமுகவிற்கு வேறு ஏதேனும் ஒரு பொதுச்சின்னம் வழங்கத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க  அமமுகவிற்கு பரிசுப்பெட்டிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

சாதாரணமாகவே 20 ரூபாய் டோக்கன் வைத்து ஆளும் கட்சி கண்ணில்  மண்ணைத் தூவி வெற்றி கண்டவர் டிடிவி.

தற்பொழுது  பரிசு பெட்டி  சின்னத்திற்குள் என்ன பொருள் வைத்து மக்களை கவர உள்ளார்  எனத் தெரிந்துகொள்ள ஆளுங்கட்சி உளவுத் துறையை ஏவிவிட்டுள்ளது.

டிடிவி தரப்பு என்ன பரிசு கொடுத்தால் மக்களை எளிதாகக் கவர முடியும் என பலமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

நிச்சயம் மக்களுக்கு அதிர்ஷ்ட பரிசுகள் டிடிவியின் பரிசுப் பெட்டிக்குள் காத்துக் கொண்டுள்ளது.

3

ரெய்னா இதற்குத்தான் பாக்ஸிங் கற்று வருகிறாரா? அடடே!

0
ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியில்  5000 ரன்களைக் கடந்து அசத்தல் பார்மில் உள்ளார்.

சிஎஸ்கே அணியின் குட்டிப்புலி என வர்ணிக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா.  தற்போது அவர் குத்துச் சண்டையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளது.

எனவே வரும் போட்டியில் மனதை ஒரு நிலைப்படுத்தி வலுவான ஸ்கோரை அடிக்க சுரேஷ்ரெய்னா குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவருடைய பயிற்சி வீடியோவைப் பார்க்கும் போது,  மைதானத்தில் யாராவது சண்டையிட்டால் குத்தி வீழ்த்துவதற்காக பயிற்சி செய்வது போன்றே உள்ளது.

தற்போது இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோ குறித்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.

 

3

அமரபலியாவது, பாகுபலியாவது; கோர்டுக்குச் சென்ற தோனி

0
அமரபலியாவது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளம்பரங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு அமரபலி என்ற நிறுவனம், விளம்பரத் தூதராக மகேந்திர சிங் தோனியை ஒப்பந்தம் செய்துகொண்டது.

அமரபலி என்ற நிறுவனம் கட்டுமானப் பணிகளை  மேற்கொண்டு வரும் நிறுவனம். இந்நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராகவும், மார்க்கெட்டிங் மற்றும் பொது நிகழ்ச்சிகள் தொடர்பான நிகழ்வுகளிலும் தோனி கலந்து கொண்டுள்ளார்.

இதற்காக அவருக்கு சில கோடிகள்  சம்பளத் தொகையாகப் பேசப்பட்டுள்ளது.  அந்தத் தொகையில் ரூபாய் 38 கோடி அளவில் இதுவரை தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளது அந்த நிறுவனம்.

இத்தனை வருடங்கள் ஆகியும் தோனிக்கு தர வேண்டிய தொகையை அந்த நிறுவனம் தரவில்லை. எனவே, தோனி அந்த நிறுவனத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.

நஷ்ட ஈடாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை ஜப்தி செய்ய வழங்க உத்தரவிடுமாறு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தோனி.

3

படுத்து புரண்டு சிக்சர் அடித்த டிவில்லியர்ஸ்; ஆர்சிபிக்கு ஆப்பு வைத்த அம்பயர்

0

படுத்து புரண்டு சிக்சர் அடித்த டிவில்லியர்ஸ்; ஆர்சிபிக்கு ஆப்பு வைத்த அம்பயர்

IPL 2019 இதுவரை நடந்த போட்டியில் நேற்றைய போட்டி தான் அதிரடிக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மும்பை ஆரம்பம் முதலே அசத்தல்.

மும்பையின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் கொடுத்த எளிதான கேட்சை ஆர்சிபி வீரர் தவறவிட்டுவிட்டார்.

இதனால் முதல் 5 ஓவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா 48, ஹார்த்திக் பாண்ட்யா 32, சூரிய குமார் 38, யுவராஜ் சிங் 23 ரன்கள் குவித்தனர்.

யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்ஸர் பறக்கவிட்டு ரசிகர்கள் கண்களுக்கு விருந்து வைத்தர். அதே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் பறக்கவிட நினைத்து மீண்டும் ஒரு சிக்சர் அடிக்க நூலிழையில் எல்லைக்கோட்டுக்கு உள்ளே கேட்ச் ஆனார்.

ஒரு பக்கம் விக்கெட் மறுபக்கம் சிக்சர் என்ற மும்பை அணியினர் ஆர்சிபி பவுலர்களை பொறித்து எடுத்துவிட்டனர். ஹார்த்திக் பாண்ட்யா அதிக மீட்டர் சிக்ஸர் அடித்து ஆர்ம்ஸ்யை காட்டி மைதானத்தை அதிரவிட்டார்.

இறுதியாக மும்பை அணி 20 ஓவருக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய ஆர்சிபி அணியின் பார்த்திவ் 31, விராட் 46, டிவில்லியர்ஸ் 70 ரன்களைக் குவித்தனர்.

ஆர்சிபி அணியில் இந்த மூவரைத் தவிர மற்ற வீரர்களில் பேட்டிங் மோசமாகவே இருந்தது. 50-யைத் தவறவிட்ட விராட் கோலி 5000 ரன்களை கடந்த இரண்டாவது ஐபிஎல் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.

அதே போன்று இந்தப்போட்டியில் படுத்து புரண்டு எல்லாம் சிக்சர் அடித்த டிவில்லியர்ஸ் 4000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

இறுதி ஓவரில் கடைசி பந்தை டூபே எதிர்கொண்டார் அந்த பந்தில் அவரால் சிக்சர் அடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்தப்பால் நோ பால்.

ஆனால் அதை அம்பயரும் கவனிக்கவில்லை. அருகில் நின்ற டிவில்லியர்ஸும் கவனிக்கவில்லை. ஒருவர் கவனித்திருந்தால் கூட மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

மொத்தத்தில் வெற்றிபெறும் நிலையில் இருந்த ஆர்சிபி தோல்வியைத் தழுவியது. ஆட்டநாயகன் விருதை மூன்று விக்கெட் எடுத்து 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா கைப்பற்றினார்.

3

கோலியை கட்டம் கட்டித் தூக்க ரோஹித் சர்மாவின் பக்கா ப்ளான்

0
கோலியை

கோலியை கட்டம் கட்டித் தூக்க ரோஹித் சர்மாவின் பக்கா ப்ளான்

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது.

இந்த இரு அணிகளும் முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவி உள்ளனர். இன்னும் வெற்றி எண்ணிகையை துவங்கவில்லை.

இன்றைய போட்டியில் யாரேனும் ஒருவர் மீண்டும் தோல்வியைத் தழுவ வேண்டும். இந்நிலையில் ஆர்.சி.பி. வீழ்த்த மெகா ப்ளான் செய்துள்ளார் ரோகித்.

ரோகித் ஷார்மா டாஸ் ஜெயித்தால் முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்துள்ளாராம். பவுலிங்கில் திறமையாக செயல்பட்டு ஆர்சிபியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தூக்கினால் மொத்த அணியையும் காலி செய்துவிடலாம் என முடிவு செய்துள்ளாராம்.

ஒருவேளை ஆர்சிபி டாஸ் வென்றால் போட்டிங்கில் வெளு வெளு என வெளுத்து விடுவது என மும்பை வீரரர்கள் வெறியுடன் உள்ளனர்.

ஏற்கனவே ஆர்சிபி அணி மிகமோசமான ஸ்கோரை எடுத்துள்ளது. இதனால் ஆர்சிபி இன்றைய போட்டியில் பேட்டிங் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

போட்டியை நேரலையில் காண கிளிக் செய்யவும் hotstar .com

3