Home நிகழ்வுகள் MIvsKXIP: யுவராஜின் புல்லட் பவுண்டரி; கெயில்-ராகுல் அதிரடியில் பஞ்சாப் வெற்றி

MIvsKXIP: யுவராஜின் புல்லட் பவுண்டரி; கெயில்-ராகுல் அதிரடியில் பஞ்சாப் வெற்றி

1223
0

MIvsKXIP: யுவராஜின் புல்லட் பவுண்டரி; அஷ்வினுக்கே மன்கட் காட்டிய பாண்டியா

மும்பை இந்தியன்ஸ்-கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் இரு அணிகளும் இன்றைய ஐபிஎல் போட்டியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்தப் போட்டி விஜித்திரங்களுக்கும், விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல் நடைபெற்றது.

அஸ்வின் ஒரு ஓவருக்கு 7 பந்துகள் போட்டதாக சர்ச்சை எழுந்தது. நெட்டிசன்களிடம் டெய்லி ட்ரெண்டிங்கில் இடம் பெற்று வருகிறார்.

பேட்ஸ்மேன் தயாரவதற்குள் அஸ்வின் முதல் பால் போட்டுவிட்டார். எனவே அதை அம்பயர் வாக்கி டாக்கி மூலம் டாட் என அறிவித்து விட்டார் எனக் கூறப்படுகிறது. இதுதான் அஸ்வின் 7 பந்து போட்டதின் பின்னணி.

பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் யுவராஜ் வெளுத்து வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. புல்லட் பவுண்டரி அடித்து 18 ரன்களிலேயே அவுட் ஆகிவிட்டார்.

ரோஹித் சர்மா 34, டிகாக் 60, ஹார்த்திக் பண்ட்யா 31 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் கெயில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். முதல் 5 ஓவரில் மும்பை அணியினர் ஆடிப்போய் விட்டனர்.

ஒரு வழியாக கெயில் 40 ரன்கள் இருந்தபோது கெயில் கொடுத்த கடினமான கேட்சை ஹார்த்திக் பாண்டியா லாவகமாகப் பிடித்து அவுட் செய்த பின்னரே சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மயங் கிரீசை விட்டு வெளியில் செல்ல குருனால் பண்ட்யா மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றார். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்டு மயங் கிரீசிற்குள் வந்துவிட்டார்.

இருப்பினும் அடுத்தடுத்து வந்த பஞ்சாப் வீரர்கள் அதிரடி காட்ட 18.4 ஓவரிலேயே 177 ரன்கள் எடுத்து மேட்சை முடித்துவிட்டனர்.

கே.எல்.ராகுல் 71, மயங்க் 43 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

Previous articleசூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்: 18 வயது வந்தவருக்கு மட்டும்
Next articleDC vs KKR – சூப்பர் ஓவரில் திரில் வெற்றி: 1 ரன் தலைகீழாய் புரட்டிப்போட்டது – வீடியோ
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here