Home அரசியல் பரிசுப் பெட்டிக்குள் பலமான பரிசு; டிடிவியை உளவு பார்க்கும் அதிமுக

பரிசுப் பெட்டிக்குள் பலமான பரிசு; டிடிவியை உளவு பார்க்கும் அதிமுக

505
0
பரிசுப் பெட்டிக்குள்

பரிசுப் பெட்டிக்குள் என்ன பொருள் வைத்து அமமுகவினர் மக்களைக் கவர உள்ளனர் எனத் தெரிந்து கொள்ள ஆளுங்கட்சி உளவுத் துறையை ஏவிவிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக மூன்று கட்சியாக உடைந்தது. எடப்பாடி அணி, சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி  என மூன்றாகப் பிரிந்து தற்போது இரண்டாக உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை  டிடிவி தினகரன் துவங்கினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் முதலில் தொப்பிச் சின்னத்தில் போட்டியிட்டார் டிடிவி தினகரன்.

அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  மீண்டும் தேர்தல் நடந்தபோது டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னத்திற்குப் பதில் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டது.

இந்த முறையும் டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி மக்களைச் சாதுரியமாக தன் பக்கம் இழுத்தார்.  20 ரூபாய் டோக்கன் சிஸ்டத்தை அறிமுகம் செய்தார்.

இதன் மூலம் ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் மீண்டும் தங்களுக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முறையாக பதிவு செய்யப்படவில்லை எனவும் இதனால் குக்கர் சின்னம் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் அமமுகவிற்கு வேறு ஏதேனும் ஒரு பொதுச்சின்னம் வழங்கத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க  அமமுகவிற்கு பரிசுப்பெட்டிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

சாதாரணமாகவே 20 ரூபாய் டோக்கன் வைத்து ஆளும் கட்சி கண்ணில்  மண்ணைத் தூவி வெற்றி கண்டவர் டிடிவி.

தற்பொழுது  பரிசு பெட்டி  சின்னத்திற்குள் என்ன பொருள் வைத்து மக்களை கவர உள்ளார்  எனத் தெரிந்துகொள்ள ஆளுங்கட்சி உளவுத் துறையை ஏவிவிட்டுள்ளது.

டிடிவி தரப்பு என்ன பரிசு கொடுத்தால் மக்களை எளிதாகக் கவர முடியும் என பலமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

நிச்சயம் மக்களுக்கு அதிர்ஷ்ட பரிசுகள் டிடிவியின் பரிசுப் பெட்டிக்குள் காத்துக் கொண்டுள்ளது.

Previous articleரெய்னா இதற்குத்தான் பாக்ஸிங் கற்று வருகிறாரா? அடடே!
Next articleRR vs SRH : LIVE STREAMING IPL HOTSTAR WATCH FREE
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here