Home Blog Page 316

ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்!

0
ஸ்ரீதேவியிடம்

ஸ்ரீதேவியிடம் கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்!

ஸ்ரீதேவி-அஜித் இருவரும் இணைந்து நடித்த படம்  இங்கிலீஷ் விங்கிலிஷ். இப்படத்தில் அஜித் ஹெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார்.

அப்படத்தில் நடிக்கும்போதே ஸ்ரீதேவி தமிழில் எனக்கு ஒரு படம் தயாரிக்க ஆசை. அதில் நீங்கள் தான் ஹீரோவாக நடிக்கவேண்டும் எனக் கூறினார்.

ஸ்ரீதேவி தீடீர் எனக் கேட்டவுடன் அஜித் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வந்ததால், ஸ்ரீதேவி தயாரிப்பில் நடிப்பது தள்ளிக்கொண்டே சென்றது.

பின்பு, ஸ்ரீதேவி துபாயில் இறந்துவிட்டார். இந்நிலையில், அஜித்தே விஸ்வாசம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, போனி கபூருக்கு போன் செய்து, மேடம் இல்லேன்னா என்ன? அவங்க ஆசைப்படி உங்க தயாரிப்பில் நடிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க, அதை போனி கபூர் தயாரிக்க உள்ளார். வினோத் இப்படத்தை இயக்க உள்ளார்.

அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி புயல் வித்யாபலன் நடிக்கிறார். அவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா தாரங், ரங்கராஜ் பாண்டே, அஸ்வின் ராவ், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம்  ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை அடுத்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ளார். அதுகுறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.

3

தோனி இந்திய அணியில் இருந்து நீக்கம்: கோலியின் அதிரடி முடிவு

0
தோனி இந்திய அணியில்

தோனி இந்திய அணியில் இருந்து நீக்கம்: கோலியின் அதிரடி முடிவு

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. இன்று மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது.

தோனி நீக்கம்

2019-ஆம் வருடத்தில் வெறும் நான்கு ஒருநாள் போட்டியில் 241 ரன்கள் எடுத்து மரண ஃபார்மில் இருந்த தல தோனி தொடையில் தசைப்பிடிப்பு காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

காயத்தால் தோனி விளையாடாமல் இருப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். சர்ச்சை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹார்த்திக் பாண்ட்யா மீண்டும் களம் இறங்கினார்.

கேப்டன் கோலிக்கு இந்த போட்டிக்குப் பிறகு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளை துணை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தோனியே லீட் செய்வார்கள்.

நல்ல ஃபார்மில் இருக்கும் தோனி அணியில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

3

விவேகானந்தருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்; அடம்பிடிக்கும் பாபாஜி

0
விவேகானந்தருக்கு பாரத ரத்னா

விவேகானந்தருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்; அடம்பிடிக்கும் பாபாஜி

சாதாரண நிலையில் இருந்த பாபா ராம்தேவ், யோகா வித்தையால் இந்தியா முழுவதும் விரிந்து பரவினார்.

திடீரென கோடிகளில் முதலீடு செய்து, பதஞ்சலி நிறுவனத்தை துவங்கி இந்தியாவின் இங்கு இடுக்குகளில் எல்லாம் தொழிலதிபராக பறந்து விரிந்தார்.

70 ஆண்டுகளாக இந்திய அரசு சாமியார்களுக்கு ஒரேஒரு பாரத ரத்னா விருது கூட கொடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் மத்திய அரசு பாரத ரத்னா விருதையும் பத்ம விருதுகள் பட்டியலையும் அறிவித்தது.

பாரத ரத்னா விருது மொத்தம் மூன்று பேருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்மவிபூஷண் விருது 4 பேருக்கு, பத்மபூஷண் விருது 14 பேருக்கு, பத்மஸ்ரீ விருது 94 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ்,

சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, சிவகுமார சுவாமிகள் ஆகியோர் நாட்டுக்கு அளப்பரிய தொண்டினைச் செய்துள்ளனர். எனவே, அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.

3

மோடிஜி கூப்டா ஹே: பாதுகாப்பாக பதுங்கிய விஜய்!

0
மோடிஜி கூப்டா ஹே

மோடிஜி கூப்டா ஹே: பாதுகாப்பாக பதுங்கிய விஜய்!

நாடாளுமன்ற தேர்தல் 2019. இன்னும் சில வாரங்களில் சூடுபிடிக்க உள்ளது. பல அதிரடி நிகழ்வுகள் இந்தியா முழுவதும் அரங்கேறும்.

தேர்தல் கடைசி நிமிடத்தில் கூட பல அதிரடி மாற்றங்களை தமிழக கட்சிகள் வழக்கம்போல் சந்திக்கும்.

சென்ற தேர்தலில் மாநிலம் மாநிலமாக சென்ற மோடி, அந்த மாநிலத்தின் முக்கிய நடிகர்களை வழியச்சென்று சந்தித்து ஆதரவைத் திரட்டினார்.

தமிழகத்தில் ரஜினி, விஜய் என இருக்கு முக்கிய நடிகர்களைச் சந்தித்தும் பாஜகவின் தாமரை தமிழகத்தில் மட்டும் மலரவே இல்லை.

இந்த முறையும் முட்டி மோதிப் பார்கின்றனர். எந்த நடிகர்கள் ஆதரவுகளை எல்லாம் திரட்டலாம் என ஒரு லிஸ்ட் ரெடி செய்துகொண்டு உள்ளனர்.

அந்த லிஸ்டில் அஜித் பெயரும் இருந்தது. ரசிகர்கள் பாஜகவில் சேர்ந்த செய்தியைக் கேட்டதுமே, பாஜகவை வாயடைக்கச் செய்யும்படி அறிக்கை வெளியிட்டு விட்டார்.

அடுத்து நம்ம விஜய். நேரடியா விஜய்யிடம் செல்லாமல் மறைமுகமாக வலை வீசியுள்ளனர் பாஜகவினர்.

திரைப்படங்களை ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடுகின்றனர். இதை தடுக்க மோடி முக்கிய நடவடிக்கைகள் எடுக்க உள்ளார்.

இதனால் அந்தந்த மாநிலத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாட பிரதமர் விரும்புகிறார் என விஜய்யிடம் கூறியுள்ளனர்.

சென்ற தேர்தலில் ஜெ.வுக்கும் விஜய்க்கும் ஆகாது இதனால் தனக்கு செல்வாக்கு இருக்கு என்பதைக்காட்ட மோடியைச் சந்தித்து லேடியை மிரட்டினார்.

இந்த முறை விஜய்க்கு குடைச்சல் கொடுத்த லேடி இல்லை. விஜய்க்கு பஜாகவால் இந்த ஆட்சியில் எந்த நன்மையும் இல்லை.

அதேநேரம், பாஜகவிற்கு ஆதரவு குடுக்கப்போய் அடுத்து ஆட்சியில் திமுக வந்தால் அதை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும். இதனால், நா வீட்டுலயே இல்லை என பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டார்.

எலக்சன் நேரத்துல புலி யாருமேல பாயிறதுக்கு பதுங்கிட்டு இருக்கோ தெரியல?

3

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா: மூன்றுக்கும் முடிச்சிப்போட மார்க் திட்டம்

0
வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா

வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா: மூன்றுக்கும் முடிச்சிப்போட மார்க் திட்டம்

இந்த மூன்றும் இல்லாமல் ஒரு ஸ்மார்ட் போன் இல்லை. இதில் ஒன்றையாவது உபயோகிக்காமல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களால் இருக்க முடியாது.

இந்த மூன்றையுமே ஒரே நிறுவனம் தான் வைத்துள்ளது. பேஸ்புக் நிறுவனமே இந்த மூன்று செயலியின் தற்போதைய ஓனர்.

ஆனால், இவை மூன்றும் வேறு வேறு பெயர்களில் உள்ளது. ஒரே பயனர்கள் இந்த மூன்றையும் தனி தனி ஆப்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்ஆப்பில் இல்லாதவரை தொடர்பு கொள்ள முகநூல் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முகநூலில் இல்லாதவரை தொடர்புகொள்ள வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

தற்பொழுது முகநூல் பக்கங்களில் இன்ஸ்டாகிராம் மெஸ்சேஜ் இடம் பெற்று வருகிறது. விரைவில் வாட்ஸ்ஆப் மெஸ்சேஜ்களை பேஸ்புக்கிலேயே பார்க்க முடியும்.

பேஸ்புக்கில் இருந்துகொண்டே வாட்ஸ்ஆப்பிற்கு செய்தி அனுப்பமுடியும். இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த வசதி செயல்பாட்டுக்கு வர உள்ளது.

தற்பொழுது வாட்ஸ்ஆப்பில் யூசர் நேம் போன்ற வசதிகள் கிடையாது. இவற்றையெல்லாம் சரிகட்ட விரைவில் அடுத்தடுத்த அசரவைக்கும் அப்டேட்டுகள் வர உள்ளதாம்.

3

கோயிலுக்குப் போவேன்: ஐயப்பனை வணங்க அவசியமில்லை – கனக துர்கா

0
கோயிலுக்குப் போவேன்

கோயிலுக்குப் போவேன்: ஐயப்பனை வணங்க அவசியமில்லை – கனக துர்கா

கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கனகதுர்கா, சிந்து ஆகியோர் நுழைந்தனர்.

முதல் முறை கோவிலுக்குள் நுழைய முயன்றபோதே வீடு திரும்பும்படி கனக துர்காவின் கணவர் போனில் எச்சரித்துள்ளார்.

ஆனால், கணவரின் பேச்சை மீறி சென்றது மட்டுமல்லாமல் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார்.

மீண்டும் வீடு திரும்பியவுடன் கனதுர்காவின் மாமியார் உருட்டுக்கட்டையால் கனக துர்காவை வெளுத்துள்ளார்.

இதனால் கனகதுர்கா வீடு இல்லாமல் அரசு விடுதியில் வசித்துவருகிறார். அவருடைய தம்பி கனகதுர்காவிற்கு அதரவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் மீடியாக்களுக்கு பேட்டியளித்தார், நான் ஐயப்பன் கோவிலுக்குள் சென்றதற்காக யாரிடமும் மன்னிப்புக்கேட்க மாட்டேன்.

என்னுடைய தம்பியும் பாஜகவினரிடம் மன்னிப்புக்கேட்கவில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை எனக் கூறினார்.

மேலும், உங்களுடைய பிரச்சனை தீர ஐயப்பனிடம் ப்ராத்தனை செய்தீர்களா? எனக் கேட்டதற்கு, தனிப்பட்ட காரணத்திற்காக ஐயப்பனை வணங்கமாட்டேன்.

பாலின ரீதியிலான வழிபாட்டை களையவே நான் கோவிலுக்குள் நுழைந்தேன் எனக் கூறினார்.

3

சிம்புவை சசிகலா கடத்த முயன்றார்: வீட்டிக்குள் முடங்கிய சிம்பு

0
சிம்புவை சசிகலா கடத்த முயன்றார்

சிம்புவை சசிகலா கடத்த முயன்றார்: வீட்டிக்குள் முடங்கிய சிம்பு

சிம்பு என்றால் உடனே பலரும் வம்பு என ஒதுங்கிய காலம் அது. வாலு என்று அவருடைய படத்திற்கு பெயர் வைத்தது பக்காவாக பொருந்தியது.

அன்று சிம்பு செய்த சேட்டைகள், மைக்கல் ராயப்பன் வடியில் வினையாக மாறி இன்று வரை குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

சிம்பு, ஏன் AAA படத்தில் நடிக்க மறுத்தார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்து பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என மாறியது. பன்னீர் செல்வத்தை சந்தித்து நடிகர் லாரன்ஸ் பொன்னாடை போர்த்தினார்.

இதனால், சசிகலாவும் தனக்கு ஆதரவாக ஒரு நடிகர் தேவை என துலாவியுள்ளார். அந்த சமயத்தில் சிம்பு வீட்டு முன் அதிமுக கொடியுடன் வரிசையாக கார்கள் இருந்துள்ளது.

சிம்புவை சூட்டிங் போகலாம் என தயாரிப்பாளர் வெளியே அழைத்துள்ளார். வெளியில் வந்த சிம்புவுக்கு அதிர்ச்சி.

வீட்டுமுன் அதிமுக கொடியுடன் கார்கள் வரிசைகட்டி நின்றுள்ளது. இதனால் மைக்கல் ராயப்பன் தன்னை கடத்த வந்துள்ளார்.

கடத்திக்கொண்டு கூவத்தூர் விடுதிக்கு சென்று விடுவார் என உடனே வீட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டாராம்.

இதன் காரணமாகவே மைக்கல் ராயப்பன் படத்தில் சரிவர நடிப்பதில்லை. இதனாலேயே இருவருக்கும் மோதல் ஏற்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சிம்புவுடன் நெருக்கமான தொடர்பில் உள்ள பத்திரிக்கையாளர் அந்தணன் அவருடைய யுடியூப் சேனலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

உண்மையில் சசிகலா சிம்புவை கடத்தி வரச் சொன்னாரா? அல்லது சிம்புவே அப்படி கற்பனை செய்துகொண்டாரா? இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

3

ஆணவக் கொலையால் இறந்த கணவன்: உயிருடன் மீண்டும் வந்த அதிசயம்!

0
ஆணவக் கொலையால் இறந்த கணவன்

ஆணவக் கொலையால் இறந்த கணவன்: உயிருடன் மீண்டும் வந்த அதிசயம்!

ஆணவக்கொலை என்பது இல்லாத மாநிலமே கிடையாது. எந்த ஊருக்குச் சென்றாலும் இன்னும் ஜாதி வெறியுடன் உள்ள மக்கள் அதிகமாகவே உள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் ஒரு ஆணவப் படுகொலை நிகழ்ந்தது. அந்த மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

நல்கொண்டா மாவட்டம், மிர்யாளகுடா பகுதியைச் சேர்ந்த பெருமாள பிரனாயும், அம்ருதாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

பிரனாயி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அம்ருதா, மேல்வகுப்பைச் சேர்ந்த வசதியான  குடும்பத்து பெண்.

இதனால் ஜாதி வெறி தாண்டவம் ஆடியது. அம்ருதாவின் தந்தை அனுப்பிய ஆட்களால் பினராயி கொள்ளப்பட்டார்.

கடந்த வருடம் செப்டம்பர் 14-ம் தேதி கர்ப்பிணியான அம்ருதாவைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று திரும்பியபோது கூலிப்படையினரால் பினராயி கொள்ளப்பட்டார்.

கணவரை இழந்து வாடிய அம்ருதாவிற்கு தற்பொழுது ஆண்குழந்தை பிறந்தது. கணவர் கொலையான 5 மதங்களுக்குப் பிறகு, அவர் வாழ்வில் மகிழ்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

என்னுடைய கணவரே எனக்கு மீண்டும் உயிருடன் என் குழந்தை ரூபத்தில் திரும்பி வந்துள்ளதாக அம்ருதா தெரிவித்துள்ளார்.

3

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள்: பாஜக இருக்கும் வரை விடுதலை இல்லை!

0
ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள்

ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள்: பாஜக இருக்கும் வரை விடுதலை இல்லை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தமிழர்கள் ஏழு பேர் மீது தண்டனை விதிக்கப்பட்டது.

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயகுமார், ராபார்ட் பயஸ்,  ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரும் நீண்ட வருடமாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களை விடுதலை செய்யவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. பலர் இவர்கள் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் ஜெயலலிதா, இவர்கள் 7 பேரை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக அறிவித்தார். ஆனால், அதற்கு அப்போதைய மத்தியஅரசு முட்டுக்கட்டையிட்டது.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் மீண்டும் தீர்ப்பு வழங்கியது.

அதன்பிறகு, அமைச்சரவைக் கூட்டத்தில், 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆனால் இதுவரை ஆளுநர் மாளிகை இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சுப்ரமணிய சுவாமி ஒரு கருத்துக் கூறியுள்ளார்.

பாஜக ஆட்சி மத்தியில் இருக்கும் வரை ராஜீவ் கொலைக் கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3

பட ரிலீசுக்கு முன்பே அண்டா அண்டாவாக பால்: சிம்பு ரசிகர்கள் அட்டகாசம்

0
பட ரிலீசுக்கு முன்பே

பட ரிலீசுக்கு முன்பே அண்டா அண்டாவாக பால்: சிம்பு ரசிகர்கள் அட்டகாசம்

சிம்பு, சில நாட்களுக்கு முன்பு என் கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்த நினைக்கிறார் சிம்பு. ரசிகர்களே இல்லாத நிலையில் யார் இவருக்கு பாலாபிஷேகம் செய்யப்போகிறார்கள்.

இப்படி பலர் சிம்புவைக் கலாய்த்து தள்ளினர். வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல், மீண்டும் சிம்பு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

ரசிகர்கள் அனைவரும் என் பேனருக்கு அண்டா அண்டாவாகப் பால் ஊற்றவேண்டும். ரசிகர் பலத்தை இந்த உலகுக்கு புரியவைக்க வேண்டும் என மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

நல்லது சொல்லும்போது வாய்திறக்காதவர்கள் கூட, பால் ஊற்றச்சொன்ன சிம்பு மீது ஆத்திரமடைந்தனர்.

சிம்பு ரசிகர்கள் பட ரிலிசின்போது பால் பாக்கெட்டுகளைத் திருடினாலும் திருடுவார்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் என பால் முகவர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியானது.

தற்பொழுது, வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் பிப்ரவரி 1 அன்று வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பொழுதே படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் சிம்பு பேனர்களை வைத்து பால் ஊற்றியுள்ளனர் திருச்சியைச் சேர்ந்த சிம்பு ரசிகர்கள்.

கட்டவுட், பாலபிஷேகம் இதுபோன்ற கலாச்சாரம் தற்பொழுது தான் குறைந்துள்ளது. இந்த நேரத்தில் சிம்புவின் தூண்டுதல் மீண்டும் இதற்கு அடித்தளமிட்டுள்ளது.

வரும் நாட்களில் சிம்புவின் போட்டி நடிகர்கள், தங்களின் ரசிகர் படைபலத்தை காண்பிக்க வேண்டும் என ரசிகர்களைத் தூண்டிவிட வாய்ப்புண்டு.

இதனால் பாதிக்கப்படப்போவது ரசிகனும் ரசிகனுடைய பணமும் தான். எத்தனையோ குழந்தைகள் அனாதை இல்லத்தில் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவதற்குப் பதில், அந்த பாலை அனாதை இல்லங்களுக்கு தானமாக வழங்கினால் கூட பல ஏழைக்குழந்தைகள் பசியாறும்.

3