Home Blog Page 315

அக்கா அருகில் இக்கா: லீக் ஆனதால் படபடப்பான மம்முட்டி!

0
அக்கா அருகில் இக்கா

அக்கா அருகில் இக்கா: லீக் ஆனதால் படபடப்பான மம்முட்டி!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மதுரராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். முறுக்கு மீசையுடன் அரசியல்வாதி தோற்றத்தில் போஸ்டர் வெளியானது.

அடுத்த சில நாட்களிலேயே, அதே சோபாவில் சன்னிலியோனுடன் அருகில் அமர்ந்து இருந்த புகைப்படம் வெளியானது.

அந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் அஜூ வர்கிசி, அக்கா அருகில் இக்கா என கேப்சனுடன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். அக்கா அருகில் அண்ணன் என்று பொருள் .

ஆனால், வெளியாகிய முதல் இரண்டு நாட்கள் பெரிய அளவில் வைரல் இல்லை. புகைப்படம் லீக் ஆனதால் மம்முட்டி படபடப்பு என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

கேரளாவைத் தவிர பெரிய அளவில் வைரல் இல்லை. திடிரென புகைப்படத்தை முகநூலில் காணவில்லை என செய்தி வெளியானது.

அதன்பிறகே, பலர் இந்தப் புகைப்படத்தை கூகுளில் தேடி உள்ளனர். மேலும் சன்னி ரசிகர்கள் மீம் கிரியேட் செய்து பப்ளிசிட்டி தேடிக்கொடுத்து விட்டனர்.

அஜூ வர்கிசியின் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் புகைப்படம் தொடர்ந்து இருக்கிறது. ஆனால் முகநூலில் மட்டும் எப்படி நீக்கப்பட்டு இருக்கும் எனக் கேள்வி எழுந்தது.

தற்பொழுது மொபைல் ஹேக், போட்டோ லீக்ஸ் என ட்ரெண்ட் செய்து  பப்ளிசிட்டி தேடுவது சாதாரணமாகிவிட்டது.

மதுரராஜா படத்தில் மம்மூட்டி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சன்னி லியோனின் முதல் மலையாள படம் இதுவாகும்.

ஏற்கனவே அரை நிர்வாண கோலத்தில் அப்பா தினத்தன்று சன்னியின் இன்ஸ்டாகிராம் பதிவேற்றம் பயங்கர விமர்சனத்துக்கு உள்ளானது. அதை மையமாகக் கொண்டே இந்தப் புகைப்படம் ட்ரோல் செய்யப்பட்டு உள்ளது.

கடை திறப்பு விழாவின்போது சன்னிலியோன், சகிலாவிற்குப் பிறகு கேரளாவை ஸ்தம்பிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

இரவு நேர டாக்டர்கள்: ஆய்வில் வெளிவந்த உண்மை!

0
இரவு நேர டாக்டர்கள்

இரவு நேர டாக்டர்கள்: ஆய்வில் வெளிவந்த உண்மை!

இன்றைய காலகட்டத்தில் கார்பரேட் நிறுவனங்களில் பெரும்பாலும் படித்த இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் பகல் மற்றும் இரவு என மாறி மாறி தங்களுடைய ஊக்கத்திற்கு ஏற்ப வேலை செய்கின்றனர்.

பெய்ஜிங் நகரத்தில் நடந்த சோதனையில், இரவு நேரங்களில் வேலை செய்பவர்கள் உடலில் டி‌என்‌ஏ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்பும், இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது என அந்த ஆய்வின் தகவல்கள் கூறுகின்றன.

இரவு, பகல் வேலை செய்யும் 49 மருத்துவர்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு செய்தபோது, இரவு முழுவதும் வேலை செய்யும் மருத்துவர்களின் உடலில் சில குறைபாடுகள் இருந்தன.

இரவு முழுவதும் வேலை செய்யும் மருத்துவர்களின் உடலில் டி‌என்‌ஏவை சரி செய்யும் ஜீன்கள் மிகவும் குறைவாகவும், டி‌என்‌ஏ பாதிப்பு அதிகமாகவும் இருந்ததுள்ளது.

பகலில் வேலை செய்யும் மருத்துவர்களின் உடல்நிலை இதற்கு எதிர்மாறாக இருந்தது. ஒவ்வொரு இரவும் இவர்கள் தூக்கம் விழித்து வேலை செய்யும் பொழுது டி‌என்‌ஏ பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

டி‌என்‌ஏ பாதிப்பால் கேன்சர், இதயம் தொடர்பான நோய்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

3

அணை உடைந்து 60 பேர் பலி: கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் கைது!

0
அணை உடைந்து

அணை உடைந்து 60 பேர் பலி: கவனக்குறைவாக இருந்த ஊழியர்கள் கைது!

ப்ரேசில் நாட்டில் உள்ள புருமாடின்கோ என்ற நகரின் அருகாமையில் இரும்புத்தாது சுரங்கம் ஒன்று உள்ளது.

இச்சுரங்கத்தின் அருகில் வாலி என்ற பெரிய அணைக்கட்டு ஒன்று உள்ளது. கடந்த 25-ம் தேதி வாலி அணை திடீரென உடைந்தது.

இதனால் அணையில் இருந்த தண்ணீர் அனைத்தும் வேகமாக வெளியேறியது. சேறும் சகதியுமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், அருகில் இருந்த இருப்புத்தாது சுரங்கதிற்குள் வெள்ளம் புகுந்தது. அங்கு வேலைசெய்த  தொழிலாளர்கள் பலர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இதுவரை, வெள்ளத்தில் பலியாகிய 60 பேரின் உடல்கள் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு உள்ளன.

300-க்கும் அதிகமான நபர் என்ன ஆனார்கள் எனபதே தெரியவில்லை. சேரும் சகதியுமாக இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும் மீட்பு படையினர் கடுமையாக போராடி மீட்புப் பணியில் ஈட்டுபட்டு வருகின்றனர். ஆற்றின் குறுக்கே சென்ற ரயில் பாலம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அணை உடைந்ததற்காக அங்கு பணி புரிந்த 5 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

மோனா கபூருக்கு துரோகம்; ஸ்ரீதேவி மோசமான மரணம் – கர்மா 1

0
மோனா கபூருக்கு துரோகம்

மோனா கபூருக்கு துரோகம்; ஸ்ரீதேவி மோசமான மரணம் – கர்மா 1

கர்மாவைப் பற்றிய பொதுவான கருத்து அனைவரிடமும் உள்ளது. நாம் நல்ல செயல்களை செய்தால் நமக்கு நல்லது நடக்கும். நாம் கெட்டதைச் செய்தால் நமக்கு தீமை நடக்கும்.

கர்மா என்பது இதுபோன்ற செயலை மட்டுமே குறிக்கும். விதியை அல்ல!

நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும், கர்மாவை உருவாக்குகிறோம். நாம் உருவாக்கிய கர்மா நம்மிடமே மீண்டும் மீண்டும் வந்தது சேர்ந்துகொண்டே இருக்குமாம்

இந்தியாவில் மிகவும் பிரபலமான சிறந்த நடிகை. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிப்படங்களில் நடித்த ஸ்ரீதேவி சென்ற வருடம் எதிர்பாராத விதமாக குளிக்கும் அறையில் உயிரிழந்தார்.

தயாரிப்பாளர் போனி கபூரின் இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி ஆவார். போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது, ஸ்ரீதேவியும் போனிகபூரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஸ்ரீ தேவி திருமணம் செய்யும் பொழுது கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரின் திருமணம் முடிந்த குறுகிய காலத்திலேயே மோனா கபூர் உயிரழந்தார்.

கர்மாவின் செயல் 

தன்னுடைய மகன் அர்ஜூன் கபூர் நடித்த முதல் படத்தைப் பார்க்க முடியாமல் மோனா கபூர் உயிரழந்தார்.

போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் பிறந்த மகன் தான் அர்ஜூன் கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தன்னுடைய மகள் ஜான்வி கபூர் நடித்த முதல் திரைப்படத்தைப் பார்க்க இயலாமல் ஸ்ரீதேவி உயிரிழந்தார்.

இவருடைய இறப்பும் ஒரு மர்மம் நிறைந்ததாகவே உள்ளது. மேலும் குடிப்பழக்கத்தால் உயிரிழந்தார் என்ற அவப்பெயருடன் உலகைவிட்டுச் சென்றுள்ளார்.

நாம் செய்தது நமக்கே வந்தடையும். கர்மாவை ஒரு பொழுதும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

இன்னும் பல உண்மைக்கதைகள் உங்களுக்காக கர்ம வினைப்பகுதியில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன.

3

விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்!

0
விஜய் மகன் சஞ்சய்

விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் முதல் படம்!

விக்ரம் ஆட்டம் முடிவதற்குள் அவருடைய மகன் துருவ் ஹீரோவாக நடித்துவிட்டார். ஷங்கர் அறிமுகத்தில், துருவ் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தார்.

அதற்குள், பாலா அவரை வைத்து முதல் படத்தை இயக்கிவிட்டார். இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் துருவ்வை தேடிவந்துள்ளது.

இருப்பினும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் தன் மகனை நடிக்கவைக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இரண்டாவது படம் என்றால் ஷங்கர் படம் தான் என உறுதியாக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சங்கர் படத்தில் விஜய்யின் மகனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய், வேட்டைக்காரன் படத்தில் தந்தையுடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்.அதன் பிறகு நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

ஜான்சன் குறும்படம் உட்பட இரண்டு குறும்படங்களில் இதுவரை இயக்கி நடித்துள்ளார். ஜங்சன் குறும்டம் இந்த வருடம் தான் வெளியிடப்பட்டது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் துருவ், சஞ்சய் இருவரும் நடிக்க உள்ளனராம்.

3

ப்ரியா வாரியார் காதல் மயக்கம்: விஜய் சேதுபதிக்குத் தூண்டில்!

0
ப்ரியா வாரியார்

ப்ரியா வாரியார் காதல் மயக்கம்: விஜய் சேதுபதிக்குத் தூண்டில்!

ஒரு ஆதார் லவ் படத்தின் மூலம் கண் சிமிட்டி நடிகை எனப் பெயர் பெற்ற ப்ரியா வாரியார் சென்னை வந்துள்ளார்.

ஒரு ஆதார் லவ் திரைப்படம் காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது.  தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளிவர உள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் விளம்பர பணிகளுக்காக சென்னை வந்தார். அப்போது ஒளிவு மறைவு இல்லாமல் சில விஷயங்களை தைரியமாக பகிர்ந்துகொண்டார்.

ப்ரியா வாரியாரிடம் காதலன் உண்டா எனக் கேட்டதற்கு, 9-ம் வகுப்பு படிக்கும்போதே காதல் வயப்பட்டதாக கூறினார்.

அவருடைய முன்னாள் காதலர் காதலைச் சொன்ன உடன் ஏற்றுக்கொண்டாராம். பிறகு பிரிந்துவிட்டனராம். அது  காதல் அல்ல, வெறும் மயக்கம்,  அபெக்சன் எனக் கூறினார்.

மலையாள நடிகர்களில் மோகன்லாலை மிகவும் பிடிக்குமாம். தமிழில் ப்ரியாவாரியாரை கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதியாம்.

விஜய் சேதுபதியுடன் அடுத்த படத்தில் இணைய சந்துகேப்பில் விஜய் சேதுபதியை ரொம்ப பிடிக்கும் என தூண்டில் போட்டுவிட்டார். சிக்குவாரா விஜய் சேதுபதி?

3

டீசி படங்களை தூசியாக்கி வசூலை அள்ளிய அக்குவாமென்

0
டீசி படங்களை

டீசி படங்களை தூசியாக்கி வசூலை அள்ளிய அக்குவாமென்

அமெரிக்காவைச் சேர்ந்த டீசி காமிக்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி வசூலில் அக்குவாமென் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்தது..

சூப்பர்மேன், பேட்மேன், டார்க்நைட் மற்றும் வொன்டர் உமன் போன்று 50-க்கும் மேற்பட்ட படங்கள், டீசி காமிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்தவை ஆகும்.

அக்குவாமென்

இயக்குனர் ஜேம்ஸ் வேன் இயக்கத்தில் ஜேசன் மோமோ நடிப்பில் டீசி காமிக்ஸ், வார்னர் ப்ரோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்த அக்குவாமென் திரைப்படம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆனது.

கடலுக்கு அடியில் நடக்கும் சாகசங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். கடலின் அடியில் சாகசங்கள் என்றாலே கிராபிக்ஸ் காட்சிகளின் பங்கு அதிகமாக இருக்கும்.

ஆமாம், படத்தின் வெற்றிக்கு இதுவே முக்கியப்பங்கு வகிக்கிறது. 7 கடலையும் வலம் வரும் கடலின் ராஜாவாக ஹீரோ ஜேஸன் மோமோ நடித்துள்ளார்.

2012-ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் தயாரிப்பில் வெளிவந்த டார்க் நைட் ரைசர் திரைப்படம் 1.084 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்ததே இதுவரை அதிகமாக இருந்தது.

அக்குவமென் திரைப்படம் நேற்று 1.085 பில்லியன் அமெரிக்க  டாலர்கள் வசூலித்து டார்க் நைட் ரைசஸ் திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளியது.

அதேவேளை, வார்னர் மீடியா தயாரிப்பை கணக்கிட்டால், அக்குவாமென் படத்தின் வசூல் மூன்றாம் இடத்தில் தான் உள்ளது.

லார்ட் ஆஃப் ரிங்ஸ் தி ரிட்டர்ன் ஆஃப் கிங் – 1.119 பில்லியன் வசூல். ஹாரி பாட்டர் பார்ட் 2 – 1.342 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்து முதல் இரண்டு இடத்தை தக்கவைத்துள்ளது.

3

ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு; கைது நடவடிக்கை பாயுமா?

0
ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன் மீது வழக்கு; கைது நடவடிக்கை பாயுமா?

ஏன் விமர்சனம் செய்கிறேன்?

120 ரூபாய் படம் பார்த்துவிட்டு நான் எப்படி வேண்டுமோ விமர்சனம் செய்வேன். அதற்கு எனக்குத் தகுதி உள்ளது. இதுதான் புளூ சட்டை இளமாறனின் நீண்ட காலப் பதில்.

இயக்குனர் சாய் ரமணி சில வருடங்களுக்குமுன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை இயக்கினார். இப்படத்தை மாறன் கொடூரமாக விமர்சனம் செய்தார்.

விவேகம் படத்தை மரண கொடூரமாக விமர்சனம் செய்தார். இதனால் சாய் ரமணி,  மாறன் மீது புகார் கொடுத்தார்.

இருப்பினும், தொடர்ந்து விமர்சனம் செய்துகொண்டே தான் உள்ளார். காளி படம் மிகக்கேவலமாக உள்ளது எனக்கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த கிருத்திகா உதயநிதி, மாறனை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் மாறன் மறுத்துவிட்டார்.

மாறனை பற்றி கிருத்திகா விமர்சனம் செய்தது, அதை தமிழ்டாக்கீஸ் யூடியூப் சேனலிலேயே போடுமாறு கேட்டுக்கொண்டார்.

சார்லி சாப்ளின் 2

சமீபத்தில் வெளியான இப்படத்தை தரக்குறைவாக மாறன் விமர்சனம் செய்துள்ளார் என படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா கமிசனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மாறன் பொதுவாகவே அனைவரையும் மரியாதை இன்றி பேசுகிறார். பணம் சம்பாதிப்பதற்காக மிரட்டி விமர்சனம் செய்து விளம்பரம் வாங்குகிறார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவா கோரிக்கை விடுத்துள்ளார். இனியாவது அவர் கைது செய்யப்படுவாரா? அல்லது இந்த புகாரும் கிடப்பில் போடப்படுமா?

3

வாட்ஸ்ஆஃப் பீட்டா: அசரவைக்கும் 5 புதிய அப்டேட்

0
வாட்ஸ்ஆஃப் பீட்டா

வாட்ஸ்ஆஃப் பீட்டா: அசரவைக்கும் 5 புதிய அப்டேட்

உலகத்தில் 100 கோடி பயனாளர்களுக்கு மேல் கொண்டுள்ள வாட்ஸ்ஆஃப் செயலியின் புதிய அப்டேட்டுகள் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு ஏற்ப வெளியிடப்பட்டுள்ளது.

பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்ஆஃப் செயலி மிகவும் பிரபலமான அனைவராலும் எளிமையாகக் பயன்படுத்தக் கூடிய ஒன்று.

1) வாட்ஸ்ஆஃப் கை ரேகை சென்சார் (Finger Print Censor)

பயனாளர்கள் தங்களுடைய தகவல்களை பாதுகாக்க மூன்றாம் பார்ட்டி செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆஃப் நிறுவனம் ஃபிங்கர் பிரிண்ட் ஆப்ஷன்யை நேரடியாக வாட்ஸ்ஆஃப்பில் இணைத்தது.

இதன் மூலம் பயனாளர்கள் எந்தவித பயமும் இன்றி எளிதாக தங்களுடைய தகவல்களை பாதுகாக்கலாம்.

2) ஆடியோ பிக்கர் (Audio Picker)

இந்த அம்சத்தின் மூலம் ஒரு முறைக்கு அதிகபட்சமாக 30 ஆடியோக்கள் வரை அனுப்ப இயலும். மேலும், ஆடியோவை அனுப்பும் நேரத்தில் அதைக் கேட்கவும் இயலுமாம்.

இந்த அம்சம் தற்பொழுது வாட்ஸ்ஆப் பீட்டா பயனாளர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைத்துவிடும்.

3) குரூப்பில் தனியாக பதிலளித்தல் (Reply Privately Group)

இந்த அம்சத்தின் மூலம் ஒரு நபர் குரூப்பில் இருக்கும் மற்ற நபர்களிடம் தனியாக உரையாட இயலும்.

தற்பொழுது ஆண்ட்ராய்ட் பிளாட்பார்மில் மட்டும் இந்த அம்சம் இருக்கிறது விரைவில் ஆப்பிள் ஃபோன்களில் அப்டேட் ஆகும்.

4) 3டி டச் ஆக்சன் ஃபார் ஸ்டேட்டஸ் (3D Touch Action For Status)

இந்த அம்சத்தின் மூலம் உங்களுடைய காண்டாக்ட்டில் இருப்பவர்களின் ஸ்டேட்டஸை அவர்களுக்குத் தெரியாமலேயே பார்க்க இயலும்.

இந்த அம்சம் தற்பொழுது ஆப்பிள் ஃபோன் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் அனைத்துப் ஃபோன்களிலும் வந்துவிடும்.

5) ஸ்டிக்கர் இன்ட்டகிரேஷன் (Sticker’s Integration)

போதிய அளவு ஸ்டிக்கர்கள் வாட்ஸ்ஆஃப் செயலியில் இல்லாததால் பெரும்பாலானோர் மூன்றாம் பார்ட்டி செயலிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆஃப் நிறுவனம் ஏராளமான ஸ்டிக்கர்களை கொண்டுள்ள புதிய கீ போர்ட்டை அறிமுகம் செய்ய உள்ளது.

3

நயன், ஹன்சியை மிஞ்சிய காவேரி: சிம்புவைப் பற்றி கூறிய மகத்

0
நயன்

நயன், ஹன்சியை மிஞ்சிய காவேரி: சிம்புவைப் பற்றி கூறிய மகத்

சிலம்பரசன் என்ற சிம்பு தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். தற்போது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிம்புவின் நண்பர் மகத், சிம்புவைப் பற்றி கூறியதாக ஐபிடைம்ஸ் இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு தன்னுடைய காதல் தோல்வியின் போது கூட ஒருதுளி கண்ணீர் விட்டதில்லை ஆனால் கடந்த வருடம் நடந்த ஒரு நிகழ்வின் விமர்சனங்களால் அதிகம் மனதுடைந்து அழுததாக சிம்புவின் நெருக்கமான தோழன் நடிகர் மகத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.

பொதுவாக எல்லோரும் காதல் தோல்வியின் போது மிகுந்த வருத்தம் அடைந்து அதிலிருந்து மீள இயலாமல் தடுமாறுவார்கள். ஆனால் சிம்பு எந்த வித வருத்தமும் அடையவில்லை.

கடந்த வருடம் காவேரி பிரச்சனையின்போது சிம்பு பேசிய விதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. கர்நாடகா, தமிழ்நாடுகளிடையே ஒற்றுமையைக் கொண்டுவரவும் பிரச்சனையை சுமூகமாக முடிக்கவேண்டும் எனவும் பேசினார்.

கன்னட மக்கள் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பகிர வேண்டும் என்று கூறினார். கர்நாடகாவில் சிம்புவின் பேச்சுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

ஆனால் தமிழ்நாட்டு ஊடகங்கள் சிம்புவைக் கதறவிட்டனர். இதனால் சிம்பு மிகுந்த மனவேதனை அடைந்ததாக மகத் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், இன்று சிம்பு இறந்துபோன தனது ரசிகரை வீட்டிற்கு சென்று, ரசிகரின் உருவப்படத்தைப் பார்த்து கதறி அழுதார்.

நான் அண்டாவில் பால் ஊற்ற வேண்டும் என்று சொன்னேனே தவிர, கட்அவுட் மீது ஊற்ற சொல்லவில்லை. அதற்கு பதில் மக்களுக்கு கொடுக்க சொல்லுங்கள் என்று கூறினேன் என பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

3