Home Blog Page 314

பெரிய தம்பி சிறுத்தை: மாடிக்கு ஜம்ப் அடித்து வாலிபரைக் குதறியது – வீடியோ

0
பெரிய தம்பி சிறுத்தை

பெரிய தம்பி சிறுத்தை: மாடிக்கு ஜம்ப் அடித்து வாலிபரைக் குதறியது – வீடியோ

ஹிமாச்சல் பிரதேசத மலைப்பகுதியில் வாழ்ந்த சிறுத்தை ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகர் அருகே வழிதவறி சென்று விட்டது.

லம்பா பிந்த் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து, நீண்ட நேரம் பதுங்கி பதுங்கி உலாவி வந்துள்ளது.

இதை அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் கண்டுகொண்டு வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். விடிந்ததும் அந்த சிறுத்தையை தேடி உள்ளனர்.

நீண்டநேரத் தேடலுக்குப் பிறகு சிறுத்தை ஒரு வீட்டுக்குள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. வனத்துறையினருடன் சென்று பொதுமக்களும் சிறுத்தையைப் பிடிக்க முயன்று உள்ளனர்.

மாடியில் இருந்துகொண்டு சிறுத்தைக்கு வலையை வீசி உள்ளனர். ஆனால் சிறுத்தை வலைக்குள் மாட்டாமல் நழுவிக்கொண்டே இருந்தது.

நீண்ட நேரமாக வலையை வீசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த சிறுத்தை, முதல் மாடியில் இருந்த அந்த நபர் மீது சீறிப்பாய்ந்து, கழுத்தைக் கடித்துக் குதறியது.

அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் சிறுத்தை பிடியில் இருந்து தப்பினார். சிறு காயங்களுடன் உயிர் தப்பித்துக்கொண்டார்.

சிறுத்தையால் பலர் தாக்கப்பட்டுள்ளனர். அருகில் வருவபர்கள் மீது பயமின்றி பயந்து குதறியது. இதனால் வனத்துறையினர் மற்றும் அதிரடிப் படையினர் தெறித்து ஓடினர்.

பின்பு, மயக்க மருந்துக்குழு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசிபோட்டுப் பிடித்தனர். 9 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தை பிடிபட்டது.

பின்பு அதை சாஹர்புர் வனவிலங்கு பூங்காவிற்கு கொண்டு சென்றனர். சிறுத்தை ஆக்ரோசமாக தாகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இது பெரிய சைசில் இருக்கும் சின்ன தம்பி யானை அல்ல. சின்ன சைசில் இருக்கும் பெரிய தம்பி சிறுத்தை. சின்ன தம்பி யானையைவிட பல மடங்கு மக்களுக்கு உயிர் பயம் காட்டிவிட்டது.

3

ஆர்த்தியை துடிக்கத் துடிக்க வெட்டிய கூலிப்படை

0
ஆர்த்தியை துடிக்கத்
கோப்பு படம்

ஆர்த்தியை துடிக்கத் துடிக்க வெட்டிய கூலிப்படை

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடன் பிறந்தவர் கல்யாணி. உடன்பிறந்தவர்கள் மொத்தம் 7 பேர்.

கல்யாணிக்கும், சுடலைக்கும் பூர்விக சொத்துப் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.

பூர்வீக செத்துப் பிரச்சனையால் தங்கையை தீர்த்துக்கட்ட சுடலையாண்டி கூலிப்படையினரைக் கொண்டு திட்டம் தீட்டியுள்ளார்.

நேற்று இரவு பூ வியாபாரத்தை முடித்துவிட்டு, கல்யாணியும் அவருடைய கணவர் மணிகண்டனும் வீட்டுக்கு வந்தனர். இருவருக்கும் ஆர்த்தி என்ற மகள் உள்ளார்.

மூவரும் தூங்க செல்லும் சமயத்தில் சுடலையாண்டி ஏவி விட்ட கூலிப்படையினர் கல்யாணி வீட்டிற்குள் புதுந்து சரமாரியாக வெட்டினர்.

இதில் கல்யாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவரும், மகளும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்து, இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்து விட்டார்.

ஆர்த்தி மட்டும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையாண்டியையும், கூலிப்படையினரையும் தேடி வருகின்றனர்.

3

அமெரிக்கா வெள்ளையாக மாறிவிட்டது; அண்டார்டிகாவை மிஞ்சியது குளிர்!

0
அமெரிக்கா வெள்ளையாக மாறிவிட்டது

அமெரிக்கா வெள்ளையாக மாறிவிட்டது; அண்டார்டிகாவை மிஞ்சியது குளிர்!

அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியில் குளிர் மைனஸ் 40 டிகிரி வரை செல்ல வாய்ப்பு உள்ளதாக  அமெரிக்காவின் வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

பூமியின் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிக்கா கண்டத்தைவிட, அதிகமான பனிப்பொழிவை அமெரிக்க சந்திக்க உள்ளது.

சிகாகோ நகரத்திலேயே அதிக குளிர் நிலவிவருகிறது. இந்த மோசமான வானிலையால் இதுவரை அமெரிக்காவில் 12 பேர் இறந்து உள்ளனர்.

பலத்த காற்று வேறு வீசுவதால், சில நொடிகளிலேயே குளிரைத் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் உருவாகலாம். எனவே பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

பலர் இந்தக் குளிரை சமாளிக்க உடல் முழுவதையுமே துணியால் மூடியபடி வெளியே செல்கின்றனர். சிறிய பாகம் கூட வெளியில் தெரியாமல் உடல் முழுவதையும் மூடிக் கெண்டே வெளியில் வருகின்றனர்.

இந்தக் கடும் குளிரால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல லட்சம்பேர் இந்த கடும் உறைபனியால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

3

சாக்ஸி-அனுஷ்கா: ஒரே பள்ளி, ஒரே மாதிரி கணவர்கள் – என்ன ஒரு அதிசயம்!

0
சாக்ஸி-அனுஷ்கா

சாக்ஸி-அனுஷ்கா: ஒரே பள்ளி, ஒரே மாதிரி கணவர்கள் – என்ன ஒரு அதிசயம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் மனைவியும் முன்னாள் கேப்டன் தோனியின் மனைவியும் பள்ளிப்பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அஸ்ஸாம் மாநிலத்தில் மர்கேரிதா என்ற இடத்தில் இருக்கும் சென்ட் மேரிஸ் பள்ளியில் இருவரும் ஒன்றாகப் படித்துள்ளனர்.

அந்தப் பள்ளியில் நடந்த விழாவில் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் அனுஷ்கா பிங்க் கலர் ஆடையிலும் சாக்ஸி ஏஞ்செல் வேடத்திலும் உடை அணிந்திருக்கின்றனர்.

குழந்தையில் சாக்ஸி தோனி அப்படியே ஷிவா தோனியைப்போல் இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் வாலிப பருவத்தில் இருவரும் தங்கள் நண்பர்களுடன் இருகின்றனர்.

இந்த அனைத்துப் புகைப்படங்களும் அனுஷ்கா ஷர்மா ஃபேன் கிளப் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சாக்ஸி குறித்து அனுஷ்கா கூறியது

2013-ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அனுஷ்கா மீண்டும் சாக்ஸியைப் பார்க்கும் பொழுது “நானும் சாக்ஸியும் அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு சின்னக் கிராமத்தில் ஒரே பள்ளியில் படித்தும், வசித்தும் வந்தோம். சாக்ஸி எப்பொழுதும் வேடிக்கையாகவும் காமெடியாகவும் பேசுவாள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது, இருவரும் இந்தியாவின் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களின் மனைவிகள் ஆவர். அதுவும் இந்திய அணியின் கேப்டன்களின் மனைவி.

இரு பள்ளித்தோழிகள் சொல்லிவைத்தது போன்று இந்திய அணியின் கேப்டன்களை மணந்துள்ளனர். என்ன ஒரு அதிசயம்!

3

சன் பங்களாவும் மாறனும்: இத்தனை கோடிகளா? – வேற லெவல்

0

சன் பங்களாவும் மாறனும்: இத்தனை கோடிகளா? – வேற லெவல்

முரசொலி மாறன் இல்லாமல் கருணாநிதி இல்லை. கருணாநிதி இல்லாமல் மாறன் இல்லை. கருணாநிதி சட்டசபை, மாறன் பார்லிமென்ட் இப்படி இருவருக்குள்ளும் ஒரு புரிதல் உண்டு.

இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இன்று விரல்விட்டு என்ன முடியாத அளவிற்கு பெருகிவிட்டனர்.

முரசொலி மாறனின் மகன் கலாநிதிமாறன். சன் குழுமத்தை துவங்கியவர். முதன் முதலில் கேபிள் டிவியில் துவங்கி பின்பு, லோக்கல் சேனல் அப்புறம் சேட்டிலைட் சேனல் என உயர்ந்தார்.

டிடி பொதிகைக்குப்பின் சன்டிவி என்றால் பட்டிதொட்டி எங்கு பேமஸ். விஜய் டிவியும் அந்த நேரத்தில் உதயமானது. அதை ஸ்டார் நெட்வொர்க் அப்போதே விலைக்கு வாங்கி ஸ்டார்விஜய் என மாற்றியது.

ஸ்டார் நெட்வொர்க் இன்று இன்டர்நேசனல் சேனலாக உயர்ந்துவிட்டது. ஆனால் சன் நெட்வொர்க் தென்னிந்தியாவிற்கு உள்ளேயே முடங்கிப்போனது.

அந்த நேரத்திலேயே விளையாட்டுச் சேனல் துவங்கியிருந்தால் சன்நெட்வொர்க்கும் ஸ்டாருக்கு போட்டியாக உருவெடுத்து இருக்க வாய்ப்பு உண்டு.

தற்பொழுது சன் நெட்வொர்க் வடஇந்தியா பக்கம் கால் பதித்துள்ளது. சன் பங்களா என்ற சேனலை துவங்கி உள்ளனர்.

சன்டிவியின் தமிழ் மாலை என்பதுபோல் மனதில் பங்காளி “Mone Prane Bengali” என்ற ஸ்லோகனுடன் ஒளிபரப்பாக உள்ளது.

பிப்ரவரி 3 முதல் வங்காள மொழியில் ஒளிபரப்பாக உள்ளது. பங்களாதேஷ் நாட்டிலும் அதிக அளவு வங்கமொழி பேசுவோர் உள்ளதால் அங்கும் இது, வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

120 கோடி சன் பங்களா சேனலுக்கு செலவு செய்வதற்கு மட்டுமே ஒதுக்கி உள்ளனர். இந்த தொகையில் சீரியல், நிகழ்சிகள் போன்றவை தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

விரைவில் மராத்தி மொழியிலும் சேனல் துவங்கப்பட உள்ளது. ஸ்டாலின் கொல்கத்தா சென்று வந்த நிலையில் இந்த சேனல் துவங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நாள் இல்லாமல், வடஇந்தியாவிலும் இப்போது கால்பதிக்க முடிவு செய்தது ஏன்? எனக் கேள்வியும் எழுந்துள்ளது. இதில் அரசியல் நோக்கமும் கலந்திருக்கலாம் என கருத்து நிலவி வருகிறது.

3

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நம்பர் நடிகை – அப்பா யார்?

0
வாடகைத் தாய்

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நம்பர் நடிகை – அப்பா யார்?

இந்தியாவில் நம்பரில் பெயர் ஆரம்பிக்கும் பிரபலங்கள் ‘ஏக்’தா கபூர், ‘த்ரி’ஷா, ‘நயன்’தாரா. இவர்களின் மூவருக்கும் உள்ள ஒற்றுமை இன்னும் திருமணமாகவில்லை.

த்ரிஷாவின் வயது 35. கல்யாணம் ஏற்பாடு நிச்சயதார்த்தம் வரை சென்று அத்தோடு நின்று விட்டது. நயன்தாரா வயது 34. இரண்டு காதல் படுதோல்வி. மூன்றாவது காதலருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை.

ஏக்தா கபூர் வயது 43. ஹிந்தி நடிகர் ஜிதேந்திராவின் மகள். ஏக்தா விளம்பரப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். பெரும்பாலும் இவர் தயரிப்பாளராகவே பிரபலமாகியுள்ளார்.

30 வயது என்றாலே நம்ம ஊரில் முத்துன கத்தரிக்காய் என்று கூறுவார்கள். ஆனால் ஏக்தா 40 வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

பார்டி, பப், டான்ஸ் என ஹிந்தி நடிகைகளை விட கவர்ச்சியான உடைகளில் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தும் தயாரிப்பாளர் ஏக்தா எனப் பெயர் பெற்றார்.

இந்நிலையில், ஏக்தா கபூர் கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இல்லாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

கடந்த 27-ம் தேதி வாடகைத்தாய்க்கு ஆண் குழந்தை பிறந்தது. கருமுட்டை ஏக்தா கபூருடையது. அப்போ அப்பா யார்? எனக் கேள்வி எழுந்துள்ளது.

ஏதாவது ஒரு நடிகரிடம் விந்தணுக்கள் தானமாக பெற்றிருக்கலாம் என ஒரு கருத்துநிலவி வருகிறது. உண்மை என்ன என அவர் தான் தெரிவிக்கவேண்டும்.

ஏக்தாவின் தம்பி, நடிகர் துஷர் கபூரும் திருமணம் ஆகாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பரில் பெயர் வைத்து திரைப்பிரபலங்களாக மாறினாலே, திருமணத்திற்கும் அவர்களுக்கும் ராசியே இருப்பதில்லை போல…

3

கிவிஸ் பௌலிங் தாங்க முடியாமல் சிதறிய இந்திய பேட்ஸ்மேன்கள்

0
கிவிஸ் பௌலிங்

கிவிஸ் பௌலிங் தாங்க முடியாமல் சிதறிய இந்திய பேட்ஸ்மேன்கள்

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் மூன்று போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கிடையில் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் நான்காவது போட்டியை துணை கேப்டன் ரோஹித் லீட் செய்கிறார்.

ஏற்கனவே, காயம் காரணமாக சென்ற போட்டியில் விளையாடாத தோனி நான்காவது போட்டியிலும் விளையாடவில்லை. கேப்டன் கோலிக்கு பதிலாக 19 வயது சுப்மன் கில்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங்க செய்ய முடிவெடுத்தது. பேட்டிங் இறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்தது.

21 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி 40 ரன்களுக்குள் 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது வழக்கம் போல ஹார்த்திக் பாண்ட்யா 4 பவுண்டரிகள் அடித்துவிட்டு அவுட் ஆகினார்.

குல்தீப் மற்றும் சகால் பௌலிங்கில் கூட்டணி சேர்வதுபோல் பேட்டிங்கிலும் பார்ட்னர்ஷிப் செய்து ஆறுதல் ரன்களை அடித்தனர். இறுதியில் 92 ரன்களில் சுருண்டது இந்திய அணி.

இந்தியாவின் 7வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். அருமையாக பந்து வீசிய ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகள் எடுத்து 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பின்னர் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவருக்கு 2 விக்கெட் இழந்து 93  ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.

3

காதலி சுரேகா: கொலை செய்ய முயற்சிக்கிறார் இயக்குனர் அமீர்

0
காதலி சுரேகா

காதலி சுரேகா: கொலை செய்ய முயற்சிக்கிறார் இயக்குனர் அமீர்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்சல் ஜெனிஷ் (23) என்பவர் சென்னையில் இஞ்சினியரிங் படித்து வருகிறார்.

அவருடைய கல்லூரியில் படிக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த சுரேகா என்ற பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் காதல் விவகாரம் சுரேகாவின் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது.  வீட்டில் எதிர்ப்புகிளம்பவே சுரேகாவுடன் கன்னியகுமாரிக்கு தப்பிவிட்டார்.

கன்னியாகுமரி, மேக்காமண்டபம் பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் சுரேகாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார் அப்சல்.

அதேவேளை, இயக்குனர் அமீர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாகர்கோவில் வந்துள்ளார். அப்போது கொடநாடு சர்ச்சையை அடக்க எடப்பாடி அரசே, ஆசிரியர்களைத் பிரச்சனையை வளர்கிறது என குற்றம்சாட்டி பேட்டிகொடுத்தார்.

இந்நிலையில் அப்சல், சுரேகா வீட்டைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி வந்துள்ளனர். இயக்குனர் அமீர் எங்கள் காதலுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளார்.

அமீர் தங்களுக்கு நெருக்கடி தருவதாக அப்சல் நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதாக ஒன்இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்த இரு சம்பவங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளது. அமீரின் பேட்டி வைரல் ஆகாமல் இருக்க வாட்ஸ்ஆப் குறுஞ்செய்தி என அப்சல் சம்பவத்தை தொடர்பு படுத்தி பிரச்சனையை சிலர் திசைதிருப்ப முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பானுப்பிரியாவை கைதுசெய்ய பரிந்துரை

0
சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பானுப்பிரியாவை கைதுசெய்ய பரிந்துரை

நடிகை பானுப்பிரியா சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் ஆந்திர ஊடங்களில் பற்றி எரிகிறது.

ஆனால், நடிகை பானுப்பிரியா தமிழ்நாட்டிலேயே பதுங்கிவிட்டார். 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வேலைக்கு வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது.

இதனால், நடிகை பானுப்ரியா மீது குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆந்திர டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த பிரபாவதி, சமல்கோட்டா காவல்நிலையத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமை செய்வதாக புகார் அளித்தார்.

செல்போனில் கூட பேசவிடாமல் கொடுமை செய்கின்றனர். போலீசிடம் சென்றால் திருடியதாக புகார் செய்வோம் என மிரட்டுவதாக அந்த புகாரில் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு செய்து பானுப்பிரியாவிடம் விசாரணை செய்தனர்.

நேற்று, குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய அதிகாரிகள், சிறுமியை மீட்டு  தேனாம்பேட்டையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் வாங்கினர்.

இந்த விசாரணையின் போது, சிறுமி பதினான்கு வயதிற்கு உட்பட்டவர் என்பது தெரியவந்தது. இதனால், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச்சட்டத்தின் கீழ் பானுப்பிரியாவை கைது செய்ய வேண்டும் என ஆந்திர போலீசாருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

3

மதுபோதையில் பிரியங்கா வீடியோ: மனநோய் வேறு உள்ளதாம் – சு.சாமி

0
மதுபோதையில் பிரியங்கா

மதுபோதையில் பிரியங்கா வீடியோ: மனநோய் வேறு உள்ளதாம் – சு.சாமி

ராஜ்புத்சேனா, ஆதித்யநாத்துக்கு ஆதரவு, மோடி மிஷன் 2019 ஆகிய சமுகவலைத்தளப்  பக்கங்களில் ஒரு காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பிரியங்கா காந்தி குடிபோதையில் பத்திரிக்கையாளர்களைத் தரக்குறைவாக பேசுகிறார் என குறிப்பிட்டு வெளியிட்டு இருந்தனர்.

சமீபத்தில் தான், ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பதவி வழங்கினார். இந்நிலையில் பிரியங்கா மது அருந்தியுள்ளார் என்கிற வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

10 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஊடகத்தினரைப் பார்த்து உரத்த குரலில் பிரியங்கா காந்தி கத்திக் கொண்டுள்ளார்.

மேலும் அதைப்பார்க்கும்போது ஏதோ மதுபோதையில் அங்கிருந்து நகர முடியாமல் பிரியங்கா காந்தி ஆடுவதுபோல்  உள்ளது. ஆனால் அது உண்மை அல்ல.

2018-ம் ஆண்டு கத்துவா மற்றும் உனாவ் பாலியல் குற்றங்களுக்கு எதிராக நடைபெற்ற எதிர்ப்பு பேரணியில் எடுக்கப்பட்ட வீடியோ அது.

இந்தியா கேட் அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ராகுல் கூட்டத்தின் மையப்பகுதிக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் பிரியங்கா காந்தி கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். சிலர் பிரியங்கா காந்தியை இடித்துள்ளனர்.

இதன் காரணமாகவே அவர் ஆத்திரமடைந்து அனைவரையும் தள்ளிப்போகச் சொல்லி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடிட் செய்து போலியாக வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோவை தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி ஒரு கருத்தை தெரிவித்து உள்ளார். பிரியங்கா காந்திக்கு பைபோலர் எனும் ஆவேசப்படும் மன நோய் உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

எனவே, பிரியங்கா காந்தி பொதுவாழ்வில் ஈடுபடக்கூடாது என சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

3