Home Blog Page 5

செல்லம்மா பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது

0

டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் (Chellamma Song in Doctor) யுடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் மார்ச், 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

கோடை விடுமுறையில் ‘டாக்டர்’ படம் நெட்பிலிக்ஸ்-ல் வெளியாக உள்ளது. சேட்டிலைட்ஸ் உரிமையை சன்டிவியும், டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை நெட்பிலிக்ஸ்-ம் வாங்கியுள்ளன.

இந்நிலையில், டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

செல்லம்மா பாடலை எழுதியவர் சிவகார்த்திகேயன். அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து செல்லம்மா பாடலை பாடியுள்ளனர்.

The post செல்லம்மா பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது appeared first on MrPuyal Cinema.

3

கணவருடன் அனிதா சம்பத்: வீட்டில் விசேஷங்க!

0

சன்டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து புகழ்பெற்றவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளருக்கு போஸ்டர் அடித்தனர் என்றால் அது அனிதா சம்பத்திற்கு மட்டும் தான்.

பிக்பாஸ் மூலம் விஜய் டிவியில் ஒரு கலக்கு கலக்கினார். தற்பொழுது கணவருடன் அனிதா சம்பத் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

அனிதா வீட்டில் நடந்த விசேசத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சியில் சில பிக்பாஸ் நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

டிவிட்டரில் அனிதாவின் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, வீட்டில் விசேஷங்க எனப் பதிலளித்துள்ளார்.

The post கணவருடன் அனிதா சம்பத்: வீட்டில் விசேஷங்க! appeared first on MrPuyal Cinema.

3

Master50Days: கொரோனாவையும் மீறி ஹிட் அடித்த மாஸ்டர்

0

Master50Days ஹாஸ்டாக் ட்ரெண்ட்டாகி உள்ளது. மாஸ்டர் படம் தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடுவதால் #Master50Days ஹாஸ்டாக் உருவாக்கப்பட்டு ட்ரெண்ட்டாகி உள்ளது.

மாஸ்டர் படம் ஜனவரி மாதம் 13-ம் தேதி பொங்கலுக்கு முன் தினம் திரையரங்கில் வெளியானது. அடுத்த 15 நாளில் அமேசான் பிரைம் தளத்திலும் வெளியானது.

இருப்பினும் மாஸ்டர் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு மக்கள் திரையரங்கு பக்கம் வருவதில்லை என கருத்துநிலவி வந்தது.

மாஸ்டர் படம் மூலம் மீண்டும் தியேட்டருக்கு மக்கள் வருகை அதிகரித்து உள்ளது. நீண்ட மாதங்களுக்குப்பிறகு மாஸ்டர் படம் தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டு உள்ளது.

The post Master50Days: கொரோனாவையும் மீறி ஹிட் அடித்த மாஸ்டர் appeared first on MrPuyal Cinema.

3

மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்றார்!

0

மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு நடிகர் மாதவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

லத்வியன் ஓப்பன் ஸ்விம்மிங் போட்டியில் கலந்து கொண்ட வேதாந்த் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். வேதாந்த் நண்பர் சஜன் பிரகாஷ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

மகன் பதக்கத்துடன் உள்ள புகைப்படத்தை மாதவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் பயிற்சியாளர்கள் பிரதீப், பீட்டர், சதீஷ், முருகேஷ் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

The post மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்றார்! appeared first on MrPuyal Cinema.

3

ஹர்பஜன் சிங் நடித்த “பிரண்ட்ஷிப்” படத்தை பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வம்!

0

ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள “பிரண்ட்ஷிப்” படத்தைப் பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வமாக உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் புகழ் லோஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன் முறையாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப். இப்படத்தை ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால்ராஜ் இருவரும் இணைந்து இயக்குகியுள்ளனர்.

ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் இங்கு உள்ளது. என்னால் படத்தை பார்க்க காத்திருக்க முடியவில்லை. இது பாஜ்ஜியின் காவியம். புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என பதிவு செய்து உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Suresh Raina (@sureshraina3)

The post ஹர்பஜன் சிங் நடித்த “பிரண்ட்ஷிப்” படத்தை பார்க்க சுரேஷ் ரெய்னா ஆர்வம்! appeared first on MrPuyal Cinema.

3

தளபதி65: பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் கேட்டாரா?

0

தளபதி65 படம் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே (Pooja Hegde) முதன் முதலில் அறிமுகமான படம் முகமூடி. அந்தப்படம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழ் படங்களில் பூஜா ஹெக்டே நடிப்பதில்லை.

முதல்படம் தோல்வியடைந்தாலும் விடாமல் முயன்ற பூஜா ஹெடேவுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் அல வைகுந்தபுர்ரமுலூ (Ala Vaikunthapurramuloo).

30 வயதை தொட்ட பூஜா ஹெக்டே, வைகுண்டபுரம் படம் மூலம் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். கைவசம் நான்கு படங்கள் உள்ளன.

முட்ட பொம்மா பாடல் மூலம் உலக அளவில் பாப்புலர் ஆகிவிட்டார். தற்பொழுது தளபதி65 படத்தில் பூஜா ஹெட்டேவை நடிக்க படக்குழு அணுகியதாகவும், அதில் நடிக்க பூஜா 3.5 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டேவிற்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் மார்க்கெட் இருப்பதால் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

தளபதி 65 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மனோஜ் பரமஹம்ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

The post தளபதி65: பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் கேட்டாரா? appeared first on MrPuyal Cinema.

3

அனுபமா பரமேஸ்வரன் – பும்ரா: கோவாவில் ரகசியத் திருமணம்?

0

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா இருவருக்கும் கோவாவில் ரகசியத் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமம் படம் மூலம் புகழ்பெற்ற நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழில் அதர்வாவுடன் ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அனுபமா குறித்து மீண்டும் வதந்திகள் பரவியுள்ளது. பும்ரா தனக்கு நல்ல நண்பர், காதல் எல்லாம் ஒன்றும் இல்லை என ஏற்கனவே அனுபமா மறுத்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா விடுவிக்கப்பட்டு உள்ளார். பும்ரா, நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கோவாவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதால் போட்டியிலிருந்து விலகியதாக வதந்திகள் பரவியது.

இதற்கு வசதியாக அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் விடுமுறையில் உள்ளதாக ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் குஜராத்தில் உள்ள ஒரு பிரபல ரிசார்ட்டில் தங்கியுள்ளார்.

அந்த இடம் பும்ராவின் அஹமதாபாத் வீட்டிற்கு மிக நெருக்கமாக உள்ளது. இதன் காரணமாகவே இருவரும் மீண்டும் கிசுகிசுவில் சிக்கியுள்ளனர். இந்த முறை ரகசியக் கல்யாணம் வரை கிசிகிசுக்கள் கிளம்பிவிட்டன.

The post அனுபமா பரமேஸ்வரன் – பும்ரா: கோவாவில் ரகசியத் திருமணம்? appeared first on MrPuyal Cinema.

3

தளபதி65 படத்தில் சிவகார்த்திகேயன்! படப்பிடிப்பு எப்போது?

0

நெல்சன் திலீப்குமார் இயக்கம் விஜய்யின் 65-வது படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் புதிய படத்திற்கு தளபதி65 என தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. சன்பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க பெரும் தொகையாக ரூ. 3.5 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டு உள்ளது. முதலில் ராஷ்மிகா மந்தன்னாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றுள்ளது.

ஆனால் பூஜா ஹெக்டே, பாலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டிலும் பாப்புலர் என்பதால் அவரையே இறுதி செய்துவிட்டது படக்குழு. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து ‘தளபதி 65’ படத்திற்கும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுத வேண்டும் என அனிருத் மற்றும் நெல்சன் கேட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயனும் ஒரு பாடல் எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அனேகமாக இந்தப்பாடலை விஜய் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்தவுடன் படப்பிடிப்பை துவங்குவது என படக்குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.

The post தளபதி65 படத்தில் சிவகார்த்திகேயன்! படப்பிடிப்பு எப்போது? appeared first on MrPuyal Cinema.

3

யாதும் ஊரே யாவரும் கேளிர்: இயக்குனருக்கே தெரியாமல் வெளியான டீசர்!

0

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் வெளியானது எனக்கே தெரியாது என படத்தின் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் எஸ்.இசக்கிதுரை இப்படத்தை தயாரித்துள்ளார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசர் மார்ச் 4-ம் தேதி வெளியானது. இந்த டீசர் வெளியானது எனக்கே தெரியாது நான் 45 நிமிடங்கள் கழித்தே டீசரை பார்த்தேன்.

இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.  உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக்கூடிய, நான் கட் செய்த டீசர் என்னிடம் இருக்கிறது.

டப்பிங், RR, DI பணிகள் முடியாமல் அப்படியே ராவாக உள்ளது. தயாரிப்பு தரப்போடு இந்த குளறுபடிக்கு அடிப்படைக் காரணம் பற்றி கேட்டிருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

வெங்கட கிருஷ்ணாவிற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் முதல் படம். அறிமுக படத்திலேயே தயாரிப்பு தரப்போடு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் யார் பக்கம் தவறு உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

The post யாதும் ஊரே யாவரும் கேளிர்: இயக்குனருக்கே தெரியாமல் வெளியான டீசர்! appeared first on MrPuyal Cinema.

3

தயாரிப்பாளரை கொள்ளையடித்த இயக்குனர் தம்பதி!

0

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, படத்தின் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்பிடம் இருந்து கார் ஒன்றை பரிசாக பெற்றார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்படாமல் வெளியானது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ஓரே ஒரு சஸ்பென்ஸ், மொத்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவிற்கு கனக்கச்சிதமாக திரைக்கதை அமைத்து இருந்தார் தேசிங்கு பெரியசாமி.

சமீபத்தில் தான் இவர் திருமணம் நடைபெற்றது. அவர் திருமணம் செய்தது வேறு யாரும் இல்லை படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த நிரஞ்சனி அகத்தியன் தான்.

படத்தில் நிரஞ்சனியின் ஜோடியாக ரக்ஷன் நடித்திருப்பார். அவர் காரணம் இல்லாமல் நடிக்கவில்லை. ரக்ஷனுக்கும், தேசிங்கிற்கும் ஓரளவு உருவ ஒற்றுமையுண்டு.

இதன் காரணமாகவே ரக்ஷனை நடிக்க வைத்தார். நிஜக்காதலை கொஞ்சம் படத்திலும் வைத்து அழகு பார்த்துள்ளார் தேசிங்கு பெரியசாமி.

தேசிங்கு பெரியசாமி மற்றும் நிரஞ்சனா அகத்தியன் இருவரும் தயாரிப்பாளர் மனதை கொள்ளையடித்ததால் இருவருக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் ஆண்டோ ஜோசப்.

அடுத்த படத்திற்கு இப்போதே அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணிட்டார் போல. சூப்பர் ஸ்டார் ரஜினியே ஒரு கதை ரெடி பண்ணச்சொல்லி போன் பண்ணியாச்சு. அப்புறம் என்ன? ஓரே ஜமாய் தான்!!

The post தயாரிப்பாளரை கொள்ளையடித்த இயக்குனர் தம்பதி! appeared first on MrPuyal Cinema.

3