Home Blog Page 6

வசந்த பஞ்சமி: சரஸ்வதி பூஜை ஏன் செய்ய வேண்டும்?

0
saraswati puja 2021 mantra vasant panchami

வசந்த பஞ்சமி என்றால் என்ன? சரஸ்வதி பூஜை ஏன் இன்று செய்ய வேண்டும்? Vasant Panchami saraswati puja 2021 muhurta and saraswathi pujai mantra.

வசந்த பஞ்சமி என்றால் என்ன?வசந்த பஞ்சமி எனப்படுவது தை மாதத்தில் அமாவாசை முடிந்து வரும் வளர்பிறை பஞ்சமி திதியே வசந்த பஞ்சமி எனப்படுகிறது.

வசந்த பஞ்சமியானது வட மாநிலங்களில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இதனை கொண்டாடுகின்றனர்.

வசந்த காலமே “அனைத்து காலங்களின் ராஜா” (King of all seasons) எனப்படுகிறது.

வடமாநிலங்களில் இந்த நாளை ஹோலி பண்டிகையை வரவேற்கும் விதமாக கொண்டாடுகின்றனர். வசந்த பஞ்சமியிலிருந்து நாற்பதாம் நாள் ஹோலி பண்டிகை வரும்.

வசந்த பஞ்சமியன்று வானில் பட்டங்களை விட்டு விளையாடி வசந்த காலத்தை வடக்கே உள்ள நகரங்களில் வரவேற்கின்றனர்.

டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, அசாம், வங்காளம், சிக்கிம், பஞ்சாப், மகாராட்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சட்டிஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் வசந்த பஞ்சமி கொண்டாடுகின்றனர்.

தென்னகத்தில் ஆந்திராவில் ஸ்ரீ பஞ்சமி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். நேபாளம், மேற்கு வங்கம், இந்தோனேசியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.

சரஸ்வதி ஜெயந்தி விழா

saraswathi pujai manthiram saraswati puja 2020 mantra

பிரம்ம பத்தினி என்று சொல்லப்படுகின்ற முப்பெரும் தேவியருள் ஒருவரான சரஸ்வதி தேவி அவதரித்த நாளே மகர மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி ஆகும். இதனை “வசந்த பஞ்சமி” மற்றும் “சரஸ்வதி ஜெயந்தி” விழாவாக கொண்டாடுகின்றனர்.

வாக் தேவி என்று சொல்லப்படுகின்ற சரஸ்வதி தேவி வாக்கு வன்மை, கல்வி, கலை, ஞானம், அறிவு, புத்தி கூர்மை, நல்லொழுக்கம், ஆளுமை ஆகிய அனைத்திற்கும் அதிதேவதை ஆவாள். இவளை வணங்குவதால் அஞ்ஞானம் நீங்கி மெய்ஞானம் வளரும்.

சரஸ்வதி தேவியின் தோற்றம்

saraswati puja 2020 mantra saraswathi pujai manthiram vasant panjami

சரஸ்வதி தூய்மையே வடிவானவள். வெந்நிற ஆடை உடுத்தி, வெள்ளை தாமரையில் அமர்திருப்பவள், கையில் ஞானத்தின் அம்சமாக வீணை, ஜெப மாலை, ஏட்டு சுவடி வைத்திருப்பவள். இவரின் வாகனம் அன்ன பறவை ஆகும்.

முப்பெரும் தேவியருள் முதன்மை ஆனவள் இவளே. பிரம்மனின் மனைவியானவள். இவளே சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி ஸ்வரூபமாக விளங்குகிறாள்.

சதா சர்வ காலமும் பிரம்மா இவள் மீட்டும் வீணை ஓசையைக் கேட்டு கொண்ட தன்னுடைய ஸ்ருஷ்டி தொழிலை செய்து வருகிறார். பிரம்மா சரஸ்வதிக்கு தமது நாவில் இடம் அளித்துள்ளார் என சொல்லப்படுகிறது.

சரஸ்வதியின் வேறுப் பெயர்கள்

வாக்தேவி, பாரதி, கலை செல்வி, ஞானவாகினி, கலைமகள், பிராஹ்மி, காயத்ரி, சாரதா, பூரவாகினி, சாவித்ரி, சகலகலாவல்லி, இசை மடந்தை, பாமகள், நாமகள், பனுவலாட்டி, வாணி, வேதா, கலைவாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

சரஸ்வதி இந்து மதம் மட்டுமன்றி புத்தம் மற்றும் சமண மதங்களில் பூஜிக்கப்படுகிறார்.

புத்த சமயத்தில் மகா சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, வஜ்ர வீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, ஆர்ய சரஸ்வதி என்று ஐந்து பெயர்களில் பூஜிக்கப்படுகிறார்.

சமண சமயத்தில் ஸ்ருதி தேவி, வாக் தேவி, ஜின வாணி, ஜின ஐஸ்வர்யா என்ற பெயர்களில் பூஜிக்கின்றனர்.

வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை

வட மாநிலங்களில் வசந்த பஞ்சமியானது சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகின்றனர். மஞ்சள் சரஸ்வதிக்கு உகந்த நிறமாக கருதி மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் நிற மலர்கள், மஞ்சள் நிற சாதங்கள், மஞ்சள் நிற இனிப்பு வகைகளை சரஸ்வதிக்கு சமர்பித்து பூஜைகள் செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு அட்சராபியாசம், வித்யாரம்பம் முதலியவை இந்நாளில் செய்கின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

வீட்டில் சரஸ்வதி பூஜை 

சரஸ்வதி பூஜை

வசந்த பஞ்சமி நாளில் வீட்டில் அதிகாலை நீராடி, மஞ்சள் நிற ஆடை உடுத்தி சரஸ்வதி படம் அல்லது சிலைக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபட வேண்டும்.

குழந்தைகள் அனைவரும் புத்தகங்களை வைத்து பூஜித்து பின் வரும் ஸ்லோகத்தை சொல்லலாம்.

“சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா”

“ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பாள் இங்கு வாரா திடர்”

இந்த ஸ்லோகங்களை சொல்லி வழிபடலாம். சரஸ்வதி அந்தாதி மற்றும் சகலகலாவல்லி மாலை பாராயணம் செய்யலாம்.

2021-இல் வசந்த பஞ்சமி

இந்த ஆண்டு பிப்ரவரி  மாதம் 16-ஆம் தேதி வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி அவதரித்த இந்த நல்ல நாளில் முடிந்தால் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயம் சென்று அல்லது அருகில் உள்ள கோவில்களில் உள்ள சரஸ்வதியை சென்று வணங்கலாம். இயலாதவர்கள் வீட்டில் இருந்த படி சரஸ்வதி தேவியைப் பூஜிக்கலாம்.

கல்வி கற்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சரஸ்வதி தேவியை இத்தினத்தில் வழிப்பட்டு எல்லா வளமும், கல்வி செல்வமும் பெற்று வாழ்வில் உயர்வோம்.

3

Valentine’s Day History; காதலர் தின வரலாறு

0
காதலர் தின வரலாறு Valentine’s Day History காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

Valentine’s Day History; காதலர் தின வரலாறு. valentine’s day week 2020. பிப்ரவரி 14 காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? வேலண்டைன் என்பவர் யார்?

வேலண்டைன்ஸ் டே (Valentine’s Day) அல்லது காதலர் தினம் உலகம் முழுவதும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

காதலர்கள் தங்களின் காதலை பரிசுகள், ரோஜா, சாக்லேட் அல்லது மோதிரம் கொடுத்து வெளிப்படுத்துகின்றனர்.

காதலர் தினம் என்பது பிப்ரவரி 14-ஆம் தேதி மட்டுமல்ல இந்த மாதம் முழுவதும் காதல் மாதம், காதலர் தின வாரம் (valentine’s day week 2020) எனக் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் இந்த தினம் வரும் பொழுது இந்த காலாச்சாரம் எப்படி எந்த நாட்டில் தோன்றியது என்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம் Valentine’s Day History பற்றி விரிவாகப் இப்பதிவில் காண்போம்.

ஏன் பிப்ரவரி 14-யை வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கிறார்கள்? காதலர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? யார் அந்த வேலண்டைன்? அவருக்கும் காதலர்களுக்கு என்ன சம்பந்தம்?

வேலண்டைன் என்பவர் யார்? (Valentine Priest)

வேலண்டைன்ஸ் என்பவர் யார்கிபி 270-ஆம்  ஆண்டு காலங்களில் வேலண்டைன் என்னும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் போர் வீரர்களுக்கு அவர்கள் விருப்படும் பெண்ணுடன் ரகசியத் திருமணம் செய்து வைத்தார்.

அப்பொழுது ஆட்சியில் இருந்த ரோம் மன்னர் இரண்டாம் கிளாடியஸ் பெண்களுடன் சேராமல் இருக்கும் வீரர்கள் அதிக சுறுசுறுப்பாக தெளிவாகவும் இருப்பதாக நினைத்து அனைவரையும் பிரித்து வைத்தாராம்.

இந்த நேரத்தில் பாதிரியார் வேலண்டைன் செய்த காரியம் தெரிந்து அவரை மரணதண்டனை கொடுத்து சிறையில் அடைத்தாராம் கிளாடியஸ் மன்னர்.

வேலண்டைன் தன்னை பார்க்க வந்த ஜெயிலர் மகளை விரும்பி, அவருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அக்கடிதத்தில், “ஃப்ரம் யுவர் வேலண்டைன் (from your valentine)” என்று எழுதி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுவே காதலர் தினத்திற்கு முதன்மை காரணமாக இருக்கலாம். இதனாலே இது வேலண்டைன் டே என்று அழைக்கிறார்கள்.

இது போன்று இன்னும் சில வரலாற்று நிகழ்வுகளும் காதலர் தின தோற்றதிற்கு சான்றாக அமைகிறது.

லூபேர்களியா (Lupercalia) 

ரோமன் மக்களின் பண்டிகைகளில் ஒன்றான லுபேர்களியா பிப்ரவரி மாதத்தின் நடுவில் கொண்டாடப்படும்.

வசந்த காலத்தை வரவேற்கவும் கல்யாணமான ஜோடிகள் தங்களுக்கு குழந்தை தரிக்கவும் கொண்டாடும் பண்டிகை இது. பிப்ரவரி அப்பொழுது ஒரு காதல் மாதமாகவே கடைபிடிக்கப்பட்டது.

ஐந்தாம் நூற்றாண்டில் போப் முதலாம் கேளாசியஸ் இதற்கு வேலண்டைன்ஸ் டே என்று பெயர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

Valentine’s Day Popular

1500-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கடிதங்களாகப் பகிரப்பட்டது. 1700-கள் அதற்கு மேல் வர்த்தக கவிதைகளுடன் பதிவு செய்யப்பட்ட கடிதங்கள் சந்தைக்கு வர ஆரம்பித்தன.

அதன் பிறகு அமெரிக்கா, யூரோப்பா மற்றும் ஆசியா என ஒவ்வொரு கண்டங்களாக இந்த கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது.

2012-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 200 மில்லியன் ரோஜாப் பூக்கள் விற்பனையானது என்று தெரிவித்துள்ளனர். 40 மில்லியன் ஹார்ட் ஷேப் சாக்லேட் பாக்ஸ்கள் விற்பனையாகியுள்ளது.

இப்பொழுது 2020-ல் அதிகம் டிஜிட்டல் மயமானதால் மாற்றங்கள் பல வந்திருக்கலாம். என்ன இருந்தாலும் காதலர் தினம் Valentine’s Day ஒரு கமர்ஷியல் விடுமுறை தான்.

3

காதலர் தினம்: ரோஸ் டே முதல் கிஸ் டே வரை – புல் அப்டேட்

2
காதலர் தினம் lovers day rose day kiss ரோஸ் டே

காதலர் தினம் (Valentines day): ரோஸ் டே (Rose day) முதல் கிஸ் டே (Kiss day) வரை – புல் அப்டேட். காதலர் தின வாரம் மற்றும் ஒவ்வொரு நாளின் விளக்கம்.

உலகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த காதலர்களும் காத்திருக்கும் ஒரு நாள் இந்த காதலர் தினம். காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி மட்டும் அவர்களுக்கு கொண்டாட்டம் இல்லை அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஆரம்பித்துவிடுகிறது.

காதலர் தின வாரம்

Rose day, Propose day, Chocolate day, Teddy day, Promise day, Hug day, Kiss day and Valentine’s day. இப்படி பிப்ரவரி 7-இல் ஆரம்பித்து பிப்ரவரி 14-ல் முடிவடைவதே காதலர் தின வாரம்.

இதோடு முடிவதில்லை. இதன் பிறகு ஆண்டி வேலண்டைன்ஸ் டே என்றும் கொண்டாடுகின்றனர். இந்தியாவில் இந்த வழக்கம் இல்லை.

Disclaimer

சிங்கில்ஸ் என்று அழைக்கப்படுகிற மொரட்டு சிங்கில்ஸ் யாரும் தயவு செய்து இந்த பதிவைப் படிக்க வேண்டாம். உங்களின் பிஞ்சு மனசு இதைத் தாங்காது.

ரோஸ் டே (Rose Day)

பிப்ரவரி 7-ஆம் தேதி ரோஜா பூ பகிர்ந்து தங்கள் காதலை வெளிப்படுத்தும் முதல் நாள் இதுவாகும். ஏற்கனவே காதல் செய்வோரும் புதிதாக காதலை தொடங்கவிருப்போரும் இதை செய்ய முயற்சிப்பார்கள்.

புரபோஸ் டே (Propose Day)

பிப்ரவரி 8-ஆம் தேதி தங்கள் காதலை செய்தி, சமூக வலைதளங்கள், மோதிரம் அல்லது சர்ப்ரைஸ் மூலமோ வெளிப்படுத்தும் நாள் இது.

சாக்கலேட் டே (Chocolate Day)

பிப்ரவரி 9-ஆம் நாள் சாக்லேட் என்றால் பெண்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சாக்லேட் மட்டுமின்றி பிற இனிப்பு உணவு வகைகளும் பகிர்ந்துகொள்ளும் நாள் இது.

டெட்டீ டே (Teddy Day)

பிப்ரவரி 10-ஆம் தேதி மிகவும் அழகான பெண்களுக்குப் பிடித்த ஒரு பரிசு இந்த டெட்டீ கரடி பொம்மையை பரிசளிப்பார்களாம்.

இதை கரடி என்று சொன்னால் கூட கோபப்படுவார்கள் அப்படி இதில் என்னதான் இருக்கிறதோ.

பிராமிஸ் டே (Promise Day)

பிப்ரவரி 11-ஆம் நாள் காதலர் இருவர்களுக்கு இடையில் சத்தியம் செய்து தங்கள் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வார்களாம். இதுவும் இருவரின் பரிசளிப்பின் மூலமே நடைபெறும்.

ஹக் டே (Hug Day)

பிப்ரவரி 12-ஆம் நாள் கட்டிபிடி வைத்தியம் போல் இருவரும் கட்டி அனைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிறார்கள். இதில் இரு உடலுடன் மனமும் இணைகிறது.

கிஸ் டே (Kiss Day)

பிப்ரவரி 13-ஆம் நாள் நெற்றியில் ஆரம்பித்து உதடு வரை செல்லும் இந்த முத்தப்போரில் இருவருக்கும் இடையில் கடமையும் நம்பிக்கையும் அதிகரிக்குமாம்.

வேலண்டைன்ஸ் டே (Valentine’s Day)

பிப்ரவரி 14-ஆம் நாள் மேலே நான் சொன்ன அனைத்தையும் மீண்டும் இந்த நாளில் ஒத்திகை பார்ப்பார்கள். என்ன டா மறுபடியும் மொதல்ல இருந்த என்று யோசிக்க வேண்டாம்.

இந்த புனித உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நபரிடமும் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள். இந்த பிரபஞ்சத்தில் காதலை ஒரு முறையாவது அனுபவிக்காத உயிரினமே இருக்காது.

3

Master Movie Review in Tamil | மாஸ்டர் திரை விமர்சனம்

0
Master Movie Review in Tamil | மாஸ்டர் திரை விமர்சனம் டவுன்லோட் download tamilrockers

Master Movie Review in Tamil லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள படம் மாஸ்டர் (திரை விமர்சனம்).

Master Movie Review in tamil | மாஸ்டர் திரை விமர்சனம்

கல்லூரி புரபசராக அறிமுகமாகும் விஜய், கல்லூரி மாணவன் போல் வலம் வருகிறார். மாணவர்கள் மத்தியில் ஹீரோவாக உள்ள விஜய், புரபசர்கள் (ஆண்) பார்வைக்கு ஜீரோவாக தெரிகிறார்.

இரண்டு, மூன்று முறை மட்டுமே விஜய்யை பார்த்த மாளவிகா மோகனன், விஜய் தான் தன்னுடைய திட்டத்திற்கு சரியான ஆள் என முடிவு செய்கிறார்.

விஜய்க்கே தெரியாமல் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்.அங்கு சென்றதும் பவானி என்கிற விஜய் சேதுபதியை பற்றி தெரிந்து கொள்கிறார்.

அதுவரை ஜாக் டேனியஸ் என்ற JD யாக குடித்துக் கூத்தடிக்கும் விஜய் இரண்டு மாணவர்கள் இறந்த உடன் ஜாக் டேனியஸ் பாட்டிலை உடைத்து விட்டு ஜான் துரைராஜ் என்ற JD-யாக மாறுகின்றார்.

படத்தின் நிறைகள்

படத்தின் நிறை என்று சொன்னால் பாடல்களும், பின்னணி இசை மட்டும் தான். விஜய்யின் ஒரு சில காட்சிகள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.

விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம், அதுவும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே சிறப்பாக இருந்தது. ஜூனியர் பவானியாக நடித்த மகேந்திரன் காட்சிகள் மிக அருமை.

படத்தின் குறைகள்

கதை, திரைக்கதை இரண்டும் இந்தப்படத்திற்கு பெரிய பின்னடைவு. நிறைய நடிகை நடிகையர்கள் இந்த படத்தில் இருந்தும் அவர்களை ஊறுகாய் போன்றே பயன்படுத்தி உள்ளனர்.

மாநகரம், கைதி என்று சாதாரண கதைகளை கூட பிரமிப்பாக காட்டிய லோகேஷ் கனகராஜ், பிரமிப்பான ஹீரோக்களை வைத்து டம்மியாக இயக்கியுள்ளார்.

மொத்தத்தில் மாஸ்டர் படம், விஜய்-விஜய்சேதுபதி இருவரையும் வைத்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் என்ற இயக்குனரையும் இணைத்துக் கொண்டு கல்லாக்கட்ட வேண்டும் என அவசரகதியாக எடுக்கப்பட்ட படம்.

இதுவே இப்படத்தின் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்து விட்டது. படம் வெளியான 15-நாட்களில் அமேசான் பிரைமில் வெளியாகி விட்டது.

பாவ கதைகள் விமர்சனம் | Pava Kadhaigal Segment Thangam Review 

Directed by Lokesh Kanagaraj
Produced by Xavier Britto
Screenplay by Lokesh Kanagaraj
Rathna Kumar
Pon Parthiban
Story by Lokesh Kanagaraj
Starring Vijay
Vijay Sethupathi
Music by Anirudh Ravichander
Cinematography Sathyan Sooryan
Edited by Philomin Raj
Production company XB Film Creators
Distributed by Seven Screen Studios
Release date 13 January 2021
Running time 179 minutes (theatrical)
180 minutes (uncut)
Country India
Language Tamil
Budget ₹135 crore

 

Master movie watch online hd movie download in amazon prime

3

கிருஷ்ணன் கோவில்: 2 நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்!

0
Thiruvarppu Krishna Temple கிருஷ்ணன் கோவில்: 2 நிமிடம் அதிசயக் கோவில்! கேரளா மாநிலம் திருவார்ப்பு

கிருஷ்ணன் கோவில் (Thiruvarppu Krishna Temple): ஒரு நாளில் 2 நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்!  கருவறை கதவு திறக்கும்போது, அர்சகர் கையில் கோடரியுடன் இருப்பார்!

ஆலிலையில் மீது துயிலும் மாதவனை தம் வீட்டு குழந்தையாகவே மக்கள் எண்ணி இன்றளவும் அவனை கொஞ்சி மகிழ்ந்து வருகின்றனர்.

கார்மேகம் போன்ற நிறத்தை உடைய கிருஷ்ணனின் பால பருவ லீலைகள் பல உண்டு. அதனை எண்ணும் போதே மனம் நெகிழ்ந்து பரவசமடையும்.

அப்படிப்பட்ட கிருஷ்ணன் கம்சனை கொன்ற பின்பு சினமும், பசியும் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதே ஸ்வரூபத்துடன் இன்றும் காட்சியளிக்கும் இடமே திருவார்ப்பூ கிருஷ்ணன் கோவில்.

பசியுடன் இருக்கும் கிருஷ்ணன்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவில் திருவார்பு கிருஷ்ணன் கோவில் ஆகும்.

பஞ்ச பாண்வடர்கள் வனவாச காலத்தில் கிருஷ்ண விக்ரகம் ஒன்றை வழிபட்டு வந்ததாகவும். அப்படி வழிப்பட்ட விக்ரகத்தை வனவாசம் முடிந்த பின் மக்களின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே கொடுத்து விட்டு சென்றதாகவும் கூறுகின்றனர்.

இங்கே கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் வலது கையில் உணவுடன் காட்சி தருகிறார். பின் கைகளில் சங்கு, சக்கரம் தாங்கி உள்ளார். கடற்கரையில் மீனாட்சி ஆற்றின் கரையில் கோவில் உள்ளது.

கிருஷ்ணன் கம்சனை கொன்ற பிறகு சினமும் பசியும் தீராமல் இருந்த ஸ்வரூபமாக இங்கு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே இங்கே கிருஷ்ணன் எப்போதும் பசியுடனே இருப்பதாக நம்பப்படுகிறது.

2 நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்!

உலகில் வேறு எங்கும் இல்லாத வண்ணம் ஒரு நாளில் 2 நிமிடம் மட்டுமே கருவறை மூடப்படுகிறது. காரணம் கிருஷ்ணன் எப்போதும் பசியோடு இருப்பதால் அவருக்கு உணவு வழங்கப்பட்டு கொண்டே இருக்க வேண்டும்.

கிருஷ்ணனின் அபிஷேகத்தின் போதும் தலை முதலில் உலர்த்தப்படும். பின் உஷா பாயசம் நைவேத்தியம் வழங்கப்படும். அதன் பின்பே உடல் உலர்த்தப்படுகிறது.

கால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில்!

இவ்வாறு அனைத்து நேரங்களிலும் கிருஷ்ணன் பசியோடு இருப்பதினால் கோவில் மூடப்படுவதே இல்லை.

23.58×7 என்ற கணக்கில் வருடம் 365 நாட்களும் திறந்து இருக்கும். சூரிய, சந்திர கிரகணத்தின் போதும் திறந்தே இருக்கும்.

ஒரு முறை கிரகணத்தின் போது கருவறை மூடப்பட்டு திறந்த போது மூலவரின் இடுப்பில் இருந்த ஆபரணங்கள் விழகி இருந்தது. இடுப்பில் ஆடைகள் தளர்ந்து இருந்தது.

இதனை கண்ட ஆதி சங்கரர் கிருஷ்ணன் பசியோடு இருப்பதால் தான் இப்படி ஆனது என்று கூறினார். அன்றிலிருந்து கிரகணத்தின் போதும் கோவில் மூடப்படுவது இல்லை.

இரண்டு நிமிடங்கள் கழித்து திறக்கும் போது அர்ச்சகர் கையில் கோடாரியோடு திறப்பார். காரணம் ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்க தாமதம் ஆனால் கோடாரி துணையோடு கதவை உடைக்க அனுமதி உண்டு.

கிருஷ்ணன் குழந்தையல்லவா பசி தாங்கமாட்டார் என்பதற்காக தான் இந்த நடைமுறை. நடை சாத்தப்படுவதற்கு முன் அர்ச்சகர் வெளியே வந்து “ இங்கே யாராவது பசியோடு இருக்கின்றீர்களா?” என்று கேட்பார்.

அப்போது நாம் சென்று அந்த பிரசாதத்தை வாங்கி உண்டால் வாழ்நாள் முழுவதும் பசிப்பிணி இருக்காது.

நள்ளிரவு 2 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கேரளாவில் 2 மணிக்கு திறக்கப்படும் கோவில் இது ஒன்று தான் என்று கூறப்படுகிறது.

பக்தர்கள் தரிசன நேரம்: இரவு 2 முதல் நன்பகல் 1 வரை. மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.

அமைவிடம்: Thiruvarppu Krishna Temple கேரள மாநிலம் கோட்டையத்தில் இருந்து வடமேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவார்ப்பு என்ற இடத்தில் உள்ளது.

3

Best Tamil Movies 2020 | சிறந்த படங்கள் 2020

3
Best Tamil Movies சிறந்த படங்கள் Must watched tamil movies in 2020

Best Tamil Movies 2020 – சிறந்த படங்கள் 2020 இது டாப் 10 மூவி (Top 10 Tamil Movies 2020) லிஸ்ட் அல்ல. Must watched tamil movies in 2020.

2020-ல் மிகக் குறைந்த அளவிலான படங்கள் மட்டுமே வெளிவந்தது. அதில் நாங்கள் பார்த்த படங்களில் சிறந்த படங்களை இங்கே பட்டியல் செய்து உள்ளோம்.

இவை வசூல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல. புதிய முயற்சி, புதிய கதை, திரைக்கதை, விறுவிறுப்பு போன்றவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்து உள்ளோம்.

இது டாப் 10 மூவி (Top 10 Tamil Movies 2020) லிஸ்ட் அல்ல. ரிலீஸ் தேதி வாரியாக வரிசைப்படுத்தியுள்ளோம். இந்தப் படங்கள் எல்லாம் பார்க்க வேண்டிய படங்கள். 

திரையரங்கில் மட்டும் அல்லாமல் இந்த முறை ஓடிடி தளங்களிலும் அநேக படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சிறந்த படத்தையும் இதில் இணைத்து உள்ளோம்.

சைக்கோ – Psycho

மிஸ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் சைக்கோ. வில்லன் ராஜ்குமார் பிச்சமணியை முன்னிலைப்படுத்தி தான் சைக்கோ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற உதயநிதி எப்படி சைக்கோவிடம் இருந்து காதலியைக் காப்பாற்றுகிறான் என்பதே கதை. படத்தில் உதயநிதி எப்போதும் கண்ணாடி தான் அணிவாரா? என இந்தப் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன.

இருப்பினும், படம் ரசிக்கும் படியாகவே விறுவிறுப்பாக செல்லும். அதேவேளை இது மற்ற மிஸ்கின் படங்களை விட சுமார் தான்.

வானம் கொட்டட்டும்  – Vaanam Kottatum

சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், தனசேகரன் இயக்கத்தில், மணிரத்னம் தயாரிப்பில் வெளிவந்த படம்.

மணிரத்னம் தயாரிப்பு என்றாலும், படம் அவரின் டெம்ளேட் வரையறைக்குள் எடுக்கப்பட்டு இருந்தது. இந்தப் படம் ஒரு அவரேஜ் மூவி தான். சரத்குமார்-ராதிகா இருவருக்கும் ஒரு நல்ல கம்பேக் மூவி.

பாரம் – Baaram

இயக்குனர் ப்ரியா கிருஷ்ண சுவாமி, ஒரு எதார்த்தமான வாழ்க்கை அவலத்தை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்துள்ள படம் பாரம்.

பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக்கூடாது என வெளியூர் சென்றாலும் விதியை மாற்ற முடியவில்லை. கால் உடைந்து மகன் வீட்டிற்கே வந்து பாரமாக மாறுகிறார் தந்தை.

மகனுக்கு கவுரவக் குறைச்சல் வந்து விடும் என தந்தையை அத்தை வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறான். அதேவேளை வைத்தியம் செய்ய கையில் பணம் இல்லை.

இதனால் தந்தையை ‘தலைக்கூத்தல்’ முறைப்படி கொலை செய்து விடுகிறான். இதை அறிந்த அத்தை மகன் தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சி செய்கிறான்.

ஊரே அம்மணமாக இருக்கும்போது நாம் மட்டும் ஆடை அணிந்தால் பைத்தியம் என்பார்கள் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப தண்டனை வாங்கிக்கொடுக்க முடியவில்லை.

இந்த எதார்த்த உண்மை வாழ்க்கையை, நம் கண்முன் கொண்டு வந்துள்ளார் பிரியா கிருஷ்ண சுவாமி.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – Kannum Kannum Kollaiyadithaal


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – திரைவிமர்சனம்

2020-ன் பக்கா சஸ்பென்ஸ் ட்விஸ்டர் எண்டர்டெயின்மென்ட் மூவி. இந்த படத்தின் பலமே யாரும் எதிர்பாராத நேரத்தில் நிகழும் ட்விஸ்ட் தான்.

அந்த ட்விஸ்டுக்கு முன்பு வரை இதெல்லாம் ஒரு படமா எனத் தோன்றும், அந்த ட்விஸ்டுக்கு பிறகு அடடே இதல்லவோ படம் என வியக்கவைத்து விட்டார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி.

படத்தின் பாடல்கள் இந்த வருடம் முணுமுணுக்காத மார்டன் இளைஞர்களே இருக்க முடியாது. இயக்குனர் கவுதம் மேனனை படத்தின் கிளைமேக்ஸில் காமெடியனாக மாற்றியது உச்சகட்ட சஸ்பென்ஸ்.

ஒரு சஸ்பென்சுக்கு எல்லாம் படம் ஓடுமா எனக் கேட்டால் அதை நிகழ்த்திக்கட்டியுள்ளது KKK. தமிழில் துல்கர் சல்மானுக்கு ஒரு நல்ல கம்பேக் படம். ரக்ஷனுக்கு ஒரு நல்ல மைல் கல். 

செத்தும் ஆயிரம் பொன் – Sethum Aayiram Pon

ஒரு சென்னை மார்டன் பொண்ணு சிகரெட் பழக்கத்துடன் வேண்டா வெறுப்பாக தன் பாட்டி இருக்கும் கிராமத்திற்கு வருகிறாள்.

சிறுவயதில் சென்றவள் மீண்டும் குமாரியான பின்பு வருகிறாள். வந்த பின்பு அவளுக்கு அந்த ஊரும் பாட்டியும் பிடித்துப்போகிறது.

சில நாட்கள் தான் பாட்டி வீட்டில் இருந்தாலும், பிரியா விடையாக மீண்டும் சென்னை செல்கிறாள். அதன்பிறகு பாட்டி இறந்ததை கேள்வி பட்டு மீண்டும் ஊருக்கு வருகிறாள்.

இது ஒரு ஆர்ட் மூவி. ஆர்ட் பிலிம் விரும்பிகளுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்.  இந்தப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸ்-ல் வெளியிடப்பட்டது.

பொன்மகள் வந்தாள் – Ponmagal Vandhal

“பொன்மகள் வந்தாள்” – ஒரு விமர்சனம்

பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் பொன்மகள் வந்தாள் . இந்தப்படமும் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியிடப்பட்ட படம்.

சமுதாய அந்தஸ்திற்காக மகன் செய்த குற்றத்தை மறைத்த தந்தையை, மகனால் பாலியல் சீண்டலுக்கு ஆளான சிறுமி ஜோதிகா வளர்த்த பின் ரிவஞ் எடுக்கும் கதையே பொன்மகள் வந்தாள்.

படித்து லாயராக மாறி, குற்றவாளியை சட்டத்தின் கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்கிறாள். படமும் சுவாரஸ்யத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சம் இல்லாமல் செல்லும்.

புத்தம் புது காலை – Putham Pudhu Kaalai

புத்தம்புது காலை ஒரு அந்தாலஜி படம். நேரடியாக அமேசன் பிரைமில் வெளியிடப்பட்டது. இதுவும் வாழ்க்கை எதார்த்தங்களை அடிப்படையாக கொண்ட ஐந்து கதைகளாக வெளிவந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பகுதி கொஞ்ச காமெடி கலந்த ட்விஸ்ட் கதையாக இருக்கும்.

சூரரைப் போற்று – Soorarai Pottru

சூரரைப் போற்று விமர்சனம்

இந்த வருடத்தில் வெளிவந்த மிகப்பெரிய ஸ்டார் படம். கொரோனாவால் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகியது.

படம் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் உந்துதலாக அமையும். இந்தப்படம் கோபிநாத்தின் வாழ்க்கையின் கருவை மையமாக வைத்து செயற்கையாக எழுதப்பட்ட கதை.

படத்தின் ஓவ்வொரு காட்சிகளும் நம்மை ஏதாவது ஒன்று செய்கிறது. அதற்கு முக்கிய பலம் இசை, திரைக்கதை. மாறன் இந்த வருட இளைஞர்களின் கொண்டாட்ட நாயகன்.

இறுதிச்சுற்று அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு பெண் இயக்குனர், ஆண் இயக்குனர்களுக்கு இணையாக (வசூல் ரீதியாகவும்) வெற்றிப்படம் கொடுக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் சுதா கொங்கரா.

அந்தகாரம் – Andhaghaaram

அந்தகாரம் இந்த படம் நேரடியாக நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகிய படம். அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான் நடிப்பில் விக்னராஜன் இயக்கிய படம்.

இது ஒரு ஆவிகள் பற்றிய கதை தான் என்றாலும் சற்று வித்தியாசமான படம். படத்தை நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். 

பாவ கதைகள் – Paava Kathaigal

பாவ கதைகள் விமர்சனம்

பாவக் கதைகள் நெட்பிலிக்ஸ்-ல் வெளியான அந்தாலஜி படம். நான்கு கதைகள், நான்கு இயக்குனர்களால் இயக்கப்பட்ட படம்.

நான்கு கதைகளும் எதார்த்த வாழ்வியலை மையமாகக் கொண்டு உள்ளது. சஸ்பென்ஸ், விறுவிறுப்பு, ரொமான்ஸ் என கலந்து உருவாக்கப்பட்டு உள்ளது.

ஓவ்வொரு கதையும் குலைநடுங்க வைக்கும் குற்றங்களின் பின்னணிகளை கொண்டு உள்ளது. பாவக் கதைகள் இந்த ஆண்டு ஓடிடியில் வெளிவந்த சிறந்த தமிழ் படம் எனக் கூறலாம்.

ஏகே vs ஏகே – AK vs AK

AK vs AK Movie Review Tamil – ஏகே vs ஏகே விமர்சனம்

அனுராக் காஷ்யப் vs அனில் கபூர் இந்தப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகியுள்ளது. இது வழக்கமான சினிமா படம் அல்ல.

லைவ் ஆக்ஷன் திரைப்படம். நேரடியாக நடிக்கும்போதே லைவ்வாக எடுக்கப்பட்ட படம். படத்தில் சில இடங்களில் மட்டுமே கட் செய்யப்பட்டு இருக்கும்.

மேலும் இதில் உள்ள கதாப்பாத்திரம் அனைத்தும் ரியலாகவே தோன்றியுள்ளனர். அனுராக், அனில் கபூர் மகளை கடத்தி வைத்துக் கொண்டு ஒரு இரவில் கண்டுபிடிக்க வேண்டும் என அனில் கபூருக்கு கட்டளை இடுகிறார்.

இதுதான் இந்தப்படத்தின் சிறப்பே. படம் ஹிந்தி, தமிழ் என நான்கு மொழிகளில் வெளிவந்துள்ளது. டேக்கன் படம் பார்த்தவர்களுக்கு இந்தக் கதை ஒன்றும் புதிதல்ல.

ஆனால் அதை ரியாலாக செய்வது போன்று திரைக்கதை அமைத்த விதம் புதுமை. இந்தப்படம் பார்பவர்களுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவம் கிடைக்கும்.

நாங்கள் பார்த்தவரை சிறந்த படங்கள் 2020 (Best Tamil Movies 2020) பட்டியல் இட்டு உள்ளோம். இதில் ஏதேனும் படங்கள் விடுபட்டு இருந்தால் (Must watched tamil movies) கமெண்டில் பதிவு செய்யவும்.

3

AK vs AK Movie Review Tamil – ஏகே vs ஏகே விமர்சனம் – Netflix

3

AK vs AK Movie Review in Tamil. நெட்பிலிக்ஸ் (Netflix)-ல் வெளியாகிய ஏகே vs ஏகே படத்தின் விமர்சனம். Anil Kapoor vs Anurag Kashyap full movie live shooting available netflix.

சாயங்காலம் தான் நெட்பிலிக்ஸ் பக்கம் போக டைம் கிடைச்சது. ஓபன் பண்ணதும் ஏகே vs ஏகே (AK vs AK)னு ஒரு படத்தை காட்டிச்சு.

AK vs AK Movie Review | Anurag and Anil, hats off for their new venture in Indian cinema

போஸ்டர்ல அனுராக் கஷ்யப். அட நம்ம தல படம் போலன்னு நேர கிளிக் பண்ணி பாக்க ஆரம்பிச்சுட்டேன். ஓபன் பண்ணா, கோ..தா ஏதோ டாக்குமென்டரி போல, கொலையா கொல்லப்போரனுங்கன்னு தான் நினச்சேன்.

பாவ கதைகள் விமர்சனம் | Pava Kadhaigal Segment Thangam Review 

சத்தியமா சொல்லுறேன் பார்ன் ஸ்டார் டாக்குமென்டரி கூட இவ்ளோ விறுவிறுப்பா இருக்காது. ஒரு நைட் அனுராக்-கபூர் பக்கத்துல இருந்தா எப்டி இருக்குமோ, அதவிட பிரமாதமா இருக்கு.

இது டாக்குமெண்டரி இல்ல… படம்… லூசு கூ.. அனுராக் ஏதோ திரும்ப கிறுக்கு கூ.. தனமா எடுத்துருக்கான் போலன்னு தான் நெனச்சு படம் புல்லா பார்த்து முடிச்சேன்.

அப்புறம் தான் தெரியுது இயக்குனர் அனுராக் இல்லன்னு. Vikramaditya Motwane இவரு தான்பா இந்த படத்தோட டைரக்டர்.

இந்தப்படமே ஒரு புது முயற்சி. லைவ்வா சூட் பண்ணிருக்கு. எல்லாமே ரியலா பண்ணிருக்காங்கன்னு.. நம்மல கடைசி வர நம்ப வச்சது தான் படத்தோட பலம்.

இடையே, இது ரியல் இல்ல ரீல்ன்னு தோணுனாலும் அடுத்தடுத்த சீன்ல ஏய் உண்மையா அடிச்சிக்கிறானுங்க லூசுக்கூ…கன்னு நம்மல நினைக்க வச்சிருக்காங்க.

ஏன்டா ஒரே கெட்ட வார்த்தையா பேசிட்டு இருக்கேன்னு பாக்குறீங்களா. அப்படித்தான் படம் பூராம் வரும். ak ரெண்டு பேரும் அசிங்க அசிங்கமா திட்டிக்கிரானுங்க. குடும்பத்தையும் விட்டு வைக்கலை.

லூசு பு.. மாறி பேசாம ஒழுங்கா ரிவியூ பண்ணுடா சொல்லுறீங்களா? சரி நம்ம ரிவியூ பத்தி பாப்போம்.

படம் எப்டி இருக்கு? AK vs AK Movie Review in Tamil

Anil Kapoor vs Anurag Kashyap சத்தியமா இப்படி ஒரு படம் எடுக்கப்போறதா யாருக்குமே தெரியாது போல. இன்னும் விக்கிபிடியாவுக்கு கூட தெரியாது.

நேர நெட்பிலிக்ஸ்ல ரிலீஸ் பண்ணிட்டாங்க. இந்த படம் ஒரு புது வித அனுபவம் தான் என்று சொல்லணும். படத்துல அவங்க பாட்டு நடிச்சுட்டு இருக்காங்க, நானும் டீ குடிச்சேன், பாத்ரூம் போனேன், இப்படி அப்டின்னு நடந்துகிட்டே படம் பார்த்த அனுபவம் ஒரு தனி அனுபவம் தான்.

கடைசி வரைக்கும் இத.. நான் வழக்கமான ரிவியூவா எழுதப்போறது இல்ல. ஏன்னா.. என்னையும் இந்த படம் ஒரு கிறுக்கனா மாத்திருச்சு..

நவாசுதீன் சித்திக் படத்த பார்த்ததுக்கு அப்புறம், உங்க பங்காளி சண்டையில என்ன ஏன்டா இழுக்குரீங்கன்னு கண்டிப்பா சிருச்சே செத்துருவாப்ல.

படத்துக்கு ஆஸ்கர் குடுக்குரானுங்களோ இல்லையோ, விட்டா இவனுங்களே புடுங்கிப்பானுங்க போல. படத்துல போனிக்கபூர் வேற வர்ராரு.

இந்த படத்த அஜித் ரசிகர் பார்த்தால்? ஏப்பா போனி.. ஏகேன்னு பேரு வச்சிட்டு அஜித் குமார் பேர சொல்லாம விட்டுட்டியேப்பா. அவரும் ஏகே தானன்னு நெட்பிலிக்ஸ் சர்வருக்குள்ள புகுந்து “வலிமை‘ எப்ப வரும் கேட்டாலும் கேப்பாங்க.

நீங்க அனுராக் ரசிகர்ன இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். அனில் கபூர்-அனுராக் ரெண்டு பேரவும் யாருனே தெரியாதுன்னா…  ப்ளீஸ் படத்த பாக்காதீங்க…

3

உலகின் மிக நீளமான அணை எது?

0
Hirakud Dam உலகின் மிக நீளமான அணை எது? ulagin miga neelamana nilamana

உலகின் மிக நீளமான அணை எது? அணை எங்கு உள்ளது? நீளமான அணையின் பெயர் என்ன? ulagin miga nilamana anai ethu? world longest length dam.

உலகின் மிக நீளமான அணை இந்தியாவில் தான் உள்ளது. ஃகீராக்குது அணை (Hirakud Dam) கொள்ளளவின் அடிப்படையில் சிறியது. நீளத்தின் அடிப்படையில் பெரியது.

உலகின் மிகப்பெரிய தீவு எது? | டப் 10 பட்டியல் 

ஹிராகுட் அணை – Hirakud Dam (ஃகீராக்குது அணை)

ஹிராகுட் அணையின் மொத்த நீளம் 4.8 கி.மீ. (3 மைல்). அணையின் உயரம் 60.96 மீட்டர். ஓடிஸா மாநிலத்தில் சாம்பல்பூர் என்ற இடத்தில் அமைந்து உள்ளது.

மகாநதி ஆறு தடுக்கப்பட்டு ஹிராகுட் அணை கட்டப்பட்டு உள்ளது. 55 கிலோ மீட்டர் சுற்றளவில் நீர்பிடிப்பு பகுதியை கொண்டு உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கட்டப்பட்ட முதல் பெரிய அணை. 1948-ல் துவங்கப்பட்ட அணை 1953-ல் கட்டி முடிக்கப்பட்டது. 1957-ல் ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார்.

ஹிராகுட் அணை வரலாறு (Hirakud Dam History in Tamil)

1936-ஆம் ஆண்டு மகாநதி படுகையில் மிகப்பெரிய வெள்ளப் பேரழிவு ஏற்பட்டது. வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க பொறியாளார் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா மகாநதியில் அணை கட்ட பரிந்துரை செய்தார்.

மகாநதி ஆறு ஹிராகுட் அணை வரலாறு மோக்சகுண்டம் விசுவேசுவராய்யா Mokshagundam Visvesvaraya

யார் இந்த விசுவேசுவரய்யா?

காவிரியில் கிருஷ்ண சாகர் டாம் கட்ட முக்கிய காரணமாக விளங்கியவர் கர்நாடகாவைச் சேர்ந்த மோக்சகுண்டம் விசுவேசுவராய்யா (Mokshagundam Visvesvaraya).

செப்டம்பர் 15 இவரின் பிறந்தநாள் இந்திய பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் அன்று அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

1945-ல் தொழிலாளர் உறுப்பினர் டாக்டர்.அம்பேத்கார் தலைமையில் பல்நோக்க திட்டத்திற்காக மகாநதியில் அணை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

1946-ல் ஒடிசா ஆளுநராக பதவி வகித்த சர் ஆதோரன் இலூயிஸ் என்பவர் ஈராக்குது அணை கட்ட அடிக்கல் நாட்டினார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் பிரதமர் ஜவர்கர்லால் நேரு 1948-ல் முதல் தொகுதி கட்டுமானப்பணியைத் துவங்கி வைத்தார். 1953-ல் கட்டிமுடிக்கப்பட்டு 1957-ல் நேருவால் அணை திறக்கப்பட்டது.

அப்போதைய மதிப்பில் 1 பில்லியன் ரூபாய் பொருட்செலவில் அணை கட்டிமுடிக்கப்பட்டது. இதுவே இன்று வரை உலக அளவில் நீளமான (4.8km) சுவர் கொண்ட அணையாகும்.

உலகின் மிக நீளமான ஆறுகள் டாப் 10 பட்டியல்
உலகின் மிக நீளமான 3டி பாலம் – சீனா சாதனை
உலகில் நீளமான கடற்கரைகள் டாப் 10 பட்டியல்
3

கிறிஸ்துமஸ் மரம் வரலாறு | கிறிஸ்துமஸ் மரம் உண்மை பெயர் என்ன?

2
கிறிஸ்துமஸ் மரம் வரலாறு | கிறிஸ்துமஸ் ட்ரீ உண்மை பெயர் என்ன? கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்துமஸ் மரம் வரலாறு என்று நிறைய கதைகள் உண்டு. அதில் எது உண்மை? உண்மையான கிறிஸ்துமஸ் ட்ரீ பெயர் என்ன? christmas tree real name.

இப்படி உங்கள் மனதில் கிறிஸ்துமஸ் நாள் அன்று பலருக்கும் சந்தேகம் எழும். கிறிஸ்துவர்கள் அருகில் வசிக்கும் வேற்று மதத்தினர் சற்று வியப்புடனே கிறிஸ்துமஸ் தினத்தைப் பார்ப்பார்கள்.

ஏன் என்றால்? கிறிஸ்துமஸ் தினம் மேலை நாட்டு பழக்க வழக்கங்களைக் கொண்டு இருக்கும். டிசம்பர் மாதம் பிறந்த உடனே வீட்டு வாசலில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தொங்க விடப்பட்டு இருக்கும்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா? கிரேட் கன்ஜெக்சன் என்றால் என்ன?

கிறிஸ்துமஸ் தினம் நெருங்க நெருங்க வீடுகளில் குடில் அமைத்து இருப்பார்கள். கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 24-ம் தேதி அன்றே திருப்பலி நடத்துவார்கள்.

அன்று கிறிஸ்துமஸ் தாத்தா ஒவ்வொரு வீடாகச் சென்று குழந்தைகளைக் குதுகலப்படுத்துவார். கிறிஸ்துமஸ் குடில்களில் நிறை பொம்மைகள் இடம் பெற்று இருக்கும்.

கிறிஸ்துமஸ் தாத்தா கதை உருவான வரலாறு! சிவப்பு ஆடை ஏன் அணிகிறார்?

இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததையும், தேவ தூதர்கள் தோன்றியதையும், இயேசுவை ஞானிகள் மாட்டுத்தொழுவத்தில் கண்டதையும் குறிப்பிடும் விதமாக குடிலில் பொம்மைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

குடிலின் அருகே கிறிஸ்துமஸ் மரம் என்ற ஒன்று இருக்கும். அதில் வண்ண விளக்குகள் இடம் பெற்று இருக்கும். அதன் உச்சியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் ஒன்றும் இருக்கும்.

கிறிஸ்துமஸ் மரம் தோன்றிய வரலாறு

கிறிஸ்துமஸ் மரம் என்ற உடன் அனைவரும் முதலில் சொல்லும் கதை போனிபோஸ் பாதிரியார் ஓக் மரத்தை வெட்டி வீழ்த்திய கதை.

கிபி 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த போனிபோஸ் என்ற பாதிரியார் ஒருவர் ஜெபக்கூட்டத்திற்கு சென்று திரும்பியபோது, ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் ஓக் மரத்தை வழிபடுவதை கண்டார்.

இயேசுவை விட்டுவிட்டு மக்கள் ஓக் மரத்தை வழிபடுவதைக் கண்டு கோபம் கொண்ட பாதிரியார் அதை வேறோடு பிடிங்கி எறியச் செய்தார்.

வேறோடு பிடிங்கி எறிந்தாலும் சில நாட்களிலேயே அதே இடத்தில ஓக் மரக்கன்று முளைக்கத் துவங்கிவிட்டது. மீண்டும் இதைக் கண்ட பாதிரியார், இயேசு மீண்டும் உயிர்தெழுந்த சம்பத்தை தொடர்புபடுத்தி அந்த மரக்கன்றை வணங்கினார்.

ஜெர்மானியர்கள் முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை வீட்டு வாசலில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு முதன் முதலில் வணங்கி உள்ளனர்.

இதன் பிறகே கிறிஸ்துபிறந்த நாளின்போது கிறிஸ்துமஸ் மரம் இடம் பெறத் துவங்கியது. அங்கிருந்து உலக நாடுகள் முழுவதும் இந்த கிறிஸ்துமஸ் மர கலாச்சாரம் பரவியதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டு அரசி விக்டோரியா ஜெர்மன் நாட்டு இளவரசர் ஆல்பர்ட்டை காதல் திருமணம் செய்துகொண்டார். 1841-ல் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்து வின்ஸ்டார் மாளிகையில் வைத்தார்.

இதன் பின்பே கிறிஸ்துமஸ் மர கலாச்சாரம் இங்கிலாந்து நாட்டில் பரவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த நாடுகளில் கிறிஸ்துமஸ் மதமும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் பரவியுள்ளது.

மார்டீன் லூதர் கிங் கண்ட கிறிஸ்துமஸ் மரம்

கிபி 1500-ம் ஆண்டுகளில் வாழ்ந்த மார்டின் லூதர் கிங் என்ற மன்னர் நடந்து செல்லும் வழியில் பீர் வகை மரங்கள் பனிக்கட்டி படர்ந்து இருந்தது. அப்போது அதில் வெளிச்சம் பட்ட உடன் தகதகவென மின்னியுள்ளது.

இதன் மூலம் மார்டினை கவர்ந்த அந்த மரத்தை மன்னர் கிறிஸ்துமஸ் நாளில் மரத்தின் நுனியை வெட்டி மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாட்டங்களில் அறிமுகம் செய்து வைத்ததாகவும் ஒரு கதை உண்டு.

கிறிஸ்துமஸ் மரம் எப்படி உருவாக்கப்படுகிறது?

கிறிஸ்துமஸ் மரம் ஒவ்வொரு நாடுகளிலும் வேறுபடுகிறது. அந்தந்த நாடுகளில் முக்கோண வடிவில் வளரக்கூடிய மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மரம் உண்மை பெயர் (christmas tree real name in tamil) பின்வருமாறு:-

ஜெர்மனி – அமெரிக்கா கிறிஸ்துமஸ் மரம் (German – America Christmas Tree)

christmas tree real name in tamil ஃபர் மரம் fir tree

ஃபர் வகை மரம் (fir tree) கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்தப்படுகிறது. இதுவே அந்த காலத்தில் ஓக் மரம் ((oak tree) என அழைக்கப்பட்டது. அமெரிக்க நாடுகளிலும் இதே மரங்கள் தான் கிறிஸ்துமஸ் மரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து கிறிஸ்துமஸ் மரம் பெயர் (United Kingdom Christmas Tree)

நார்வே ஸ்ப்ருஸ் (Norway Spruce) இங்கிலாந்து கிறிஸ்துமஸ் மரம்

நார்வே ஸ்ப்ருஸ் (Norway Spruce) united kingdom நாடுகளில் இந்தவகை மரங்கள் கிறிஸ்துமஸ் மரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய கிறிஸ்துமஸ் மரம் பெயர் (Indian Christmas Tree)

அரக்குவாகரியா கொலம்னரிஸ் (Araucaria columnaris) இந்திய கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் ட்ரீ

இந்தியாவில் அரக்குவாகரியா கொலம்னரிஸ் (Araucaria columnaris) என்ற ஆஸ்திரேலிய வகை மரம் கிறிஸ்துமஸ் மரமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மரம் கிடைக்காதவர்கள் சவுக்கு (casuarina) மரத்தை கிறிஸ்துமஸ் குடில் அருகில் வைப்பார்கள்.

ஆஸ்திரேலிய கிறிஸ்துமஸ் மரம் (Australian Christmas Tree)

christmas tree real name நியூட்ஸ்யா (nuytsia) ஆஸ்திரேலிய கிறிஸ்துமஸ் ட்ரீ

வெஸ்டன் ஆஸ்திரேலியாவில் நியூட்ஸ்யா (nuytsia) என மஞ்சள் நிற இலைகள் கொண்ட மரம் கிறிஸ்துமஸ் மரமாக கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.

16 வகை கிறிஸ்துமஸ் மரங்கள் பட்டியல் (16 types Christmas Tree)

உலக அளவில் 16 வகையான கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளன. இவற்றில் அதிகம் ஃபர் (fir tree) வகை மரங்களே பயன்படுத்தப்படுகிறது. பர் வகை என்றால் ஊசி இலை கொண்ட முக்கோண வடிவ மரங்கள்.

1. Balsam Fir
2. Fraser Fir
3. Canaan Fir
4. Douglas Fir
5. Grand Fir
6. Noble Fir
7. Concolor Fir
8. White Pine
9. Scotch Pine
10. Virginia Pine
11. Blue Spruce
12. Norway Spruce
13. White Spruce
14. Arizona Cypress
15. Leyland Cypress
16. Red Cedar

இத்தனை வகை கிறிஸ்துமஸ் ட்ரீ இருந்தாலும் noble firfraser fir and balsam fir tree இந்த மூன்று வகை மரங்களே அதிகம் கிறிஸ்துமஸ் தினத்தில் பயன்படுத்தப்படுகிறது.

கிறிஸ்மஸ் குடில் ட்ரீ டெக்கரேசன் செய்வது எப்படி?

தற்பொழுது கிறிஸ்துமஸ் தினத்தில் குடில் அருகில் வைக்கப்படும் மரம் பற்றி அறிந்துகொண்டு இருப்பீர்கள். நீங்களும் உங்கள் வீட்டில் கிறித்துமஸ் ட்ரீ எப்படி செய்யுறது எனத் தெரிந்து கொண்டு கிறிஸ்மஸ் குடில் ட்ரீ டெக்கரேசன் செய்யுங்கள்.

3

பாவ கதைகள் விமர்சனம் | Paava Kadhaigal Review Tamil

3
பாவகதைகள் விமர்சனம் | Paava Kadhaigal review tamil Segment Thangam Review

பாவ கதைகள் விமர்சனம். நெட்பிலிக்ஸ்ல் (பாவக்கதைகள் Netfilix) வெளியாகும் முதல் ஆந்தாலஜி தமிழ் படம். Paava Kadhaigal Review Tamil Anthology Movie.

அத்யாயம்-1 தங்கம் | segment-1 Thangam

cast and crew 

தங்கம் அத்யாயத்தில் நடித்தவர்கள் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்யராஜ், பவானி ஸ்ரீ. இயக்கம் சுதா கொங்கரா.

காளிதாஸ் (சத்தார்) இந்த அத்யாயத்தின் ஹீரோ. திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். நடிப்பு மட்டும் அல்ல திருநங்கை போலவே வாழ்ந்துள்ளார்.

AK vs AK Movie Review Tamil – ஏகே vs ஏகே விமர்சனம் – Netflix

கதை Story

சாந்தனு (தங்கம்) – காளிதாஸ் (சத்தார்) இருவரும் சிறுவயது முதல் நண்பர்கள். சத்தாருக்கு, தங்கத்தின் மீது காதல். படத்தின் ஆரம்ப காட்சிகள் ஒரு திருநங்கையுடன் ஒரு இளைஞன் காதலில் விழப்போகிறான்?

இப்படி தான் இந்த கதையை நமக்குள் திணித்து படத்தின் திரைக்கதையை துவங்குகிறார் சுதாகொங்கரா. ஆனால் தங்கம் நாம் நினைப்பதுபோலோ, அவன் தந்தை நினைப்பதுபோலோ சத்தாரை காதலிக்கவில்லை.

சத்தாரின் தங்கை பவானி ஸ்ரீ-யை காதலிக்கிறான். சத்தாருக்கு இது முதலில்  பிடிக்கவில்லை என்றாலும் தங்கம் உருகுவதைப் பார்த்து அவனால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

தங்கையை, தங்கத்துடன் சேர்த்து வைத்து அம்மாவின் ஆப்பரேசனுக்கு சேர்த்து வைத்த பணத்தை வைத்து இருவரையும் வெளியூருக்கு அனுப்பிவிடுகிறான் சத்தார்.

இருவீட்டாரும் சம்மதத்துடன் மீண்டும் ஊருக்கு திரும்பி வரும் தங்கமும் அவனது மனையும் சத்தாரை இரண்டு குடும்பமும் சேர்ந்து காமவெறியர்களுக்கு இரையாக்கியதை அறிந்து மீண்டும் யாருடனும் சேராமல் வெளியூர் புறப்படுகிறான்.

Paava Kadhaigal Review Tamil

படத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இந்த கதையை முழுவதும் கூறுவது அவசியமாகிறது. இது வெறும் கதையல்லை 90-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படை தான் இந்த பாவ கதைகள்.

படத்தின் முக்கிய அம்சம் காளிதாஸ் நடிப்பு. படம் நல்லா இருக்கோ இல்லையோ, முதல் அத்தியாயத்தில் காளிதாஸ் நிச்சயம் அனைவர் மனதிலும் இடம் பிடிப்பார்.

மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் அறிமுகமாகிய காளிதாஸ், அந்தப் படத்தில் பெரிய அளவில் நடிப்பை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

சத்தார் கதாப்பாத்திரம் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் மைல் கல்லாக அமைந்து உள்ளது. ஒரு திருநங்கை என்றவுடன் அந்தக் குடும்பத்தையே அந்த ஊர் எப்படி பார்க்கிறது என சத்தாரின் தாய் கண்ணீர் வடிப்பது நம்மை கண் கலங்க வைக்கிறது.

3