புதிய கொரோனா வைரஸ் (new coronavirus) (new covid19): முதன் முதலில் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்த நாடு இங்கிலாந்து. தற்பொழுது பிரிட்டனில் கொரோனா மறுஉருவம் எடுத்து உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாமல் பரிணாமம் அடைந்து உள்ளது. புதிய கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என பிரிட்டன் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.
ஏற்கனவே பரவிய கொரோனா வைரசைவிட இது 70% வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
புதிய கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த ஐஎஸ்எல் 33-வது லீக் போட்டியில் சென்னையின் எப்சி (chennaiyin fc) அணியும் கோவா அணியும் மோதியது.
இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது. இந்த லீக் போட்டியில் 2-வது வெற்றியை சென்னை அணி ருசித்ததுள்ளது.
சென்னையின் எப்சி வீரர் ரபெல் கிரிவெல்லாரோ 5-வது நிமிடத்திலும், ரஹிம் அலி 53-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோவா அணி வீரர் மென்டோசா 9-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
இறுதியில் அதிக 2 கோல் அடித்து முன்னிலையில் இருந்த சென்னை வெற்றி பெற்றது. இதுவரை சென்னை அணி மூன்று போட்டிகள் தோல்வி, இரண்டு போட்டிகள் வெற்றி பெற்று உள்ளது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத்-மும்பை மாலை 5 மணிக்கும், கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் இரவு 7.30 மணிக்கும் மோத உள்ளனர்.
தமிழக வீரர் நடராஜன் டி.என்.பி.எல். தொடர் மூலம் ஐ.பி.எல். மற்றும் இந்திய ஓடிஐ-டி20 அணிகளில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
நாடராஜனின் எழுச்சியால் இரண்டு இந்திய பவுலர்களுக்கு தலைவலி ஏற்பட்டு உள்ளது. சமி, புவனேஷ்குமார் இருவரும் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஷர்துல் தாக்கூர் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தியுள்ளார். எனவே சமி, புவனேஷ் குமார் தங்களின் பவுலிங்கை இன்னும் சிறப்பாக்கினால் மட்டுமே அணியில் நீடிக்க வாய்ப்பு உண்டு.
இந்திய அணி தேர்வுக் குழுவும் நடராஜன், தாக்கூர் இருவரையும் நிரந்தரமாக அணியில் வைத்துக்கொள்வது என முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி அன்று பக்தர்கள் கலந்து கொள்ளவதற்கான முன்பதிவு இன்று துவங்கி உள்ளது.
ஏகாதசியை நேரில் காண விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். http://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் வழியாக இந்த முன்பதிவை மேற்கொள்ளலாம்.
முதன்முறையாக 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. நாள் ஒன்றுக்கு 20,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.
செஸ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது விஸ்வநாத் ஆனந்த். ஒரு முறை, இரண்டு முறை அல்ல, ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
விஸ்வநாத் ஆனந்த் செஸ் அகடாமி
சர்வதேச போட்டியில் போட்டில் உலக அளவில் சாதித்த விஸ்வநாத், தன்னைபோலவே பல இந்திய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என புதிய “செஸ் அகடாமி” துவங்க முடிவு செய்து உள்ளார்.
விஸ்வநாத் ஆனந்த் – வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் நிறுவனத்துடன் இணைந்து துங்கவுள்ள இந்த அகடாமி பெயர் “வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த்”.
இந்த அகடாமியில் முதல் கட்டமாக இந்திய இளம் செஸ் வீரா்களான பிரக்யானந்தா, நிகல் சரின், ரௌனக் சாத்வனி, குகேஷ், வைஷாலி ஆகியோருக்கு பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விரைவில் வெள்ளித்திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. விஜய் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை சன்பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கொரானா காலம் என்பதால் விஜய் அடுத்த பட அறிவிப்பு தாமதமாக வெளிவந்துள்ளது.
தற்பொழுது நெல்சன் திலீப்குமார் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார்.
கால பைரவாஷ்டமி 2020: சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர் திருக்கோவில். அதியமானால் கட்டப்பட்ட தனி கால பைரவர் கோவில். காசிக்கு இணையான அதியமான் கோட்டை தட்சிண காசி பைரவர்.
கலியுகத்தில் நன்மைகளை விட தீமையே தலைத்தோங்கி நிற்கும். அப்படிப்பட்ட இந்த யுகத்தில் பகைவர்களால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் துயரங்களை அதிகமாகவே காணப்படும்.
பொறாமை, கோபம் வஞ்சகத்தால் ஏற்படும் பகைமையை போக்கி நல்வாழ்வு அருளும் காவல் தெய்வமாக விளங்குபவர் கால பைரவர் ஆவார்.
சேத்திர பாலகராக அனைத்து சிவன் கோவில்களிலும் விளங்குபவர் பைரவர் ஆவார். இவர் பரமேஸ்வரரின் ருத்ர அவதாரமாக கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் அவதரித்தவர்.
கால பைரவருக்கு இந்தியாவில் காசியில் தனி திருக்கோவில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்து தமிழகத்தில் தர்மபுரியில் மட்டுமே தனி திருக்கோவில் உள்ளது.
சத்ருக்களை அழிக்கும் தட்சிண காசி பைரவர்
தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்தவர் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார்.
இவர் கடையைழு வள்ளல்களில் ஔவைக்கு நெல்லிக்கனி அளித்த வள்ளல் ஆவார்.
இவர் சிறுபகுதியை ஆண்டு வந்த சிற்றரசர் ஆவார். இவருக்கு பேரரசர்களால் இன்னல்கள் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
இதனால் தன்னை சத்ருக்கள் நெருங்கா வண்ணம் இருக்க வேண்டி குருமார்களிடம் ஆலோசனை வேண்டினார். அவர்களின் ஆலோசனைப்படி காசியில் இருந்து கால பைரவரை கொண்டு வந்து பிரதிட்டை செய்ய ஆயத்தமானர்.
தமது வீரர்களை அனுப்பு காசியில் இருந்து கால பைரவரை எடுத்து வர சொல்லிவிட்டு கோவில் கட்ட துவங்கினார்.
கால பைரவர் விக்ரகம் வந்ததும் , கோவில் திருப்பணி நிறைவும் ஒரே நேரத்தில் பூர்த்தியானது. அதன் பின் பைரவரை பிரதிட்டை செய்தார்.
கருவறை விதானத்தில் நவநாயகர்களை வடித்து பைரவரை நடுநாயகமாக பிரதிட்டை செய்து வழிப்பட்டார்.
அன்று முதல் தட்சிண காசி பைரவர் என்ற திருநாமத்தோடு இரண்டு திருக்கரத்தோடு கையில் திரிசூலமும் கபாலமும் தாங்கி திருக்காட்சி புரிகிறார். சத்ருக்களை அழிப்பவர் என்பதால் வாளும் இவருக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவர் அஷ்டமி தினத்தில் அவதரித்தவர் என்பதால் இவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்கள் உகந்த நாட்கள் ஆகும்.
இங்கே ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிறப்பு பூஜைகளும், ஒவ்வொரு மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் மிளகாய் வற்றல் மற்றும் மிளகினை சிறப்பு யாகங்கள் நடைபெறுகிறது.
இவருக்கு பூசணிக்காய், தேங்காய் மற்றும் மிளகு முடிச்சினை கொண்டு விளக்கேற்றி நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர் பக்தர்கள்.
தமிழகம், கர்நாடகம் என அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் வருகின்றது. காலபைரவாஷ்டமி தினத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது.
வியாபார முடக்கம், எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சினை, திருமணத்தடை, குழந்தையின்மை என அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து அருள் புரிகிறார் தட்சிண காசி பைரவர்.
அனைவரும் கால பைரவரின் ஜெயந்தி விழாவான “கால பைரவாஷ்டமி” ஆன இன்று (07/12/2020) அனைவரும் தர்மபுரி அதியமான் கோட்டை ஸ்ரீ தட்சிண காசி பைரவரை சென்று வழிப்பட்டு அவர் அருள் பெறுவோம்.
அமைவிடம்: ஸ்ரீ தட்சிண காசி பைரவர் திருக்கோவில், அதியமான் கோட்டை, தர்மபுரி.
தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.