இந்த புயல், இலங்கை திரிகோண மலை வழியாக கன்னியாகுமரி நோக்கி வரும்.
புரேவிபுயல் (burevi puyal), இலங்கைகுள் நுழைந்தாலும் கன்னியாகுமரி வரை வழுவுடன் சென்று தாக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு குழு கன்னியாகுமரி சென்று உள்ளது. அரண் அமைக்க 2000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புரேவிபுயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடலிற்குள் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 2018-ஆம் ஆண்டு ஒக்கி புயல் இதே கன்னியாகுமரி பகுதில் பல மீனவர்களின் உயிரை காவு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
indian ocean cyclone name Puyal name meaning 2020-2021. Nisarga, Gati, Nivar, Burevi, Tauktae, Yaas, Gulab, Shaheen, Jawad, Asani, Sitrang, Mandous, Mocha
புயலுக்கு பெயர் வைக்க காரணம் என்ன? (how cyclone names are given)
ஒவ்வொரு வருடமும் கடலில் ஏற்படும் புயல்களை நியாபகம் வைத்துக்கொள்வது சிரமாக இருந்தது. எனவே ஒவ்வொரு புயலுக்கும் ஒரு பெயர் வைத்து அழைப்பது என முடிவு செய்தனர்.
இந்தப் பெயரை அந்தந்த கடல் பகுதில் உள்ள நாடுகள் சேர்ந்து முடிவு செய்கின்றனர். வடக்கு இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கு இந்தியா, வங்கதேசம், ஈரான், மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், கர்த்தார், சவூதி அரேபியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, துபாய், ஏமன் ஆகிய நாடுகள் பெயர் சூட்டுகின்றனர்.
Cyclone name list (புயல் பெயர் பட்டியல்)
List of Northern Indian Ocean cyclone name (effective from 2020)
Nisarga Cyclone Name Meaning (நிசர்கா புயல் அர்த்தம்)
Nisarga இந்த பெயரை வங்கதேசம் (bangladesh) நாடு சூட்டியது. வங்கதேச நாட்டின் தேசிய மொழி வங்கமொழி (bengali). பெங்காலி மொழியில் நிசர்கா என்றால் அகிலம் என்று பொருள்.
Gati Cyclone Name Meaning (கதி புயல் அர்த்தம்)
Gati இந்த பெயரை இந்திய நாடு சூட்டியுள்ளது. சமஸ்கிருதம், ஹிந்தி மொழியை தழுவிய வார்த்தை கதி. கதி (Gati) என்றால் வேகம் (speed) என்று பொருள்.
Nivar Cyclone Name Meaning (நிவர் புயர் அர்த்தம்)
Nivar இந்த பெயரை ஈரான் நாடு சூட்டியுள்ளது. ஈரான் நாட்டின் தேசிய மொழி பெர்சியன். பெர்சியன் மொழியில் நிவர் என்றால் light (ஒளி, வெளிச்சம்) என்று பொருள்.
Burevi Cyclone Name Meaning (புரேவி புயல் அர்த்தம்)
Burevi இப்பெயரை மாலத்தீவு சூட்டியுள்ளது. மாலத்தீவு நாட்டின் தேசிய மொழி திவேகி. புரேவி என்பது அந்த நாட்டு தீவுகளில் காணப்படும் அரியவகை தாவரத்தின் பெயராகும்.
Black mangrove தவர வகையைச் சேர்ந்த Lumnitzera racemosa என்ற தாவரத்தின் பெயரை Burevi என dhivehi மொழியில் உச்சரிக்கின்றனர்.
1988-ல் ஓடிய கப்பலின் பெயரும் புரேவி (burevi ship). திவேகி ஒரு முழுவடிவம் பெறாத மொழி என்பதால் அம்மொழியின் அர்த்தம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
நிவர் புயல் (Nivar Cyclone) (Nivar Puyal) சென்னையை கொடூரமாகத் தாக்க வாய்ப்பு அதிகம் என தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது.
நிவர் புயல் முதலில் நாகப்பட்டினம் அருகே கரையைக்கடக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதன் நகர்வு சீராக ஒரே இடத்தை நோக்கி நகரவில்லை.
திடீரென வடக்கு நோக்கியும், திடீரென மேற்கு நோக்கியும் நகர்ந்து வருகிறது. மேலும் 130 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்று வருகிறது.
எனவே, தற்போதையை நிலவரப்படி நிவர் புயல், சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தானே புயல் ஏற்படுத்திய பதிப்பிற்கு நிகராக இந்த புயல் சேதத்தை விளைவிக்கலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
நிவர் புயல் புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே உள்ள பகுதியில் கரையைக் கடக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஒருவேளை புதுச்சேரிக்கு அருகில் புயல் கரையைக் கடந்தால் சென்னையில் கனமழை மட்டும் பெய்ய வாய்ப்பு உண்டு.
Mookuthi Amman Review download: மூக்குத்தி அம்மன் ஹாட்ஸ்டார் விமர்சனம். தீபாவளி அன்று ஆர்ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ளது.
அம்மன் தாயி
இது வழக்கமான சாமி படமும் இல்லை, நவீன கால சாமி படமும் இல்லை. முழுக்க முழுக்க காமெடி படமும் இல்லை. அனைத்தையும் மிக்ஸ் பண்ணிய கூட்டாஞ்சோறு.
ஆர்ஜே.பாலாஜி, நயன்தாரா கிண்டிய இந்த கூட்டாஞ்சோறு எப்படி இருக்குது என்றால் சொல்வதற்கு ஒன்று இல்லை.
எல்.கே.ஜி. படத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்தப்படத்தை பார்த்தால் அந்த அளவிற்கு விறுவிறுப்பு, சுவாரஸ்யம் சற்று குறைவு தான்.
படத்தில் உள்ள காமெடி கட்சிகளால் மட்டுமே ஓரளவு நம்மால் படத்தை பார்க்க முடிகிறது. பாபுஜி சாமியார் கதாப்பாத்திரம் PK படத்தில் வரும் “பம்பம் போலே” கதாப்பாத்திரம் சாயலில் உள்ளது.
மேலும் சத்குரு, கோவை மலைப்பகுதியை ஆக்கிரமித்து கொண்டதை எமோசனலுக்கு உள்ளே சேர்த்து, உல்டா பண்ணி சாமியார் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
மூக்குத்தி அம்மன் சொல்வது என்ன? (Mookuthi Amman Review)
இந்த படத்தின் மிகப்பெரும் தோல்வியே கதை எதை நோக்கி செல்கிறது என்பதை அழுத்தமாகக் கூறாமல் விட்டது தான்.
கடவுள் மனிதனுக்கு வரம் கொடுத்து அவன் வாழ்வில் அற்புதம் நிகழ்த்தும் கதையா? தீய சக்தியை அழிக்கும் கதையா? போலிச்சாமியாரின் முகத்தை தோலுரிக்கும் கதையா? தந்தையை தொலைத்த குடும்பம் ஒன்று சேரும் கதையா?
இதில் ஒரு விசயத்தை நோக்கி கதை நகராமல் அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என கதை மாறிமாறி செல்கிறது. ஆனால் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இல்லை.
நயன்தாரா நடிப்பு
நயன்தாராவிற்கு நீண்ட நாட்களாகவே ஒரு ஏக்கம் உண்டு. நாம் இதுவரை சரித்திர படத்திலோ, சாமி வேடத்திலோ நடித்து இல்லை என்று.
அனுஷ்கா இந்த இரண்டிலும் கை தேர்ந்தவர். நயனுக்கு இந்த கதாப்பாத்திரங்களில் நடித்த அனுபவம் இல்லாமல்போனதால் தான் பாகுபலி படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அப்போது கூறப்பட்டது.
அதன்பிறகே நயன்தாரா காஷ்மோரா படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் தோல்வியடைந்தது. சைரா படத்தில் நயன்தாராவிற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை.
தற்பொழுது மூக்குத்தி அம்மன் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். உண்மையில் நயன்தாரா, அம்மன் வேடம் பொருத்தமாகவே இல்லை.
இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதால் ஒருமுறை பார்க்கலாம். மீண்டும் மீண்டும் பார்க்கும் அளவிற்கு காமெடியும் சிறப்பாக இல்லை.
சூரரை போற்று ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் படங்களில் தரமான படம் என்ற சிறப்பை பெற்றுவிட்டது. Soorarai Pottru OTT Review. சூரரை போற்று திரை விமர்சனம்.
இதுவரை ஒடிடி தளங்களில் எத்தனையோ தமிழ் படங்கள், திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே நேரடியாக வெளியாகி உள்ளன.
ஆனால் ஒரு பெரிய நடிகரின் படம், ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குனரின் படம் தில்லாக திரையரங்கை புறக்கணித்து அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்தப்படம் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியாகி இருந்தாலே வசூலை வாரிக்குவித்து இருக்கும். ஆனால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்காமல் கம்பீரமாக ஓடிடி மூலம் வெளியாகி உள்ளது.
நாம தியேட்டருக்கு போகாம, தியேட்டரே நம்ம வீட்டு பெட்ரூம் உள்ள வந்தா எப்படி இருக்கும் அப்படி தான் நமக்கும், சூரரை போற்று படம் பார்க்க சர்ப்ரைசா இருந்திச்சு.
சூரரை போற்று படம் எப்படி இருக்கு? soorarai pottru review
ஆனால், அக்கதைக்குள் இப்படி ஒரு பரபரப்பை புகுத்திய பெருமை சுதா கொங்கராவையே சேரும்.
படம் ஆரம்பித்தது முதலே டாப் கியரில் செல்கிறது. லவ் ரொமான்ஸ் ஒரு பக்கம். கண்ணீர் வரவைக்கும் சென்டிமென்ட் ஒரு பக்கம் என நம்மை திக்குமுக்காட வைக்கிறது கதை.
ஒருவன் தொடர்ந்து ஒரு தொழிலை செய்து தோல்வி அடைந்துகொண்டே இருந்தால், விடாமல் முயற்சித்தால், நிச்சயம் வெற்றி உண்டு என்னும் தன்னம்பிக்கையை கொடுக்கிறது.
crowdfunding மூலம் ஏரோப்ளேன் கூட வாங்கலாம் என ஜி.ஆர்.கோபிநாத் நமக்கு உணர்த்தி விட்டார்.
உண்மைக் கதை என்ன?
சூரரை போற்று ஒரு பக்கா என்டர்டைன்மென்ட் படம். ஆனால் படத்தில் வரும் அனைத்தும் உண்மையா? இல்லை?
பொதுவாக வாழ்க்கை வரலாற்றை அப்படியே எடுப்பது ஒரு ரகம். கதையின் அம்சமும் அப்படியே இருக்க வேண்டும், வசூலும் வாரிக்குவிக்க வேண்டும் என எடுப்பது இரண்டாவது ரகம்.
கதையை வைத்து உல்டா பண்ணி கல்லாக்கட்ட வேண்டும் என்று நினைப்பது மூன்றாவது ரகம்.
சூரரைப்போற்று இதில் மூன்றாவது ரகத்தை பிடித்து உள்ளது. கதையில் உண்மை இருந்தாலும், நிறைய விஷயங்கள் தமிழ் நாட்டிற்காக மாற்றப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் உள்ளவரை மதுரைக்காரர் என்று சொன்னது கூட ஓகே? ஒரு அய்யங்காரை பெரியாரியவாதி என ஓவர் பில்டப் கொடுத்தது நம்ம ஊரு அரசியல்வாதிகளை மிஞ்சி விட்டார் சுதா.
அர்னால்ட் நடித்த டெர்மினேட்டர் ரோபோவுக்கு தமிழ் நாட்டில் பட்டை அடித்து ஆயுத பூஜை கொண்டாடியது போன்று உள்ளது. உண்மை கதைதான் அதுக்குன்னு ஒரு நியாயம் வேணாமா?
ஒடிடி தளங்களின் புரட்சி soorarai pottru movie amazon prime
கொரோனா பண்ணின நல்ல விசயத்துல ஒன்னு இந்த ஓடிடி தளங்களின் எழுச்சி. இனி படத்தை விமர்சனம் பார்த்துட்டு தான் தியேட்டருக்கு போயி பார்க்கணும் என்பதில்லை.
ஊருல ஒரு தியேட்டரோ, ரெண்டு தியேட்டரோ தான் இருக்கும். அதுல எப்படா சின்ன பட்ஜெட் தரமான படங்கள் வெளியாகும் என ஏங்க வேண்டியதில்லை.
பெரிய ஹீரோக்கள் படம் வெளியானால் 1000 ரூபாய் டிக்கெட் என்றாலும் வாங்கிப் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை.
வரிசையில நிக்க வேண்டாம், ஸ்கூல் காலேஜ் கட் அடிக்க வேண்டாம், வேலைக்கு லீவ் போட வேண்டாம். இருந்த இடத்துல இருந்தே கிடைக்குற கேப்புல படத்தை பார்த்து முடிச்சிடலாம்.
அமேசான் வருசத்துக்கு 999 மட்டுமே. ஹாட் ஸ்டார் 399 தான் அதுவும் ஜியோ பிரிபெய்டு ரீசார்ஜ் பண்ணும் போதே ஆப்பர் உண்டு. கொஞ்சம் காஸ்ட்லி நெட்பிலிக்ஸ் மாசம் 199.
சன் நெக்ஸ்ட், ஜீ 5 இப்பிடின்னு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வெரைட்டி இருக்கு. உங்களுக்கு எது எல்லாம் சவுகரியமோ ரீசார்ஜ் பண்ணிட்டு படத்த பாத்துக்கலாம்.
தீபாவளி அன்னிக்கு எல்லோரும் ஹாட் ஸ்டாரில் சந்திப்போம் ஐஅம் வெயிட்டிங் லேடி சூப்பர் ஸ்டாரின் மூக்குத்தி அம்மன்.
அருள்தரும் நவராத்திரி இரண்டாம் நாள் (Navaratri day 2): திருமண தடைகளை நீக்கும் சதுராக்னி துர்கை. திருக்கழிப்பாலை தனி சன்னதி கொண்டு அருள்பாளிக்கும் சதுராக்னி துர்கையம்மன்.
Navaratri day 2
அம்பிகைக்கு உண்டான நாட்களில் நவராத்திரி நாளில் பல்வேறு ரூபங்களில் தரிசனம் செய்து வருகின்றோம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்கிற ரூபங்களில் அந்த பராசக்தியை வழிபட்டு வருகின்றோம்.
முதல் மூன்று நாட்களில் அம்பிகையை துர்காம்பிகையாக வழிபட்டு வருகின்றோம். அந்த பராசக்தி “சதுராக்னி துர்கை” என்கின்ற திருநாமத்தில் அம்பிகை அருள்புரியும் திருத்தலமே திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோவில் ஆகும்.
திருமண வரம் அருள்வாள் சதுராக்னி துர்கை
சதுராக்னி என்பது பெண்சக்தியால் தோற்றுவிக்கப்படும் அக்னியாகும். இந்த அக்னியானது அனைத்து சங்கடங்களையும் அழித்து அமைதியை ஏற்படுத்தும்.
நான்கு திருக்கரத்துடன் துர்கை அருள்பாளிக்கிறாள். பால்வண்ணநாதர் திருக்கோவிலில் வடக்குநோக்கி தனி சன்னதியில் அருளாட்சி புரிகிறாள்.
ஜாதகத்தில் பெண்களுக்கு நான்காம் இடமானது கற்பை நிர்ணயிக்கும் ஸ்தானமாகும். அந்த நான்காம் இடத்தில் தோஷம் இருக்கையில் இங்கு வந்து சதுராக்னி துர்கையினை வழிபட்டால் அந்த தோஷம் நீங்கி கற்புகரசியாக விளங்குவார்கள்.
மனைவிமார்கள் இந்த துர்கையை வழிபடுபவதால் கணவன்மார்கள் பிறர்மனை நாடாதவர்களாய் இருப்பார்கள்.
இங்கே தம்பதி சமேதராய் இரண்டு அதிகார நந்திகள் இருப்பது இந்த தலத்திற்கு தனி சிறப்பு வாய்ந்தது ஆகும்.
இந்த துர்கையை வழிபட்டால் கன்னி பெண்களுக்கு உடனடியாக சிறந்த மணமகன் கிடைக்கப் பெறுவான் என்பது கண்கூடான உண்மை.
கற்பு நெறி தவறாத ஆண்மகன்கள் கிடைக்க பெறுவார்கள். பெண்களும் கற்பு நெறி தவறாமல் விளங்குவார்கள் என்பது இத்தல துர்கைக்கு உள்ள சிறப்பாகும்.
வேறு எங்குமே இந்த திருநாமத்தில் துர்கையை காண இயலாத திருத்தலம் ஆகும். இந்த துர்கையை இராகு காலத்தில் தீபமேற்றி வழிபட சகல கிரக தோஷத்தை நீக்கி வளமான வாழ்வருள்வாள்.
அமைவிடம்: அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை, கடலூர். navaratri day 1
அருள்தரும் நவராத்திரி முதல் நாள்: அம்பிகைக்கு வியர்வை முத்துகள் கொட்டும் ஆலயம். கிழக்கு நோக்கிய ஒரே துர்கை அம்மன் ஆலயம். கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்.
பிரபஞ்சத்தின் ஒப்பற்ற சக்தியாக விளங்கும் பெண்மையின் பேராற்றலை பரை சாற்றும் விழாக்களில் அதி அற்புதமான விழாவே நவராத்திரி விழாவாகும்.
மகிடம் போல சுற்றி திரியும் மனித மனதை கட்டுபடுத்தி காம, க்ரோத, லோப, மத, மாச்சரியங்களை அழித்து இறை நிலையை அடைய வேண்டிய தாத்பரியத்தை உணர்த்துவதே நவராத்ரி நாட்கள் ஆகும். மகிட மனதை அழிப்பதால் தான் இவளை
இந்த நாட்களில் அனைவரும் ஒரு மனதாக அம்பிகையை பிராத்தனை செய்தும், கொலு வைத்தும், தான, தர்மங்கள் செய்தும் நவராத்திரி விழாவினை கொண்டாடுவது வழக்கம்.
மகிடன், சும்ப, நிசும்ப, இரத்தபீஜ, சண்ட, முண்டர்களை சம்கரித்த அம்பிகை சாந்தம் கொண்டு தவத்தில் வந்தமர்ந்த திருத்தலமே கதிராமங்கலம் வன துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.
கிழக்கு நோக்கிய துர்கை திருக்கோயில்
துஷ்டர்களை அழிக்கும் மகா சக்தியே துர்கா பரமேஸ்வரி ஆவாள். சைவ, வைணவம் என்ற பாகுபாடின்றி அனைத்து கோவில்களிலும் குடி கொண்டிருப்பவள் துர்கை ஆவாள்.
அப்படிப்பட்ட அம்பிகை வன துர்கா பரமேஸ்வரி என்ற திருநாமத்துடன் இருக்கும் தனித் திருத்தலமே கதிராமங்கலம் ஆகும்.
முற்காலத்தில் இங்கே அம்பிகை கோவில் ஏதும் இன்றி வன்னி மரக்காட்டிலே காற்று, மழை, வெய்யில் என அனைத்தையும் தாங்கி கொண்டு வெட்ட வெளியில் இருந்தால்.
பின் அம்பிகைக்கு கோவில் அமைக்கப்பட்ட போதும் காற்று மழை வெயில் அம்பிகை மீது படுமாறு துவாரம் இன்றளவும் அம்பிகையின் கூரையில் உள்ளதால் ஆகாச துர்கை எனவும் அழைக்கப்படுகிறாள்.
மற்ற கோவில்களில் வடக்கு அல்லது மேற்கு நோக்கி துர்கை சன்னதி அமைந்து இருக்கும். ஆனால் இங்கே கிழக்கு நோக்கி உள்ளது சிறப்பு மிக்க ஒன்றாகும்.
மேலும் விநாயகர் இங்கே அம்பாளுக்குள் அடக்கம் என்பதால் விநாயகர் சன்னதி கிடையாது. இராகுவின் அதிதேவதை இவளே என்பதால் பின்புறத்தில் சர்ப்பமாகவே ஆம்பாள் காட்சி தருகிறாள். பாதமானது மகிடன் இல்லாமல் தாமரையில் பதித்து மகாலட்சுமியின் அம்சமாக காட்சி தருகிறாள்.
அபயம் காட்டி கருணை பொங்கும் முகத்தோடு உள்ளாள். இவளுக்கு அர்ச்சனை செய்யும் போது அம்பிகையில் உள்ளங்கையில் இருந்து வியர்வை முத்துக்கள் சிந்துவது அதிசயமான ஒன்றாகும்.
அகத்தியர், மிருகண்டு முனிவர் மற்றும் கம்பர் முதலானோர் இந்த அம்பிகையை பூசித்து அவளின் அருளினால் பல சக்திகளை பெற்றனர் என்கிறது தல வரலாறு.
வளமான வாழ்வு தருவாள் வனதுர்கா!
இராகு காலத்தில் இவளை வழிபடுவதால் அனைத்து கிரக தோஷங்களும் நீங்கி திருமணம், குழந்தைப் பேறு என அனைத்தும் கிடைக்கும்.
இராகு தோஷம் உள்ளவர்கள் ஒருமுறை சென்று அம்பிகையை தரிசிக்க தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறுவர். குல தெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் இவளை சென்று வணங்கினால் குலத்தெய்வத்தை காட்டி கொடுப்பாள்.
அனைவரும் இந்த நவராத்திரி காலத்தில் கதிராமங்கலம் சென்று அன்னையை தரிசித்து நற்பேறு பெறுவோம்.
அமைவிடம்: மாயவரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கதிராமங்கலம் வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்.
தோடுடைய செவியன் என்று பாட துவங்கிய அம்பிகையின் ஞானப்பால் உண்ட ஞானசம்பந்த பெருமான் இறைவனை துதித்துப் பாடி மக்களின் பல்வேறு பிணிகளை போக்கியுள்ளார் என்பது பலரும் அறிந்த ஒன்று.
அந்த வகையிலே உடல் சூட்டால் ஏற்படும் காய்ச்சலில் இருந்து மக்களை காத்து அருளிய பதிகத்தை பற்றியும். ஈசனின் திருவடிவமான ஜுரஹரேஸ்வரர் பற்றியும் பலரும் அறியாத ஒரு விடயமாகும்.
திருநீலகண்ட பதிகம்
ஒரு முறை ஞானசம்பந்தர் கொடிமாட செங்குன்றம் என்று இலக்கியங்களில் கூறப்படுள்ள திருசெங்கோட்டிற்கு யாத்திரை முடிந்து வந்த போது அங்கிருந்த மக்கள் அனைவரும் குளிர் ஜுரத்தினால் பெருதும் அவதிப்பட்டு மாண்டும் போய் இருந்தனர்.
ஞானசம்பந்தருடன் வந்த அடியார்களையும் காய்ச்சல் தாக்கி அவதிப்பட்டு வந்தனர்.
மக்களின் இத்துயரை கண்ட ஞானசம்பந்தர்
“அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்”
என துவங்கும் திருநீலகண்ட பதிகத்தை செங்கோட்டிலே பாடி மக்கள் துயர் நீக்க மன முருகி வேண்டினார். மாதொரு பாகனார் செவி சாய்த்து மக்களின் குளிர் ஜுரத்தை போக்கினார். அனைவரும் நலம் பெற்றனர்.
ஜுரத்தை போக்கும் ஜுரஹரேஸ்வரர்
செங்கோட்டிலே சம்பதரின் பதிகம் கேட்டு ஜுரத்தை போக்கிய நாதருக்கு ஜுரஹரேஸ்வரர் என்ற திருநாமத்தில் சன்னதி எழுப்பப்பட்டுள்ளது.
இன்றளவும் மக்கள் ஜுரத்தை போக்க வேண்டி இங்கு வந்து திருநீலகண்ட பதிகத்தை பாடி துதிக்கின்றனர்.
ஏக முகத்துடன் மூன்று திருக்கரங்களும் மூன்று திருவடிகளும் தாங்கி ஜுரஹரேஸ்வரர் திருக்காட்சி புரிகின்றார்.
இவரை வணங்கினால் அனைத்து காய்ச்சலும் நீங்கி நல்வாழ்வு அருளிவருகின்றார்.
நாம் என்னதான் பல்வேறு சிகிச்சைகளை பெற்று கொண்டாலும் இறைவனின் துணையோடு செய்தால் விரைவில் குணம் பெறுவோம் என்பது நம்பிக்கை கலந்த உண்மை ஆகும்.
காய்ச்சல் என்கின்ற கடும் பிணியால் மக்கள் அவதிப்பட்டு வரும் இக்காலத்தில் மக்கள் அனைவரும் ஒருமனதாக வீட்டில் இருந்த படியே ஜுரஹரேஸ்வரரை பிராத்தனை செய்து திருநீலகண்ட பதிகம் பாடி சுகமான வாழ்வினை பெறுவோம்.
Kaattu Payale Lyric Video; ஒரு வாரத்தில் 5 மில்லியன் வியூஸ் பெற்ற காட்டுப் பயலே பாடல்! சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடல் ஒரு வாரத்தில் 5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடல் வெளியாகி 5 மில்லியன் வியூஸ் வரை பெற்றுள்ளது.
சூர்யா பர்த்டே ஸ்பெஷல்: காட்டுப்பயலே வீடியோ சாங் வெளியீடு! சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே என்ற ஒரு நிமிட வீடியோ புரோமோ வெளியாகியுள்ளது.
காட்டுப்பயலே பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர், தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில், ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த மே மாதமே இந்தப் படம் திரைக்கு வர வேண்டியது.
ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா முற்றிலும் சரியான பிறகு சூரரைப் போற்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யாவின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே என்ற பாடல் வெளியானது.
இந்தப் பாடல் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், யூடியூப்பில் 5 மில்லியன் வியூஸ் வரை பெற்றுள்ளது. இதன் காரணமாக டுவிட்டரில், #KaattuPayale என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்தப் பாடலில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மேலும், இருவரும் மணக்கோளத்தில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.
இதில், இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அப்போது பாடும் பாடலே இந்த காட்டுப்பயலே என்பது குறிப்பிடத்தக்கது.
Simbu Latest Photo; மருமகன் பர்த்டே கொண்டாடிய சிம்பு: வைரலாகும் புகைப்படம்! தனது சகோதரி மகன் ஜேசன் அபியின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சகோதரி மகனின் பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரவாக இருப்பவர் சிம்பு. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரிக்கிறார். சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.
மேலும், மனோஜ், டேனியல், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக சிம்பு இந்தப் படத்தில் நடிக்கிறார்.
சென்னையில் நடந்து வந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து, 2ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
படக்குழுவினரும் சென்னை திரும்பினர். இதன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் சிம்பு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது உடல் எடை குறைந்த நிலையில், மருமகன், தங்கை மகன் ஜேசன் அபியுடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
ஆம், மருமகன் ஜேசன் அபிக்கு நேற்று பிறந்தநாள். இதனை முன்னிட்டு கேக் வெட்டி, அவரது பிறந்தநாளை சிறப்பித்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில், சிம்பு திருமணம் பற்றி வதந்தி பரவியது. சிம்புவிற்கும், லண்டனைச் சேர்ந்த தூரத்து உறவுக்கார பெண்ணுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு டிஆர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, சிம்பு மற்றும் த்ரிஷாவிற்கும் திருமணம் என்று வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.