Home Blog Page 9

Virat Kohli: தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு!

0
Tamannaah

Tamannaah: Online Rummy Game; தமன்னா, விராட் கோலியை கைது செய்ய வாய்ப்பு! ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், அதன் விளம்பரங்களில் நடித்த விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமன்னா மற்றும் விராட் கோலி ஆகியோர் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நிலையில், அண்மையில், தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லையில் ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது.

தொடக்கத்தில் வெறும் பொழுதுபோக்கிற்காக அதை விளையாடும் இளைஞர்கள் அதன் பிறகு அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுகிறது.

தமன்னா மற்றும் விராட் கோலி போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் செய்து, இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

ரம்மி விளையாட்டு போன்ற ஆன்லைன் சூதாட்டத்திற்காக வட்டிக்கு பணம் வாங்கி அதனை திருப்ப கட்ட முடியாமல் வட்டிக்கு மேல் வட்டி கட்ட முடியாமல் நிறைய இளைஞர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.

இதற்கு முன்னதாக ப்ளூவேல் கேம் மூலமாக மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக அந்த விளையாட்டை தடை செய்தது. இதனை சுட்டிக்காட்டிய சூரியபிரகாசம், ஆன்லைன் சூதாட்டங்கள் ப்ளூவேல் கேமை விட மிகவும் ஆபத்தானது.

ஆதலால், இதில் உடனடியாக தலையில், ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு, இந்த விளையாட்டுகளை தடை விதிப்பதோடு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரங்களில் நடித்துக் கொடுக்கும் தமன்னா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் நிலையில், விராட் கோலி மற்றும் தமன்னா ஆகியோர் கைது செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

3

AnnatheSethi First Single: துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

0
Annathe Sethi First Single

Tughlaq Durbar First Single Track; துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் அண்ணாத்தே சேதி பாடல் லிரிக் வீடியோ வரும் 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துக்ளக் தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம்,

துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார்.

மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து, விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் அரசியல் கெட்டப்பில் இருக்கும் அருமையான புகைப்படங்கள் எல்லாம் வெளி வந்தது.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் முதல்  சிங்கிள் டிராக் அண்ணாத்தே சேதி என்ற பாடலின் லிரிக் வீடியோ எப்போது வெளிவரும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 3 ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணாத்தே சேதி பாடலின் லிரிக் வீடியோ வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக துக்ளக் தர்பார் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் வெளியானது. நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் டப்பிங் புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Annathe Sethi First Single

3

வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனனுக்கு கிடச்ச லக்!

0
Malavika Mohanan Join With Dhanush

Malavika Mohanan D43 Movie; வாய்ப்பு கேட்ட மாளவிகா மோகனனுக்கு கிடச்ச லக்! தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட நடிகை மாளவிகா மோகனுக்கு அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது டுவிட்டரில், பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். வரும் வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த தனுஷ், நன்றி, விரைவில் அது நடக்கும் என்று நினைக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் D43 படத்தில் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில், கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை: லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்!

0
Latha Rajinikanth Song

Latha Rajinikanth Song; அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை: லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்! ரஜினிகாந்தின் மனைவி லதா இசையமைத்து, பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லதா ரஜினிகாந்த் பாடிய அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை என்ற பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எத்தனையோ மாஸ் படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரது மனைவி லதா ரஜினிகாந்த் சிறந்த பாடகி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஒரு சில படங்களில் அவர் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று உலக நண்பர்கள் தினம் Friendship Day கொண்டாடப்பட்டது.

உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டு லதா ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பாடலை எழுதி, இசையமைத்து, அந்தப் பாடலை அவரே பாடவும் செய்துள்ளார்.

அன்பு ஒன்றுதான் உலகினில் உண்மை என்று தொடங்கும் அந்தப் பாடலை லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார்.

இந்தப் பாடலில் குழந்தைகளிடம் அன்பு காட்டுவது முதல், நடுத்தர வயது, வயதானவர்களின் ஆட்டம் முடியும் வரை உள்ள காட்சிகள் அனைத்தும் காண்பிக்கப்பட்டுள்ளது. பாடல் வரிகளுக்கு ஏற்பவே அந்தக் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லதா ரஜினிகாந்த் பாடிய இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கோட் சூட்டில் கலக்கும் விஜய் சேதுபதி: துக்ளக் தர்பார் புதிய புகைப்படம்!

0
Tughlaq Durbar Stills

Tughlaq Durbar Stills; கோட் சூட்டில் கலக்கும் விஜய் சேதுபதி: துக்ளக் தர்பார் புதிய புகைப்படம்! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துக்ளக் தர்பார் படத்தின் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன்,

லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார்.

மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து, விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் அரசியல் கெட்டப்பில் இருக்கும் அருமையான புகைப்படங்கள் எல்லாம் வெளி வந்தது.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் எக்ஸ்க்ளூசிவ்வான புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி கோட் சூட்டில் இருக்கும் புகைப்படம் தான் அது.

தற்போது அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் டப்பிங் புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆக்‌ஷனில் கலக்கிய சுழல் சூறாவளி ஹர்பஜன் சிங்: வைரலாகும் பிரண்ட்ஷிப் மூவி வீடியோ!

0
Friendship Movie Teaser

Friendship Movie Video; ஆக்‌ஷனில் கலக்கிய சுழல் சூறாவளி ஹர்பஜன் சிங்: வைரலாகும் பிரண்ட்ஷிப் மூவி வீடியோ! ஹர்பஜன், லோஸ்லியா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஜான் பால்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் பிரண்ட்ஷிப்.

இந்தப் படத்தின், மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இதே போன்று கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான லோஸ்லியா ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இதுவே லோஸ்லியாவின் முதல் படம்.

இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டிஎம் உதய குமார் இசையமைத்துள்ளார்.

அண்மையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் சூப்பர்ஸ்டார் ஆந்தம் பாடல் வெளியானது. இந்தப் பாடலை சிம்பு தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

இந்த நிலையில், பிரண்ட்ஷிப் படத்தின் புதிய வீடியோ ஒன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேக்கிங் வீடியோ போன்று இருக்கும் அந்த வீடியோவில் ஹர்பஜன் சிங் தனது அதிரடி ஆக்‌ஷனை காட்டுகிறார். லோஸ்லியா, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், சதீஷ் ஆகியோரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரண்ட்ஷிப் படம் வெளியாக இருக்கிறது.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், விரைவில், திரையரங்குகள் திறந்த பிறகே பிரண்ட்ஷிப் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

திருமண தேதியை உறுதி செய்த ராணா!

0
Rana Daggubati Wedding Date

Rana Daggubati Wedding Date; திருமண தேதியை உறுதி செய்த ராணா! தனது திருமண தேதியை நடிகர் ராணா டகுபதி உறுதி செய்துள்ளார்.

மிஹீகா பஜாஜ் மற்றும் ராணா டகுபதி ஆகியோரது திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கும், அவரது காதலியுமான மிஹீகா பஜாஜுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.

அண்மையில், இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா லாக்டவுன் முடிந்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில், வரும் ஆகஸ்டு 8 ஆம் தேதி திருமணம் நடக்க இருப்பதை ராணா உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

என் வாழ்க்கையில் மிஹீகா வந்தது நல்ல தருணம். அவர்தான் எனக்கு சரியான ஜோடி. வரும் ஆகஸ்டு 8 ஆம் தேதி எங்களது திருமணம் நடக்க இருக்கிறது. அன்றைய தினம் எங்களது வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

லாபம் டப்பிங் பணியில் விஜய் சேதுபதி: வெள்ளை தாடி மீசையுடன் வைரலாகும் புகைப்படங்கள்!

0
Laabam Dubbing

Vijay Sethupathi Laabam Dubbing; லாபம் டப்பிங் பணியில் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படங்கள்! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி தொடங்கியுள்ளார்.

லாபம் படத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. நானும் ரௌடி தான், சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவரது நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, உப்பென்னா, லா சிங் சத்தா, காத்து வாக்குல ரெண்டு காதல், க/பெ.ரணசிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாபம் படத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசிய போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி டப்பிங் பேசியிருக்கிறார்.

இயக்குநர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் படத்தை விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன், நிதிஷ் வீரா ஆகியோர் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைத்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டப்பிங் பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, விஜய் சேதுபதி லாபம் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஹிந்தியில் வரும் தல அஜித்தின் வலிமை: ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
Thala Ajith Valimai Hindi Dubbing

Valimai Hindi Dubbing; ஹிந்தியில் வரும் தல அஜித்தின் வலிமை: ரசிகர்கள் கொண்டாட்டம்! அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று போனி கபூர் கூறியுள்ளார்.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.

போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அதிக பொருட்செலவில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஹைதராபாத்தில் வலிமை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடந்தது.

சென்னையில், அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போனி கபூர் மற்றும் மற்ற சினிமா பிரபலங்கள் பலரும் ஒரு வீடியோ பேட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அதில் வலிமை படம் பற்றி பல்வேறு தகவல்களை போனி கபூர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதில், தமிழில் உருவாக்கப்பட்டு வரும் வலிமை படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று போனி கபூர் கூறியதாக தகவல் வெளியானது.

மேலும், தென்னிந்திய சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களையும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ள அஜித்தின் முதல் படம் வலிமை தான் என்பதால் இந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கு முன்பு அஜித் ஒரு சில பாலிவுட் படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்‌ஷன், சென்டிமெண்ட், எமோஷனல் காட்சிகள் அதிகம் கொண்டிருப்பதால், வலிமை படத்தை அனைத்து மொழிகளிலும் வெளியிட தயாரிப்பாளர் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வரும் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆடி மாத தரிசனம் 14: உற்சவரே மூலவராக உள்ள கொப்புடையம்மன் கோவில்!

0

ஆடி மாத தரிசனம் 14: உற்சவரே மூலவராக உள்ள அம்மன் கோவில். காரைக்குடியில் புகழ்பெற்ற கொப்புடையம்மன் கோவில். ஆதிசங்கரர் வழிபட்ட தலம்.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாக விளங்கும் அன்னை ஆதி சக்தி கிராம தேவதையாக இருந்து மக்களை காத்து இரட்சித்து வருகிறாள்.

அவள் இல்லாத ஊர்களே கிடையாது என்பதை அறிவோம். அந்த பராசக்தியே கொப்புடையம்மன் என்ற திருநாமத்தோடு உள்ள ஊரே காரைக்குடி.

திருக்கோவில் வரலாறு

அடர்ந்த காரை மரங்கள் நிறைந்த காட்டு பகுதியை திருத்தி மக்கள் குடியேறியதால் காரைக்குடி என்ற பெயர்ப் பெற்றது இவ்வூர்.

இங்கே நடுநாயகியாக விளங்கும் கொப்புடையம்மன் காட்டம்மனின் தங்கையாவாள். காட்டமனுக்கு குழந்தைகள் உண்டு கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை.

ஒரு முறை கொப்புடையம்மன் காட்டம்மனின் பிள்ளைகளை பார்க்க ஆவளோடு சென்ற போது காட்டம்மன் குழந்தைகளை மறைத்து வைத்து விட்டாள்.

தம் சகோதரியின் இச்செயலை அறிந்து மன வேதனையோடு திரும்பினால் கொப்புடையம்மன். காட்டம்மன் மறைத்து வைத்த குழந்தைகள் கல்லாய் ஆனது.
கொப்புடையம்மன் அதன் பின் இங்கே வந்து அமர்ந்தாள் என்று கூறுகின்றனர்.

ஆதிசங்கரர் வழிபட்ட தலம்

ஆதி சங்கரர் இந்த திருக்கோவிலுக்கு வந்து அம்பிகையை வழிபட்டுள்ளார்.

இந்த அம்பிகை ஸ்ரீசக்ரத்தின் மீது அமர்ந்து கிழக்கு முகம் நோக்கி காட்சி தருகிறாள். இவள் துர்கா, லட்சுமி, சரஸ்வதியின் அம்சம் ஆவாள்.

மேலும் இங்கு சிதம்பர நடராசர் கோவிலை போலவே உற்சவரே மூலவராக அம்பிகை காட்சி தருகிறாள்.

சூலம், பாசம், கபாலம் தாங்கி அபயத்தோடு கருணை பொங்கும் முகத்தோடு காட்சி தருகிறாள் அம்பிகை.

சித்திரை கடை செவ்வாய் இவளுக்கு பெரும் திருவிழா நடத்தப்பட்டு திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.

வளங்களை அருள்வாள் கொப்புடையம்மன்!

அம்பிகையை தரிசித்து வழிபட்டாலே கல்வி, செல்வம், வீடுபேறு என அனைத்தும் வாரி வழங்குவாள்.

அனைவரும் காரைக்குடி சென்று கொப்புடையம்மனை தரிசித்து அவள் அருகில் வாழ்வாங்கு வாழ்வோம்.

அமைவிடம்: அருள்மிகு கொப்புடையம்மன் திருக்கோவில், காரைக்குடி.
தரிசன நேரம்: காலை 6 முதல் 11 வரை, மாலை 4 முதல் 8 வரை.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!

3