Home Blog Page 10

நிமிர்ந்து நில், தனி ஒருவன் புகழ் நடிகர் அனில் முரளி திடீரென்று காலமானார்!

0
Anil Murali Died Passed Away

Anil Murali Passed Away; நிமிர்ந்து நில் புகழ் நடிகர் அனில் முரளி திடீரென்று காலமானார்! தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்த நடிகர் அனில் முரளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அனில் முரளில் திடீரென்று உயிரிழந்துள்ளார்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நடிகர் அனில் முரளி (56). கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் வினயன் இயக்கத்தில் வந்த கன்னியாகுமரியில் ஒரு கவிதா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் 6 மெழுகுவர்த்திகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், தனி ஒருவன் ஆகிய படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும், கணிதன், அப்பா, கொடி, எங்க அம்மா ராணி, மிஸ்டர் லோக்கல், வால்டர், ஜீவி, நாடோடிகள் 2, நாகேஷ் திரையரங்கம், தொண்டன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

பல படங்களில் வில்லனாகவும், காவல் துறை அதிகாரியாகவும் நடித்துள்ளார். நிமிர்ந்து நில் படத்தில் அமலா பாலுக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Kadamattathu Kathanar, Sindhooracheppu, Chakravakam, Kadamatathachan, Swamiye Saranam Ayyappa, Akashadoothu ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கல்லீரல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அனில் முரளி கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அனில் முரளியின் மறைவு மலையாளம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனில் முரளியின் திடீர் மறைவுக்கு மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அனில் முரளிக்கு சூமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் இருக்கிறார்கள்.

3

டுவிட்டரில் டிரெண்டாகும் Lift ஹேஷ்டேக்: காரணம் தெரியுமா?

0
Lift Movie Dubbing

Kavin Lift Dubbing; டுவிட்டரில் டிரெண்டாகும் Lift ஹேஷ்டேக்: காரணம் தெரியுமா? கவின் நடிப்பில் உருவாகி வரும் லிப்ட் படத்தின் டப்பிங்கை அவர் முடித்துக் கொடுத்துள்ளார்.

லிப்ட் படத்தின் டப்பிங்கை கவின் முடித்துக் கொடுத்துள்ளார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் வேட்டையனாக வந்தவர் நடிகர் கவின் (Kavin). தொடர்ந்து சத்ரியன் படத்தில் துணை நடிகராக நடித்தார்.

இதையடுத்து, நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். எனினும், அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று, தனக்கென்று ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. புதுமுக இயக்குநர் வினீத் இயக்கத்தில் ஏகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் லிப்ட் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்த அம்ரிதா ஐயர் (Amritha Aiyer) ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்த நிலையில் லிப்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இத்தனை நாட்களாக கொரோனா லாக்டவுன் காரணமாக கிடப்பில் போடப்பட்ட லிப்ட் படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது கவின் தனது டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.

கவின் டப்பிங் பேசும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் படு வேகமாக வைரலாகி வருகிறது. இதன் காரணமாக டுவிட்டரில், #Lift என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஜகமே தந்திரம் ரகிட ரகிட ரகிட பாடல் வரிகள் வெளியீடு!

0
Jagame Thandhiram First Single

Rakita Rakita Rakita Lyrics; ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட ரகிட பாடல் வரிகள் வெளியீடு! தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட பாடலின் வரிகள் வெளியாகியுள்ளது.

ரகிட ரகிட ரகிட பாடலின் வரிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுக்கோட்டை, யாரடி நீ மோகினி, மாரி, மாரி 2 ஆகிய படங்களில் வரிசையாக நடித்துள்ளார்.

அண்மையில், அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இந்தப் பாடலில் தனுஷ் வேஷ்டி சட்டையுடனும், பேட்ட ரஜினியைப் போன்று மீசை வைத்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 37 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதையடுத்து, ரகிட ரகிட ரகிட பாடலின் மொத்த வரிகளும் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Rakita Rakita Rakita Lyrics

3

உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போனேன்: தனுஷ்!

0
Dhanush Birthday Press Release

Dhanush; உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போனேன்: தனுஷ்! தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைத்து ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து அன்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, வட சென்னை, The Extraordinary Journey of the Fakir (ஆங்கிலம்), அசுரன் என்று பல படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்துள்ளார்.

நடிகர் மட்டுமல்லாமல், தன்னை ஒரு இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகராகவும் காட்டிக் கொண்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய 4 ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

5ஆவது முறையாகவும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் இருக்கிறார்.

வட சென்னை, புதுப்பேட்டை ஆகிய படங்களின் 2 ஆம் பாகங்கள் உருவாக இருக்கிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் கடந்த 28 ஆம் தேதி 37ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போனேன்.

அனைத்து Common DPக்கள், Mashupக்கள், வீடியோக்கள் மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த Countdown டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி.

அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன், பெருமைப்படுகின்றேன்!

மேலும், எனக்கு தொலைபேசி வாயிலாகவும், பத்திரிக்கை மூலமாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரைத்துறையினர், சமூக ஆர்வலர்கள் அரசியல் பெருமக்கள்,

நண்பர்கள் மற்றும் பண்பலை, ஊடகம், தொலைக்காட்சி அன்பர்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நஸ்ரியா நஷீத்தை போல இருக்கும் வர்ஷா பொல்லம்மா பர்த்டே டுடே!

0
HBD Varsha Bollamma

Varsha Bollamma; நஸ்ரியா நஷீத்தை போல இருக்கும் வர்ஷா பொல்லம்மா பர்த்டே டுடே! வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை வர்ஷா பொல்லம்மா இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை வர்ஷா பொல்லம்மா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் குடகு என்ற பகுதியில் பிறந்துள்ளார்.

ராஜா ராணி படத்தில் நஸ்ரியா நஷீத் பேசும் டயலாக்கை பேசி மிகவும் பிரபலமாகியுள்ளார்.

பார்ப்பதற்கு ஒரு சாடையில், நஸ்ரியாவை நஷீத்தைப் போன்று இருப்பதால், சினிமாவில் நடிக்கவும் வந்துள்ளார்.

இயக்குநர் ராஜீவ் பிரசாத் இயக்கத்தில் வந்த சதுரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன், கல்யாணம், மந்தரம், 96, சீமதுரை, பெட்டிக்கடை, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தனது அழகான தோற்றம், நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

Black-and-White Challenge: வைரலாகும் பிரபலங்களின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்!

0
Black and White Challenge

Black and White Challenge: வைரலாகும் பிரபலங்களின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்! பிரபலங்கள் பலரும் Black-and-White Challenge செய்து தங்களது கருப்பு வெள்ளை புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்திய அளவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகப்படுத்தி வருகிறது. கொரோனா காரணமாக ஏற்கனவே 6 முறை லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6ஆம் கட்ட லாக்டவுனும் நாளை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.

வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதிய சேலஞ்ச் ஒன்று டிரெண்டாகி வருகிறது.

பெண்களுக்கு ஆதரவாக பெண்கள், Women supporting women என்ற சேலஞ்சை தொடங்கி வைத்திருக்கிறார்கள். இதில், கருப்பு வெள்ளை புகைப்படங்களை பதிவிட வேண்டும்.

Black-and-White Challenge என்ற சேலஞ்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், காஜல் அகர்வால், ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் என்று பிரபலங்கள் பலரும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலிக்கு கொரோனா!

0
SS Rajamouli Covid 19

SS Rajamouli; பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலிக்கு கொரோனா! பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ராஜமௌலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினரையும் கொரோனா தாக்கியுள்ளது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்திய அளவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகப்படுத்தி வருகிறது.

கொரோனா காரணமாக ஏற்கனவே 6 முறை லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6ஆம் கட்ட லாக்டவுனும் நாளை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.

வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், எஸ்.எஸ்.ராஜமௌலி அண்மையில் தனது வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

பிரபலங்கள் பலரையும் தாக்கி வரும் கொரோனா தெலுங்கு சினிமாவின் முன்னணி பிரமாண்ட இயக்குநரான எஸ் எஸ் ராஜமௌலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் தென்பட்டது.

அது தானாகவே சரியாகிவிட்டாலும், நாங்கள் பரிசோதனை மேற்கொண்டோம். ஆனால், பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா பாதிப்பு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் வீட்டிலேயே எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.

எந்தவித அறிகுறியும் இல்லாமல், நாங்கள் நன்றாகவே இருக்கிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

HBD Madhumitha: பைக், கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்: ஜாங்கிரி மதுமிதா பெருமிதம்!

0
HBD Madhumitha

Jangiri Madhumitha: பைக், கார் ஓட்ட கற்றுக்கொண்டேன்: பிக் பாஸ் மதுமிதா பெருமிதம்! கொரோனா லாக்டவுன் நேரத்தில் தான் பைக் மற்றும் கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக பிக் பாஸ் புகழ் மதுமிதா தெரிவித்துள்ளார்.

மதுமிதா தான் பைக் மற்றும் கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. இவரை ஜாங்கிரி மதுமிதா என்றும் அழைப்பது உண்டு.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில், மிரட்டல், அட்டகத்தி, ராஜா ராணி, தெனாலிராமன், காக்கிசட்டை, காஞ்சனா 2, புலி, காஷ்மோரா, ஸ்கெட்ச், கஜினிகாந்த், விஸ்வாசம், அசுரகுரு என்று பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். லொள்ளு சபா, மாமா மாப்ளே, பொண்டாட்டி தேவை, அத்திப்பூக்கள், அழகி, சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 3, காமெடி ஜங்கசன் ஆகிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இவ்வளவு ஏன், கடந்தாண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டு, கையை அறுத்துக் கொண்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய பேட்டிகளை அளித்து வந்த நிலையில், ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் இல்லாத நிலையில், அனைத்து பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள், தோட்ட வேலை பார்ப்பது, சமையல் செய்வது, துணி துவைப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா, வீட்டை சுத்தம் செய்வது என்று தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வந்தனர்.

அந்த வகையில், தற்போது மதுமிதாவும் கொரோனா லாக்டவுனை பயனுள்ள வகையில், பயன்படுத்தியுள்ளார். ஆம், பைக் மற்றும் கார் ஓட்ட கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, எப்போதும், யாரையாவது சார்ந்து இருப்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன்.

மற்றொரு ஓட்டுனர் இல்லாமல் தற்போது பயணிக்கிறேன். வீடியோ நாளை வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கேற்ப இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்சர் பைக்கில் பயணம் செய்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

சிலர், தன்னம்பிக்கையில், பெண் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதற்கு மதுமிதா உதாரணம் என்று குறிப்பிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மதுமிதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ராஜமேளத்துடன் வெளியான கர்ணன் மேக்கிங் வீடியோ!

0
Karnan Title Making Video

Karnan Making Video; ராஜமேளத்துடன் வெளியான கர்ணன் மேக்கிங் வீடியோ! தனுஷின் பிறந்தநாளான நேற்று கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ ராஜமேளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

கர்ணன் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது, நடிகர் என்பதையும் தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

அண்மையில், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், அசுரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

கர்ணன் படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, லால் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கர்ணன் என்றால் அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: “நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன் என்று குறிப்பிட்டு ஹேப்பி பர்த்டே தனுஷ் சார் என்று வாழ்த்தியுள்ளார். அதோடு, மாலை 5.55 மணிக்கு ராஜ மேளம் பீட்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அவர் குறிப்பிட்டுள்ளபடி, ராஜமேளம் வீடியோவை வெளியிட்டார். அதில், கர்ணன் படத்தின் மேக்கிங் வீடியோ இடம்பெற்றிருந்தது. கர்ணன் மேக்கிங் வீடியோ வெளியான நிலையில், டுவிட்டரில், Making Video என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

Karnan Title And Making Video

3

காக்க…காக்க…சுற்றுச்சூழல் காக்க…மத்திய அரசின் EIA 2020 வரைவுக்கு சூர்யா எதிர்ப்பு!

0
Suriya

Suriya EIA 2020; காக்க…காக்க…சுற்றுச்சூழல் காக்க…மத்திய அரசின் EIA 2020 வரைவுக்கு சூர்யா எதிர்ப்பு! மத்திய அரசு வெளியிட்டுள்ள EIA 2020’ வரைவு குறித்து உழவன் ஃபவுண்டேஷன் மூலமாக நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்திருந்த  நிலையில், நடிகர் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் EIA 2020 வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள EIA 2020’ வரைவு குறித்து உழவன் ஃபவுண்டேஷன் மூலமாக நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல”

மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை.

ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ வரைவு (Environment Impact Assessment – EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

மலைகளும், ஆறுகளும், பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும், இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல.

இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்வுக்குறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது.

நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும் அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே கூடாது என்பது எந்தவகையில் நியாயமான சட்டமாக இருக்கும்?

மேலும் தொழிற்சாலைகளின் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை, மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான சட்டம் என்ற போதும் இந்த வரைவறிக்கை வெறும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலேயும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய் மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் Covid 19 கொரோனா எனும் அரக்கப்பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

எனவே இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். eia2020-moefcc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துகளை பதிவு செய்வோம்.

அறிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார்த்தியின் அறிக்கையைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. என்று கார்த்தியின் அறிக்கையை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3