Home Blog Page 11

தல ரசிகர்கள் காத்திருங்க: 28 வருட சினிமா வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் பிரேம்ஜி!

0
Ajith 28 Years Of Cinema

Thala Ajith; தல ரசிகர்கள் காத்திருங்க: 28 வருட சினிமா வாழ்க்கைக்கு மரியாதை செலுத்தும் பிரேம்ஜி! அஜித்தின் 28 வருட சினிமா வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக வரும் 31 ஆம் தேதி நடிகர் பிரேம்ஜி அமரன் வீடியோ வெளியிட இருக்கிறார்.

அஜித்தின் சினிமா வாழ்க்கையை போற்றும் வகையில் நடிகர் பிரேம்ஜி அமரன் வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வீடியோ வெளியிட இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர் தல அஜித். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, அவரது வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால், தல அஜித். ரசிகர்கள் விரும்பினால், அவர்களுடன் செல்ஃபி எடுத்து கொள்ளவும் தயங்கமாட்டார்.

யாரையும், காலில் விழ வைக்கவும் மாட்டார், யாருடைய காலிலும் விழவும் மாட்டார். யாருக்கும் தெரியாமலே தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் குணம் கொண்டவர்.

தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று அஜித் தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதோடு, தனது சம்பளத்தின் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ள இருப்பதாகவும் போனி கபூருக்கும் மெயில் அனுப்பியுள்ளார் என்று அண்மையில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், தற்போது தல அஜித் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை தல ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

அதோடு, பொதுவான புகைப்படம், Common DP உருவாக்கி அதனை மகத், விக்னேஷ் சிவன், டிடி, பிந்து மாதவி, ராகுல் தேவ், நிக்கி கல்ராணி, விதார்த் என்று ஏராளமான பிரபலங்கள் அனைவரையும், அவரவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட செய்துள்ளனர்.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரபலங்களும் அவ்வாறு செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமராவதியில் ஆரம்பித்து, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே, ஆசை, வான்மதி, வாலி, கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், உல்லாசம், அவள் வருவாளா, உயிரோடு உயிராக, முகவரி, தொடரும்,

ஆனந்த பூங்காற்றே, நீ வருவாய் என, சிட்டிசன், ஆஞ்சநேயா, அட்டகாசம், பரமசிவன், ஆழ்வார், திருப்பதி, வரலாறு, கிரீடம், மங்காத்தா, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று 59 படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 60 ஆவது படமான வலிமை என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டுவிட்டரில் அஜித்தின் 28 வருட சினிமா வாழ்க்கையை பறைசாற்றும் விதமாக #AjithismCDPCelebritiesList என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதன் காரணமாக காமென் டிபியை ரசிகர்கள் உருவாக்கி அதனை மகத், விக்னேஷ் சிவன், பிந்து மாதவி, ராகுல் தேவ், பிரசன்னா, பிரேம்ஜி அமரன், ஆர்த்தி, வித்யு ராமன், நந்திதா, பார்வதி நாயர், நிக்கி கல்ராணி ஆகிய பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் அஜித்தின் காமென் டிபி புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்த நிலையில், இதற்கு அடுத்தகட்டமாக அஜித்தின் 28 வருட சினிமா வாழ்க்கையை போற்றும் வகையில், பிரேம்ஜி அமரன் வீடியோ ஒன்றை வெளியிட இருக்கிறார்.

வரும் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அந்த வீடியோவை பிரேம்ஜி அமரன் வெளியிடுகிறார்.

3

அண்ணாத்த சம்பளத்த திருப்பி கொடுத்துட்டாரா?

0
Annaatthe Salary Rajinikanth

Rajinikanth Annaatthe; அண்ணாத்த சம்பளத்த திருப்பி கொடுத்துட்டாரா? அண்ணாத்த படத்தின் சம்பளத்தை ரஜினிகாந்த் திருப்பி கொடுத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ரஜினிகாந்த், அண்ணாத்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்ததாக தகவல் பரவி வருகிறது.

தர்பார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ், லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

இமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

குடும்ப கதையை மையப்படுத்திய படமாக அண்ணாத்த உருவாக்கப்பட்டு வருகிறது. முதலில் இந்தப் படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக அண்ணாத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், அண்ணாத்த படக்குழுவினரின் பாதுகாப்பு கருதி, படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விளைவாக, இந்த வருடத்தில் படப்பிடிப்பு முடியும் என்ற நிலையில், இருந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்த அண்ணாத்த படம் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, அண்ணாத்த படத்திற்காக வாங்கிய சம்பளத்தை ரஜினிகாந்த் திரும்ப கொடுத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

அதோடு, படப்பிடிப்புக்கு நிறைய சிக்கல்கள் இருப்பதாலும், காலதாமதம் ஆவதாலும், அண்ணாத்த படம் டிராப்பானதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாத நிலையில், ரஜினிகாந்த் என்பதால், இது போன்று தகவல் பரவி வருகிறது.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் இபாஸ் இல்லாமல், கேளம்பாக்கம் சென்றதாகவும், அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தகவல் வந்தது.

அண்மையில், கந்த சஷ்டி குறித்து ரஜினிகாந்த் கந்தனுக்கு அரோகரா என்று டுவிட்டரில் பதிவிட்டது உலகளவில் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

மத்திய அரசின் ‘EIA 2020’ வரைவு: கார்த்தி எதிர்ப்பு!

0
Karthi EIA 2020

Karthi EIA 2020; மத்திய அரசின் ‘EIA 2020’ வரைவு: கார்த்தி எதிர்ப்பு! மத்திய அரசு வெளியிட்டிருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு நம் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக கார்த்தி கூறியுள்ளார்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள EIA 2020’ வரைவு குறித்து உழவன் ஃபவுண்டேஷன் மூலமாக நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல”

மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்களை உடைய மிக சிறந்த நாடாக உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்பொழுது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை.

ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020’ வரைவு (Environment Impact Assessment – EIA 2020) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

மலைகளும், ஆறுகளும், பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும், விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும், இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல.

இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாக காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்வுக்குறியாக்கும் முயற்சி.

அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

இந்த வரைவு அறிக்கையில் பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப் பெரிய அவநம்பிக்கையையும், அச்சத்தையும் உருவாக்குகிறது.

நம்முடைய சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும் அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே கூடாது என்பது எந்தவகையில் நியாயமான சட்டமாக இருக்கும்?

மேலும் தொழிற்சாலைகளின் வகைப்பாடு மாற்றம், பழைய விதி மீறல்களுக்கு பிந்தைய உண்மை, மக்கள் கருத்து பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும் நம்மை அச்சுறுத்துகின்றன.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான சட்டம் என்ற போதும் இந்த வரைவறிக்கை வெறும் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலேயும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமது தாய் மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் Covid 19 கொரோனா எனும் அரக்கப்பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீள போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் நம்முடைய வாழ்வாதாரத்தையும், முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக்கூடிய சக்தியுள்ள இந்த சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்?

எனவே இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

eia2020-moefcc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துகளை பதிவு செய்வோம்.

அறிஞர்கள், ஆய்வாளர்கள், கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிளாக்பஸ்டர் ஹிட்டுக்காக 5ஆவது முறையாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி?

0
Dhanush Vetrimaaran Team

Dhanush; மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி? தனுஷ் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது, நடிகர் என்பதையும் தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

அண்மையில், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது.

இதில், அசுரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

அசுரன் படத்திற்கு முன்னதாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய 3 படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதோடு, பாக்ஸ் ஆபிஸ் வசூலும் குவித்தது.

இந்த நிலையில், தற்போது 5ஆவது முறையாக வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் முடிந்ததும், வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தற்போது வாடிவாசல் படத்திற்கு முன்னதாக தனுஷின் புதிய படத்தை எடுத்து முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிந்து இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், ஆனால், இந்தப் படம் வட சென்னை படத்தின் 2 ஆம் பாகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தையும் எல்ரெட் குமார் தான் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெளி மாநிலங்களில் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால், கொரோனா காரணமாக தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க முடியாத நிலையில், வெற்றிமாறன் தனுஷ் படத்தை கையிலெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

3

முறுக்கு மீசையில் கலக்கிய தனுஷ்: ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியீடு!

0
Rakita Rakita Rakita Lyric Video

Rakita Rakita Rakita Lyric Video; தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தனுஷ், காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுக்கோட்டை, யாரடி நீ மோகினி, மாரி, மாரி 2 ஆகிய படங்களில் வரிசையாக நடித்துள்ளார்.

அண்மையில், அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தற்போது ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் உடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் ரகிட ரகிட ரகிட பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில் தனுஷ் வேஷ்டி சட்டையுடனும், பேட்ட ரஜினியைப் போன்று மீசை வைத்திருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் 37 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரகிட ரகிட ரகிட லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே தனுஷின் கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் காலையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Rakita Rakita Rakita Lyric Video:

3

மதுரையில் தனுஷின் Atrangi Re படத்தின் படப்பிடிப்பு!

0
Atrangi Re Movie Shooting

Atrangi Re Movie Shooting; மதுரையில் தனுஷின் Atrangi Re படத்தின் படப்பிடிப்பு! தனுஷ் நடிக்கும் பாலிவுட் படமான Atrangi Re படத்தின் படப்பிடிப்பை மதுரையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மதுரையில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் Atrangi Re படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமான தனுஷ் தமிழைத் தவிர மற்ற மொழிப் படங்களில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா, சமிதாப் ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது 3ஆவது முறையாக Atrangi Re என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், தனுஷ் உடன் இணைந்து அக்‌ஷய் குமார், சாரா அலிகான், நிம்ரத் கௌர், முகமது ஷீசான் ஆயுப் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், இந்தப் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் அக்டோபர் மாதம் மதுரையில், Atrangi Re என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பை ஆகிய பகுதிகளில் அக்‌ஷய் குமாரை வைத்து படப்பிடிப்பு நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கர்ணன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று அவரது 37ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Karnan Title Look

Karnan Title Look; நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது: கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு! தனுஷின் 37ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது,

கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது, நடிகர் என்பதையும் தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

அண்மையில், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், அசுரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

கர்ணன் படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, லால் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கர்ணன் என்றால் அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: “நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன் என்று குறிப்பிட்டு ஹேப்பி பர்த்டே தனுஷ் சார் என்று வாழ்த்தியுள்ளார். அதோடு, மாலை 5.55 மணிக்கு ராஜ மேளம் பீட்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்றால், கர்ணன் லிரிக் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்ணன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதோடு, இன்று தொலைக்காட்சிகளில் தனுஷ் நடித்த படங்கள் அதிகளவில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

3 முறை தேசிய விருது பெற்ற தனுஷ் பர்த்டே டுடே!

0
Dhanush Birthday Today

Dhanush; 3 முறை தேசிய விருது பெற்ற தனுஷ் பர்த்டே டுடே! நடிகர் தனுஷ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

2ஆவதாக சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், 3, வட சென்னை, The Extraordinary Journey of the Fakir (ஆங்கிலம்), அசுரன் என்று பல படங்களில் நடித்து ஹிட்டும் கொடுத்துள்ளார்.

நடிகர் மட்டுமல்லாமல், தன்னை ஒரு இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகராகவும் காட்டிக் கொண்டுள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய 4 ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 5ஆவது முறையாகவும் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் இருக்கிறார்.

வட சென்னை, புதுப்பேட்டை ஆகிய படங்களின் 2 ஆம் பாகங்கள் உருவாக இருக்கிறது. தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக இருக்கிறது.

அதோடு, இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும், Atrangi Re என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

இப்படி, தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனுஷ் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் தனுஷ் இன்று 37ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில், #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

நடிகர் ஷாம் கைது: அதிர்ச்சியில் கோலிவுட்!

0
Shaam Arrested

Shaam Arrested; நடிகர் ஷாம் கைது: அதிர்ச்சியில் கோலிவுட்! நடிகர் ஷாம் திடீரென்று கைது செய்யப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாம் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் நடித்தவர் நடிகர் ஷாம். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ஒன்றும் அவ்வளவாக பேசப்படவில்லை. 12 பி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

12 பி படத்தைத் தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, அன்பே அன்பே, பாலா, இயற்கை, இன்பா, தில்லாலங்கடி, காவியன் என்று பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பிஎஸ் விஜயகுமார் படத்திலும், பார்ட்டி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய 6ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக சினிமா பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நடிகர் ஷாம் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

ஷாம், தனது வீட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஷாம் வீட்டிற்குள் நுழைந்த போலீசார் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில், நடிகர் ஷாம் உள்பட 13 பேர் சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அப்போது, அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ஷாம் உள்பட மற்ற 13 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

இரவோடு இரவாக நடிகர் ஷாம் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

3

ஆடி மாத தரிசனம் 13: கண் கொடுக்கும் தெய்வம் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள்!

0

ஆடி மாத தரிசனம் 13: கண் கொடுக்கும் தெய்வம் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள். கண்ணாத்தாள் திருக்கோவில் வரலாறு மற்றும் சிறப்புகள்.

 

திருக்கோவில் வரலாறு

முன்னொரு காலத்தில் நாட்டசரன் கோட்டையின் தெற்கே 2 கி.மீ. தொலைவில் அல்லூர், பனங்காடி, பிரண்டகுளம் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் தினமும் அடர்ந்த வனப்பகுதி வழியாக நாட்டரசன்கோட்டைக்கு தயிர் மற்றும் மோர் விற்க தினமும் வருவார்கள்.

இப்படி வருகின்ற வேளையில் குறிப்பிட்ட இடத்தில் தட்டி விடப்பட்டு கூடையில் இருந்த தயிர் எல்லாம் கீழே சிந்தி விற்க முடியாமல் போய்விடும்.

தினமும் தொடர்ந்து நடக்க துவங்கியது. இதனால் மிகுந்த மன வேதனையோடு வீடு திரும்பினர். மறுநாள் மன்னரிடம் சென்று கூறலாம் என கிராம மக்கள் முடிவு செய்தனர்.

அன்று இரவு மன்னன் கனவில் அம்மன் தோன்றி “நான் பூமிக்கு அடியில் பிரண்டகுளம் கிராமத்தில் பலாமரத்தடியில் இருக்கிறேன் “ என்று அடையாளம் காட்டி கூறினாள்.

மறுநாள் மன்னர் கிராம மக்களுடன் சேர்ந்து சென்று அவ்விடத்தில் தோண்ட சொன்னார். முதலில் தோண்டியவர் தோண்டுகின்ற போது கடப்பாறை நுனி அவர் கண்ணில்பட்டு இரத்தம் வடிந்தது.

இருப்பினும் அவர் வேறோருவரை அனுமதிக்காமல் தானே தோண்டினார். உள்ளே இருந்து அம்மன் விக்ரகம் வெளியே எடுக்கப்பட்டது.

அம்மன் விக்ரகம் வெளியே வந்ததும் அவர் பார்வை திரும்ப கிடைத்தது. அப்பொழுதே “கண் கொடுத்த நாயகி” கண்ணாத்தாள் என்று அழைக்கப்பட்டாள்.

அதன் பின் அம்மன் கிழக்கு நோக்கி வைத்தனர். ஆனால் அம்மன் கனவில் தோன்றி வடக்கு நோக்கி செல்வதாகவும். களியாட்டம் நடத்தி பலி இடுமாறு கனவில் கூறினாள்.

அதன் பின் அம்மனுக்கு 30 நாள் களியாட்டம் நடத்தி திருவிழா நடத்தினர். இறுதியில் நாயன்மார் குலத்தில் 500 ஆடுகள் பலியிட முடிவு செய்தனர். 499 ஆடுகள் வெட்டும் போது ஒரு சொட்டு இரத்தம் கூட கீழே வரவில்லை. 500 வது ஆட்டின் இரத்தம் மட்டுமே கீழே வந்தது.

அதன் பின் அம்மனை தூக்கி சென்று அருகில் இருக்கும் சிவன் கோவிலில் தென்புறம் நோக்கி வைத்தனர். மறுநாள் பார்த்த போது அம்மன் வடக்கு நோக்கி திரும்பி இருந்தாள்.

பின் மீண்டும் தூக்கி சென்றனர். தற்போது கருவறை இருக்கும் இடத்திற்கு வந்ததும் அங்கேயே வைத்து பிரதிட்டை செய்யுமாறு அசரீரி ஒலித்தது.

அதன் பின் அங்கேயே வைத்து கோவில் கட்டினர். நாட்டரசன்கோட்டை ஆண்ட மன்னர்கள் பலரும் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளனர்.

இன்றளவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை களியாட்ட திருவிழா 48 நாட்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது.

கண் கொடுப்பாள் கண்ணாத்தாள்!

கருவறையில் எட்டு திருகரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அசுரனை இடக்காலில் மிதித்த வண்ணம் காட்சி தருகிறாள் அன்னை கண்ணுடைய நாயகி.

மக்களின் குறைகளை தீர்க்கும் சத்திய தெய்வமாக கண்ணாத்தாள் அருள்பாலிக்கிறாள். கண் நோய் பிரச்சனை உள்ளவர்கள் இங்கே வந்து கண்ணுடைய நாயகியை வழிபட கண் நோய் தீரும்.

அம்மை, திருமண தடை, குழந்தையின்மை என அனைத்து பிரச்சினைகளையும் அவளை வந்து வழிபட்டால் தீர்ந்து விடும் ஆனந்த வாழ்வு கிடைக்கும்.

அனைவரும் நாட்டரசன்கோட்டை கோட்டை சென்று கண்ணுடைய நாயாகியை வழிபட்டு நற்கதி அடைவோம்.

அமைவிடம்: கண்ணுடைய நாயகி அம்மன் ஆலயம், நாட்டரசன்கோட்டை, சிவகங்கை.
தரிசன நேரம்: காலை 6 முதல் மதியம் 1 வரை, மாலை 4 முதல் மாலை 9 வரை.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!

3