Home Blog Page 12

ஆடி மாத தரிசனம் 12: பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பேச்சியம்மன்!

1

ஆடி மாத தரிசனம் 12: பேசாத பிள்ளைகளை பேச வைக்கும் பேச்சியம்மன். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பேச்சியம்மன் திருக்கோவில். மதுரை மாநகரின் புகழ்பெற்ற பேச்சியம்மன் ஆலயம்.

சிவத்தின் இடப்பாகம் அமர்ந்த அன்னை பார்வதி தேவி பல்வேறு ரூபங்கள் எடுத்து பல திருக்கோவில்களில் கோவில் கொண்டுள்ளாள்.

சாதாரண மானுட பெண்ணாக பிறந்து தியாகத்தால் தெய்வமான பெண் சக்தியே பேச்சியம்மன் ஆவாள்.

மதுரையினை ஆட்சி புரியும் அன்னை மீனாட்சியின் மாநகரில் பல்வேறு சக்தி திருத்தலங்கள் அமைந்துள்ளன.

அதில் பேச்சு வராத பிள்ளைகளை பேச வைக்கும் அன்னையாக விளங்குபவளே பேச்சியம்மன் ஆவாள்.

திருக்கோவில் வரலாறு

மதுரை மாநகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட திருக்கோவில் பேச்சியம்மன் ஆலயம் ஆகும். வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது பேச்சியம்மன் திருக்கோவில்.

இங்கே பேச்சியம்மன் சுயம்புவாக இருப்பது இன்னும் விஷேசமான ஒன்று.

ஆறடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக வலது கை ஓங்கியும் இடது கையில் குழந்தையை கொண்டும் காட்சி தருகிறாள் பேச்சியம்மன்.
இக்கோவிலின் தல விருட்சம் ஆலமரம் ஆகும்.

மேலும் விநாயகர், முருகன், மீனாட்சி & சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, காளி, துர்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, ஐயனார், வீரமலை பெரியண்ணன், சின்னண்ணன், சப்த கன்னியர் ஆகியோரின் சன்னதிகள் ஒரே திருக்கோவிலில் அமைந்துள்ளது சிறப்பானதாகும்.

இங்கே அம்மனுக்கு வெள்ளிகிழமை பாலாபிஷேகம் நடைபெறுகிறது. மாலையில் குங்குமாபிசேகமும் நடைபெறுகிறது. இதை காண பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருக்கும்.

பேச்சாற்றல் அளிப்பாள் பேச்சியம்மன்!

பேச்சியம்மனே சரஸ்வதி ஸ்வரூபமாவாள். ஞானத்தை அளிக்கும் அம்பிகையும் ஆவாள்.
குழந்தைகளுக்கு திக்குவாய், சரிவர பேச்சுவராத நிலையில் இருந்தால் இங்கே வந்து அம்மனை தரிசித்து வேண்டி கொண்டால் நிச்சயம் நல்ல பேச்சாற்றலை பெறுவார்கள்.

ராகு-கேது தோஷம், சர்ப தோஷம், திருமணத்தடை உள்ளவர்கள் பேச்சியம்மனுக்கு பாலாபிசேகமும், குங்குமாபிசேகமும் செய்து இங்குள்ள நாகர்களையும் வழிபட்டால் தோசங்கள் நிவர்த்தி ஆகும்.

அனைவரும் மதுரை சென்று குழந்தைகளுடன் பேச்சியம்மனை சென்று வழிபட்டு ஞானத்தையும், கல்வியையும் பெறுவோம்.

அமைவிடம்: ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில், படித்துறை, சிம்மக்கல், மதுரை.

தரிசன நேரம்: காலை 06:00 முதல் 12:00 வரை, மாலை 04:00 முதல் 09:00 வரை.

3

லாக்டவுனில் பிரமாண்டமாக நடந்த நிதின் – ஷாலினி திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

0

Nithiin Shalini Wedding; நிதின் – ஷாலினி திருமண புகைப்படங்கள்! தெலுங்கு நடிகர் நிதினுக்கும், ஷாலினிக்கும் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது.

நிதின் ஷாலினி திருமணத்தைத் தொடர்ந்து தற்போது டுவிட்டரில், #NithiinwedsShalini என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

      

3

தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்: கர்ணன் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது?

0
Karnan Title and First Look Poster

Karnan Title First Look; தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்: கர்ணன் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது, நடிகர் என்பதையும் தாண்டி, இயக்குநர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார்.

அண்மையில், தனுஷ் நடிப்பில் அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில், அசுரன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

கர்ணன் படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, லால் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கர்ணன் என்றால் அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல, வெற்றியையும் தருபவர் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், கர்ணன் படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார். அதன்படி, கர்ணன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு, தனுஷின் பிறந்தநாளுக்காக காமென் டிபியும் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Dhanush Karnan Title Look

3

கொரோனாவா உண்மை தான்: மீண்டு வந்தது குறித்து விஷால் டுவீட்!

1
Vishal Covid 19

Vishal Covid 19; கொரோனாவா உண்மை தான்: மீண்டு வந்தது குறித்து விஷால் டுவீட்! கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஷால் அதிலிருந்து மீண்டு வந்தது குறித்து டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தது எப்படி என்று நடிகர் விஷால் டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராதயா, அபிஷேக் பச்சன், விஷால், அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா, துருவா சார்ஜா என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விஷாலும், அவரது தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இது குறித்து விஷால் கூறுகையில், எனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை தான். தமக்கும் அதிக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது. எனது மேலாளருக்கும் இதே நிலை தான் இருந்தது.

மூன்று பேருமே ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதால், ஒரு வாரத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டோம். தற்போது நலமாக இருக்கிறோம்.

மேலும், இந்த தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

3

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்!

0
Ritika Singh and Vijay Antony

Ritika Singh; விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ரித்திகா சிங்! விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கிக் பாக்சிங் நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்க இருக்கிறார்.

பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங்.

கிக் பாக்சிங் வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தில் அதே போன்று ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

அண்மையில், ரித்திகா சிங் நடிப்பில் திரைக்கு வந்த ஓ மை கடவுளே படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பாக்சர், அரவிந்த் சாமியின் வணங்காமுடி ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி குமார் இயக்குகிறார். இன்பினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Dil bechara : dil bechara திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை!

0

Dil bechara : dil bechara திரைப்படத்தை பற்றிய ஒரு பார்வை! 

” If nothing save us from death, May love atleast save us From life ”

-pablo neruda

The fault in our stars:
The fault in our stars
ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் எனது லேப்டாப்பில் ஒளிக்கவிட்ட திரைப்படம் ‘ the fault in our stars ‘ . திரைப்படத்தை ரசித்து ரசித்து பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வபோது கலங்கிய கண்கள், படத்தின் இறுதிகாட்சியில் கண்ணீர் துளிகளை நிலத்தில் விழ வைத்தன. அகஸ்டஸ் (augustus) இறந்ததினால் வந்த கண்ணீரா, அவனின் இறுதி கடித்ததை படித்த பின்பு ஹேசல் (hazel) தரும் புன்னகையால் வந்த கண்ணீரா என்பதை என்னால் அடையாளம் காண முடியவில்லை.
இரண்டு வருடங்களுக்கு பிறகு,
The fault in our stars என்ற அதே திரைப்படத்தை ஹிந்தியில் மறுஉருவாக்கம் செய்து ஹாட்ஸ்டாரில் வெளியிட்டிருக்கிறார்கள். பொதுவாகவே ரீமேக்கின் மீது சலிப்பு தட்டிய நாட்களில்தான் இருந்துக்கொண்டிருக்கிறேன்.
Sushant singh Rajput
இருப்பினும் சுஷாந்த் சிங் மறைவு என்னை Dil becharava-ஐ  பார்க்க தூண்டியது. ஏற்கனவே தனது சில திரைப்படங்களால் என்னில் சுஷாந்த் அவரின் மீதான எதிர்பார்ப்பை விதைத்தார்.
குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் kai po che திரைப்படத்தை ஒரு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்ப விட்டார்கள்,
அப்போது பிடித்தது சுஷாந்தை. சுஷாந்தின் இறப்பு பலரை வருத்தத்திற்குள் ஆழ்த்தியது அதில் நானும் ஒருவன். சுஷாந்த் மிகச்சிறந்த நடிகர் என்றெல்லாம் நான் கூறப்போவதில்லை ஆனால் சுஷாந்தின் நடிப்பு பிடித்திருந்த பலரில் நானும் ஒருவன்.
Kai po che
ஆதிநாதம்:
Dil bechara
படத்தின் தொடக்க காட்சிகளிலே ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசைத்துணுக்குகளால் நம்மை ஈர்த்துவிடுகிறார். அதன் பிறகு 45 நிமிடங்கள் கதையில் நிகழ்வதெல்லாம் பல க்யூட் நிகழ்வுகள்தான்.
அந்நிகழ்வுகளினூடே கதைமாந்தர்களின் குணங்களை நம்மில் பதியவைத்து விடுகிறார் இயக்குநர்.
45 நிமிடங்கள் போக மீதமிருக்கும் நேரத்தில் திரைக்கதை நம்முடன் நெருங்கி வந்துக்கொண்டே இருக்கிறது. தனது வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் கேன்சர் நோயை உடைய மன்னி ( manny) மற்றும் கிஸி பாஸி (kizie nasi) என்ற இருவருக்கும் இடையே நிகழும் காதல்தான் கதை. ஆனால் கதையின் போக்கு கதைகளில் நிகழும் நிகழ்வு திரைப்படத்தை நம்மோடு இணைக்கிறது. நம்மை அழச்செய்கிறது, காதலை கொண்டாடச்செய்கிறது, இதழ்களில் புன்னகையை விதைக்கிறது.
Manny and kize
விரிவு:
Poem
பாப்லோ நெருடாவின் கவிதை ஒன்றுள்ளது,
“நம்மை இறப்பிலிருந்து எதுவும் காப்பாற்றவில்லை என்றாலும், குறைந்தபட்சம் காதல் நம் வாழ்விலிருந்து நம்மை காப்பாற்றும்”.
நான் இத்திரைப்படத்தை இக்கவிதையின்  விரிவாகவே பார்க்கிறேன்.
the fault in our stars திரைப்படத்தை  நான் எவ்வாறு ரசித்து ரசித்து பார்த்தேனோ, கண் கலங்க பார்த்தேனோ அவ்வாறாகவேத்தான் dil bechara வையும் பார்த்தேன். படத்தின் இறுதிகாட்சிகளில் இம்முறையும் கண்ணீர் துளிகளை தனக்குள்ளே அடக்காமல் நிலத்தில் சிந்த விட்டன என் கண்கள்.
கேள்வியும் பதிலும்:
ஹிந்தியில் the fault in our star மறு உருவாக்கம் செய்யப்படவிருக்கிறது என்ற செய்தியை கேட்டதும் எனக்கு எழுந்த மிகப்பெரிய கேள்வி யாதெனில் ” அத்திரைப்படத்தில் ஹேசல் ஒரு எழுத்தாளரை காண வேண்டும் என்று முயற்சிப்பாள்.  எழுத்தாளர் மற்றும் புத்தகங்கள் சார்ந்த சில காட்சிகள் இருக்கும் அதை எப்படி ஹிந்தி படத்தில் கையாளப்போகிறார்கள்?” என்பதுதான் அது.
dil bechara-வை பார்க்க தொடங்கிய போதும் அந்த கேள்வியும் அந்த ஆவலும் எனக்குள் எழுந்தது. அதற்கு அழகான பதிலாய் இசை இருந்தது. எழுத்தாளர் என்ற term-ற்கு பதிலாக இசையமைப்பாளர் என்ற term -ஐ இத்திரைப்படத்தித் கொண்டுவந்தது எனக்கு ஆச்சரியத்தோடு சேர்ந்து திருப்தியாகவும் அமைந்தது. மேலும்
ரஜினிகாந்த் அவர்களை உபயோகித்த விதம், ‘சரி’ என்ற நம் தமிழ்சொல்லை உபயோகித்ததெல்லாம் கூடுதலாக என்னை கவர்ந்த அம்சங்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் :
Ar rahman
திரைப்படம் முழுக்க ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால பயணித்துள்ள விதமென்பது மழையை மேலும் ரசிக்க உதவும் தேநீரைப்போலானது. கதையை நம் மனதிற்கு மிக நெருக்கமாக அமைத்தது படத்தின் இசை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்காது.
மீளாதது:
Dance and love
ஏ.ஆர். ரஹ்மானின் குரலில் சுஷாந்த் மேடையில் நடனமாடும் காட்சியென்பது ஒரு வசந்தநிலையை உடையதாகவே எனக்கு தெரிகிறது. அந்த பாடல் முழுவதும் ஓரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்கிறார்கள். எவ்வளவு உள்வாங்கல் இருந்திருந்தால் அந்த நிகழ்வு நடந்திருக்குமென்பது விசித்திரத்தை தாண்டி சுஷாந்தின் திறமையையும் அக்காட்சியின் மீதான ஆவலையும் நமக்கு தெரியப்படுத்துகிறது.
Sanjana
திரைப்படத்தில் என்னை அதிகமாக கவரந்தவரென்றால் அது கதாநாயகியான சஞ்சனா அவர்களே. கதாப்பாத்திரத்தின் வடிவமைப்பென்பது சிறப்பென்றாலும் அதை சஞ்சனா கையாண்ட விதம் அழகியல்!
Mukesh chhabra
இத்திரைப்படத்திற்காக இத்திரைப்படத்தின் இயக்குநரான முகேஷ் அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் நாம் நிச்சயமாக கூறியே ஆக வேண்டும். அவர் திரைக்கதையை கையாண்ட விதம், மற்றவர்களிடமிருந்து திரைப்படத்திற்கு தேவையானவற்றை தேவையான அளவே வாங்கிய ஆற்றல் எல்லாம நிச்சயம் பாராட்டுக்குரியதே.

 

3

ஆடி மாத தரிசனம் 11: நினைத்ததை நடத்தி வைப்பாள் ஆயிரத்தம்மன்!

0

ஆடி மாத தரிசனம் 11: நினைத்ததை நடத்தி வைப்பாள் ஆயிரத்தம்மன். துப்பாக்கியால் சேதமான ஆயிரத்தம்மன் விக்ரகம். நோயை விரட்டிய பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன்.

அண்ட சராசரங்களை ஆட்சி புரியும் அம்பிகை ஆதிசக்தி தமது மக்கள் கொடிய பிரச்சினைகளால் துன்புறுவதை கண்டு பல்வேறு அற்புதங்களை செய்து காத்து வருகிறாள்.

அவள் அனைவரையும் கவனித்து கொள்ளும் ஆயிரம் கண்ணுடையாள். இவளை சமஸ்கிருத நூல்கள் சகஸ்ராக்க்ஷி என்று கூறுகின்றன.

அந்த ஆயிரம் கண்ணுடைய நாயகி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடுநாயகமாக கோவில் கொண்ட திருத்தலமே ஆயிரத்தம்மன் திருக்கோவில் ஆகும்.

ஆயிரத்தம்மன் வரலாறு

முன்னொரு காலத்தில் இந்த அம்மன் தற்பொழுது உள்ள சமாதனாபுரத்தில் அப்பொழுதிய போர்ப்படை வீரர்கள் பகுதியில் சிறு குடிசையில் வைத்து பூஜித்து வரப்பட்டாள்.

ஒரு முறை இப்பகுதி முழுதும் கொடிய நோய் ஒன்று பரவி வந்தது. மக்கள் அனைவரும் தங்களை நோயிலிருந்து காக்க வேண்டி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

இந்த பூசையில் இப்பகுதி பட்டாளத்து வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கலிட்டு வேண்டினர்.

அப்பகுதியை ஆண்ட அஹ்னிதுரை என்ற நவாப் அன்றைய தினம் வீரர்களின் அணிவகுபிற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவர்கள் பூசைக்கு சென்றதால் அணிவகுப்பிற்கு போக இயலவில்லை.

இதனால் கோபம் கொண்ட நவாப் வீரர்களை அழைத்து, வராமல் போனதற்கான காரணம் கேட்டார். வீரர்களும் பூசைக்கு சென்ற விவரத்தை கூறினர்.

இதனால் வெகுண்ட கோபத்துடன். அம்மன் விக்ரகத்தை துப்பாக்கியால் சுட்டு சேதமாக்க உத்தரவிட்டார். அதன் படி சுட்டதால் அம்மனுக்கு கைகள், கால்கள், இடுப்பு பகுதி சேதமடைந்தது.

அன்று இரவே துரையின் குடும்பதிற்கு கொடிய நோய் தொற்று தாக்கி அவதிப்படுத்தியது. தம் தவறை உணர்ந்து நவாப் அம்மனிடம் மன்னிப்பு கேட்க தாய் மனமிறங்கி நோய் நீக்கினால்.

சில காலத்தில் இங்கே அம்மனுக்கு கோவில் கட்டப்பட்டது. பின்னமான சிலை வைக்க கூடாது என்பதால் புதிய சிலை செய்ய ஏற்பாடுகள் நடந்தது.

ஆனால் அம்மன் அருள்வாக்கு கூறி தான் இப்படியே இருக்க விரும்புவதாக கூறினாள். எனவே புதிதாக செய்யப்பட்ட அம்மன் சிலை பாளையங்கோட்டை சிவன் கோவில் கன்னி மூலையில் பிரதிட்டை செய்யப்பட்டு. பழைய சிலை ஆயிரத்தம்மன் கோவிலில் பிரதிட்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது.

நினைத்ததை நிறைவேற்றுவாள் ஆயிரத்தம்மன்!

பாளையங்கோட்டையை சுற்றி உள்ள அம்மன்களில் ஆயிரத்தம்மனே மூத்தவள் ஆவாள்.

இவளுக்கு தசரா விழா மிகவும் விசேடமானது. மைசூர், குலசை அடுத்து பாளையங்கோட்டை தசரா தான் மிக பிரபலம். ஒரே நாளில் 12 அம்மன்கள் சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா காண்பர்.

ஆயிரத்தம்மனை தரிசித்தால் நினைத்த காரியம் கைக்கூடும் என்பது நிதர்சமான உண்மை.

தன் பக்தர்களுக்கு தேவையறிந்து வரமளிக்கும் வள்ளலாய் அருளாட்சி நடத்தி வருகிறாள் ஆயிரத்தம்மன்.

அனைவரும் பாளையங்கோட்டை சென்று ஆயிரத்தம்மனை தரிசித்து பிணியின்றி வாழ்வோம்.

அமைவிடம்: ஆயிரத்தம்மன் கோவில், பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

ஆடி மாத தரிசனம் தொடரும்..

3

Maatram foundation : கல்வியால் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் ‘மாற்றம் அறக்கட்டளை’

0
மாற்றம் அறக்கட்டளை
Core team of maatram foundation!
Maatram Foundation: கல்வியால் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் ‘மாற்றம் அறக்கட்டளை
‘உதவ இருக்கும் கரங்களிடம்
 இயலாமையில் தவிக்கும்
 கரங்களை ஒப்படைக்க  உதவுவோம்’
Maatram foundation
மாற்றம்!
“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து ” -திருவள்ளுவர்.
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, அதன் பின் வரும் ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்பது இத்திருக்குறளின் பொருள்.
கல்விதான் ஒரு சமூக வளர்ச்சியின் ஆதி. கல்விதான் பெறும்பாலானோர்க்கு தன் அறிவுச்செறிவை வளர்க்க உதவும். அதன் மூலம் அவனுக்கு கிட்டும் பலன்கள் பல. கல்வியென்பது அவசியத்தோடான அடிப்படை.
கல்விதான் சமூக வளர்ச்சி:
கல்வி ஒரு தனிமனிதன் வழியாக ஒரு குடும்பத்தை ஒரு சமூகத்தையே முன்னேற்றும் ஆற்றலுடையது. அதற்கான சான்றுகளை நாம் பல கண்டிருக்கிறோம். ஒரு தனிமனிதன் கல்விக்கே இவ்வளவு மதிப்பென்றால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கல்வி கிடைத்தால் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழும். அதனால் நிகழும் மற்ற பலன்களை விடுங்கள். அந்த ஒரு தனிமனிதரின் குடும்பத்தில் விளையும் மகிழ்ச்சி அவ்வளவு நிறைவான ஒரு அறம்.
மாற்றம்:
Educating lives!
அனைவருக்கும் கல்வி என்பதை அரசு கூறிவந்தாலும் அதை செயல்முறைப்படுத்தியிருந்தாலுமே இன்னு பலமுனைகளில் பலருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருப்பதை நாம் கேட்கவும் பார்க்கவும் முடிகிறது.
இந்த கல்வி எனும் கனியை பறித்து தேவையானவர்களுக்கு கொடுக்க சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் முயன்றுவருகின்றன. அப்படியான ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம்தான், மாற்றம் அறக்கட்டளை.
Founder of maatram foundation.
கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக கிட்டத்தட்ட தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கையை கல்வியின் மூலம் மாற்றியுள்ளது, மாற்றம் அறக்கட்டளை.
ஏழை மாணவர்களுக்கு பல்வேறு முறையில் உதவி செய்தல், நூலகங்களை பள்ளிகளில் ஆரம்பித்தல், சமூகத்தில் நிகழும் பேரிடர்களுக்காக தங்களால் முடிந்த உதவியை செய்தல் என பல நன்-நிகழ்வுகளுக்கு இந்த அறக்கட்டளை காரணமாகியுள்ளது. குறிப்பாக மாணவர்களின் உயர்கல்விக்காக மாற்றம் அறக்கட்டளையை சார்ந்த நபர்கள் செய்யும் பங்கு அளப்பரியது.
அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம்மை வியக்கவைக்க கூடியதாகவே இருக்கிறது. பேச்சாளரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் HR – ஆக பணிபுரியும் சுஜித்குமார் அவர்களின் முயற்சியில் தொடங்கப்பட்ட அறக்கட்டளை. இப்போது சில நபர்கள் அடங்கிய ஒரு குழுவின் முயற்சியால் மாற்றம் அறக்கட்டளை பன்முனைகளில் விரிவடைந்து பலருக்கும் தொடர்ந்து ஆதரவுக்கரங்களை நீட்டிவருகின்றனர்.
Core team of maatram foundation!
உதவுவோம்:
Admissions open.
இப்போது இந்த பதிவிற்கான காரணம் யாதெனில், பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளிவந்தாயிற்று. இனி மாணவர்கள் அவர்களின் உயர்கல்வியை பற்றி சிந்திக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.
பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தும் தங்களது பொருளாதரத்தால் குடும்ப சூழ்நிலைகளால்  உயர்கல்வியை பற்றி சிந்திக்க கூட முடியாத நிலையிலும் மாணவர்கள் இருக்கிறார்கள். உயர்கல்வி படிக்க ஆசையிருந்தும், நல்ல மதிபெண்கள் இருந்தும், சூழ்நிலைக்காரணமாக உயர்கல்விக்கு செல்ல இயலாத மாணவர்களை மாற்றம் அறக்கட்டளை அரவணைத்துக்கொள்கிறது.
இந்த கல்வியாண்டில் நிகழவிருக்கும் சேர்க்கைகளுக்கான விண்ணப்பங்கள் மாற்றம் அறக்கட்டளையின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றம் அறக்கட்டளை
சேர்க்கை நடைபெறுகிறது!
‘உதவ இருக்கும் கரங்களிடம் இயலாமையில் தவிக்கும் கரங்களை ஒப்படைக்க உதவுவோம்’ என்பதே இப்பதிவின் ஆதிநாதம். நம்மில் ஒருவருக்கோ, நமக்கு தெரிந்த ஒருவருக்கோ இந்த தகவல் அவர்களின் வாழ்நிலையை மாற்றக்கூடியதாக இருக்கலாம்.
அப்படி அவர்களின் வாழ்வை மாற்றக்கூடிய மாற்றம் அறக்கட்டளை மற்றும் சேர்க்கை விண்ணபத்திற்கான இணையதள முகவரி https://www.maatramfoundation.com 
மாற்றம் அறக்கட்டளை
Numbers that tell story!
பலரும் தன்னலச்சகதியில் சிக்கிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், ‘வாழ்வென்பது வாழ்தல் மட்டுமல்ல வாழ்விப்பதும் கூட’ என்ற பொன்மொழியை செயலில் காட்டிவரும் ‘மாற்றம் அறக்கட்டளைக்கும்’ அதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் அத்தனை நல்உள்ளங்களுக்கும் பாராட்டுக்களோடு அன்பும்! நன்றியும்!
3

ஆடி மாத தரிசனம் 10: விக்ரமாதித்தன் வழிப்பட்ட காளி திருக்கோவில்! மூன்று கைகளுடன் காட்சி தரும் அம்பிகை!

0

ஆடி மாத தரிசனம் 10: விக்ரமாதித்தன் வழிப்பட்ட மாகாளி திருக்கோவில். தமிழகத்தில் ஒரு உஜ்ஜயினி மாகாளி திருக்கோவில். திருச்சி சமயபுரம் அருகே உள்ள மாகாளிக்குடி சிறப்புகள்.

பாரத தேசத்தில் அன்னை காளி தேவிக்கு பக்தர்கள் பலர் இருந்தனர் இருந்தும் வருகின்றனர். காளி ஞானத்தை வழங்கும் மகா சக்தி.

அவளை வழிபட்டால் ஞானம், கல்வி, செல்வம், வீரம் என அனைத்தும் கிடைக்கும் என்பது கண்கூடான உண்மை.

எண்ணற்ற மன்னர்கள் காளியை பூஜித்து அவள் அருளால் உலகயையே அடக்கி ஆண்டனர்.

அந்த வரிசையில் உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னன் விக்ரமாதித்யன் ஆவான். தமிழகத்தில் அவன் பிரதிட்டை செய்த காளியே மாகாளிக்குடி உஜ்ஜயினி காளி திருக்கோவில் ஆகும்.

உஜ்ஜயினி காளி வரலாறு

விக்ரமாதித்யன் நாடாறு மாதம் காடாறு மாதம் ஆண்டு வந்தான். அப்படி அவன் காடாறு மாதம் வரும் பொழுது தன் இஷ்ட தெய்வமான காளியை கூடவே கொண்டு சென்று பூஜைகள் செய்வான்.

ஒரு முறை அவன் காடாறு மாதம் வந்த பொழுது காவிரி கரையோரம் இருந்த இக்காட்டில் தங்கி காளியை வைத்து பூசித்து வந்தான்.

அவன் ஆறு மாதம் முடிந்து திரும்பும் வேளையில் காளி விக்ரகத்தை எடுக்க முயற்சி செய்தான் ஆனால் எடுக்க இயலவில்லை. தன்னுடன் வருமாறு மன்றாடினான்.

அன்னை காளி அவன் முன் தோன்றி தனது சக்தி இங்கேயே நிலைத்திருக்கும். இவ்விடத்திலேயே கோவில் அமைத்து வழிபடுமாறு கூறினாள்.

அதன் பின் இங்கேயே அம்பிகைக்கு சன்னதி அமைத்து வழிபட்டான் என்கிறது தல வரலாறு.

கோவிலின் சிறப்புகள்

அம்பிகை உஜ்ஜயினி மாகாளி தனி சன்னதி கொண்டு கற்ப கிரகத்தில் வீற்றிருக்கிறாள். இவளின் பெயராலே மாகாளிக்குடி என்ற திருநாமத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.

இங்கே ஆனந்த சௌபாக்கிய சுந்தரி என்ற திருநாமத்தில் அம்பிகை அருள்பாலிக்கிறாள். அர்த்தனாரி ரூபமாக அன்னை தாண்டவ கோலத்தில் அசுரனை வதைக்கும் கோலத்தில் உள்ளாள்.

வேறு எங்கும் இல்லாத வண்ணன் ஆனந்த சௌபாக்கிய சுந்தரி அம்பிகையின் வலது பாகம் அம்பிகையும் இடது பாகம் சிவனும் மாறி அமைந்துள்ளனர்.

மேலும் அம்பிகைக்கு மூன்று கைகள் மட்டுமே உள்ள ஒரே ஆலயம் இதுவே ஆகும். சூலம், கபாலம், தீச்சுவாலை தாங்கி ஆனந்த முகத்துடன் அன்னை காட்சி தருகிறாள்.

இங்கே விக்ரமாதித்யன் தம்பி களுவனுக்கும், வேதாளத்திற்கும் சிலைகள் உள்ளது. வேதாளத்திற்கு வேறு எங்கும் சிலைகள் கிடையாது.

இங்கே விநாயகர், சாஸ்தா, அலர்மேல் மங்கை, பிரசன்ன வெங்கடாசலபதி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, விலங்குத்துறையான், சந்தான கோபால கிருஷ்ணன், சுப்ரமணியர், ஆஞ்சநேயர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளது.

விலங்குத்துறையானே சங்கிலி கருப்பர் ஆவார். இவரே இக்கோவிலின் க்ஷேத்ர பாலகராக அருள்புரிகிறார்.

ஏக கலசம் மட்டுமே அமைந்த அம்பிகை விமானம் சிவசக்தி ஐக்கிய தத்துவத்தை விளக்குகிறது.

ஞானத்தை அளிப்பாள் உஜ்ஜயினி மாகாளி!

காளியே ஞானத்தின் வடிவமாகவும் மோட்சத்தை வழங்கும் சக்தியாவாள்.
உஜ்ஜயினி மாகாளியை அருளால் தான் விக்ரமாதித்யன் வேதாளத்தின் கேள்விகளுக்கு பதில் கூறும் சக்தியை பெற்றான்.

தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அனைத்து செல்வங்களையும் அளிக்கும் அன்னையே உஜ்ஜயினி மாகாளி.

அனைவரும் சமயபுரம் சென்றால் தவறாமல் அருகில் உள்ள உஜ்ஜயினி மாகாளியை சென்று தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

அமைவிடம்: உஜ்ஜயினி மாகாளி திருக்கோவில், மாகாளிக்குடி. திருச்சி சமயபுரத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

தரிசன நேரம் : காலை 6 – மதியம் 1 மணி வரை. மாலை 4 – 08.30 மணி வரை.

3

வைரலாகும் கோப்ரா சியான் விக்ரம் பிரத்யேக புகைப்படம்!

0
Chiyaan Vikram Cobra Movie

Chiyaan Vikram Cobra Stills; வைரலாகும் கோப்ரா சியான் விக்ரம் பிரத்யேக புகைப்படம்! கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள சியான் விக்ரமின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமின் பிரத்யேகமான புகைப்படம் வைரலாகி வருகிறது.

இமைக்கா நொடிகள் புகழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

வித்தியாசமான தலைப்பு கொண்ட இந்தப் படத்தில் சியான் விக்ரம் முதல் முறையாக 15 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கோப்ரா படத்தின் சியான் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே எஸ் ரவிக்குமார், ஜான் விஜய், கனிகா, ரோபோ சங்கர், பூவையார், பத்மபிரியா ஜானகிராமன், மிர்ணாளினி ரவி, டிஎஸ்ஆர், ரோஷன் மேத்யூ ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் அதிகப்படியான காட்சிகள் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இருக்கிறது.

கொரோனா பாதிப்பு முற்றிலும் சரியான பிறகு கோப்ரா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் சியான் விக்ரமின் பிரத்யேகமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அண்மையில், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் டிராக் தும்பி துள்ளல் பாடல் வெளியாகி யூடியூப்பில் 5 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3