Home Blog Page 13

டுவிட்டரில் டிரெண்டாகும் #50DaysToGoForAnbullaGauthamBday ஹேஷ்டேக்!

0
Gautham Karthik Birthday Celebration

Gautham Karthik; டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #50DaysToGoForAnbullaGauthamBday கௌதம் கார்த்திக் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி, தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், டுவிட்டரில், #50DaysToGoForAnbullaGauthamBday என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

கௌதம் கார்த்திக் பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில், #50DaysToGoForAnbullaGauthamBday என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். எத்தனையோ மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது மகன் கௌதம் கார்த்திக் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடல் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்தப் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார். அதோடு விஜய் விருது, சைமா விருதுகளை பெற்றார்.

கடல் படத்தைத் தொடர்ந்து, என்னமோ ஏதோ, வை ராஜா வை, முத்துராமலிங்கம், ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மஹாதேவகி, இந்திரஜித்,

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமௌலி, தேவராட்டம் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது முஃப்தி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி கௌதம் கார்த்திக் தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவரது பிறந்தநாளுக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டுவிட்டரில், #50DaysToGoForAnbullaGauthamBday என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், கௌதம் கார்த்திக் தனது அம்மா ராகினி உடன் கடற்கரையில் மாஸ் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Gautham Karthik With His Mother

3

Vijay Antony Birthday: பிச்சைக்காரன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Pichaikkaran2 First Look Poster

Pichaikkaran2 First Look Poster; பிச்சைக்காரன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! விஜய் ஆண்டனியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி திரைக்கு வந்த படம் பிச்சைக்காரன். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை சாதனா டைட்டஸ் நடித்திருந்தார்.

விபத்தில் கோமா நிலைக்கு சென்ற தனது அம்மாவை காப்பாற்றுவதற்கு 48 நாட்கள் பிச்சை எடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விஜய் ஆண்டனி அதனை செய்கிறார்.

சாமியாரின் அறிவுரைப்படி, விஜய் ஆண்டனி பல தடைகளையும், சோதனைகளையும் கடந்து 48 நாட்கள் பிச்சை எடுக்கிறார்.

இறுதியில், அம்மாவிற்கும் குணமடைய, காதலியான சாதனா டைட்டஸை காதலித்து கரம் பிடிக்கிறார்.

இதற்கிடையில், தான் ஒரு கோடீஸ்வரன் என்ற உண்மையை யாருக்கும் சொல்ல கூடாது என்பது நிபந்தனை. அதற்கேற்ப அம்மா, காதலி உட்பட யாரிடமும் அவர் சொல்லவே இல்லை.

விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் வந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட ரூ.45 கோடி வரையில் பிச்சைக்காரன் படம் வசூல் குவித்துள்ளது.

இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து நிச்சயமாக இந்தப் படத்தின் 2ஆம் பாகம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்பவே, விஜய் ஆண்டனியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பிச்சைக்காரன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரில், விஜய் ஆண்டனி பின்புறம் திரும்பி நிற்பது போன்றும் கோட் அணிந்திருப்பது போன்றும், அவருக்கு முன்னால் மக்கள் நிற்பது போன்று மின்னல் வெட்டுவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிச்சைக்காரன் 2 படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். விஜய் ஆண்டனி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

விஜய் ஆண்டனியே இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன் புகழ் விஜய் ஆண்டனி பர்த்டே டுடே!

0
HBD Vijay Antony

Vijay Antony; திமிரு புடிச்சவன் விஜய் ஆண்டனி பர்த்டே டுடே! இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இன்று தனது 45ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

விஜய் ஆண்டனி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பிறந்தவர் விஜய் ஆண்டனி. சென்னை லயோலா கல்லூரியில் ஒலி பொறியாளராக (Sound Engineer) பட்டம் பெற்றார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வந்த சின்ன பாப்பா பெரிய பாப்பா சீசன் 1 என்ற தொலைக்காட்சி தொடரில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதன் பிறகு தளபதி விஜய் நடித்த சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் சாத்திக்கடி போத்திக்கடி என்ற பாடலை பாடவும் செய்துள்ளார். இவ்வளவு ஏன், காதலில் விழுந்தேன் என்ற படத்தில் வரும் நாக்க மூக்கா என்ற பாடலுக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு Cannes Golden Lion என்ற விருதை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடர்ந்து, இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், பிலிம் எடிட்டர், ஆடியோ பொறியாளர், தயாரிப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

நான் படத்தைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கொலைக்காரன் என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

எனினும், கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வந்த பிச்சைக்காரன் என்ற படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதோடு, பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டும் கொடுத்தது.

தற்போது, தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, ஆனந்த கிருஷ்ணன் படம், விஜய் மில்டன் படம், பாலாஜி கே குமார் ஆகியோரது படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது 45ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதோடு, அவரது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, பிச்சைக்காரன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். வரும் 2021 ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு வெளியாக இருந்த படங்கள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படமும் 2021 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

சன் டிவியில் தல அஜித்தின் வீரம்: ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
Thala Ajith Veeram On Sun TV

Veeram On Sun TV; சன் டிவியில் தல அஜித்தின் வீரம்: ரசிகர்கள் கொண்டாட்டம்! தல அஜித் நடித்த வீரம் படம் இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சன் டிவியில் அஜித் நடித்த வீரம் படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இயக்குநர் சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் வந்த முதல் படம் வீரம். அண்ணன் தம்பிகளோடு ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி வீரம் படம் உருவாக்கப்பட்டது.

வீரம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இசை, தேவி ஸ்ரீ பிரசாத். விஜயா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் வீரம் படத்தை தயாரித்திருந்தது.

இந்தப் படத்தில் அஜித், சாதியைப் பற்றி வசனம் பேசியிருப்பார். ஆம்,

நீ தேவன் – னு நினச்சா தேவன்

நாடான் – னு நினச்சா நாடான்

வன்னியன் – னு நினச்சா வன்னியன்

கவுண்டன் – னு நினச்சா கவுண்டன்

அய்யர் – னு நினச்சா அய்யர்

நீ எந்த சாதினு நினைக்கிறியோ நான் அந்த சாதி டா…

ரத்தத்தில் சாதி பாக்காத

மொத்தத்தில் நான் உழைக்கிற சாதிடா…

இப்படியெல்லாம் வசனம் பேசி தனது ரசிகர்களை வியக்க வைத்திருப்பார்.

வீரம் படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

அதன் பிறகு தெலுங்கில் கட்டமராயுடு என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வந்த வீரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.

சிவா – அஜித் கூட்டணிக்கு கிடைத்த முதல் பரிசு வீரம் படத்தின் வெற்றி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா – அஜித் கூட்டணியில் வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வந்து ஹிட் கொடுத்தன.

இந்த நிலையில், வீரம் படம் திரைக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. பல முறை சன் டிவியில் வீரம் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆம் தேதி அஜித் நடித்த விஸ்வாசம் படம் சன் டிவியில் 3ஆவது முறையாக ஒளிபரப்பானது. தற்போது ஹாட்ரிக் வெற்றி கொடுத்துள்ளது.

ஆம், கடந்த 12 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட விஸ்வாசம் படத்தை டிவியில் மட்டும் 16.12 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sun TV Telecast Thala Ajith Veeram Movie Today at 6.30 pm

Sun TV Thala Ajith Movie Veeram

3

தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த விமல், சூரிக்கு அபராதம்!

0
Soori and Vimal in Kodaikanal

Soori and Vimal; தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த விமல், சூரிக்கு அபராதம்! ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஏரியில் மீன் பிடித்த விமல் மற்றும் சூரிக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, எச்சரிக்கப்பட்டுள்ளது.

சூரி மற்றும் விமலுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அச்சத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்திய கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா லாக்டவுன் காரணமாக சுற்றுலா தளங்களுக்கு சென்றுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தடையையும் மீறி நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் கொடைக்கானலுக்கு சென்றதோடு, மீன் பிடித்தும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

கடந்த 17 ஆம் தேதி சூரி, விமல் மற்றும் 2 இயக்குநர்கள் ஆகியோர் கொடைக்கானலுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு அனுமதி பெறாமலும், கட்டணம் செலுத்தாமலும் சென்றுள்ளனர்.

அதோடு, அந்த ஏரியில் மீன்பிடித்தும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிரவும் செய்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் இருவருக்கும் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் இருவரும் இபாஸ் பெற்று சென்றார்களா? இல்லையா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். ஆனால், அவர் இ பாஸ் பெற்று சென்றாரா? இல்லையா என்பது சர்ச்சையான நிலையில், ஏற்று அவர் இபாஸ் பெற்று சென்றதற்கான ஆதாரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பிரபலங்களே இப்படி செய்யலாமா? என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.

3

ஹாட்ரிக் சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம்!

0
Viswasam TRP Rating

Viswasam TRP Rating; 3ஆவது முறையாக சாதனை படைத்த தல அஜித்தின் விஸ்வாசம்! தல அஜித்தின் விஸ்வாசம் படம் 3ஆவது முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு டிஆர்பியில் முதலிடம் பிடித்து 3ஆவது முறையாக சாதனை படைத்துள்ளது.

3ஆவது முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு டிஆர்பியில் முதலிடம் பிடித்து தல அஜித்தின் விஸ்வாசம் படம் சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வந்த படம் விஸ்வாசம்.

குடும்ப கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிக்காட்டியது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இமான் இசை என்றால் சும்மாவா.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலையில், கடந்த 12 ஆம் தேதி  மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இது தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்தப் படத்தை 16.12 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இதற்கு முன்னதாக, 15.59 பேர் பார்த்துள்ளனர்.

முதல் முறையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, 18.14 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை ஒளிபரப்பு செய்யப்பட்டு ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. விஸ்வாசம் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, டுவிட்டரில், #Viswasam விஸ்வாசம் ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆடி மாத தரிசனம் 9: புவனேஸ்வரியும் அஷ்டா தச புஜ மகாலட்சுமியும் ஒரே நேர்க்கோட்டில் அமர்ந்த ஆலயம்!!

0

ஆடி மாத தரிசனம் 9: புவனங்களை ஆளும் புதுக்கோட்டை புவனேஸ்வரி. ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம். அஷ்டா தச புஜ மகாலட்சுமி & புவனேஸ்வரி ஒரே நேர்க்கோட்டில் அமர்ந்த ஆலயம்.

ஏழு புவனங்களை ஆளும் அன்னை புவனமாதா பல்வேறு திருத்தலங்களில் பல திருநாமங்களில் காட்சி அளித்து வருகிறாள்.

உலகாளும் அன்னை, புவனேஸ்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் சக்தி திருத்தலமே புதுக்கோட்டை புவனேஸ்வரி ஆலயம் ஆகும்.

தச மகா வித்யாவில் நான்காவது வித்யா புவனேஸ்வரியே ஆவாள். பிரபஞ்சத்தின் வடிவமாக விளங்குகிறாள்.

திருக்கோவில் வரலாறு

முற்காலத்தில் ஜட்ஜ் சுவாமிகளின் ஆஸ்ரமம் ஆக இந்த இடம் இருந்தது. அதன் பின் சாந்தானந்த சுவாமிகள் 1936-இல் ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானத்தை எழுப்பினார். அதன் பின்பு இங்கே புவனேஸ்வரி அம்மனை பிரதிட்டை செய்தார்.

ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானம் என்றாலும் புவனேஸ்வரி திருக்கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

அன்னை புவனேஸ்வரியும் சண்டிகா பரமேஸ்வரியின் வடிவமான அன்னை அஷ்டாதச புஜ மகாலட்சுமி துர்கையும் ஒரே நேர்க்கோட்டில் எதிர் எதிரே சன்னதி கொண்டுள்ளனர் என்பது சிறப்பாகும்.

திருக்கோவில் அமைப்பு

கோவில் உள்ளே நுழைந்தும் ஜட்ஜ் சுவாமிகளின் சமாதி இருக்கும். இடது புறம் சென்றால் அன்னை புவனேஸ்வரி மற்றும் அஷ்டா தசபுஜ மகாலட்சுமி நேர் எதிர் சன்னதிகள்.

மாதா புவனேஸ்வரிக்கு முன் ஸ்ரீ சக்ர மகா மேரு பிரதிட்டை செய்துள்ளனர்.

கோவிலை சுற்றி வந்தால் பஞ்ச முக கணபதி, பஞ்ச முக ஆஞ்சநேயர், தன்வந்திரி, 18 சித்தர்கள், சிவன், 25 முக சதாசிவன், பொற்பனையான், சாஸ்தா, தண்டபானி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

அன்னை புவனேஸ்வரிக்கும் அஷ்டா தச புஜ மகாலட்சுமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடப்பது மிகவும் சிறப்பாகும்.

யாகம் முடிந்ததும் மழை!

இங்கே பெரிய யாக குண்டம் அமைந்துள்ளது. இங்கே வருடத்துக்கு ஒரு முறை மிகப்பெரிய சண்டி ஹோமம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் யாகம் முடிந்த பின் நல்ல மழை பொழிகிறது என்பது அதிசயமான உண்மை.

புவனம் ஆளும் புவனேஸ்வரி!

இந்த பிரபஞ்சத்தில் புவனேஸ்வரியின் உத்தரவின்றி ஒரு அணுவும் அசையாது.

இக்கோவிலில் அர்ச்சனை சீட்டோ அல்லது காணிக்கை உண்டியலோ கிடையாது. அமைதியாக அமர்ந்து அன்னையை எண்ணி தியானித்தால் போதும். தன்னை நம்பி வந்தவர்களை கைவிடாமல் காப்பாள் மாதா புவனேஸ்வரி.

அனைவரும் புதுக்கோட்டை சென்றால் தவறாமல் புவனேஸ்வரி அன்னையை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

அமைவிடம்: புவனேஸ்வரி அம்மன் ஆலயம், புதுக்கோட்டை.

ஆடி மாத தரிசனம் தொடரும்…!

3

சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Vaadivasal First Look Poster

Vaadivasal First Look; சூர்யாவின் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வாடி வாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

காப்பான் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், ஜாக்கி ஷெராஃப், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த மே மாதம் படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து, சூர்யா இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து முதல் முறையாக வெற்றிமாறன் உடன் இணைந்து ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த நிலையில், சூர்யாவின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அந்தப் போஸ்டரில், சூர்யா வெறும் பனியன் மற்றும் கழுத்தில் டாலர் அணிந்திருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் வாடிவாசல் படத்தில் சூர்யா மாடுபிடி வீரனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் சூர்யா இருவேறு கதாபாத்திரங்களில் அதுவும், அப்பா – மகன் ரோலில் நடிப்பதாக செய்தி வெளியானது.

எழுத்தாளர் பூமணியன் எழுதிய வெக்கை நாவலை கொண்டு அசுரன் படம் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் அதில் வெற்றியும் கண்டார். தற்போது, வாடிவாசல் என்ற குறுநாவலை படமாக இயக்க இருக்கிறார்.

கடந்த 1959 ஆம் ஆண்டு எழுத்தாளர் சிசு செல்லப்பா எழுதிய குறுநாவல் வாடிவாசல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து டுவிட்டரில், #Vaadivasal என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

இருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யா: பேராசிரியர் கல்யாணி மகிழ்ச்சி!

0
Suriya Birthday

Suriya Agaram Foundation; இருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யா: பேராசிரியர் கல்யாணி மகிழ்ச்சி! இருளர் வாழ்க்கையை படமாக்கி வரும் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரைப் பற்றிய சில முக்கியமான தகவல்களையும் பேராசிரியர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

இருளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் ஒரு புதிய படத்தை சூர்யா தயாரித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

இதில், சூர்யாவுக்கு வழியாகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருப்பவர் பேராசிரியர் கல்யாணி.

இவர், திண்டிவனம் பகுதியில் தாய்த்தமிழ் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அந்தப் பகுதியில் வசிக்கும் இருளர் மாணவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் கொடுத்து வருகிறார்.

இன்று சூர்யாவின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யாவின் அறிமுகம் கிடைத்த நாட்களையும், அவருடன் பயணிக்கும் அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 2007 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் த செ ஞானவேல் என்பவர் மூலம் சூர்யாவின் அறிமுகம் கிடைத்தது. அகரம் அறக்கட்டளையில் விதை என்ற கல்வி உதவித்திட்டத்தை சூர்யா தொடங்கினார்.

12 ஆம் வகுப்புக்குப் பிறகு மேல்படிப்பு சேர முடியாத வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவும் திட்டம் தான் இந்த விதை திட்டம்.

அப்படி வறுமையில், வாடும் மானவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.

அது எனக்கு மகிழ்ச்சியான பணி. 26 ஆண்டுகள் அரசுக் கல்லூரியில் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவன் என்ற முறையில், கல்வியில் வாய்ப்பு கிடைக்காத ஒடுக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு உதவி செய்வதில் ஆர்வமாக நான் ஈடுபட்டேன்.

ஆரம்பத்தில் வருடத்திற்கு 200, 300 மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வந்தோம். இன்று 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறோம்.

அகரம் பவுண்டேசனுக்கு ஒரு மாணவர் வந்துவிட்டார் என்றால், அவரது வாழ்க்கை உயரும் என்பது உண்மை.

இருளர், ஈழத்தமிழர்களின் குழந்தைகள், நரிக்குறவர் இனத்தவர் என்று கூடுதல் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு இலவச கல்வி அளித்து வருகிறோம்.

அகரம் பவுண்டேசன் மூலமாக கல்வி பயின்ற இருளர் மாணவர் ஒருவர் பொறியியல் படிப்பு முடித்து பெரிய நிறுவனம் ஒன்றில் பெரிய பதவியில் பணியாற்றி வருகிறார்.

வெளிநாடு செல்லவும் இருக்கிறார். அவர் ஒரு ஏழை தொழிலாளியின் மகன். இருளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் ஒன்றை சூர்யா தயரித்து வருகிறார். அது முற்றிலும் லாக்கப் மரணம் தொடர்பானது.

அதில், இருளர் மக்களே நடித்துள்ளார்கள். இருளர் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது.

சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட சூர்யாவின் பிறந்தநாளுக்கு, எங்களது பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இருளர் மக்களின் சார்பாக சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

என் சகோதரர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: சுரேஷ் ரெய்னா!

0
Suriya Birthday Special Poster

Suriya Birthday Poster; என் சகோதரர் மற்றும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: சுரேஷ் ரெய்னா! இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

என் சகோதரரும் நடிகருமான சூர்யாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இன்று சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே என்ற பாடலின் ஒரு நிமிட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் காமென் டிபி உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், என் சகோதரரும் நடிகருமான சூர்யாவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் போஸ்டரை பார்க்கும் போது அது சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படம் போன்று தெரிகிறது.

மேலும், #HappyBirthdaySuriya என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்த டுவிட்டர் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. #SooraraiPottru டுவிட்டர் டிரெண்டிங்கில் 2ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3