Home Blog Page 14

சூர்யா பர்த்டே ஸ்பெஷல்: காட்டுப்பயலே வீடியோ சாங் வெளியீடு!

0
Kaattu Payale Promo Video Song

Kaattu Payale Promo Video Song; சூர்யா பர்த்டே ஸ்பெஷல்: காட்டுப்பயலே வீடியோ சாங் வெளியீடு! சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காட்டுப்பயலே என்ற ஒரு நிமிட வீடியோ புரோமோ வெளியாகியுள்ளது.

காட்டுப்பயலே பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இவர், தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில், ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, ஜாக்கி ஷெராஃப், மோகன் பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த மே மாதமே இந்தப் படம் திரைக்கு வர வேண்டியது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

கொரோனா முற்றிலும் சரியான பிறகு சூரரைப் போற்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யா இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்ற காட்டுப்பயலே என்ற பாடலின் ஒரு நிமிட புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மேலும், இருவரும் மணக்கோளத்தில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இதில், இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அப்போது பாடும் பாடலே இந்த காட்டுப்பயலே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக, #KaattuPayale என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

ஆடி மாத தரிசனம் 8: கண் நோய் தீர்ப்பாள் அன்பில் மாரியம்மன்!

0

ஆடி மாத தரிசனம் 8: கண் நோய் தீர்ப்பாள் அன்பில் மாரியம்மன். ஏழு குழந்தைகளுடன் காட்சி தரும் அன்பில் மாரியம்மன். தஞ்சம் என்று வந்தோரை காப்பாள் மாரியம்மன்.

தமிழகத்தில் மாரியம்மன் வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாரி என்றாலே மழை தெய்வமாகவும், மக்களை பிணியிலிருந்து காக்கும் தெய்வமாகவும் அறியப்படுகிறாள்.

இப்படிப்பட்ட மாரியம்மன் இல்லாத ஊர்களே கிடையாது தமிழகத்தில். அதிலும் தமிழகத்தில் ஏழு மாரியம்மன் கோவில்கள் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் மக்களின் துயரை துடைப்பவளாக அன்னை மாரிகா தேவி அமர்ந்த திருத்தலமே அன்பில் மாரியம்மன் ஆலயம் ஆகும்.

அன்பில் திருக்கோவில் வரலாறு

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்த பொழுது இந்த அம்பிகை இங்குள்ள தல விருட்சமான வேப்பமரத்தடியில் தங்கினாள் என்று கூறப்படுகிறது.

அதன் பின்பு உறையூரை ஆண்ட சோழ மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது. சமயபுர மாரியம்மனும் அன்பில் மாரியம்மனும் சகோதரிகள் என்று மக்கள் கூறுகின்றனர்.

மற்ற அம்மன் கோவில்களில் அம்மனுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் அன்பில் ஆலயத்தில் ஏழு குழந்தைகளுடன் அம்பிகை காட்சி தருகிறாள்.

சிறிய கோவில் என்றாலும் அம்பிகையின் கீர்த்தியானது உலகெங்கும் பரவியுள்ளது. கேட்ட வரம் தரும் கற்பக விருட்சமாக உள்ளாள் அன்பில் மாரியம்மன்.

கண் நோய் தீர்க்கும் மருந்து!

அன்பில் மாரியம்மன் கோவிலில் கண் பிரிச்சனைகளை தீர்க்கும் பச்சிலை மருந்து ஊற்றப்படுகிறது.

கோவிலில் தினமும் மதியம் 12 மணிக்கு கோவில் பூசாரி கண் நோய்களுடன் செல்பவர்கள் கண்களுக்கு பச்சிலை மருந்து ஊற்றுகிறார்.

அம்மருந்தினால் பூரண குணமடைந்த ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அம்மை, கண் நோய் மற்றும் அனைத்து பிரச்சனைகளும் இவளை தரிசித்தாலே நீங்கும்.

குழந்தை வரம் வேண்டுவோர் விரதமிருந்து வழிபட்டால் குழந்தை வரம் தருவாள் மாரியம்மன்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

ஆனியில் மகா சண்டியாகம் நடைபெறுகிறது. வைகாசியில் பஞ்ச பிரகார உற்சவமும் நடைபெறுகிறது.

மக்களை பெற்ற மகா மாரியம்மனாக அனைவரையும் காத்தருள்கிறாள் அன்பில் மாரியம்மன்.

அனைவரும் லால்குடி சென்றால் தவறாமல் அன்பில் மாரியம்மனை தரிசனம் செய்து அவள் அருள் பெறுவோம்.

அமைவிடம்: அன்பில் மாரியம்மன் திருக்கோயில், அன்பில், லால்குடி, திருச்சி மாவட்டம் .
தரிசன நேரம்: காலை 7 முதல் மதியம் 1 வரை. மாலை 4 முதல் இரவு 8 வரை.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!

3

நிதின் – ஷாலினி நிச்சயதார்த்தம்: வரும் 26ல் கல்யாணம்: வைரலாகும் புகைப்படங்கள்!

0
Nithin Engagement

Nithin Engagement; நிதின் ஷாலினி நிச்சயதார்த்தம்: வரும் 26ல் கல்யாணம்: வைரலாகும் புகைப்படங்கள்! தெலுங்கு நடிகர் நிதினுக்கும், ஷாலினுக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஹைதராபாத்தில் நடந்த நிதின் ஷாலினி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நிதின். ஜெயம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் மூலம் நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பிரபலமானார். சதாவும் பிரபலமானார். படமும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், பின்னணிப் பாடகராகவும் இருக்கிறார். Gunde Jaari Gallanthayyinde என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். Lachhamma and Ding Ding Ding ஆகிய பாடல்களை பாடியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி நிதின், ஷாலினி இருவரும் தங்களது திருமண முறைகளை பாரம்பரிய விழாவுடன் ஹைதராபாத்தில் கொண்டாடினர்.

இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள குண்டுகுரி என்ற பகுதியில் இன்று ஷாலினி மற்றும் நிதினுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில், இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருவீட்டாரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து வரும் 26 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்னுமா அரண்மனையில் மிகவும் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது. இதற்கான அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் நிதின் தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

நிதின் மற்றும் ஷாலினி திருமணத்தை துபாயில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், கொரோனா தாக்குதல் காரணமாக துபாயில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு ஹைதராபாத்துக்கு மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சூர்யாவின் பிறந்தநாளை போஸ்டரை வெளியிடும் சுரேஷ் ரெய்னா!

0
Suresh Raina Releasing Suriya Birthday Poster

Suriya Birthday Poster; சூர்யாவின் பிறந்தநாளை போஸ்டரை வெளியிடும் சுரேஷ் ரெய்னா! நாளை 23 ஆம் தேதி சூர்யா தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது பிறந்தநாள் போஸ்டரை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட இருக்கிறார்.

சூர்யாவின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட புதிய போஸ்டர் ஒன்றை இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நாளை வெளியிடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நாளை 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை ரசிகர்கள் காமென் டிபி உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நாளை அவரது பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.

மேலும், #HappyBirthdaySuriya என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை தற்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர்.

இந்த டுவிட்டர் ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. #SooraraiPottru டுவிட்டர் டிரெண்டிங்கில் 2ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

முகத்தில் கேக் தடவி பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு: வைரல் வீடியோ!

0
Yogi Babu Bithday Today

Yogi Babu Birthday Celebration; முகத்தில் கேக் தடவி பிறந்தநாள் கொண்டாடிய யோகி பாபு: வைரல் வீடியோ! காமெடி நடிகர் யோகி பாபு இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

யோகி பாபு இன்று தனது 35ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து நிற்பவர் யோகி பாபு. வடிவேலு, விவேக், சூரி ஆகியோருக்கு அடுத்த வரிசையில், தற்போது யோகி பாபு இருக்கிறார்.

நடிகர் அமீர் நடிப்பில் வந்த யோகி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. ஆனால், அந்த படம் எல்லாம் அவருக்கு பேசப்படவில்லை.

தொடர்ந்து சிரித்தால் ரசிப்பேன், தில்லாலங்கடி, தூங்கா நகரம், ராஜபாட்டை, கலகலப்பு, பட்டத்து யானை, சூது கவ்வும், சென்னை எக்ஸ்பிரஸ், வீரம், ஐ, காக்கி சட்டை, கொம்பன், இந்தியா பாகிஸ்தான், டிமாண்டி காலனி, கிருமி, வில் அம்பு, போக்கிரி ராஜா, ஜாக்சன் துரை, தர்பார் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 30க்கும் அதிகமான படங்களில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். கூர்கா, தர்மபிரபு ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

தற்போது, இவரது நடிப்பில் உருவாகியுள்ள காக்டெய்ல் படம் வெளியாக இருக்கிறது. மேலும், டேனி, டிக்கிலோனா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை 2, அடங்காதே, நின்று கொல்வான், ஜகஜால கில்லாடி,

மண்டேலா, கடைசி விவசாயி, கன்னி ராசி, பிஸ்தா, டிரிப், பன்னி குட்டி, வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம், மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வீட்டிலே இருந்து கொண்டு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நாடு திரும்பிய சஞ்சய்: உற்சாகத்தில் தளபதி விஜய்!

0
Thalapathy Vijay Son Sanjay

Thalapathy Vijay Son; நாடு திரும்பிய சஞ்சய்: உற்சாகத்தில் தளபதி விஜய்! ஒரு வழியாக சஞ்சய் நாடு திரும்பியதைத் தொடர்ந்து விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்து இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு தற்போது வீடு திரும்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் கனடா நாட்டில் பிலிம் மேக்கிங் படிப்பு படித்து வந்தார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால், அவர் தாயகம் திரும்ப முடியாமல் கனடாவிலேயே சிக்கி தவித்தார்.

ஆனால், தான் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக சஞ்சய் கூறியிருந்தார். இது தொடர்பான செய்தியும் வெளியானது.

இந்த நிலையில், சஞ்சய் ஒரு வழியாக நாடு திரும்பியுள்ளார். விமானம் மூலமாக சென்னை வந்த சஞ்சய் நட்சத்திர ஹோட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர், தனது பெற்றோரை பார்க்கச் சென்றதாக தகவல் வெளியானது.

மகனை பார்த்த சந்தோஷத்தில் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

3

ஆடி மாத தரிசனம் 7: வீடே கோவில்! கோவிலே வீடு! நெமிலி பாலா பீடம்!

0

ஆடி மாத தரிசனம் 7: வீடே கோவில். கோவிலே வீடு. நெமிலி பாலா பீடம் வரலாறு மற்றும் நெமிலி பாலா திரிபுரசுந்தரி அம்மன் சிறப்புகள்.

 

சிவத்தை ஆளும் அந்த பராசக்தியின் மகிமைகளும், அவள் தானாக விருப்பமொடு வந்தமர்ந்த புராணங்களும் பல உள்ளன.

ஒருவர் மனதார பக்தி செலுத்தினால் போதும் அவளாக நம்மை தேடி ஓடி வந்து விடுவாள் என்பது திண்ணம்.

அன்னை லலிதா திரிபுரசுந்தரியின் குழந்தை வடிவமே பாலா திரிபுரசுந்தரி ஆவாள். குழந்தை குணம் கொண்ட அம்பிகை குழந்தை பாலாவாக வந்து அமர்ந்த இடமே நெமிலி பாலா பீடம் ஆகும்.

வீடே கோவில்! கோவில் வீடு!

இராமசுவாமி ஐய்யர் என்பவர் வேலூர் மாவட்டம் தாங்கி என்ற சிற்றூரில் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு அவ்வூரை விட்டே வெளியேறினார்.

குடும்பத்தோடு நெமிலி என்கிற இவ்வூருக்கு வந்தார். தங்குவதற்கு இடம் கிடைக்கும் வரை அவ்வூரில் இருக்கும் ஒரு பாழடைந்த சத்திரத்தில் தங்களாம் என்று முடிவு செய்து அங்கே தங்கினர்.

அவ்வூர் மக்கள் அங்கே பிசாசு உள்ளது எனவும் தங்க வேண்டாம் எனவும் கூறினர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் சத்திரத்தை தூய்மை செய்து விளக்கேற்றி இரவு தங்கினர்.

இருப்பினும் இராமசுவாமி ஐயர் இரவு முழுதும் மந்திர ஜபம் செய்தார். விடிந்ததும் ஊர் மக்கள் இராமசுவாமி ஐயர் குடும்பம் ஒரு பாதிப்புமின்றி இருப்பதை கண்டு அவர்களிடம் ஏதோ ஒரு சக்தி இருப்பதை உணர்ந்து நிரந்தரமாக அவ்வூரில் தங்க அனுமதி அளித்தனர்.

நாட்கள் கடந்தது இராமசுவாமி ஐயரின் மகன் சுப்ரமணிய ஐயர் கனவில் ஒன்பது வயது பெண் தோன்றி “அன்னை இராஜ இராஜேஸ்வரியின் கட்டளையின் படி தான் கொசஸ்தலை ஆற்றில் மிதந்து வருவதாகவும், தன்னை எடுத்து சென்று வைத்து பூஜித்தால் தொட்டதெல்லாம் துலங்கும் எனவும் கூறி மறைந்தாள்”.

மறுநாள் சுப்ரமணி நடந்ததை ஊராரிடம் கூறி ஆற்றுக்கு சென்று தேடினார். அன்னை கிடைக்கவில்லை. நம்பிக்கையை விடாது மறுநாளும் சென்று தேடினார் பாலா கிடைக்கவில்லை.

மிகுந்த வேதனையோடு திரும்பினார். அடுத்த நாளும் சென்று தேடினார் கிடைக்கவில்லை. இறுதியாக பாலாவை நினைத்து ஒரு முறை ஆற்றில் மூழ்கினார். பாலா அவர் கைகளில் வந்து அமர்ந்தாள். சுண்டு விரல் அளவு மட்டுமேயான திருவுருவம் கிடைத்தது.

அவளை கொண்டு சென்று தன் வீட்டிலேயே பிரதிட்டை செய்தார். அவரின் வீடே பாலா பீடம் ஆனது. பாலா இங்கே நவராத்ரி நாயகியாக அனைவராலும் கொண்டாடப்படுகிறாள்.

நவராத்ரி விழா இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சாக்லேட் பாலா!

நெமிலி பாலா பீடம் அழகிய வீட்டில் அமைந்த திருக்கோவில் ஆகும்.

“நான் பார்க்க நினைப்பவர்கள்தான் என்னைப் பார்க்க வருவார்கள். என்னைப் பார்க்க நினைப்பவர்கள் கோயிலுக்குத்தான் செல்வார்கள். கோயிலுக்குச் செல்ல அழைப்பு தேவையில்லை; நினைப்பே போதும். என் வீட்டிற்கு வர நினைப்பு மட்டும் போதாது; எனது அழைப்பும் வேண்டும்.” – என்பது பாலாவின் வாக்காகும்.

சிறு குழந்தை என்பதால் இவளுக்கு சாக்லேட் மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும். பிரசாதமும் அதுவே ஆகும்.

அனைவரும் செல்லமாக “சாக்லேட் பாலா” என இவளை அழைக்கின்றனர்.

காஞ்சி மகா பெரியவா ஒரு வாரம் வந்து தங்கி இங்கே பூஜைகள் செய்துள்ளார்.

ஆறாவது தலைமுறையாக இங்கே சுப்ரமணிய ஐயரின் வம்சாவளிகள் பாலா பீடத்தை நிற்வகித்து வருகின்றனர்.

குழந்தையாய் ஓடி வருவாள் பாலா!

ஞானத்தை வழங்கும் சரஸ்வதியாக, திருமண வரமருளும் பார்வதியாக, செல்வத்தை வாரி வழங்கும் இலக்குமியாக அன்னை பாலா அருளாட்சி புரிகிறாள்.

பெரிய பூஜைகள் மந்திரங்கள் தேவையேயில்லை குழந்தயை பார்க்க போவது போல் இனிப்பு மிட்டாய்களை வாங்கி சென்றாள் போதும். குழந்தையாய் நம்முடன் வருவாள் நெமிலி பாலா திரிபுரசுந்தரி.

நமது கஷ்டங்கள் குறைகளை பொசுக்கி நல்லநிலை அருள்வாள் அன்னை பாலா.

நாமும் ஒருமுறை அவளை காண வரம் வேண்டும் என்று பிராத்தனை செய்து கொண்டு அவள் அழைப்பு வந்தவுடன் சென்று தரிசிப்போம்.

அமைவிடம்: நெமிலி பாலா பீடம், நெமிலி, வேலூர் மாவட்டம். தொலைபேசி: 04177-247216.

தரிசன நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

3

Nagarjuna: பிக் பாஸ் சீசன் 4 எப்போது? இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
Bigg Boss Telugu Season 4

Bigg Boss Telugu Seson 4; பிக் பாஸ் சீசன் 4 எப்போது? இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு! பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்படுதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஸ்டார் மார் தொலைக்காட்சியில் முதல் முறையாக பிக் பாஸ் தெலுங்கு சீசன் 1 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஜூனியர் என் டிஆர் தொகுத்து வழங்கினார்.

இதையடுத்து, இந்த நிகழ்ச்சியின் 2ஆவது சீசனை நானி தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் தெலுங்கு சீசன் 2 கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அக்கினேனி நாகர்ஜூனா தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சி குறித்து கொரோனா காரணமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், வரும் 31 ஆம் தேதியுடன் லாக்டவுன் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சிக்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

கடந்த மாதம் ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஒரு மாதம் காலதாமதமாக தொடங்கப்பட இருக்கிறது.

ஆம், வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் ஏற்கனவே அன்னபூர்ணா ஸ்டூடியோவில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் நாகர்ஜூனா தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3

நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் 19 ஆவது ஆண்டு நினைவு தினம்!

0
Sivaji Ganesan

Sivaji Ganesan Death Anniversary; நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி கணேசன் 19 ஆவது ஆண்டு நினைவு தினம்! காலம் காலமாக தமிழ் சினிமாவின் அடையாளமாக போற்றப்படும் சிவாஜி கணேசனின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சிவாஜி கணேசனின் 19ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

சின்னயா மன்ராயர் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு 4ஆவது மகனாக பிறந்தவர் சிவாஜி கணேசன். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி.

சிவாஜி கணேசனின் மனைவி கமலா. இவர்களுக்கு ராம்குமார், பிரபு என்ற இரு மகன்களும், சாந்தி மற்றும் தேன்மொழி என்ற ஒரு மகள்களும் இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர், மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தினார்.

அவரது நடிப்பைக் கண்டு வியந்த தந்தை பெரியார் அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.

பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல், 9 தெலுங்கு படங்களிலும், 2 ஹிந்தி படங்களிலும், ஒரு மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

நல்ல குரல்வளம், தெளிவான தமிழ் உச்சரிப்பு, நடிப்புத் திறமை ஆகியவை இவரின் சிறப்பம்சம்.

நடிகர் திலகம், நடிப்பு சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி கணேசன் பேசிய எங்களோடு வயலுக்கு வந்தாயா, நாட்டு நட்டாயா, மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா என்றெல்லாம் அவரது வசனம் இன்றும் மக்களால் பேசப்படுகிறது.

மனோகரா, கர்ணன், ராஜ ராஜா சோழன் ஆகியவை வசனத்திற்கு பெயர் பெற்ற படங்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் என்று தேசத்தலைவர்களின் கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

அதோடு மட்டுமல்லாமல், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர் கந்தன் கருணை, திருமால் பெருமை என்று கடவுள்களின் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சிவபெருமானுக்கே உருவம் கொடுத்தவர் சிவாஜி கணேசன் என்று மக்களால் புகழப் பெற்றவர்.

பாவ மன்னிப்பு, பாச மலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பலே பாண்டியா, பார் மகளே பார், பழநி, பச்சை விளக்கு, பாரத விலாஸ்,

புதிய பறவை, தில்லானா மோகனாம்பாள், வியட்நாம் வீடு, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை என்று ஏராளமான படங்களில் தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்றைய இளம் நடிகர், நடிகைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தவர். சிவாஜி கணேசனுடன் இணைந்து சத்யராஜ், பாண்டியராஜன், விஜய், கமல் ஹாசன், ரஜினிகாந்த் என்று மாஸ் நடிகர்கள் நடித்துள்ளனர்.

சிவாஜி கணேசன் கலைமாமணி விருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன், செவாலியர் விருது, தாதாசாகேப் பால்கே விருது என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி காலமானார். இதையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசன் சிலை நிறுவப்பட்டது.

இதையடுத்து, சென்னை அடையாறில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் திறக்கப்பட்டது. இன்று அவரது 19 ஆவது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

3

மாஸ்க் அணிந்து சொகுசு கார் ஓட்டி சென்ற ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்!

0
Rajinikanth Lamborghini car Drive

Rajinikanth Lamborghini Car Drive; மாஸ்க் அணிந்து சொகுசு கார் ஓட்டி சென்ற ரஜினிகாந்த்: வைரலாகும் புகைப்படம்! மாஸ்க் அணிந்து லம்போர்கினி என்ற சொகுசு கார் ஓட்டிச் சென்ற ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு டிரைவர் இல்லாமல் தானே கார் ஓட்டிச் சென்ற ரஜினிகாந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 6ம் கட்ட லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரபலங்கள் அனைவருமே வீட்டிலேயே இருக்கின்றனர். வீட்டில் இருந்தபடி தங்களது அன்றாட பணிகளை வீடியோ எடுத்தும், புகைப்படங்களாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கு காலகட்டத்தின்போது, வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

அப்போது மெழுகுவர்த்தியுடன் தனது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே வந்து மெழுகுவர்த்தி ஏந்தி ரஜினிகாந்த் நின்றிருந்தார். அதன்பிறகு அவர் வீட்டை விட்டு வெளியிலேயே வரவில்லை.

இந்த நிலையில், ரஜினிகாந்த் தற்போது வெளியில் சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லம்போர்கினி சொகுசு காரில், டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி ரஜினிகாந்த டிரைவ் செய்கிறார். அவர் மாஸ்க் அணிந்து இருப்பதும் தெரிகிறது.

அவருக்கு அருகில் இருந்து யாரோ அதனை புகைப்படம் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதனை ரஜினி ரசிகர்கள் #LionInLamborghini என்ற பெயரில் ஹேஷ்டேக் போட்டு, டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.

ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா முற்றிலும் சரியான பிறகே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3