Home Blog Page 15

வனிதா வாழ்க்கை சீசன் 1.2.3 போன்றது: கஸ்தூரி நக்கல்!

0
Vanitha Kasthuri Issue

Vanitha Kasthuri Issue; வனிதா வாழ்க்கை சீசன் 1.2.3 போன்றது: கஸ்தூரி நக்கல்! நடிகை வனிதா 3ஆவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து டுவிட்டரில் கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது.

வனிதா மற்றும் கஸ்தூரி இருவரும் டுவிட்டரில் மோதிக் கொண்ட காட்சி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் வந்தார்.

அண்மையில், பீட்டர் பால் என்பவரை 3ஆவதாக திருமணம் செய்து கொண்டார். வனிதா – பீட்டர் பால் திருமணம் மிகவும் எளிமையாக கிறிஸ்துவ முறைப்படி நடந்தது.

இந்த திருமணம் டுவிட்டரில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் அரங்கேற்றி வருகிறது. ஆம், வனிதாவின் திருமணம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதற்கு தனது சொந்த வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என்று வனிதா எச்சரித்தார்.

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனைத் தொடர்ந்து கஸ்தூரி வனிதா திருமணம் குறித்து விமர்சித்து வருகிறார். இது குறித்து கஸ்தூரி கூறியிருப்பதாவது:

லட்சுமி ராமகிருஷ்ணனை நினைக்கும் போது இதயத்தில் ரத்தம் கசிகிறது. வனிதாவின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மோசமாக உள்ளது. இணையதள துஷ்பிரயோகம் செய்கிறார் என்றார்.

இதற்கு பதிலளித்த வனிதா, எனது சொந்த வாழ்க்கையில், தலையிட முயன்றால், உங்களது வாழ்க்கை பற்றி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன் என்று மிரட்டினார்.

இதற்கு பதில் கொடுத்த கஸ்தூரி எனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டும்தான் உள்ளது என்பதை வனிதா உணர வேண்டும். எனது சொந்த வாழ்க்கையை பேசுவதில் பயனில்லை.

உங்களைப் போன்று சீசன் 1.2.3 என்று மெகா சீரியல் வாழ்க்கை என்க்கில்லை. நீங்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தவர். உங்களைப் பிரபலபடுத்த என்னை பயன்படுத்த வேண்டாம் என்றார்.

இதற்கு வனிதா, எனது டுவிட்டர் பக்கத்திலிருந்து கஸ்தூரியை பிளாக் செய்கிறேன் என்றும் காமெடி பீஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பயந்துட்டியா குமாரு என்று கஸ்தூரி பதில் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் ஒரு கல்யாணத்துக்கு இந்த அக்கப்போறா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதோடு, போதும் போதும் உங்க சண்டையை இருந்துங்க என்று கூறியுள்ளனர்.

3

ஆடி மாத தரிசனம் 6: வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற பெயருடன் அமர்ந்த திருக்கோவில்!

0

ஆடி மாத தரிசனம் 6: வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற பெயருடன் அமர்ந்த அற்புதமான கோவில். ஆலத்தூர் மயிலாயி அம்மன் கோவில் சிறப்புகள்.

நமது தமிழகத்தில் கிராமப்புறங்களில் சப்த மாதர்கள் வழிபாடு என்பது தொன்று தொட்டு விளங்கி வருகிறது.

பிராம்மி, இந்திராணி, வராகி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, சாமுண்டி என்பவர்களே சப்த மாதர்கள் ஆவர்.

இவர்களில் நடுநாயகமாக விளங்கும் விஷ்ணுவின் சக்தியே வைஷ்ணவி தேவி ஆவாள்.

இந்த வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற திருநாமத்துடன் உள்ள திருத்தலமே ஆலத்தூர் மயிலாயி அம்மன் திருக்கோவில் ஆகும்.

ஆலத்தூர் மயிலாயி அம்மன் வரலாறு

பல நூறு வருடங்களுக்கு முன்பு விவசாயம் செழித்து வளர்ந்த ஆலத்தூர் எனும் இக்கிராமத்தில் மக்கள் தங்களுக்கென்று கிராம தேவதைகளாக சப்த மாதர்களை ஒரு குடிசையில் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தனர்.

ஏழு பேரில் நடுநாயகமாக விளங்கும் வைஷ்ணவி தேவிக்கு மயிலாயி என்று செல்லமாக பெயர் சூட்டி வணங்கி வந்தனர். தங்கள் வீட்டின் பெண் பிள்ளைகளை போல் அம்மன்களை சிறப்பாக கவனித்து வந்தனர்.

மயிலாயி தேவியும் மக்கள் கேட்ட வரங்களை வழங்கும் மகாலட்சுமியாய் எல்லா வரங்களையும் வாரி வழங்கினாள்.

பின்பு குடிசையாக இருந்த கோவிலை தங்களின் செல்வம் பெருக பெருக கோபுரம் அமைத்து பெரிய கோவிலாக கட்டினர். அதன் பின்பு மயிலாயி கோவில் என்றே அனைத்து ஊரிலும் பிரபலமாக ஆனது. பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க தொடங்கியது.

திருக்கோவில் அமைப்பு

கருவறையில் சப்த மாதர்களும் வரிசையாக அமர்ந்த நிலையில் உள்ளனர். நடுவிலே வைஷ்ணவியாக மயிலாயி அம்மன் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.

வடக்கு நோக்கிய திருக்கோவில். திருச்சுற்றில் கணபதி, முப்புலி கருப்பண்ணன், சாம்பவன், மதுரை வீரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

கோவிலுக்கு 2 கி.மீ. தொலைவில் மயிலாயி தேவியின் தங்கை என்று கூறப்படும் பத்ரகாளி கோவில் உள்ளது.

சித்திரை மாதத்தில் 10 நாட்கள் மயிலாயி தேவிக்கு திருவிழா நடைபெறுகிறது. காவிரியில் இருந்து தீர்த்த குட ஊர்வலம், பால் குடம், தீமிதி விழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

செல்வ வளம் தருவாள் மயிலாயி!

மகாலட்சுமியே வைஷ்ணவி தேவி ஆவாள். அந்த வைஷ்ணவி தேவியே மயிலாயி என்ற திருநாமத்துடன் மக்களுக்கு செல்வ வளத்தை வாரி வழங்கும் அம்பிகையாக உள்ளாள்.

பஞ்சம் பசி என்று எதுவும் இவளை வணங்குவதால் நெருங்குவதில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
அனைவரும் ஆலத்தூர் சென்று மகாலட்சுமி மயிலாயி அம்மனை வணங்கி சகல செல்வங்களும் பெறுவோம்.

அமைவிடம்: திருச்சியில் இருந்து கிழக்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலத்தூர் கிராமம். திருச்சியில் சத்திரத்தில் இருந்து பஸ் வசதி உண்டு.
நடைதிறப்பு: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!

3

டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்!

0
Thalapathy Vijay Indian Television Actors

Thalapathy Vijay; டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்! தொலைக்காட்சியில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் பட்டியலில் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

பாலிவுட், டோலிவுட் பிரபலங்களை பின்னுக்கு தள்ளி தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, வரும் 31 ஆம் தேதி வரையில் 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண ஜனங்கள் வரை அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்களின் பொழுதுபோக்கிற்காக தொலைக்காட்சிகளில் மாஸ் ஹீரோக்களின் ஹிட் படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜனங்கள் வீட்டிலேயே இருந்ததால், தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. தினமும், மாஸ் நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வகையில், இந்த லாக்டவுன் காலத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட படங்களில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த இந்திய நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், 117.9 மில்லியன் பார்வையாளர்களுடன் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். 76.2 மில்லியன் பார்வையாளர்களுடன் ராகவா லாரன்ஸ் 2ஆவது இடமும், 65.8 மில்லியன் பார்வையாளர்களுடன் ரஜினிகாந்த் 3ஆவது இடமும் பிடித்துள்ளனர். அக்ஷய் குமார், பிரபாஸ் ஆகியோர் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர்.

இந்த விவரங்கள் அனைத்தும் ஊரடங்கு போடப்பட்ட 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரையிலான விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

3

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளுக்கு கொரோனா உறுதி!

0
Aishwarya Arjun COVID 19

Aishwarya Arjun; ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளுக்கு கொரோனா உறுதி! ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, வரும் 31 ஆம் தேதி வரையில் 6ஆவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக வீட்டிற்குள்ளேயே சினிமா பிரபலங்கள் முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், கொரொனா பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என்று வரிசையாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், கன்னட நடிகரும், அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சீவி சார்ஜா திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜூனின் சகோதரரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்தது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனையில் செய்ததில் அர்ஜூனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

3

மாநாடு அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

0
Maanaadu Update

Maanaadu; மாநாடு அப்டேட் வெளியிட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்.

மாநாடு படப்பிடிப்பு குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் சிம்பு. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டது.

இதில், சிம்பு, பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். கல்யாணி ப்ரியதர்ஷினி, சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, வீட்டிலேயே இருந்த சிம்பு, கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.

இதில், த்ரிஷா முக்கிய ரோலில் நடித்துள்ளார். விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் 2 ஆம் பாகம் என்று இந்த குறும்படம் கூறப்பட்டது. இந்த குறும்படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார். அதன்படி, அனைவரும் மாநாடு அப்டேட் கேட்டு வருகிறீர்கள்…

தற்போது உள்ள நிலையில், சினிமா துறை முழுவதுமே அரசின் கிரீன் சிக்னலுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அரசு அனுமதித்தால் மாநாடு படத்தின் படப்பிடிப்புக்கு ரெடியாகிவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இன்று எஸ்.ஜே.சூர்யா தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படக்குழு சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

தனக்கென தனிப் பாதை போட்டுக்கொண்ட படைப்பாளி… பல கோடி இதயங்களைக் கொள்ளையடித்த திரைக்கதை வித்தகன்!

தன்னை அப்டேட் செய்துகொள்ளும் சமகாலத் திறமையாளன், பண்பாளன் சகோதரர் SJ சூர்யாவுக்கு என் சார்பாகவும் மாநாடு படக்குழு சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கிறார் SJ சூர்யா. STR உடன் இவர் நடிக்கும் காட்சிகள் அனைவரையும் அதிர வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மகேஷ் பாபு மற்றும் தளபதி விஜய் ஆகியோரது படங்களில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.

3

வாலி, குஷி படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பர்த்டே டுடே!

0
SJ Surya Birthday Today

S.J.Surya Birthday; வாலி, குஷி படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பர்த்டே டுடே! அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் கடந்த 1966 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி பிறந்தவர் எஸ்.ஜே.சூர்யா.

லயோலா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யாவிற்கு மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு வந்தது.

ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு சென்னையிலேயே தங்கி ஹோட்டலில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பாக்யராஜிடம் அப்ரண்டிஸாக பணியில் சேர்ந்தார்.

இதையடுத்து, இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வந்த ஆசை படத்தில் அசிஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

அதே போன்று இயக்குநர் சபாபதி இயக்கத்தில் வந்த சுந்தர புருஷன் படத்திலும் அசிஸ்டண்ட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வந்த கிழக்கு சீமையிலேயே படத்தில் நடித்துள்ளார்.

இதே போன்று 1998 ஆம் ஆண்டு பாண்டியராஜ், அமலா, வைஷ்ணவி நடிப்பில் வந்த நெத்தியடி படத்திலும் நடித்துள்ளார். அதுவும், சிறப்பு தோற்றம்.

ஆசை படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்த உல்லாசம் படத்தில் பணியாற்றியுள்ளார். அப்போது, அஜித், எஸ்.ஜே.சூர்யாவிடம் கதை கேட்க ஒப்புக்கொண்டார்.

அந்த கதை அஜித்துக்குப் பிடித்துப்போக கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான படம் தான் வாலி. இந்தப் படத்தை எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

தல அஜித்தின் வாலி படத்தின் மூலம் தன்னை ஒரு இயக்குநராக காட்டியவர் தான் எஸ்.ஜே.சூர்யா.

தனது முதல் படத்திலேயே அஜித்தை இரு வேடங்களில் நடிக்க வைத்து தன்னை ஒரு இயக்குநராக காட்டியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து கடந்த 2000 ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் குஷி படத்தை கொடுத்துள்ளார்.

ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து, நானி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநரைத் தொடர்ந்து நடிகராகவும் திகழ்ந்துள்ளார். நெத்தியடி, கிழக்கு சீமையிலேயே, ஆசை, மகா நடிகன், கள்வணின் காதலி, திஷ்யூம், திருமகன், வியாபாரி, நியூ, வை ராஜா வை,

ஸ்பைடர், மெர்சன், மான்ஸ்டர், யட்சன், நண்பன், நியூட்டனின் மூன்றாம் விதி, நெஞ்சம் மறப்பதில்லை, உயர்ந்த மனிதன், இறவக்காலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நியூ படத்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். மாஸ்டர், கள்வனின் காதலி, வியாபாரி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஸ்பைடர் படத்தின் மூலம் வில்லனாகவும் அவதாரம் எடுத்தார். மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

இயக்குநர், நடிகரை தொடர்ந்து பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளராகவும் திகழ்கிறார்.

இப்படி பல திறமைகளைக் கொண்ட எஸ்.ஜே.சூர்யா இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

3

முதல் முறையாக பிரபாஸ் உடன் இணைந்த தீபிகா படுகோனே!

0
Prabhas21 Deepika Padukone

Prabhas21; முதல் முறையாக பிரபாஸ் உடன் இணைந்த தீபிகா படுகோனே! பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே முதல் முறையாக பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரபாஸ். கடைசியாக இவரது நடிப்பில் சாஹோ படம் வெளியானது.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது, பிரபாஸ்20 ஆவது படமான ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா இயக்குகிறார்.

இந்த நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் 21 ஆவது படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, கீர்த்தி சுரேஷின் மஹாநடி படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஷ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் தீபிகா படுகோனே முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்குநர் நாக் அஷ்வின் கூறுகையில், தீபிகா படுகோனே உடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சவாலான ரோலில் நடிப்பதற்கு வலிமையான திரை அனுபவம் வாய்ந்த ஒரு நடிகை தேவைப்பட்டது. அதற்கு தீபிகா படுகோனே தான் சரியான தேர்வாக இருந்தது.

இந்தப் படத்திற்காக தீபிகா படுகோனேவை அணுகிய போது, கதை பிடித்துப் போக உடனே படத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.

அவர்  படத்தில் நடிப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் உலகப் போரின் பின்னணியில் அமைக்கப்பட்ட முதல் வகையான அறிவியல் நாடகக் கதை. இந்தக் கதையை கேட்ட பிறகே தீபிகா படுகோனே சம்மதம் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் மற்றும் தீபிகா ஜோடி தான் படத்திற்கு பக்க பலமாக இருக்கும். இனி வரும் காலங்களில் இந்த ஜோடி தான் சினிமா வரலாற்றில் சிறந்த ஜோடியாக இருக்கும் என்று இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, ஹிந்தி உள்பட தென்னிந்திய மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை வையெந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் நாக் அஷ்வினின் மனைவி ப்ரியங்கா தத் தான் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனர் அஸ்வினி தத்தின் மகள்.

இவர்கள் தான் ‘மஹாநடி’ படத்தையும் தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மாஸ்டரை 10 முறை பார்த்தேன்: லோகேஷ் கனகராஜின் முதல் விமர்சனம்!

0
Master Movie Review

Master Movie Review; தளபதி விஜய்யின் மாஸ்டரை 10 முறை பார்த்தேன்: லோகேஷ் கனகராஜ்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெருமையாக கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்ததாகவும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், புதிதாக பார்ப்பது போன்று தோன்றுகிறது என்று படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

கைதி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, நாசர், சாந்தணு, சஞ்சீவ், பிரேம் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. அதோடு, குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதல் விமர்சனம் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாஸ்டர் படம் நன்றாக வந்துள்ளது.

போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளின் போது, மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்திருப்பேன்.

ஒவ்வொரு முறை பார்த்த போதும், முதல் முறை பார்த்தது போன்ற உணர்வையே படம் கொடுத்துள்ளது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த படமாக இந்தப் படம் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆடி மாத தரிசனம் 5: பக்தர்களுக்காக இடம் மாறி திரும்பி அமர்ந்த அம்பிகை!

0

ஆடி மாத தரிசனம் 5: பக்தர்களுக்காக இடம் மாறி திரும்பி அமர்ந்த சௌடேஸ்வரி.  பக்திக்கு மிஞ்சிய சக்தியில்லை என்பதை உணர்த்திய நந்தவரம் சௌடேஸ்வரி.

சிறப்பிற்குரிய ஆடி மாதத்தில் அன்னையின் பேரானந்த கருணையினை சிந்தித்து மனம் மகிழ்ந்து வருகிறோம்.

தமது பிள்ளைகளின் வேண்டுதலுக்காக அன்னை பராசக்தி பல்வேறு திருநாமங்களில் பல அவதாரங்களை எடுத்து அருள்புரிந்து வருகிறாள்.

அந்த வகையிலே நெசவு நெய்யும்  குல மக்களுக்காக அவர்களின் குல தெய்வமாக அன்னை பார்வதி தேவி எடுத்த அவதாரமே சௌடேஸ்வரி தேவி ஆவாள்.

அவள் அருள்புரியும் அற்புதமான திருத்தலமே ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் நந்நவரம் சௌடேஸ்வரி தேவி ஆலயம் ஆகும்.

நந்தவரம் சௌடேஸ்வரி வரலாறு

ஸ்ரீசைலத்தில் அருள்புரியும் மல்லிகார்ஜுனர் மற்றும் பிரமராம்பிகையே தேவாங்கர் எனும் நெசவு தொழில் புரியும் சமுதாய மக்களுக்காக இராமலிங்கேஸ்வரர் மற்றும் சௌடேஸ்வரி என்ற திருநாமத்தில் அவர்களின் குலதெயவம் ஆகினர்.

ஆடி அமாவாசையே சௌடேஸ்வரி அன்னையின் ஜெயந்தி விழா ஆகும். அன்று தான் இந்த அன்னை தோன்றியதாக வரலாறு கூறுகிறது.

பலநூறு ஆண்டுகளுக்கு முன் நந்தவரம் என்ற இந்த இடத்தில் நந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் அவனால் இந்த நந்தவரம் சௌடேஸ்வரி தேவஸ்தானம் கட்டப்பட்டது.

அப்பகுதியில் வசித்த நெசவு செய்பவர்களே இக்கோவில் அம்மனை குல தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் பூசித்து வந்தனர்.

கோவிலின் அனைத்து பூசைகளும் வைதீகர்கள் மற்றும் தேவாங்க சமூகத்தினரும் சேர்ந்தே நடத்தி வந்தனர்.

ஒரு கட்டத்தில் வைதீகர்கள் நெசவாளிகளை கோவில் உள்ளே வரவும், அன்னைக்கு சேவை புரியும் பணியையும் தடுத்தனர்.

இதனால் அவர்கள் மிகவும் மனம் வருந்தினர். அவர்களை கோவிலின் பிரதான வாசல் வழியாக வர அனுமதிக்காமல், பின் புறத்தில் வாயில் அமைத்து அதன் வழியே மட்டுமே வர அனுமதி அளித்தனர்.

மிகவும் மன வேதனையுடன் அன்னையிடம் முறையிட்டனர். தன் குழந்தைகளுக்கு வேதனை என்றால் அது அன்னைக்கும் தானே!

இதனால் அன்னை கருவறையை விட்டு வெளியேறினாள். பின்புற வாயிலுக்கு நேராக சுரங்கம் அமைத்து தன் பிள்ளைகள் வரும் பின்புற வாயிலை நோக்கி திரும்பி அமர்ந்தாள்.

இதனைக் கண்டு தங்களின் தவறை உணர்ந்த வேதியர்கள் மன்னிப்பு கேட்டு நெசவாளிகளை சேவை புரிய அனுமதி அளித்தனர்.

இன்றளவும் அன்னை அதே சுரங்ரகத்தில் பின்புற வாயிலை நோக்கியே அமர்ந்து அருளாட்சி புரிகிறாள்.

பக்திக்கு மயங்கிடுவாள் நந்தவரம் சௌடேஸ்வரி!

நந்தவரம் சௌடேஸ்வரி ஆலயம் உயர்ந்த இராஜ கோபுரத்துடன் அமைந்த மிகவும் தொன்மையான கோவில் ஆகும்.

சுரங்கத்தில் உள்ள கருவறையில் நான்கு திருக்கரத்துடன் நாகம் குடைபிடிக்க அமர்ந்த திருக்கோலம்.

கையில் வாள், கபாலம், உடுக்கை, சூலம் தாங்கி கோல விழிகளும் தெற்று பற்களும் கொண்டு கொலுவிருக்கிறாள் அன்னை சௌடேஸ்வரி தேவி.

செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, நவராத்ரி தினங்கள் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருக்கும்.

குழந்தை உள்ளம் படைத்த அம்பிகை தூய மனதோடு பக்தி செலுத்தினால் போதும் தன் பிள்ளைகளுக்காக ஓடி வந்து அருள்புரிவாள்.

வேண்டிய வரங்கள் வேண்டிய வண்ணம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

அனைவரும் நந்தவரம் சென்று அன்னை சௌடேஸ்வரி தேவியை கண்டு வழிப்பட்டு சகல சௌபாக்கியங்களும் பெறுவோம்.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!

3

Soorarai Pottru: சூர்யா பர்த்டேவுக்கு டிரீட் ரெடி: காட்டு பயலே 2ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு!

0
Soorarai Pottru Kaattu Payale Video

Soorarai Pottru Kaattu Payale: சூர்யா பர்த்டேவுக்கு டிரீட் ரெடி: காட்டு பயலே 2ஆவது சிங்கிள் டிராக் வெளியீடு! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் 2ஆது சிங்கிள் டிராக் காட்டுப் பயலே 1 நிமிட வீடியோ வரும் 23 ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

காட்டுப்பயலே 2 ஆவது சிங்கிள் டிராக் ஒரு நிமிட வீடியோ வரும் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

கடந்த மே மாதம் சூரரைப் போற்று வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலரும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் 23 ஆம் தேதி சூர்யாவின் 45 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு சூரரைப் போற்று படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் காட்டுப்பயலே ஒரு நிமிட வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று அப்டேட் வெளியானதைத் தொடர்ந்து, #SooraraiPottru, #SudhaKongara ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3