Home Blog Page 16

Soorarai Pottru: சூரரைப் போற்று அப்டேட்? டிரைலரா?

0
Soorarai Pottru Update

Soorarai Pottru Update; சூரரைப் போற்று அப்டேட்? டிரைலரா?  சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூரரைப் போற்று அப்டேட் இன்று வெளியாக இருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவன ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப் போற்று படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும், கருணாஸ், மோகன் பாபு, ஊர்வசி, ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்துள்ளது.

கடந்த மே மாதம் சூரரைப் போற்று வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

படத்தின் டிரைலரும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், சூரரைப் போற்று படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தற்போதே கற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர்.

வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஏற்கனவே சூர்யாவின் பர்த்டே காமென் டிபி புகைப்படம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று அப்டேட் இன்று வெளியாகவுள்ள நிலையில், #SooraraiPottru, #SudhaKongara ஆகிய டுவிட்டர் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3

தனுஷ் பர்த்டே Common DP வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
Dhanush Birthday Common DP

தனுஷ் பர்த்டே Common DP வெளியீடு! நடிகர் தனுஷ் வரும் 28 ஆம் தேதி தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் தனுஷ் பர்த்டே Common DP வெளியிட்டுள்ளனர்.

தனுஷின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், Common DP உருவாக்கி ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், 3,

வேலையில்லா பட்டதாரி, மாரி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வட சென்னை, அசுரன் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் பாலிவுட் படமான Atrangi Re ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

ஒரு நடிகரைத் தொடர்ந்து, இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனால், ஜகமே தந்திரம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் Common DP உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

தனுஷ் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில், தனுஷ் கையில் வாள் உடன் இருப்பது போன்றும், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்கள் மெழுகு சிலையாக இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

இதே போன்று மேலும் பல புகைப்படங்களை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டுவிட்டரில் #JagameThandhiram, #DhanushBDayCommonDP, #Suruli, #Dhanush ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3

தமிழகத்தில் இன்று மட்டும் 4807 பேருக்கு கொரோனா , மொத்த கொரோனா தொற்று 1,65,714

இன்று மட்டும் 4807 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 2,403 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 88 பேர் கொரோனாவிற்கு பலியாகினர். தமிழகத்தில் இன்று மட்டும் 4807 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,65,714ஆக உள்ளது.

கோவிட்-19 பரவல் மையமாக கருதப்படும் சென்னை

கோவிட்-19 பரவல் மையமாக கருதப்படும் சென்னையில் மட்டும் 32 கொரோனா இறப்புகள் இன்று பதிவானது. சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு(2), காஞ்சிபுரம்(5), திருவள்ளூர்(7) ஆகிய பகுதிகளில் 14 பேர் கொரோனாவால் இறந்தனர்.

சென்னையில் 1,219 புதிய தொற்றுகள் இன்று உறுதியானது

சென்னையில் 1,219 புதிய தொற்றுகள் இன்று உறுதியானது. செங்கல்பட்டு(323), காஞசிபுரம்(97) மற்றும் திருவள்ளூர்(370) ஆகிய பகுதிகளில் மொத்தமாக 790 புதிய தொற்றுகள் உறுதியானது.

கொரோனாவால் 6 பேர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்.

மதுரையில் 185 புதிய கொரோனா தொற்று

மதுரையில் 185 புதிய கொரோனா தொற்று உறுதியானது மற்றும் 9 பேர் கொரோனாவால் இறந்தனர். தேனியில் 144 தொற்றுகள் உறுதியானது மற்றும் 4 பேர் கொரோனாவால் இறந்தனர். இராமநாதபுரத்தில் 67 புதிய தொற்றுகள் உறுதி மற்றும் 4 பேர் இறந்தனர்.

பல மாவட்டங்களில் 100க்கும் மேல் புதிய கொரோனா தொற்றுகள்

மேலும் பல மாவட்டங்களில் 100க்கும் மேல் புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.கடந்த 24 மணிநேரத்தில் 3,049 பேர் குணமடைந்தனர் மற்றும் 49,452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3

ஆடி மாத தரிசனம் 4: அள்ளி கொடுப்பாள் அத்தனூராள்!

0

ஆடி மாத தரிசனம் 4: அள்ளி கொடுக்கும் அத்தனூர் அம்மன்! பக்தர்களை காவலாய் இருந்து காக்கும் அத்தனூர் அம்மன்!

ஆதிசக்தியை நினைத்தாலே போதும் சகல தொல்லைகளும் நீங்கும். உயிர் உள்ள வரை அம்பிகையை துதிக்கும் பாக்கியம் ஒன்றே போதும் என்று வாழ்ந்து வருபவர்கள் பலர். இதை தான் பாரதி

“தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்” என்றார்.

அந்த அளவிற்கு கூப்பிட்டவுடன் ஓடி வந்து நம்மை காத்து அருள்பவள் தான் தாய்.

அந்த பராசக்தியின் வடிவங்களில் அனைவரும் அஞ்சும் கோர வடிவங்கள் பலவுண்டு. ஆனால் நாம் அஞ்ச தேவையில்லை துஷ்டர்களை மட்டுமே அவள் வேர் அறுப்பாள்.

அப்படி பக்தர்களை காக்கும் கருணை கடலாய் இருந்து காப்பவளே நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் தாலுக்காவில் உள்ள அத்தனூர் அம்மன்.

திருக்கோவில் வரலாறு

இந்த அன்னையானாவள் கடையெழு வள்ளல்களில் ஒருவரான கொல்லிமலை ஆண்ட வல்வில் ஓரி காலத்தில் அவரால் வணங்கப்பட்ட தெய்வம் என்கிறது செவிவழி செய்தி.

மேலும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் காங்கேயம் பகுதியில் இருந்து குடிபெயர்ந்த கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்த மக்கள் தங்களுடன் காவலாக இவளை அழைத்து வந்து இங்கே குடியமர்த்தி கொண்டு அன்னையை தங்களுக்கு காவலாக இங்கேயே பிரதிட்டை செய்து வணங்கி வருவதாகவும் கூறுகின்றனர்.

இதிலிருந்து இந்த திருக்கோவிலின் தன்மையினை அறிய முடிகிறது. பழையோள் என்று சொல்லப்படுகின்ற கொற்றவையே இந்த அத்தனூர் அம்மன் ஆவாள்.

காரணம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் போர் வீரர்கள் தம் மன்னன் வெற்றி பெற வேண்டும் என்று தங்களை தாங்களே பலியிட்டு கொள்ளும் நவகண்டம் சிற்பமானாது அன்னைக்கு நேர் எதிரே வெளிப்புறத்தில் உள்ளது.

அத்தனூர் அம்மன் சிறப்பு

கோவிலுக்கு வெளியே பல நூறு ஆண்டுகளாக உள்ள முதிர்ந்த ஆலமரங்கள். உள்ளே நுழைந்தால் காவலுக்கு அய்யனார். அன்னைக்கு எதிரே பெரிய குதிரை சிற்பங்கள்.

மேலும் கணபதி சன்னதி, நாக கன்னிகள் சன்னதிகள் உள்ளன. உள்ளே கருவறைக்கு முன் தூவார சக்திகள் நின்றபடி காவல் புரிகின்றனர்.

கருவறையில் வடக்கு முகம் நோக்கி எட்டு திருக்கரத்துடன் அமர்ந்து அசரனை காலால் மிதித்து வதம் செய்யும் கோலத்தில் தெற்று பற்களுடன் அருள்புரிகிறாள்.

“அஞ்சாதே நான் இருக்கிறேன்” என்று கருணை பொங்கும் விழிகளை காண கண் கோடி வேண்டும்.

கொங்கு வேளாளர் சமுதாய மக்களின் குல தெய்வமாக விளங்கியும். ஊரை காக்கும் காவல் தெய்வமாகவும், தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர் துடைக்கும் அன்னையாகவும் விளங்குகிறாள்.

சாதி மத பேதம் இன்றி அனைத்து சமூகத்தினரும் இவளை அன்னையாய் வணங்கி அருள் பெறுகின்றனர்.

அள்ளி கொடுப்பாள் அத்தனூராள்!

அஞ்சலென்று வருபவர்க்கு ஆதரிக்கும் அத்தனூர் அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பகைவர் தொல்லை, திருமண தடை, வழக்கு பிரச்சினைகள், குழந்தையின்மை என அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் மகா சக்தியாக உள்ளாள் அத்தனூராள்.

அன்னைக்கு தற்பொழுது பலாலயம் நடைபெற்று பெரிய அளவில் இராஜ கோபுரத்துடன் கூடிய திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது.

அனைவரும் அத்தனூர் சென்று அன்னையை தரிசித்து அவள் கருணையை பெற்று நல்வாழ்வு பெறுவோம்.

அமைவிடம்: சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அத்தனூர் அம்மன் கோவில்.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!!

3

பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும்: பிரபலங்கள் கோரிக்கை!

0
Bharathiraja

Bharathiraja; பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும்: பிரபலங்கள் கோரிக்கை! இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாராதிராஜாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இயக்குநர் பாரதிராஜாவுக்கு திரைத்துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்க வேண்டும் என்று கமல் ஹாசன், வைரமுத்து, மணிரத்னம் உள்ளிட்ட 50 சினிமா பிரபலங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளன.

இயக்குநர் பாரதிராஜா நேற்று தனது 78 ஆவது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து, கமல் ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, தனுஷ், பார்த்திபன், சேரன் என்று பலரும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கிட்டத்தட்ட 43 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் திரைப்பரங்களை இயக்கி வருபவர்.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் கிட்டத்தட்ட 42 படங்களை இயக்கியுள்ளார்.

சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர். தமிழ் சினிமாவை கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்றவர்.

சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். எப்போதும், சினிமா துறைக்காகவே உழைத்து வருகிறார்.

இது போன்ற பல காரணங்களுக்காக பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்வேக் விருதை வழங்க வேண்டுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

0
Thala Ajith House Bomb Threat

Thala Ajith House Bomb Threat; தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தல ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர் தல அஜித். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, அவரது வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால், தல அஜித். ரசிகர்கள் விரும்பினால், செல்ஃபி எடுத்து கொள்ளவும் தயங்கமாட்டார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் படங்களாக அமைந்தன.

இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அஜித் தனது 60 ஆவது படமான தல60 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கின்றனர்.

அந்த வகையில், தல அஜித் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் வந்துள்ளது.

இதையடுத்து, போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் வீரர்களுடன் அஜித் வீட்டில் சோதனை நடத்தினர்.

கிட்டத்தட்ட 2 மணி நேரம் மேற்கொண்ட இந்த சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது.

எனினும், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த நம்பரை வைத்து அது எங்கிருந்து வந்தது என்று போலீசார் கட்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, அந்த நம்பர் விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த நபர் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போன்று தளபதி விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த நபரும் விழுப்புரத்தை சேர்ந்த புவனேஷ் என்றும் கண்டுபிடித்தனர். ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று விசாரணை தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தது கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமா பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வரும் சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3

லாக்டவுனில் வீட்டிலிருந்தே நடித்து நயன்தாரா!

0
Nayanthara Ad Films

Nayanthara Ad Films; லாக்டவுனில் வீட்டிலிருந்தே நடித்து நயன்தாரா! லேடி சூப்பர்ஸ்டார் வீட்டில் இருந்தபடியே லாக்டவுனிலும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லாக்டவுன் காலத்திலும் நயன்தாரா வீட்டில் இருந்தே நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மற்ற நடிகைகளை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார்.

கடைசியாக நயன்தாரா நடிப்பில் பிகில் மற்றும் தர்பார் ஆகிய இரு படங்கள் வெளியானது. இரு படங்களுக்குமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது, நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக நயன்தாரா வீட்டிலேயே இருக்கிறார்.

கொரோனா காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அண்மையில், நயன்தாராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து நயன்தாரா முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்தபடியே விளம்பர படத்தில் நடித்துள்ளார். வீட்டிலேயே விளம்ப படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர். மேலும், சில விளம்பர படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

3

இந்த நாடுகளில் தளபதி விஜய்யின் பிகில் ரீ-ரிலீஸ்!

0
Bigil ReRelease in Srilanka

Thalapathy Vijay Bigil ReRelease; இந்த நாடுகளில் தளபதி விஜய்யின் பிகில் ரீ-ரிலீஸ்! தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த பிகில் படம் மறுபடியும் இலங்கை, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பிகில் படம் மீண்டும் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் மீண்டும் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.

பிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று போஸ்டர் வெளியான போது அனைவரும் கூறி வந்தனர்.

ஆனால், படம் வெளியான பிறகுதான் ராயப்பன் மற்றும் மைக்கேல் ராயப்பன் (பிகில்) என்று இரு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அதுவும், அபபா, மகன் என்ற கதாபாத்திரம்.

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக தற்போது 6ஆம் கட்ட லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளு மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தற்போது வெளிநாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், பல்வேறு கட்ட விதிமுறைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, இலங்கை, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தளபதி விஜய் நடித்த பிகில் படம் மறுபடியும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது தளபதி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இதே போன்று வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொற்று எண்ணிக்கை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது.

தற்போதைக்கு எந்த தளர்வும் வழங்கப்பட மாட்டாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்தைப் போன்று, மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய படங்கள் மலேசியாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவேக், ஹரிஷ் கல்யாண் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரது நடிப்பில் வெளியான தாராள பிரபு படமும் மலேசியாவில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கடுமையான பாதிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், மலேசியாவில் தாராள பிரபு படம் ரிலீஸ் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று விவேக் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

3

ஆடும் போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்: வைரலாகும் வீடியோ!

0
Lakshmi Menon Dance Video

Lakshmi Menon Dance Video; ஆடும் போது வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்: வைரலாகும் வீடியோ! நடிகை லட்சுமி மேனன் ஆடும் போது கால் வழுக்கி கீழே விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

லட்சுமி மேனன் வழுக்கி விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சசிகுமார் நடிப்பில் வந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லட்சுமி மேனன். இதே போன்று கும்கி படத்திலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

சுந்தரபாண்டியன் படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. தொடர்ந்து குட்டி புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், றெக்க, மிருதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தல அஜித் நடித்த வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது சிப்பாய், யங் மங் சங் மற்றும் கௌதம் கார்த்திக் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

தற்போது நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6ஆவது கட்ட லாக்டவுன் நடைமுறையில் இருக்கிறது. வரும் 31 ஆம் தேதி வரையில் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் காரணமாக அனைவருமே வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், வீட்டிலேயே இருக்கும் லட்சுமி மேனன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்போது, திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். நன்றாக டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது தரையில் தண்ணீர் இருந்ததை கவனிக்காமல் தவறி விழுந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

3

சியான் நடிக்கும் புதிய படம்: வாய்ப்பை கோட்டை விட்ட ஸ்ருதி, அக்‌ஷரா ஹாசன்!

0
Shruti Haasan Dont Breathe

Don’t Breathe Tamil Remake; சியான் நடிக்கும் புதிய படம்: வாய்ப்பை கோட்டை விட்ட ஸ்ருதி, அக்‌ஷரா ஹாசன்! விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்க போவதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கும் Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரம் கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹாவீர் கர்ணா, பொன்னியின் செல்வன் மற்றும் சியான் 60 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட இருக்கும் Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை இரு முகன் படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஃபெடி அல்வரேஸ் இயக்கத்தில் வெளியான படம் Don’t Breathe. த்ரில்லர் கதையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் உலக அளவில் மாபெரும் வெற்றியை ருசித்தது.

இந்த நிலையில், இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது.

அதோடு, இந்தப் படத்தை விக்ரம் நடிக்க இருப்பதாகவும், அதுவும் பார்வையற்ற ஹீரோ என்ற ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்தப் படம் தொடங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சியான் விக்ரம் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டார்.

ஆதலால், Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக் கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில், Don’t Breathe என்ற ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் சியான் விக்ரம் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், தயாரிப்பு  தரப்பிடமிருந்து இதுவரை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகியோரிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லையாம்.

அதோடு, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதியின் லாபம் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகவில்லை.

இதற்கு முன்னதாக கடாரம் கொண்டான் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்திருந்தார். தற்போது உருவாக இருக்கும் ஹாலிவுட் படத்தில் இவர்களுக்கு தயாரிப்பு நிர்வாகம் வாய்ப்பளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

3