Home Blog Page 17

கொரோனா தாக்கம் அதிகம்: ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி!

0
Aishwarya Rai Bachchan

Aishwarya Rai Bachchan; கொரோனா தாக்கம் அதிகம்: ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி! அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்m நிலையில், மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 11 ஆம் தேதி அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், ஐஸ்வர்யா  ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு லேசான அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். ஜெயா பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தது.

இந்த நிலையில், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கொரோனா அறிகுறி அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனவர். ஏற்கனவே அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரண் ஜோகர், அமீர் கான், போனி கபூர், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் தங்களது வீட்டு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

3

FIR படத்தின் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன? வெளியான வீடியோ!

0
FIR Vishnu Vishal Character Name

Who Is Irfan Ahmed; FIR படத்தின் விஷ்ணு விஷால் கதாபாத்திரம் என்ன? வெளியான வீடியோ! விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர். FIR, படத்தின் அவரது கதாபாத்திரத்தின் பெயர் என்ன என்பதற்கான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப்.ஐ.ஆர். FIR, படத்தின் அவரது கதாபாத்திரம் என்ன என்பதற்கான வீடியோ வெளியாகியுள்ளது.

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் FIR – Faizal Ibrahim Rais. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது.

அண்மையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், முகம் முழுவதும் மாஸ்க் அணிந்து கொண்டு இருப்பது போன்றும் நியூஸ்பேப்பரில் அல்கொய்தா, தீவிரவாதிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மற்றொரு போஸ்டரில் விஷ்ணு விஷால் சிறையில் கைவிலங்கு போடப்பட்டிருந்த நிலையில் இருப்பது போன்று காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் 36 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, எஃப்.ஐ.ஆர்., படத்தின் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தின் பெயர் கொண்ட வீடியோ வெளியானது.

இதற்கு முன்னதாக யார் அந்த இர்பான் அகமது என்று கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகியிருந்தது.

எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தை சொல்லும் வீடியோவை ஜூவாலா கட்டா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இர்பான் அகமது அவரது அம்மாவுடன் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. மேலும், நான் துணிஞ்சவன்டா என்னை புரிஞ்சவன் யார்?

நான் மிருகமடா, என்னை தெரியுதா பார் A Man Of Beliefs,  A Loving Son, An Innocent Man, A Terrorist?, Who Is He? என்று கேள்வி எழுப்பிவிட்டு இறுதியில், Irfan Ahmed என்று காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், விஷ்ணு விஷால் இர்பான் அகமது என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நம்பிக்கையான ஒரு அப்பாவி மனிதன், திவீரவாதியாக மாற்றப்படுகிறாரா? என்ற கதையோடு இந்தப் படம் உருவாக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றது.

3

தமிழக அரசியலை சாடிய மீரா மிதுனின் அடுத்த டார்க்கெட் திமுக?

0
Meera Mithun DMK

Meera Mithun Twitter; தமிழக அரசியலை சாடிய மீரா மிதுனின் அடுத்த டார்க்கெட் திமுக? சர்ச்சை நடிகை டுவிட்டரில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

மீரா மிதுன், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை பதிவிட்டு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். எனினும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், பல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், தன்னைப் போன்று ஹேர்ஸ்டைல், தோற்றம் என்று மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று த்ரிஷாவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இவ்வளவு ஏன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் தான் என்று கூறி வருகிறார். அதோடு, தமிழக அரசை களைத்துவிட்டு, தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். அதோடு, நடிகர், நடிகைகளை வம்பிழுத்து வருகிறார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, அதில் உதயநிதியை டேக் செய்து ‘ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என்று மீரா மிதுன் பதிவிட்டுள்ளார்.

இதே போன்று, இதற்கு முன்னதாக, திமுக தலைவர் முக ஸ்டாலினை டேக் செய்து நாம் இணைந்து வெல்வோம் என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழக அரசியல் பற்றி சர்ச்சையை ஏற்படுத்தி வந்த மீரா மிதுன் தற்போது திமுக பக்கம் தனது கவனத்தை திருப்புவது மேலும், பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

3

அஜித்தை விருமாண்டியாக்கிய ரசிகர்கள்: வைரலாகும் விருமாண்டி 2 போஸ்டர்!

0
Virumandi 2 Thala Ajith Version

அஜித்தை விருமாண்டியாக்கிய ரசிகர்கள்: வைரலாகும் விருமாண்டி 2 போஸ்டர்! தல அஜித்தை விரும்பாண்டி 2 கெட்டப்பில் இருப்பது போன்று ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித்தை விருமாண்டியாக்கி உருவாக்கப்பட்ட விருமாண்டி 2 போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர் தல அஜித். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, அவரது வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால், தல அஜித். ரசிகர்கள் விரும்பினால், செல்ஃபி எடுத்து கொள்ளவும் தயங்கமாட்டார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் படங்களாக அமைந்தன.

இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அஜித் தனது 60 ஆவது படமான தல60 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அஜித் விருமாண்டி 2 கெட்டப்பில் இருப்பது போன்று போஸ்டர் ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு கமல் ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்து வெளியான படம் தான் விருமாண்டி.

ஆக்‌ஷன் டிராமா கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பசுபதி, அபிராமி, நெப்போலியன், நாசர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் சண்டியர் என்று கமல் ஹாசன் அழைக்கப்பட்டார். இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதில், தல அஜித்தை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, அஜித் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

விருமாண்டி 2 அஜித் வெர்ஷனில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆடி மாத தரிசனம் 3: சிவனை தலையில் சூடிய அம்பிகை! கோடி வளம் தருவாள் கோடியம்மன்!

1

ஆடி மாத தரிசனம் 3: சிவனை தலையில் சூடிய அம்பிகையின் திருக்கோவில். கோடி வளம் தரும் தஞ்சாவூர் கோடியம்மன் தரிசனம்.

அண்ட சராசரங்களை ஆளுகின்ற அன்னை பராசக்தியின் பல்வேறு ரூபங்களை நாம் தரிசித்தும், சிந்தித்தும் வருகிறோம்.

பகைவர்களை அழிக்கும் காளியாக, மழை பொழியும் மாரியாக, செல்வம் தரும் இலக்குமியாக அவளின் வடிவங்கள் பல கோடிகள் ஆகும்.

அந்த வகையிலே சிவனை தனது சிரசில் அமர்த்தி கொண்டு மகா காளியாக அம்பிகை காட்சி தரும் திருத்தலமே தஞ்சாவூர் கோடியம்மன் ஆலயம் ஆகும்.

திருக்கோவில் வரலாறு

தஞ்சகன் என்ற அசுரனை அழிக்க அன்னை பார்வதி தேவியே மகா காளி ரூபம் கொண்டு தனது பிள்ளைகளுக்கு இடையூரு செய்த அரசுனை சாய்த்தாள்.

பிறை சூடும் பெருமானை தன் சிரசின் மேல் அமர்த்தி கொண்டு அரசுனுடன் சிவசக்தியாக போர் புரிந்து வெற்றி கொண்டாள் என்கிறது தல வரலாறு.

தஞ்சயை ஆண்ட விஜயாலய சோழன் தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினான். பின் தஞ்சைக்கு காவலாய் அட்ட காளி கோவில்களை எட்டு திசைகளிலும் பிரதிட்டை செய்தான்.

விஜயாலய சோழன் எழுப்பிய திருக்கோவிலே கோடியம்மன் ஆலயம் ஆகும். தானே கோடி ரூபங்கள் எடுத்து அசுர படையுடன் போரிட்டதால் கோடியம்மன் என பெயர்க் கொண்டாள்.

அம்பிகையின் சிறப்புகள்

சிவனை சிரசில் சூடிய அம்பிகை அதனால் அவளுக்கு சிம்ம வாகனம் கிடையாது நந்தி வாகனம் மட்டுமே ஆகும்.

எட்டு திருக்கரத்துடன் காலில் அசுரனை மிதித்து அமர்ந்த திருக்கோலம். சிவந்த திருமேனியுடன் கருணை பொங்கும் விழிகளுடன் காட்சி தருகிறாள்.

வெளியே துவார பாலகிகளாக பச்சை காளி மற்றும் பவள காளிகள் உள்ளனர். பச்சை காளி, பவள காளி திருவிழா இங்கே மிகவும் பிரசித்தம்.

சிவசக்தி ரூபமானதால் அருகே இருக்கும் தஞ்சபுரீஸ்வரர், ஆனந்த வல்லி திருக்கோவிலிலும் இங்கேயும் ஒரே நேரத்தில் பூசை நடைபெறும் என்பது சிறப்பு.

கோவிலில் விநாயகர், பூர்ணா புஷ்கலாவுடன் சாஸ்தா, பச்சை காளி, பவள காளி, சிவன், சிவ துர்கை, விஷ்ணு துர்கை, பைரவர் சன்னதிகள் உண்டு.

அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய பழமை மாறாத சோழர் காலத்து திருக்கோவில் ஆகும்.

வளங்கள் கோடி தருவாள் கோடியம்மன்!

இங்கே அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி சகல வளங்களும் தருகிறாள்.

ஏவல், பில்லி, சூனியம், கிரக தோஷம், திருமண தடை என அனைத்தையும் போக்கி நல் வாழ்வு வழங்கி சந்தான வளத்தோடு சகல வளங்களும் கிடைக்கச் செய்கிறாள்.

அனைவரும் தஞ்சை சென்றால் தவறாமல் கோடியம்மனை தரிசித்து அவள் அருளாலே சகல வளங்களும் பெறுவோம்.

அமைவிடம்: தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் கும்கோணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் 8 மணி வரை.

ஆடி மாத தரிசனம் தொடரும்..!

3

நம்பர் ஒன் இடத்தில் டாக்டர் செல்லம்மா பாடல்: 2 மில்லியன் வியூஸ்!

0
Chellamma Lyric Video

Doctor: Chellamma Lyric Video; நம்பர் ஒன் இடத்தில் டாக்டர் செல்லம்மா பாடல்: 2 மில்லியன் வியூஸ்! டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் டிராக் செல்லம்மா பாடல் வீடியோ வெளியாகி டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

செல்லம்மா பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை பிரியங்கா அருள் மோகன். இதுவே பிரியங்கா அருள் மோகன் தமிழில் அறிமுகமாகும் முதல் படம்.

மேலும், யோகி பாபு, வினய், அர்ச்சனா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.  அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

நேற்று டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் டிராக் செல்லம்மா பாடல் வீடியோ வெளியானது. இந்த நிலையில், செல்லம்மா பாடல் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளதோடு, யூடியூப்பில் 2 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

அண்மையில், டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை மத்திய அரசு தடை செய்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதை மையப்படுத்தி செல்லம்மா பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்

ஆனால், வீடியோவின் பின்னணியில்

டிக் டாக் எல்லாம் பேன் அம்மா,

நேரா டூயட் பாட வாயேம்மா…

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது எல்லாம் போதுமா…

கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசுமா…

செல்லம்மா

3

விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜூவாலா கட்டா!

0
Jwala Gutta and Vishnu Vishal

Vishnu Vishal; விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜூவாலா கட்டா! விஷ்ணு விஷாலின் 36ஆவது பிறந்தநாளுக்கு அவரது காதலி ஜூவாலா கட்டா சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

தனது பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷாலுக்கு காதலி ஜூவாலா கட்டா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

விஷ்ணு விஷால் அறிமுகமான முதல் படம் வெண்ணிலா கபடி குழு. சினிமாவில் அறிமுகமாகிய பிறகு விஷால் என்ற தனது பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து கடந்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து, விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நெருங்கி பழகினர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது.

விஷ்ணு விஷாலை காதலிப்பது உண்மை தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷாலின் காதலியுமான ஜூவாலா கட்டா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே பேபி. எப்போதும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஷ்ணு விஷாலை நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், எஃப்.ஐ.ஆர். படத்தின் ஒரு வீடியோவை பதிவிட்டு யார் இந்த இர்பான் அகமது என்று கேள்வி கேட்கும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அது, எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்.

எஃப்.ஐ.ஆர். படத்தில் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தை சொல்லும் வீடியோவை ஜூவாலா கட்டா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

HBD Vishnu Vishal

3

ஜோஷுவா வில்லன் யார் தெரியுமா? பாரிஸ்ல பிட்னெஸ் பயிற்சி எடுத்த வருண்!

0
Joshua Krishna

Joshua Imai Pol Kaakha; ஜோஷுவா வில்லன் யார் தெரியுமா? பாரிஸ்ல பிட்னெஸ் பயிற்சி எடுத்த வருண்! பப்பி புகழ் வருண் நடிப்பில் உருவாகி வரும் ஜோஷுவா படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடிப்பதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

ஜோஷுவா படத்தில் வருணுக்கு வில்லனாக கிருஷ்ணா நடிப்பதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வருண். இவர், தயாரிப்பாளர் ஐசனி கணேஷின் மsச்sருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில் வந்த தலைவா படத்தின் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மேலும், தலைவா படத்தில் விஜய்க்கு நண்பனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்தைத் தவிர, ஒரு நாள் இரவில், போகன், வனமகன், நெருப்புடா, சம்டைம்ஸ், எல்.கே.ஜி, பப்பி, கோமாளி, சீறு ஆகிய படங்களில் நடித்துள்ளார். பப்பி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷுவா இமை போல் காக்க என்ற படத்திலும் வருண் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் உருவாகும் இந்தப் படத்தில் வருணுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ராஹீ ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்காக வருண் பாரிஸ் சென்று பிட்னெஸ் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

கௌதம் மேனனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தின் பேனரில் தயாரிக்கத் தொடங்கினார்.

தற்போது இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் வெளியிடுகிறார்.

கார்த்திக் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று இந்தப் படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ வெளியானது.

ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் பாடலின் இறுதியில் கிருஷ்ணா சர்ப்ரைஸாக வந்து சென்றிருப்பார்.

இந்த பாடல் வெளியானதைத் தொடர்ந்து, கிருஷ்ணா தான் இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா, வன்மம், யாக்கை, பண்டிகை, மாரி 2, கழுகு, கழுகு 2, வீரா, விழித்திரு, யாமிருக்க பயமேன், கற்றது களவு என்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வில்லனாக களமிறங்குகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.

வரும் 2021 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

Human விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்: வைரலாகும் வீடியோ!

0
Vijay Sethupathi Human Photoshoot

Vijay Sethupathi Photoshoot; விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்: வைரலாகும் வீடியோ! விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

அதே போன்று அண்மையில், மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் எப்படி என்பது குறித்து விஜய் சேதுபதி தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. நாடு முழுவதும் கொரோனா காரணமாக முடங்கியிருக்கிறது. அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக புதிய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அண்மையில், டுவிட்டர் பக்கத்தில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது மனிதன் என்ற பெயரில் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். மனிதன் போட்டோஷூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆதி, நிக்கி கல்ராணி காதலா? விரைவில் திருமணம்?

0
Aadhi And Nikki Galrani Love

Aadhi Nikki Galrani Love; ஆதி, நிக்கி கல்ராணி காதலா? விரைவில் திருமணம்? நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மிருகம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதன் பிறகு ஈரம், அய்யனார், ஆடுபுலி, அரவாண், யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

இதே போன்று தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் கிளாப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆதியும், நிக்கி கல்ராணியும் ஒருவரையொருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கன்னட நடிகையான நிக்கி கல்ராணி தமிழ் சினிமாவில், டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு-2, கீ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு படங்களின் போது இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதி தனது தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக யாருக்கும் அழைப்பு கொடுக்காமல், நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்துள்ளார்.

நிக்கி கல்ராணியும், பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு ஆதி தனது தந்தையின் பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். கொரோனா ஊரடங்கினால் யாரையும் அழைக்கவில்லை.

ஆனால் நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்து இருந்தார். அவரும் ஆதி குடும்பத்தினரோடு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதையடுத்து, இருவரும் காதலிப்பது உண்மை தான் என்றும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாராத்தில் கூறப்படுகிறது.

3