Home Blog Page 18

ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு: திரையரங்கு உரிமையாளர்கள்!

0
Theatre ReOpen

Theatre ReOpen; ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு: திரையரங்கு உரிமையாளர்கள்! வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக திரையரங்கு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கிட்டத்தட்ட 4 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

அதோடு, சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன் விளைவாக, பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டது.

சினிமா துறையும் இதுவரை காணாத வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது.

இந்த 4 மாதங்களில் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, திரையரங்கு உரிமையாளர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர்.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலை திரும்புவதால், திரையரங்குகளை உரிய விதிமுறைகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினந்தோறும் 4 காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், 2 காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்து, திரையரங்குகள் திறக்கப்படும் பட்சத்தில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திறக்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

எது எப்படியோ திரையரங்குகள் திறந்தால் முதலில் வெளியாவது தளபதி விஜய்யின் மாஸ்டர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

3

கிரிக்கெட் ஆர்வம் கொண்ட விஷ்ணு விஷால் பர்த்டே டுடே!

0
Vishnu Vishal

Vishnu Vishal Birthday; கிரிக்கெட் வீரராக வர வேண்டிய விஷ்ணு விஷால் பர்த்டே டுடே! நடிகர் விஷ்ணு விஷால் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஷ்ணு விஷால் இன்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி பிறந்தவர் விஷால். இது தான் அவரது உண்மையான பெயர். இவரது அப்பா ரமேஷ் குடவ்லா. ஒரு போலீஸ் அதிகாரி.

விஷ்ணு விஷால், திருச்சியில் பள்ளி படிப்பை முடித்து எம்பிஏ படித்துள்ளார். கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.

எனினும், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரது கிரிக்கெட் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. அதன்பிறகு சினிமாவில் கவனம் செலுத்தினார்.

தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே நிறைய படங்களை பார்த்து நடிப்பு கற்றுக் கொண்டார்.

அப்படி விஷ்ணு விஷால் அறிமுகமான முதல் படம் தான் வெண்ணிலா கபடி குழு. சினிமாவில் அறிமுகமாகிய பிறகு விஷால் என்ற தனது பெயரை விஷ்ணு விஷால் என்று மாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து கடந்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து, விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நெருங்கி பழகினர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது.

நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மிஸ்ஸிங் மை பூ என்று சோகமாக இருக்கும் எமோஜியை தனது டுவிட்டரில் ஜுவால கட்டா பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் இட்ஸ் ஓகே. இப்போதைக்கு சமூக விலகல் மிகவும் முக்கியம். எல்லோருக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷாலை காதலிப்பது உண்மை தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜுவாலா கட்டா கூறுகையில், நாங்கள் காதலித்து வருகிறோம். இதில், மறைக்க வேண்டியது ஒன்றும் இல்லை.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறோம். தேதி முடிவு செய்யப்பட்டதும், அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் இன்று தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷாலின் காதலியுமான ஜூவாலா கட்டா, தனது டுவிட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே பேபி.

எப்போதும் பிரகாசித்துக் கொண்டே இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விஷ்ணு விஷாலை நேரில் சந்தித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சியான் விக்ரம் இயக்குநரின் அடுத்த அறிவிப்பு தர்ம ராஜ்ய!

0
Dharma Rajya

Dharma Rajya: சியான் விக்ரம் இயக்குநரின் அடுத்த அறிவிப்பு தர்ம ராஜ்ய! மஹாவீர் கர்ணா படத்தின் இயக்குநர் ஆர்.எஸ் விமல் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆர் எஸ் விமல் தர்ம ராஜ்ய என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். படத்தின் கதைக்கு ஏற்ப தனது உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். உதாரணமாக ஐ, அந்நியன் ஆகிய படங்களை கூறலாம்.

சியான் விக்ரம் நடிப்பில் கடைசியாக கடாரம் கொண்டான் படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, கோப்ரா, துருவ நட்சத்திரம், மஹாவீர் கரணா, பொன்னியின் செல்வன், சியான்60 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், மஹாவீர் கர்ணா படத்தை இயக்கி வரும் இயக்குநர் ஆர்.எஸ். விமல் தனது அடுத்த படம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், திருவிதாங்கூர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தர்ம ராஜ்ய என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த தர்ம ராஜ்ய படம் உருவாக இருக்கிறது.

வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், அனைத்து மொழி நடிகர்கள், நடிகைகளும் இந்தப் படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

படம் முழுவதும் விஆர் தொழில்நுட்பத்தை கொண்டு லண்டனில் உருவாக்கப்பட இருக்கிறது. கொரோனா முற்றிலும் சரியான பிறகு இந்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

நடிப்பு, டான்ஸ், குரல் வளம் கொண்ட ஹீரோ விஜய்: இசையமைப்பாளர் தேவா!

0
Thalapathy Vijay Movie Songs

Vijay Movie Songs; நடிப்பு, டான்ஸ், குரல் வளம் கொண்ட ஹீரோ விஜய்: இசையமைப்பாளர் தேவா! தளபதி விஜய், நடிப்பு, நடனம், குரல் வளம் என்று மூன்று அம்சங்களும் முகுந்த ஹீரோவாக இருக்கிறார் என்று இசையமைப்பாளர் தேவா பெருமையாக கூறியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பு, டான்ஸ், பாடகர் என்று மூன்று அம்சங்களும் கொண்டவராக இருக்கிறார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த வரிசையில், அதிக படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படம் உள்பட இதுவரை 64 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

கொரோனா காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ கூறியிருந்தார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் தேவா, விஜய் பற்றியும், அவரை பாட வைத்தது குறித்தும் பெருமையாக கூறியுள்ளார். விஜய் ஹீரோவாக நடித்த 15 படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார்.

தளபதி விஜய் நடித்த ரசிகன் படத்தில் அவரை சொந்தக் குரலில் பாட வைத்த பெருமை தேவாவிற்கு உண்டு. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

விஜய் ஒரு மாஸ் ஹீரோ. அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னரே அவரை எனக்கு நன்கு தெரியும். அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் நிறைய படங்களில் நான் பணியாற்றியிருக்கிறேன்.

அவருடன் விஜய் எனது இசை கூடத்திற்கு (Music Composing) வருவார். ஒரு ஓரமாக அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்.

யாருடனும் பேசவே மாட்டார். ஆனால், எப்படி எல்லாம் கம்போசிங் செய்கிறார்கள் என்பதை மட்டும் கூர்ந்து கவனிப்பார்.

அவரை கண்டு நான் பிரமித்துப் போனேன். அதன் பிறகு அவரை ரசிகன் படத்தில் பாட வைப்பதற்கு ஆசைப்பட்டேன். விஜய் முதலில் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர் பயந்தார். அதன் பிறகு பயப்படாமல் பாடுங்கள் என்றேன்.

அதன் பிறகு அவர் பாடினார். அவர் பாடிய பாடல் தான் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி… இந்தப் பாடலை விஜய் உடன் இணைந்து கேஎஸ் சித்ராவும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு, நடனம், குரல் வளம் இந்த மூன்று அம்சங்களும் மிக்க ஹீரோ விஜய் என்று தேவா பெருமையாக கூறியுள்ளார்.

3

ரூ.45 லட்சம் முறைகேடு: கணக்காளர் ரம்யா அதிரடி நீக்கம் – அறிக்கை!

0
Vishal Film Factory

Vishal Film Factory; ரூ.45 லட்சம் முறைகேடு: கணக்காளர் ரம்யா அதிரடி நீக்கம் – அறிக்கை! விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கணக்காளர் ரம்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கணக்காளர் பொறுப்பிலிருந்து ரம்யா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இனி இல்லை என்று கூறி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் என்று சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய ரம்யா ரூ.45 லட்சம் முறைகேடு செய்ததாக, அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விருகம்பாக்கம் போலீசார் அவர் மீது மோசடி புகாரின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், “எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில் புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்”என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்!

0
Pavalar Maindhan Passed Away

Pavalar Maindhan Passed Away; இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்! இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குனருமான ஹோமோ ஜோ நேற்று காலமானார்.

இசைஞானி இளையராஜாவிற்கு இரு சகோதரர்கள். அவர்கள் கங்கை அமரன் மற்றும் பாவலர் வரதராஜன். இதில், கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரை அனைவருக்கும் தெரியும்.

ஆனால், பாவலர் வரதராஜனின் மகன் பாவலர் மைந்தனை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர், ஹோமோ ஜோ என்றும் அழைக்கப்படுகிறார். இவர், உடல்நிலை காரணமாக நேற்று காலமானார்.

ஜோ, கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் என்று பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இயக்குநர் ஆர்வி உதயகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். தற்போது நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

செல்லம்மா செல்லம்மா டாக்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியீடு!

0
Chellamma Lyric Video

Doctor Chellamma Lyric Video; செல்லம்மா செல்லம்மா டாக்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியீடு! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் செல்லம்மா பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

டாக்டர் படத்தின் செல்லம்மா பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்களிலேயே புதிய உச்சம் தொட்டவர்.

கடைசியாக இவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. தற்போது, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பிரியங்கா அருள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மேலும், யோகி பாபு, வினய், அர்ச்சனா ஆகியோரும் நடித்து வருகின்றனர். பிகில் மற்றும் ஜடா ஆகிய படங்களில் கால்பந்து வீரராக நடித்த யோகி பாபு இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார்.

அவர் கிரிக்கெட் உடையில் கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படம் அண்மையில், வெளியானது. இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த நிலையில், தற்போது டாக்டர் படத்தின் செல்லம்மா செல்லம்மா என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த பாடலின் ஆரம்பம் முதலில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மூவருமே மாஸ்க் அணிந்துள்ளனர். மேலும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் டேபிளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.

டிக் டாக்கில் மில்லியன், பில்லியன் அளவிற்கு வேற லெவலில் ஹிட்டாக வேண்டும். டிக் டாக்கை திறந்தால் நம்ம பாட்டு தான் இருக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

இதற்கு பதிலளிக்கும் அனிருத், அதற்கு டிக் டாக் இருக்க வேண்டும் என்கிறார். டிக் டாக்கை தடை செய்து விட்டார்கள். டிக் டாக் தடை நீக்கிய பிறகு ஒரு நல்ல ஐடியா யோசித்து சொல்லலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அனிருத் செல்கிறார்.

டிக் டாக் தடையை வைத்தே ஒரு பாடல் சொல்லுங்க என்று சிவகார்த்திகேயன் கேட்கிறார். அப்படியே அந்த வீடியோ முடிகிறது.

ஆனால், வீடியோவின் பின்னணியில்

டிக் டாக் எல்லாம் பேன் அம்மா,

நேரா டூயட் பாட வாயேம்மா…

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது எல்லாம் போதுமா…

கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசுமா…

செல்லம்மா

என்று அந்த பாடல் பாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

செல்லம்மா செல்லம்மா பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோர் இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

டிஆர்பியில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்யின் பைரவா!

0
Thalapathy Vijay Bairavaa

Bairavaa TRP; டிஆர்பியில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்யின் பைரவா! தளபதி விஜய் நடிப்பில் வந்த பைரவா படம் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பைரவா டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது.

இயக்குநர் பரதன் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பைரவா.

கல்வி முறையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், பைரவா படம் எத்தனையோ முறை சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லாக்டவுன் காரணமாக கடந்த வாரம் பைரவா சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் பைரவா தொடர்ந்து டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது. ஆம், 15348 (ரூ.1.53 கோடி) வரையில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

பைரவா படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 ஆவது இடத்திலும் விஜய்யின் புலி 3ஆவது இடத்திலும் உள்ளது.

பைரவா படம் உள்பட விஜய்யின் 4 படங்கள் ரூ.1 கோடி மற்றும் அதிக பதிவுகளை கொடுத்து புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக மாஸ்டர் படம் இதுவரையில் திரைக்கு வரவில்லை.

கொரோனா லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதும் மாஸ்டர் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அண்மையில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bairavaa TRP

3

மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று!

0
Dhruva Sarja and his Wife Prerana

Dhruva Sarja COVID 19; மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரருக்கு கொரோனா தொற்று! அண்மையில், திடீரென்று உயிரிழந்த சிரஞ்சீவி சார்ஜாவின் சகோதரர் துருவா சார்ஜாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினரும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சோகமே இன்னும் மீளாத நிலையில், அதற்குள் கன்னட திரையுலகில் மற்றொரு அதிர்ச்சி செய்து கிடைத்துள்ளது.

சிரஞ்சீவி சார்ஜா மற்றும் அர்ஜூனின் சகோதரும் நடிகருமான துருவா சார்ஜாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதித்துள்ளது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: எனக்கும், எனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு சிறிய அறிகுறிகள் இருக்கிறது.

விரைவில், நாங்கள் மீண்டு வருவோம். எங்கள் உடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தீர்களோ அவர்கள் எல்லாம் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

3

ஐபோனில் எடுக்கப்பட்ட விஜயலட்சுமியின் வேக்கப் குறும்படம் டிரைலர் வெளியீடு!

0
Wake Up Short Film Trailer

Wake Up Short Film Trailer; விஜயலட்சுமியின் வேக்கப் குறும்படம் டிரைலர் வெளியீடு! நடிகை விஜயலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் வேக்கப் குறும்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

லாக்டவுன் காலத்தில் உருவாக்கப்பட்ட விஜயலட்சுமியின் வேக்கப் குறும்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை, காதல் கவிதை படங்களை இயக்கிய இயக்குநர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயலட்சுமி, அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, ஆடாம ஜெயிச்சோமடா, சென்னை 600028 – 2 ஆம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கசட தபற படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் விஜயலட்சுமி வேக்கப் என்ற குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

த்ரில்லர் கதையை மையப்படுத்தி இந்த வேக்கப் குறும்படம் முழுக்க முழுக்க ஐபோனை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளது.

விஜயலட்சுமி மற்றும் முகமது பெரோஷ் ஆகியோர் மட்டுமே இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர்.

தற்போது வேக்கப் Wake Up என்ற குறும்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3