Home Blog Page 19

Joshua: எங்கு போனாலும் கூட்டி செல்வாயா? நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ வெளியீடு!

0
Naan Un Joshua Video Song

Naan Un Joshua Video Song; எங்கு போனாலும் கூட்டி செல்வாயா? நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ வெளியீடு! நடிகர் வருண் நடிப்பில் உருவாகி வரும் ஜோஷுவா இமை போல் காக்க படத்தில் 2ஆவது சிங்கிள் நான் உன் ஜோஷுவா பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நான் உன் ஜோஷுவா பாடலின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வருண். இவர், தயாரிப்பாளர் ஐசனி கணேஷின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில் வந்த தலைவா படத்தின் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும், தலைவா படத்தில் விஜய்க்கு நண்பனாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தவிர, ஒரு நாள் இரவில், போகன், வனமகன், நெருப்புடா, சம்டைம்ஸ், எல்.கே.ஜி, பப்பி, கோமாளி, சீறு ஆகிய படங்களில் நடித்துள்ளார். பப்பி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷுவா இமை போல் காக்க என்ற படத்திலும் வருண் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் உருவாகும் இந்தப் படத்தில் வருணுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ராஹீ ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

கௌதம் மேனனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டைன்மெண்ட் என்ற நிறுவனத்தின் பேனரில் தயாரிக்கத் தொடங்கினார்.

தற்போது இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் வெளியிடுகிறார்.

கார்த்திக் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில், ஜோஷுவா இமை போல் காக்க படத்தின் 2 ஆவது சிங்கிள் நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இந்தப் பாடலுக்கு வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். கார்த்திக் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

கௌதம் மேனனின் படத்தில் பாடலுக்கு ஒன்றும் குறைவிருக்காது. அதோடு, பாடலும் ஹிட் கொடுக்கும்.

அந்த வகையில், நான் உன் ஜோஷுவா பாடலில் ரொமான்ஸ், ஆக்‌ஷன் காட்சிகள் ஆகியவை இடம் பெற்றுள்ளது.

தற்போது இந்தப் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை வெளியாகவில்லை.

வரும் 2021 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோஷுவா படத்தின் நான் உன் ஜோஷுவா பாடல் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், #JOSHUA என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் ஸ்ருதி ஹாசன்!

0
Shruti Haasan 100 Most Influential People In Asia 2020

Shruti Haasan; ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் ஸ்ருதி ஹாசன்! ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் நடிகை ஸ்ருதி ஹாசன் இடம் பிடித்துள்ளார்.

ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் கொண்ட பட்டியலில் நடிகை ஸ்ருதி ஹாசனும் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, 3, பூஜை, புலி, வேதாளம், எஸ்ஐ3 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, விஜய் சேதுபதி உடன் இணைந்து லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து, தனது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அண்மையில், தண்ணீருக்குள் இருந்தபடியே டான்ஸ் ஆடிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், நியூயார்க் செய்தி பத்திரிக்கை நிறுவனம் ஒன்று 2020 ஆம் ஆண்டுக்கான ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீராங்கனைகள், இசையமைப்பாளர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இதில், முதலிடத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சானியா மிர்சா, சோயிப் அக்தர், வாசீம் அக்ரம், சோயீப் மாலிக், சானியா நேவால், ஷாகீர் ஹூசைன், பென்னி தயால், நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், கோலிவுட் பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆம், 100 பேர் கொண்ட ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ஸ்ருதி ஹாசன் கிட்டத்தட்ட 68 ஆவது இடம் பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஆசியாவிலேயே அதிக செல்வாக்கு மிக்க 100 பேர் கொண்ட பட்டியலில் நானும் ஒருவராக இருப்பது மரியாதைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

மேலும், கிரண் ராயுடன், தனது வாழ்க்கை, தொழில் மற்றும் தேர்வுகள் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

100 Most Influential People In Asia 2020

3

ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் இந்துஜா: வைரலாகும் புகைப்படங்கள்!

0
Indhuja Photoshoot Pics

Indhuja Photoshoot Pics; ஆரஞ்சு நிற உடையில் அசத்தும் இந்துஜா: வைரலாகும் புகைப்படங்கள்! பிகில் நடிகை இந்துஜாவின் சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை இந்துஜாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை இந்துஜா. கடந்த 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா.

மேயாத மான் படத்திற்குப் பிறகு மெர்குறி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், இந்துஜா தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தின் மூலம்தான் பிரபலமானார். இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்து ஒருவராக இடம்பெற்றிருந்தார்.

இப்படத்தின் போது இவர் மீது பலரும் நக்கலாக விமர்சனம் வைத்ததாக அவரே குறிப்பிட்டிருந்தார். ஆம், பிகில் படத்தில், தலையில் விக் வைத்து நடித்திருந்தார். இதை வைத்தே பலரும் விமர்சனம் வைத்தனர்.

ஆனால், அது பிடித்திருந்ததாக இந்துஜா தெரிவித்துள்ளார். தற்போது, கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட பணிகளை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை இந்துஜா போட்டோஷூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுவும், ஆரஞ்சு நிற உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு, டுவிட்டரில் #Indhuja என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

3

சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட தல அஜித்: போனி கபூருக்கு மெயில்!

0
Thala Ajith Valimai Salary

Thala Ajith Valimai Salary; சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட தல அஜித்: போனி கபூருக்கு மெயில்! வலிமை படத்திற்காக தனது சம்பளத்தின் ஒரு பகுதியை குறைத்துக் கொள்ள தயார் என்று தயாரிப்பாளர் போனி கபூருக்கு தல அஜித் மெயில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளத்தின் ஒரு பகுதியை தல அஜித் குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் முன்னேறியவர் தல அஜித். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, அவரது வேலையை மட்டும் பார்த்து வருகிறார்.

அவர் உண்டு அவரது வேலை உண்டு என்று இருப்பவர். எப்போதும் ரசிகர்களை மதிக்கும் நடிகர் என்றால், தல அஜித். ரசிகர்கள் விரும்பினால், செல்ஃபி எடுத்து கொள்ளவும் தயங்கமாட்டார்.

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் படங்களாக அமைந்தன. இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அஜித் தனது 60 ஆவது படமான தல60 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச் வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது.

இந்த நிலையில், நாட்டையே அச்சுறுத்திய கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக சினிமா பிரபலங்கள் அஜித், விஜய், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், பிரகாஷ் ராஜ், சூரி, நயன்தாரா என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருளுதவி செய்தனர்.

மேலும், பல கோடி பொருட்செலவில் படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு கெட்டும் வகையில், நடிகர்,  நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது தல அஜித் வலிமை படத்திற்காக தனது சம்பளத்தின் ஒரு பகுதியை குறைத்து கொள்ள தயார் என்று கூறி தயாரிப்பாளர் போனி கபூருக்கு இமெயில் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், வலிமை படத்தின் அஜித்தின் சம்பளம் எவ்வளவு, அவர் எவ்வளவு சம்பளத்தை குறைத்திருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

அஜித் அனுப்பிய இமெயிலுக்கு போனி கபூர் என்ன பதில் கொடுத்தார் என்பது குறித்தும் தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3

Doctor First Single: சிவகார்த்திகேயனின் டாக்டர் செல்லம்மா சிங்கிள் டிராக் எப்போது?

0
Chellamma Single Track

Doctor Chellamma Lyric Video; சிவகார்த்திகேயனின் டாக்டர் செல்லம்மா சிங்கிள் டிராக் எப்போது? டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் செல்லம்மா லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லம்மா சிங்கிள் டிராக் லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்களிலேயே புதிய உச்சம் தொட்டவர்.

கடைசியாக இவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. தற்போது, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பிரியங்கா அருள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

மேலும், யோகி பாபு, வினய், அர்ச்சனா ஆகியோரும் நடித்து வருகின்றனர். பிகில் மற்றும் ஜடா ஆகிய படங்களில் கால்பந்து வீரராக நடித்த யோகி பாபு இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார்.

அவர் கிரிக்கெட் உடையில் கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படம் அண்மையில், வெளியானது. இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இன்று டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எத்தனை மணிக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இது குறித்து முக்கியமான தகவல் வந்துள்ளது. அதன் படி, டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் டிராக் செல்லம்மா லிரிக் வீடியோ இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். மேலும், இந்த பாடல் குறித்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மூவருமே மாஸ்க் அணிந்துள்ளனர். மேலும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் டேபிளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.

டிக் டாக்கில் மில்லியன், பில்லியன் அளவிற்கு வேற லெவலில் ஹிட்டாக வேண்டும். டிக் டாக்கை திறந்தால் நம்ம பாட்டு தான் இருக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார்.

இதற்கு பதிலளிக்கும் அனிருத், அதற்கு டிக் டாக் இருக்க வேண்டும் என்கிறார். டிக் டாக்கை தடை செய்து விட்டார்கள்.

டிக் டாக் தடை நீக்கிய பிறகு ஒரு நல்ல ஐடியா யோசித்து சொல்லலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அனிருத் செல்கிறார்.

டிக் டாக் தடையை வைத்தே ஒரு பாடல் சொல்லுங்க என்று சிவகார்த்திகேயன் கேட்கிறார். அப்படியே அந்த வீடியோ முடிகிறது.

ஆனால், வீடியோவின் பின்னணியில்

டிக் டாக் எல்லாம் பேன் அம்மா,

நேரா டூயட் பாட வாயேம்மா..

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது எல்லாம் போதுமா…

கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசுமா…

செல்லம்மா

என்று அந்த பாடல் பாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

ஆடி மாத தரிசனம் 1: ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தரிசனம்! ஆயிரங்காளியின் அற்புதங்கள்!

0

ஆடி தரிசனம் 1: ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தரிசனம் தரும் ஆயிரங்காளி அற்புதங்கள். திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளி அம்மன் அதிசயங்கள்.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் அன்னை பராசக்தி நீக்கமற நிறைந்து கோவில் கொண்டு அருளாட்சி புரிந்து வருகிறாள்.

அவளின் பேராற்றல் மற்றும் அற்புதங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு ஊரிலும் கனவிலும் எண்ண இயலாத அதிசயங்களை செய்து வருகிறாள்.

அந்த வகையிலே பாண்டிசேரி மாநிலம் காரைக்காலிற்கு அருகில் திருமலைராயன் பட்டினத்தில் அமைந்த சக்தி திருத்தலமே “ஆயிரங்காளியம்மன்” கோவில் ஆகும்.

ஆயிரங்காளி தல வரலாறு

அன்னை ஆயிரங்காளி திருமலைராயன்பட்டினதிற்கு தானாக வந்தவள் ஆவாள்.
முற்காலத்தில் வடக்கே காளி வழிபாடு மேலோங்கி இருந்த காலமது.

அங்கே இருந்த மன்னன் ஒருவன் அன்னை காளியை திருவுருவம் வைத்து பூசித்து வந்தான். அன்னைக்கு எதை படைத்தாலும் ஆயிரம் என்ற எண்ணிக்கையில் படைத்து பூசித்தான்.

அவனது பகுதியில் மயங்கிய அன்னை அவனை ஆட்கொண்டாள். நாட்டின் பஞ்சம் நீங்க வரமளித்தாள். மேலும் தான் இங்கே இருந்தது போதும் தன்னை பெட்டியிலே வைத்து கடலில் போட்டுவிடும் படி ஆணையிட்டாள்.

பின் அவன் முன் ஒரு பேழை தோன்றியது அதில் அன்னையை வைத்து. வங்க கடலில் விட்டுவிட்டு. மன்னன் அன்னையின் பதம் அடைந்தான்.

பேழையும் மூழ்காமல் மிதந்து கொண்டே யார் கையிலும் அகப்படாமல் திருமலைராயன் பட்டினம் வந்தது. அருகில் இருந்த மீனவர்கள் பெட்டியை எடுக்க முயற்சித்தும் எடுக்க முடியவில்லை.

அன்று இரவு செங்குந்தர் மரபை சார்ந்த சிவனேயரின் கனவில் தோன்றி. தான் பெட்டியில் மிதந்து வந்திருப்பதாகவும். தன்னை எடுத்து ஒரு இடத்தில் நிலையாக வைத்து பூசிக்குமாறும் அன்னை கூறினாள்.

விடிந்ததும் அவரும் ஊராரிடம் நடந்தவற்றை கூறி மேள தாள வாத்தியங்களோடு கடற்கரைக்கு அனைவருடனும் சென்றார்.

அவர் வந்தவுடன் யாருக்கும் அகப்படாத பெட்டி வேகமாக அவருக்கு அருகில் வர அவரும் பேழையை அணைத்து தூக்கி வந்தார்.

பின் அவ்வூரில் இருந்த மடத்தில் பேழையை வைத்து திறந்தனர். அதில் அன்னையின் அற்புதமான திருவுருவமும் ஒரு ஓலையும் இருந்தது.

ஓலையில்
“அருள்மிகு ஆயிரங் காளி அம்மன்
இருளினை நீக்கி இன்பம் அளிப்பவள், அன்னைக்குப் படைக்கும் பொருள்கள் யாவும்
எண்ணில் ஆயிரம் ஆதல் வேண்டும்
ஆண்டுகள் ஐந்திற் கொருமுறை
திண்ணமாய்ப் பூசித்துத் திருவெலாம் பெறுகவே!” என்று இருந்தது.

அன்றிலிருந்து ஐந்து ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அன்னை வெளியே வந்து காட்சி தருகிறாள். அவளுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைக்கப்படுகிறது.

எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் கொண்டாள்.

அதிசய நிகழ்வுகள்

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே வரும் நேரத்தில் பேழையில் இருந்து கொலுசு சத்தம் கலீர் என்று கேட்கும். அதன் பின்பே பேழை திறக்கப்படும்.

ஐந்தாண்டுகளாக பெட்டியினுள் சாற்றப்பட்ட மாலை, எழுமிச்சை, மஞ்சள் எதுவும் வாடாமல் அன்று அணிவித்தது போலவே புதிதாக இருக்கும்.

கேட்ட வரம் தருவாள் ஆயிரம் காளி!

அன்னையை வெளியே எடுக்கும் நாள் இரவு வெளியே எடுத்து அலங்கரிக்கபடுவாள். பின் அடுத்த நாள் காலை முதல் தரிசனம் தருவாள். அடுத்த நாள் விடிவதற்குள் பெட்டிக்குள் வைக்கப்படுகிறாள்.

இவளிடம் என்ன வரம் கேட்டாளும் வாரி வழங்குகிறாள். தங்களால் இயன்றதை ஆயிரம் எண்ணிக்கையில் காணிக்கை ஆக்குகின்றனர்.

தனது பக்தர்கள் துயர் தீர்க்கும் கற்பக விருட்சமாக அன்னை ஆயிரங்காளி கோவில் கொண்டுள்ளாள்.

இனி 2022 ஆம் ஆண்டு மீண்டும் ஆயிரங்காளி வெளியே வருவாள். அனைவரும் திருமலைராயன் பட்டினம் சென்று அன்னையை தரிசித்து அவள் அருள் பெறுவோம்.

ஆடி மாத தரிசனம் தொடரும்…!

3

புதிய தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படம்!

0
Vijay Sethupathi Recent Pics

Vijay Sethupathi Recent Pics; புதிய தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: வைரலாகும் புகைப்படம்! தாடி மீசை அதிகமாக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதிய தோற்றத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதே போன்று அண்மையில், மாஸ்டர் படத்தில் தனது கதாபாத்திரம் எப்படி என்பது குறித்து விஜய் சேதுபதி தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

நாடு முழுவதும் கொரோனா காரணமாக முடங்கியிருக்கிறது. அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக புதிய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா காரணமாக பிரபலங்கள் அனைவரும் வீட்டிலே இருக்கும் நிலையில், விஜய் சேதுபதி வெள்ளை நிற தாடியுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதோடு, அவருக்கு அருகில், அவரது மகள், ஸ்ரீஜா விஜய் சேதுபதி ராயல் என்பீல்டு பைக்கில் அமர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.

3

புதிய கதை எழுதியுள்ள கமல் ஹாசன்: ஓடிடியில் ரிலீஸ்!

0
Kamal Haasan

புதிய கதை எழுதியுள்ள கமல் ஹாசன்: ஓடிடியில் ரிலீஸ்! ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்காக எளிமையான கதையை எழுதியுள்ளார். லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடியில் வெளியிடுவதற்கு என்று எளிமையான கதை ஒன்றை கமல் ஹாசன் எழுதியுள்ளார்.

நடிகர், இயக்குநர், டான்சர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதியுமான கமல் ஹாசன் தற்போது புதிய கதை ஒன்றை எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரும் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த லாக்டவுன் முடிந்த பிறகு கமல் ஹாசன் எழுதியிருக்கும் புதிய படத்தின் கதைக்கான படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குறைந்தபட்ச படக்குழுவினர் மற்றும் ஒரு சில நடிகர், நடிகைகள் மட்டுமே இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள்.

கமல் இந்தப் படத்தில் நடிப்பாரா? இயக்குவாரா? அல்லது தயாரிப்பாரா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

இந்தப் படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்த பிறகு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்படும். இதற்காகவே கமல் புதிய படத்திற்கான கதையை எழுதியுள்ளார்.

இந்தியன் 2 மற்றும் தலைவர் 169 ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கர்நாடகாவிடம் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வர வேண்டிய காவேரி தண்ணீரை திறந்து விடும்படி கேட்டுக்கொண்டது அரசு

காவேரி தண்ணீர்

சென்னை: செவ்வாய் கிழமை தமிழக அரசு கர்நாடகாவிடம் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வர வேண்டிய காவேரி தண்ணீர் பங்கீட்டை திறந்து விடும்படி கேட்டுக்கொண்டது.

30தாவது ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

காணொளிகாட்சி மூலம் நடந்த காவேரி நதிநீர் பங்கீட்டு வாரியத்தின் 30தாவது ஆலோசனை கூட்டத்தில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.

ஜூன் மற்றும் ஜூலைக்கான நீரை திறக்க வலியுறுத்தல்

“கர்நாடகத்தில் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் வர வேண்டிய 9 டிஎம்சி தண்ணீர் மற்றும் ஜூலை மாதம் வர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும்  உடனடியாக திறந்து விட வேண்டும்,” என கோரிக்கை வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக நீர் திறக்க வேண்டும்

இதுவரை 9 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடகம் திறந்துள்ளதாகவும், தமிழகத்தில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி துவங்கியுள்ளதால் போதிய அளவில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும், இதற்கு கர்நாடகா ஒத்துழைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.

3

ஆடி மாதம்: பிறக்கிறது ஆடி! MrPuyal இல் தினம் ஒரு திருத்தல தரிசனம்!

0

ஆடி மாதம்: நாளை பிறக்கிறது ஆடி மாதம். MrPuyal இணையம் வழியாக தினம் ஒரு திருத்தலம் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொள்வோம். அம்மன் அருள் பெறுவோம்!

உத்தராயண புண்ணிய காலம் முடிந்து தட்சிணாயன புண்ணிய காலம் துவங்கும் நாளே ஆடி மாதம் முதல் நாள் ஆகும்.

அதாவது சூரியன் தனது வடதிசை பயணத்தை முடித்து தென்திசை நோக்கி தனது ரதத்தை செலுத்துகின்ற காலமே தட்சிணாயனம் எனப்படுகிறது.

தேவர்களுக்கு பகல் பொழுது முடிந்து இரவு பொழுது துவங்கும் காலம் இதுவே ஆகும்.

ஆடி மாதம் என்றாலே நினைவிற்கு வருவது ஆடி ஒன்று முதல் பதினெட்டு வரை நடந்த மகாபாரத போர் ஆகும்.

இந்த ஆடி மாதம் தெய்வ காரியங்களுக்காகவே செலவிடுவதற்கு உரியது. எனவே தான் இந்த காலத்தில் சுப நிகழ்ச்சிகள் தவிர்த்து ஆண்டவனை நினைந்து பூசிக்க வேண்டியது அவசியம்.

காவிரி, தாமிரபரணி, வைகை என அனைத்து புண்ணிய நதிகளும் பொங்கி ஓடி வந்து விவசாயத்தை செழிக்க செய்கின்றன.

“ஆடி பட்டம் தேடி விதை” என்பர். விவசாயம் துவங்கும் மாதம் இதுவே. எனவே தமிழர்கள் மரபில் ஆடி மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது.

ஆடியில் மாதத்தில் எண்ணற்ற முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஆடியில் புனித நீராடுவது மிகவும் புண்ணியமாகும்.

ஆண்டாள் அவதரித்ததும் இந்த ஆடி மாதம் பூரம் தினத்தில் தான்.
ஆடி கிருத்திகை மிகவும் முக்கியமான விரத தினமாக முருக பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை பித்ரு தர்பணம் செய்து பித்ரு தோஷங்கள் நீங்க உகந்த நாளாகும்.  குல தெய்வ வழிபாடிற்கும் உகந்த நாள். தபசு விழா சங்கரன் கோவிலில் நடைபெறும் மாதம் இதுவே ஆகும்.

ஆடி பௌர்ணமி ஹயக்ரீவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. எனவே வைணவத்திலும் ஆடி முக்கியமான மாதமாகும்.

“காளராத்ரி”க்கு உரிய மாதம் இந்த ஆஷாட மாதமான ஆடி மாதமே ஆகும். இப்படி பல்வேறு விசேடங்கள் நிறைந்தது ஆடி மாதம் ஆகும்.

இருப்பினும் இந்த மாதத்தில் தான் அன்னை ஆதி சக்தியின் வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். சிவத்தை விட சக்திக்கான சானித்யம் நிறைந்து இருக்கும் காலம்.

எனவே ஆடி முழுதும் அன்னைக்கு உகந்த மாதமாகும். ஆடி செவ்வாய் ஆடி வெள்ளி என்று அனைத்தும் விரதமிருந்து அன்னையை பூசிக்க வேண்டிய நாட்கள் ஆகும்.

கிராம தேவதைகள் முதல் அனைத்து அம்பிகைகளுக்கும் திருவிழாக்கள் இம்மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது.

இப்படி ஆடி மாதத்தின் பெருமையை கூறிக்கொண்டே போகலாம். நாளை சூலை 16 ஆம் நாள் ஆடி முதல் நாள் ஆகும்.

ஆடி முழுதும் அம்பிகையின் பெருமைகளையும். அன்னையின் திருக்கோவில் தரிசனத்தையும். நமது MrPuyal.com இணையத்தில் நினந்தோரும் கண்டு அன்னையினை நினைந்து அருள் பெறப்போகிறோம் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!!!

3