Home Blog Page 20

ஹீரோயினாகும் விஸ்வாசம் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

0
Anikha

Anikha; ஹீரோயினாகும் விஸ்வாசம் அஜித்தின் ரீல் மகள் அனிகா! என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மலையாள படம் ஒன்றில் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

தமிழில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இந்தப் படத்தில், அஜித்தின் மகளாக நடித்தார்.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாராவுக்கு மகளாக நடித்தார்.

தனது மகளை 10 வருடங்களாக பிரிந்திருந்த அஜித், மீண்டும் தனது மகளுடன் சேர்ந்து வாழும் அப்பா மகள் செண்டிமெண்ட் காண்போரை கண்கலங்க வைத்ததோடு மெய்சிலிர்க்கவும் வைத்தது.

மேலும், ரசிகர்கள் அனைவரையும் அப்பாவையும், மகளையும் நினைக்க வைத்தது. என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களைத் தவிர நானும் ரௌடி தான், மிருதன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், குயீன் என்ற வெப் சீரிஸிலும், மாமனிதன் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், 15 வயதாகும், அனிதாக ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். அதற்காக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

மேலும், அவருக்கு மலையாளத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.

பள்ளி மற்றும் கல்லூரியில் நடக்கும் காதலை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

3

மகளோடு சைலண்ட் செல்ஃபி எடுத்த ஆல்யா மானசா: வைரலாகும் புகைப்படம்!

0
Alya Manasa Selfie With Her Daughter

Alya Manasa; மகளோடு சைலண்ட் செல்ஃபி எடுத்த ஆல்யா மானசா: வைரலாகும் புகைப்படம்! ஆல்யா மானசா தனது மகளோடு செல்ஃபி எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல்யா மானசா தனது பெண் குழந்தை அய்லா சையத்துடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா (Alya Manasa) மற்றும் சஞ்சீவ் கார்த்திக்(Sanjeev Karthick).

இந்த சீரியலில் சின்னையா என்ற ரோலில் சஞ்சீவும், செம்பா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யாவும் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தங்களது கதாபாத்திரங்கள் மூலம் கவர்ந்துள்ளனர்.

வெள்ளித்திரையை விட மக்களோடு மக்களாக ஒன்றிய சின்னத்திரைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. அதுவும் குடும்ப பெண்களுக்கு சொல்லவே வேணாம்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஜொலித்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். சீரியல்களில் ஒன்றாக நடித்து இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அழகான குட்டி தேவதை பிறந்துள்ளதாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே அதற்குரிய பொருட்களையும் வாங்கி வைத்திருந்தார். குழந்தை பிறந்து 9 நாட்கள் ஆன நிலையில், குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதன் பிறகு பெண் குழந்தைக்கு அய்லா சையத் என்று பெயரும் சூட்டினார்.

இதையடுத்து, தொடர்ந்து மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது மகளின் அழகான வீடியோ ஒன்றை ஆல்யா மானசா பதிவிட்டுள்ளார். அதோடு, சைலண்ட் செல்ஃபி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று சஞ்சீவ் கார்த்திக்கும், என்னுடைய  குட்டி பப்பு வேகமாக வளர்ந்து வருகிறாள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: கொரோனா பாதிக்கப்பட்ட நடிகை டுவீட்!

0
Rachel White Covid 19

Rachel White; எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை டுவீட்! கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று நடிகை ராச்சல் ஒயிட் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று நடிகை  ராச்சல் ஒயிட் தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மும்பையில், பாலிவுட் பிரபலங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா, அபிஷேக் பச்சன், நவ்யா சாமி, ரவிகிருஷ்ணா என்று பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த நிலையில், தற்போது தல அஜித்தின் மங்காத்தா படத்தில் நடித்த நடிகை ரச்சல் ஒயிட்டுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரச்சல் ஒயிட் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இவர், ஏராளமான வங்காள மொழி படங்களில் நடித்துள்ளார். இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஆகியோரது நடிப்பில் வந்த உங்கலி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

3

முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

0
Vijay Sethupathi Web Series

Vijay Sethupathi Web Series Debut; முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி! முதல் முறையாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதி வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. நானும் ரௌடி தான், சேதுபதி, சூப்பர் டீலக்ஸ் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இவரது நடிப்பில் துக்ளக் தர்பார், லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, உப்பென்னா, லா சிங் சத்தா, காத்து வாக்குல ரெண்டு காதல், க/பெ.ரணசிங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார்.

படங்களில் நடிப்பதைக் காட்டிலும், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த வெப் சீரிஸ்களில் நடிப்பதில் நடிகர், நடிகைகள் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக, நடிகை பூர்ணா, மீனா போன்ற நடிகைகள் வெப் தொடரில் நடித்துள்ளனர். நடிகர்கள், பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்களது வரிசையில், சமந்தா, தமன்னா, பிரியா பவானி சங்கர், பிரியாமணி, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் பலரும் வெப் சீரிஸில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், தற்போது மாஸ் நடிகரான விஜய் சேதுபதியும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த வெப் சீரிஸை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று நடிகர் சூர்யாவும் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார். 9 கதைகள் கொண்ட வெப் சீரிஸை 9 இயக்குநர்கள் இயக்க இருக்கின்றனர்.

சூர்யா நடிக்கும் எபிசோடை 180 பட இயக்குநர் ஜெயேந்திர பஞ்சாபகேசவன் இயக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு கொரோனா: திருச்சி

இளநிலை உதவியாளருக்கு கொரோனா

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 35ந்து வயதுடைய இளநிலை உதவியாளருக்கு கொரோனா இருப்பது செவ்வாய் கிழமை உறுதியானது.

பாரதிதாசன் சாலையில் உள்ள பிரதான அலுவலகத்தில் பணிபுரிபவர்

பாரதிதாசன் சாலையில் உள்ள பிரதான அலுவலகத்தில் இவர் வேலை செய்து வந்துள்ளார். பொதுப்பிரிவில் வேலை செய்யும் 15 வேலையாட்களில் இவரும் ஒருவர்.

இதற்கு முன் சக ஊழியர்கள் இரண்டு பேருக்கு கொரோனா

இந்த அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது நபர் இந்த பெண்மணி ஆவார். இவருக்கு எந்த பயண வரலாறுகளும் இல்லை. இதற்கு முன் சக ஊழியர்கள் இரண்டு ஆண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து சக உழியர்கள் தங்களது துரையை தற்காலிகமாக மூடும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் அதிகாரிகள் ஏற்கனவே கிருமினாசினிகள் மூலம் அவ்விடம் சுத்தமாக்கப்பட்டது என தெரிவித்தனர்.

3

ரஜினி, விஜய்யை சீண்டிப் பார்க்கும் மீரா மிதுன்: டுவீட்டால் சர்ச்சை!

0
Meera Mithun twitter

Meera Mithun; ரஜினி, விஜய்யை சீண்டிப் பார்க்கும் மீரா மிதுன்: டுவீட்டால் சர்ச்சை! கண்ணகி மதுரையை எரித்தது போன்று எனக்கு கோபம் வந்தால் நான் தமிழ்நாட்டையே எரித்துவிடுவேன் என்று மீரா மிதுன் மிரட்டியுள்ளார்.

கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் எனது பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள். சைபர்புல்லிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று மீரா மிதுன் குறிப்பிட்டுள்ளார்.

மாடல் அழகியும், நடிகையுமான மீரா மிதுன், தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். எனினும், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தனது கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும், பல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை த்ரிஷா குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதில், தன்னைப் போன்று ஹேர்ஸ்டைல், தோற்றம் என்று மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று த்ரிஷாவை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இவ்வளவு ஏன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் தான் என்று கூறி வருகிறார். அதோடு, தமிழக அரசை களைத்துவிட்டு, தன்னை முதல்வராக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்து வருகிறார். அதோடு, நடிகர், நடிகைகளை வம்பிழுத்து வருகிறார்.

தமிழ்நாடு என்னை புறக்கணித்தது, அதற்கு நன்றி. அதனால் தான் இபோது தேசிய அளவில், சர்வதேச அளவில் ஒரு சூப்பர்மாடலாக இருக்கிறேன்.

பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நான் இருக்கிறேன். ஆனால் எனக்கு புரியாதது என்னவென்றால், தமிழ்நாடு என்னைப் பற்றி பேசுவது (துன்புறுத்துவது) அவர்களின் ஒரே வேலையாக வைத்துள்ளது?!

தமிழகம் தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் என நான் கருதுகிறேன், ஆனால் மலையாளிகள், கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி, ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் ஏன் இன்னும் என் பின்னால் அலைகிறார்கள்! தனக்கு கோபம் வந்தால் கண்ணகி மதுரையை எரித்தது போன்று தான் தமிழகத்தை எரித்துவிடுவேன். பிரதமர் மோடி தமிழகத்தை அழித்துவிடுங்கள்.

மேலும் “தமிழ்நாடு இறந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் (கன்னடம்), விஜய் (கிறிஸ்தவர்) என்னை அவதூறு செய்கிறார்களா?!

சைபர் மிரட்டல் பெண் துன்புறுத்தல் சட்டத்தில் அதை சட்டப்பூர்வமாக எடுக்க நான் தயங்க மாட்டேன்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்”என்று பதிவிட்டு, பலரையும் எச்சரித்துள்ளார்.

அவரது டுவீட்டுக்கு நெட்டிசன்கள், ரசிகர்கள் என்று பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை நாளை வெளியிடப்படும்: CBSE

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான

புதுடெல்லி: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்(CBSE) பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை புதன் கிழமை(ஜூலை 15, 2020)இல் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று தெரிவித்தார்.

அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமூகவளைதளத்தில் அறிவிப்பு

“எனது அன்பிற்குரிய குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம், பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை நாளை அறிவிக்கப்படும். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என சமூக வளைதளத்தில் தெரிவித்தார்.

குறுந்தகவல் மற்றும் பல்வேறு வழிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம்

டிஜிலாக்கர்(DIGILOCKER) எனும் கைப்பேசி செயலியிலும் தேர்வு முடிவுகளை காணலாம் மற்றும் குறுந்தகவல் மூலமும் தேர்வு முடிவுகளை காணலாம் என நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

3

சச்சின் 2 ஆம் பாகத்தை பார்க்க ஆசையாக இருக்கு: ஜான் மகேந்திரன்!

0
Sachein 2

Sachein 2; விஜய்யின் சச்சின் 2 ஆம் பாகத்தை பார்க்க ஆசையாக இருக்கு: இயக்குநர் ஜான் மகேந்திரன்! தளபதி விஜய் நடிப்பில் வந்த சச்சின் படத்தின் 2 ஆம் பாகத்தை பார்ப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று இயக்குநர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சச்சின் 2 படம் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வந்த படம் சச்சின். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனீலியா நடித்திருந்தார்.

தமிழுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் சச்சின் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. விஜய் கல்லூரி மாணவராக கொஞ்சம் ஜாலியான டைப்பில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், சச்சின் 2 ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜான் மகேந்திரன் கூறுகையில், விஜய்யின் சச்சின் படத்தை ரசிகர்கள் இப்போதும் விரும்புகிறார்கள்.

சச்சின் 2 ஆம் பாகத்தில் விஜய்யை பார்ப்பதற்கு எனக்கும் ஆர்வமாகவும், ஆசையாகவும் இருக்கிறது. அது நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறந்த பிறகு விரைவில், மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

புஷ்பா படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்!

0
Pushpa

Pushpa Movie Vijay Sethupathi; புஷ்பா படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்! அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்திலிருந்து விலகியது குறித்து நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.

புஷ்பா படத்திலிருந்து விலகியதற்கான காரணத்தை நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் சுகுமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் லாரி டிரைவராக நடித்து வருகிறார்.

செம்மரம் கடத்தலை மையப்படுத்தி புஷ்பா படம் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

அண்மையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், கன்னட நடிகர் தனஞ்செயா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், புஷ்பா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கான காரணம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தற்போது, இது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.

படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னதாக சுகுமாரை சந்தித்து, கால்ஷீட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதன் பிறகே படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் நிறைய படங்களில் நடித்து வருவதால், கால்ஷீட் பிரச்சனை வரக்கூடாது என்பதால், புஷ்பா படத்திலிருந்து விலகியுள்ளார்.

இதனை அவரே சமீபத்திய பேட்டியின் போது குறிப்பிட்டு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Navarasa Web Series: முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் சூர்யா!

0
Suriya Web Series Debut

Suriya Web Series Debut; முதல் முறையாக வெப் சீரிஸில் அறிமுகமாகும் சூர்யா! முதல் முறையாக நடிகர் சூர்யா வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக வாங்கும் சம்பளத்தை ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு நிதியுதவியாக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக நடிகர் சூர்யா வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சூர்யா முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதுவும், ஓடிடியில் வெளியாக இருக்கும் வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார்.

இந்த வெப் சீரிஸை இயக்குநர் மணிரத்னம் தயாரிக்க இருக்கிறார். மேலும், இதற்கு நவரசா என்று டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. 9 கதைகள் கொண்ட இந்த வெப் சீரிஸை 9 இயக்குநர்கள் இயக்க இருக்கின்றனர்.

அதில், நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரும் இயக்குநர்களாக அறிமுகமாக இருக்கின்றனர். இவர்களும் இந்த வெப் சீரிஸை இயக்க இருக்கின்றனர்.

சூர்யா நடிக்க இருக்கும் எபிசோடை சித்தார்த், ப்ரியா ஆனந்த், நித்யா மேனன் ஆகியோர் நடித்த 180 படத்தை இயக்கிய ஜெயேந்திர பஞ்சபகேசன் இயக்க இருக்கிறார்.

சூர்யாவின் இந்த புதிய வெப் சீரிஸின் படப்பிடிப்பு லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு, படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டவுடன் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெப் சீரிஸில் நடிப்பதற்கு சூர்யா வாங்கவுள்ள சம்பளத்தை ஆதரவற்ற அனாதை குழந்தைகள் இல்லத்திற்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3