சென்னை: தமிழ்நாட்டில் திங்கள் கிழமை 66 பேர் கொரோனாவிற்கு பலி ஆகியுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டி 2032 ஆக உள்ளது.
திங்கள் கிழமை 4,328 பேருக்கு புதிதாக கொரோனா
திங்கள் கிழமை 4,328 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை சேர்த்து தமிழகத்தின் மொத்த கொரோனா எண்ணிக்கை 1,42,798 ஆகவுள்ளது இதில் 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் 1,140 புதிய கொரோனா
சென்னையில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பிறகு 1,140 புதிய கொரோனா தொற்றுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.
Online Theatre PPV Method; வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும் முறை அறிமுகம்! வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும் பிபிவி (PPV- Pay Per View) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் தியேட்டரில் படம் பார்க்கும் பிபிவி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள், ஓடிடி (OTT – Over The Top Telecast) தளத்தில் வெளியாகி வருகிறது. ஏற்கனவே ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் பென்குயின் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து டேனி, காக்டெய்ல், ஆர்கே நகர், லட்சுமி பாம் ஆகிய படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் படம் பார்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாதந்தோறும் சந்தா கட்ட வேண்டிய நிலை இருக்கிறது. தற்போது இதற்கு மாற்றாக புதிய முறை வந்துள்ளது. அதுதான் பிபிவி (PPV- Pay Per View) முறை.
இதன் மூலம், உங்களுக்கு பிடித்த படத்திற்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி அதனை ஆன்லைனில் பார்த்து மகிழலாம்.
பிரபல தயாரிப்பாளர் சிவி குமார் முயற்சியின் காரணமாக, தியேட்டர் டூ ஹோம் என்ற புதிய தொழில்நுட்பத்தை ரீகல் டாக்கீஸ் என்ற திய ஆப் மூலம் ஆன்லைன் தியேட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையில், ஒன்பது குழி சம்பத் என்ற புதிய படம் வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Doctor First Single; சிவகார்த்திகேயனின் டாக்டர் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் டிராக் செல்லம்மா பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்லம்மா ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வரும் 16 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்களிலேயே புதிய உச்சம் தொட்டவர். கடைசியாக இவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. தற்போது, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்டர்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பிரியங்கா அருள் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும், யோகி பாபு, வினய், அர்ச்சனா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
பிகில் மற்றும் ஜடா ஆகிய படங்களில் கால்பந்து வீரராக நடித்த யோகி பாபு இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார். அவர் கிரிக்கெட் உடையில் கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படம் அண்மையில், வெளியானது.
இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது டாக்டர் படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 16 ஆம் தேதி டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் டிராக் செல்லம்மா பாடல் லிரிக் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். மேலும், இந்த பாடல் குறித்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மூவருமே மாஸ்க் அணிந்துள்ளனர். மேலும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் டேபிளில் சானிடைசர் வைக்கப்பட்டுள்ளது.
டிக் டாக்கில் மில்லியன், பில்லியன் அளவிற்கு வேற லெவலில் ஹிட்டாக வேண்டும். டிக் டாக்கை திறந்தால் நம்ம பாட்டு தான் இருக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறுகிறார்.
இதற்கு பதிலளிக்கும் அனிருத், அதற்கு டிக் டாக் இருக்க வேண்டும் என்கிறார். டிக் டாக்கை தடை செய்து விட்டார்கள். டிக் டாக் தடை நீக்கிய பிறகு ஒரு நல்ல ஐடியா யோசித்து சொல்லலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து அனிருத் செல்கிறார்.
டிக் டாக் தடையை வைத்தே ஒரு பாடல் சொல்லுங்க என்று சிவகார்த்திகேயன் கேட்கிறார். அப்படியே அந்த வீடியோ முடிகிறது.
ஆனால், வீடியோவின் பின்னணியில்
டிக் டாக் எல்லாம் பேன் அம்மா,
நேரா டூயட் பாட வாயேம்மா..
ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது எல்லாம் போதுமா…
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசுமா…
செல்லம்மா
என்று அந்த பாடல் பாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தகக்து.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Suriya; சூர்யாவின் பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்ட 115 பிரபலங்கள்! வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், 115 பிரபலங்கள் இணைந்து அவரது பிறந்தநாள் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
சூர்யாவின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட போஸ்டரை 115 பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.
தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.
இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை இப்போதே கொண்டாடும் வகையில், காமென் டிபி உருவாக்கப்பட்டுள்ளது.
அதனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோர் என்று கிட்டத்தட்ட 115 பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
கார்த்தி, கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், மாதவன், கவுதம் மேனன், ஹரி, தமன்னா, பாண்டிராஜ், சிம்ரன், ஆர்யா, அதிதிராவ் உள்பட 115 பிரபலங்கள் வெளியிட்டனர்.
தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, SuriyaBirthdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டெக்கும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காமென் டிபி புகைப்படத்தில் சூர்யாவைச் சுற்றிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பலரும் நடந்து செல்கின்றனர்.
அவருக்கு பின்புறம் பல அடுக்குமாடி வீடுகள் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Vivek; எனது மைத்துனருக்கு கொரோனா: விவேக் டுவீட்! எனது மைத்துனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தனது மைத்துனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக நடிகர் விவேக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விவேக். எத்தனையோ படங்களில் நடித்துள்ளார்.
அஜித், விஜய், விக்ரம், தனுஷ் என்று மாஸ் ஹீரோக்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தனது மைத்துனருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது மைத்துனர்,கொரோனாவால்) காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார்.
எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மக்கள் மட்டுமல்லாமல், திரை பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராதயா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத்: மேதக் மாவட்டத்தில் உள்ள இளைஞர் உயிருடன் இருந்த உடும்பை தீயில் சுட்ட நேரலை காணொளியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இதை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
காணொளியில் இருந்தவர் 20 வயதுடைய இளைஞர் ஆவர். வனப்பாதுகாப்பு சட்டம் 1972 இன் படி உடும்புகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளது. “உடும்பை விற்பவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்களுக்கு 3 முதல் 7 வருடம் சிறை தண்டனை,” என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
பாலின உணர்ச்சியை தூண்டும் என கருதி வேட்டையாடப்படும் உடும்பு
சில நாடுகளில் ஊர்வன வகையை சார்ந்த இந்த உடும்பு மருத்துவ காரணங்களுக்காகவும், பாலின உணர்ச்சியை தூண்டும் மாமிசமாகவும் கருதப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
வனத்துறையினர்க்கு உதவி புரிய பொது மக்களிடம் வேண்டுகோள்
பொது மக்களிடம் வன உயிர்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டு, வனத்துறையினர்க்கு உதவி புரிய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Aishwarya Rai Bachchan; மாமனார், கணவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா தொற்று உறுதி! அமிதாப், அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மும்பையில் இருக்கும் பாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், தற்போது அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது.
இது குறித்து அமிதாப் பச்சன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்னும் முடிவு வரவில்லை. என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகி வந்த அனைவரும் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எனினும், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குடும்ப உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், தற்போது ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், அமிதாப் பச்சனின் மனைவியும், எம்பியுமான ஜெயா பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது.
Viswasam; சன் டிவியில் விஸ்வாசம்: தமிழகத்தில் 5 ஆவது இடத்தில் டிரெண்டிங்! தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் சன் தொலைக்காட்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
சன் டிவியில் தல அஜித்தின் விஸ்வாசம் படம் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித், நயன்தாரா, அனிகா ஆகியோரது நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வந்த படம் விஸ்வாசம்.
குடும்ப கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த இந்தப் படம் அப்பாவுக்கும், மகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை வெளிக்காட்டியது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.
படம் மட்டுமல்லாமல், படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. இமான் இசை என்றால் சும்மாவா.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதற்கு முன்னதாக 2 முறை விஸ்வாசம் படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
சன் டிவியில், விஸ்வாசம் படம் ஒளிபரப்பு செய்யப்படுவதைத் தொடர்ந்து டுவிட்டரில், #Viswasam விஸ்வாசம் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, தமிழகத்தில் டிரெண்டிங்கில் 5ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை: பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் வனத்துறை அதிகாரிகள் 15 அடி நீள இராஜ நாகத்தை சனிக்கிழமை நரசிபுரம் பண்ணைக்குள் இருந்து மீட்டனர் மற்றும் அதனை சிறுவானி காட்டு பகுதிக்கு சென்று விட்டனர்.
பண்ணையில் பாம்பு பிடிக்க வல்லுநர்களுடன் வந்த அதிகாரிகள்
காட்டுபகுதிக்கு அருகே இருக்கும் பண்ணையில் பாம்பு இருக்கும் செய்தியை கேட்ட அதிகாரிகள், பாம்பு பிடிப்பதில் வல்லுநர்கள் உதவியுடன் வந்து அதனை பிடித்தனர்.
அந்த இடத்திற்கு இரண்டு முறை வந்த பெண் இராஜநாகம்
அதிகாரிகள் இது குறித்து தெரிவிக்கும் பொழுது அந்த பெண் பாம்பு அந்த இடத்திற்கு இரண்டு முறை வந்துள்ளதாகவும், அது தற்போது வைதேகி அருவி இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
“மீண்டும் இங்கு வர வாய்ப்பிருப்பதாக அங்கு இருப்பவர்கள் பயந்ததால், நாங்கள் அதை பிடித்து வேறு காட்டு பகுதியில் தற்போது விட்டுள்ளோம்”, என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவை: துடியலூர் காவல் நிலையத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
காவல் நிலையம் மூடப்பட்டது
தற்போது இந்த காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் அருகி இருக்கும் திருமண மண்டபத்தில் இருந்து காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த காவல் நிலை நிலையத்தில் இருக்கும் 30 காவலர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தகவல்களின் படி தலைமை காவலர் ஒருவருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்ததால் ஐந்து நாட்களுக்கு முன் கோரோனா பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார், ஆனால் அவர் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வேலைக்கு வந்துள்ளார்.
பெண் காவலர் உட்பட 5 காவலர்களுக்கு கொரோனா உறுதி
அதை தொடர்ந்து மேலும் 4 காவலர்களுக்கு காய்சல் அறிகுறி இருந்ததால் அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட்து. இதை தொடர்ந்து ஒரு பெண் காவலர் உட்பட 5 காவலர்களுக்கு கொரோனா இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.