Home Blog Page 22

Na Muthukumar : நா. முத்துக்குமார் அவர்களுக்கான பிறந்தநாள் பதிவு.

0
na muthukumar
Na Muthukumar: நா. முத்துக்குமார் இதுவரை நேரிலே நாம் பார்த்திராத ஒருவர், ஒரு வார்த்தை கூட பேசிடாத ஒருவர் நாம் பழகிய நபராகவோ நம்மில் ஒருவராகவோ தோன்றுகிறார் என்றால் அது சற்றே பிரம்மிப்பான உணர்வாக இருக்கும். 
திரைப்பிரபலங்களை எடுத்துக்கொண்டால், தினமும் திரையில் பார்க்கிறோம் அவர்களின் படைப்புகளை ஏதோ ஒரு வகையில் நாம் அனுகி கொண்டே இருக்கிறோம். இருப்பினும் வெகுசிலர் மட்டுமே  “அட! இவர் நமநம்மில் ஒருவர் போல” என்ற உணர்வை நம்மில் உருவாக்குவார்கள். அப்படியொருவர்தான் நா.முத்துக்குமார்.
எளிமை:
பொதுவாகவே கவிஞர்களும் எழுத்தாளர்களும் எளிதில் ‘நம்மில் ஒருவர்’ என்ற எண்ணத்தை உருவாக்கினாலும், அண்ணன் நா.முத்துக்குமார் சற்றே அதிகமாக நம்முடன் நெருங்கி வருகிறார் அதற்கு ஆதியான காரணம் அவரின் பாடல் வரிகள்தான்.
நமக்கு தெரிந்த சொற்களால் அன்பு, வாழ்க்கை, நட்பு, காதல், உறவுகள், காமம், துயரம், கொண்டாட்டம் என எல்லா வகை உணர்வுகளிலும் தனது எளிய வரிகளால் நம்மை அண்ணன் நா.முத்துக்குமார் நெருங்கி வந்து கொண்டே இருக்கிறார்.
அவர் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ளும் பொழுதில் நாம் அவரின் வரிகளால் நம் உணர்வை கண்ணீராக புன்னையாக காதலாக கொண்டாட்டமாக ஏதேனும் ஒரு சாயலில் மாற்றி அதனுள் முழ்கிப்போகிறோம்.
“Beauty lies on simplicity” என்கிற பழமொழியை தன் எழுத்து வாழ்வில் மட்டுமல்லாது நிஜ வாழ்விலும் கடைபிடித்து வந்திருக்கிறார்.
அது அவரின் எழுத்துக்களின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. அந்த எளிமைதான் ரசிகனுக்கும் கலைஞனுக்கும் இடையில் இருக்கும் கதவை தகர்த்தெறிந்தது.
காதல் பிரிந்து சென்றால் இருக்கும் வெறுமையை ‘தேர் சென்ற பின்னாலே வீதி என்னாகுமோ’ என்ற ஒற்றை வரியில் சொல்லியருப்பதும் இவரின் எளிமை வரிக்கு ஒரு சான்று!
வித்தைக்காரர்:
நாஸ்டாலாஜியாக்களை தூண்டி விடுவதில் நா.முத்துக்குமார் எப்போதும் எனக்கு வித்தைக்காரராகவே தெரிவார்.
‘வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி’ என்ற பாடலின் ஒட்டுமொத்த வரியையும் உதாரணமாக அதற்கு சொல்லலாம். காக்கா முட்டை திரைப்படத்தில் வரும் ‘செல் செல்’ பாடலில் வரும் வரிகளும் உதாரணம்தான். ‘குவாட்டர் பாட்டிலை
விளக்காய் மாற்றி இருட்டை ஓட்டிடுவோம்’ என்ற ஒற்றை வரியில் நான் என் நாஸ்டாலஜியாவுக்குள் சென்று அங்கிருந்து அந்த முழுப்பாடலையும் என் குழந்தை பருவத்தை ஓடவிட்டு அதனுடன் பொருத்தி பார்ப்பதுண்டு. இவ்வாறு குழந்தை பருவம் மட்டுமல்ல நம் முந்தைய காதல்கள் நட்புகள் காலங்கள் என அனைத்தையும் தன் பாடல் வரிகள் மூலம் நம்மை உணரச்செய்வதில் இவர் கைதேர்ந்தவர்.
ஆறுதலும் நீயும்:
மனதை ஆறுதல் படுத்துவதற்கென இவரின் சில பாடல்களை பலர் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பதை நான் பலமுறை கவணித்ததுண்டு. கற்றது தமிழ் திரைப்படத்தில் வரும் “பற பற பட்டாம்பூச்சி”  பாடல்.
புதுப்பேட்டை ஆல்பத்தில் வரும் “ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடி போகாது” பாடல். காதல் கொண்டேனில் ஒலிக்கும் ‘நெஞ்சொடு கலந்திடு’. தங்க மீன்களில் வரும்  ‘நதி வெள்ளம் ‘பாடல்.
தரமணியில் ஒலிக்கும் ‘ யாரோ உச்சிக்கிளை மேலே’ மற்றும் ‘மண்ணிப்பாயா’ பாடல். இந்த லிஸ்ட்டை நீட்டிக்கொண்டே செல்லுமளவிற்கு நா.முத்துக்குமார் அவர்கள் நம்மை நம் துயரங்களில் இருந்து ஆறுதல் படுத்துவதற்காக பல வரிகளை தந்து சென்றிருக்கிறார்.
na muthukumar
உங்கள் பாடல்களும்
உங்கள் கவிதைகளும்
உங்கள் கதைகளும்
இன்னமும் எங்களை பிரம்மிப்படைய செய்து கொண்டுதானிருக்கிறது. எங்களை எங்கள் துயரங்களில் இருந்து மீட்டெடுத்து கொண்டுதானிருக்கிறது. எங்களின் கொண்டாட்த்தில் பாடு பொருளாக இருந்துகொண்டுதானிருக்கிறது.
மறைந்தாலும் 
உங்களை மறக்காமல் இருக்கும் ரசிகர்களும் தம்பிமார்களும்
மற்றைய நாட்களை விட
உமது பிறந்தநாளாகிய இன்று
உன்னை அதிகம் நினைவுகூறுகிறோம்
சற்றே கனத்த மனதுடன்!
3

ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

0
ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,000-ஆக பதிவானதால் மொத்த பாதிப்பு 8.49-லட்சமாக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,637 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 551 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,49,553 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 5,34,621 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,637 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

 

3

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா: ஐஸ்வர்யா ராய்க்கு நெகட்டிவ்!

0
Amitabh Bachchan Corona Virus

Amitabh Bachchan; அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா: ஐஸ்வர்யா ராய்க்கு நெகட்டிவ்! நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஐஸ்வர்யா ராய்க்கு நெகட்டிவ் என்று வந்துள்ளது.

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மும்பையில் இருக்கும் பாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், தற்போது அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மனைவியும், எம்பியுமான ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளது. ஆனால், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது.

இது குறித்து அமிதாப் பச்சன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். வீட்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்னும் முடிவு வரவில்லை. என்னுடன் கடந்த 10 நாட்களாக பழகி வந்த அனைவரும் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட்டில் அமிதாமி பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எனினும், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்று வந்துள்ளதைத் தொடர்ந்து டுவிட்டரில், ஐஸ்வர்யா ராய் பச்சன் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் #இந்த_ஜகத்தின்_அரசனே ஹேஷ்டேக்!

0
Dhanush Birthday Special

Dhanush; தனுஷ் பர்த்டே ஸ்பெஷல்: டுவிட்டரில் டிரெண்டாகும் #இந்த_ஜகத்தின்_அரசனே ஹேஷ்டேக்! நடிகர் தனுஷ் வரும் 28 ஆம் தேதி 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், டுவிட்டரில் #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தனுஷின் பிறந்தநாளுக்கு இன்னும் 16 நாட்கள் உள்ள நிலையில், டுவிட்டரில், #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன், 3, வேலையில்லா பட்டதாரி, மாரி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, வட சென்னை, அசுரன் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில், ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் பாலிவுட் படமான Atrangi Re ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

ஒரு நடிகரைத் தொடர்ந்து, இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஜகமே தந்திரம் கண்டிப்பாக திரையரங்கில் தான் வெளியாகும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி தனுஷ் தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனுஷ் ரசிகர்கள் தற்போதே புகைப்படம் ஒன்றை உருவாக்கி #இந்த_ஜகத்தின்_அரசனே என்ற ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாக்கி வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் தனுஷ் கையில் வாலுடனும், தலையில் கிரீடத்துடனும் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

3

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடல், பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அடுத்து நடவடிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருச்சி: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடப்பட்டது. கூட்டுறவுத்துறை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை தொடர்ந்து கனவருக்கும் கொரோனா தொற்று

தகவல்களின் படி, பதிவுத்துறையில் வேலை பார்க்கும் கூட்டுறவத்துறை பணியாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து இவருக்கும் கொரோனா இருப்பது தற்பொது தெரியவந்தது.

சுகாதாரப்பணி காரணமாக ஆட்சியர் அலுவலகம் 3 நாட்கள் மூடல்

அரியலூர் நகராட்சி பணியாளர்கள் 3 நாட்கள் இந்த சுகாதாரப்பணியை தொடர்ந்து மேற்கொள்வார்கள், அதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

3

சனிக்கிழமை மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இருவர் பலி

சாலை_விபத்து

சென்னை: சனிக்கிழமை மதுராந்தகம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக சரக்கு வண்டி, நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டியின் மீது மோதிய விபத்தில் இருவர் பலி ஒருவர் காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதி.

விபத்தில் சிக்கியவர்கள் திருவள்ளூரில் வசித்துவந்தவர்கள்

விபத்தில் இறந்தவர்கள் மாசிலாமணி, 30 மற்றும் அரூண் குமார், 25 என தெரியவந்தது. காயங்களுடன் தப்பிய ஆனந்த், 32 செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கப்பட்டார். விபத்தில் சிக்கியவர்கள் அனைவரும் திருவள்ளூரில் வசித்துவந்தவர்கள் என காவல் துறை தெரிவித்தது.

சாலை ஓரம் நிறுத்தி விட்டு ஓய்வெடுத்த சரக்கு வண்டி ஓட்டுநர்

நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி வந்துள்ளது. “ஆதிக மழை பெய்ததன் காரணமாக ஓட்டுநர் வண்டியை சாலை ஓரம் நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். அதிகாலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து சரக்குகள் ஏற்றி வந்த வந்த சிறிய ரக சரக்கு வண்டி, நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வண்டியின் பின் பகுதியில் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமுற்றார்,” என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

அச்சரப்பாக்கம் காவல் துறை வழக்கு விசாரணை செய்து விசாரித்து வருகின்றனர்.

3

யாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை: ஓவியா!

0
Oviya

Oviya; யாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை: ஓவியா! மற்றவர்களின் வாழ்க்கையில் யாரையும் பின் தொடர எனக்கு விருப்பம் இல்லை என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று நடிகை ஓவியா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இப்படத்தைத் தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், புலிவால், 90 எம்.எல்., முனி 4: காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

எனினும், அந்தளவிற்கு பிரபலமாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஓவியா கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானார்.

எப்போதும் உண்மையை மட்டும் பேசி, ரசிகர்களுக்கு நேர்மையாக இருந்து ஓவியா ஆர்மி உருவாக காரணமாக இருந்தார்.

மேலும், நிகழ்ச்சியின் போது ஆரவ்வை காதலித்தார். அவரிடமிருந்து மருத்துவ முத்தமும் பெற்றார். அதன் பிறகு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியாவிற்கு பட வாய்ப்பு வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக, வீட்டிலேயே இருக்கும் ஓவியா டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது, ரசிகர் ஒருவர் ஏன் டுவிட்டரில் எவரையும் பின் தொடரவில்லை என்று கேட்டார். அதற்கு ஓவியா மற்றவர்களின் வாழ்க்கையில் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சூர்யா பர்த்டே SuriyaBirthdayFestCDP காமென் DP வெளியீடு!

0
Suriya Birthday Fest CDP

Suriya Birthday Fest CDP; சூர்யா பர்த்டே SuriyaBirthdayFestCDP காமென் DP வெளியீடு! வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், SuriyaBirthdayFestCDP என்ற காமென் DP உருவாக்கி அதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு SuriyaBirthdayFestCDP என்ற காமென் DP வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.

தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் கொரோனா காரணமாக இதுவரை வெளியாகவில்லை.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா அருவா மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி சூர்யா தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதன் காரணமாக சூரரைப் போற்று படத்தின் டிரைலர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, சூர்யாவின் பிறந்தநாளை இப்போதே கொண்டாடும் வகையில், காமென் டிபி உருவாக்கப்பட்டுள்ளது.

அதனை இன்று வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, SuriyaBirthdayFestCDP என்ற டுவிட்டர் ஹேஷ்டெக்கும் டிரெண்டாகி வருகிறது.

அந்த காமென் டிபி புகைப்படத்தில் சூர்யாவைச் சுற்றிலும் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில் பலரும் நடந்து செல்கின்றனர்.

அவருக்கு பின்புறம் பல அடுக்குமாடி வீடுகள் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

அண்ணாத்த அப்டேட்: சண்டைக்காட்சிகளை நீக்க சொன்ன ரஜினிகாந்த்?

0
Annaatthe Fight Scene

Annaatthe Fight Scene; அண்ணாத்த அப்டேட்: சண்டைக்காட்சிகளை நீக்க சொன்ன ரஜினிகாந்த்? அண்ணாத்த படத்தில் வரும் சண்டைக்காட்சிகளை ரஜினிகாந்த் நீக்க சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த படத்தின் சண்டைக்காட்சிகளை ரஜினிகாந்த் நீக்கச் சொல்லியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தலைவர்168 படம் அண்ணாத்த. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

டி. இமான் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் தீம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கொரோனா முற்றிலும் சரியான பிறகே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதோடு, படத்தில் வரும் சண்டைக்காட்சிகளை நீக்கவும் இயக்குநரிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏனென்றால், சண்டையிடும் போது, நடிகர்களை தொட்டு நடிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும். ஆகையால், சண்டைக்காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் இவ்வாறு கூறியதைக் கேட்ட இயக்குநர் சற்று கவலையில் இருக்கிறாராம். பொதுவாக ரஜினி என்றாலே ஸ்டைலும் சண்டையும் தான்.

அப்படி மாஸ் சண்டைக்காட்சிக்கு பேர் போன ரஜினியே சண்டை வேண்டாம் என்று கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. எனினும், ரஜினி மற்றவர்களின் நலன் கருதியே இவ்வாறு கூறியது பலரது பாராட்டை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

3

அம்மாவான பிக் பாஸ் பிரபலம்: வைரலாகும் புகைப்படம்!

0
Ramya NSK Become Mother

அம்மாவான பிக் பாஸ் பிரபலம்: வைரலாகும் புகைப்படம்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரம்யா என்.எஸ்.கே தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பிக் பாஸ் பிரபலம் ரம்யா என் எஸ் கே தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் என் எஸ் கிருஷ்ணனின் பேத்தி ரம்யா என்.எஸ்.கே. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

அதோடு, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு அனைவரது கவனம் ஈர்த்தார்.

இந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் சத்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர், மன்னர் வகையறா படத்திலும், நீலக்குயில் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ரம்யா என் எஸ் கேவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்.

ஏன் மீண்டும் மீண்டும் உடல் எடையை அதிகரித்திருக்கிறேன் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். அவர்களுக்கு விரைவில் பதிலளிப்பதாக கூறியிருந்தேன்.

தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. அதை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வதில், மகிழ்ச்சியடைகிறேன். நான் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தேன்.

அதனால், தான் எனது உடல் எடை கூடியது. இனி மீண்டும் எனது உடல் எடையில் கவனம் செலுத்த இருக்கிறேன்.

உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி செய்து உடல் எடையில் கவனம் செலுத்தப்போகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா என் எஸ் கே – சத்யா தம்பதியினருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3