Home Blog Page 70

க/பெ.ரணசிங்கம் டீசர் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

0
Ka Pae Ranasingam Teaser

க/பெ.ரணசிங்கம் டீசர் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட படக்குழு! ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் நாளைக்கு வெளிவரும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு க/பெ.ரணசிங்கம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு க/பெ.ரணசிங்கம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கை விலங்கு போடப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இருவருக்கும் பின்புறம் காலிக்குடங்களுடன் பெண்களும் வயதானவர்களும் இருப்பது போன்று   க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைக் கதையைக் கொண்ட இந்தப் படம் நீதி, நேர்மை, நியாயம், சரி எது, தவறு எது, சமத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளை காலை 11.03 மணிக்கு க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகும் என்று கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

படத்தின் போஸ்டர் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், டீசரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

சொர்க்கம் என்பது நமக்கு பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை துடைக்கும் ரைசா வைரல் வீடியோ!

0
Raiza Viral Video

Raiza House Cleaning Video; சொர்க்கம் என்பது நமக்கு பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை துடைக்கும் ரைசா வைரல் வீடியோ! கமல் ஹாசனின் சொர்க்கம் என்பது நமக்கு என்ற பாட்டை கேட்டுக்கொண்டு ரைசா வில்சன் வீட்டை துடைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன் வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

இவர், தனது பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. காதலை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் திருமணத்திற்கு முன்னதான காதல் காம உணர்வை மையப்படுத்தியது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

தற்போது அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹாஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், வீட்டிலேயே இருக்கும் ரைசா வில்சன் தனது அன்றாட பணிகளை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தனக்குத்தானே முடிவெட்டி அழகு பார்த்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது கமல் ஹாசனின் சொர்க்கம் என்பது நமக்கு என்ற பாட்டை கேட்டுக் கொண்டே வீட்டை மாஃப் போட்டு சுத்தம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானாலும், நெட்டிசன்கள் இதெல்லாம் கொஞ்சம், ஓவர் தான் என்று கிண்டலடித்து வருகின்றனர். இதைவிட பிரபலங்களின் பெரிய பெரிய வீடியோவை எல்லாம் நாங்கள் பார்த்துவிட்டோம் என்று நக்கலாக கூறி வருகின்றனர்.

3

தெய்வம் தந்த வீடு நடிகை மேக்னா விவாகரத்து: கணவருக்கும், காதலிக்கும் திடீர் திருமணம்!

0
Meghna Vincent and Ton Dony

Meghna Vincent Divorce and Don Tony; தெய்வம் தந்த வீடு நடிகை மேக்னா விவாகரத்து: கணவருக்கும், காதலிக்கும் திடீர் திருமணம்! தெய்வம் தந்த வீடு என்ற தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகை மேக்னா வின்சென்ட், கணவர் டான் டோனியை விவாகரத்து செய்துள்ளார்.

மனைவி நடிகை மேக்னா வின்சென்டை விவாகரத்து செய்த கையோடு காதலியை கரம் பிடித்த டான் டோனிக்கு (Don Tony) பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளா மாநிலம் எடகொச்சி பகுதியைச் சேர்ந்தவர் நடிகை மேக்னா வின்சென்ட். இவர், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

தமிழில், தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இது தவிர கயல் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி தனது தோழி டிம்பிள் ரோஸின் அண்ணன் டான் டோனியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஒரு வருடத்திலேயே அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விவாகரத்து கிடைத்துள்ளது.

விவாகரத்து கிடைத்த அடுத்த வாரமே டான் டோனி தனது காதலியான டிவைன் கிளாரா மணிமுறியில் (Divine Clara Manimuriyil) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டான் டோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, கோவிட் 19 லாக்டவுன் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.

பப்ளிக் உடன் தொடர்பு இல்லாததால், மாஸ்க் பயன்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடாததற்கு மன்னிக்கவும். லாக்டவுன் என்பதால், அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

திருச்சூரில் நடந்த இவர்களது திருமண புகைப்படங்களை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால், கணவரின் இந்த திடீர் திருமணத்தைப் பார்த்த மேக்னா வின்சென்ட் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதற்கிடையில், மேக்னா தன்னுடன் பொன்மகள் வந்தாள் தொடரில் நடித்த விக்கி க்ரிஷை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

Posted by Don Tony on Wednesday, May 20, 2020

 

3

மீண்டும் சேரனின் ஆட்டோகிராஃப்: 16 ஆண்டுகள் கழித்து OTTயில் வெளியீடு!

0
Autograph

Autograph Released On OTT; மீண்டும் சேரனின் ஆட்டோகிராஃப்: 16 ஆண்டுகள் கழித்து OTTயில் வெளியீடு! 16 ஆண்டுகள் கழித்து சேரன், சினேகா, கனிகா நடிப்பில் வந்த ஆட்டோகிராஃப் படம் OTTயில் வெளியாகியுள்ளது.

சேரன் நடித்த ஆட்டோகிராஃப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

சேரன் தயாரித்து, இயக்கி நடித்த படம் ஆட்டோகிராஃப். கடந்த 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் சினேகா, கோபிகா, மாலிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

கடந்த காலங்களில் நடந்த மறக்க முடியாத தனது காதல் வாழ்க்கையை மீண்டும் நினைவுபடுத்தி கூறும் கதையே ஆட்டோகிராஃப். இந்தப் படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இதனை சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, மாய கண்ணாடி, பொக்கிஷம், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, ராஜாதி ராஜா, திருமணம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். கடந்தாண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கை விலங்கு உடன் ஐஸ்வர்யா ராஜேஷ்: க/பெ.ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

0
Vijay Sethupathi Ka Pae Ranasingam First Look Poster

Ka Pae Ranasingam First Look Poster; கை விலங்கு உடன் ஐஸ்வர்யா ராஜேஷ்: க/பெ.ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! கை விலங்கு போடப்பட்ட நிலையில் ஐஸ்வர்ய ராஜேஷ் இருப்பது போன்றும், அருகில் விஜய் சேதுபதி இருப்பது போன்றும் இருக்கும் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பெரிய கருப்பத்தேவர். இவரது மகன் பெ விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.

காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு க/பெ.ரணசிங்கம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு க/பெ.ரணசிங்கம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவித்தபடி, தற்போது க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கை விலங்கு போடப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இருவருக்கும் பின்புறம் காலிக்குடங்களுடன் பெண்களும் வயதானவர்களும் இருப்பது போன்று   க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைக் கதையைக் கொண்ட இந்தப் படம் நீதி, நேர்மை, நியாயம், சரி எது, தவறு எது, சமத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நாளை காலை 11.03 மணிக்கு க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Ka Pae Ranasingam First Look Poster

Ka Pae. Ranasingam First Look Poster English

3

டாப்ஸி அதிரடி அறிவிப்பு: தயாரிப்பாளர்களுக்காக டாப்ஸி எடுத்த முடிவு!

0
Taapsee Pannu Reduce Her Salary

Taapsee Pannu Reduce Salary; டாப்ஸி அதிரடி அறிவிப்பு: சினிமா தயாரிப்பாளர்களுக்காக டாப்ஸி எடுத்த முடிவு! கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் நடிகை டாப்ஸி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

நடிகை டாப்ஸி தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக 2 மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இதன் விளைவாக பட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட தொழிலாளர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண், நாசர், இயக்குநர் ஹரி, அருள் தாஸ், உதயா, ஆர்த்தி, மகத் ஆகியோரும் தங்களது சம்பளத்தை குறைத்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழில் ஆடுகளம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸியும், தனது சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில், தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

சினிமா துறை மீண்டும் சகஜ நிலை திரும்புவதற்காக சம்பளம் குறைக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

3

காட்டுக்குள்ள கண்ணா பின்னா என்று சுட்டுத்தள்ளும் ஆண்ட்ரியாவின் கா டீசர் வெளியீடு!

0
Kaa Teaser Released

Andrea Jeremiah Kaa Teaser; ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த ஆண்ட்ரியாவின் கா டீசர் வெளியீடு! ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் கா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பின்னணி பாடகியாக இருந்து கொண்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அந்த வகையில், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், இது நம்ம ஆளு, அவள், விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மாளிகை, வட்டம், அரண்மனை 3, கா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா, கமலேஷ், சலீம் கோஸ், மாரிமுத்து ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கா.

காட்டுக்குள்ள காட்டைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

கா படத்தில் ஆண்ட்ரியா, வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்துள்ளார். அண்மையில், கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில், ஆண்ட்ரியா தனது கையில் கத்தியுடன் ரத்தக் கறையுடன் நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது கா டீசர் வெளியாகியுள்ளது. இதில், காட்டுக்குள்ள நடக்கும் கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அடுத்தடுத்து காட்டுக்குள்ள பல கொலைகள் நடக்கிறது. ஆண்ட்ரியா கையில் துப்பாக்கி வைத்து சுட்டுத் தள்ளுகிறார்.

கிட்டத்தட்ட 1.25 நிமிடம் இருக்கும் வீடியோவில் இறுதியில் ஆண்ட்ரியாவுக்கு என்ன நடக்கிறது என்பது மறைக்கப்பட்டுள்ளது. அதோடு கா டீசர் முடிகிறது.

இந்தப் படம் லாக்டவுன் முடிந்த பிறகு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

நடந்தது நிச்சயமில்லை: அது வெறும் பூ முடித்தல் விழா: ராணாவின் தந்தை விளக்கம்!

0
Rana and Miheeka Bajaj At Roka ceremony

Rana Daggubati Engagement; நடந்தது நிச்சயமில்லை: அது வெறும் பூ முடித்தல் விழா: ராணாவின் தந்தை விளக்கம்! ராணாவுக்கும், மிஹீகா பஜாஜுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி குறித்து ராணாவின் தந்தை விளக்கம் கொடுத்துள்ளார்.

ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று ராணாவின் தந்தை விளக்கம் கொடுத்துள்ளார்.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 36 வயதாகும் ராணாவுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனால் என்னவோ பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட்டது.

இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.

அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியதற்கு தற்போது ஒரு வழியாக அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பகிர்ந்துள்ளார்.

இவர்களது புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராணா டகுபதிக்கும், மிஹீகா பஜாஜிற்கும் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஆம், அதற்கான புகைப்படங்களையும் ராணா இது அதிகாரப்பூர்வமானது என்று கூறி தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால், உண்மையில், ராணா டகுபதிக்கும், மிஹீகா பஜாஜுக்கும் இடையில், திருமண நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று ராணாவின் தந்தை விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், ரோகா என்னும் பூ முடித்தல் விழா என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது திருமண நிச்சயதார்த்தத்திற்கு முன்னதாக பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் இருவரும் அமர்ந்து பேசும் ஒரு அற்புத நிகழ்வுதான் இந்த ரோகா.

நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் ஆகியவற்றிகு இந்த ரோகா முக்கிய வைபோகமாக அமைகிறது.

இந்த நிகழ்ச்சியில், சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் கலந்து கொண்டார். மேலும், ராணாவின் சகோதரர் அபிராம் மற்றும் உறவினர் அர்ஜூன் மற்றும் மிஹீகா பஜாஜின் உறவினர்கள் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், ராணாவின் திருமணத்தை இந்த வருடமே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதுவும் டிசம்பர் மாதத்தில் நடத்துவது பற்றியும் யோசித்து வருவதாகவும் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விரைவில் கோப்ரா டீசர் வரும்: இயக்குநர் அஜய் ஞானமுத்து!

0
Cobra Teaser Coming Soon

Cobra Teaser; விரைவில் கோப்ரா டீசர் வரும்: இயக்குநர் அஜய் ஞானமுத்து! சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிந்த நிலையில், விரைவில் கோப்ரா படத்தின் டீசர் வெளிவரும் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

கோப்ரா டீசர் விரைவில் வெளிவரும் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து சியான் விக்ரம் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இமைக்கா நொடிகள் புகழ் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

மேலும், கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் 90 நாட்கள் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 75 சதவிகிதம் நடந்து முடிந்துள்ளது. இன்னும், 25 சதவிகிதம் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது. அதுவும், கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு எடுத்து முடிக்கப்படும்.

இதையடுத்து, கோப்ரா டீசர் விரைவில் வெளிவரும் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கமலை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மரணம்: சோகத்தில் திரையுலகம்!

0
Producer R Ragunathan Died

Producer R Ragunathan Passed Away; கமலை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மரணம்: சோகத்தில் திரையுலகம்! கமல் ஹாசனை பட்டாம்பூச்சி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் ரகுநாதன் காலமானார்.

தயாரிப்பாளர் ரகுநாதன் காலமானார்.

அண்மை காலமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சோக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இயக்குநர் விசு, நடிகர் சேதுராமன், பரவை முனியம்மா ஆகியோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இந்த மாதம் இளையராஜாவின் ஆஸ்தான ட்ரம்ஸ் இசைக்கலைஞர் புருஷோத்தமனும் காலமானார். இந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் பழம் பெரும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ரகுநாதன் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவர், குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கமல் ஹாசனை ஹீரோவாக்கியவர். ஆம், பட்டாம்பூச்சி என்ற படத்தின் மூலம் கமல் ஹாசனை ஹீரோவாக்கியவர் தயாரிப்பாளர் ரகுநாதன்.

மேலும், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வரப்பிரசாதம், நீ வாழ வேண்டும், அக்னிப்பிரவேசம், ராஜ ராஜேஸ்வரி போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் உருவான மரகதக்காடு என்ற படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. தயாரிப்பாளரைத்த் தொடர்ந்து இயக்குநராகவும் பிரபு, சுரேஷ், பாண்டியன் ஆகியோரை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திகழ்ந்த ரகுநாதன் மரணமடைந்த செய்தி திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கமல் ஹாசன் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் ரகுநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

3