Home Blog Page 69

தண்ணீர், காற்றை வைத்து தான் இனி அரசியல்: க/பெ.ரணசிங்கம் டீசர்!

0
Ka Pae Ranasingam Teaser

Ka Pae Ranasingam Teaser; தண்ணீர், காற்றை வைத்து தான் இனி அரசியல்: க/பெ.ரணசிங்கம் டீசர்! விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

க/பெ.ரணசிங்கம் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு க/பெ.ரணசிங்கம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு க/பெ.ரணசிங்கம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கை விலங்கு போடப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இருவருக்கும் பின்புறம் காலிக்குடங்களுடன் பெண்களும் வயதானவர்களும் இருப்பது போன்று   க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைக் கதையைக் கொண்ட இந்தப் படம் நீதி, நேர்மை, நியாயம், சரி எது, தவறு எது, சமத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த டீசரில், சாதி. மத அரசியலைத் தாண்டி இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துதான் மொத்த உலக அரசியல் நடக்கும் என்று விஜய் சேதுபதி அரசியல் வசனம் பேசியுள்ளார்.

2000 பேருக்கு வேலை வாங்கி கொடுத்துவிட்டு, விவசாயம் செய்து கொண்டிருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிற்கவைத்தால் எப்படி? நம்ம ஊரு பெண்கள் தண்ணீர் வண்டி தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அந்த கெண்ட் கம்பெனிகாரன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கிறான். அதை பார்த்துக் கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது.

மொத்தத்தில் இந்த டீசர், தண்ணீர், ரேஷன் கார்டு, விவசாயம் ஆகியவற்றிற்காக போராடும் ஒரு கிராமத்தைச் சுற்றிய படமாக இருக்கும் என்று காட்டுகிறது.

இதில், விஜய் சேதுபதிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. குழந்தையும் பிறக்கிறது. போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டு விஜய் சேதுபதி கிரிமினலாக நீதிமன்றத்தின் முன்பு நிற்கிறார்.

அவர் சிறைக்கு சென்றாரா? அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றியெல்லாம் க/பெ.ரணசிங்கம் விளக்கிக்கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

சரஸ்வதி கோவில்: அத்தி மரத்தடியில் அமைந்துள்ள சேலம் சரஸ்வதி (சாரதாம்பாள்) ஆலயம்!

2

சரஸ்வதி கோவில்: அத்தி மரத்தடியில் அமைந்துள்ள சாரதாம்பாள் (சரஸ்வதி தேவி) ஆலயம், காமதேனுவிற்கு தனி சன்னதி உள்ள ஆலயம், ஞானத்தை வழங்கும் அத்தி மரம்.

ஞானத்தின் வடிவமான அன்னை சரஸ்வதி தேவி “சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி” என்று நாமங்கள் கொண்டு அஞ்ஞான இருளை அகற்றி ஞானத்தை புகட்டும் தாயாக இருந்து மக்களை காத்து வருகிறாள்.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதருக்கு இந்த சரஸ்வதி தேவியே “சாரதாம்பாள்” என்ற திருநாமத்தில் காட்சி அளித்தாள். எனவே தான் அவளது திருநாமத்தில் சிருங்கேரியில் தனது முதல் பீடமான சாரதா பீடத்தை நிறுவினார்.

ஞானத்தின் பிறப்பிடமாக சாரதா பீடம் திகழ்கிறது. துங்கபத்ரா நதிக்கரையில் அமர்ந்து அன்னை சாரதா தேவி தன் குழந்தைகளுக்கு நல்லறிவையும், ஞானத்தையும் பொழிகிறாள்.

மேலும் சிருங்கேரி மட்டுமன்றி இந்தியாவில் பல பகுதிகளில் சாரதா பீடத்திற்கு பாத்தியப்பட்ட உப கோவில்களை அமைத்து அன்னை சாரதாம்பிகையை பிரதிட்டை செய்து அனைவரும் அவரவர் ஊரிலேயே அவளை தரிசிக்கும் வண்ணம் பல சாராதாம்பிகை கோவில்கள் அமைத்துள்ளனர்.

அந்த வகையில் வேறெங்கும் காண இயலாத வகையில் அத்திமரத்தடியில் அமர்ந்து அன்னை சாரதாம்பாள் அருள்புரியும் திவ்ய திருக்கோவில் தமிழகத்தில் தான் உள்ளது.

அத்திமரத்தடியில் சாரதாம்பாள் (சரஸ்வதி)

மலைகள் நிறைந்த மாங்கனி நகரமாம் சேலம் மாநகரில் அன்னை சாரதாம்பாள் ஞானத்தை வழங்கும் பிரம்ம ஸ்வரூபமான அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து அருளாட்சி புரிந்து வருகிறாள்.

அத்தி மரம் பிரம்ம ஸ்வரூபம் மேலும் அதற்கு ஆகர்சன சக்தி அதிகம் எனவே தான் இன்றும் அனைத்து கோவில் பாலாலயத்தின் போதும் அத்தி மரத்தால் ஆன பலகை அல்லது சிலையில் மூல விக்ரஹத்தின் சக்தியை ஏற்றுவர்.

அந்த அளவிற்கு அத்தி மரம் சிறப்பு வாய்ந்ததும், மூலிகை குணம் மிகுந்த மரம் என்பது அறிய முடிகிறது. சமீபத்தில் கூட காஞ்சியில் அத்திமரத்தால் ஆன அத்தி வரதரை தரிசித்து மகிழந்தோம்.

அத்தி விருட்சமானது பிரம்மாவின் வடிவமாகவே கருதப்படுகிறது. அதீத மகத்துவம் நிறைந்த இந்த பிரம்மத்தின் கீழ் அன்னை சரஸ்வதி தேவி சாரதையாக அமர்ந்து ஞானத்தை வழங்கி வருகிறாள்.

சேலம் சிருங்கேரி சாரதாம்பாள் பீடம்

சிருங்கேரி சாரதா பீடத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவில் சேலம் சாரதாம்பாள் ஆலயம் ஆகும். தற்கால சுதை சிற்ப வேலைபாடுகளுடன் அமைந்துள்ள அழகிய அற்புதமான ஆலயம்.

நகரின் மைய பகுதி ஆனாலும் சுற்றிலும் மரங்கள் நிறைந்து குளிர்ச்சி நிறைந்த ஆலயம் ஆகும். பெரிய அத்தி மரத்தின் கீழ் அம்பிகை கோவில் கொண்டு உள்ளார்.

கருவறையின் வலப்புறம் ஸ்ரீ கணபதி சன்னதி, இடப்புறம் ஜகத்குரு ஆதிசங்கர பகவத் பாதர் சன்னதி. இரண்டிற்கும் நடுவே நடுநாயகமாக அன்னை சாரதாம்பிகை அமர்ந்து அருட்காட்சி புரிகிறாள்.

சிருங்கேரியை போலவே பஞ்ச லோகத்தில் ஆன திருவுருவம். கருணையே வடிவாக அமிர்த்த கலசம், ஜபமாலை, ஓலைச்சுவடி தாங்கி சின்முத்திரை கொண்டு மாகா பாரதியாக அம்பிகை காட்சி தருகிறாள்.

அம்பிகைக்கு இடப்புறம் தென் மூலையில் பைரவர் காவல் புரிகிறார். கோவிலை வளம் வந்தால் பின்புறம் உள்ளது அகன்று விரிந்த அத்தி மரம்.

அத்தி மரத்தின் அடியில் கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்சமாக “காமதேனு” சன்னதி உள்ளது. காமதேனுவையும் அத்தி மரத்தையும் ஒரு சேர சுற்றி வருவது மிகவும் சிறப்பான ஒன்று.

திருச்சுற்று முடிவில் நவகிரக நாயகர்கள் சன்னதி கொண்டுள்ளனர். இங்கே சிருங்கேரியில் நடப்பது போலவே அனைத்து பூஜைகளும் நடைபெறுகிறது.

செவ்வாய், வெள்ளி நாட்களில் பக்தர்கள் அன்னையை தரிசிக்க நிறைய பேர் வருகின்றனர். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி இங்கே செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

சாரதா நவராத்திரி மிகவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
சிருங்கேரி சென்று அன்னையை தரிசிக்க இயலாத பக்தர்களுக்கு இந்த திருக்கோவில் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

ஞானம் வழங்குவாள் சாரதாம்பிகை

கல்வி கடவுளாக திகழும் சரஸ்வதியே சாரதாம்பாள் ஆவாள். குழந்தைகள் நல்ல அறிவு பெற, புத்தி கூர்மை பெற இங்கே வந்து அன்னையை வணங்கினால் போதும். ஞான பெருஞ்சுடராக குழந்தைகளை ஒளிர செய்வாள் தேவி சாரதாம்பாள்.

வேறு எங்கும் இல்லாத வண்ணம் பிரம்ம ஸ்வரூபமான அத்தி மரத்தின் நிழலில் அமர்ந்து காட்சி தருவதால் இன்னமும் விசேடமாகும்.

அனைவரும் சேலம் சென்றால் தவறாமல் குழந்தைகளுடன் அன்னை சாரதாம்பாள் பீடத்தை தரிசித்து ஞானம் என்கிற நீங்காத செல்வத்தை பெற்று சிறப்புடன் வாழ்வோம்.

அமைவிடம்: ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், லிவ்-ஓ காலனி, இரண்டாவது அக்ரஹாரம், சேலம் – 636001

3

நேற்று தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா தொற்று

0
நேற்று தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா தொற்று

நேற்று தமிழகத்தில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 569 பேருக்கு நோய் தொற்று உறுதியானது.

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால்  தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா நோய் உறுதியான 786 பேரில் 569 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மொத்த பாதிப்பில் 902 பேர் 12 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். நேற்று 4 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 846 பேர் குணமடைந்துள்ளனர். இதனையடுத்து மாநிலத்தில் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 7,128 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் 3,68,939 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 12,653 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 40, திருவள்ளூர் 39,  காஞ்சிபுரம் 13 பேர் என நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

3

மாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று வந்த தல: வைரலாகும் புகைப்படம்!

0
Thala Ajith and Shalini Hospital Video

Ajith Shalini Hospital Video; மாஸ்க் அணிந்தபடி மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று வந்த தல: வைரலாகும் புகைப்படம்! தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது மனைவி ஷாலினியுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்த தல அஜித்தின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப் பிறகு தல அஜித் தனது 60 ஆவது படமான வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வலிமை படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஸி நடிக்கிறார். மேலும், கார்த்திகேயா கும்மகோண்டா என்ற தெலுங்கு நடிகரும் நடிக்கிறார்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக வீட்டிலேயே இருந்த தல அஜித் தற்போது தனது மனைவியுடன் வெளியில் சென்று வந்துள்ளார்.

ஆம், தனது மனைவி ஷாலினியுடன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி தனியார் மருத்துவமனைக்கு சென்று வந்த தல அஜித்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் ஏன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்ற கேள்வி எழும் நிலையில், அவரது தந்தை சுப்பிரமணியம் சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அஜித் மருத்துவமனைக்கு சென்று வந்தாராம்.

இந்த ஒரு வீடியோ போதும், அஜித் சமூக வலைதளங்களை தன் வசப்படுத்திக் கொண்டுள்ளார். ஆம், தல ரசிகர்கள் அஜித்தின் இந்த வீடியோவை மேலும் மேலும் வைரலாக்கி வருகின்றனர்.

லாக்டவுன் முடிந்த பிறகு மீண்டும் வலிமை படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

எனினும், கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், வலிமை ரிலீஸ் தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

உலக அழகி பட்டம் பெற்றதோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் ஐஸ்வர்யா ராய்!

0
Miss World 1994 Title Winner Aishwarya Rai

Miss World 1994 Title Winner Aishwarya Rai; உலக அழகி பட்டம் பெற்றதோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் புகைப்படம்! பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்ற கையோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றதோடு தரையில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

மணி ரத்னம் இயக்கத்தில் வந்த இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இப்படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 என்ற ரோபோ படத்திலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது மீண்டும் இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், ஹிந்தி, பெங்காலி, இங்கிலீஸ் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர், நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதயா என்ற மகள் இருக்கிறாள்.

கடந்த 1973 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் மங்களூருவில் பிறந்த ஐஸ்வர்யா ராய், தனது 21 ஆவது வயதில் 1994 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி தென் ஆப்ரிக்காவில் நடந்த 44ஆவது உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

உலகம் முழுவதிலும் இருந்து தன்னுடன் போட்டியிட்ட 87 போட்டியாளர்களையும் கடந்து ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக முடி சூட்டப்பட்டார்.

ஆம், கடந்த 1993 ஆம் ஆண்டு உலக அழகியாக இருந்த ஜமைக்காவைச் சேர்ந்த 21 வயது கட்டிடக்கலை மாணவி லிசா ஹன்னா, ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி என்ற பட்டத்தை வழங்கி முடி சூடினார்.

உலக அழகி பட்டம் பெற்ற கையோடு சக பெண்மணியாக தரையில் அமர்ந்து ஐஸ்வர்யா ராய் உணவருந்தியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தலையில் உலக அழகி என்ற கிரீடத்துடன் உணவு அருந்தும் புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

23/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

23/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் இரக்க குணத்தோடு செயல்படுவீர்கள். சமூக சேவை புரியும் நாளாக இருக்கும். சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.

ரிஷபம் ராசிபலன்

இன்று அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள். செயற்கரிய சிறந்த செயல்களை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். மகத்தான நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் உடல் சோர்வு ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவையான நாளாகும். உணவு கட்டுப்பாடு அவசியமான நாள்.

கடக ராசிபலன்

இன்று விவேகமாக செயல்புரிவீர்கள். அனைத்து காரியங்களும் வெற்றி பெறும் நாளாக இருக்கும். மங்களகரமான நாளாக அமைய போகிறது.

சிம்மம் ராசிபலன்

இன்று மனதில் பய உணர்வுகள் இருக்கும். மனதை திடமாக வைக்க வேண்டிய நாளாகும். பணத்தால் உறவுகளில் பிரச்சனைகள் ஏற்பட கூடிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் மிகுந்த நன்மைகள் வழங்கும் தினமாக இருக்கும். பணிக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும் நாளாகும். செல்வ வளம் பெருகும் நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் நாளாக அமையும். மகிழ்ச்சி பொங்கும் நாளாக இருக்க போகிறது.

விருச்சிக ராசிபலன்

இன்று உறவினர்கள் வரவால் மகிழ்ச்சி பெருகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். மன அழுத்தம் குறையும் நாளாக இருக்கும். பயணங்கள் வெற்றி தரும்.

தனுசு ராசிபலன்

இன்று சந்தோஷமாக இருக்க வேண்டிய நாளாகும். தங்களது செயல்கள் அனைத்தும் நற்பலன்கள் தரும். சுப காரியங்களை துவங்க ஏதுவான நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் சில மன கவலைகள் ஏற்படும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கும்ப ராசிபலன்

இன்று உங்கள் காரியங்களில் பல எதிர்ப்புகள் தேடி வரும். பணியில் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் அதிகம். தன லாபம் குறையும் நாளாகும். சோதனை மிகுந்த நாள்.

மீனம் ராசிபலன் 

இன்று தொழில் போட்டிகள் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெற முயற்சி அவசியம். குடும்ப நலனில் அக்கறை தேவையான நாளாகும். தேவையான நலன்கள் தானாக கிடைக்கும்.

23/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

வார இறுதி நாட்களிலும் இறைச்சி விற்க அனுமதிக்கப்படும் : சேலம்

இறைச்சி விற்க அனுமதிக்கப்படும்

சேலம்: வார இறுதி நாட்களாகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்க அனுமதிக்கப்படும் என சேலம் மாநகராட்சி ஆணையர் ஆர். சதீஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் ஏப்ரல் 11 முதல் இறைச்சி கடைகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தன.

“இறைச்சி கடைகாரர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்கவிற்க அனுமதி கேட்டதை அடுத்து தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது,” என சதீஷ் தெரிவித்தார்.

சமூக விலகல் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்

மேலும் இறைச்சி கடைகளில் சமூக விலகல் தீவிரமாக கடைபிடிக்கப்படவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ” முக கவசம் அணியாதவர்களுக்கு இறைச்சி விற்கப்படக்கூடாது” என
அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் சமூக விலகல் விதிகளை கடைபிடிக்காமல் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கை பாயும்

அவ்வாறு விதிமீறல் செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் மற்றும் தகுந்த சட்ட நடவடிக்கை பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.

3

ஆஹான் தான் எமோஷன்: தலைவன் தான் சொலியூஷன்: கவின் டி சர்ட்!

0
Kavin Vadivelu T Shirt

Kavin Vadivelu T Shirt; ஆஹான் தான் எமோஷன்: தலைவன் தான் சொலியூஷன்: கவின் டி சர்ட்! பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் முகம் பதித்த டி சர்ட் ஒன்றை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வடிவேலுவின் முகம் கொண்ட டி சர்ட்டை அணிந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவின் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் வேட்டையனாக வலம் வந்தவர் நடிகர் கவின்.

இவர், பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

என்னதான் படங்களில் நடித்திருந்தாலும் கவின் என்னவோ உலகம் முழுவதும் பிரபலமானது கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான்.

அதற்கு முன்னதாகவே விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள், தாயுமானவன் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

பிக் பாஸ் மூலம் லோஸ்லியாவையும் காதலித்தார். ஆனால், இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அப்படி ஒன்றும் நடக்காதது போன்று இருவரும் அவரவர் படங்களில் பிஸியாகிவிட்டனர்.

கவின், லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் கவின், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வைகைப்புயல் வடிவேலுவின் முகம் கொண்ட டி சர்ட் ஒன்றை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, ஆஹான் இஸ் எமோஷன், தலைவன் இஸ் சொலியூஷன் என்று பதிவிட்டுள்ளார்.

வடிவேலு குறித்து கவின் இவ்வாறு பதிவிட்டது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதோடு, வடிவேலுவின் முகம் கொண்ட டி சர்ட்டைப் பார்த்த பலரும் டி சர்ட் வேற லெவெல் என்று புகழ்ந்துள்ளனர்.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

82 நாட்களுக்குப் பிறகு நாடு திரும்பிய பிருத்விராஜ்!

0
Prithviraj Return To Home Town

82 நாட்களுக்குப் பிறகு நாடு திரும்பிய பிருத்விராஜ்! கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 82 நாட்கள் பாலைவனத்தில் சிக்கித்தவித்த நடிகர் பிருத்விராஜ் இன்று கேரளா வந்தடைந்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜ் இன்று கேரளா வந்தடைந்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிருத்விராஜ். லூசிபர் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

பிருத்விராக் தமிழில், கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், நாவணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில் உருவாகி வரும் ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஜோர்டான் நாட்டிற்கு சென்றிருந்தார்.

ஆனால், அங்கு சென்ற பிறகு தான் நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், பிருத்விராஜ் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டார். இருப்பினும், அங்கு படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.

எனினும், கிட்டத்தட்ட 82 நாட்கள் அங்கே சிக்கிக் கொண்டார். இதையடுத்து, வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், பிருத்விராஜ் மற்றும் ஆடுஜீவிதம் படக்குழுவினர் உள்பட 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

முதலில் ஜோர்டானிலிருந்து டெல்லி வந்த ஆடுஜீவிதம் படக்குழுவினர் பின்னர் வேறு விமானம் மூலம் இன்று காலை கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கூகுள் வரைபடத்தால் குடும்ப பிரச்சனை, கூகுள் நிறுவனத்தின் மீது காவல் துறையில் புகார்

கூகுள் நிறுவனத்தின் மீது

நாகப்பட்டிணம்: தான் செல்லாத இடத்திற்கெல்லாம் தான் சென்றதாக காட்டுவதாகவும் இதனால் தனக்கும் தனது மனைவிக்கும் பிரச்சனை வருகிறது எனக் கூறி கூகுள் நிறுவனத்தின் மீது நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

கூகுள் வரைபட காலக்கோட்டில்(Google Map Timeline) தான் செல்லாத இடத்திற்கெல்லாம் தான் சென்றது போல் கூகுள் காட்குகிறது
என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளால் கனவன் மனைவி உறவுல் விரிசல்

தனது தொலைபேசியில் தான் செல்லாத இடத்திற்கெல்லாம் சென்றுள்ளதாக காட்டியுள்ள கூகுள் வரைபடத்தை பார்த்த தனது மனைவி தன்னை சந்தேகிப்பதாகவும், இதனால் தனது மனைவிக்கும் தனக்கும் பிரச்சனை ஏற்படுபதாகவும் புகார் கொடுத்தவர் மேலும் தெரிவித்தார்.

இந்த புகாரை கொடுத்தவர் ஆர். சந்திரசேகரன் எனவும், இவர் மயிலாடுதுறையில் உள்ள லால் பகதூர் நகரில் வசிப்பவர் எனவும் தெரிகிறது. இந்த நபர் செல்லும் இடத்தை எல்லாம் இவரது
மனைவி கூகுள் வரைபடம் மூலம் கண்கானித்து வந்துள்ளார் என்ற நிலையில் இந்த புகாரை இவர் பதிவு செய்துள்ளார்.

காவல்துறை புகாரை ஏற்றது

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல் துறை ஆய்வாளர் கே. சிங்காரவேலு இந்த புகாரை ஏற்றுக்கொண்டு, தாங்கள் விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார்.

புகார் கொடுத்த ஆர். சந்திரசேகரன் உள்ளூரில் ஃபேன்ஸி கடை  நடத்திவருபவர் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர் எனவும் தெரிகிறது.

3