Home Blog Page 68

24/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

24/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் மேன்மையை தரும் தினமாக இருக்கும். மனதில் உறுதி இருக்கும். குடும்பத்துடன் அன்போடு இருப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற தகுந்த பலன்கள் கிடைக்கும். நல்ல நாளாக இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று உங்களுக்கு புகழ் தானாக வந்து சேரும். தங்களின் குணத்தால் காரியங்கள் கைகூடும். கணவன் மனைவி அன்பு பெருகும். அற்புதமான பலன்களை பெறலாம்

மிதுன ராசிபலன்

இன்று தங்களின் தன்னம்பிக்கையால் சாதனைகள் புரிவீர்கள். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்று மிகவும் ஆதரவு நிறைந்த நாளாக அமையும். அனைத்து காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தனவரவு அதிகமாக இருக்கும். உற்றார் உறவினர்களினால் மகிழ்ச்சி ஏற்படும். மொத்ததில் பொன்னான நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். வீட்டில் சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பேச்சில் மட்டும் சற்று கவனம் தேவையாகும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும்.

துலாம் ராசிபலன்

இன்று பொறாமை குணத்தை கைவிட வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். வீட்டில் நகைச்சுவை உணர்வு அவசியம் வேண்டிய நாள். வீீட்டில் பணம் வீணாக செலவாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று விவேகமாக செயல்பட வேண்டும். கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அனைவரின் அன்பும் கிடைக்கும் நாளாக இருக்கும். குழந்தைகள் கல்வி மேம்படும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் பணிவாக நடந்து கொள்ள வேண்டிய நாள். புதிய நட்புறவால் நன்மை ஏற்படும். பண பிரச்சனைகள் தீரும் நாளாக அமையும். அற்புதமான பலன்களை வாரி வழங்கும். குடும்ப சண்டைகள் தீரும்.

மகரம் ராசிபலன் 

இன்று ஆரோக்கியம் நலமுடன் இருக்கும் நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் எளிதாக முடிப்பீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்க வேண்டும்

கும்ப ராசிபலன்

இன்று உற்சாகமாக இருக்கும் நாளாகும். பணிகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். பணிக்கான பாராட்டுகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று சோர்வுடன் இருக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. ஓய்வு அவசியம் தேவைப்படும்.

24/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

பிரதமர் மீது சோனியா காந்தி கடும் விமர்சனம்

0
பிரதமர் மீது சோனியா காந்தி கடும் விமர்சனம்

பிரதமர் மீது சோனியா காந்தி கடும் விமர்சனம். பிரதமர் மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி தொகுப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்புகள், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பொதுமுடக்கம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், “பிரதமர் அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு என்பது நகைப்புக்குரிய ஒன்றே அல்லாமல் வேறொன்றும்” இல்லை என விமர்ச்சித்துள்ளார்.

காணொளி காட்சி மூலம் நடைபெற்ற ஆலோசனையில் பேசிய சோனியா காந்தி, “தற்போதுள்ள சூழலில் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் அலுவலகத்திற்கு மட்டும்தான் உள்ளன. நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏழை மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கிட வேண்டும் என பல்வேறு வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மோடி அறிவிக்கிறார்.

நிதியமைச்சர் இதனை 5 நாட்களாக மக்களுக்கு விளக்கிவருகிறார். இது நாட்டையே நகைப்புக்கு உள்ளாக்கியுள்ளது. 21 நாட்களில் கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரையில் கொரோனாவின் பரவல் இருந்துகொண்டேதான் இருக்கும் என்ற நிலை தான் தற்போது உள்ளது.

இந்நிலையில் பொதுமுடக்கம் குறித்தோ அல்லது அதனை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தோ எந்த ஒரு நல்ல திட்டமும் அரசிடம் இல்லை. புறம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அரசால் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள், விவசாயிகள், நிலமற்ற விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 13 கோடி குடும்பங்கள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரின் துயரத்தை துடைப்பதற்கான தீர்வு அரசிடம் இல்லை”. என பேசினார். இந்த காணொளி வாயிலான ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி பங்கேற்றார்.

மேலும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரும் பங்கேற்றனர். சிவசேனா கட்சியும் இந்த காணொளி கூட்டத்தில் பங்கேற்றது.

கடந்த 35 ஆண்டுகளாக பாஜக வுடன் இருந்த சிவசேனா கட்சி அண்மையில்தான் காங்கிரசுடன் இணைந்தது. இந்த கட்சி தற்போது தான் முதன் முதலாக காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறது.

3

ஸ்விக்கி ஜொமாட்டோவில்  மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி

0
ஸ்விக்கி ஜொமாட்டோவில்  மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி துவங்கியது

ஸ்விக்கி ஜொமாட்டோவில்  மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி துவங்கியது. ஆன்லைன் மூலம் ஆர்டர் டெலிவரி செய்யப்படும்.

மும்பை: இந்தியாவிலேயே கொரோனா நோய் பாதிப்பில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா தொடர்ந்து இருந்துவருகிறது. இந்த மாநில தலைநகர் மும்பையில் ஆன்லைனில் மது விற்பனை துவங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த வாரம் மது விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனினும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் மும்பையில் இன்று முதல் மதுபிரியர்கள் ஸ்விக்கி ஜொமாட்டோவில் மது பாட்டில்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

எனினும் நோய் தொற்று அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு (containment zones) மதுபாட்டில்களை ஹோம் டெலிவரி செய்வதற்கு அனுமதி இல்லை.

ஆன்லைன் விற்பனைக்கு மதுக்கடைகள் மும்பை மாநகராட்சியின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்ற மதுபான கடைகளிலிருந்து ஸ்விக்கி, ஜொமாட்டோ மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான  மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் இதுவரை 25,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 882 பேர் இதுவரை கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில் இதுவரை 44,000 அதிகமானோர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500 பேர் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

3

தமிழகத்தில் 15000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை

0
தமிழகத்தில் 15000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை

தமிழகத்தில் 15000-ஐ தாண்டியது கொரோனா எண்ணிக்கை. நேற்று புதிதாக 759 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை: சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ துவங்கி இன்று உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தான் அதிகப்படியான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. மஹாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 759 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று கொரோனா உறுதியான 759 பேரில் சென்னையில் மட்டும் 624 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 363 பேர் கொரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 7,491 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று 5 பேர் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளனர். நேற்று மட்டும் 12,155 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களும் 41 அரசு மற்றும் 27 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 68 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நேற்று தொற்று உறுதியான 759 பேரில் 710 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 24 பேர் மகாராஷ்டிரா, 6 பேர் ராஜஸ்தான், 3 பேர் மேற்கு வங்கம்,

5 பேர் பிலிப்பைன்ஸ் மற்றும் 7 பேர் லண்டனிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் ஆவர்.

3

ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய இராணுவ உதவியை கேட்கும் மேற்கு வங்காளம்

ஆம்பன் புயலால்

கொல்கத்தா:ஆம்பன் புயலால் பாதிப்படைந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை சேவை அமைப்புகளை சரி செய்ய தங்களுக்கு இந்திய இராணுவத்தின் உதவி தேவைப்படுவதாக மேற்க்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அரசு மனித ஆற்றல் மற்றும் உபகரணங்களுக்கு தனியார் நிறுவனங்களையும் நாடியுள்ளது.

மேலும் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி மேற்கு வங்க அரசு அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் சேவைகளை சரிசெய்வதற்கு ஒற்றை தலைமையின் கீழ் அனைத்து துறைகளையும் இயக்க முடிவு செய்துள்ளது.

இராணுவ உதவியை நாடிய அரசு

“தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு ஆகியன முடுக்கிவிடப்பட்டுள்ளன; மேலும் இராணுவ உதவி கேட்டுள்ளதாக தெரிகிறது”.

குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் வடிகால் வாரியம் ஆகியவை விரைவில் சீர் செய்யப்பட்டு வருகிறது மற்றும் பொது சுகாதார பொறியியல் துறை புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் குடி தண்ணீர் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறது.

புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி

” அவசர தேவைகளுக்கு மின்னியற்றிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளன. பல்வேறு துறைகளை சார்ந்த 100க்கும் மேற்பட்ட குழுவினர் புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சரிசெய்யும் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்”.

கொல்கத்தா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஆம்பன் புயல் தாக்கி 3 நாட்கள் ஆகியும் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாததால் ஏற்பட்ட பிரச்சனைகளினால் ஏற்பட்ட போராட்டங்களின் காரணமாக இந்த நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு எடுத்துள்ளதாக
தெரிகிறது.

3

ஹலோவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் 1MonthForVijayBdayBash!

0
Thalapathy Vijay Birthday Mashup

ஹலோவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் 1MonthForVijayBdayBash!  வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அதற்காக இன்னும் ஒரு மாதம் இருப்பதை குறிப்பிட்டு 1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஹலோவில் 1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் தளபதி விஜய். உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வகையில், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், ஹலோவில், 1MonthForVijayBdayBash என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மேலும், இந்த ஹேஷ்டேக்குடன் VijayFansRulingSocialMedia, Vijay Always no 1 ஆகிய ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகிறது.

மேலும், இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி விஜய் பற்றியும், அவர் நடித்த கதாபாத்திரங்கள் பற்றியும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக, மாஸ்டர் திரைக்கு வரவில்லை.

வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தில் நடித்த நடிகர் அர்ஜூன் தாஸ், மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்ததாகவும், இத்தனை நாட்கள் காத்திருப்பிற்கு நல்லா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

4ஆவது முறையாக பெயரை மாற்றிய நடிகை அதிதி மேனன்: இந்த பேரு ஒர்க் அவுட் ஆகுமா?

0
Aditi Menon Name Change

Aditi Menon Name Change; 4ஆவது முறையாக பெயரை மாற்றிய நடிகை அதிதி மேனன்: இந்த பேரு ஒர்க் அவுட் ஆகுமா? பட்டதாரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை அதிதி மேனன் தனது பெயரை 4 ஆவது முறையாக மாற்றியுள்ளார்.

அதிதி மேனன் தனது பெயரை 4 ஆவது முறையாக மாற்றியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த அதிதி மேனன் அவரது இயற்பெயரான சாய்னா சந்தோஷ் என்ற பெயரில் மலையாள தொலைக்காட்சியில் சீரியல் வில்லியாக நடித்து வந்தார். ஆனால், அங்கு பிரச்சனை ஏற்படவே, தமிழ் பக்கம் திரும்பினார்.

தமிழ் சினிமாவில் நெடுநால்வாடை என்ற படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானார். ஆனால், இந்தப் படத்தின் இயக்குநருக்கும், ஆதிரா சந்தோஷிற்கும் பிரச்சனை ஏற்படவே படத்திலிருந்து விலகினார்.

அதன் பின்னர் தான், பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தார். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அபி சரவணன் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தனியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால், சினிமாவில் சாதிப்பதற்கு முன்னதாக தனக்கு திருமணம் நடந்தது தெரியவந்தால் எங்கு சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை அதிதி மேனன் தன்னை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகர் அபி சரவணன் புகார் அளித்தார். ஆனால், நான் அவரை காதலித்தேனே தவிர திருமணம் செய்யவில்லை என்று அதிதி மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அபி சரவணன் மற்றும் அதிதி மேனன் திருமண விவாகரத்து வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

காதல் திருமண வாழ்க்கை தோல்வியடைந்த போதிலும் நடிகர் அபி சரவணன் தொடர்ந்து தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்த நிலையில், தான் நடிகை அதிதி மேனன் தனக்கு ஒன்றுமே நடக்காதது போன்று தனது பெயரை மாற்றி மலையாள சினிமாவில் நடித்து வருகிறார்.

ஆம், 4ஆவது முறையாக தனது பெயரை மிர்னா மேனன் என்று மாற்றியுள்ளார். இந்த பெயரில் தான் மோகன் லால் நடிப்பில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் சந்தனதேவன் மற்றும் சந்தனதேவன் 2 ஆகிய இரு படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.

3

பழம்பெரும் நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி!

0
Vani Sri Son Suicide

பழம்பெரும் நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை: திரையுலகினர் அதிர்ச்சி! பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் அபிநய வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை வாணி ஸ்ரீ.

உயர்ந்த மனிதன், வசந்த மாளிகை, கண்ணன் என் காதலன், ஊருக்கு உழைப்பவன், நல்லதொரு குடும்பம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதுவும் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், என்டிஆர் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட வாணி ஸ்ரீ ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

இவருக்கு அபிநய வெங்கடேஷ் கார்த்திக் என்ற மகனும், அனுபமா என்ற மகளும் இருக்கின்றனர்.

அபிநய வெங்கடேஷ் கார்த்திக் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள அவரது பண்ணை வீட்டில் மாட்டிக் கொண்டுள்ளார்.

ஆனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருமே சென்னையில் வசித்து வந்துள்ளனர். வெங்கடேஷ் கார்த்திக்கின் மனைவியும் ஒரு மருத்துவர்.

கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வந்த வெங்கடேஷ் கார்த்திக் மிகுந்த மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அபிநய வெங்கடேஷ் காத்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

3

நகைச்சுவை எழுத்தாளர் சதீஷ் பர்த்டே டுடே!

0
Sathish Birthday

Sathish; நகைச்சுவை எழுத்தாளர் சதீஷ் பர்த்டே டுடே! நகைச்சுவை எழுத்தாளரும், காமெடி நடிகருமான சதீஷ் இன்று தனது 33ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சதீஷ் பிறந்தநாள் இன்று Happy Birthday Sathish.

கடந்த 1987 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி சேலம் மாவட்டம் எலம்பிள்ளை என்ற பகுதியில் பிறந்தவர் நடிகர் சதீஷ்.

நடிகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பின்னணி பாடகராகவும், காமெடியனாகவும் திகழ்கிறார்.

கிட்டத்தட்ட 8 வருடங்களாக கிரேஸி மோகனின் நாடகங்களுக்கு நகைச்சுவை எழுதி வந்த வசனகர்த்தா. அதன் பிறகு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வந்த பொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் துணை டயலாக் எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமானார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு வந்த ஜெர்ரி என்ற படத்தில் இரண்டு ஷாட்டுக்கு வந்து சென்றவர் நடிகர் சதீஷ். அதன் பிறகு தமிழ் படம், கொல கொலயா முந்திரிக்கா, மதராசபட்டினம், வாகை சூடவா, மகான் கணக்கு,

மாலை பொழுதின் மயக்கத்திலே, தாண்டவம், வத்திக்குச்சி, கத்தி, ஆம்பள, தேவி, றெக்க, ரெமோ, சத்யா, வேலைக்காரன் என்று இவரது படங்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தளபதி விஜய், சமந்தா நடித்த கத்தி படத்திலும், விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்திலும் காமெடியில் கலக்கியிருப்பவர் நடிகர் சதீஷ்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த மெரினா படம் முதல் மிஸ்டர் லோக்கல் வரை பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கியுள்ளார்.

மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, ரெமோ, மிஸ்டர் லோக்கல், காக்கிச் சட்டை என்று சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சந்தானத்திற்கு அடுத்த வரிசையில், நகரத்து காமெடி ரோலுக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பவர் நம்ம சதீஷ் மட்டும்தான்.

சிவா நடிப்பில் வந்த தமிழ் படம் 2 படத்தில் தன்னை ஒரு காமெடியனாகவும், நடிகனாகவும் நிரூபித்துக் காட்டியவர். ஆம், ஒரே படத்தில் பெண் வேடம் முதல் 2.0 பஷி ராஜன் வரை பல வித்தியாசமான கெட்டப்புகளை போட்டு நடத்தி அசத்தியிருப்பார்.

தளபதி விஜய், சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா, கௌதம் கார்த்திக், தனுஷ் ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள சதீஷ், அண்மையில், சிந்துவை திருமணம் செய்துள்ளார்.

அவருக்கு கல்யாண பரிசாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவ்வளவு ஏன், பிக் பாஸ் பிரபலம் லோஸ்லியா, ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், ஹர்பஜன் சிங் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ப்ரெண்ட்ஷிப் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், காமெடி நடிகர் சதீஷ் இன்று தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

மாஸ்டருக்காக எப்படி தயார் செய்தேன்? மாளவிகா மோகனன் விளக்கம்!

0
Malavika Mohanan

Malavika Mohanan; மாஸ்டருக்காக எப்படி தயார் செய்தேன்? மாளவிகா மோகனன் விளக்கம்! தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்காக தான் எப்படியெல்லாம் தயாரானேன் என்பது குறித்து நடிகை மாளவிகா மோகனன் விளக்கம் கொடுத்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் நடிக்க எப்படியெல்லாம் யார் செய்தேன் என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வந்த குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. வரும் ஜூன் 22 ஆம் விஜய் பிறந்தநாளுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால், மாஸ்டர் தீபாவளிக்கு வெளிவரும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் தான் எப்படி நடித்தேன் என்பது குறித்து மாளவிகா மோகனன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னிடம் டயலாக் பேப்பரையும், சீன் குறித்தும் விளக்குவார்.

அந்த ஒரு வாரத்தில் டயலாக் மற்றும் சீன் குறித்து நன்கு அறிந்து கொண்டு படப்பிடிப்பின் போது கச்சிதமாக நடித்துவிட்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாளம் சினிமாவின் மூலம் திரைக்கு வந்த மாளவிகா மோகனன் Beyond The Clouds என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3