Home Blog Page 67

புதிதாக 6 கொரோனா கட்டுபாட்டு மையங்கள் : டெல்லி

புதிதாக 6 கொரோனா கட்டுபாட்டு மையங்கள்

புதுடெல்லி: சனிக்கிழமை புதிதாக 6 கொரோனா கட்டுபாட்டு மையங்கள் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள மொத்த கொரோனா கட்டுபாட்டு மையங்களின் எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது.

புதிய கொரோனா கட்டுபாட்டு மையங்கள்

டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சன்லைட் காலனியில் உள்ள வீட்டு எண் 23இல் இருந்து 156, வீட்டு எண் 15 முதல் 191 மற்றும் வீட்டு எண் 230 முதல் 233 ஆகியன கொரோனா கட்டுபாட்டு மையமாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுளது.

வடக்கு டெல்லியில் ஜஹாங்கிர்பூரி பகுதி ஈ2(E2) மற்றும் ஈஈ(EE) அகியன கட்டுபாட்டு மையங்களாக(Containment zones) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசாத்பூரில் உள்ள லால்பாக் என்னும் எடத்தில் வீட்டு எண் 690 மற்றும் பட்த்திலியில் உள்ள எண்-116 ஜேஜே (N-116 JJ)முகாம் ஆகியவை கட்டுபாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வடமேற்கு டெல்லியில் நஹர்பூர் கிராமத்தில் உள்ள வீட்டு எண் 92 முதல் 212 வரை மற்றும் மங்கொள்பூரி என்னும் இடத்தில் உள்ள பகுதி சி(Block C) ஆகியவை இருவேறு கட்டுபாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளே நுழையவும் வெளியில் செல்லவும் தடை

“ஒவ்வொரு கட்டுபாட்டு மண்டலங்களில் இருந்தும் 3க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அனைத்து பகுதிகளும் மூடப்பட்டுள்ளன மற்றும் யாரும் கட்டுபாடுகளை மீறாதவகையில் உள்ளே நுழையவும் வெளியில் செல்லவும்
தடைவிதிக்கப்பட்டுள்ளது/” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லி அரசு இதுவரை 34 கட்டுப்பாட்டு மண்டலங்களை தளர்த்தியுள்ளது.

3

புதுச்சேரியில் இன்றுமுதல் மது விற்பனை

0
புதுச்சேரியில் இன்றுமுதல் மது விற்பனை

புதுச்சேரியில் இன்றுமுதல் மது விற்பனை தூங்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி: மத்திய அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்ததை அடுத்து மதுக்கடைகள் திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து புதுச்சேரியிலும் மது விற்பனை துவங்கியுள்ளது.

25 முதல் 200 சதவிகிதம் காலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் மதுபானங்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. முன்னதாக மே 20-ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது.

அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புதுச்சேரி முதல்வர் அனுப்பிவைத்தார். ஆனால் கலால்வரி விதிக்கப்படாததால் கிரண்பேடி அதனை நிராகரித்தார்.

இதனை அடுத்து நீண்ட விவாதங்களுக்கு பிறகு 20 முதல் 200 சதவிகித அளவிற்கு உயர்த்தப்பட்ட பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மாஹே, ஏனாம் தவிர்த்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சாராயத்திற்கு 20% காலால் வரியும், மதுபானங்களுக்கு 20%-200% வரை சிறப்பு காலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் மதுபானங்கள் விலை புதுச்சேரியில் கடுமையாக உயர்ந்துள்ளது.

மதுபானங்கள் விலைப்பட்டியல் :

1. ஆண்டிகுய்ட்டி ப்ளூ பிரீமியம் விஸ்கி 895 லிருந்து 1,240
2. பகார்ட்டி சிட்ரஸ் சிரப் 775 லிருந்து 920
3. புட்வைஷர் பீர் 113 லிருந்து 240
4. சேர்மன் பைன் பிராண்டி 240 லிருந்து 641
5. கிங்பிஷர் பீர் 119 ரூபாயாகவும்
6. ஹண்டர் பிரீமியம் பீர் 130 ஆகவும்
7. MC வி.எஸ்.ஓ.பி பிராண்டி 853 ஆகவும்
8. MC ஓல்ட் காஸ்க் ட்ரிப்பிள் எக்ஸ் ராம் 784 ஆகவும்
9. லா மார்ட்டின் பிரீமியம் பிராண்டி 530 லிருந்து 954
10. ஓல்ட் அட்மிரல் பிராண்டி 250 லிருந்து 560
11. கூரியர் நெப்போலியன் பிரெஞ்சு பிராண்டி 720 ஆகவும்
12. இம்பீரியல் நெப்போலியன் பிரெஞ்சு பிராண்டி 300 லிருந்து
856
13. கிரிம்ப்ஸன் பிராண்டி 400 லிருந்து 852

ஆக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மதுபான விலை குறைவு என்ற நிலை மாறி தற்போது தமிழகத்தை விட அதிக விலையில் விற்கப்படுகின்றன.

3

உள்நாட்டு விமானங்கள் இன்று முதல் இயக்கம்: விதிமுறைகள் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது

உள்நாட்டு விமனங்கள் இன்று முதல்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கினால் பல நாட்கள் உள்நாட்டு விமான சேவை இயக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் உள்நாட்டு விமானங்கள் இன்று முதல் இயக்கப்படும் எனவும் ஆனால் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்திற்கு பின் கொரோனா அறிகுறி இருந்தால் தெரிவிக்க வேண்டும்

உள்நாட்டு விமான சேவையை பயண்படுத்துபவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் இருந்தால் உடனியாக மாவட்ட கொரோனா கண்கானிப்பு அதிகாரியிடமோ அல்லது மாநில/தேசிய உதவி மையங்களுக்கு தொலை பேசி அழைப்பு மூலம் தெரியப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது, மாநிலங்களுக்கு இடையே பேருந்தில் பயணம் செய்வது மற்றும் தொடர்வண்டியில் பயணம் செய்வது போன்றவர்களுக்கான விதிமுறைகள் சுகாதார அமைச்சகத்தால் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகள், “கண்டிப்பாக 14 ன்கு நாட்கள் தனிமை படுத்தப்பட வேண்டும் எனவும், இதில் 7 நாட்கள் சுயமாக பணம் செலுத்தியும் மற்றும் மீதம் 7 நாட்கள் தங்களது வீட்டிலும், உடல் நலத்தை கவனித்தபடி இருக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரசவம், குடும்பத்தினர் இறப்பு, தீவிர உடல்நலக்குறைவு மற்றும் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளை வைத்திருப்பவர்கள் ஆகியவர்கள் மட்டும் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட அனுமதிக்கப்படுவர்.

ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் விமான சேவை இயக்கப்படும் என தெரிகிறது.

3

ஊரடங்கால் அரசுக்கு 35,000 கோடி இழப்பு-முதல்வர்

0
ஊரடங்கால் அரசுக்கு 35,000 கோடி இழப்பு - முதல்வர்

ஊரடங்கால் அரசுக்கு 35,000 கோடி இழப்பு-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல். சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இதனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

சேலம்: கொரோனா நோய் பரவலை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் தமிழக அரசுக்கு 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் நேற்று முன்தினம் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முழுமையாக மேற்கொண்டு வருகிறது. மார்ச் மதம் 23-ம் தேதி முதல் நடாய்முறையில் இருந்துவருகிறது.

பொது முடக்கத்தால் தமிழகத்திற்கு இதுவரை 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நலத்திட்டங்கள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள் எந்த தடையும் இன்றி தொடர்ந்து நடைபெறும்.

மே மதம் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. சில தளர்வுகளும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கு பின்னர் வெளியிடப்படும் மத்திய அரசின் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

மேலும் திமுகவின் ஆர்.எஸ் பாரதி கைது நடவடிக்கைக்கும், தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பட்டியல் இனத்தவர்களை விமர்சித்ததை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் தான் அரசின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவரை இழிவாக பேசியபோதே ஸ்டாலின் அவரை கண்டித்திருக்க வேண்டும்.  ஆர்.எஸ் பாரதி தரும் புகார்களில் உள்ள உண்மைத்தன்மை என்னவென்று ஊடகங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அரசின் இ-டெண்டரில் முறைகேடுகள் நடப்பதாக ஆர்.எஸ் பாரதி கூறுவது முற்றிலும் பொய். ஊடக விளம்பரங்களுக்காக பாரதி அவ்வாறு கூறி வருகிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு கெட்ட நிதியில் போதிய நிதியர் மத்திய அரசு வழங்கவில்லை. புறநகர், கிராம பகுதிகளில் தொழிற்ச்சாலைகள் இயங்க துவங்கியுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

3

இந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு கொரோனா

0
இந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.

புதுடில்லி: உலகளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 196 நாடுகளில் இதுவரை 5.25 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 3,39,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா நோய் தொற்றுக்கு 1,31,868 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 3,867 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மட்டும் இந்தியாவில் 6,767 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் இதுவே உச்ச எண்ணிக்கை ஆகும்.

கடந்த மூன்று நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 3 நாட்களில் 18,000 அதிகமான புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

நேற்று மட்டும் இந்தியாவில் 147 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கையும் 3,867-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் கடந்த ஐந்து நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. இதில் அதிகப்படியாக நேற்று 6,767 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ந்து அதிகரித்துவரும் நோய் தொற்று காரணமாக மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம் முதலிய மாநிலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

சிகப்பு மண்டலங்களில் விமான சேவை துவங்கப்படுவது என்பது தவறான முடிவு என மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டிலேயே 47,000 க்கும் அதிகமான நோய் தொற்று பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் இருந்துவருகிறது. இங்கு இதுவரை 1,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் இந்தியா கொரோனா பரிசோதனைகளை 100 மடங்கு உயர்த்தியுள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு என்ற எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 41.28 சதவிகிதமாக உள்ளது. உலகளவில் அதிகப்படியாக அமெரிக்காவில் 2,57,154 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3

25/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

25/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று செலவுகள் மிகுந்து காணப்படும். தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்றைய தினம் ஆர்வத்துடன் செயல்களை செய்து நன்மதிப்பு பெற போகும் நாளாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும் நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். தேவையற்ற வீண் வாதங்களை தவிர்க்க வேண்டிய நாளாகும். குடும்ப பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

கடக ராசிபலன்

இன்றைய தினம் தங்களின் நேர்மையான அணுகுமுறை தங்களது நிலையை உயர்த்தும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இன்பமாக இருக்கும் நாளாகும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய தினம் உற்சாகமாக இருக்க போகும் நாளாகும். தங்களது நிலையில் நன்மதிப்பு பெருகும். கவலைகள் அனைத்தும் முடிவிற்கு வரும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் தைரியத்தை வளர்த்து கொள்வது அவசியம் ஆகும். வீட்டில் நட்புறவுடன் பேசுவது அவசியம் ஆகும்.

துலாம் ராசிபலன்

இன்றைய தினம் சுமாரான நாளாக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டிய நாளாகும். கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அபரிமிதமான பணவரவு இருக்க போகும் நாளாகும்.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் புகழ் நிறைந்த நாளாக இருக்கும். பணிகளில் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் ஏற்பட்ட துன்பங்கள் அனைத்தும் நீங்கும் நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நாளாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அற்புதமான பலன்களை தரும் மங்களகரமான நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் மன உறுதியோடு இருக்கும் நாளாகும். எல்லா எதிர்ப்புகளும் உங்கள் முயற்சியால் சரியாகும். செல்வ வளம் பெருகும் நாளாக இருக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் ஆக்க பூர்வமான செயல்களை செய்து நல்ல பலன்களை பெறுவீர்கள். துணையுடன் நாள் முழுதும் சந்தோஷமாக இருப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க கூடிய நாளாகும்.

25/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

68 வயதுடைய முதியவர் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் நெஞ்சுவலியால் இறந்தார்

68 வயதுடைய முதியவர்

மதுரை: குஜராத்திலிருந்து மதுரை திரும்பிய 68 வயதுடைய முதியவர் சின்ன உடைப்பு பகுதியில் உள்ள தனிமைபடுத்துதல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நெஞ்சு வலிப்பதாக கூறினார் பிறகு சற்று நேரத்தில் மரணமடைந்தார்.

இறந்தவர் 68 வயதுடைய என். முத்துராமலிங்கம் என்பதும் இவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருப்புக்கோட்டையில் உள்ள கள்ளூர்னி பகுதியை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் திரும்பியவர்

வெளிமாநிலத்திலிருந்து வந்த தமிழர்களில் இவரும் ஒருவர் எனவும், அகமதாபாத்தில் உள்ள நொறுக்கு தீனி உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவர் மதுரையை வந்தடைந்த பிறகு சின்ன உடைப்பு என்னும் இடத்தில் இருந்த தனிமைப்படுத்தல் முகாமில் 60 பேர்களுடன் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

அவணியாபுரத்திலிருந்து ஒரு காவல் அதிகாரி தெரிவிக்கையில் முத்துராமலிங்கம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார் இதை அடுத்து அவர் தனிமைபடுத்தல் முகாமில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்பு அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது இதை அடுத்த அவரது உடல் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டது.

3

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் சகோதரி பவானி ஸ்ரீ!

0
GV Prakash Sister Debut Movie

Bhavani Sre; விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் சகோதரி பவானி ஸ்ரீ! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் சகோதரி கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் பெ. விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த போஸ்டர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் உள்ளனர். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் கை விலங்கு போடப்பட்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இருவருக்கும் பின்புறம் காலிக்குடங்களுடன் பெண்களும் வயதானவர்களும் இருப்பது போன்று   க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மைக் கதையைக் கொண்ட இந்தப் படம் நீதி, நேர்மை, நியாயம், சரி எது, தவறு எது, சமத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த டீசரில், சாதி, மத அரசியலைத் தாண்டி இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துதான் மொத்த உலக அரசியல் நடக்கும் என்று விஜய் சேதுபதி அரசியல் வசனம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீயும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

ஆம், டீசரில் அரசு அதிகாரியுடன் பேசுவதற்கு கூட்டமாக அமர்ந்து போராடுவது போன்று காட்டப்பட்டுள்ள டீசரில் ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீயும் இடம்பெற்றுள்ளார்.

பவானி ஸ்ரீ விஜய் சேதுபதி படத்தில் நடித்துள்ளதைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவியும், வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், எனது மைத்துனி பவானி ஸ்ரீ அறிமுகமான க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் இது. பெருமையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள். உங்களது விருப்பங்களும், கனவுகளும் நனவாகட்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

நான் மேக்கப் இல்லைனா இப்படித்தான் இருப்பேன்: ஓவியா நக்கல்!

0
Oviya Without MakeUp Video

Oviya Video; நான் மேக்கப் இல்லைனா இப்படித்தான் இருப்பேன்: ஓவியா நக்கல்! கொரோனா லாக்டவுனால் வீட்டிலேயே இருக்கும் ஓவியா நான் மேக்கப் இல்லை என்றால் இப்படித்தான் இருப்பேன் என்று நக்கலாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓவியாவின் வீடியோவின் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

களவாணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஓவியா. ஆனால், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

எப்போதும் உண்மையை மட்டும் பேசி, நேர்மையாக நடந்து கொண்டு ஓவியா ஆர்மி உருவாக காரணமாக இருந்தார்.

ஓவியா ஆர்மி மூலமாக ரசிகர்கள் ஓவியாவை கொண்டாடினர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஆரவ்வை காதலித்தார்.

அவரிடமிருந்து மருத்துவ முத்தமும் பெற்றுக் கொண்டார். இது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஓவியா ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓவியா கூறியிருப்பதாவது: நான் மேக்கப் இல்லை என்றால் இப்படித்தான் டல்லாக இருப்பேன்.

எனது முகமும் இப்படித்தான் இருக்கும். மேக்கப்பில் இருக்கும் போது நடிகைகள் ஒரு மாதிரியும், மேக்கப் இல்லையென்றால் ஒரு மாதிரியும் தெரிவார்கள்.

இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என்றார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு சிறந்த அனுபவம். இப்போது உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும்.

ஒரே வீட்டில் அடைந்திருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். கிட்டத்தட்ட சைக்கோ மாதிரி ஆகிவிடுவோம்.

இத்தனை பேர் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு அழுத்தமும் பயமும் இருக்கும்.

மேலும், பிக் பாஸ் கொடுக்கும் அழுத்தமும் பயமும் இருக்கும். அதன் பிறகு போட்டியாளர்களுடன் கருத்து வேறுபாடு. இதையெல்லாம் கொண்டது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி.

இது ஒரு மாதிரியான கேம். நிறைய சந்தோஷங்கள் இருந்தது. நிறைய விளையாட்டு தனம், காமெடி எல்லாம் இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதம் என்னால் ஒன்றுமே முடியவில்லை. அதிலிருந்து மீண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் ஆனது என்றார்.

மேலும், காதல் தோல்வி குறித்து கூறுகையில், அனைவரது வாழ்க்கையிலும் காதல் தோல்வி, பிரேக்கப் என்று அனைத்தும் நடக்கும்.

ஆனால், பிரேக்கப் தான் நம்மை இன்னும் வலிமையாக்கும். காதல் தோல்வி வந்தால் அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல வேண்டும். அதையே நினைத்து சோகமாக இருப்பதினால் எந்தவித பலனும் இல்லை.

வாக்கையில் தற்கொலை குறித்து பேசிய அவர் கூறியிருப்பதாவது: கண்டிபபாக அனைவருமே ஏதாவது ஒரு சூழ்நிலையில், தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொள்வார்கள்.

தற்கொலை தான் முடிவு இல்லை. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவது தான் சரியான தீர்வு. இதைவிட வேறெதுவும் இருக்காது என்றார்.

அதன் பிறகு ஜூலியைப் பற்றி பேசிய ஓவியா, ஜூலி ஒரு நல்ல பெண். உண்மையில் அவள் ஒரு பாவம். இத்தனை பேர் அவரை வெறுக்கும் போது கூட துணிச்சலாக தைரியமாக அனைத்தையும் கடந்து வந்திருக்கிறாள் என்றாள் அவளை பாராட்ட வேண்டும்.

ஒரு ஆள் உங்களை பிடிக்கவில்லை என்று சொல்லும் போது உங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதையெல்லாம் தாண்டி வருவது தான் ரொம்ப கஷ்டம் என்றார்.

ஏன் எப்போதும் சரக்கடித்த மாதிரியே இருக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ஓவியா கூறியிருப்பதாவது:

இல்லை இல்லை. நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன். நான் நார்மலாகவே ஹைபெராக இருப்பேன். ஆனாலும், நான் குடிப்பேன்.

எனக்கு ரெட் ஒயின் ரொம்பவே பிடிக்கும். யாராவது எனக்கு ரெட் ஒயின் பரிசாக கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்? டாக்டர் தீபாவளி ரிலீஸ்?

0
Doctor Diwali Release

Doctor Diwali Release; விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்? டாக்டர் தீபாவளி ரிலீஸ்? சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

டாக்டர் படமும், மாஸ்டர் படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சஞ்சீவ், நாசர் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். 12 பாடல்கள் கொண்ட இந்தப் படத்தில் தற்போது வரை 8 பாடல்கள் வெளியாகியுள்ளது. அதில், குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் பாடல்கள் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து, வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகி வருகிறது. அதற்கு முன்னதாக வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 46 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கப்பட்டு வரும் டாக்டர் படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கோலமாவு கோகிலா புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

மேலும், வினய், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவிற்கு முடிக்கப்பட்ட நிலையில், டாக்டர் படம் வரும் தீபாவளி பண்டிகை அல்லது கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை மாஸ்டர் படமும், டாக்டர் படமும் ஒரே நேரத்தில் வெளியானால், கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

3